• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹாய் தோழர் தோழிகளே... மழை வந்துருச்சி...:love::love::love: செக் பண்ணவில்லை பிழையிருந்தால் கூறுங்கள். பிடித்திருந்தால் ஒரு லைக் அண்ட் எவ்வளவு கமென்ட் என்னென்ன தோணுதோ அத்தனையும் போட்டாலும் நான் தாங்குவேன். ப்ளீஸ்...:p:p:p உங்களின் நல்லாதரவிற்கு நன்றி.:):):)

IMG_20190521_203741.jpg

மழை - 15

அடுத்த நாள் பொங்கலுக்கு இரு வாரங்கள் இருந்த நிலையில் வாணிமாபுரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் ஐயனார் கோவில் திருவிழா பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஐயனார் சிவனுக்கும் மோகினி வடிவில் வந்த விஷ்ணுவிற்கும் கண்மாய்க்கரையில் பிறந்தவர். பழங்காலம் தொட்டு நாட்டுப்புறக் காவல் தெய்வமாய் நீர்நிலைகள் அருகே அமர்ந்திருப்பார். நீர்நிலைகள் அல்லாது இருக்கும் இடங்களில் ஐயனார் நின்றபடிதான் தன் துணைவியருடன் காட்சியளிப்பார்.

(தற்போது எந்த கோவிலில் ஐயனார் அமர்ந்திருப்பதை பார்த்தாலும் அதன் அருகில் ஒரு காலத்தில் நீர்நிலை இருந்தது என்பதை கவனத்தில் கொள்க. நான் தற்போது வசிக்கும் பகுதியிலும் மற்றும் கல்லூரி செல்லும் வழிகளிலும் மிகப்பெரிய வாய்க்காலில் கழிவுநீர் ஓடி அக்கால செல்வசெழிப்பு மிக்க பெயர் தெரியாத ஆறுகள் பல அழிந்ததிற்கு சாட்சியாக அதன் அருகே இன்றும் உள்ளன ஐயனார் கோவில்கள், கான்கீரீட் சுவரிற்குள் சிறைப்பட்டுக்கொண்டு.)

வாணிமாபுரத்தின் எல்லையில் இருக்கும் ஐயனார் மரத்தடி மண்மேட்டில் அமர்ந்தபடி இருந்தார். அவர் இருக்கும் பகுதி மட்டும் தெய்வ குத்தமாகிவிடும் என்றெண்ணி அக்காலம் தொட்டு மாற்றமடையாமல் இருந்தது. பரிவார தெய்வங்களாம் கருப்பர் மற்றும் இன்ன பிற தெய்வங்கள் வழிநெடுக இருபுறமும் நிற்க, நீர் இருந்த இடம்தான் கருவேலக்காடாகியிருந்தது.

வழியில் குதிரை, யானை போன்ற சிலைகளை அரசன் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தான். கோவில் அருகே உள்ள அரசமரத்தடியில் பஞ்சாயத்து வழக்கம் மறைந்து போனாலும் அதன் சுவடாய் விட்டுச் சென்றிருந்த சிமெண்ட் மேடையில் ஏழு ஊரைச் சேர்ந்த பெரியவர்களும் கூடியிருக்க நடுநாயகமாய் ஜமின்தார் சிங்கமுகப்பாண்டியன் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். மற்றவர்கள் அருகிலும் கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் இருந்து நாற்காலியை எடுத்து வெளியில் போட்டும் அமர்ந்திருந்தனர்.

கோவில் வெளியில் இருந்தாலும் பல ஊரின் குலதெய்வமாக இருப்பதால் அதற்கென தனி கட்டிடமும் அங்கே திருமணம் காதுகுத்து போன்ற நிகழ்வுகளும் அடிக்கடி நடக்கும். கூடவே தெய்வ பொருட்கள் சேமிக்கும் கோவில் வீடும் உண்டு. இப்போது இத்தனை வருடம் ஒதுங்கியிருந்த ஜமின்தார் மீண்டும் வந்துவிட அதைக்கொண்டு சில உள்ளங்களில் மகிழ்ச்சியும் பல உள்ளங்களில் புகைச்சலும் உருவாகியிருந்தது.

தாத்தாவிற்கு அடுத்து சக்திவேலிற்கு கிடைக்க வேண்டிய மரபு வழி மரியாதை அவர் இறந்துவிட்டதால் தாத்தாவையே ஏற்றுக்கொள்ளும்படி ஊரார் அன்று வற்புறுத்த மனது விட்டதால் ஒதுங்கிவிட்டார். ஆனால் இப்போது பேரன் வரவும் மீண்டும் கோவிலுக்கு செலுத்த வேண்டிய பணத்தை குடுத்ததோடு பேரனின் உரிமையை கொடுக்க நினைக்க அதற்கு வழிவிடாமல் ஒருவர் குறுக்கிட்டிருந்தார். அவர் வேறு யாரும் இல்லை. பக்கத்து ஊரில் செல்வாக்காக இருந்த அழகேசனின் தந்தைதான்.

அவரது இடம் வாணிமாபுரத்தையும் அவரது ஊரையும் பாதிப் பாதியாக ஆக்கிரமித்திருந்ததால் மொத்தமாக சக்திவேல் வாங்கி இருந்தார். முதலில் சம்மதிக்காதவர் சேலத்தில் முக்கிய சாலையில் இருக்கும் நிலத்தை கொடுத்தபின்தான் சம்மதித்தார். அதன் குத்தகை வருமானத்தில் தான் இவர் இத்தனை வருடம் வாழ்ந்தது.

அழகேசன் என்று கீதாவை அழைத்து தனியே போனாரோ அப்போதே தந்தைக்கும் அவர்க்கும் முட்டிக்கொண்டது. அப்போது அழகேசனின் பாட்டி மற்றும் தாய் கீதாவிற்கு எதிராக இருந்த காலம். தந்தையிடம் வீட்டின் நிலைமையை கூறி சிறிது நாள்கள் தள்ளி இருப்பதாய் சொல்லியும் அவர் புரிந்துக்கொள்ளாமல் போக உறவில் விரிசல் விழுந்தது. கீதா எவ்வளவோ சொன்னார்தான் தான் சமாளித்துக்கொள்வதாக, ஆனால் இவர் விடவில்லை. கடைசியாக பாட்டி இறக்கும் போது தந்தையை பார்த்தது. பின் இப்போது தான் பார்க்கிறார். தந்தையை பார்த்ததும் அழகேசனிற்கு ஏதேதோ பேசத்தோன்றியது. அவரோ வேண்டுமென்றே எதிர்த்துக்கொண்டிருந்தார் மகன் மீது இருக்கும் கோபத்தில். இத்தனைக்கும் அவருக்கு சக்திவேல் மீது மிகுந்த நன்றிக்கடன் இருந்தது. அவர் மட்டும் அன்று நிலத்தை வாங்கவில்லை என்றால் விவசாயத்தைத் தவிர வேறேதும் அறியாத இவர் வேறு பிழைப்பைத் தேடுவது திண்டாட்டம் ஆகியிருக்கும். அதற்காகவே முதல் மரியாதையை அரசனிற்கு கொடுத்துவிடலாம் என்ற முடிவிற்கு ஏற்கனவே வந்திருந்தார்.

ஆனால் மகனைப் பார்த்ததும் அவருக்கு பிரச்சனை பண்ணத் தோன்றியதோ? இழுத்தடித்துக்கொண்டிருந்தார். கடைசியில் தெய்வத்திடமே உத்தரவு கேட்போம் என்று முடிவாகி பூ மடித்த சீட்டை போட்டு உத்தரவு கேட்ட பின் முடிவு அரசனிற்கு சாதகமாக வந்த பிறகே சூழல் சகஜமாகியது.

அன்று இரவு மீண்டும் சென்னை பயணம் கிளம்பும் முன் அழகேசன் தன் வீட்டிற்கு கீதாவையும் மதுவையும் அழைத்துச் சென்றார். அதுவும் அரண்மனை என்று கூற முடியாவிட்டாலும் பழமையைத் தன் தூண்களில் தாங்கி கம்பீரமாகவே இருந்தது. அழகேசனே எதிர்பார்க்காதபடி அவர் தந்தை இவர்களை வாவென்றும் வரவேற்கவில்லை ஏன் வந்தாய் என்று எகிறவும் இல்லை. மௌனமாய் அங்கீகாரித்தார். ஆனால் தாயிற்கு அப்படி இருக்க முடியுமா?

“இப்போ தான் உனக்கு வீட்டுக்கு வழி தெரிந்ததா அழகு? ஒரே மகன்னு ஆசா பாசமா வளர்த்தோம்ல அதுக்கு தான் நல்ல கைம்மாறு செஞ்சிட்ட” என்று முகத்தை திருப்ப, “அம்மா அப்படிலாம் இல்லைமா... இப்போ தான் நேரம் கிடைச்சது” என்று நடந்த அனைத்தையும் கூற அரசல் புரசலாய் கேள்விப்பட்டிருந்தாலும் மகன் சொல்லித்தான் தெளிவாக புரிந்தது அந்த தாய்க்கு. அவரும் பேத்திகாக உள்ளுக்குள் கேள்விப்பட்டு மருகியவர் தானே.

மகனை அம்போ என்று விட்டு தாய் தந்தை இருவரும் பேத்தியோடு உரையாட ஆரம்பித்தனர். இடையிடையே கீதாவையும் பேச்சில் மதி இழுக்க அழகேசனிடம் பேசுவதை தவிர்த்து மருமகள் பேத்தியிடம் நன்றாக பேசி வழியனுப்பினர் நேரம் கிடைக்கும் போது வரவேண்டும் என்ற கோரிக்கையுடன். தன் தாய் தந்தை விரைவில் சமாதானம் ஆகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் காரில் செல்கையில், “ஆகா கடைசியில் நான் வில்லன் ஆகிட்டேனே” என்று அழகேசன் போலியாக அழுது கலகலப்பூட்டியது வேறு கதை.

அரசனிடம் போன் செய்யுமாறு கூறுவதை விட்டு விட்டாள் மதி. அவன் சார்ஜ் போடவே மறந்து அதை தோட்டம் பால்கனி என்று எங்கு எடுத்து சென்றாலும் அங்கேயே வைத்துவிட்டு அதன் நினைப்பில்லாமல் சுற்ற, “ஹ்ம்ம் இந்த மாமாக்கு போன் வாங்கினது வேஸ்ட் என்று நினைத்து அதனையும் இவள் தன்னுடன் எடுத்து செல்ல பெட்டியில் வைத்துவிட்டாள். நமக்கு யூஸ் ஆகும் என்று.

“தாத்தா நான் அடுத்த வாரம் வரமாட்டேன். நேரா பொங்கலுக்குத்தான். உங்க பொண்ணையும் அப்போ தான் விடுவேன் முன்னாடியே கூப்பிட்டு சோத்துல கை வச்சிராதீங்க தாத்தா அப்பா சாப்பாடு சாப்பிட முடியல” என்று மிரட்டி தந்தையை வார, “ஏன் சொல்ல மாட்ட உனக்கு போய் சமைச்சி குடுத்தேன் பாரு, என்னை சொல்லணும். இனி என்கிட்ட அம்மா சாப்பாடு போர் அடிக்குது நீ சமைச்சி தாப்பான்னு வருவல்ல அப்போ இருக்கு” என்று அழகேசன் பதிலடி கொடுத்தார்.

இருவரையும் முறைத்த கீதா இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க நானே பொங்கலுக்கு வரலாம்ன்னு தான் இருந்தேன். ஆனா நான் ஒரு வாரம் முன்னாடியே வந்துருவேன் ஆனத பாருங்க ரெண்டு பேரும்” என்று முறுக்கிக் கொண்டார்.

இவ்வாறு இவர்கள் வம்பிழுத்துக் கொண்டே தான் கிளம்பினர். அரசனிடம் நன்றாக சாப்பிடுமாறு சொல்ல மறக்கவில்லை கீதா. அரசனிற்கு தான் என்னவோ போல் இருந்தது கீதாவின் பிரிவு. அதற்காக உன்னோடவே இருக்க முடியுமா என்று மனதை அதட்டி பாட்டியிடம் திருப்பினான். இப்போது பாட்டிக்கு மூச்சுத்திணறல் இல்லாமல் பேச முடிந்தது. அரசன் அவருடன் ஒட்டிக்கொண்டான்.

நாள்கள் இவ்வாறு விரைய இதற்கிடையில் அரசனின் மனமெல்லாம் நிலத்தில் ஆரம்பித்த வேலையில் உழன்றது. ஆம். தாத்தா சொன்ன படி ஆட்களை திரட்டி கொடுக்க முதற்கட்டமாக ஏழு ஊர்களிலும் மழை நீரை வீணாக்காமல் தடுத்து நிறுத்த ஆங்காங்கே உயரமான வரப்புகள் மற்றும் தடுப்பு சுவரை அமைக்க முடிவு செய்தான். ஆனால் எதிர்பார்த்த படி வேலை விரைவாக முடியும் போல் தெரியவில்லை. எல்லோரும் வயது முதிர்ந்தவர்களாக இருக்க மெதுவாகத்தான் நடந்துக்கொண்டிருந்தது. ஏழு ஊர்களையும் ஒன்றாக மேற்பார்வை பார்க்க முடியாததும் ஒரு காரணம்.

தாத்தாவிடம் அவனின் குறையை சொல்ல அவர் கார் எடுத்து போகும்படி கூறினார். ஆனால் ஏனோ அவனிற்கு அடிக்கடி ஏற பிடிக்கவில்லை. தான் நடந்தே போய் வருவதாக கூற ஆசை பேரனை அவர் தான் வெயிலில் நடக்க விடுவாரா? சிறிது யோசித்து அவர் வேறொரு வழி கூறினார். அவனிற்கும் காரிற்கு இது பரவால்லை என்று தோன்ற உற்சாகமாகவே சம்மதித்தான்.

சென்னையில் மத்திய தரத்திற்கும் மேல் உள்ள தனிவீட்டில் உள்ள அறையில் ஹை டெசிபலில் காதை செவிடாக்கும் நோக்குடன் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. சந்தேகமே இல்லை அது மதியின் அறைதான். இடையிடையே இவளின் குரல் வேறு பாடலோடு கலந்து கட்டி வீடு முழுக்க எதிரொலித்துக் கொண்டிருந்தது.

அழகேசன் இடதுபுறக் காதை ஒருமுறை நன்றாக விரல் விட்டுக் உலுக்கிக் கொண்டார். ஆனால் கீதாவோ, “வர வர இவ அட்டகாசம் அதிகமாகுது. அதான் காது வலிக்குதுல அப்போவும் அவளை போய் ஒன்னும் சொல்லிராதீங்க” என்று மறுபக்கக் காதில் வந்து கத்தினார். மெதுவாக பேசினால் தான் கேட்காதே!

இப்பொது அவர் இரு காதிலும் விரலை விட்டு உலுக்க உள்ளேவோ அதைப் பற்றிய நினைப்பின்றி

“மாமன் நினைப்பு தான் மாசக்கணக்குல பாடாப்படுத்து என்னையேயேயேயே...

புது பூவா வெடிச்ச பெண்ணையேயேயே.”

என்று மென்மையான பாட்டை வன்மையாக்கிக் கொண்டிருந்தாள். பின்னே இருக்காத அவள் காதலுக்குதான் வீட்டில் பச்சைக் கொடி காட்டி விட்டார்களே. அதற்கு தான் அம்மணி வீட்டிலேயே இம்புட்டு குஷி.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
கதவை தட்டி தட்டி ஒய்ந்த கீதா, “ஏங்க நான் பேசாம இருந்திருக்கனுமோ? வந்தவுடனே அவளை கேள்வி கேட்டு அவளை நானே சலங்கை கட்டி விட்டுட்டேனே” என்று புலம்பினார்.

வீட்டிற்கு வந்த அடுத்த நாளே மதி அரசனிடம் நடந்துக்கொள்ளும் முறைக்கு காரணம் கேட்டார். தாயறியா சூலா எளிதாக மகளின் போக்கைக் கண்டுக்கொண்டார். ஆனால் இங்கே வந்து கேட்டுக்கொள்ளலாம் என்று காத்திருந்து கேட்டார்.

வான்மதி தாய் கேட்டதும் விழித்தாலும் என்றானாலும் தெரிய வேண்டியது தானே என்று நினைத்து தன் காதலை ஒத்துக்கொண்டாள். அம்மா திட்டினால் ‘நீங்க மட்டும் லவ் பண்ணலாம் நான் பண்ணக்கூடாதா’ என சமாளிக்கலாம் என்று நினைத்து அவரைப் பார்க்க, “என்ன லுக்... இவ எப்போ திட்டுவா நாம எப்போ நீ மட்டும் லவ் பண்ணலாம் நான் பண்ணக்கூடாதான்னு கேட்கலாம் என்று பார்க்குறியோ?” என்று புருவம் உயர்த்தி நான் உனக்கு அம்மாடி என்று நிரூபித்தார்.

“ஐயோ அம்மா நான் அப்படி நினைப்பேனா? நான் ரொம்ப நல்ல பொண்ணு கால்ல விழுந்து கூட கல்யாணம் பண்ணி வையுங்கன்னு சொல்வேனே தவிர இப்படியெல்லாம் நினைக்க... ச்ச ச்ச தப்பு தப்பு” என்று கன்னத்தில் அடித்தாள்.

அவளின் பாவனையில் கீதாவிற்கு சிரிப்பு வந்தது ஆனால் அடக்கிக் கொண்டார். அதன் தேவை இல்லாத அழகேசனோ “ஹாஹா” என்று சிரித்துவிட்டார் மனைவி மகளின் சம்பாஷணையில். “தெரியும்டி கேடி” என்று மண்டையில் தட்டியவர் கறாராக, “படிப்பை முடி. அரசனிடமும் கேட்கணும் நீ மட்டும் விரும்புனா போதாது. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம். என்னங்க” என்று மகளிடம் கூறி கணவனிடம் கேட்டார்.

“யாகூ... தேங்க்ஸ் மா...” என்று கன்னத்தில் இதழ் பதித்த மதி, “நீங்க ஓகே சொன்னா அப்பீல் ஏது இத்தனை வருஷத்தில்? நடக்குறது மீனாட்சி ஆட்சி அப்போ மீனாட்சி சம்மதம் போதாதா” என்று கேட்டு கீதாவிற்கு புரியும் முன் விடு ஜுட்.

அதை நினைத்து முடிப்பதற்கும் கதவு திறப்பதற்கும் சரியாக இருந்தது. ஏண்டி உனக்கே இது ஓவரா இல்லை. நாலு நாளு தானடி ஆச்சு உனக்கு மாசக்கணக்கு ஆச்சா என்றவாறு உள்ளே நுழைந்து ரேடியோவை முடக்கினார்.

“நாலு நாளு தான் ஆச்சா? பரவால்ல எனக்கு மாசக்கணக்கு ஆகுன மாதிரிதான் இருக்கு” என்று கண்ணடித்து கூற, “பேசுறது அம்மா அப்பாகிட்ட அது நியாபகம் இருக்கட்டும்” என்று உருட்டி முழித்தார்.

அதற்கு இவள் பதில் கூறுவதற்குள் கீதாவின் போன் அவளது தந்தையின் எண்ணைத் தாங்கி அழைத்தது.

மழை வரும்...

பூமி சுற்றி மேகம் மறைத்து

பரிதி பளீரென்று ஒளிவீசி என எவ்வளவு தடை வந்தாலும் பாதிக்காமல் உன்னை வந்தடைய

மழையாக நான் வரவா?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: இடம் பிடிச்சாசா.. :p:p
யெஸ்ஸ்ஸ்ஸ்... பட் மின்னல் வீராங்கனை பானுமதி அம்மா முந்திக்கிட்டாங்க... :censored::censored:
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான பதிவு அக்கா...அரசனுக்கு மாற்று ஏற்பாடு என்ன...பைக்கோ? ஓட்டத் தெரியாதே!.....மதி அம்மா அப்பா கிட்ட அனுமதி வாங்கியது பெரிதில்லை....அரசனிடம் வாங்கத் தான் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும்....இடையில் ரூபிணி வேறு வருவாள்......அழகேசன் அப்பா அம்மாவோட மறுபடியும் சேர்ந்துடாங்க.....ஐயனார் பற்றிய செய்திகள் புதியன எனக்கு....
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai darling...

ஐய்யனார் பத்தின தகவல்.. புதுசு பா.. தகவலுக்கு நன்றி.. நம் தலை முறை அடுத்த தலை முறைக்கு எதனை விட்டு செல்ல போகிறமோ தெரியவில்லை...

Congratulations mathi kuty.. அரசன நாம சுத்த விட்டுறலாம்......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top