• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
வணக்கம் தோழர் தோழிகளே. Thank you soo much for your likes and comments.:love::love::love:
இதே மாதிரி உங்களுக்கு தோன்றியதை பகிர்ந்துக்கோங்க ப்ளீஸ். :):):) செக் பண்ணலை ஸ்பெல்லிங் தப்பா இருந்தா சாரி...:(:(:( வழக்கம் போல் உங்கள் லைக்ஸ் அண்ட் கமெண்ட்டுக்கு வைட்டிங்...:love::love::love::love:


மழை - 9

கண்கலங்கிய அரசனைப் பார்த்து கீதா, “என்ன அரசா இன்னும் காரம் போகலையா? என்று கேள்வியோடு வினவ, “இல்ல கீதாம்மா போயிருச்சி” என்றவாறு கீழே குனிந்து கண்ணீரை துடைத்தான். அம்மா என்ற அழைப்பு தன்னையறியாமல் வந்திருந்தது அவனிற்கு. கீதாவோ தன்னை
கீதாம்மா என்றழைத்து பேசும் தன் அண்ணனின் பேச்சு அப்படியே அவரின் மகனிற்கும் வந்ததை
நினைத்து, “நீ உருவத்தில் மட்டும் இல்லை... பேச்சிலும் அண்ணன் மாதிரியே தான்” என்று மகிழ்ந்து
கூறினார்.


“அம்மாவா... மாமோய் அவங்க எனக்கு அம்மா உங்களுக்கு அத்தை” என்று மதி போர்க்கொடி தூக்க, “உனக்கென்னடி அவனுக்கு எப்படி சவுகாரியமோ அப்படி கூப்பிடட்டும்” என்று கீதா மகளிடம் பாய்ந்தார்.

அவள் உதட்டைச் சுளித்து எழுந்து சென்று கை கழுவி வந்தாள். “கீதா உனக்கு அம்மா அப்படின்னா நான் அப்பா சரியா அரசா” என்று அழகேசன் கூற, அரசனும் புன்னகையுடன் “சரிப்பா” என்றான்.

மதி சும்மா இருந்தால் அது மதி அல்லவே. “ஆனா நான் உங்களுக்கு தங்கச்சி இல்லை சரியா” என்று அவசர அவசரமாக கூறினாள். எங்கே தன்னை தங்கை ஆக்கிவிடுவாங்களோ என்று. அவள் சொன்ன
விதத்தில் அனைவரும் சிரித்துவிட, அதன் பின்பே தான் சொன்னதை உணர்ந்து நாக்கைக் கடித்து குடுகுடுவென தன் அறைக்கு செல்ல மாடிப்படியை நோக்கி கிட்டதட்ட ஓடினாள் வான்மதி.


அடுத்த நொடி “அம்மாஆஆ... என்ன பண்ணி வச்சிருக்கீங்க” என்ற கூச்சல் வான்மதியிடம் இருந்து புறப்பட்டது. அனைவரும் என்னவோ ஏதோ என்று அவள் பின்னால் வர, அங்கே மாடிப்படி செல்லும் படியின் பக்கவாட்டு சுவரின் மேல் பாட்டான் முப்பாட்டன் காலத்தில் வரைந்த ஓவியத்தில் இருந்து வரிசையாக சக்திவேல் புனிதா புகைப்படம் வரை இறந்தவர்களுக்கு மாலை போட்டு மரியாதை செய்திருக்க கடைசியாக மதியின் புகைப்படம் மாட்டி மாலையிட்டிருந்தனர். அதற்கு கீழே இருந்து
தான் புசுபுசு என்று மூச்சி வாங்க தாயை முறைத்துக் கொண்டிருந்தாள் மதி.


“அச்சோ சாரிடா... அம்மா சந்தோசத்துல மறந்துட்டேன். இரு இரு நான் எடுக்குறேன். ஏங்க போய் ஷேர் எடுத்துட்டு வாங்க நான் போய் பூசை ரூம்ல இருக்குற போட்டோவை எடுத்துட்டு வந்துடறேன். அப்பா நீங்க போங்க போய் தூங்குங்க. ரொம்ப நேரமா அங்கயும் இங்கயும் அலைஞ்சிட்டீங்க” என்று வீட்டு ஆளாய் பொறுப்புகளைக் கையில் எடுத்து விரைந்தார்.

தாய் வரும் வரை பொறுமை இல்லாதவள் தன் போட்டோவை குதித்து எடுக்க முயல, அரசன்
இடையில் நுழைந்து “அந்த படம் தான வேணும் இரு” என்று மாடிப்படி ஏறி அங்கிருந்த கைப்பிடியின் வெளிப்பக்கம் வந்து ஒற்றைக்கையில் கைப்பிடியையும் மற்றொரு கையால் புகைப்படத்தையும் எடுக்க அது வராமல் போக்கு காட்டியது. “மேலே எடுத்து பாருங்க வரும்” என்று
மதி அண்ணாந்து கூற, புகைப்படத்தை மேல் நோக்கி இழுத்தான் அரசன்.


புகைப்படம் கையோடு அரசனிடம் வர அவன் எடுக்கையில் சரிந்த அந்த ரோஜா மாலை சரியாக
மதியின் கழுத்தில் விழுந்து அலங்கரித்தது. மாலை சரியவும் கண்ணை மூடிய மதி கழுத்தில் விழுந்த பின் அதைப்பற்றி அரசனைப் பார்க்க, அவனோ கீழே இறங்கி வந்து அவளின் புகைப்படத்தை கொடுத்தான்.


அவள் வாங்காமல் மாலையை இரு கையால் பற்றியிருக்க, “மதி இந்தா.. அதை எடு” என்று
மாலையை எடுக்க அரசன் கைநீட்டவும் சுதாரித்தவள், “போட்டோக்கே போட கூடாதுன்னு
சொல்றேன். எனக்கே வந்து விழுகுது பாருங்க” என்று கோபமாக மாலையை கழட்டி கையோடு எடுத்து அறைக்குச் சென்றுவிட்டாள்.


அரசன் அவளை புரியாமல் பார்த்து அங்கே வந்த கீதாவிடம், “கீதாம்மா இந்தாங்க நானே
எடுத்துட்டேன்” என்றவாறு மதியின் புகைப்படத்தைத் தர, கொண்டுவந்த நாற்காலியை இதைப் பார்த்து அங்கேயே வைத்துவிட்டு வந்தார் அழகேசன்.


“நீங்க போங்க... நான் அரசனுக்கு அண்ணா ரூமை காட்டிட்டு வரேன். வா அரசா” என்று அரசனை அழைத்து மாடியேறினார். அடுத்த சோதனையாக அரசனுக்கு அறைக்குள் சென்றதும் பல பொருட்கள் இருக்க அவனுக்கு படுக்கையை தவிர வேறெதுவும் எதற்கு என்றே தெரியவில்லை.

அத்தனையும் கீதா இருப்பதை மறந்து புதிதாக பார்ப்பது போல் பார்க்க, “என்கிட்ட இருந்து நீயும்
மதியும் எதாவது மறைக்குரீங்களா?” என்ற கேள்வி கீதாவிடம் இருந்து வந்தது. “என்ன கீதாம்மா?” என்று புரியாமல் அரசன் கேட்க, “நான் வந்ததில் இருந்து பாக்குறேன் நீ புதுசா பாக்குற மாதிரியே எல்லாத்தையும் பாக்குற. சரி நான் கூட இதெல்லாம் பாத்திருக்க மாட்ட போக போக
பழகிரும் என்று நினைத்தேன். ஆனா மதி நான் கேள்வி கேட்கும் போது மழுப்பி உன்கிட்ட கண்ணால பேசியதை பார்த்தேன். அதான் ஏதாவது என்கிட்ட மறைக்குரீங்களான்னு கேட்டேன். மதிகிட்ட கேட்குறதுக்கு கேட்காமலே இருக்கலாம் அவ வாயில இருந்து உண்மைய வர வைக்குறது கஷ்டம். அதான் உன்கிட்ட கேக்குறேன். என்ன ஏதாவது ஆகிருச்சா மதிக்கு” என்று தாயாய் பயந்துபோய்க்
கேட்டார்.


பொய் சொல்லி அறியாத அரசன், “இல்லம்மா அவளுக்கு ஒன்னும் ஆகலை. என்னைப்பற்றி தான்
சொல்ல வேண்டாம் என்று சொல்லி போயிருக்கா” என்று கூறி தான் வளர்ந்த விதத்தைக்
கூறிவிட்டான்.


“அந்த களவாணி எதை நினைத்து சொல்லவேண்டாம் என்று சொன்னாள்ன்னு தெரியலையே. அவளை நான் பார்த்துக்குறேன். நீ அவள் சொல்பேச்சு எல்லாம் கேட்டுடாத ஏதாவது வம்புல சிக்க
வச்சிடபோறா” என்று அனைத்து தாய்மார்களைப் போல் தன் பிள்ளையை தானே வாரிவிட்டு
அவனிற்கு தேவையான ஆடையை அழகேசனிடம் இருந்து வாங்கித்தந்தார்.


கூடவே நாளை போய் உனக்கு தேவையானதை வாங்கிக்கொள்வோம் என்று கூறி குளியலறையையும் எவ்வாறு பயன்படுத்தணும் என்று தாயாய் மாறி சொல்லித்தந்து மதியிடம் சென்றார். அந்த களவாணியோ தான் கொண்டு வந்த ரோஜா மாலையை கழுத்தில் போட்டு
கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டிருந்தாள்.


இடையிடையே அரசனை எண்ணி நாணமும் சந்தோசமும். ‘அரசு மாமா இப்போ தெரியாம விழுந்த மாலை தெரிஞ்சே விழும் நாளுக்காக நான் வெயிட் பண்ணுறேன்’ என்று வெட்கத்தோடு முணுமுணுத்து தன் காதலை... அரசனைக் காதலிப்பதை நினைத்து கனவில் மிதந்தாள். அன்று கமழியை அரசனுக்கு திருமணம் பேசியதிலேயே அவள் மனது பதறிய பதட்டத்தை தன் மாமா அங்கேயே தங்கிவிடாமல் தன்னுடன் அழைத்துச் செல்லத்தான் என்று எண்ணியிருக்க, இன்று வீட்டில் நடந்த நிகழ்வுகள் அப்படியில்லை மாமாவை தன் மனதை தவிர வேறு எங்கும், யார் மனதிலும் தங்கவிடாமல் தடுக்கத்தான் என்று இப்பொது புரிந்தது.

காட்டில் அரசனைப் போல் கம்பீரமாய் இருந்தவன் அதனை விட்டு வெளியே வந்ததும் ஒவ்வொரு விஷியத்திலும் திணற வான்மதிக்கே உள்ளுக்குள் லேசாக வலித்தது. எப்படி வாழவேண்டியவன் எப்படி வாழ்ந்திருக்கிறான் என்று. ‘வீட்டில் சொன்னால் தாய் குழந்தை போல் நடத்தி விடுவாரோ? படிப்பிற்கு முக்கியத்துவம் தரும் தந்தை அரசன் படிக்கவில்லை என்று தெரிந்தால் டூடோரியல்
அனுப்பிவிடுவாரோ? அரசன் கஷ்டப்படுவானோ? என்ற யோசனைகளால் அதனை மறைத்து அவனின்
மூலிகை பற்றிய மருத்துவ அறிவை பயன்படுத்தி பிரபலமாக்க யோசித்து வைத்திருந்தாள்.
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
பின் இந்த ஆறு நாள்களில் தாங்கள் வந்த நினைவுகளை மீண்டும் புரட்ட அவளின் சுகமான
நினைவுகள் தாயின் குரலால் தடைப்பட்டது.


“மதி... ஏய் மதி கதவை பூட்டிட்டு உள்ள என்னடி பண்ற கதவை திற” என்று தட்டவும், “இதோ வந்துட்டேன் மா... என்று அவசரமாக மாலையைக் கழட்டி அலமாரியின் கடைசி அடுக்கில் போட்டுக் கதவைத் திறந்தாள்.

உள்ளே வந்ததும் கீதா, “இன்னுமாடி இந்த கிழிஞ்ச சுடிதாரை போட்டுட்டு இருக்க...
அப்போவே மாத்த சொல்லிருப்பேன் பாவம் பிள்ளை பசிக்குதுன்னு சொன்னாலேன்னு விட்டா...” என்று பேசிக்கொண்டே உடை எடுத்துத் தந்து “இந்தா போய் குளிச்சி மாத்திட்டு வா” என்றார்.


அவள் தலைக்கு குளித்து வரவும், “என்னடி இந்த நேரத்துல தலைக்கு ஊத்திருக்க... என்று துண்டை வாங்கி மகளை அமர வைத்து துவட்டிவிட, “ஹிஹி அம்மா பத்து நாளா குளிக்காம உடம்பெல்லாம் ஒரு மாதிரி இருந்ததுமா... அதான் ஷவரை பார்த்ததும் தலைய உள்ள விட்டுட்டேன்” என்று கூறினாள்.

'மாட்டினாயா? உன் வாயில இருந்தே உண்மைய வர வைக்குறேன்டி' என்று எண்ணிய கீதா, “ஏன் பத்து நாளா குளிக்கலை? என்று கேட்டார்.

“அதும்மா... வந்து டிரஸ் இல்லை அதனால குளிக்கலை” என்று கூறி பெருமூச்சி விடுவதற்குள், “யாருமே தரலையா உன்னையே பாத்துகிட்டாங்க ஒரு டிரஸ் கூடவாடி தரமாட்டாங்க” என்று அடுத்த கேள்வி வந்தது.

“அது... அங்க... இல்ல என்னோட கை காலெல்லாம் காயமா இருந்துச்சா அதான் மாத்த
வேண்டாம்ன்னு விட்டுட்டாங்க. கிளம்பும்போது கிளம்புற சந்தோசத்துல குளிக்க
மறந்துட்டேன்” என்று கேட்ட கேள்விக்கும் கேட்காத கேள்விக்கும் சேர்த்து பதில்
சொன்னாள் வான்மதி.


மகளின் புளுகுமூட்டை எல்லாம் தாயிற்கு கடுப்பை வரவழைக்க, அவளின் தலைமுடியை
துண்டோடு சேர்த்து பிடித்து ஒரு ஆட்டு ஆட்டியவர், “எங்கிருந்துடி இவ்ளோ பொய் பேச
கத்துகிட்ட? அங்க வசதியில்லை அப்படின்னு உண்மைய சொன்னா என்ன? அப்படியே உங்க அத்தை புத்தி...” என்று மகளையும் நாத்தனாரையும் சேர்த்து திட்டினார்.


‘அய்யையோ அந்த உண்மை விளம்பி எல்லாத்தையும் சொல்லிட்டான் போலவே.
சொல்றது தான் சொல்றான் கொஞ்சம் என்கிட்ட சொல்லிட்டு சொல்ல கூடாது... என் தலை
அம்மா கைல சிக்கிருச்சே’ என்று அலறி “அம்மா அம்மா விடும்மா... செத்துப்பிழைத்து வந்த பிள்ளைய இப்படியா படுத்துவ” என்று தன் தலையை தாயிடம் விடுவித்தாள்.


“இப்போ என்ன உனக்கு உண்மை தெரியனும் அவ்ளோ தான” என்று கூறி அரசன் சொன்னதையே அச்சுபிசகாமல் ஒப்பித்து, “இதை வைத்து மாமாவை குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணுன அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது” என்று மிரட்டினாள்.

கூடவே அரசனைக் குறித்து தான் யோசித்து வைத்ததையும் கூற, “அதெல்லாம் சரிதான்
ஆனா நீ பாட்டுக்கு தின்னுட்டு இங்க வந்துட்டியே அங்க அரசன் தனியா என்ன பண்ணுவான்னு யோசிச்சியா? நானே கேட்டு வேண்டியதை சொல்லி குடுத்திட்டு வந்தேன். விஷயம் தெரியுற வரை அவன் குழந்தைதாண்டி... அப்பாக்கிட்ட சொன்னாலும் அப்படியே
அரசன் விருப்பம் தெரியாம ஒன்னும் பண்ண மாட்டாரு. வந்துட்டா தன்னை பெரிய
அறிவாளியா நினைச்சிட்டு... போ போய் தூங்கு மதியம் நாங்க ஊருக்கு விருந்து வைக்குறோம். அதுக்கு முன்னாடி ரெண்டு பெரும் கடைக்கு போய் அரசனுக்கு தேவையான
துணிமணி வாங்கிட்டு வந்துருங்க” என்று கூறி வெளியே சென்றார்.


மதியோ, “ஹ்ம்ம் டோட்டல் டாமேஜ்” என்று கூறி தலையில் அடித்து தூங்கிவிட்டாள்.

அறையில் அழகேசனின் சட்டை மற்றும் வேஷ்டியை அணிந்து தன்னை அரையடி ஆழம்
உள்வாங்கிய சொகுசு மெத்தையில் அசைவின்றி படுத்திருந்தான் அரசன். அது புதைகுழி போல் உள்ளே இழுக்க கல் மண்ணில் படுத்துப் பழகிய உடம்பு இதில் படுக்க இயலாமல்
இம்சித்தது. வயிறு பழக்கமில்லாத உணவை உண்டதால் இறுக்கி பிடிக்க, மனமோ சில மணிநேரங்களில் தான் கண்ட புதிய புதிய விஷியங்களில் மலைத்துப் போய் சோர்ந்திருந்தது. பின் எழுந்து தான் அணிந்து வந்த கச்சையில் கட்டியிருந்த மூலிகைகளைச் சோதித்தான். அதில் இருந்து சில இலையை எடுத்து மென்று மீதி
அனைத்தையும் பத்திரப்படுத்தினான். கூடவே தனியாக இருந்த கணக்கிலடங்கா சிறு சிறு
மண் உருண்டைகளை அருகில் இருந்த குவளையில் இருந்து நீரை எடுத்து தெளித்து
ஈரப்பதம் விலகாமல் பார்த்துக்கொண்டான்.


இப்பொது வயிறு சற்றுச் சரியாக, “முதல் நாளே முதல்முறையா எனக்கே வைத்தியம்
பாக்க வைத்துட்டாங்களே” என்று மனதில் எண்ணி கீழே படுத்தவன் வெகுநேரம் கழித்தே
உறக்கத்திற்கு சென்றான்.


மழை வரும்...

நிலவாக மட்டும் நான் இருந்தால்

இரவு மட்டுமே உன்னை காணும் இன்பம்.

எப்போதும் உன்னுடன் நானிருக்க

மழையாக நான் வரவா?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top