• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Minnal vizhiye - 10(b)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Iniya

மண்டலாதிபதி
Author
Joined
Feb 17, 2019
Messages
325
Reaction score
2,563
Location
Tamilnadu
தன் முட்டைக் கண்களை விரித்துப் பார்த்தவள்... நடந்ததை நம்ப முடியாமல்... அந்தச் செயினை தன் கையில் எடுத்துப் பார்க்க... A.A என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த செயின் அவளை கவர்ந்தது... கண்களில் நீர் துளிர்க்க., அந்த செயினை பார்த்தவள் மறு நொடி காற்றுக் கூட புக முடியாத அளவுக்கு அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்....

“இப்போ சுமிக்கிட்ட கூட்டிட்டு போறியா????” அவள் அளவிற்கு இறுக்கமாக கட்டிக் கொள்ளாவிட்டாலும் மெலிதாக அணைத்தவன் அவள் காதுக்குள் ரகசியம் பேச.... அவன் மார்பில் தலை வைத்திருந்தவள் சரி என்பது போல் தலையை அசைத்தாள்.... அவள் கூறியதில் மகிழ்ந்தவன் அவளை இறுக்கமாக அணைத்திருந்தான்....

திருவின் அணைப்பில் இருந்தவள் விக்கி தன்னை தேடி வரும் அரவம் கேட்டு சட்டென்று அவனை விட்டு விலக... கையில் வைத்திருந்த லாலிப்பாப்பை யாரோ பிடுங்கிய உணர்வில் வினுவை பார்த்தான் திரு... அவன் பார்வை புரிந்தாலும் விக்கி தங்களை தேடுவதால் திருவின் கைகளை மட்டும் பற்றிக் கொண்டவள் விக்கிக்கு குரல் கொடுத்தாள்.

வினுவின் குரல் கேட்டு அவள் அருகில் வந்தவன் அங்கு போதையில் உளறியவாறு அமர்ந்திருந்த திருவை பார்த்து விட்டு மீண்டும் தன் அக்காவிடமே திரும்பினான்...

“அவங்க ரெண்டு பேரையும் மிரட்டியிருக்கேன் வினு... ஏதோ கோபத்துல பண்ணியிருக்காங்க... நாளைக்கு மச்சானை பார்த்து மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கேன் இல்லாட்டி போலிஸ் ஸ்டேஷன்ல மீட் பண்ணலாம்னு சொன்னதும் அரண்டுட்டானுங்க....”

விக்கி கூறியதை கேட்டவள், “சரி டா... அவங்களை நாளைக்கு கவனிச்சிக்கலாம்.. இப்போ அரசுவை அவன் வீட்ல விட்டுட்டு நாம கிளம்புவோம்...” தன் கைகளை பற்றி இருந்தவனை கனிவுடன் பார்த்தவாறே வினு கூற... விக்கியும் சரி என்பது போல் திருவின் கைகளை பற்றி அவன் எழும்ப உதவி செய்தான்.

விக்கியை யார் என்பது போல் பார்த்த திரு, “யார் நீ?? எதுக்காக என்னை கூப்பிடுற??? நான் வர மாட்டேன்...” அவன் கைகளை தட்டிவிட்டு வினுவோடு ஒன்றியவனை பார்த்து விக்கி ஙே என்று விழிக்க... வினு அவன் தோள்களை தட்டினாள்...

“அவன் தான் நிதானத்துல இல்லைன்னு தெரியுதே டா அப்புறம் ஏன் இப்படி இடிச்ச புளி மாதிரி நிற்கிற??, வா கிளம்புவோம்...” திருவை அழைத்துக் கொண்டு வினு நடக்க.. விக்கியும் பின் தொடர்ந்தான்...

திருவின் காரை அடைந்தவர்கள்., திருவை பின் சீட்டில் அமர வைத்துவிட்டு முன்னால் அமர்ந்து வீட்டை நோக்கி பயணப்பட்டார்கள்...

பாதை முழுவதும் திரு புலம்பியவாறே வர... எப்போதும் அவனை கம்பீரமாக பார்த்தவர்களுக்கு அவனை அப்படி பார்க்க சகிக்கவில்லை... அவனது புலம்பலில் பாதி சுமியை பற்றியும்., மீதி அவளை ஏமாற்றியவனை பற்றியும் தான் இருந்தது..

ஒரு வழியாக திருவின் வீட்டை அடைந்தவர்கள்., அவனை கைத்தாங்கலாக அழைந்து வந்து சோபாவில் அமர வைத்தார்கள்... ஆனால் அவனோ இப்போது தான் தன் உளறலை அதிகப்படுத்தினான்..

“பொண்டாட்டி எனக்கு பசிக்குது...” வயிற்றை தடவியவாறே வினுவிடம் கேட்டவனின் பொண்டாட்டி என்ற வார்த்தையில் விக்கி அதிர்நது வினுவையும் திருவையும் பார்த்தான்....

விக்கியின் அதிர்ச்சிக்கு விளக்கம் அளிப்பதை விட வினுவிற்கு திருவின் பசியே முதன்மையாக தோன்ற. கிட்சனுக்கு சென்றாள். அங்கு ப்ரிட்ஜில் பால் இருக்க அதை எடுத்து கேஸை பற்ற வைத்து பாலை காய்ச்சினாள்.... அதற்குள் ஹாலில் விக்கியின் அலறல் சத்தம் கேட்க... ஓடிச் சென்று பார்த்தவள் அங்கு., திரு விக்கியை துரத்திக் கொண்டிருக்க, அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக அலறியவாறே ஓடிக் கொண்டிருந்த விக்கியை பார்த்து சிரித்தாள்.

“டேய் விக்கி எதுக்காக டா அரசுவை ஓட வைக்கிற???” சிரித்தவாறே வினு கேட்க., விக்கி அவளை கோபமாக பார்த்தான்.

“ஏன் டி??? ஹிட்லர் என்னை தொரத்துரது உன் கண்ணுக்கு தெரியலை., நான் ஓட வைக்கிறேன்னு மனசாட்சியே இல்லாம சொல்றியே டி...” வினுவிடம் கத்தியவனை பிடித்த திரு நீ அவுட் என்று கத்த... வினு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.

“ஓடி பிடிச்சி விளையாடுறிங்களா???, சரி விளையாடுங்க” என்றவள் மீண்டும் உள்ளே சென்றுவிட., விக்கி தான் மீண்டும் திரு துரத்தவும் ஓட ஆரம்பித்தான்...

பாலை காய்ச்சியவள் அதை கப்பில் ஊற்றி எடுத்து வந்தாள். அதை திருவிடம் நீட்டியவள் குடிக்க சொல்ல., அவனோ அதை வாங்கி ஒரே மடக்கில் பருகிவிட்டு... மீண்டும் பசிக்கிறது என்றான்...

“இன்னும் பசிக்குதா??, ஆனா வீட்ல எதுவும் இல்லையே” வினு என்ன செய்வது எனத் தெரியாமல் நிற்க., அவளிடம் பதில் இல்லாது போகவும் திருவே., “பொண்டாட்டி உன் பெயர் என்ன??? என்றான்..

“அவளோட பெயர் கூடத் தெரியாம தான் பொண்டாட்டின்னு கூப்பிடுறிங்களா????” திருவின் இந்த புது அவதாரத்தை பார்த்து விக்கி திகைப்பூடனே கேட்க., திருவோ முதல் கேள்வியை விடுத்து.,

“பொண்டாட்டி நம்ம குழந்தைங்க எங்க ???” என்க..

“ம்க்கும் கல்யாணமே இன்னும் நடக்கலை அதுக்குள்ள குழந்தை எங்கன்னு கேட்குறாரே நம்ம ஹிட்லர்....” விக்கி மனதிற்குள் திருவை கிண்டலடிக்க., வினுவோ.,

“நம்ம பொண்ணு ஹரி அண்ணா வீட்டுல இருக்கிறா டா” என்றாள்....

ஹரி முதலிலையே ஹனி தன்னோடு இருப்பதை வினுவிற்கு தெரியப்படுத்தியிருக்க... அதை சொல்லி திருவை சமாளித்தாள்...

நெற்றியை சுருக்கி யோசித்தவன்... “நம்ம பொண்ணு எதுக்காக அங்க இருக்கணும்... உடனே வர சொல்லு...” என்றவன் வினு கூறிய காலையில் பார்க்கலாம் என்ற எந்த சமாதனத்திற்கும் உடன்படவில்லை. நேரம் செல்ல செல்ல திருவின் புலம்பல் அதிகரிக்க. வேறு வழியில்லாமல் விக்கி ஹரிக்கு அழைத்து நடந்ததை கூற., ஹரி உடனே வருவதாக கூறினான்....

அவன் வரும் வரை திருவிற்கு ஓட்ஸ் கஞ்சியை ரெடி செய்து அவனுக்கு புகட்ட முயன்றாள்... அதற்கும் அந்த போதையின் பிடியில் இருந்த குழந்தை மறுத்து அழிச்சாட்டியம் செய்ய... வினு அவனது அண்ணன் நிகிலின் குழந்தை ரோஹித்திற்கு சாப்பாடு ஊட்டுவது போல் கதைகள் கூறியும் பாட்டு பாடியும் கஞ்சியை திருவிற்கு ஊட்டினாள்...

அமைதியாக கேட்பவன் அடுத்த நொடி வேண்டாம் என மறுத்து திரும்பிக் கொள்ள., அவனை கொஞ்சி கெஞ்சி கஞ்சியை புகட்டுவதற்குள் வினு சோர்ந்து போனாள்... விக்கி அவர்கள் இருவரையும் வாயில் கை வைக்காத குறையாக பார்த்திருந்தான்...

அவனது எண்ணவோட்டம் முழுவதும்., பொறுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வினு., திரு செய்யும் அத்தனை அட்டகாசங்களையும் பொறுத்து., அழகாக அவனை கையால்வதை ஒருவித ஆச்சரியத்தில் பார்த்திருந்தான்... அதே போல் விறைப்பாக இருக்கும் திரு... சிறுவன் போல் செய்யும் சேட்டையையும் பார்த்தவனுக்கு இந்த காதல் தான் ஒவ்வொருவரையும் எப்படி மாற்றி விடுகிறது என்று பெரு மூச்சு எழுந்தது...

விக்கி அவனது எண்ணங்களில் உளன்றிருக்க... திரு வினுவிடம் கஞ்சி வேண்டாம் என மறுத்துக் கொண்டிருந்தான்.... அதே சமயம் வெளியே கார் சத்தம் கேட்க... விக்கி சென்று கதவை திறந்தான்... ஹரி ஹனியை தூக்கிக் கொண்டு வர... ஹனி அவன் தோளில் தூங்கியிருந்தாள்....

“வாங்க அண்ணா... வந்த உங்க பிரெண்ட் பண்ற அட்டகாசத்தை எல்லாம் பாருங்க...” ஹரிக்கு வழி விட்டவன் திருவை பற்றி குற்றப்பத்திரிக்கை வாசிக்க.,

உவ்வே என்று கேட்ட சத்தத்தில் இருவரும் திரும்பிப் பார்த்தனர்....

சாப்பிட்ட கஞ்சி அனைத்தையும் வினுவின் மேல் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான் திரு... வினுவோ அருவெறுப்பு எதுவும் இன்றி அவன் முதுகை நீவி விட்டாள். மனமோ அவனுக்கு என்னானதோ என்ற பயத்தில் துடித்தது... கண்கள் கலங்க திருவின் நெஞ்சையும் முதுகையும் நீவி விட்டவளை பார்த்த ஹரிக்கு திருவின் மேல் ஆத்திரம் எழ., ஹனியை விக்கியின் கையில் கொடுத்தவன் திருவை நெருங்கினான்..

“டேய் திரு என்னடா இதெல்லாம்???” கோபத்தில் ஹரி கத்த.,

“அண்ணா ப்ளீஸ்... அவன் மேலே தப்பு இல்ல... அவனுக்கு தெரியாம ஜீஸ்ல போதை மருந்து கலந்து கொடுத்துட்டாங்க... அரசுவை திட்டாதிங்க....” ஹரி கோபத்தில் ஏதாவது சொல்லிவிடுவானோ என்று வினு அவசரமாக அவனிடம் விளக்கினாள்...

“ஹம்ம்.. விக்கி நீ பாப்பாவை அவளோட ரூம்ல படுக்க வச்சிடு... அதோ அது தான் ஹனி ரூம்.... நீயும் போ வினு... அங்க வாஷ் ரூம் இருக்கு... நான் இவனை குளிக்க வச்சிடுறேன்..”.. ஹரி திருவை அழைத்துக் கொண்டு திருவினது அறைக்கு செல்ல... விக்கியும் வினுவும் ஹனியின் அறைக்கு சென்றனர்..

ஹனியை அவளது பெட்டில் தூங்க செய்துவிட்டு விக்கி ஹரிக்கு உதவ சென்று விட., வினு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாள்... அவள் அணிந்திருந்த வெள்ளை நிற கவுனில் திரு வாந்தி செய்ததால் அதை கழட்டாவிட்டால் அவளுக்கும் வாந்தி வரும் போல் இருந்தது... வாஷ் ரூமிலிருந்து வெளியே வந்தவள் ஹனியின் கப்போர்டில் எதாவது மாற்றுடை கிடைக்கிறதா என்று தேடினாள்...

அவளை ஏமாற்றாமல் ஹனியின் துணிகளின் அடியில் ஒரு கவரில் இருந்தது அந்த மஞ்சள் நிற சுடிதார்... அதை எடுத்துக் கொண்டவள் யாருடையதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தாலும் இப்போதைக்கு தனக்கு அது தேவை என்பதால் அதை எடுத்துக் கொண்டாள்...

தன்னை சுத்தப்படுத்திவிட்டு அந்த சுடிதாரை அணிந்தவள் கண்ணாடியில் தன்னை பார்க்க.. அந்த சுடி அவளுக்கு சற்று தொள தொளவென்று இருந்தது ஆனாலும் அழகாக இருந்தது.... ஹனியை ஒருமுறை திரும்பி பார்த்தவள் அவள் அருகே சென்று நெற்றியில் முத்தமிட்டுவிட்டு திருவை தேடிச் சென்றாள்...

அங்கு திருவை குளிக்க வைக்கிறேன் பேர்வழி என்று ஹரி பாதி நனைந்திருக்க... விக்கி முழுதாக குளித்திருந்தான்... ஒரு வழியாக திருவை சமாளித்து அவனது பைஜாமாவை அணிவித்து கட்டிலில் படுக்க வைக்க முயன்றுக் கொண்டிருந்தார்கள் ஹரியும் விக்கியும்... அவர்களின் கோலத்தை கண்டு வினு சிரிக்க.,

“அண்ணா... நான் பார்த்துக்கிறேன் நீங்க தலையை துடைச்சிக்கோங்க... டேய் விக்கி... நீ திருவோட டிரெஸ் எதாச்சும் இருந்தா போட்டுக்கோ... ஈரத்தோட இருந்தா உனக்கு சளி பிடிச்சிக்கும்...” கரிசனையாக கூறியவள் தன் சுடியை பார்த்து தயங்கி., “அண்ணா இது... ஹனியோட கப்போர்ட்ல இருந்துச்சு... அவளோட பர்மிஷன் கேட்காம எடுத்துட்டேன்….” என்றாள்.

“பரவாயில்லை மா... உன் டிரெஸ்சை முழுசும் வாந்தி பண்ணியே நாசம் பண்ணிட்டான்... காலையில் இருக்கு இவனுக்கு...” திருவை முறைத்தவன் வெளியே செல்ல... விக்கியும் திருவின் டீ ஷர்ட் ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியேறினான்...

மூவர் பேசுவதையும் கேட்டவன் எங்கே வினு தன்னைவிட்டுச் சென்று விடுவாளோ என பயந்து வினுவின் கையை எட்டிப் பிடித்தான்..

“என்னை விட்டுட்டுப் போய்டாத...”

கட்டிலில் படுத்திருந்தவனின் அருகில் அமர்ந்தவள் அவன் தலையை கோதினாள், “உன்னை விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன். நீ சமத்தா இப்போ தூங்குவியாம்...” அவன் தலையை வருடியவாறே வினு கூற, அவளது மற்றோரு கையை தன் கன்னத்தின் அடியில் வைத்து தூங்க ஆரம்பித்தான்....

இடையிடையே லேசான முனகலும், புலம்பலுமாக அவள் கைப்பிடித்து திரு தூங்க... வினு அவனை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.

உடை மாற்றிய விக்கியும் ஹரியும் ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் ஓய்வெடுக்க, வினு மட்டும் விடிய விடிய திருவின் தலையை கோதியவாறே அமர்ந்திருந்தாள்.
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு
சோனியா டியர்
 
Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
Akkkav haha thiru va ithu analum ithuvum nallathaan iruku ...?????

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top