• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Meendum uyirthezhu - 36 (pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
36

மரண போராட்டம்


அபிமன்யுவின் கன்னத்தில் சுரீலென்று விழுந்த அறை அவனை கனவுலகில் இருந்து இழுத்து கொண்டு வந்தது. அப்போது சூர்யா ஏளன புன்னகையோடு நின்றிருக்க அவளிடம் கனலென தெறிக்கும் கோபத்தோடு "எதுக்குடி அடிச்ச ?" என்று கன்னத்தை தடவியபடி அவன் கேட்க

சூர்யாவும் சினத்தோடு "பின்ன அடிக்காம... நானே டென்ஷன்ல இருக்கேன்... நீ பாட்டுக்கு நேரங் காலம் தெரியாம ரொமேன்ஸ் பண்ணிட்டிருக்க..." என்று அவள் கடிந்து கொள்ள
அபிமன்யுவின் கோபமோஅதிகரித்தது.

"யாருடி ரொமேன்ஸ் பன்னது... நானா ?" என்று கேள்வி எழுப்பியபடி அவன் முன்னோக்கி வர சூர்யா பின்னோடு சென்றபடி "ஆமாம்" என்றாள்.

"கொன்னுடுவேன்... சும்மா நின்னிட்டிருந்த என்னை இழுத்திட்டு போனதில்லாம... கிட்ட வந்து மூச்சு முட்டிறளவுக்கு ஒட்டி நின்னுட்டு... இப்ப என் பேர்லயே பழியை போடிறியா..." என்று அவன் சொல்ல

"அய்யோ அபி... நீ வேற புரியாம பேசாதே... அந்த ஈஷ்வர் நம்மல பார்த்துட்டா என்ன பன்றது..." எனும் போதே அவள் முகத்தில் துளிகளாய் வியர்த்திருந்தது.

அபிமன்யு அவளை கூர்மையாய் கவனித்து சற்று யோசனையோடு "நீ ஏன் அந்த ஈஷ்வரை பார்த்து பயப்படிற..." என்று சந்தேகமாய் கேட்டான்.

"சேச்சே நான் பயப்படலா... இங்க திருட்டுத்தனமா நீ வந்திருக்கிறத யாராச்சும் பார்த்துட்டாங்கன்னா... ப்ளீஸ் நான் உன்னை கெஞ்சி கேட்கிறேன்... இங்கிருந்து போ அபி" என்று தவிப்போடு அவள் உரைக்க

அபிமன்யு யோசனை குறியோடு "நீ எதுக்கோ பயப்படற... ஆனா என்னன்னு சொல்லமாட்டிற" என்றான்.

சூர்யா திகலோடு ஈஷ்வர் என்ன செய்ய காத்திருக்கிறானோ என அச்சப்பட்டு தலையில் கைவைத்தபடி நிற்க

அபிமன்யு அவளை நெருங்கி "என்னடி பிரச்சனை... என்கிட்ட சொல்றதுல உனக்கு அப்படி என்ன தயக்கம் ?" என்று அவன் அழுத்தமாய் கேட்க சூர்யாவின் உதடுகள் சொல்லிவிட வேண்டும் என துடித்தாலும் வேண்டாமென அவள் மனம் திட்டவட்டமாய் மறுத்தது.

அவள் சமாளிப்பாய் "நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல அபி... ப்ளீஸ் கிளம்பிறியா" என்று அவள் கூற

அவனோ "முடியவே முடியாது" என்று சொல்லி முரண்டு பிடிக்க சூர்யா அழமாட்டாத குறையாய் நின்றிருந்தாள்.

அபிமன்யு சூர்யாவினை வேதனையை தேற்றும் வகையில் அவள் கன்னத்தை தாங்கியபடி "நீ பிரச்சனைல இருக்கும் போதே நான் எப்படிற உன்னை விட்டுவிட்டு போவேன்... என் உயிரே போனாலும் அது நடக்காது... நீ இப்போ என்ன விஷயம்னு சொல்லப் போறியா... இல்ல அந்த ஈஷ்வரை போய் நான் கேட்கட்டுமா... " என்று கேட்டவனிடம் "அய்யோ... அப்படி எல்லாம் செஞ்சிறாத அபி ப்ளீஸ்" என்றாள்.

"அப்போ சொல்லு" என்று அழுத்தமாய் அவன் வினவ வேறுவழியின்றி சொல்லித்தான் தீர வேண்டும் என முடிவெடுத்தாள்.

"சரி சொல்றேன்" என்று சொல்லி சூர்யா அவன் கையை பிடித்து அழைத்து கொண்டு இன்னும் மறைவான இடமாய் பார்த்து வந்து நிறுத்தினாள்.

சூர்யா ஈஷ்வர் வருகிறானா என்று பார்க்க மீண்டும் அபிமன்யு பொறுமையிழந்தவனாய் "வாய திறந்து என்னன்னு சொல்லிதான் தொலையேன்டி" என்றான்.

சூர்யா அவன் முகத்தை பார்த்தபடி "நான் சொல்றேன்... பட் நீ எந்த காரணத்தை கொண்டு கோபப்பட கூடாது... " என்றாள்.

"முதல்ல நீ விஷயத்தை சொல்லு... அப்புறம் என்ன பன்றதுன்னு பார்க்கலாம்" என்றான்.

சூர்யா யோசனையோடு தன்னையே கூர்மையாய் நோக்கி கொண்டிருக்கும் அபிமன்யுவிடம் ஈஷ்வர் நடந்து கொண்டவற்றை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க அவன் விழிகளில் கோபம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது.

பின் சூர்யா மனவேதனையோடு கண்ணீர் வடித்தபடி அபிமன்யுவின் தோள் மீது சாய்ந்து கொண்டு "கடைசியா அவன் என்கிட்ட என்ன சொன்னா தெரியுமா அபி... சவாலில் அவன் ஜெய்ச்சிட்டா... அவனுக்கு விருப்பமானதை நானே கொடுக்கனுமா... இல்ல அவனே எடுத்துப்பேன்னு மிரட்டிறான்... ராஸ்கல்... பொறுக்கி.. இந்த இரண்டு மூணு நாள்ல நான் அவனால ரொம்ப டார்ச்சரை அனுபவிச்சிட்டேன்... எனக்கு அப்படியே செத்திரலாம் போல இருந்துச்சு" என்று அவள் சொல்ல அபிமன்யு ஆவேசத்தோடு "பைத்தியமாடி உனக்கு... நீ ஏன்டி சாகனும்... தப்பு செஞ்ச அவன்தான் சாகனும்" என்றான்.

சூர்யா சலிப்போடு "அவனை எல்லாம் நம்மலால ஒண்ணும் செய்ய முடியாது அபி... அவனோட பவரும் பலமும் அந்த மாதிரி... நாம என்ன செஞ்சாலும் என்ன நினைச்சாலும் அவனுக்கு எப்படியாவது தெரிஞ்சிடும்" என்றாள்.

அப்போது ஈஷ்வரின் குரல் "வெரி வெல் ஸெட் சூர்யா... என்னை பத்தி நீதான் நல்லா புரிஞ்சி வைச்சிருக்க" என்றது.

சூர்யாவின் நெஞ்சமெல்லாம் வேகமாய் துடிக்க அபிமன்யுவை விட்டு அவசரமாய் விலகி நின்றாள். அங்கே அடர்ந்திருந்த இருளில் இருந்து வெளிப்பட்டு ஈஷ்வர் கம்பீரமாய் நின்று வன்மமாய் புன்னகை புரிய, அபிமன்யு அவனை அழுத்தமான கோபத்தோடு முறைத்தபடி நின்றிருந்தான்.

சூர்யா அவன் கையிலிருந்த துப்பாக்கியை பார்த்து அச்சம் கொண்டிருக்க, ஈஷ்வர் தன் குரோதமான பார்வையை அபிமன்யுவின் மீது பதிய வைத்திருந்தான்.

ஈஷ்வர் அலட்சிய பார்வையோடு "நீ ஏன் தேவையில்லாம என் வழியிலயே குறுக்க வர அபிமன்யு... உனக்கு ரொம்ப நாள் வாழனும்னு ஆசையில்லையா... " என்றவன் சூர்யவின் புறம் திரும்பி அவளிடம் "என கணிப்புபப்படி இவனுக்கு அல்பாயுசுதான்...நீ என்ன நினைக்கிற ?" என்று அவன் கேட்க சூர்யா கோபதோடு "நீ ரொம்ப டூ மச்சா பேசிற ஈஷ்வர்" என்றாள்.

அபிமன்யு சூர்யாவின் புறம் திரும்பி இயல்பான புன்னகையோடு "ஏன் இப்போ நீ இவ்வளவு டென்ஷனாகிற சூர்யா... சார் சொன்னா கரெக்ட்டாதான் இருக்கும்... பிகாஸ் அடுத்தவங்க ஆயுசு கணிக்கிறதில அவர் பயங்கர எக்ஸ்பெட்... அப்படிதானே ஈஷ்வர்" என்று அவன் குத்தலாய் பேச ஈஷ்வருக்கோ அவன் தன் இடத்தில் இருக்கிறான் என்பதை தெரிந்தும் கூட அவன் முகத்தில் அச்சத்தின் சாயலே இல்லை என்பதை கவனித்தபடி "யார்கிட்ட பேசிறோம்... எங்க நின்னுட்டு பேசிறோம்னு யோசிச்சி பேசு" என்றான்.

"ஏன் தெரியாம ... உன்னை பத்தி இந்த உலகத்துக்கே தெரியாத இன்னொரு அருவருப்பான முகம் எனக்கு மட்டும்தானே தெரியும்" என்றான்.

ஈஷ்வர் சீற்றம் கொண்டு சூர்யாவை பார்த்து "உனக்கு கொடுத்த வாக்கை நான் காப்பாத்திலாம்னு பார்க்கிறேன்... ஆனா இவன் ரொம்ப ஓவரா பேசிறான்.. அப்புறம் தப்பா எதாவது நடந்திட்டா நீ என்னை கேட்க கூடாது" என்று சொல்ல சூர்யா கனலான பார்வையோடு "அபிக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா நான் உன்னை சும்மா விடமான்டேடா" என்றாள்.

"அப்படியா... என்னடி பண்ணுவ" என்று கேட்க..

"மைன்ட் யுவர் டங்..." என்று அபிமன்யு கோபம் கொண்டான்.

"அவ எனக்கு உரிமையானவடா.. அவகிட்ட நான் அப்படிதான் பேசுவேன்" என்றான் ஈஷ்வர்.

"உன் கனவில கூட அவ உனக்கு சொந்தமாக முடியாது ஈஷ்வர்... "

"உன்னை கொன்னாதான் அவ எனக்கு சொந்தமாவான்னா லெட் மீ டூ தட்" என்று துப்பாக்கியை உயர்த்தினான்.

சூர்யா பதட்டத்தோடு "நோ ஈஷ்வர்... திஸ் இஸ் நாட் பேஃர்.." என்றாள்.

"ஆல் இஸ் பேஃர் இன் லவ் அன் வார் டார்லிங்" என்று சொல்லி துப்பாக்கியை அபிக்கு நேராய் ஈஷ்வர் குறி பார்க்க அபிமன்யு துளியும் அச்சமின்றி நின்றிருக்க சூர்யா அபியின் முன்னிலையில் வந்து "உன் வெறியை தீர்த்துக்கனும்ல... கம்மான் ஷுட் மீ..." என்றாள்.

அபிமன்யு சூர்யாவை கீழே தள்ளிவிட்டு "இது எனக்கும் அவனுக்குமான பிரச்சனை... நீ குறுக்க வராதே சூர்யா" என்றான்.

ஈஷ்வர் "இதுதான்டா கட்ஸு..." என்று புன்னகையிக்க அபிமன்யு "கோஹெட்" என்றான். அப்போத சூர்யா எழுந்தபடி "நோ ஈஷ்வர்... அபிமன்யுவை விட்டிரு" என்று கதற

ஈஷ்வர் தன் துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தப் போக அபிமன்யு அந்த நொடி காலால் துப்பாக்கியை தட்டிவிட்டான்.
அந்த இருளில் அது எங்கேயோ சென்று வீழ்ந்துவிட ஈஷ்வர் அதிர்ச்சியில் நிற்க ஈஷ்வரின் கழுத்தை அபிமன்யு இறுக்கி கொண்டிருந்தான். சூர்யா அந்த சூழ்நிலையில் இருளில் வீழ்ந்த அந்த துப்பாக்கியை தேடிக் கொண்டிருந்தாள்.

இருவருமே சரிசமமான பலம் வாய்ந்தவர்கள். ஈஷ்வர் அபியின் கரத்தை தட்டிவிட அவர்களுக்கு இடையில் அப்போது துவந்த யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. யாருமே அவரவர்கள் நிலைப்பாட்டை விட்டு கொடுக்காமல் இருக்க என்ன நேருமோ என்ற பதட்டம் சூர்யாவை துளைத்து கொண்டிருந்தது. அபிமன்யுவும் ஈஷ்வரும் துவளாமல் தங்கள் கோபத்தை ஆக்ரோஷமாய் வெளிப்படுத்தி கொண்டிருக்க சில நிமடங்களில் இருவருமே ஒவ்வொரு திசையில் வீழ்ந்தனர். இம்முறை விதி அபிமன்யுவிற்கு சாதகமாய் இருந்தது.

அபிமன்யு வீழ்ந்த இடத்தில் அவன் கையில் தூப்பாக்கி தட்டுப்பட அதை கையில் ஏந்திக் கொண்டு மெல்ல சுதாரித்து எழுந்து கொண்டவன் "எத்தனை பேர் உயிரோட விளையாடிருப்ப ஈஷ்வர் நீ... இப்ப உன் உயிர் என் கையில..." என்று சொல்லி ட்ரிகரை அழுத்தப் போக ஈஷ்வரின் முகம் வெளிறிப் போனது. அவ்வளவுதானா தன் விதி என்று எண்ணினாலும் இவன் கையால் தன் உயிர் போவதா என யோசித்தபடி அவன் ஸ்தம்பிக்க சூர்யா நிம்மதி பெருமூச்சுவிட்ட அடுத்த நொடியே அங்கே எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடந்தேறியது.

சூர்யா பார்த்து கொண்டே இருந்த நொடி துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தத்தால் சூர்யா விழிகளை மூடிக் கொண்டாள். அவள் விழிகளை திறந்த போது அபிமன்யு கீழே முழங்கால் போட்டு சரிந்திருந்தான்.

சூர்யா நடந்தவற்றை கண்டு அதிர்ந்து நின்றாள். அபிமன்யு ஈஷ்வரை சுடுவதற்கு முன்னதாக பின்னோடு இருந்த செக்யூரிட்டிகள் அவன் கையிலிருந்த துப்பாக்கியால் பலமுறை தொடர்ந்து சுட அந்த குண்டுகள் அவன் முதுகை துளைத்தன. அப்படியே ரத்த வெள்ளத்தில் அபிமன்யு கீழே சரிய அதை சாதகமாய் பயண்படுத்தி கொண்ட ஈஷ்வர் அந்த துப்பாக்கியை அபிமன்யுவின் கையிலிருந்து பிடுங்கி அவனின் மீதே சுட்டான்..

சூர்யா அவனை வந்து தாங்கி கொண்டு "அபி" என்று கண்ணீர்விட்டு கதறி அழுது கொண்டிருக்க அபிமன்யு அந்த நிலையிலும் "எனக்கு ஒண்ணும் ஆகாது... நீ தைரியமா இருடி" என்று சொல்ல ஈஷ்வர் குரூரமான புன்னகையோடு சூர்யாவை வலுகட்டாயமாக அவள் கரத்தை பற்றி தூக்கினான். "விடிறா" என்று அவள் கத்துவதை அவன் பொருட்படுத்தவில்லை. அந்த நொடி அவளுக்கு ஏற்பட்ட கோபத்திற்கு அளவேயில்லை. ஈஷ்வரின் கன்னத்தில் அறைந்து விட அவன் அதிர்ச்சியோடும் அவமானத்தோடும் நின்றிருக்க அவள் சட்டையை பிடித்து உலுக்கி "உன்னை சும்மா விடமாட்டேன்டா" என்றாள்.

ஈஷ்வரின் முகம் அவமானத்தில் சிவக்க, சூர்யாவினை அவன் பார்த்த பார்வையில் துவேஷமும் கோபமும் நிரம்பியிருந்தது. சூர்யா தரையில் அமர்ந்தபடி அபிமன்யுவை மடியில் கிடத்த அவன் உயிர் மட்டும் அத்தனைக்கு பிறகும் துடித்து கொண்டிருந்ததை பார்த்து "இல்ல உங்களுக்கு எதுவும் ஆகவிடமாட்டேன் அபி" என்றாள்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஈஷ்வர் வன்மமாய் அவளை பார்த்தபடி "அவன் விதி முடிஞ்சி போச்சு சூர்யா... ஆனா உன் விதி இப்போ என் கையில... " என்று உரைத்தான்.

அபிமன்யு தேகமெல்லாம் ரத்தத்தால் நனைந்திருக்க சூர்யா அபிமன்யுவினை தாங்கியபடி "ப்ளீஸ் அபி... என்னை விட்டு போயிடாத... எனக்கு நீ வேணும்..." என்று அழுதவளின் கழுத்தை ஈஷ்வர் இறுக்கியபடி "எனக்கு நீ வேணும்டி" என்றான்.

"அது நடக்கவே நடக்காது" என்றாள்.

"பார்த்திரலாமே... காலம் பூரா உன் கர்வத்தையும் திமிரையும் என் காலை போட்டு மிதிச்சி அடிமையா வைச்சிருக்கல... என் பேர் ஈஷ்வர் இல்ல"
என்று சொல்லி வலுகட்டாயமாக இழுத்து கொண்டு போனவன் செக்யூரிட்டிகளிடம் "அவனை இங்கேயே புதைச்சிடுங்க" என்றான்.


சூர்யா "இல்ல வேண்டாம்... அபி" என்று கத்த அவன் பொருட்படுத்தாமல் அவளை இழுத்து கொண்டு போக மதி குறுக்கிட்டு "பாஸ் நீங்களா இப்படி ஒரு பொண்ணுக்கிட்ட... அதுவும் சூர்யா சுந்தர் சாரோட டாட்டார்" என்று கூற

ஈஷ்வர் கனலாய் பார்தது "ஐ டோன்ட் கேர்.." என்றான்.

அவன் மீண்டும் மதியை நோக்கி "வழியை விடிறியா இல்ல" என்று சொல்லி பார்த்த பார்வையில் அவன் விலகி நிற்க சூர்யாவை வலுகட்டாயமாய் இழுத்து அறைக்குள் தள்ளினான்.

"நீ என் பொறுமையை ரொம்ப சோதிச்சிட்ட சூர்யா... இனிமேயும் முடியாது... ஐ நீட் யூ" என்றான்.

ஈஷ்வரின் கண்களில் தெரிந்த வெறி சூர்யாவை கலவரப்படுத்தியது. அவன் அவளை நோக்கி எடுத்து வைத்த அடி அவளுக்குள் படபடப்பை ஏற்படுத்திய போதும் சுற்றும் முற்றும் ஏதேனும் அவளின் தற்காப்புக்கு இருக்கிறதா எனத் தேடினாள்.

ஈஷ்வரோ அவள் மீதான உச்சப்பட்ச கோபத்தில் இருந்தான். அவளை எப்படியாவது அடைந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை கடந்து இப்போதைக்கு அவன் மூளையில் எந்த சிந்தனையும் கொண்டிருக்கவில்லை.
ஈஷ்வர் சூர்யாவை அணைத்து கொள்ள முற்பட அவள் விலக்கி கொள்ள போராடிய நிலையில் அவன் இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை சூர்யா கைப்பற்றினாள். ஆனால் ஈஷ்வர் அவள் குண்டை தன் மீது பாய்ச்சவிடாமல் அவள் கரத்தை கெட்டியாய் பிடித்து கொண்டான். யார் பக்கம் அந்த துப்பாக்கியின் குழல் திரும்புமோ என்ற நிலையில் வெடித்து சிதறிய குண்டுகள் எல்லாம் வீணாகி போக கடைசியாய் சூர்யா திமிரிக் கொண்டு கீழே விழுந்தாள்.


சூர்யா துப்பாக்கியோடு வீழ்ந்த நொடி அவனை நோக்கி அவள் அதன் குழலை நீட்டினாள். ஈஷ்வர் புன்னகையோடு நின்றிருக்க சூர்யாவிற்கு நிலைமையை புரிந்து கொள்ள முடியவில்லை.

அவன் அவளை பார்த்து சிரித்துவிட்டு "யூ காட் அ சேன்ஸ்... ஜஸ்ட் ஒன் புல்லட் மோர்... கம்மான் ஷுட் மீ... உன் லக் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்" என்றான்.

சூர்யா அவனை கொன்றுவிட வேண்டும் என்று தீர்க்கமாய் நிற்க அவன் மீண்டும் புன்னகையோடு "நல்லா ஞாபகம் வைச்சுக்கோ... ஜஸ்ட் சிங்கிள் புல்லட் ரைட்... இன் கேஸ் தப்பி தவறி அந்த புல்லட் என் மேல பாயாம மிஸ்ஸாயிடுச்சு... அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில ரொம்ப ரொம்ப மோசமான நாள் இதுவாதான் இருக்கும்... கம்மான் ட்ரை" என்றான் கையை கட்டிநின்றான்.

சூர்யாவிற்கோ அந்த ஒரு குண்டு அவள் வாழ்க்கையை தீர்மானிக்கும் பெரும் ஆயுதமாய் தெரிய ட்ரிகரை அழுத்தி தப்பித்தவறி குண்டு அவன் மீது பாயாமல் போனாள் என யோசித்தவள் பின் "மிஸ்ஸாகுது... கண்டிப்பா உன் உயிர் என் கையாலதான்டா போகும்..." என்று உரைத்து அவள் ட்ரிகரை அழுத்தபோக அப்போது ஈஷ்வரின் பின்மண்டையில் விழுந்த அடியால் நினைவுத்தப்பி அவன் கீழே விழுந்தான்.

அபிமன்யுதான் குற்றுயிரும் குலையுயிருமாய் குருதியில் நனைந்தபடி வந்து கடப்பாறையை கொண்டு ஈஷ்வரை அடித்தான். அந்த நொடியே அபிமன்யுவும் நிலைத்தடுமாறி விழுந்தான். சூர்யா வேதனையோடு அபியை நெருங்க மதியும் அந்த நேரத்தில் ஈஷ்வருக்கு நேர்ந்த கதியை எண்ணி கவலையுற அப்போது இருந்த நிலைமைக்கு மதியின் உதவியோடு இருவருமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட அவர்கள் எதிர்கொண்ட மரணப் போராட்டத்தில் விதி இரண்டு பேருக்குமே எதிராய் நின்றது. ஆனால் இருவருமே அத்தனை சீக்கிரத்தில் இந்த பூவுலகை விட்டு போகத் தயாராயில்லை. ஆனால் அப்படி இரண்டு பேருமே ஒன்றாய் சஞ்சரிப்பதும் சாத்தியமற்றதாய் போனது. இருவரில் ஒருவரே பிழைத்து கொள்ள நேரிட்டது.

*******

திருமண வைபவம்
ஒரு வருடத்திற்கு பின்...



இருளை கிழித்து கொண்டு கதிரவன் இரவின் பிடியிலிருந்து பூமித்தேவதையை மீட்டெடுக்க அந்த காலை பொழுதில் திருமண வைபவத்திற்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அப்படி ஒரு அலங்காரமும் ஆடம்பரமும் கொண்ட அந்த திருமணத்தை அந்த மாநகரமே இதுவரை கண்டதில்லை. ஒரு ராஜகுடும்பத்தின் விழா என்று சொன்னாலும் மிகையாகாது. அங்கே குழுமியிருந்த எல்லோரும் அதிசியக்கும் வண்ணம் ஏற்பாடுகள் அமைந்திருக்க அங்கிருந்த கூட்டமெல்லாம் திருவிழாவென நடந்து கொண்டிருக்கும் அந்த திருமண வைபவத்தின் முக்கிய சடங்குகளுக்காக காத்திருந்தனர்.

ஆனால் இப்படி ஒரு ஆடம்பரமான திருமணத்தை செய்து கொள்ள வேண்டும் என்று கனவுகளோடு இருந்த சூர்யா அப்போது மணமகள் அறையில் பெரிய ஆர்பார்ட்டமே நிகழ்த்தி கொண்டிருந்தாள்.

சூர்யா சத்தமாய் "இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம்... வேண்டாம் வேண்டாம் ... ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோ ரம்யா" என்றாள்.

ரம்யா கோபப்பார்வையோடு "இவ்வளவு தூரம் வந்தப் பிறகு வேண்டாங்கிற... பைத்தியமாடி உனக்கு" என்று கேட்க

"நீ என்னை வேணா நினைச்சக்கோ... எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என்றாள் சூர்யா பிடிவாதமாக.

"உன் ட்ரீம் மாதிரிதானே இந்த மேரேஜ் நடந்திட்டிருக்கு... அப்படி பார்த்தா யூ ஆர் ஸோ லக்கி" என்றாள்.

"என் ட்ரீம் மாதிரி இந்த கல்யாணம் நடக்கலாம்... ஆனா என் மனசு ஏத்துக்காத ஒருத்தனை எப்படி... லைஃப் லாங்... .என்னால முடியாது... நான் ஒத்துக்கவே மாட்டேன்" என்றாள்.

ரம்யாவால் தன் தங்கை சமாதானப்படுத்த முடியாமல் சோர்ந்து போய் அமர்ந்தபடி போன் செய்தாள். அறைக்குள் வேகமாய் வந்த அர்ஜுன் நேராய் ரம்யாவை நோக்கி வந்து "என்னாச்சு ரம்யா... ஏன் இவ்வளவு டென்ஷனாயிருக்க... உன்னை ஸ்டிரயின் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லிருக்கல்ல" என்றான்.

ரம்யாவின் வயிற்றில் இப்போது ஐந்துமாத இரட்டை சிசு இருக்க அர்ஜுனிற்கு ஒரே பெரிய கவலை அவளை கவனமாய் பார்த்து கொள்வதுதான்.

ரம்யா அவன் அக்கறையில் சலிப்புற்று அவனை முறைத்தபடி "ஐம் ஆல்ரைட் ஆர்ஜுன்... உங்க திமிர் பிடிச்ச மச்சினிச்சி என்ன சொல்றான்னு கேளுங்க" என்றாள்.

அவனும் ஆர்வமாய் சூர்யா புறம் திரும்பி "என்னாச்சு சூர்யா" என்று கேட்க

"நீங்களாவது என்னை புரிஞ்சிக்கோங்க மாமா... எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என்றாள்.

அர்ஜுன் அதிர்ந்தபடி "என்ன விளையாடிறியா... அவந்திகா மேடம் எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி ஒரு ஏற்பாடு பண்ணிருக்காங்க... நீ இப்ப போய் இப்படி சொல்றியேமா" என்றான்.

ரம்யா கோபத்தோடு "அவ அடங்க மாட்டா... ரொம்ப திமிராயிடுச்சு அவளுக்கு... நீங்க வாங்க அவ யார் சொன்னா கேட்பாளோ... அவங்க வந்து பேசட்டும்" என்று அந்த அறையை விட்டு கோபமாய் வெளியேறியவளிடம் சூர்யா குரலை உயர்த்தி "வேண்டாம் ரம்யா... ப்ளீஸ்... " என்றாள்.

ரம்யா கவனிக்காமல் வெளியேறிய சில நிமடங்களில் அந்த அறைக்குள் மாப்பிள்ளை கோலத்தில் ஈஷ்வர் நுழைந்தான்.


******
உங்களிடம் பல நூறு கேள்விகள் இருக்கும் என்று எனக்கு தெரியும். அதற்கான பதில் க்ளைமேக்ஸில் புரியும். நீங்கள் இந்த கதை குறித்த உங்களின் கேள்விகளை கேட்க நினைத்தால் கேட்கலாம். க்ளைம்ஸில் முடிந்ததும் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். திட்டினாலும் பரவாயில்லை.


லைக் பட்டனை மறவாமல் அழுத்திவிடுங்கள்.

போனமுறை கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இதெல்லாம், ரொம்பவே
அநியாயம் பா, மோனிஷா டியர்
இப்பவும் ஈஸ்வர் தேவ் தான்,
ஜெயித்தானா பா?
எங்கே, எங்க அபிமன்யு செல்லம்?
இருக்கானா?
இல்லை, இறந்துட்டானா,
மோனிஷா டியர்?
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இதெல்லாம், ரொம்பவே
அநியாயம் பா, மோனிஷா டியர்
இப்பவும் ஈஸ்வர் தேவ் தான்,
ஜெயித்தானா பா?
எங்கே, எங்க அபிமன்யு செல்லம்?
இருக்கானா?
இல்லை இறந்துட்டானா, மோனிஷா டியர்?
என்ன நடந்திருக்கோம்னு தெரிஞ்சிதான் கேட்கிறீங்களா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்ன நடந்திருக்கோம்னு தெரிஞ்சிதான் கேட்கிறீங்களா
அய்யய்யோ, அப்போ நிஜமாவே,
அபிமன்யு இறந்துட்டானா பா?
நானா கெஸ் பண்ணி,
ஒரு யூகத்தில் கேட்டேன்,
மோனிஷா செல்லம்
ஐயோ, எனக்கு ஒரே
அழுகையா வருது,
மோனிஷா டியர்
இனி, நான் தூங்கின
மாதிரி தான் பா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top