• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Meendum uyirthezhu - 36 (pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
எல்லா வாசகர்களும் தனிப்பட்ட முறையில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கான பதிலை இப்போது என்னால சொல்ல முடியாது.கடைசி அத்தியாயத்தின் முடிவில் முடிந்தவற்றை எல்லாவற்றையும் தெளிவுப்படுத்த முயல்கிறேன். கருத்தை பகிர்ந்து கொண்ட எல்லா வாசகர்களுக்கும் நன்றி????
 




Jiffy

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
45
Reaction score
48
Age
39
Location
Dubai
Naan ethirparkatha thiruppam...
Seekiram next ud podunga
Moonu peroda love success aana thaan happy
I like Eshwari half and Abi half twist
 




Farmila

நாட்டாமை
Joined
Jan 22, 2018
Messages
91
Reaction score
80
Location
Kandy
ஈஷ்வர் வன்மமாய் அவளை பார்த்தபடி "அவன் விதி முடிஞ்சி போச்சு சூர்யா... ஆனா உன் விதி இப்போ என் கையில... " என்று உரைத்தான்.

அபிமன்யு தேகமெல்லாம் ரத்தத்தால் நனைந்திருக்க சூர்யா அபிமன்யுவினை தாங்கியபடி "ப்ளீஸ் அபி... என்னை விட்டு போயிடாத... எனக்கு நீ வேணும்..." என்று அழுதவளின் கழுத்தை ஈஷ்வர் இறுக்கியபடி "எனக்கு நீ வேணும்டி" என்றான்.

"அது நடக்கவே நடக்காது" என்றாள்.

"பார்த்திரலாமே... காலம் பூரா உன் கர்வத்தையும் திமிரையும் என் காலை போட்டு மிதிச்சி அடிமையா வைச்சிருக்கல... என் பேர் ஈஷ்வர் இல்ல"
என்று சொல்லி வலுகட்டாயமாக இழுத்து கொண்டு போனவன் செக்யூரிட்டிகளிடம் "அவனை இங்கேயே புதைச்சிடுங்க" என்றான்.


சூர்யா "இல்ல வேண்டாம்... அபி" என்று கத்த அவன் பொருட்படுத்தாமல் அவளை இழுத்து கொண்டு போக மதி குறுக்கிட்டு "பாஸ் நீங்களா இப்படி ஒரு பொண்ணுக்கிட்ட... அதுவும் சூர்யா சுந்தர் சாரோட டாட்டார்" என்று கூற

ஈஷ்வர் கனலாய் பார்தது "ஐ டோன்ட் கேர்.." என்றான்.

அவன் மீண்டும் மதியை நோக்கி "வழியை விடிறியா இல்ல" என்று சொல்லி பார்த்த பார்வையில் அவன் விலகி நிற்க சூர்யாவை வலுகட்டாயமாய் இழுத்து அறைக்குள் தள்ளினான்.

"நீ என் பொறுமையை ரொம்ப சோதிச்சிட்ட சூர்யா... இனிமேயும் முடியாது... ஐ நீட் யூ" என்றான்.

ஈஷ்வரின் கண்களில் தெரிந்த வெறி சூர்யாவை கலவரப்படுத்தியது. அவன் அவளை நோக்கி எடுத்து வைத்த அடி அவளுக்குள் படபடப்பை ஏற்படுத்திய போதும் சுற்றும் முற்றும் ஏதேனும் அவளின் தற்காப்புக்கு இருக்கிறதா எனத் தேடினாள்.

ஈஷ்வரோ அவள் மீதான உச்சப்பட்ச கோபத்தில் இருந்தான். அவளை எப்படியாவது அடைந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை கடந்து இப்போதைக்கு அவன் மூளையில் எந்த சிந்தனையும் கொண்டிருக்கவில்லை.
ஈஷ்வர் சூர்யாவை அணைத்து கொள்ள முற்பட அவள் விலக்கி கொள்ள போராடிய நிலையில் அவன் இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை சூர்யா கைப்பற்றினாள். ஆனால் ஈஷ்வர் அவள் குண்டை தன் மீது பாய்ச்சவிடாமல் அவள் கரத்தை கெட்டியாய் பிடித்து கொண்டான். யார் பக்கம் அந்த துப்பாக்கியின் குழல் திரும்புமோ என்ற நிலையில் வெடித்து சிதறிய குண்டுகள் எல்லாம் வீணாகி போக கடைசியாய் சூர்யா திமிரிக் கொண்டு கீழே விழுந்தாள்.


சூர்யா துப்பாக்கியோடு வீழ்ந்த நொடி அவனை நோக்கி அவள் அதன் குழலை நீட்டினாள். ஈஷ்வர் புன்னகையோடு நின்றிருக்க சூர்யாவிற்கு நிலைமையை புரிந்து கொள்ள முடியவில்லை.

அவன் அவளை பார்த்து சிரித்துவிட்டு "யூ காட் அ சேன்ஸ்... ஜஸ்ட் ஒன் புல்லட் மோர்... கம்மான் ஷுட் மீ... உன் லக் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்" என்றான்.

சூர்யா அவனை கொன்றுவிட வேண்டும் என்று தீர்க்கமாய் நிற்க அவன் மீண்டும் புன்னகையோடு "நல்லா ஞாபகம் வைச்சுக்கோ... ஜஸ்ட் சிங்கிள் புல்லட் ரைட்... இன் கேஸ் தப்பி தவறி அந்த புல்லட் என் மேல பாயாம மிஸ்ஸாயிடுச்சு... அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில ரொம்ப ரொம்ப மோசமான நாள் இதுவாதான் இருக்கும்... கம்மான் ட்ரை" என்றான் கையை கட்டிநின்றான்.

சூர்யாவிற்கோ அந்த ஒரு குண்டு அவள் வாழ்க்கையை தீர்மானிக்கும் பெரும் ஆயுதமாய் தெரிய ட்ரிகரை அழுத்தி தப்பித்தவறி குண்டு அவன் மீது பாயாமல் போனாள் என யோசித்தவள் பின் "மிஸ்ஸாகுது... கண்டிப்பா உன் உயிர் என் கையாலதான்டா போகும்..." என்று உரைத்து அவள் ட்ரிகரை அழுத்தபோக அப்போது ஈஷ்வரின் பின்மண்டையில் விழுந்த அடியால் நினைவுத்தப்பி அவன் கீழே விழுந்தான்.

அபிமன்யுதான் குற்றுயிரும் குலையுயிருமாய் குருதியில் நனைந்தபடி வந்து கடப்பாறையை கொண்டு ஈஷ்வரை அடித்தான். அந்த நொடியே அபிமன்யுவும் நிலைத்தடுமாறி விழுந்தான். சூர்யா வேதனையோடு அபியை நெருங்க மதியும் அந்த நேரத்தில் ஈஷ்வருக்கு நேர்ந்த கதியை எண்ணி கவலையுற அப்போது இருந்த நிலைமைக்கு மதியின் உதவியோடு இருவருமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட அவர்கள் எதிர்கொண்ட மரணப் போராட்டத்தில் விதி இரண்டு பேருக்குமே எதிராய் நின்றது. ஆனால் இருவருமே அத்தனை சீக்கிரத்தில் இந்த பூவுலகை விட்டு போகத் தயாராயில்லை. ஆனால் அப்படி இரண்டு பேருமே ஒன்றாய் சஞ்சரிப்பதும் சாத்தியமற்றதாய் போனது. இருவரில் ஒருவரே பிழைத்து கொள்ள நேரிட்டது.

*******

திருமண வைபவம்
ஒரு வருடத்திற்கு பின்...



இருளை கிழித்து கொண்டு கதிரவன் இரவின் பிடியிலிருந்து பூமித்தேவதையை மீட்டெடுக்க அந்த காலை பொழுதில் திருமண வைபவத்திற்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அப்படி ஒரு அலங்காரமும் ஆடம்பரமும் கொண்ட அந்த திருமணத்தை அந்த மாநகரமே இதுவரை கண்டதில்லை. ஒரு ராஜகுடும்பத்தின் விழா என்று சொன்னாலும் மிகையாகாது. அங்கே குழுமியிருந்த எல்லோரும் அதிசியக்கும் வண்ணம் ஏற்பாடுகள் அமைந்திருக்க அங்கிருந்த கூட்டமெல்லாம் திருவிழாவென நடந்து கொண்டிருக்கும் அந்த திருமண வைபவத்தின் முக்கிய சடங்குகளுக்காக காத்திருந்தனர்.

ஆனால் இப்படி ஒரு ஆடம்பரமான திருமணத்தை செய்து கொள்ள வேண்டும் என்று கனவுகளோடு இருந்த சூர்யா அப்போது மணமகள் அறையில் பெரிய ஆர்பார்ட்டமே நிகழ்த்தி கொண்டிருந்தாள்.

சூர்யா சத்தமாய் "இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம்... வேண்டாம் வேண்டாம் ... ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோ ரம்யா" என்றாள்.

ரம்யா கோபப்பார்வையோடு "இவ்வளவு தூரம் வந்தப் பிறகு வேண்டாங்கிற... பைத்தியமாடி உனக்கு" என்று கேட்க

"நீ என்னை வேணா நினைச்சக்கோ... எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என்றாள் சூர்யா பிடிவாதமாக.

"உன் ட்ரீம் மாதிரிதானே இந்த மேரேஜ் நடந்திட்டிருக்கு... அப்படி பார்த்தா யூ ஆர் ஸோ லக்கி" என்றாள்.

"என் ட்ரீம் மாதிரி இந்த கல்யாணம் நடக்கலாம்... ஆனா என் மனசு ஏத்துக்காத ஒருத்தனை எப்படி... லைஃப் லாங்... .என்னால முடியாது... நான் ஒத்துக்கவே மாட்டேன்" என்றாள்.

ரம்யாவால் தன் தங்கை சமாதானப்படுத்த முடியாமல் சோர்ந்து போய் அமர்ந்தபடி போன் செய்தாள். அறைக்குள் வேகமாய் வந்த அர்ஜுன் நேராய் ரம்யாவை நோக்கி வந்து "என்னாச்சு ரம்யா... ஏன் இவ்வளவு டென்ஷனாயிருக்க... உன்னை ஸ்டிரயின் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லிருக்கல்ல" என்றான்.

ரம்யாவின் வயிற்றில் இப்போது ஐந்துமாத இரட்டை சிசு இருக்க அர்ஜுனிற்கு ஒரே பெரிய கவலை அவளை கவனமாய் பார்த்து கொள்வதுதான்.

ரம்யா அவன் அக்கறையில் சலிப்புற்று அவனை முறைத்தபடி "ஐம் ஆல்ரைட் ஆர்ஜுன்... உங்க திமிர் பிடிச்ச மச்சினிச்சி என்ன சொல்றான்னு கேளுங்க" என்றாள்.

அவனும் ஆர்வமாய் சூர்யா புறம் திரும்பி "என்னாச்சு சூர்யா" என்று கேட்க

"நீங்களாவது என்னை புரிஞ்சிக்கோங்க மாமா... எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என்றாள்.

அர்ஜுன் அதிர்ந்தபடி "என்ன விளையாடிறியா... அவந்திகா மேடம் எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி ஒரு ஏற்பாடு பண்ணிருக்காங்க... நீ இப்ப போய் இப்படி சொல்றியேமா" என்றான்.

ரம்யா கோபத்தோடு "அவ அடங்க மாட்டா... ரொம்ப திமிராயிடுச்சு அவளுக்கு... நீங்க வாங்க அவ யார் சொன்னா கேட்பாளோ... அவங்க வந்து பேசட்டும்" என்று அந்த அறையை விட்டு கோபமாய் வெளியேறியவளிடம் சூர்யா குரலை உயர்த்தி "வேண்டாம் ரம்யா... ப்ளீஸ்... " என்றாள்.

ரம்யா கவனிக்காமல் வெளியேறிய சில நிமடங்களில் அந்த அறைக்குள் மாப்பிள்ளை கோலத்தில் ஈஷ்வர் நுழைந்தான்.


******
உங்களிடம் பல நூறு கேள்விகள் இருக்கும் என்று எனக்கு தெரியும். அதற்கான பதில் க்ளைமேக்ஸில் புரியும். நீங்கள் இந்த கதை குறித்த உங்களின் கேள்விகளை கேட்க நினைத்தால் கேட்கலாம். க்ளைம்ஸில் முடிந்ததும் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். திட்டினாலும் பரவாயில்லை.


லைக் பட்டனை மறவாமல் அழுத்திவிடுங்கள்.

போனமுறை கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!
அபிமன்யு இறந்திருக்க மாட்டான்.!!!
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Abi yeranthutana??? Eshwar yevlo thappanavana irunthalum avan mela konjam soft corner varudhu bcs of rudhra devan
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

என்னைப்பொறுத்தவரை அபி ஈஸ்வர் இருவருமே சூர்யாவை விரும்பியவர்கள், இருவருமே சூர்யாவுக்கு பொருத்தமானவர்கள்,அவர்களின் எண்ணம் இந்தப்பிறவியில் ஈடேற வேண்டுமென்றால் என்ன செய்வது ,இப்படி ஏதாவது நடந்தால்தான் உண்டு, முற்பிறவியில் திருமணத்திற்கு முன் இளவரசனையும்,திருமணத்தின் பின் தனது அத்தானையும் என்று இருவரையும் பிடித்திருந்தது சூர்யாவுக்கு,சூர்யா திருமணம் செய்ததால் கோபம்கொண்டு ,இளவரசன் குணம்மாறி பழிவாங்க வந்தபின்னர்தான் அக்கினீஸ்வரி அவரை வெறுத்தார்,இப்போது இருவருமே பிழைக்கமுடியாமல் ஒருவர்தான் பிழைக்க முடியுமென்றால் ,அப்படி உருவத்தில் பிழைத்தது ஈஸ்வரென்றால் ,உடல் இறந்தது அபியா,அபியின் உறுப்புக்களை அதாவது மூளையை அறுவை மாற்று சிகிச்சை ஈஸ்வருக்கு செய்தார்களா,ஏனெனில் பின்தலையில்தானே அபி ஈஸ்வரை அடித்தார் அதனால் உருவம் ஈஸ்வர் செயல்பாடு அபியா.

நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top