• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Meendum uyirthezhu-37 final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
37



திருமண வைபவம்


அவன் உள்ளே நுழைந்த மறுகணமே அவள் அந்த அறையின் ஜன்னல் பக்கமாய் முகத்தை திருப்பியபடி நின்று கொண்டாள். அந்த நிராகரிப்பு அவனை எந்தளவுக்கு காயப்படுத்தியது என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் இவள் இன்று நேற்று அப்படி நடந்து கொள்ளவில்லை. ஒரு வருட காலமாய் இப்படிதான் நடந்து கொண்டிருந்தாள்.

அந்த மோசமான நிகழ்விற்கு பிறகு அவன் வாழ்க்கை முற்றிலும் தலைகீழாய் மாறியிருந்தது.

விதி இப்படி ஒரு மோசமான விளையாட்டை அவர்கள் வாழ்வில் விளையாடிவிடும் என்று எண்ணியிருப்பார்களா என்ன? அப்படி என்ன கோபம் அந்த கடவுளுக்கு இவர்கள் மீதும் இவர்களின் காதல் மீதும்.
அதற்கான விடை இப்போதைக்கு நம்மிடம் இல்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சூர்யாவால் ஈஷ்வரின் ரூபத்தில் இருக்கும் அபிமன்யுவை ஏற்று கொள்ளவே முடியாது. அது அவளுக்கு மரணத்திற்கு நிகரான வேதனை. எந்த பெண்ணுக்கும் வாழ்வில் வந்துவிடக் கூடாத சோதனை.

அன்று நடந்த விபத்தில் அபிமன்யு ஈஷ்வர் இருவருமே உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றே எல்லா மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர். ஆனால் இருவருமே அந்த ஜென்மத்திலும் நிறைவேறாத ஆசைகளோடு மரணிக்க தயாராகயில்லை. அதிலும் அபிமன்யுவின் தேகம் முழுவதும் காயமுற்று காப்பாற்றவே முடியாது என்ற நிலையிலும் அவனை உயிர்ப்பித்து வைத்திருந்தது அவனின் உறுதியான மனோதிடம்தான் என்று சொல்ல வேண்டும்.

டாக்டர். வைத்தீஸ்வரனுக்கு மகனை காப்பாற்ற முடியாது என்று நன்றாகவே தெரிந்து போனது. ஈஷ்வரையாவது காப்பாற்றிவிட முடியுமா என்ற முயற்சியும் கிட்டதட்ட தோல்விதான். ஏற்கனவே ஒரு தடவை அவன் மோசமான விபத்தில் சிக்கி தலையில் காயப்பட்டிருந்ததினால், இம்முறை அவன் தலையில் உண்டான காயம் அவனை மூளைச்சாவடைய செய்திருந்தது.

ஆனால் இதயம் மட்டும் துடித்து கொண்டிருக்க, அப்போதுதான் வைத்தீஸ்வரனுக்கு ஒரு விபரீதமான எண்ணம் தோன்றிற்று. அதை அவந்திகாவிடம் சொல்ல மகனை மொத்தமாய் பறிகொடுக்க விரும்பாதவள் அந்த முயற்சிக்கு ஒப்புக் கொண்டாள்.

உலகின் அத்தனை திறமையான மூளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் வரவழைக்கப்பட, இதுவரை நிகழாத அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒருவன் உடலாகவும் இன்னொருவன் உயிராகவும் மாறிய அதிசயம் அது.

அந்த மரணப் போராட்டத்தில் மீண்டும் யார் உயிர்த்தெழுந்தனர் என்பதை சொல்வதற்கில்லை. ஆனால் ஈஷ்வரின்
சிதைந்து போன நினைவுகள் அகற்றப்பட்டு அபிமன்யுவின் நினைவுகள் அவனுக்குள் புகுத்தப்பட்டன. அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதே எனினும் ஈஷ்வராயிருக்கும் அபிமன்யு கண்விழிக்க நாட்கள் கடந்தன.

அபிமன்யு தன் கனவில் அவனின் சிரம் துண்டிக்கப்பட்டு தரையில் வீழ்ந்து கிடப்பதை பார்த்த நொடி அதிர்ச்சியோடு கண்விழிக்க, அவன் மீண்டும் உயிர்பெற்று எழுந்தான். அபிமன்யுவின் சாம்பலில் இருந்து , ஈஷ்வரின் உடலுக்குள் மீண்டும் ஒரு பீனக்ஸ் பறவையாய் அபிமன்யு உயிர்த்தெழுந்த அதே சமயம், மீண்டும் அபிமன்யுவின் ஞாபகங்களை சுமந்தபடி ஈஷ்வரும் உயிர்த்தெழுந்தான்.

அபிமன்யுவாய் ஈஷ்வர் விழித்தெழுந்த நொடி தான் பிழைத்துவிட்டோம் என அவன் ஆனந்தம் கொள்வதா, இல்லை தன் தேகத்தை தொலைத்துவிட்டதை எண்ணி வேதனைப்படுவதா? என்று பெரும் சிக்கலான மனநிலையில் மாட்டிக் கொண்டான்.

மூளை மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒருவனின் மனநிலையை மொத்தமாய் பாதிக்க கூடிய ஒன்று.

ஒருவன் தான் வாழ்ந்த தேகத்திலிருந்து இன்னொருவனின் உடலோடு பொருத்திக் கொள்வது யாருக்காக இருந்தாலும் அத்தனை சுலபமான காரியம் அல்ல. ஆனால் அபிமன்யு அசாத்தியமானவான். அவன் மனோபலத்தோடு எதிர்கொண்டு அத்தகைய மாற்றத்தையும் ஏற்றுகொண்டான்.

அபியின் குடும்பத்தில் உள்ள எல்லோருமே மெல்ல மெல்ல அந்த மாற்றத்தை ஏற்றுகொள்ள, அவந்திகாவிற்கும் அந்த மாறுதல் ஈஷ்வரின் இழப்பை முற்றிலுமாய் மறக்கடித்திருந்தது.

ஆனால் அபிமன்யுவால் சாத்தியப்படாத ஒன்று, அந்த மாற்றத்தை சூர்யாவை ஏற்க வைப்பது. எப்போது அவன் அந்த அறுவை சிகிச்சையில் ஈஷ்வராய் உயிர்த்தெழுந்தானோ அன்றிலிருந்து சூர்யா அவனிடம் பேச அல்ல, பார்க்க கூட தவிர்த்திருந்தாள். அந்த ஒரு வருடத்தில் பலமுறை அபிமன்யு முயன்றும் சூர்யா அவனை பார்த்து பேசவும் தயாராயில்லை.

எல்லோருமே சேர்ந்து ஆறு மாதித்திற்கு முன்பு அர்ஜுன் ரம்யா திருமணத்தோடு சேர்த்து சூர்யா அபியின் திருமணத்தையும் ஏற்பாடு செய்ய, அவளோ முரண்டு பிடித்து அதனை நடக்கவிடாமல் தடுத்தும்விட்டாள்.

இறுதியாய் அர்ஜுனிற்கும் ரம்யாவிற்கும் மட்டும் திருமணம் நிகழ்ந்துவிட்டிருந்தது. ஆனால் அப்போதும் விடாமல் எல்லோரும் அவளை திருமணத்திற்கு கட்டாயப்படுத்த அவள் தப்பித்து கொள்ளும் விதமாய் ஆறு மாத அவகாசம் கேட்டாள். இப்போது அந்த அவகாசம் முடிவுற்றிருந்தது. மீண்டும் அவர்களுக்களான திருமண ஏற்பாடுகள் நடைபெற, கத்தி முனையில் நிற்கும் நிலைமைதான் சூர்யாவிற்கு. அவள் முடிந்த வரையில் அந்த திருமணத்தை நிறுத்திவிடவே போராடினாள்.

ஈஷ்வரால் ஏற்பட்ட மோசமான அனுபவங்களை அவளால் மறக்கவே முடியவில்லை. அபிமன்யுவின் ஞாபகங்களை சுமந்து கொண்டிருந்தாலும் அது ஈஷ்வரின் உடம்புதானே. எப்படி அவளால் அத்தகைய ஒரு நிலைமையை ஏற்று கொள்ள முடியும்.

அபிமன்யுவும் அவளின் நிலையை புரிந்து கொண்டு அவளை ஒருவாறு தொந்தரவு செய்யாமல் காத்திருந்தான். ஆனால் திருமண நடந்துவிட்டால் எல்லாமே பழகிப் போய்விடும் என்று அவன் நம்பியிருந்த நிலையில் இன்று மீண்டும் அவளின் பிடிவாதமும் நிராகரிப்பும் அவனின் அத்தனை நாள் பொறுமையை தூள் தூளாய் தகர்ந்திருந்தது.

அபிமன்யு அந்த அறைகதவை மூடிவிட்டு அவளை நோக்கி வர சூர்யா தவிப்போடு "ப்ளீஸ் அபி... ஸ்டே தேர்... எனக்கு அந்த முகத்தை கூட பார்க்க வேண்டாம்" என்றாள்.

அவன் அதற்கு மேல் முன்னேறி வராமல் "ஸோ நீ என் முகத்தை மட்டும்தான் பார்க்கிற... என் மனசை இல்ல... அப்படிதானே ?" என்று கோபத் தொனியில் கேட்க

சூர்யா திரும்பாமலே, "அப்படி இல்ல அபி... நான் உங்களை எந்தளவுக்கு நேசிக்கிறேனோ... அதே அளவுக்கு அந்த ஈஷ்வரை வெறுக்கிறேன்... ஏன்னா அவன் அந்தளவுக்கு என்னை டார்ச்சர் பண்ணியிருக்கான்... நான் அந்த முகத்தில உங்களை பார்த்தா... அதெல்லாம்தான் எனக்கு ஞாபகத்துக்கும் வரும்... ஏன் உங்க மேலயே எனக்கு வெறுப்பு உண்டாயிடுமோன்னு பயமா இருக்கு...அதனாலதான் சொல்றேன்... ப்ளீஸ் இந்த கல்யாணம் வேண்டாம்..." என்றாள்.

அபிமன்யு கோபத்தோடு, "இதுக்காகவாடி நான் கஷ்டப்பட்டு அவ்வளவு வேதனையிலும் என் உயிரை பிடிச்சிட்டிருந்தேன்... இப்படி எல்லாம் நடக்கும்னு அப்பவே தெரிஞ்சிறிதா நான் நிம்மதியா செத்திருப்பேன்ல... நீயும் நிம்மதியா இருந்திருப்ப" என்று உரைக்க

சூர்யா பதறியபடி திரும்பியவள் அவனை பார்த்தும் பார்க்காமலும் "ப்ளீஸ் அபி... இவ்வளவு ஹார்ஷா பேசாதீங்க... எனக்கு கஷ்டமா இருக்கு" என்றாள்.

"நீ என்கிட்ட பேசிறதும் அப்படிதான் இருக்கு சூர்யா... இல்ல தெரியாமதான் கேட்கிறேன்... திடீர்ன்னு எனக்கு ஒரு அக்ஸிடென்ட்ல முகமெல்லாம் சிதைஞ்சி போயிருந்தா என்ன பண்ணிருப்ப... விட்டுவிட்டு போயிடுவியா ?!" என்று கேட்டான்.

"அதெப்படி அபி நான் அந்தமாதிரி உங்களை விட்டுவிட்டு போவேன்... நான் உங்களை உண்மையா நேசிக்கிறேன்... " என்று அவள் உரைக்க

அபி அவளிடம் "அப்போ அப்படி ஒரு விபத்து எனக்கு நடந்திடுச்சுன்னு நினைச்சுக்கோ... நான் இன்னைக்கு என்னையே மொத்தமாய் இழந்துட்டு வேறொருவனா நிக்கிறேன்னா... அது உனக்காகதான்... " என்றான்.

சூர்யா தீர்க்கமான பார்வையோடு "எனக்கு புரியுது அபி... பட் பிரச்சனை அதுமட்டுமில்ல... நீங்க சர்வைவ் ஆகிறதே ஈஷ்வரோட உடம்புக்குள்ள... அப்படி இருக்கும் போது எப்படி உங்களுக்கு நான் மனைவியா..." என்றாள் தயக்கத்தோடு.

"ம்ம்ம்... அதான் உன் பிரச்சனைன்னா... பைஃன்... உன் விருப்பமில்லாம நான் உன்னை நெருங்க கூட மாட்டேன்... எனக்கு வாழ்க்கை பூரா உன் காதல் மட்டும் இருந்தாலே போதும்... நத்திங் எல்ஸ்... என் மேல நம்பிக்கை இருந்தா நீ நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சி மணமேடையில் வந்து உட்காரு.. இல்லன்னா உன்னை பொறுத்த வரைக்கும் இந்த அபிமன்யு செத்துட்டான்னு நினைச்சுக்கோ" என்று சொல்லிவிட்டு அறையை விட்டு அபிமன்யு விறுவிறுவென வெளியேறினான்.

சூர்யா அவன் வார்த்தைகளை கேட்டு அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தமாய் அவளுக்கு தெரிந்தது அவன் கொண்ட காதல் மட்டுமே. அவளின் பிடிவாதம் அவனின் காதலின் முன் பொய்த்துப் போனது. ஆதலால் அவள் மணமேடையில் வந்து அமர்ந்தாள்.

திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டிருக்க ரொம்பவும் வியப்புக்குரிய விஷயம் அவந்திகா இயல்பாக நின்றபடி எல்லோரையும் வரவேற்று விசாரித்து கொண்டிருந்தாள். எத்தனையோ பெரிய ஆராய்ச்சியாளர்களால் முடியாத ஒன்றை அபிமன்யுவின் திறமை சாதித்து காட்டியிருந்தது.

சுந்தரும் சந்தியாவும் இத்தனை வருடங்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதும் மற்றொரு வியப்பு. அர்ஜுன் மனைவியை கவனித்து கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்க, இம்முறை நடப்பதெல்லாம் நன்மையாய் இருக்க வேண்டும் என்பதே அவனின் ஆழ் மனதின் கவலை.

சுகந்திக்கு மகன் எந்த உருவத்தில் இருந்தாலும் அவன் இருக்கிறான் என்பதே பெரிய ஆறுதல். வைத்தீஸ்வரன் செய்தது சாதாரண காரியமல்ல. சாத்தியமற்ற ஒன்றாய் மருத்துவ துறையில் கருதப்படும் பிரெயின் டிரான்ஸ்பிளேன்டேஷனை தன் மகனை வைத்தே செய்து காட்டிவிட்டார். அது மருத்துவ உலகின் மையில் கல். ஆனால் உண்மையென்னவினில் அது எப்படி சாத்தியமானது என்பது இன்னுமும் புரியாத புதிராகவே இருந்தது.

இதில் அவருடைய திறமையை விட அபிமன்யுவின் மனோபலமே அதிகம் பங்காற்றியதென்று அவர் நன்கறிந்திருந்தார்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் அங்கே உள்ள இவர்களை தவிர மணமேடையில் அமர்ந்திருப்பது அபிமன்யுதான் என்பது யாருக்கும் தெரியாது. அவன் இந்த உலகை பொறுத்த வரை ஈஷ்வர் தேவ்தான். ஏனெனில் அவந்திகா அந்த பெரிய சமாராஜ்ஜித்தை நிர்வகிக்கும் ஈஷ்வர் தேவ் மரணித்துவிட்டான் என்பதை அறிவிக்க விரும்பவில்லை.

அவனின் இறப்பை அறிந்து கொண்டால் எதிராய் இருக்கும் பல நிறுவனங்களால் ரா க்ரூப் ஆஃப் கம்பெனிஸுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பது அவரின் எண்ணம். அந்த உண்மை எப்போதும் ரகசியமாகவே இருக்க ஒருவிதத்தில் அபிமன்யுவும் சம்மதித்தான்.

அதற்காக அபிமன்யு அவர்களிடம் இனி ரா மெடிகல் ரிசர்ச் சென்டர், நோய்களை பாமர மக்களின் மீது செலுத்தி எந்தவித ஆராய்ச்சியும் செய்து அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடாது எனவும் உறுதி பெற்று கொண்டான். ஆனால் இன்று நிலைமையே வேறு. அபிமன்யுவின் திறமையை பார்த்து அவந்திகா அவனை தன் வாரிசாய் ஏற்று அந்த சாம்ராஜ்ஜியத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுக்கவும் தயாராக இருந்தாள்.

திருமண சடங்குகள் எல்லாம் இனிதே நடைபெற, சூர்யாவால் மட்டும் அவற்றை எதையும் விரும்பி முழுமையாய் ஏற்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் தவித்தாள். ஒருவகையில் இப்பிறவியில் சூர்யாவின் கனவு அரங்கேறிவிட்டது.

ஆனால் சூர்யாவும் அபிமன்யுவும் தங்கள் ஜென்மாந்திர காதல் விருட்சத்தை காப்பாற்றிக் கொள்ள, கனவிலும் சாத்தியமில்லாத பேரிழப்பை ஏற்று கொள்ள நேரிட்டது பெரும் துயர்தான்.
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மாயாஜால வித்தை


மும்பை மாநகரத்தில் அரண்மனை போன்றிருந்த அந்த வீட்டின் முகப்பறை வெறிச்சோடி இருந்தது. அதனுள் கீழ்தளத்தில் இருந்த விசாலமான அறையில் நுழைந்தால், இரவெல்லாம் விழித்து கொண்டிருந்ததிற்கு சான்றாய் அந்த மெழுகுவர்த்தி புகையை கிளப்பிக் கொண்டிருக்க பின்புற கதவின் வெளிப்புறம் அமைந்த பசுமை படர்ந்திருந்த அந்த தோட்டத்தில் விடியலை அறிவித்த கதிரவனோ, வானில் மங்கைகளின் நுதல்களை அலங்கரிக்கும் வட்டமான செந்நிற திலகமென காட்சியளித்தான்.

அந்த கதிரவனுக்கு துணையாய் அப்போது தோட்டத்தில் ஈஷ்வர் தேவ்வின் தோற்றத்தில் இருக்கும் அபிமன்யு உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தான். அவனின் மேனியின் கட்டுடல் வசீகரமாகவும் கம்பீரமாகவும் எல்லோரையும் ஈர்க்கவல்லதாய் இருக்க, ஒருவாறு அவன் தன் பயற்சிகளை முடித்து விட்டு அறையினுள் நுழைந்தான்.

அவனின் பார்வை அறையை சுற்றிலும் நோட்டமிட, சூர்யாவோ படுக்கையில் முழுவதுமாய் போர்வைக்குள் சுருண்டிருந்ததை கவனித்தான். அவன் பார்வை சுவற்றின் கடிகாரத்தின் புறம் திரும்ப, அது மணி ஆறு என்பதை அறிவித்தது.

அபிமன்யு குறும்புத்தனமான பார்வையோடு 'ஒரு நாளாவது இயர்லி மார்னிங் எழுந்திருச்சிருக்கிறாளா?... இன்னைக்கு உன்னை விடறதா இல்ல... ஒரு வழி பன்றேன்' என்று தனக்குத்தானே சொல்லிவிட்டு அவளின் அருகில் நெருங்கியவன் "சூர்யா" என்று பலமுறை அழைத்தும் அவளிடம் பதில் இல்லை. அத்தனை ஆழ்ந்த உறக்கத்தில் அவள் இருக்க, இறுதியாய் முகத்திலிருந்த போர்வையை விலக்கி சூர்யா என்று அவன் காதில் கத்த,

"போடா இடியட்... நீ சீக்கிரமா எழுந்து எப்படியோ நாசமா போ... என்னை டிஸ்டர்ப் பண்ணாதே" என்று விழிகளை மூடியபடியே சொல்லிவிட்டு முகத்தை போர்வைக்குள் புகுத்திக் கொண்டாள்.

'நான் இடியட்டா? ' என்று அவன் கோபம் கொண்டபடி அருகிலிருந்த மேஜையின் மீதுள்ள தண்ணீர் ஜக்கின் நீரை அவள் முகத்தில் ஊற்ற, அவளோ துடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள். அவளின் விழிகள் கடிகாரத்தை பார்த்து விட்டு அதிர்ந்து போக அவனோ, "குட் மார்னிங்" என்று புன்னகையித்தான்.

அவனை எரித்து விடுவது போல்
பார்த்து, "இட்ஸ் ஜஸ்ட் சிக்ஸ்... இவ்வளவு காலையில எழுப்பி விட்டுவிட்டு குட் மார்னிங்கா... ? கொஞ்சங் கூட உனக்கு மூளையே இல்லயா ?" என்று கேட்க அவன் புன்னகையோடு, "என்கிட்ட இப்போதைக்கு அது ஒண்ணுதானே மிச்சம் இருக்கு" என்று சொல்லி மீண்டும் அவன் புன்னகையிக்க


சூர்யா முறைத்தபடி "இருந்து என்ன யூஸ்?... போடா... ஐம் கோயிங் டூ ஸ்லீப்... தண்ணி கிண்ணி ஊத்தின... ஐ வில் கில் யூ ராஸ்கல்" என்று சொல்லி மீண்டும் படுத்துக் கொண்டாள்.

அபிமன்யு யோசனையோடு அவளை பார்த்தவன் 'தண்ணி ஊத்தக்கூடாதோ?' என்று சொல்லிவிட்டு அவளை நெருங்கி போர்வையை அவசரமாய் விலக்கிவிட்டு படுக்கையில் இருந்தவளை கரத்தில் தூக்கி கொள்ள, "ஏ இடியட்... விடுடா" என்று கதறினாள். அவன் கரங்கள் அவளை விடுவதாகயில்லை.

"நான் தூங்கினா உனக்கு என்னடா போச்சு விடுடா?" என்றவளிடம்

"சீக்கிரம் எழுந்திருச்சா ஆரோக்கியமா இருக்கலாம்னு சொல்லிருக்கேன் ல" என்றான் அதிகாரமாக.

"நீயும் உன் ஆரோக்கியமும்... உன் சித்தா புராணத்தை கேட்டு கேட்டு என் காது புளிச்சு போச்சு... டோன்ட் அகையின்" என்றாள்

"அப்போ நான் சொல்றதை நீ கேட்க மாட்ட" என்று அவன் அழுத்தமாய் கேட்க

"நோ... கேட்க மாட்டான்" என்றாள் பிடிவாதமாக.

"அப்போ அனுபவி" என்று தடலாடியாய் அந்த நீச்சல் குளத்தில் அவன் அவளை போட்டுவிட அவள் சற்றும் அதை எதிர்பார்க்கவில்லை. அவளோ நொடி பொழுதில் மூச்சு முட்டி மேலே எழும்பி வந்தவள் ஆடை முழுவதும் நனைந்து கோலத்தோடு நின்றாள்.

அவனோ அலட்சியமாய் பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்தான். அவனை வாயில் வந்த வார்த்தை எல்லாம் சொல்லி கடிந்து கொண்டவள் மேலும் எரிச்சல் மிகுதியால் "அந்த ஈஷ்வர் உடம்பில இருக்க இல்ல... உன்கிட்டயும் அந்த அரெகன்ஸ் இல்லாமலா இருக்கும்" என்றான்.

அவன் இப்போது கோபப் பார்வையோடு "ஆமான்டி அரக்கென்ஸ்தான்... உன் வாழ்க்கையில ராமனும் நான்தான், ராவணனும் நான்தான்" என்றான்.

"அதென்னவோ உண்மைதான்டா... என் விதியை டிசைன் பண்ணவன் இருக்கான் பாரு... அவன் ஒரு ஸேடிஸ்ட்" என்றாள்.

அபிமன்யு புன்னகையோடு "அப்படி பார்த்தா அந்த ஸேடிஸ்ட் நீதான்" என்று சொல்ல,

"என்ன சொன்ன ?"

"ஆமாம்... அவன் அவனோட விதியை... அவன் அவனேதான் டிசைன் பன்னிக்கிறான்... அப்படி பார்த்தா அந்த ஸேடிஸ்ட் நீதான்" என்று அவளை சுட்டிக் காட்ட,

அவளோ மெல்ல நீச்சல்குளத்தில் இருந்து வெளியேறியபடி "அப்போ அபிமன்யுவில் இருந்து ஈஷ்வரா மாறி இருக்கிற உங்க விதியை யார் சார் தீர்மானிச்சது" என்று கேட்டாள்.

அவன் இயல்பாக தலையசைத்து "ம்ம்ம்... நானேதான்" என்றான்.

சூர்யா ஆடைகளை உதறிக் கொண்டபடி நின்றிருக்க அவன் மேலும்

"நடந்தது பிரெயின் டிரான்ஸ்பிளேன்ட்டேஷன்னு நினைச்சியா... நோ... உண்மையில் நடந்தது வேற" என்று சொல்லி நிறுத்த அவள் அலட்சியமாய் "அப்படி என்ன சார் நடந்தது ?!" என்று கேட்டாள்.

அபிமன்யு அவளை பார்த்து "உனக்கு மட்டும் அந்த சீக்ரெட் சொல்றேன்... கிட்ட வா" என்றான்.

"நோ... கிட்ட வந்தா நீ கடிச்சிருவ... அங்கிருந்தே சொல்லு " என்று அவள் கன்னத்தில் கைவைத்து கொள்ள

"மாட்டேன் வாடி" என்று சொல்லி அவளை வலுகட்டாயமாய் அருகில் இழுத்து காதோடு ஒரு விஷயத்தை சொல்ல, அப்படியே அவள் விழிகள் அகல விரிந்தன.

அவள் புருவங்கள் நெறிய அவனை பார்க்க,"என்ன புரிஞ்சிதா?" என்று கேட்டான்.

"சத்தியமா குழப்பமா இருக்கு... பட் இதெல்லாம் சாத்தியமா ?" என்று கேட்டாள்.

"அபிமன்யுவால் எதுவும் சாத்தியம்..." என்றான்.

சூர்யா யோசனை குறியோடு நிற்க அவன் அவளிடம், "அன்னைக்கு நடந்ததை நல்லா யோசிச்சு பாரு... எனக்கிருந்த கோபத்துக்கு அந்த ஈஷ்வரை குத்தி, நான் சாகடிச்சிருக்கனும்... பட் நான் அப்படி செய்யல... ஏன்னு யோசிச்சியா?" என்று கேட்டான்.

சூர்யா திகைப்போடு "அதானே... ஏன் ?" என்று கேட்க அபிமன்யு அவளை நோக்கி “அதுதான் சூட்சமம்..." என்று சொல்லி

"பந்த காரண சைதில்யாத் ப்ரசாரஸம் வேத நாச்ச சித்தஸ்ய பரசரீரா வேச” என்று ஏதோ சில வித்தியசாமான அர்த்தம்புரியாத வார்த்தைகளாய் உரைக்க

அவள் தலையை பிடித்து கொண்டு, "நிறுத்து அபி... நீ சொல்றது ஒண்ணும் புரியல... உன் சீக்ரெட்டும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்... தூக்கத்தை கலைச்சதில்லாம... காலங்காத்தால பைத்தியம் பிடிக்க வைக்கிற... போடா" என்று சொல்லி அவனை விட்டு விலகி முன்னேறி நடந்தாள்.

அவன் அவளை பின்புறம் வந்து தன் கரங்களால் பிணைத்தபடி, "கோசிக்காதடி... சும்மா கொஞ்சம் விளையாடினேன்" என்றான்.

அவள் அவன் புறம் திரும்பி கோபமாய் பார்க்க அபிமன்யு அவளிடம், "போயும் போயும் இவனை போய் காதலிச்சோம்னு தோணுதா ?" என்று கேட்க

அந்த கேள்வி அவளின் கோபத்தை மொத்தமாய் கறைத்துவிட அவனை நோக்கி, "உம்ஹும்... இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மட்டுமே காதலிக்கனும்னு தோணுது... " என்று அவள் கரத்தால் அவன் தோள்களை வளைத்து கொள்ள அவன் அவளை கரத்தில் ஏந்தி கொண்டான்.

அவள் அவனை நோக்கியபடி, "இந்த முகத்தை பார்த்துட்டு... எப்படிறா காலம் முழுக்க வாழ்க்கையை ஓட்டப் போறேன்னு நினைச்சேன்... பட் மாயாஜால வித்தை மாதிரி என் மனசு முழுக்க இப்ப இந்த முகம்தான் இருக்கு... என்னடா பண்ண ?" என்று அவள் வியப்பாய் கேட்க

"ஒரு மருந்து இருக்கு... எல்லாத்துக்கும் அதுதான் காரணம்" என்றான்.

"என்ன மருந்து... அதை பத்தி நீ என்கிட்ட சொல்லவே இல்ல" என்றாள்.

"காலம்கிற மருந்துதான்... காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்... அதால மட்டும்தான் எல்லா ரணத்தையும் மறக்கடிச்சி நாம சந்திக்கிற எல்லா மோசமான நிகழ்வுகளையும் கடந்து மீண்டும் நம்மை இயல்பான நிலைக்கு கொண்டு வரும்... அதெல்லாம் விட முக்கியமா... என்கிட்ட இன்னொரு மாய வித்தையும் இருக்கு" என்றான்.

"என்னது ?"

"நான் உன் மேல வைச்சிருக்கிற காதல் சூர்யா... அது எல்லாத்தையும் சாத்தியப்படுத்தும்" என்றான்.

அவன் இவ்வாறு சொன்னதும் இருவரின் விழிகளும் ஒரு புள்ளியில் சங்கமித்தது. சூர்யாவிற்கும் அபிமன்யுவிற்கும் இடையில் இருந்த அவர்களின் காதல் கண்களில் இருந்த அல்ல, மனதிலிருந்து உருவானது. அவர்களின் அந்த ஜென்மாந்திர பந்தம் அவர்களை அப்படி வெகுநாட்கள் விலகி இருக்கவும் விடவில்லை.

அப்போது ரீங்காரமிட்ட கைப்பேசியின் ஒலியில் அவள் மீண்டபடி "அபி போஃன் ரிங்காவுது" என்றாள்.

அபி சலிப்போடு "ப்ச்... பரவாயில்ல விடு" என்றான்.

"இறக்கிவிடு முக்கியமான போஃனா இருக்க போகுது" என்று அவள் சொல்ல அவன் ஏக்கத்தோடு இறக்கிவிட்ட மறுகணம் அவள் கைப்பேசியை எடுத்து பேசினாள்.

அவளின் முகம் பிரகாசமடைய அபியிடம் "அபி... அர்ஜுன் மாமாதான்... அக்காவுக்கு டெலிவரிகிடுச்சாம்... அதுவும் இரட்டை ஆண் குழந்தைகளாம்" என்றாள்.

அபிமன்யு ஆனந்தத்தில் உற்சாகமடைய வெகுநேரம் இருவரும் கைபேசியில் அளவளாவினர். பின்னர் இருவரும் கட்டிணைத்து கொண்டு அந்த அழகிய தருணத்தின் இன்பத்தை பரிமாறிக் கொள்ள சூர்யா மெல்ல அவன் காதோடு "மீட்டிங் இருக்கு அபி... கிளம்ப வேண்டாமா?" என்று கேட்க அவனோ சுலபமாய் "போஸ்ட் போன் பண்ணிடலாம்" என்றான்.

அப்போது அறைகதவை தட்டி "பாஸ்" என்று மதி அழைக்க இருவரும் பிரிந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்ள சூர்யா புன்னகையோடு "உன்னோட அசிஸ்டென்ட்" என்றாள்.

"அவனுக்கு நேரங்காலமே இல்லை" என்று முனகி விட்டு "வெயிட் பண்ணு மதி... ஐம் கம்மிங்" என்றான். மதிக்கும் நடந்த மாற்றங்கள் எல்லாம் தெரியாது. எந்தவித சந்தேகமும் அவனுக்குள் எழும்பவில்லை காரணம் அந்தளவுக்கு யூகிக்கும் புத்திசாலித்தனம் அவனிடம் இல்லை.

இருவருமே அலுவலகத்திற்கு அவசரம் அவசரமாய் தயாராகி நடை, உடை என அபிமன்யு ஈஷ்வர் தேவ்வாகவே முற்றிலுமாய் மாறி நின்றான். ஒவ்வொரு முறை அப்படி அவனை பார்க்கும் போது பழைய மோசமான நினைவுகள் தவிர்க்க முடியாமல் மேலெழும்பினாலும் அபிமன்யுவின் தேஜஸ் நிரம்பிய புன்னகை அந்த எண்ணங்களை ஒதுக்கிவிட்டது.

"ஒகே கிளம்பலாமா ?" என்று அவன் கேட்க அவள் அவனை நெருங்கி "எத்தனை முறை இந்த தப்பை செய்வ ?!" என்று சொல்லி அவன் வாட்ச்சை வலது கையிலிருந்து கழட்டி மாற்றி கட்டினாள்.

பின்னர் சூர்யா அவனிடம் "கேட்க மறந்திட்டேன்... டீ7 ரிசர்ச் பத்தின மேட்டெரெல்லாம் மதிகிட்ட கேட்டியா ?" என்றாள்.

"ம்ம்ம்...கேட்டேன்... அந்த ஈஷ்வர் பயங்கரமா பிளான் பண்ணிருக்கான்... ஏதோ மனநல காப்பாகத்தோடு உதவியோடு டீ7 மருந்தை டெஸ்ட் செய்ய பிளான் பண்ணிருந்தானா ?" என்றான் அபி.

"இஸ் இட்... பட் அப்படி பண்ணல இல்ல" என்று அவள் படபடப்போடு கேட்க

"இல்ல... அதுக்குள்ளதான் அந்த இன்ஸிடென்ட் நடந்திருச்சே" என்றான்.

"எனி வே... எல்லாமே நல்லதுக்குதான்... பட் அந்த ஈஷ்வருக்கு இன்னும் மோசமான தண்டனை கிடைச்சிருக்கனும்... பாஸ்டட்" என்று சொன்னவளின் விழிகளில் அத்தனை வெறி இருந்தது.

அபிமன்யு சூர்யா தோளில் தட்டி அவளை ஆசுவசப்படுத்தியபடி, "இதுவே அவனுக்கு பெரிய தண்டனைதான் சூர்யா... உலகத்தையே அவன் கன்ட்ரோல்லை வைச்சிருக்கனும்னு நினைச்சான்... பட் இன்னைக்கு அவனை அவனாலயே கன்ட்ரோல் பண்ண முடியலியே... " என்றான்.
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அபிமன்யு இன்று ஈஷ்வராய் இருக்க முக்கிய காரணம் அவன் ஆளுமையில் இருக்கும் மருத்துவ உலகை முடிந்தளவு மக்களிற்கு நலனாய் மாற்ற வேண்டும் என்று எண்ணத்தில்தான். அத்தகைய ஒன்றை இந்த உலகில் சாத்தியப்படுத்தும் விதமாய் சூர்யாவும் அபியும் ரொம்பவும் முயன்று கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி சித்த மருத்துவத்தை உலக மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுவதாக அவந்திகா அபிமன்யுவிற்கு உறுதியளித்திருந்தாள். ஏனெனில் சித்த மருத்துவத்தின் மூலமாக இப்போது அவளுமே பயனடைந்து பழையபடி தன் சொந்த காலூன்றி நடந்து கொண்டிருந்தாள்.

மருத்துவ துறையை வியாபாரமாக்கி அந்த கயிற்றால் இன்று உலகை பிணைத்து வைத்திருக்கும் பல ஜாம்பவான்ககளிடம் இருந்து நாம் மீள வேண்டுமெனில், நம்முடைய பழமையை நாம் தேடி கற்க வேண்டும். நம் முன்னோர்கள் நமக்காக படைத்த அற்புதமான சித்த மருத்துவத்தை உலகின் நலனுக்காகவும் வருங்கால சந்ததிகளின் ஆரோக்கியமான வாழ்விற்காகவும் மீண்டும் உயிர்த்தெழ செய்ய வேண்டும். அதுவே இனி நம் ஆரோக்கியமான வாழ்விற்கும் வழி வகுக்கும்.

அண்டத்தில் நிற்காமல் சுழலும் சூர்யன்,பூமி, சந்தரனின் பிணைப்பை பிரிக்க இயலாது. அவ்விதமே சூர்யா அபிமன்யு ஈஷ்வர் ஆகிய மூவருக்குள் ஏற்பட்ட பந்தத்தினால் உண்டான முடிச்சியை மாற்றவோ பிரிக்கவோ முடியாது.

மீண்டும் உயிர்த்தெழுவின் பயணம் இங்கே முடிவுறுகிறது.
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
முடிவுரை


மீண்டும் உயிர்த்தெழு கதையை நான் அக்டொபர் 24 அன்று எழுத தொடங்கி இப்போது கிட்டதட்ட மூன்று மாதங்கள் முடிவுற்றன. நான் ஒவ்வொரு பதிவுகளை கொடுக்க ரொம்பவும் தாமதப்படுத்திய போதும் நீங்கள் எல்லோரும் என் நிலைமையை அறிந்து, பொறுமை காத்து படித்ததிற்கு நன்றி.

பல நேரங்களில் நீங்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கு நன்றி கூட உரைக்க முடியாமல் போயிருந்தால் அதையும் தயவு கூர்ந்து மன்னித்து விடுங்கள். உங்களின் மதிப்புமிக்க நேரத்தை ஒதுக்கி கதையை படித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிகுந்த நன்றி.

கதையை பற்றி சில வரிகள்,

இந்த கதை என்னுடைய நாலாவது கதை. கொஞ்சம் சரித்திரமாய் எழுத வேண்டுமென்ற சிறு நப்பாசையை இதில் தீர்த்து கொண்டுவிட்டேன். தூய தமிழாய் எழுதுவதில் இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் நிறைய தவறுகளும் நிகழ்ந்திருக்கலாம்.

மேலும் இந்த கதையின் முடிவு அதிர்ச்சியையோ கோபத்தையோ சில வாசகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கலாம். என்னை பொறுத்த வரை இந்த கதையின் மூன்று கதாபாத்திரங்களுமே முக்கியமானவை. ஆதலால் பாகுபாடின்றி மூவருமே இந்த கதையின் முடிவில் இருந்தால் மட்டுமே இது நிறைவடையும். அதே போல் சூர்யன் சந்திரன் பூமி என மூன்றும் பிரித்தறிய முடியாத கலவை என்பதுமே மறுக்க முடியாத உண்மைதானே.

மேலும் இந்த கதை அவசரமாய் முடிவுற்றதாய் பலரும் நினைப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது. கொஞ்சம் சந்தோஷமாகவும் கொஞ்சம் மனவருத்தமாகவும் இருந்தது. நான் அதிகப்படியான பக்கங்களோடு எழுதிய கதை இதுதான்.

இன்னும் நிறைய விஷயங்களை குறித்து சொல்லியிருக்கலாமே என்ற வாசகர்களின் எதிர்பார்ப்பிற்கு நான் ஏமாற்றத்தை தந்துவிட்டேன் என்பதை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். எனக்கு இன்னும் இந்த கதையை வளர்க்க திறமை போதவில்லையோ என்றே கருதுகிறேன். மற்றபடி எந்தவொரு அவசரகதியிலும் நான் இந்த கதையை முடிக்கவில்லை. நான் எப்படி கட்டமதைத்தேனோ அவ்வாறே கதைகளத்தை நிறைவு செய்தேன்.

ஏன் அபிமன்யு ஈஷ்வரை புத்திசாலித்தனமாய் வீழ்த்தியிருக்க கூடாது. அவனின் மோசமான முகத்தை இந்த உலகத்திற்கு காட்டி கொடுத்திருக்க கூடாது என்ற பலரின் கேள்விகளுக்கான பதில் 'நான் படைத்த ஈஷ்வர் என்ற கதாபாத்திரம் வியாபாரத்தால் உலகை ஆட்டுவிக்கும் ஜாம்பாவான்.'

என்னதான் அபிமன்யு கதாநாயகனாகவே இருந்தாலும் அந்த சாம்ராஜ்ஜியத்தினை உடைத்தெறிவதெல்லாம் சாத்தியமே இல்லை. அது நம்மை ஆளும் பல வியாபார முதலைகளோடு ஒப்பிட்டு பார்த்தாலே பொருந்தும். இங்கே ஈஷ்வரின் ஒரே பலவீனம் அவனின் காதல்தான். அந்த ஒன்றுதான் அவனை உணர்ச்சிவயப்பட வைத்து அவன் மூளையை மழுங்கடிக்கும் என்பது என்னுடைய கருத்து.

மற்றபடி நான் என்னால் முடிந்த வரை என்னவெல்லாம் கருத்தை இந்த கதையில் புகுத்த நினைத்தேனோ அவை எல்லாவற்றையும் ஆங்காங்கே சொல்லிவிட்டேன் என்ற நினைக்கிறேன்.

அடுத்த முறை பலரும் எதிர்பார்த்தது போல ஒரு ஆழமான கதை கருவை கொண்டு நீண்டதொரு தொய்வில்லாத கதையை வடிவமைத்து உங்களின் ஏமாற்றத்தை வேறொரு கதைகளத்தில் பூர்த்தி செய்ய முயல்கிறேன்.

இந்த கதையை குறித்த கருத்தை அல்ல, எத்தகைய விமர்சனமாய் இருந்தாலும் அதை என்ன காயப்படுத்திவிடுமோ என்றெல்லாம் யோசிக்காமல் நீங்கள் நேரடியாக வெளிப்படுத்துங்கள். அவை வளர்ந்து வரும் என்னை போன்ற எழுத்தாளினியின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியலாம். ஆதலால் உங்கள் கருத்தோடு விரைவாய் வாருங்கள். கேள்விகளாய் இருந்தாலும் பதிலுரைக்க காத்திருக்கிறேன்.

தேடல் 2018 'வாடி என் தமிழச்சி' என்ற ஒரு இயல்பான அழகிய கதைகளத்தில் உங்களை எல்லாம் மீண்டும் சந்திக்க விழைகிறேன். அப்போதும் இதே போன்ற ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன். அதுவும் ஒரு போட்டிக்காக எழுதப்படும் கதை என்பதால் உங்கள் கருத்துக்கள் ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். என் திறமையை அங்கிகரிக்கும் பெரும் வாய்ப்பை கூட உங்கள் கருத்து பெற்று தரலாம். ஆதலால் தயவு கூர்ந்து உங்களின் கருத்தை மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றியுடன் உங்கள் கருத்தை எதிர்பார்க்கும்
மோனிஷா
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Meendum uyirthezhu sema moni ... Intha kathaiyai naan aarambathil irunthu follow pannuren..
Ippo varaikkum intha kathaiyin paathippu en manathil appadiye irukku ..
Nichayam intha kathai oru மைல் கல் unakku moni...
Wishing u all success..
Seekiram vaadi en thamilachi yil santhikkalaam..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top