• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Meendum uyirthezhu - 35

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
35

வீரசாகசம்

அந்த அழகிய மலையின் உச்சியில் இரவின் குளிர் நடுக்கமுற செய்து கொண்டிருந்தது. இருளோடு பெரும் அமைதியை அந்த இடத்தை முழுவதுமாய் கவ்விக் கொண்டிருக்க சில இரவுப் பறவையின் சத்தங்கள் ஆங்காங்கே ஒலித்து லேசாய் அச்சத்தை உண்டாக்கியது. அந்த பங்களாவை சுற்றிலும் உயரமான மரங்கள் ஆங்காங்கே பாதுகாவலனாய் நிற்க உதகை நகரத்தின் ஒதுக்கு புறமாய் அதிக ஆட்கள் நடமாட்டமே இல்லாத காட்டு பகுதியின் தொடக்கத்தில் தனிமையில் அமைக்கப்பட்டிருந்த அந்த பங்களா ஈஷ்வரின் சதித்திட்டங்களுக்கும் ரொம்பவும் வசதியாயிருந்தது. எல்லோரும் உறங்கி கொண்டிருக்க இவ்வுலகின் நிம்மதியை முற்றிலுமாய் கெடுக்க ஈஷ்வர் விழித்திருந்து சதியாலோசனையில் ஈடுபட்டிருந்தான். அந்த பங்களாவின் மேல்புறத்தில் இருந்த அந்த பெரிய அறை அப்போது ஆராய்ச்சி மையமாகவே காட்சியளித்தது. ஈஷ்வர் தன் மோசமான திட்டத்தை வகுத்து கொண்டிருக்க அந்த ஐந்து பேர் கொண்ட குழுவிடம் டீ7 நோயின் மருந்தை சோதிக்க யார் மேல்.. எப்படி... எவ்வாறு செயல்படுத்துவதென விவரித்து கொண்டிருந்தான். மதிக்கு மட்டும் கண்களை சுழற்றி கொண்டு தூக்கம் வர இவர்களுக்கு இரவு நேரம்தான் கிட்டியதா என அலுத்த மேனிக்கு நின்றிருந்தான்.

கிட்டதட்ட அவர்களின் உரையாடல்கள் முடிவுற அந்த குழுவின் தலைமையானவனான சலீம் மட்டும் தயங்கியபடி "பாஸ்... ஒரு சின்ன மேட்டர் கேட்கலாமா? என்றான்.

ஈஷ்வர் தலையசைத்து "ம்ம்ம்... கேளுங்க சலீம்" என்று ஆர்வமாய் வினவ, சலீம் தயக்கத்தோடு "நம்ம கொங்ககிரி பிராஜக்ட்டை பிளாஃப்பாக்கின அந்த பெர்ஸன் உண்மையிலேயே டீ7 டிஸீஸை க்யூர் பண்ணான்னா ?" என்று கேட்டான். எல்லோர் மனதிலும் இருந்த வியப்பான கேள்விதான் அது.

ஈஷ்வருக்குமே இந்த கேள்வி மனதை துளைத்து கொண்டிருக்க யோசனையோடு "இட்ஸ் அ மில்லியன் டாலர் க்வ்ஷின்... எனக்குமே அந்த கேள்விக்கான பதில் வேணும் சலீம்... டோன்ட் வொரி ... அதை பத்தி நாம அவன்கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கலாம்" என்று சொன்ன நொடி அந்த அறையின் ஜன்னலருகே ஏதோ விழுந்த சத்தம் கேட்க ஈஷ்வரின் முகம் முற்றிலுமாய் மாறியது.

"மதி" என்று ஈஷ்வர் அழைக்க அறைகுறை தூக்கத்தில் இருந்தவன் இப்போது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான். மீண்டும் ஈஷ்வர் கோபத்தோடு "டே இடியட் மதி" என்று உரக்க அழைக்க மெல்ல விழித்தவன் தூக்க கலக்கத்தோடே "எஸ் பாஸ்" என்றான்.

"ஏதோ சத்தம் கேட்குது... ஜன்னல் எல்லாம் லாக்காயாருக்கான்னு பாரு" என்று சொன்னதும் மதி தெளிவுப்பெற்று எல்லா ஜன்னல்களையும் சோதனை புரிந்தான்.

பின்னர் ஈஷ்வரை பார்த்து"எல்லாமே லாக்டாதான் இருக்கு..." என்று மதி சொல்ல

ஈஷ்வர் பதட்டத்தோடு "சரி மதி... செக்யூரிட்டிக்கு கால் பண்ணி வீட்டை சுத்தி செக் பண்ண சொல்லு... சம்திங் ராங்" என்று பணிக்க, மதியும் அவ்வாறே செய்தான்.

இருப்பினும் ஈஷ்வரின் மனம் நிம்மதியடையாமல் ஒருவித அபாய ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. யாரோ ஒருவன் அவன் ரகசியத்தை களவாட வந்திருக்கிறானோ என்று சிந்தித்தவன், பின்னர் இந்த பங்களாவின் இத்தனை பெரிய சுவற்றினை தாண்டி நுழைவது சாத்தியமா என யோசிக்க அத்தகைய அசாத்தியமான காரியத்தை செய்ய ஒருவனால் முடியும். அவனுக்கு மட்டுமே ஈஷ்வரின் சாம்ராஜ்ஜியத்திற்குள் நுழையும் வல்லமையும் தைரியமும் உள்ளது.

அந்த அசாகாய சூரன்தான் அந்த பங்களாவின் வெளிபுறத்தில் இருந்த மரத்தின் மீது ஏறி ஒரு கயிற்றை லாவகமாய் குறி பார்த்து வீசி உள்ளே இருந்த ஒரு மரத்தின் பிடியில் சிக்க வைத்து கயிற்றை பாலாமாக்கி அந்த பங்களாவிற்குள் நுழைந்தான். மரங்களும் காட்டு மிருங்களும் இரவும் குளிரும் அவனுக்கு புதிதல்லவே. எல்லாமே அவனுக்கு தண்ணிபட்ட பாடு. அவன் அத்தனை விரைவாய் கடந்து
உள்ளே வந்த நொடி அந்த மரத்தை கட்டியணைத்து நன்றி சொல்லும் விதமாய் முத்தமிட்டுவிட்டு இறங்கும் போதுதான் கால் இடறி கீழே விழுந்தான்.

ஈஷ்வரின் சதிகூட்டத்தில் அபிமன்யு பற்றி பேச தொடங்கிய நொடி அவன் தன் வீரசாகசங்களை புரிந்து நுழைந்திருக்க நூறு ஆயுசு என்று பாராட்ட எண்ணிவிடலாம் என்பதற்குள் அத்தனை உயரமான மரத்தில் இருந்து தொப்பென்று கீழே விழுந்தும் தொலைத்தான். அவன் விதியை தீர்மானிப்பதில் நமக்குமே கொஞ்சம் குழப்பம்தான். ஆனால் எத்தனை உயரத்தில் இருந்து விழுந்தாலும் எப்படி விழுந்தால் காயம் ஏற்படாது என்ற மாயவித்தையை கற்று தேர்ந்தவனாயிற்றே. ஆதலால் காயம் ஏற்படாமல் கீழிருந்த கிளையை பிடித்து சடாரென்று குதித்து கை கால்களை உதறி சரி செய்து கொண்டான். சூர்யா சொன்னது போல் அவன் புத்திகூர்மையும் தைரியமும் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதே நேரத்தில் அவன் எதிர்கொள்ளும் எந்த பெரிய ஆபத்தையும் அவன் திறமையால் கடந்துவிடுவான் என்பதே அவனின் இந்த வீர சாகசம் அறிவுறுத்தியது.

அபிமன்யுவை ஈஷ்வரே அழைத்திருக்கும் போது அவன் நேர்பாதையிலேயே வந்திருக்கலாமே. ஆனால் அவன் மூளை ஏனோ அத்தகைய வழியை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. சூர்யாவை கைப்பேசியில் அழைத்த போது அவள் பேசாமல் இருந்ததும் பின் நீண்ட நேரம் போஃன் ஸ்வட்ச் ஆஃப்பானதும் அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது.

அப்போதே அவன் அர்ஜுனின் மூலமாக சூர்யா எங்கே சென்றிருக்கிறாள் என்பதை தெளிவுப்படுத்தி கொண்டான். அவளை பார்த்துவிட வேண்டும் என கரிசன் சோழாவிலிருந்து புறபட்ட நொடியில் கோயமுத்தூர் வந்தடைய, அப்போது
ஈஷ்வரின் அழைப்பு இன்னும் அவனை கலவரப்படுத்தியது. சூர்யாவை பற்றி அவ்வாறெல்லாம் அவன் ஏன் தன்னிடம் சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கான பதில் ஒரு விஷயத்தை பதிய வைத்தது. அது சூர்யாவிற்கு ஈஷ்வரால் ஏதோ ஒரு ஆபத்து நிகழப்போவதாக தோன்ற அந்த எண்ணத்தாலேயே அவன் இப்போது இங்கிருக்கிறான்.

சூர்யாவிற்கு எத்தகைய பிரச்சனையில் சிக்கி கொண்டிருக்கிறாள் என்பது தெரியாமல் நேரடியாக வந்து தானும் அந்த ஈஷ்வரிடம் சிக்கி கொள்ள கூடாதென்று எண்ணியே அபிமன்யு இப்படி ஒரு திருட்டுத்தனத்தில் ஈடுபட்டான்.

அந்த பங்களாவை சுற்றியுள்ள தோட்டத்தில் உள்ள மரம் செடி கொடிகளில் இருளில் மறைந்தபடி சூர்யா எங்கே இருப்பாள், அவளை எப்படி கண்டுபிடிப்பது என யோசித்தபடி அந்த பங்களாவை சுற்றி சுற்றி வந்து ஓரு மரத்தினடியில் சலிப்பாய் அமர்ந்து கொண்டு "எப்படியோ உள்ளே வந்துட்டேன்... ஆனா சூர்யாவை எப்படி கண்டுபிடிக்கிறது... போஃன் பண்ணாலும் அந்த ஈஷ்வர் எடுப்பானே... எங்கடி இருக்கே?" என்று புலம்பியவனின் செவியில் ஒரு குரல் தீட்சண்யமாய் "லவ் இஸ் ஸோ பீயூட்டிப்புல்..." என்றது.

அபிமன்யுவின் இதயம் அவனை மீறிக் கொண்டு சந்தோஷத்தில் படபடக்க அது அவளுடைய குரல்தான் என எண்ணிக் கொண்டு ஆனந்தம் அடைந்தபடி சுற்றும் முற்றும் பார்வையை திருப்பினான். ஆனால் அவன் கண்களுக்கு யாரும் தென்படாமல் போக அவளுடைய குரல் மீண்டும் ஒலித்தது.

"யூ ஆர் ஸோ ஹேப்பி... எனக்கு உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு..." என்று சொல்லும் போதே அவளின் குரலின் தவிப்பு அழுத்தமாய் உணரப்பட அபி புன்னகை ததும்ப 'இங்க எந்த குரங்கு கிட்ட இப்போ இவ பேசிட்டிருக்கா' என்று சொல்லியபடி தேடினான்.

சூர்யாவே மீண்டும் அவளின் மென்மையான குரலில் "நீங்க ஹேப்பியா இருக்கீங்க... பட் நான்" என்று கேட்க, இப்போது அவன் நின்றிருந்த மரத்திற்கு பின்புறம் இருந்த ஜன்னலில் இருந்து வெளியே பார்த்தபடிதான் அவள் பேசிக் கொண்டிருந்தாள் என்பதை கவனித்தான்.

ஜன்னலின் வெளியேதான் நாம் நிலவை பார்க்கலாம் எனினும் இப்போது அபிமன்யுவின் விழிகளுக்கு அந்த வீட்டின் ஜன்னலின் உள்ளே நிலவு காட்சியளித்தது. அவள் முகம் முழுமதியாய் அவனுக்கு புலப்பட
அவனின் விழிகள் அப்போது உலகையே மறந்து அவளின் சௌந்தர்யமான வதனத்தில் ஸ்தம்பித்து போனது.

அவள் மீண்டும் ஏக்கத்தோடு "எனக்கும் உங்களை போல இறக்கை இருக்க கூடாதா... இங்கிருந்து நிமஷத்தில பறந்து போயிடுவேன்... " என்று அவள் சொல்ல அப்போதுதான் அவன் அவளின் எதிரே இருந்த மரத்தின் கூட்டிலிருந்த ஜோடி பறவைகள் கொஞ்சி குலாவி கொண்டிருப்பதை கவனித்து புன்னகையித்தான். அவளின் ஏக்கம் அவனுக்கு பிடிபட அவளை பார்த்த நொடி சந்தோஷம் கிட்டினாலும் இப்போது அவள் முகத்தில் படர்ந்திருந்த சோகம் அவனை வேதனைக்குள்ளாக்கியது.

அவள் மேலும் "ஐ டோன்ட் லைக் திஸ் பிளேஸ்... எனக்கு என் அபியை மீட் பண்ணனும்... பேசினும்... அழனும்" என்று சொல்லி கொண்டே அவளை மீறி கண்களில் நீர் வெளியேற அவள் அந்த நீரை துடைத்தபடி "நோ... நான் அழமாட்டேன்... ஐ வில் நாட் லூஸ் மை கரேஜ்... அட் எனி காஸ்... ஈஷ்வர்கிட்ட நான் தோற்று போகமாட்டேன்" என்று தனக்குத்தானே பேசி புலம்பியபடி நின்றிருந்தாள். அப்போது அபிக்கு அவளின் விழி நீரை துடைத்து அவளை அரவணைத்து கொள்ள தவிப்பு உண்டானது.

அதே சமயத்தில் அவள் ஈஷ்வர் என்று சொன்ன நொடி அவனும் அந்த தோட்டத்தில் வேகமாய் சுற்றி வர சூர்யா அவனை பார்த்துவிட்டு ஜன்னல்கதவை மூடினாள். அவன் அவளிடம் பேசிய வார்த்தைகள் அவளை காயப்படுத்தி இருந்ததினால்தான் அவள் அவ்விதம் தளர்ந்து போயிருந்தாள்.

அபிமன்யு சூர்யாவின் கோபம், துடுக்குத்தனம், புத்திசாலித்தனம் என எல்லாவற்றையும் பார்த்திருக்கிறான். ஆனால் இப்படி அவள் முதல் முறையாய் துவண்டு போவதை பார்த்து புரியாமல் வேதனையுற ஈஷ்வர் அப்போது பேட்டரி எடுத்து கொண்டு அந்த தோட்டத்தின் இருளில் எதையோ தேடினான்.

அபிமன்யு மறைவாய் ஒலிந்து கொள்ள சூர்யா ஜன்னலினிருந்து எட்டி பார்த்தபடி 'இந்த நடுராத்திரில இவன் அப்படி என்னத்தை தேடிட்டிருக்கான்... லெட் மீ பைஃன்ட் அவுட்' என்று சொல்லி அந்த இருளை பொருட்படுத்தாமல் அவளும் வீட்டிற்கு வெளியே வந்தாள். அந்த இருளில் அவனை பின்தொடர எண்ணி சூர்யாவும் தோட்டத்தில் நுழைந்து சுற்றி முற்றும் பார்த்தபடி தேடினாள். எத்தனை பிரச்சனையிலும் அவளின் துடுக்குத்தனம் மட்டும் மாறவேயில்லை என்பதற்கு உதாரணமாய் அவள் ஜேம்ஸ் பாண்ட் என்றளவுக்கு அவனை பின்தொடர சட்டென்று 'எங்க ஆளே காணோம்' என்று எண்ணி அவளின் கூர்மையான விழிகள் தேடலில் ஆழ்ந்தது.

அப்போது பின்னோடு இருந்தபடி சூர்யாவின் இடையை ஒரு கரம் சுற்றி வளைத்து இழுத்து அவளை வாயை பொத்திவிட அவள் அதிர்ந்து போனாள். இப்படியெல்லாம் அந்த ஈஷ்வர்தான் செய்ய கூடும் என எண்ணியவளின் தவிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அதிர்ச்சி வைத்தியம்

அந்த இரும்பினை ஒத்த கரம் அவளை முழுவதுமாய் சிறைபிடிக்க பேசவும் முடியாமல் இருந்த போது எதிரே பார்த்த உருவம் அவளை குழுப்பத்தில் அழுத்தியது. ஈஷ்வர் அவள் கண்முன்னே அந்த இடத்தை கடந்து போக சூர்யா குழப்பத்தோடு 'அப்போ இது யாரு' என்று எண்ணியபடி அவளை வளைத்திருந்த கரத்தை கவனிக்க அவள் இடையை வளைத்திருந்த அந்த வலது கரத்தின் வாட்ச் அவன் அபிமன்யுவா என்ற எண்ணம் அவளை திகைப்பில் ஆழ்த்தியது.

ஈஷ்வர் சென்றுவிட்டதை கவனித்த பின் அவனின் கரம் அவளை விடுவித்தது. சூர்யா திரும்பி அந்த இருளில் பார்த்த முகம் அவளை எண்ணிலடங்கா இன்பத்தில் திளைக்க வைக்க, அவள் நம்பமுடியாமல் அப்படியே சிலையென நின்றாள்.

இது எப்படி சாத்தியம் என்றும், இது தன் கனவோ என்றும் அப்படியெனில் சற்று முன்பு நடந்தவை எல்லாம் என அவள் ஸ்தம்பித்திருக்க, அபிமன்யு அவளின் அசையாத கருவிழிகளை பார்த்தபடி "ஏய் அழகி... நான் ஒண்ணும் இலுஷன் இல்ல... ரியல்" என்று காற்றோடு மெலிதாய் அவன் சொன்னதே தாமதம்.

அவள் விரைவாய் அவன் கழுத்தை வளைத்து இறுகி அணைத்து கொள்ள அபிமன்யு இப்போது செய்வதறியாது திகைத்தான். முதல் முறையாய் ஒரு பெண்ணின் ஸ்பரிசம் அவனை அப்படி முழுவதுமாய் ஆட்கொள்ள இந்த புவியின் உள்ள இன்பங்கள் ஒட்டுமொத்தமாய் இப்போது அவனிடத்தில் அடைக்கலம் புகுந்தது. அவளின் அணைப்பு அவனின் இத்தனை நாளின் பிரிவை மட்டுமல்ல. அவளின் தவிப்பையும் ஏக்கத்தையும் வேதனையையும் சேர்த்தே அவனுக்கு புரிய வைத்துவிட்டிருந்தது. அவனும் அவளை தன் கரங்களில் பிணைத்து கொள்ள சூர்யாவிற்கு இப்படியே உலகம் சுழலாமல் நின்றுவிடக் கூடாதா என தோன்றியது.

அபிமன்யுவின் கால்கள் தரையில் நிற்பதாகவே அவனுக்கு தோன்றவில்லை. வான வீதியில் உலாப் போய் கொண்டிருக்கும் அவனை அவள் பூமிக்கு இழுத்து வந்தது போல சட்டென அவன் முகத்தை பார்த்து "இது ட்ரீம் இல்லயே" என்று சந்தேகமாய் கேட்டாள்.

அபிமன்யு குறும்புத்தனமான பார்வையோடு அவள் கன்னத்தை கடித்து விட சூர்யா "ஆ... இடியட்" என்று திட்டி விலகிப் போக பார்த்தவளை போகவிடாமல் இன்னும் இறுக்கமாய் அணைத்தபடி "இப்போ புரிஞ்சிதா... இது கனவில்லன்னு..." என்றான்.

சூர்யா அந்த சந்தோஷத்தில் அவன் மார்பில் முகத்தை புதைத்து கொள்ள அவள் வேதனை எல்லாம் கண்ணீராய் வடிய தொடங்கியது. அபி வியப்பு குறியோடு "என்னடி ஆச்சு உனக்கு... அழறியா" என்று அவன் கேட்க சூர்யா அப்போதும் தன் அழுகையை நிறுத்தவில்லை. இவன் எவ்வளவோ அவளை சமாதானபடுத்த முயல அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அபிமன்யு சற்று நேரம் பொறுமையோடு அவளை ஆசுவாசப்படுத்த அந்த நொடி மின்னலடித்தது போல் சுகந்தியின் வார்த்தைகள் சூர்யாவிற்கு நினைவுக்கு வந்தன. தான் அபிமன்யுவை கல்யாணம் செய்தால் அவன் உயிருக்கே ஆபத்து எனும் போது தான் எத்தகைய முட்டாள்தனத்தை செய்து கொண்டிருக்கிறோம் என எண்ணி அவனை விட்டு உடனே விலகி நிற்க அவனோ புரியாமல் "என்னாச்சு உனக்கு" என்று கேட்டான்.

சூர்யா தன்னைத்தானே சமாதானப்படுத்தி கண்ணீரை துடைத்தபடி "நத்திங்... நீங்க இங்கிருந்து உடனே கிளம்புங்க" என்றாள்.

அபிமன்யு குழப்பமாக "உன்னை இங்கயே விட்டுவிட்டு கிளம்புவா... அதுக்காகவா மரத்தில எல்லாம் ஏறி குரங்கு மாறி தாவி குதிச்சி இங்க வந்திருக்கேன்" என்றான்.

சூர்யாவிற்கு அந்த நொடி சந்தோஷத்திற்கு வார்த்தைகளே இல்லை. அவன் உயிரை பற்றி கூட கவலையில்லாமல் தனக்காக ஈஷ்வரின் இடத்திலேயே நுழைந்திருக்கிறான் எனில் அவன் துணிவு அவளை மேலும் வசிகரிக்க இன்னொரு பக்கம் அவன் காதலிப்பதை எண்ணி பெருமிதமாய் இருந்தது.

எனினும் அவன் உயிர் தன்னால் ஆபத்துக்குள்ளாக கூடாதென்று எண்ணியவள் அபியிடம் இயல்பாக "எதுக்கு அவ்வளவு ரிஸ்க் எடுத்து என்னை பார்க்க வரனும்... நான் நல்லாதானே இருக்கேன்... நான் ஜஸ்ட் இங்க ஆபிஸ் வொர்க்காக வந்திருக்கேன்... டூ த்ரீ டேஸ்ல முடிஞ்சிடும்... அப்புறமா நாம அப்போ மீட் பண்ணலாமே... இப்போ தயவு செஞ்சி இங்கிருந்து கிளம்புங்க.." என்றாள்.

அபிமன்யு சற்று நேரத்திற்கு முன் அவள் ஏக்கத்தையும் தவிப்பையும் உணர்ந்தது போல் அவள் அச்சத்தையும் ஒருவாறு யூகித்தான். பின்னர் அவளை நோக்கி "நீ ஆபிஸ் வொர்க்னு சொல்ற...ஆனா உன் பாஸ் அப்படி சொல்லலியே" என்றான்.

சூர்யா திகைப்போடு " நீங்க எப்போ ஈஷ்வர்கிட்ட பேசினிங்க... அவன் என்ன சொன்னா...?" என்று கேட்க

அபிமன்யு தெளிவான பார்வையோடு "உன் போஃன்ல இருந்துதான் கால்! எனக்கிட்ட அவன் பேசினான்... நீயும் அவனும் தனியா இங்க ரொமான்டிக்கா வந்திருக்கீங்களாமே" என்றவுடன் சூர்யாவிற்கு கோபம் தலைக்கேற அதை அபிமன்யுவிடம் காட்டிக் கொள்ளாமல் "சும்மா ஜஸ்ட் பாஃர் பஃன்... அப்படி சொல்லிருப்பான், நீங்க அதை போய் சீர்யஸா எடுத்துகிட்டு" என்று நடந்தது எதுவும் அவனுக்கு தெரிந்துவிட கூடாதென அவள் முடிந்த வரை சமாளிக்க அபிக்கு அவளின் பதில் இன்னும் கலக்கத்தை உண்டுபண்ணியது.

அவன் யோசனையோடு நின்றிருக்க அப்போது சூர்யா அவனை வேகமாய் இழுத்து ஒரு மரத்தின் அருகில் மறைவாய் நிறுத்தி கொண்டாள்.

அபிமன்யுவிற்கோ சூர்யாவின் அந்த நெருக்கத்தை மீறி மூளை வேறெதிலும் லயிக்கவில்லை. அவளுடன் அத்தனை அருகாமையில் இருப்பது அவனை இன்பத்தில் திளைக்க வைத்து உலகத்தையே மறக்கடிக்க செய்திருந்தது. இப்போதே மரணித்தாலும் பரவாயில்லை என்றளவுக்கு உச்சபட்சமாய் அவனின் மொத்த உணர்வுகளையும் அவள் தூண்டிவிட்டிருக்க அவளோ அப்போது அதை குறித்து எல்லாம் கவலையில்லாமல் அச்ச உணர்வில் சிக்குண்டு கிடந்தாள்.

அபிமன்யு தன்னை சுற்றி ஒரு உலகம் இருப்பதை மறந்திருக்க சூர்யாவின் எண்ணமும் பார்வையும் ஒருவனிடத்தில் நிலைத்திருந்தது.

அவளின் பார்வை பதிந்த இடத்தில் ஈஷ்வர் செக்யூரிட்டிகளிடம் ஏதோ கட்டளாயிட அவர்கள் உடனடியாக அவ்விடம்விட்டு நகர்ந்தனர். மதி உள்ளே இருந்து ஓடிவந்து ஈஷ்வரிடம் எதையோ கொடுத்தான். ஈஷ்வர் அதை லாவகமாய் பற்றி குறி பார்க்க அது ஒரு சிறிய நவீன ரக துப்பாக்கி. வெகு தூரத்தில் இருப்பவனை சரியாய் குறி வைத்து அவர்கள் நெஞ்சை துளைத்துவிடும். இத்தனையும் சூர்யா கூர்மையாய் கவனிக்க அவன் கையிலிருந்த அந்த தூப்பாக்கி அவளை திடுக்கிடச் செய்தது. அபிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்ற பதட்டத்தில் அவள் தவிக்க ஈஷ்வர் அந்த நொடி வேகமாய் வீட்டிற்குள் விரைந்தான். அவன் தன் அறைக்குதான் போகிறானோ என யூகித்தவள் அபியை நோக்கி பார்வையை திருப்ப அவனோ அப்படியே அவளை விழுங்கி விடலாம் என்பது போல் பார்த்துகிடந்தான்.

"அபி.. டே அபி... இடியட்" என்று அவள்அச்சத்தோடு அவன் காது மடலில் மெலிதாய் அழைக்க அவன் அசரவேயில்லை. அப்போதுதான் அவள் ஒரு விஷயத்தை கவனித்தாள். காற்று கூட புகுமுடியாமல் அவள் அவன் தேகத்தில் ஒட்டியிருக்க உடனடியாய் அவள் விலகி கொள்ளலாம் என எண்ணிய போது அது சாத்தியப்படவில்லை. அப்போதுதான் அவன் கரத்தின் பிடி அத்தனை இறுக்கமாய் அவள் இடையை வளைத்திருப்பதை உணர்ந்தாள். இப்போதைக்கு அவன் காதல் கனவுகளில் இருந்து மீண்டு வரமாட்டான் என எண்ணியவள் அவன் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட, அவளின் அதிர்ச்சி வைத்தியம் நன்றாகவே வேலை செய்தது.

உங்கள் கருத்துக்களே அடுத்த பதிவை விரைவாய் கொண்டுவரும். மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படி முடியாமல் போனாலும் லைக் பட்டனை அழுத்திவிடுங்கள். எத்தனை பேர் இந்த கதையை படிக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள அது உதவியாய் இருக்கும்.
 
Kavitha06

புதிய முகம்
Joined
Jan 22, 2018
Messages
13
Reaction score
26
Location
Chennai

SEMA ? sis
 
Janani26

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
49
Reaction score
55

Super akka epdiyo rendu perum meet pantanga

Ini surya eshwar ah innum bold ah face pannuvanu ninaikuran
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top