• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Meendum uyirthezhu(epilogue)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மீண்டும் உயிர்த்தெழு- என் கண்ணோட்டம்

வாசகர்களின் வருத்தங்களையும் கருத்துக்களையும் பார்த்த பின் நான் சில விஷயங்களை தெளிவுபடுத்த எண்ணுகிறேன்.

பலரால் ஏற்க முடியாத கதையின் முடிவு என்ற சில கருத்துக்கள். ஈஷ்வரை அபிமன்யு கொன்றிருந்தால் அது ஏற்ககூடியதாக இருந்திருக்குமா? அத்தனை சுலபமாய் அவனை கொன்றுவிடுவதாக காண்பித்திருந்தால் அது ஏற்கவல்லதா? அது சாத்தியமா? என்னை பொறுத்த வரை அது சாத்தியமற்ற ஒன்று.

மூளை மாற்று அறுவை சிகிச்சை என்பது இது வரை மருத்துவ உலகில் ஆராய்ச்சியளவிலேயே இருக்கிறது. சாத்தியப்பட்டதில்லை. காரணம் அது ஒருவன் மனநிலையை வாழ்க்கை முறையை முற்றிலுமாய் பாதிக்கும். இப்படி ஒருவனை காப்பாற்றுவது கிட்டதட்ட கொலை செய்வதற்கு சமானம். அதனாலயே மருத்துவ உலகில் இது செயல்படப்படுத்தபடவில்லை.

ஆனால் நிச்சயம் அதுவும் ஒரு நாள் நடைபெறலாம். அதற்கு முன்னாடி அதை நம் கதையில் காண்பித்துவிட்டேன். முக்கியமா சொல்ல வேண்டுமெனில் ஒருவன் தன் அங்கிகாரத்தை அடையாளத்தை தேகத்தை தொலைத்து வேறு பரிமாணம் எடுப்பது.மனோதிடம் அதிகம் கொண்டவனால் மட்டுமே அதை ஏற்றுகொள்ள இயலும். அது அபிமன்யு என்ற கதாபாத்திரத்தால் நிச்சயம் முடியும்.

சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நின்று பார்த்து வருத்தப்படும் வாசகர்களே. அன்று ருத்ரதேவனை காதலித்து பின் விஷ்ணுவை மணந்து மனதளவில் அவனை ஏற்று வாழவும் தயாராயிருந்தால் என்பது அப்போது தவறா?

இது பல பெண்களின் வாழ்க்கையில் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அங்கே உண்மையான காதலை விடவும் ஒரு உறவிற்காக அதை ஏற்று கொண்டு இயந்திரத்தனமாக வாழவும் நேரிடும் நிலைமை சாத்தியப்படுகிறது. ஆனால் நம் கதையில் நிற்பவர்கள் இருவரும் மனதால் இணைந்தவர்கள். தேகம் என்பது எப்போதுமே அர்த்தமற்ற ஒன்றுதான். ஆதலால் அவள் அவனை ஏற்று கொள்ளாமல் போனால் அந்த உறவு பொய்த்து போகும். முகம் அகத்தோடு தொடர்புடையது. நாம் பலரை பார்த்த மாத்திரத்தில் சிலரை பிடிக்காமல் போகும். ஆனால் பழகிய பின் ஏற்பட்ட எண்ணம் மாறி பிடித்து போகும். அதுதான் மனதிற்கே உண்டான சக்தி. அபிமன்யு ஏற்கனவே சொல்லியிருப்பான். இரண்டாம் அத்தியாயத்தில். கண்களால் பார்க்காமல் மனதால் உணர்ந்து பார் என்று .

அக்னிஸ்வரி ருத்ரா மீது கொண்ட காதல் உண்மையில் ஈர்ப்புதான். ஆனால் ருத்ரா கொண்டது ஈர்ப்பல்ல. அப்படி ஈர்ப்பாக இருந்தால் திருமணம் ஆனதும் அவளை மறந்தோ அல்லது வெறுத்தோ இருப்பான். அந்த தோல்வி அவனை மொத்தமாய் அவனை மாற்றுகிறதெனில் அதன் உள்ளார்ந்த ஆழம் ரொம்பவும் அபிரமிதமானது. சூர்யனின் சக்தி போல. சூர்யனால் பூமிக்கு நன்மையும் செய்ய முடியும் கெடுதலும் செய்ய முடியும். ஆனால் நிலவின் நிலைபாடு எப்போதும் ஒன்று. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். சூர்யன்... பூமி நிலவென எதையும் அழிக்கவல்ல சக்தி படைத்தவன். ஆனால் சந்திரனோ பூமியோ சூர்யனை எதுவும் செய்ய முடியாது. இந்த முடிவை அவ்விதம் ஒப்பிட்டு பாருங்கள்.

நான் சித்த வைத்திய குறிப்புகளை படிக்கும் போது பல விஷயங்களை படித்து வியந்தேன். அதில் ஒன்று நம் ஒவ்வொரு உறுப்பையும் ஒரு வானின் கோளோடு ஒப்பிட்டிருந்தது. அதில் சூர்யன் இதயத்திற்கும் சந்திரன் மூளைக்கும் ஒப்பிடப்பட்டிருந்தது. அதுவுமே இந்த முடிவை பிரதிபலிப்பதுதான். அண்டத்தில் பிண்டம் பிண்டத்தில் அண்டம்.

இந்த முடிவிற்காக ஆரம்பத்திலிருந்தே உங்களை தயார் செய்திருக்கிறேன். சூர்யன் அழியமாட்டான் என்றும் சொல்லியிருப்பான். விஷ்ணு சிரம் துண்டித்து சாகும் போது அவன் சொன்ன சபதங்களில் அக்னியை மணப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிரம் துண்டிக்கப்பட்டுவிடும். இவ்வாறாக வரிசையாய் நிறைய விஷயங்கள் அதாவது முடிவை பற்றீய க்ளு கதைக்குள் இரூந்தது. முதலில் இருந்து படித்ததை யோசித்து பாருங்கள்.

கூடு விட்டு கூடு விட்டு பாயும் கலை. பராகய பிரவேசம். அது எவ்விதம் சாத்தியம். எப்போது நிகழ்ந்தது போன்ற கேள்விகள் கொஞ்சம் விடையில்லா ரகசியங்களாக இருப்பதே சுவராசியம். பிரெயின் டிரான்ஸ்பிளேன்டேஷன் சாத்தியமற்ற ஒன்று எனும் போது அந்த சிகிச்சை முடியும் போது அவன் அபிமன்யுவாய் ஈஷ்வரின் உடலில் இருந்து உயிராய் போராடி தன்னை மீட்டு கொள்வது அப்போதுதான் சாத்தியம். அங்கே அந்த உயிரின் சக்தி தேவைப்பட்டது. மனோபலம் எதையும் சாதிக்கவல்லது.

முடிவை நோக்கி செல்லாமல் அவசரமாய் முடிந்துவிட்டது. அப்படி அல்ல. கொங்குநாட்டிற்கு அழைத்து செல்லும் போதே முடிவை நோக்கி செல்வதை உரைத்துவிட்டேன். அபிமன்யு ஈஷ்வரின் கட்டுக்காவலை மீறி நுழைந்தது சக்கரவீயூகத்தில் நுழைந்தாகவே அர்த்தம்.

இன்றைய மருத்துவ முறை மற்றும் சித்த மருத்துவத்தை ஒப்புமை செய்யவே சில காட்சிகளை கதையில் புது யுகத்தில் சேர்த்து உங்களுக்கு சில விஷயங்களை புரிய வைக்க நினைத்தேன். மற்றபடி கதையின் பயணம் அதனை சார்ந்ததல்ல.

இந்த கதை முடிவு அவசரமான முடிவோ அல்லது, யோசனையின்றி எடுக்கப்பட்ட முடிவோ அல்ல. பல நாட்கள் இந்த முடிவை இந்த கதையில் சாத்தியப்படுத்த நிறைய யோசித்திருக்கிறேன். ருத்ர தேவனை நடுநாயமாய் வைத்தே இந்த கதை. இரண்டாவது பகுதியும் அவனிலிருந்தே தொடங்கியது. அவனே நம்மை கதை முழுக்க அழைத்து செல்கிறான். அவனில் தொடங்கி அவனோடே முடிந்தது.

கட்டாயப்படுத்தி நான் எழுதியதே முடிவு என உங்களை ஏற்க வைக்க விருப்பமில்லாமலே இந்த விரிவான விளக்கம். இதற்கு பிறகும் இந்த முடிவை நீங்கள் ஏற்க முடியாமல் நிச்சயம் நான் கதையின் முடிவை சரியாக உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் தவறிழைத்திருக்கிறேன்.

கருத்தை பகிர்ந்து கொண்ட எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி

- மோனிஷா
 




Meena Vighneswar

புதிய முகம்
Joined
Jan 22, 2018
Messages
5
Reaction score
9
Location
Chennai
Very nice story... amazing.. as Balachander movie now people can't accept this ending, but I surely say that this story is a milestone of ur career... no replacement.. wondeful ending.... will shine forever in future... it is a conceptual story.. good story.... ur story always makes me to feel that u r a well experienced novelist...
Very nice of u to give so much of explanations to the readers...

HATS OFF
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Very nice story... amazing.. as Balachander movie now people can't accept this ending, but I surely say that this story is a milestone of ur career... no replacement.. wondeful ending.... will shine forever in future... it is a conceptual story.. good story.... ur story always makes me to feel that u r a well experienced novelist...
Very nice of u to give so much of explanations to the readers...

HATS OFF
Thank u meena, unga varthaigal rombavum encouraging a iruku
So happy da???
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
Thairiamana mudivuthan nanum oppukolgiren ruthranudan payanam seiyum parvai ullavargal nichayam intha mudivai etrukolvargal that was nice epoluthum matram etrukolavendum widow marriage accept seyaramathiri
 




Dharsii

நாட்டாமை
Joined
Feb 1, 2018
Messages
24
Reaction score
43
Location
Dindigul
Sema..Well planned..china china visayathula kuda neraya solirukenga.but athu ipa than puriyuthu..nan padicha story la..unga story ku romba impress paniruku.athula important unga clarity storyla..???
All the best for ur future work..☺☺
 




kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
மிக பொருத்தமான முடிவு. விளக்கங்கள் அருமை என்னுடை சில சந்தேகங்கள் தெளிவு பெற முடிந்தது. நன்றி! This story become your master piece.
 




Prathika

நாட்டாமை
Joined
Jan 18, 2018
Messages
48
Reaction score
49
Location
Chennai
Well done explanation Moni mam....keep writing...yes as you said Easwer too sincere in his love..so all their love would be succeeded.. waiting for your lovely stories...Thank you
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top