• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayak kottai - Minnal : Aththiyaayam 4.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 4.

அருணும் பூஜாவும் மலையில் வந்து இறங்கிய போது அந்த இடமே மிகவும் குழப்பமாகவும் அமைதியற்றும் காணப்பட்டது. ஆங்காங்கே மக்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவர் முகங்களிலும் கலவரமும் கவலையும் போட்டி போட்டன. என்ன ஏது என எதுவும் தெரியாமல் காரிலிருந்து இறங்கினான் அருண். அவனைப் பார்த்ததும் ஓடி வந்து தள்ளி அழைத்துச் சென்றான் அரவிந்தன். காரைப் பூட்டி விட்டு கூடவே ஓடினாள் பூஜா. அவசரமாகப் பேசினான் அரவிந்தன்.

"நீங்க வருவீங்கன்னு நான் மறந்தே போயிட்டேன் அருண்! இது சரியான சமயம் இல்ல! நீங்க உடனே புறப்படுங்க! போலீஸ் எல்லாரையும் சந்தேகப்படுறாங்க" என்றான் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்.

"என்ன சொல்ற நீ அரவிந்தா? எதுக்கு எங்களை போகச் சொல்ற? இங்கே ஏதாவது கலவரமா? அதுக்குத்தான் போலீஸ் வந்திருக்காங்களா?" என்றான் அருண் கவலையோடு.

அவர்களை ஏற இறங்கப் பர்த்தான் அரவிந்தன்.

"ஓ! உங்களுக்கு விஷயமே தெரியாதோ? இங்க ரண்டு கொலை விழுந்திடிச்சு பூஜா! இந்த மலை வாழ் மக்கள் இது மாயக்கோட்டையோட வேலை தான்னு அடிச்சு சொல்றாங்க! உடம்பு இன்னமும் பயணியர் விடுதியில தான் இருக்கு"

திடுக்கிட்டார்கள் பூஜாவும் அருணும். கொலையா? அதுவும் இரண்டு பேரா? இந்த அமைதியான சூழலில் யார் கொலை செய்திருக்கக் கூடும்? அதற்கான காரணம் என்ன? என்று யோசித்தான் அருண்.

"நீ சொல்றது எதுவுமே புரியல்ல அரவிந்தன். யாரு கொலை செய்யப்பட்டாங்க? அதுக்கான காரணம் என்ன? ஏதாவது தெரியுமா?"

சில கணங்கள் மௌனமாக இருந்த அரவிந்தன் மீண்டூம் பேசினான்.

"ஐ ஆம் சாரிடா அருண்! முதல்ல நீங்க குளிக்கணும் சாப்பிடணும் அதையே நான் மறந்துட்டேன். இப்ப இருக்குற சூழல்ல இங்க தங்க நமக்கு இடம் கிடைக்காது. அம்பாசமுத்திரம் போயிடலாம் அங்க எனக்குத் தெரிஞ்ச லாட்ஜ் இருக்கு. அங்க ரூம் போட்டு எல்லா விவரத்தையும் சொல்றேன்" என்று அவர்களை காரை நோக்கி இழுத்துச் சென்றான் அரவிந்தன். மிகச் சரியாக அந்த நேரத்தில் அம்பை அரசு மருத்துவமனை ஆம்புலன்சில் இரு உடல்களை ஏற்றினார்கள். அவற்றை மூடியிருந்த துணிகளில் ரத்தம் தோய்ந்து இருந்ததை கவனித்தாள் பூஜா. அவளுக்கு பயத்தில் உடல் உதறியது. உடல்களை ஏற்றும் போது இரு பணியாளர்கள் பேசியது காதில் விழ அப்படியே நின்றார்கள்.

"நானும் 15 வருஷம் சர்பீஸ் போட்டுட்டேன். என் இத்தனை வருஷ சர்வீசுல இப்படி ஒரு பொணத்தைப் பார்க்குறது இதான் முதல் தடவை! சை! எனக்கே ஒரு மாதிரி ஆயிடிச்சு" என்றான் சற்றே வயதான ஒருவன்.

"ஆமாண்ணாச்சி! ரத்தம் பூரா வெளிய வந்திரிச்சு போல உடம்பே ஒரு மாதிரி சப்பிப் போட்டா மாதிரி இல்ல கெடந்தது?"

"சொல்லாதே சொல்லாதே! போயி மாரியாத்தா கோயில்ல மந்திரிச்சு தாயத்து வாங்கிக் கட்டிக்கிடணும். இல்லைன்னா பயமாத்தான் இருக்கும்"

சொல்லிக்கொண்டே அவர்கள் ஏற்றி முடிக்க மற்றவர்களும் ஏறிக்கொள்ள ஆம்புலன்ஸ் புறப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து தங்கள் காரைக் கிளப்பி அம்பாசமுத்திரத்தை நோக்கி விரட்டினான் அருண். லாட்ஜில் இருவருக்கும் தனித்தனியாக ரூம் போட்டு குளித்து டிஃபனும் சாப்பிட்ட பிறகே பேச ஆரம்பித்தான் அரவிந்தன்.

"சுத்தமா மனசு சரியில்ல அருண்! நாம அகத்தியர் கோயில்ல உக்காந்து பேசுவோம்" எனச் சொல்லி அவர்களை அகத்தியர் கோயில் அழைத்துச் சென்றான். அதன் அமைதியான பிராகரத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தான் அரவிந்தன்.

"நாம நினைக்குறா மாதிரி இந்த காணிங்க லேசுப்பட்டவங்க இல்ல!"

"ஏன்?"

"அவங்களுக்கு ரிசார்டு வரதே பிடிக்கல்ல! அந்த ஏரியாவுல மாயக்கோட்டைன்னு ஏதோ இடம் இருக்குறதாகவும் அதுல மின்னல்னு ஒரு ஆத்மா இருக்குன்னும் அத்து மீறி யாராவது வெளியாளுங்க போனா அது அடிச்சிடும்னு சொன்னாங்க! " என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

"அவங்க போட்ட நிபந்தனைக்கு ஒத்துக்கிட்ட வீரமணியும் பசுபதின்னு ஒருத்தரும் பயணியர் விடுதியில தங்குனாங்க. அவங்களைத்தான் யாரோ கொலை செஞ்சிருக்காங்க" என்று முடித்தான்.

எதுவுமே பேசாமல் மௌனமாக இருந்தாள் பூஜா. அவள் மனதில் ஏதேதோ சிந்தனை ஓட்டம். ஆனால் அருண் துடிப்பாக இருந்தான்.

"நீ அப்படி சந்தேகப்பட்டியானா அதை போலீஸ்ல சொல்ல வேண்டியது தானே?"

"இல்ல அருண்! எனக்கே ஒண்ணும் புரியல்ல! காணிங்க இந்தக் கொலையை செஞ்சாங்களா? இல்லை வெளிய இருந்து யாரேனும் வந்தாங்களான்னு தெரியலையே? ஏன்னா கைரேகை, காலடித்டடம்னு எதுவுமே இல்லையாம். போலீஸ்ல சொன்னனக ! அப்ப யாரு செஞ்சிருப்பாங்க? அதுவும் அத்தனை கோடூரமா? எனக்கே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு! அதான் உங்களை இங்கே கூட்டிக்கிட்டு வந்தேன்"

"ஏன் அரவிந்தன்! அந்த ஆபீசர் ராமகிருஷ்ணன் சொல்றா மாதிரி இந்த மலை காணிங்களுக்கு தான் சொந்தமா?"

"அப்படித்தான் தெரியுது! எந்த விதமான கட்டிடமும் இங்க வரக்கூடாதுன்னு அவங்க நினைக்கறாங்க! ஏன்னா இங்க உள்ள மிருங்களுக்கும் மரங்களுக்கும் அவங்க தான் காவலாம். "

"இப்ப என்ன செய்ய பூஜா?" என்றான் அருண்.

"முதல்ல அந்தக் காணிக கிட்ட பேசிப்பார்க்கணும் அருண்! இத்தனை வளர்ச்சியை அவங்க ஏன் வெறுக்கறாங்கன்னு எனக்குத் தெரியணும். அப்படி ஒரு வேளை அவங்க சொல்றா மாதிரி இந்த மலையே அவங்களுக்கு சொந்தம்னா அவங்க உரிமை அவங்களுக்குக் கிடைக்க நாம போராடணும். அவங்க சொல்ற காரணம் நியாயமானதா இருந்தா நாமும் இங்க ரிசார்ட் வர விடாம தடுக்குற போராட்டத்துல கலந்துக்கணும்." என்றாள் உறுதியாக.

அவளை பெருமித்த்தோடு பார்த்தான் அருண்.

"நான் என்னச்சதையே தான் நீயும் சொல்ற ! ஒரே ஒரு வித்தியாசம் என்னன்னா நான் காணிங்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வெச்சு மூட நம்பிகைகள்ல இருந்து அவங்களை மீட்டு ரிசார்டு கட்ட ஆதரவு தரணும்னு நினைக்கறேன் அவ்வளவு தான்" என்றான்.

இருவரையும் எரிச்சலோடு பார்த்தான் அரவிந்தன்.

"என்ன விளய்யாடறீங்களா? நானே உங்களை தெரியாம வரச் சொல்லிட்டோமேன்னு பயந்துக்கிட்டு இருக்கேன். இந்த நிலையில் நீங்க திரும்பவும் அங்க போறேன்னா சொல்றீங்க? அதெல்லாம் முடியாது! முதல்ல கிளம்புங்க சொல்றேன்" என்றான் பதட்டத்துடன்.

"உன் அக்கறை எனக்குப் புரியுது அரவிந்தா! ஆனா இந்த விஷயத்தை நாம் இப்படியே விட முடியுமா சொல்லு! நம்ம ஆர்கனைசேஷன் பழங்குடியரின் உரிமைக்காக போராடினா எவ்வளவு நல்லது? அவங்களைப் பத்தி இந்த நாட்டுகே தெரிய வருமே? இதனால நமக்கென்ன ஆபத்து வர முடியும்?"

அரை மனதாக ஒப்புக்கொண்டான் அரவிந்தன்.

"சரி நீங்க ரொம்ப கட்டாயப்படுத்துறதால ஒத்துக்கறேன். ஆனா நீங்க அங்க தங்கக் கூடாது. எந்த ராத்திரியானாலும் இந்த லாட்ஜுக்கு வந்துடணும். அதுக்கு நீங்க சம்மதிச்சா நான் உங்க கூட மலைக்கு வரேன். இல்லைன்னா இப்பவே உங்க அம்மா அப்பாவுக்கு ஃபோன் பண்றேன்" என்றான் உறுதியான குரலில்.

வேறு வழியின்றி இருவரும் சம்மதித்தனர். மதியம் உணவு உண்டு அப்படியே பாவநாச மலைக்கு மேல இருக்கும் காரையாரை நோக்கி காரை செலுத்தினான் அருண். அதற்கு மேல தாமிரபரணியின் கரையில் தான் ரிசார்ட் கட்டப்படுவதாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டான். போகும் வழியெங்கும் நிறைந்ததிருந்த இயற்கையை மிகவும் ரசித்தார்கள் இருவரும். யாரோ ஒருவர் வழியில் கை காட்ட நிறுத்தினான்.

"சார்! என் பேர் ராம கிருஷ்ணன். அம்பையில் கவர்மெண்ட் வேலை. இங்க வந்தேன். திரும்பிப்போக பஸ் கிடையாது. என்னைக் கொஞ்சம் பாவநாசம் பஸ் ஸ்டேண்டு வரைக்கும் டிராப் பண்றீங்களா?" என்றான்.

வன அதிகாரி வீரமணியோடு வந்த அதிகாரிகளில் ஒருவர் இவர் என்பதை உணர்ந்து திடுக்கிட்டார்கள்.

"முதல்ல கார்ல ஏறுங்க சார்! நாங்க இப்ப காணிக்குடியிருப்பு தான் போயிக்கிட்டு இருக்கோம். அங்க கொலை நடந்தது எல்லாமே எங்களுக்குத் தெரியும். இருந்தலௌம் உங்களுக்காக வண்டியைத் திருப்புறேன்." என்று சொல்லி விட்டுத் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள் பூஜாவும் அருணும்.

"சார்! நீங்க காணிங்க சொல்றதை நம்பித்தான் ஆகணும். ஏன்னா நேத்து ராத்திரி நான் அவங்க கூடத்தான் இருந்தேன். தலைமைக் காணி ஆறுமும்க ஐயா வீட்டுல தான் தங்கியிருந்தேன். அதனால தான் என் உயிர் தப்பிச்சது. இல்லைனா நானும் பொணாமா அந்த ஆம்புலன்சுல போயிருக்க வேண்டியயது தான்." என்றார்.

"கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க சார்! அங்க என்ன நடந்தது?" என்றான் அரவிந்தன்.

"விவரமாவா கேக்குறீங்க? ஐயையோ என் ஆயுசுக்கும் மறக்க முடியாது சார் அந்த ராத்திரியை! ரத்தமே உறைஞ்சு போச்சு! அப்பப்பா என்ன சத்தம் என்ன உறுமல்?" என்றார்.

"சொல்லுங்க" என்றூ அவரை ஊக்கினான் பூஜா.

"நேத்து ராத்திரி சுமார் பத்து மணியிருக்கலாம். காத்து ரொம்ப பலமா வீசுச்சு. மலை மேல அப்படித்தான் வீசும்னு சொன்னாங்க! ஆனாலும் எனக்கென்னவோ ரொம்ப பயமா இருந்தது. அப்ப திடீர்னு ஒரு அலறல் சத்தம் கேட்டது. அது மனுசக்குரல் மாதிரியே இல்ல! அதைக் கேட்டதும் காணிங்க எல்லாரும் நெருப்பை சுத்தி உக்காந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க! அம்மா தாயே எங்களை காப்பாத்துன்னு வேண்டுனாங்க! "

"அந்த சத்தம் எங்க இருந்து வந்தது?"

"பயணியர் மாளிகை இருக்குற திசையில இருந்து தான் வந்தது. நான் போயி என்னானு பார்க்க முயற்சி செஞ்சேன் ஆனா போகக்கூடாதுன்னு என்னை தடுத்துட்டாங்க! என்னால எதுவும் செய்ய முடியல்ல"

"அப்புறம்?"

"கொஞ்ச நேரம் கழிச்சு வீரமணி சாரும் பசுபதியும் அலறுற சத்தம் கேட்டது. அவங்க கோர்வையா இல்லாம ஏதேதோ கத்துனாங்க! என்னால பயத்தைக் கட்டுப்படுத்தவே முடியல்ல! அவங்க சத்தம் கூடவே பயங்கரமான உறுமல் சத்தம் வேற. ஆனா அது சிங்கமோ புலியோ இல்ல! ஏதோ ஒரு சக்தி படு பயங்கரமா உறுமுறா மாதிரி இருந்தது. அதோட பயணியர் மாளிகை பக்கமா ஒரு செக்கண்டுக்கு சிவப்பா ஏதோ தெரிஞ்சது அடுத்த கணம் அது மறஞ்சிடிச்சு. அதுக்கப்புறம் எந்த சத்தமோ வெளிச்சமோ வரல்ல!"

பேசக் கூட முடியாமல் மௌனமாக அமர்ந்திருந்தனர் மூவரும். ராமகிருஷ்ணனே தொடர்ந்தான்.

"ராத்திரி விடிய விடிய கண்ணு மூடாம உக்காந்திருந்தேன். விடிஞ்சதும் நானும் இன்னும் நாலஞ்சு இளைஞர்களும் பயணியர் விடுதியை நோக்கிப் போனோம். கட்டிடத்தை நெருங்கும் போதே குப்புன்னு வீச்சம் அடிச்கது. என்ன இதுன்னு பயந்துக்கிட்டே போனோம். வாசக்கதவு ஜன்னல் எல்லமே சாத்தி இருந்தது. கதவை தள்ளினோம் திறந்தது. ஆனா ஒரே இருட்டு. கூட வந்த கடம்பன் லைட்டைப் போட்டான். கடவுளே! முருகா போன ஜென்மத்துல நான் என்ன பாவம் செஞ்சேனோ அப்படி ஒரு காட்சியை பார்த்தேன்" என்றான். அவன் கண்களில் நீர் நிறைந்திருந்தது. உடல் உதறிப் போட்டது.

"என்ன சார் பார்த்தீங்க?" என்றான் அருண் மெல்ல. அவனது குரல் கிசுகிசுப்பாக வெளிப்பட்டது. அந்த சூழலில் அதுவே ஒரு பயத்தைக் கொடுக்க சுற்று முற்றும் பார்த்தாள் பூஜா. ராமகிருஷ்ணன் தொடர்ந்தார்.

"ஐயோ அம்மா! எப்படி சொல்லுவேன்? ரத்த வெள்ளத்துல வீரமணி சாரும் பசுபதியும் கெடந்தாங்க! அதுவும் எப்படி ஒட்டுத்துணி கூட உடம்புல இல்லாம. அவங்க போட்டிருந்த பெர்முடாசும் மேல் துண்டும் பக்கத்துல கெடந்தது. எல்லாத்துலயும் சொத சொதன்னு ரத்தம். அவங்க குடிச்சு இருந்தாங்க போல. அந்த பாட்டில், கிளாஸ், மிக்சர் எல்லாமே அப்படியே இருந்தது. ஆனா அவங்க மட்டும் வெளுத்து ஒரு மாதிரி ஆகி கெடந்தாங்க! என்னால அதுக்கு மேல தாங்க முடியல்ல அப்படியே மயங்கி விழுந்துட்டேன்."

"அப்புறம்?"

"அப்புறம் காணிங்க எனக்கு மயக்கத்தை தெளிவிச்சாங்க! உடனே நான் பஞ்சாயத்து ஆபீசுக்கு வந்து அங்க இருந்து அம்பாசமுத்திரத்திரம் போலீசுக்கும் ஆஸ்பத்திரிக்கும் ஃபோன் பண்ணினேன். அப்புறமும் கூட எனக்கு மனசு சரியா ஆகல்ல! அப்படியே பிரமை பிடிச்சா மாதிரி உக்காந்திருந்தேன். மதியம் தான் சரியாச்சு. அதான் உடனே கெளம்பிட்டேன்" என்றார்.

எல்லாவற்றையும் கேட்ட அருணுக்கும் அரவிந்தனுக்கும் ஏகப்பட்ட குழப்பம். பேசாமல் ஊரை நோக்கி திரும்பிடுவோமா? இல்லை மலைக்கு மேலே சென்று என்ன ஏது என்று பார்ப்போமா என முடிவு எடுக்க முடியாமல் அவர்கள் திணறினார்கள். அப்போது யாரோ ஒருவர் அவர்களைக் கடந்து போனது போலத் தோன்ற திரும்பினார்கள். யாரையும் காணவில்லை. ஆனால் மகிழம் பூ மணம் மட்டும் கம கமவெறு வந்தது. யாரோ ஒருவர் செல்வது போல செடி கொடிகள் அலைந்தன. அவற்றை பயத்தோடு பார்த்தபடி நின்றிருந்தாள் பூஜா.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,771
Location
Coimbatore
நல்ல பதிவு
எல்லாத்துக்கும் மேல ஒரு சக்தி இருக்கு
அது நன்மையை செய்யும்
பயமாக இருந்தாலும் படிப்போம்
:alien::devilish::cool:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top