• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Minnal vizhiye - 3(b)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rajalakshmi n r

மண்டலாதிபதி
Joined
Apr 3, 2018
Messages
494
Reaction score
475
Age
53
Location
Chennai, Tamil nadu
என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்களேமா... அதிரடி சரவேடி.. சூப்பர்
 




kaivalya

அமைச்சர்
Joined
Jun 24, 2018
Messages
2,229
Reaction score
1,517
Location
tamilnadu
ஹா ஹா ஹா வினு என்னம்மா இப்படி கவுந்துட்டியே
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அந்த இடத்தில் ஹிட்லரை சற்றும் எதிர்ப்பாராத வினுவும் விக்கியும் உறைந்து நிற்க... அவர்களை கண்டுக்கொள்ளாமல் நவினே... “திரு சார் இன்னைக்கு மார்னிங் தான் சென்னை ஹெட் ஆபிஸ் போய்ட்டு திரும்ப வந்தார் ஆனாலும் லீவ் போடாம வந்துட்டாரு.... ரொம்ப சின்சியர்” நவின் சிலாகிக்க... வினுவிற்கும் விக்கிக்கும் இது அவனாக இருக்காது என்ற சிறிய நப்பாசை தூள் தூளானது....

இருவரும் உறைந்து நிற்கும் போதே அருகில் வந்த திரு... நவினை என்ன என்பது போல் பார்க்க...

“குட் மார்னிங் சார்... இவங்க வினு ஆண்ட் விக்கி... நியூ ஜாய்னி... நம்ம டீம்ல தான் போட்டுறுக்கிறதா ராபர்ட் சார் சொன்னாங்க... உங்கள மீட் பண்றதுக்காக வெயிட் பண்றாங்க” படபடவென்று நவின் ஒப்பிக்க... இருவரையும் பார்த்தவனின் கண்கள் வினுவின் மேல் நிலைத்தது... இன்னும் அதிர்ச்சியில் கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்... கண்கள் வழியே அவளின் இதயத்தையே சென்று பார்ப்பவன் போல் அவளை அவன் ஊடுருவிப் பார்க்க, வினுவினால் அவன் கண்களை சந்திக்க முடியவில்லை.... கண்களில் இருந்து பார்வையை இறக்கியவனின் கண்கள் அவளது உதட்டில் அம்சமாக இருந்த அவளது மச்சத்தில் ஒரு நொடி தயங்கி மீண்டும் அவள் கண்களையே பார்த்தது...

ஓரிரு நொடிகளுக்கு மேல் இருவரையும் அளவிட்டவன் எதுவும் கூறாமல் தன் கேபினுக்குள் நுழைந்துக் கொண்டான்... அதிர்ச்சியில் உறைந்திருந்தவர்களை உலுக்கிய நவின்... “இப்போ ஒத்துக்குறிங்களா எங்க சார் செம்ம ஸ்மார்ட்னு”

“ரொம்ப ஸ்மார்ட் தான்” அதிர்ச்சியில் பதிலளித்தான் விக்கி....

“சரி வாங்க... உங்க சீட்ட காமிக்கிறேன்...” என்றவன் அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த சிறிய தடுப்பில் இருந்த இரண்டு இருக்கைகளை காண்பித்தான்... இருவரும் சென்று தங்கள் இருக்கையில் அமர நவின் அங்கிருந்து நகர்ந்தான்...

அவன் சென்றதும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தவர்கள்... “டீ வினு என்னடி இப்படி ஆகிடுச்சு... இவர் தான் நம்ம டீம் லீடராம் வைஸ் பிரசிடன்ட் வேறயாம்.... அவர் நினைச்சா நம்மள ஈசியா வேலைய விட்டு அனுப்பிடலாம்....” பயத்தில் விக்கி உளறிக் கொட்ட.... அவன் கைகளை பற்றிக் கொண்டவள்..

“ரிலாக்ஸ் டா... அந்த ஹிட்லர் தான் நம்மள தெரிஞ்ச மாதிரி காமிச்சிக்கலையே அதனால நாமளும் அவர மறந்துட்டு வந்த வேலைய பார்ப்போம். ஒரு வேளை நம்மள மறந்துட்டாரா இருக்கும்.” எதோ திரு ஷார்ட் டெர்ம் மெம்மரி பேஷண்ட் போல் வினு கூற... விக்கி அவளை முறைத்தான்... ( ஏம்மா நீ நிஜம்மா இன்டர்வியூல பாஸாகி தான் வேலைக்கு வந்தியா மா??? இப்படி எல்லாம் காமெடி பண்ற??)

“நீ லூசா டி.... நேத்து நைட் தான் அவர அடிச்சிட்டு வந்துருக்கோம் அதுக்குள்ள நம்மள எப்படி மறப்பாரு??? கண்டிப்பா நம்மள வச்சி செய்ய போறாரு... வந்த வேகத்துல வீட்டுக்கு பெட்டிய கட்ட வேண்டியது தான். “

“டேய் புலம்பாம அமைதியா இருடா... அப்படியெல்லாம் நம்மள அனுப்ப முடியாது....” விக்கியிடம் தைரியமாக பேசினாலும் வினுவிற்கும் உதறலெடுக்க தான் செய்தது... எப்போது வேண்டுமானாலும் திரு தங்களை அழைக்கலாம் என படபடப்பாக காத்திருந்தவர்களை திரு அழைக்கவேயில்லை மாறாக அவன் பார்க்க சொல்லியதாக கூறி நவின் தான் இரண்டு பைல்களை கொண்டு வந்து வினுவிடம் கொடுத்துவிட்டு சென்றான்.

அழைப்பான் அழைப்பான் என இருவரும் காத்திருக்க மதிய இடைவேளை நெருங்கும் வரை கூட அவன் அழைக்கவேயில்லை...ஒருவேளை தங்களை பற்றி மறந்துவிட்டான் போல என எண்ணிக் கொண்டு அந்த பைல்களை பார்க்க தொடங்க... சரியாக மீண்டும் அரை மணி நேரத்தில் திரு அழைக்கிறான் என்ற செய்தியோடு வந்து நின்றான் நவின்....

இருவரும் தயங்கியவாறே திருவின் கேபினுள் நுழைய.... சரியாக அங்கிருந்த மற்றொருவனின் கன்னத்தில் பளார் என்று அறைந்தான் திரு... வினுவும் விக்கியும் பயத்தில் ஒட்டிக் கொண்டு நிற்க... அறை வாங்கியவனோ சாரி சார் என்று விட்டு வினுவையும் விக்கியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறிவிட்டான்... இது தான் திரு,, அவனது கோர்ட்டில் மன்னிப்போ...இரண்டாம் வாய்ப்பு என்பதோ எப்போதும் கிடையாது.

ஒருவனை அடித்துவிட்டோம் என்ற உணர்வு எதுவும் இன்றி திரு அசால்ட்டாக கையை உதறிவிட்டு தன் சாய்வு நாற்காலியில் சென்று அமர்ந்து வினுவையும் விக்கியையும் பார்த்தான்..... கைகள் இரண்டையும் கோர்த்துக் கொண்டவன்,

“ஸோ ரெண்டு பேரும் டூவின்ஸ்????” கேள்வியாக அவன் நிறுத்த விக்கியின் தலை தானாக ஆம் என்பது போல் ஆடியது...

“எதுக்காக இந்த கம்பெனில ஜாய்ன் பண்ணிருக்கீங்க???” கேலியா ஏளனமா ஏதோ ஒன்று அவன் கேள்வியில் இருந்தது..

“ஏன் எங்க கூட வர்க் பண்ற அளவுக்கு உங்க கம்பெனிக்கு தகுதி இல்லையா??,” வினு துடுக்காக கேட்க... திரு அவளை ஆழ்ந்து பார்த்தான்... அவன் முகத்தில் இருந்து வினுவிற்கும் ஒன்றும் புரியவில்லை அந்தளவிற்கு உணர்ச்சிகளின்றி கடுமையாக இருந்தது...

“ஏன் அப்படி பார்க்கிறான்... விட்டா கண்ணுக்குள்ள புகுந்து இதயத்துக்குள்ள போய்டுவானோ.....” அவன் பார்வையில் முதுகு தண்டு சில்லிட்டது போன்ற ஒரு உணர்வில் வினு தத்தளிக்க...

“சென்னைல அவ்வளவு கம்பெனி வச்சிட்டு இங்க வந்துருக்கீங்க ரெண்டு பேரும்... ஒரு வேளை உங்க தொல்லை தாங்காம சென்னைல இருந்து விரட்டிடாங்களா??” கண்ணுக்கே தெரியாத அளவில் இதழோரம் ஏளனமாக வளைய அவன் கேட்க... ( இனியாச்சும் சென்னை நல்லா இருக்கட்டும்)

அதில் வினுவிற்கு சுர்ரென்று கோபம் ஏற, திருவை விட படு நக்கலாக முகத்தை வைத்துக் கொண்டு “ஓ... இது தான் நீங்க இங்க வர்க் பண்றதோட ரீசனா சார்??? எங்கள மாதிரி உங்களையும் விரட்டிட்டாங்களா???” எதோ பல நாள் பழகியவன் போல வினு அவனோடு வார்த்தைக்கு வார்த்தை பதில் பேச... விக்கி தான் எதுவும் புரியாமல் முழித்தான்...

“வாட்??? என்ன ஏன் தொறத்தப்போறாங்க.... உங்கள மாதிரி ரவுடிங்கள தான் தொறத்தனும்...” உணர்ச்சிகளின்றி இருந்த முகம் கோபத்தை தத்தெடுத்திருந்தது. எப்போதும் உணர்ச்சிகளை காட்டாத தன்னை அவள் பேச வைக்கிறாள் என்ற உண்மை தாக்க மீண்டும் உணர்ச்சிகளின்றி முகத்தை பாறையாக வைத்துக் கொண்டான்.

அவன் ரவுடி என்றதும் வினுவிற்கும் கோபம் வர... “நான் ரவுடின்னா நீங்களும் ரவுடி தான்...” என்றாள் கெத்தாக...

“வாட் டூ யூ மீன்???”

“நீங்க கார்ல வந்து விழுந்த பொண்ண அடிச்சிங்க... நான் என்ன அடிக்க வந்த உங்கள அடிச்சேன் இதுல என்ன தப்பு இருக்கு...” அலட்சியமாக கூறியவள் திருவின் கண்களை நேராக பார்க்க... அதில் நீ ரொம்ப பேசுற... இதுக்காக ரொம்ப அனுபவிக்கப் போற என்ற செய்தியில் உள்ளுக்குள் குளிர் எடுத்தாலும் வெளியே தைரியமாகவே நின்றாள்.

“அந்த பொண்ண அடிச்சதுல என்னோட தப்பு எதுவும் இல்ல...” எதற்காக அவளிடம் தன்னை நிருபிக்க முயல்கிறோம் எனத் தெரியாமல் அவன் கூற,

“அப்போ உங்கள அடிச்சதும் என்னோட தப்பு இல்ல.. சாரி சொன்ன அப்புறம் கூட அடிக்க கை ஓங்கினது நீங்க தான்...”

சிறு பெண்... தன் முன் நின்று தன்னை எதிராக பேசுவதா என்னும் ஈகோ தலை தூக்க, நாற்காலியில் சாய்வாக அமர்ந்தவன்... “இதோட பின்விளைவுகள் தெரிஞ்சி தான் பேசுறியா??? “

தங்களின் வேலையை பற்றி தான் ஜாடையாக கூறுகிறான் என்பது புரிந்தாலும் அதை கண்டுக் கொள்ளாமல், “பெருசா என்ன பண்ணிடுவிங்க... வேலைய விட்டு தூக்குவிங்க... அவ்வளவு தானே.... இந்த கம்பெனி இல்லாட்டி எங்களுக்கு வேற கம்பெனி இதுக்கெல்லாம் இந்த வினு பயப்படமாட்டா....” ( படிச்சிட்டு வர்றவனுக்கு எந்த குவஸ்டின் வருமோன்னு ஆயிரம் கவலை... படிக்காதவனுக்கு குவஸ்டின் பேப்பர் மாறி வந்தா கூட நோ டென்ஷன்..)

“ம்ம் நைஸ் நல்லா பேசுற... ஆனா நான் இந்த கம்பெனிய விட்டு உங்கள அனுப்ப மாட்டேன் பட் நான் கொடுக்கிற டார்ச்சர்ல நீங்களே என்கிட்ட ரிசைன் லெட்டர் எடுத்துட்டு வருவிங்க.” என்றவன் நக்கலாக வினுவையும் விக்கியையும் பார்க்க... விக்கி எனும் சிலைக்கு அப்போது தான் உயிர் வந்தது....

“இல்ல சார்.. வீ ஆர் சாரி... உங்கள அடிச்சது தப்பு தான்,….” பிரச்சனையை சுமுகமாக தீர்க்க அவன் முயல... அவனது இரட்டை சகோதரியோ “குட் லக்.... உங்களோட ஆசை நடக்கனும்னு நானும் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்..”. என்றிருந்தாள்....

விக்கி வினுவை அதட்ட அதையெல்லாம் அவள் கண்டுக் கொண்டதாகவே இல்லை...அவர்கள் இருவரையும் இகழ்ச்சியாக பார்த்தவன் போகலாம் என்பது போல் சைகை வைக்க... இருவரும் வெளியேறினர்... கேபின் வாசல் வரை சென்றவள் திரும்பி மீண்டும் திருவிடம் வர… விக்கி கலவரமாக கதவு அருகே நின்றுக் கொண்டு வினு என்ன செய்ய போகிறாள் என்பது போல் பார்த்தான்...

காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த திரு என்னவென்பது போல் புருவம் சுருக்கி பார்க்க... அவன் முன்பு போடப்பட்டிருந்த மேசை மேல் தன் இரு கைகளையும் ஊன்றி அவனை கூர்ந்து பார்த்தவள்... “நீங்க எப்பவுமே இப்படிதான???” என்றாள்.....

அவள் என்ன கேட்கிறாள் எனப் புரியாமல் திரு பார்க்க.... அவளோ, “எப்பவும் சிடு சிடுன்னு கோபமா... எல்லாரையும் எரிக்கிற மாதிரி பார்த்துட்டு... கண்ணாலே தள்ளி நில்லுன்னு எச்சரிக்கிற மாதிரி பேசுறது.... இது தான் நீங்களா????”

தன் கண்னையே உற்றுப் பார்த்து அவள் கேட்ட கேள்வி அவனுக்கு புரிந்தாலும் புத்திக்கு எட்டவே இல்லை.... என்ன சொல்கிறாள் இவள் என்பது போல தான் பார்த்தான்... அதையே சாதகமாக எடுத்தவள், “நீங்க இப்படியே இருங்க மிஸ்டர் அரசு.... எனக்கும் இது தான் பிடிச்சிருக்கு பிகாஸ் ஐ திங்க் ஐ யம் இன் லவ் வித் யூ....” அவன் கண்களை நேராக பார்த்து அவள் கூற... இப்போது அதிர்வது அவன் முறையானது. ( அடிப்பாவி மூணாவது எபிஸோட்லையே லவ் யூ சொல்லிட்டியே மா.... என் ஹீரோ எப்படி மா தாங்குவான்...)
Mmm kalakitinga ponga ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top