• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayak Kottai - Minnal : Aththiyaayam 10.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 10.

அகத்தியர் வாழ்ந்த மலை என்ற பெருமை உடைய அந்தப் பொதிகை மலைக்காடுகளின் பொக்கிஷம் பல விதமான மூலிகைகள். அவை மட்டுமல்ல, இயற்கை தன் இரு கரங்களையும் சேர்த்து ஆரத் தழுவிக்கொண்ட இடம் தான் பூங்குளம். தாமிரபரணி உற்பத்தியாகி ஓடிவரும் பாதையில் அமைந்திருந்தது அந்த இடம். காணிகள் என்றும் காணிக்காரர்கள் என்றும் சொல்லப்படும் பழங்குடியினர் அந்த இடத்தில் வாழ்ந்து வந்தனர். ஒழுக்கமும் கல்வியும் அவர்களுக்கு இரு கண்கள். பிலாத்தியிடம் ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி கட்டாயம் தமிழ் எழுதப்படிக்க காற்றுக்கொள்ள வேண்டும். இது அகத்தியர் அவர்களுக்கு இட்ட கட்டளை என்று சொல்வார்கள். பிலாத்தி தமிழோடு அவர்களுக்கு கொஞ்சம் வான சாஸ்திரம் மந்திரம் இவற்றையும் கற்றுக்கொடுத்தார்.

காணிகள் அதிகாலையிலேயே எழுந்து காட்டுக்குள் கிழங்கு பறித்தல், பழங்கள் சேகரித்தல் தேனெடுத்தல் என்று பல வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். எந்த உணவு கிடைத்தாலும் அது பொதுவாகவே உண்ணப்படும். பணம் நகை போன்ற எந்த நாகரீகங்களும் அவர்களைத் தீண்டாமல் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த கால கட்டம்.

அந்தக் காணிக்கூட்டத்தில் சிறுமிகளாக இருந்தவர்கள் தான் மகிழியும் மின்னலும். பிலாத்தியின் மகள் மகிழி, தலைமைக் காணி வேம்புலியின் மகள் மின்னல். பிறந்த உடனேயே இவர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என பிலாத்தி சொல்லி விட்டார். இந்தப் பெண்களால் காணி இனத்துக்கே பெருமை வரும் என்றும் கூறினார் அவர். இரு அழகான மலர்களைப் போல அவர்கள் வளர்ந்தார்கள். குல வழக்கப்படி கல்வியும் கற்றார்கள். அதோடு காட்டில் மிகவும் சுதந்திரமாக உலவினார்கள். காட்டு விலங்குகள் அவர்களை ஒன்றுமே செய்வதில்லை. ஆனால் சமீப காலமாக அவர்களைக் கவலை கொள்ள வைத்த சில நிகழ்வுகள் அந்தக் காட்டில் நடந்தன. அதனைப் பற்றித்தான் ஒரு தோழிகளும் பேசிக்கொண்டனர்.

"மகிழி! நெத்து பூங்குளத்துக்கு மேற்கே போனப்போ மான் ஒண்ணு கீழே கெடந்தது! அது தானா செத்தா மாதிரி தெரியல்ல! அதோட உடம்புல சின்னக் காயம் தான் இருந்தது. அதுக்குப் போயி எப்படி செத்ததுன்னு தெரியலியயே" என்றாள் மின்னல்.

"உம் நானும் பார்த்தேன் மின்னல்! அது மட்டுமில்ல நாலு நாள் முன்னால ஒரு மிளா கூட அப்படிக் கெடந்தது. என்னென்னு தெரியலியே?" என்றாள் கவலையோடு.

இப்படித்தான் சில நாட்களாகவே இவர்களுக்குப் புரியாத பல விஷயங்கள் அந்த காட்டில் நடந்து வருகின்றன. திடீர் திடீர் என வெடிச் சத்தம் கேட்கிறது. அந்த சத்தத்தைக் கேட்டாலே மிருங்கங்கள் அலறி ஓடின. குரங்குகள் கூட பயத்தில் குதித்தன. புதிய மனிதர்கள் பலரின் நடமாட்டம் அதிகரித்தது. இவற்றையெல்லாம் பார்த்து விட்டு கவலைப்பட்டனர் காணி இனத்தவர். அவர்களைப் பொறுத்தவரை இந்தக் காட்டுக்கும் இதில் உள்ள விலங்குகளுக்கும் அவர்கள் தான் காவல்.

ஒரு நாள் இரவு மார்கழிப் பனி பொழிந்து கொண்டிருந்தது. காணிகள் அன்றைய இரவு உணவுக்காக நெருப்பை சுற்றிலும் அமர்ந்திருந்தனர். பெரிய பெரிய கற்கள் சூடேற்றப்பட்டு அதில் சேனைக்கிழங்கு, கத்தரிக்காய் வாழைக்காய் போன்ற காய்கள் சுடப்பட்டன். அவற்றோடு தேனைக்கூட்டி உண்பார்கள். இது தான் அவர்கள் உணவு. பிலாத்தி கவலையோடு வானத்தைப் பார்த்திருந்தார். அவருக்கு வானத்துக் கோள்களையும் நட்சத்திரங்களையும் வைத்து கணிக்க தெரியும்.

"மூட்டுக்காணி! வானத்துல சாதகமா எதுவுமே இல்லையே?" என்றார்.

"என்ன சொல்றீங்க பிலாத்தி? என்ன தெரியுது?"

"நம்ம காட்டுக்கும் நமக்கும் அழிவு தொடங்கிருச்சுன்னு நெனைக்கறேன்! எனக்கென்னவோ கூடிய சீக்கிரம் இந்தக் காடே அழிஞ்சிருமோன்னு பயமா இருக்கு." என்றார். அதைக் கேட்டபடியே வந்தனர் மகிழியும் மின்னலும்.

"அப்படி ஆக நாங்க விட்டுடுவோமா ஐயா? எங்க உயிரைக் கொடுத்தாவது இந்தக் காட்டைக் காப்பாத்துவோம். " என்றாள் மின்னல். அதை ஆமோதித்தாள் மகிழி. அதைக் கேட்டதும் பிலாத்தியின் முகம் இன்னும் வாடியது.

"என்ன விஷயம் பிலாத்தி?" என்றார் வேம்புலி.

"இப்ப நம்ம மகள்களுக்குக் கூட நேரம் நல்லா இல்ல! இவங்களுக்கு என்ன ஆபத்து வருமோன்னு பயமா இருக்கு" என்றார்.

"எங்களுக்கு எந்த ஆபத்தும் வராதுப்பா! அந்த பிரம்ம ராட்சசி அம்மனும் வனப்பேச்சியும் எங்களுக்குத் துணையா இருப்பாங்க" என்றாள் மகிழி. அன்று அத்துடன் அந்தப் பேச்சு நின்றது. ஆனால் சில தினங்கள் கழித்து கால்களில் குழாய் போல உடையணிந்த சில ஆட்கள் காணிகளைத் தேடி வந்தார்கள். மக்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்கள் பேசினார்கள்.

"இப்ப நாம் நாடு பிரிட்டிஷ் ஆரசங்கத்துக்குக் கீழே தான் இருக்கு. நாம அவங்க சொன்னபடி கேட்டு நடக்கணும் என்ன?" என்றார் நீல நிறக் குழாய் அணிந்தவர்.

"பீதிஸ் காரங்கன்னா யாருங்க?" என்றார் வேம்புலி.

"ஹையோ தலையெழுத்து! இவங்க கிட்ட என்னை மாட்டி விட்டுடாரே இந்த வெள்ளைக்கார துரை. சரியான கட்டுமிராண்டிங்க" என்றூ சலித்துக்கொண்டார். மின்னல் அவரை எரிப்பது போலப் பார்த்தாள்.

"இதைப்பாருங்கப்பா! கடல் கடந்து பெரிய பெரிய தேசமெல்லாம் நிறைய இருக்கு. அங்க இருந்து வந்தவங்க தான் இப்ப நாட்டை ஆளுறாங்க! அவங்க நம்மை விட நாகரீகத்துலயும் படிப்புலயும் ரொம்ப உசந்தவங்க! இந்த பகுதியெல்லாம் இனிமே அவங்க கட்டுப்பாட்டுல தான் இருக்கும் புரியுதா?" என்றார்.

"இந்தக்காடு எங்களுக்கு சொந்தம்யா! கேரளாவுல இருந்தாரே ராஜா மார்த்தாண்ட வர்மா அவரு எங்களுக்குக் கொடுத்தது. பட்டயம் கூட அரண்மனையில இருக்கு. இதை நாங்க யாருக்கும் கொடுக்க மாட்டோம்" என்றார் வேம்புலி. மற்ற இளைஞர்கள் ஆமோதித்தனர்.

"உங்களை யாரும் அனுமதி கேக்கல்ல! ஆனா கவலைப்படாதீங்க !நீங்க உங்க வழக்கம் போல காட்டுக்குள்ள வேலைக்குப் போகலாம். ஆனா துரைங்க வரும் போது மட்டும் ஜாக்கிரதையா இருங்க! அவங்க கையில துப்பாக்கி இருக்கு. சுட்டாங்கன்னா உயிர் தப்ப முடியாது" என்றார் வெள்ளைக் குழாய் போட்டவர்.

"ஐயா! அப்ப எங்க விலங்குகள் மேல சின்ன காயம் இருக்கே அதனால அதுங்க இறந்து கூடப் போகுதே அது எல்லாமே அவங்க செஞ்ச வேலை தானா?" என்றாள் மின்னல்.

"ஆமா ஆமா! நடுவுல வந்து செத்து கித்து வைக்காதீங்க! இப்ப நாங்க எதுக்கு முக்கியமா வந்தோம்னா நாளைக்கு தாமஸ் துரை இங்க வேட்டைக்கு வரப்போறாரு. பூங்குளத்துக்கு மேல அவருக்குப் போகணுமாம். கூட்டிக்கிட்டுப் போக ஆள் வேணும். போனா நிறையக் காசு தருவாரு" என்றார் மீண்டும்.

"காசுன்னா என்னங்க?"

தலையில் அடித்துக்கொண்டார் அவர். "ஐயோ ஐயோ! இப்படி ஒரு இடத்துல எனக்கு ட்யூட்டி போட்டுட்டாங்களே? காசுன்னா பணம். அதைக் கொடுத்தா கடையில நிறையப் பொருள் வாங்கலாம். தங்கம் வாங்கலாம் நிலம் வாங்கலாம் இப்படி எத்தனையோ?" என்றார்.

பிலாத்தி எழுந்தார்.

"அது சாத்தான் ஐயாமாரே! இப்படி ஒரு சின்னப் பொருளைக் கொடுத்து நிறையப்பொருள் வாங்க முடிஞ்சா அது கெடுதல் தான். நாங்க யாரும் வரவும் மாட்டோம் , எங்களுக்கு காசும் வேண்டாம்" என்றார். அப்போதே கூட்டத்தில் சில முணுமுணுப்பு எழுந்தது. அதில் சிலர் அந்த அதிகாரிகளை தனியாக சந்தித்துப் பேசினர். மின்னலுக்கும் மகிழிக்கும் சூழ்நிலை புரியவில்லை. எப்படியோ நம்மைக் காட்டுக்குள்ளே போகக் கூடாது என்று சொல்லவில்லையே என சமாதானப்படுத்திக்கொண்டார்கள்.

பெரிய பரிவாரம் புடை சூழ ஜீப்பில் வந்து இறங்கினார் தாமஸ் துரை. அது வரையில் அது போன்ற வெள்ளை நிற மனிதர்களைக் கண்டறியாத காணிகள் இமைக்கவும் மறந்து பார்த்தபடி இருந்தனர். வாயில் சுருட்டு வைத்து அவர் குப்குப் என புகை விடுவதையும். கையில் கட்டை போல ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டூ அடிக்கடி குறி பார்ப்பதையும் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

"யாரு மேன் எனக்கு துணைக்கு வரப் போறீங்க?" என்றார் துரை.

வேலையன் முன்னால் வந்தான். "நான் வரேனுங்க சாமி! உங்களுக்கு எங்க போகணுமோ சொல்லுங்க" என்றான். அவனை வெறுப்போடு பார்த்தார் பிலாத்தி. வேலையன் முன்னால் நடக்க துரை, அவருடன் சமையல் செய்ய வந்த ஆட்கள் என சிறு கூட்டம் சென்றது.

மறு நாள் வழக்கம் போல விடிந்தது. மகிழியும் மின்னலும் அன்றும் காட்டுக்குள் வண்ண மணிகள் சேகரிக்க சென்றார்கள். அவர்கள் வழக்கமாக பூங்குளத்து மேலே இருக்கும் இடத்துக்கு தான் செல்வார்கள். அதே போல சென்றார்கள். போகும் வழியெங்கும் பல தாவரங்கள் மிதிபட்டுக்கிடந்தன. அவற்றை வேதனையோடு பார்த்துக்கொண்டே சென்றனர் இரு சிறுமிகளும். சற்று தொலைவில் ஒரு நாற்காலியில் வெள்ளைகாரன் அமர்ந்திருக்க அவனுக்குப் பின்னால் மூன்று நாங்கு பேர் நின்றிருந்தார்கள். அந்த வெள்ளைககரனின் துப்பாக்கி எதையோ குறி வைத்தது. அந்த திசையை நோக்கினாள் மின்னல். அங்க அழகான கலை மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அதில் ஒரு குட்டி மான் மட்டும் தனியாக நின்றிருந்தது. அந்த பாவியின் துப்பாக்கி அந்த குட்டியைத்தான் குறி வைத்திருந்தது.

மின்னலின் கண்களில் கோபம் தெறிக்க ஆபத்தையும் பொருட்படுத்தாமல் ஓவெனக் கூச்சலிட்டுக்கொண்டு குறுக்கே ஓடினாள். அந்த சத்தத்தால் மிரண்ட மான்கள் காற்றை விடக் கடிதாக ஓடி மறைந்து விட்டன. அந்தக் குட்டி மானும் ஓடி விட்டது. தனது வேட்டையைக் கலைத்த மின்னலை நோக்கி துப்பாக்கியைக் குறி வைத்தான் அந்த வெள்ளைக் காரன்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
ஸ்ரீஜா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top