• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Minnal vizhiye -7(c)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Iniya

மண்டலாதிபதி
Author
Joined
Feb 17, 2019
Messages
325
Reaction score
2,563
Location
Tamilnadu
மறுநாள் வார இறுதி நாளாக இருந்ததால் விக்கியை அழைத்துக் கொண்டு வினு மாலிற்கு செல்ல... விக்கி தான் பயங்கர உற்சாகத்தில் இருந்தான்... பெங்களூர் வந்த இத்தனை நாட்களில் இருவருக்கும் திருவை சுற்றவே நேரம் சரியாக இருந்ததால்., ஒரு நாள் கூட ஊரை சுற்றிப் பார்த்தது இல்லை. அதனால் வினு அழைத்ததும் சரியென்று கிளம்பிவிட்டான்....

முதலில் உற்சாகமாக வந்தவன்., வினு எதுவும் வாங்க ஆர்வம் காட்டாததிலும்... இருக்கும் அனைத்து ஃப்ளோர்களை ஏறி இறங்க வைத்ததிலும் காண்டாகிவிட,

“ஹேய் வினு என்னடி பண்ற??? ஷாப்பிங்னு சொல்லிட்டு.. இது வரைக்கும் ஒரு கர்ச்சீப் கூட நீ வாங்கல... போ நான் இந்த நிமிஷத்துல இருந்து தனியா ஷாப்பிங் பண்ணப் போறேன்...” அவள் ஒன்றும் வாங்ககாததோடு தன்னையும் எதுவும் வாங்க விடாத கடுப்பில் விக்கி உரைக்க.,

“டேய் விக்கி வேணாம்... நீ சின்னப் பையன்... உன்ன ஏமாத்திடுவாங்க... வேணாம்....” விக்கியிடம் பதில் சொன்னாலும்., வினுவின் பார்வை யாரையோ தேடிச் சுழன்றது.

அவள் தேடுதலை உணராதவன், சின்னப் பையன் என்றதில் தன்மானம் பொங்க, “போடி நான் ஒண்ணும் சின்னப் பையன் இல்ல... என்னால தனியா சமாளிச்சிக்க முடியும்.... நான் போறேன்....” ரோஷமாக உரைத்தவன் திரும்பி நடக்க...

வினுவோ, “போடா போ... என்ன தனியா விட்டுட்டு போற தானே... எதாச்சும் பொண்ணு கையால அடி வாங்கிட்டு உட்கார்ந்து அழு....” இன்ஸ்டன்டாக அவனுக்கு சாபம் கொடுத்தவள் தான் வந்த வேலையை பார்க்க தொடங்கினாள்...

வினுவிடம் சண்டையிட்டுவிட்டு வந்த விக்கி, நேராக ஒரு ஐஸ்கிரிம் பார்லருக்குள் நுழைந்தான். இரண்டு கிண்ணங்களில் ஐஸ்கிரிமை வாங்கியவன், ஒரு டேபிளிள் சென்று அமர்ந்து அதை ரசித்து சாப்பிட ஆரம்பித்தான்...

பொதுவாக பெண்கள் தான் ஐஸ்கிரிம் விரும்பி சாப்பிடுவார்கள் ஆனால் வினுவின் வீட்டில் அகிலும் விக்கியும் தான் நிறைய ஐஸ்கிரிம் சாப்பிடுவார்கள்.... இதனால் வினுவிற்கும் விக்கிக்கும் வீட்டில் பெரும் பிரளயமே நடக்கும்.

“ஹப்பா... இந்த வினுவை கழட்டி விட்டுட்டு வந்ததும் நல்லா தான் இருக்கு... கலர் கலரா பொண்ணுங்க. ப்ளஸ் நினைச்ச மாதிரி நிறைய ஐஸ்கிரிம்...” மனதுக்குள் குதுகலித்தவன், அங்கு வந்து சென்றுக் கொண்டிருந்த பெண்களை சைட்டடித்துக் கொண்டு இருந்தான்...

அவனுக்கு எதிர் டேபிளில் கொஞ்சம் காலேஜ் பெண்கள் அமர்ந்திருக்க, அதில் இருந்த பச்சை நிற சுடிதார் அணிந்திருந்த பெண் அவனை திரும்பிப் பார்க்க வைத்தாள்.... அவளது தோழிகள் அனைவரும் ஜீனில் இருக்க, அவள் மட்டும் சுடியில் அம்சமாக இருந்தாள்... அதுவே அவனை அவளை கவனிக்க வைத்தது... ஐஸ்கிரிமையும் அந்த பச்சை சுடி பெண்ணையும் ரசித்துக் கொண்டிருந்தவன் அப்போது தான், அந்த பெண் அருகே பக்கத்து டேபிளில் தனியாக அமர்ந்து அவனை முறைத்துக் கொண்டிருந்த அந்த பெண் குழந்தையை கவனித்தான்...

“ஹாய் க்யூட்டி...” அந்த குழந்தைக்கு அவன் கை அசைக்க... அது அவனை முறைத்தது.....

‘என்ன இப்படி முறைக்குது இந்த குழந்தை... ஹம்ம் பார்க்க நம்ம வினுவ சின்ன வயசில பார்த்த மாதிரி இருக்கு... அப்படியே நம்ம வினு செராக்ஸ் தான்....எத்தனை வயசிருக்கும்?? மூணு இல்லாட்டி நாலு வயசு இருக்கும்.’ பார்ப்பதற்க்கு வினுவை போல் இருந்த குழந்தையை சிறிது நேரம் பார்த்தவன், ஐஸ்கிரிம் வாங்க எழும்பி கவுண்டர் அருகே சென்றான்.. அங்கே அவன் முன்பு அந்த பச்சை சுடி பெண் நிற்க, அவளை பார்த்தவாறே நின்றிருந்தான்....

‘ரொம்ப அழகா இருக்காளே இந்த பொண்ணு... தமிழ்நாட்டுக்காரியா இருப்பாளோ...கொஞ்சம் சைட் ஆங்கிள்ல பார்த்த அப்படிதான் இருக்கு...’ அந்த பச்சை சுடி பெண்ணை சைட் அடித்து கொண்டிருந்தவன் முன்னால் சரியாக அந்த குழந்தை வந்து நிற்க... அந்த குழந்தையை பார்த்து சிரித்தான்.

ஆனால் அந்த குழந்தையோ அவனை பார்த்து சிரிக்காமல் முறைக்க., அவன் என்ன என யோசிப்பதற்கு முன்பு விக்கியின் முன்னால் நின்றிருந்த பெண்ணின் துப்பட்டாவை பற்றி இழுத்த குழந்தை ஓடி விட்டது... விக்கி என்ன நடந்தது என யோசிப்பதற்குள் அந்த பச்சை சுடி சடாரென்று திரும்பி விக்கியின் கன்னத்தில் அறைய.... விக்கி அதிர்ச்சியில் அவளை பார்த்தான்..

“பொறிக்கி ராஸ்கல்... இதுக்காவே வருவிங்களா டா.. பொண்ணுங்கன்னா எல்லாருக்கும் கிள்ளுக்கீரையா போச்சு....” விக்கியை வாயில் வந்தவாறு திட்டியவள் அங்கிருந்து சென்றுவிட, அந்த குழந்தை மீண்டும் அவனை பார்த்து சிரித்துவிட்டு ஓடிவிட்டது.... விக்கிக்கு ஒன்றுமே புரியவில்லை.... யார் இந்த குழந்தை எதற்க்காக தன்னை இப்படி மாட்டிவிட்டது என புரியாமல் கன்னத்தில் கை வைத்தவாறே விக்கி திகைத்து நிற்க.... தனியாக கன்னத்தில் கை வைத்து நின்றிருந்த விக்கியை விக்கியை கவனித்து விட்டு வினு அவன் அருகில் வந்தாள்..

“ஹோய் ப்ரோ ..... என்னடா மியூசியம்ல நிக்கிற பொம்மை மாதிரி நிக்கிற????” கன்னத்தில் கை வைத்து உறைந்து நின்றவனின் தோளில் அவள் தட்ட.... விக்கியோ,

“வினு என்ன ஒரு பொண்ணு அடிச்சிடுச்சு...”. சிறுபிள்ளை போல் அவன் சிணுங்க... வினுவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.... தான் கொடுத்த சாபம் இவ்வளவு சீக்கிரம் நடந்துவிட்டதா என்பது போல் வினு சிரிக்க...

“சிரிக்காத டி... எல்லாம் உன்னால தான்...” என்றவன் நடந்ததை கூற... வினுவிற்கு அந்த குழந்தையின் புத்திசாலித்தனம் பிடித்திருந்தது... இருந்தாலும் தன் தம்பியை சமாதனம் செய்ய வேண்டும் என்பதால்,

“விடுடா... நீ ஏன் பச்சை சுடிய சைட் அடிச்ச??? ஒரு வேளை அந்த பொண்ணுக்கு தெரிஞ்ச குழந்தையா இருக்கும்...”

“இல்ல டி அந்த குழந்தை தனியா தான் இருந்துச்சு.... ஆனா வினு... அந்த குழந்தை பார்க்கிறதுக்கு அப்படியே சின்ன வயசுல உன்னை பார்த்த மாதிரி இருந்துச்சு”

“எல்லா குழந்தைங்களும் சின்ன வயசுல அப்படி தான் டா இருப்பாங்க.... ஆளாலும் ஒரு பொண்ணுகிட்ட அடி வாங்கிட்டியே டா....” மீண்டும் வினு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க...விக்கி அவளை முறைத்தான்...

“சரி சரி கோச்சிக்காத.... நீ என்ன இதுக்கு முன்னாடி பொண்ணுங்க கிட்ட அடி வாங்காதவனா என்ன_???? நம்ம கூட படிக்கிற பொண்ணுங்க எத்தனை பேர்கிட்ட அடிவாங்கியிருக்க??? ஸோ ரொம்ப பீல் பண்ணாத....” விக்கியை இலகுவாக்க அவள் கிண்டல் போல் கூற அவள் சொல்லிய விதம் அவனை சிரிக்க வைத்தது...

கல்லூரியில் விக்கி தான் அவர்களின் வகுப்பிற்கே செல்ல பிள்ளை... எந்த உதவி என்றாலும் அவனிடம் தான் எல்லாரும் கேட்பார்கள். அவனும் அனைவரிடமுமே அன்பாக இருப்பான்... அதனால் மற்ற பசங்களுக்கு அவன் மேல் பொறாமை கூட உண்டு....

“சரி டி நீ இவ்வளவு நேரம் என்ன பர்ச்சேஸ் பண்ணிண????” பச்சை சுடியை மறந்து விக்கி கேட்க,…. திரு திருவென்று முழித்தாள் வினு.

“அதுவா டா... அது வந்து....” என்ன சொல்வது என்பது போல் வினு இழுக்க.. விக்கிக்கு அவள் மேல் சந்தேகமாக இருந்தது...

“வினு... உண்மைய சொல்லு... எதுக்காக இங்க வந்தோம்.....”

“அது... திரு இன்னைக்கு இங்க அவன் ப்ரெண்ட்டை மீட் பண்ண வர்றதா போன்ல அன்னைக்கு பேசிட்டு இருந்தான்... அதான்....” முப்பத்திரண்டு பற்களையும் ஈஈஈஈ என காட்டியவாறே வினு கூற... விக்கி அவளை கொலைவெறியோடு பார்த்தான்...

“இத முதல்லையே சொல்லியிருந்த ஹிட்லர தேடியிருக்கலாமே டி... நான் வேற தேவை இல்லாம அடியெல்லாம் வாங்கிட்டேனே.....”

“சாரி டா... ரொம்ப நேரமா தேடிட்டே இருக்கேன் ஆனா அரசுவ காணோம் டா....” விழிகளை சுழலவிட்டவாறே வினு உரைக்க... தன் தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டவன் திரும்பி பார்க்க அங்கு திரு யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான்...

“அதோ அங்க இருக்கார்...” விக்கி திரு நிற்கும் திசையை காண்பிக்க... வினு முகத்தில் பல்ப் எரிந்தது... வேகமாக அவன் முன்னால் சென்று நின்றவள் “பேபபபப” என கத்த...திரு ஒரு நொடி ஸ்தம்பித்து போனான்.... கையிலிருந்த கைப்பேசி நழுவ பார்க்க.. அதை பற்றிக் கொண்டவன் அவளை எரிப்பது போல் பார்த்தான்...

“ஹேய் அரசு பயந்துட்டியா....” கைத்தட்டி வினு சிரிக்க.... திரு அவளின் செய்கையை ஒரு அதிர்வோடு பார்த்தான்..... சிரிக்கும் அந்த இதழில் இருக்கும் மச்சமும் அவனை பார்த்து சிரிப்பது போல் இருக்க... தன் தலையை உலுக்கிக் கொண்டான்...

“இடியட்.... சண்டே கூட என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா????” தன்னை தடுமாற வைக்கிறாள் என்பதால் அவள் மீதே அவன் கோபத்தை காட்ட.... அவளோ அவன் ஏதோ காதல் வசனம் பேசுவது போல் அவனை கண்சிமிட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தாள்....

“லவ்க்கு ஏதுடா சண்டே மண்டே... எல்லா டேயும் ஒண்ணு தான்...” தத்துவஞானியாக மாறி அவள் தத்துவம் பேச, விக்கியும் அவள் அருகே வந்திருந்தான்...

தன்னை சமன்படுத்திக் கொண்ட திரு, விக்கியை பார்த்ததும் அவனிடம் சாடினான்... “இவளுக்கு தான் அறிவில்லை, நீயாச்சும் இவளுக்கு புரிய வை டா... என் பின்னாடி சுத்துறத விட்டுட்டு தயவு செஞ்சு ரெண்டு பேரும் வேற எதாச்சும் வேலை இருந்தா பாருங்க...” எவ்வளவு தான் பொறுமையாக சொல்ல முயன்றும் சீற்றமாக தான் வந்தது திருவிற்கு.

அவன் சொல்ல வருவதை மறுத்து வினு எதோ சொல்ல வர.... அதற்குள் “டேடிடிடிடிடிடி” என்று கத்தியவாறு ஓடி வந்தாள் அந்த குழந்தை,…..

யார் என்பது போல் வினுவும் விக்கியும் திரும்பி பார்க்க….. விக்கியை முறைத்த அந்த குழந்தை தான் ஓடி வந்தது.... இருவரும் அதிர்ச்சியாக பார்க்க.... திரு அந்த குழந்தையை கையில் அள்ளி அணைத்துக் கொண்டான்..... தன் நெஞ்சோடு சேர்த்து பொத்தி வைப்பது போல் அவன் அணைத்துக் கொள்ள.... வினுவிற்குள் எதுவோ உடைவது போல் இருந்தது....

அதிர்ச்சியில் நின்றவள் குழந்தையை சுட்டிக் காட்டியவாறே... “அரசு.....” என்க... கண்களோ யாரிது என்ற செய்தியை தாங்கி அவனை பார்த்தது.....

அவள் கண்களில் தெரிந்த குழப்பம்.... பயம்....யாரிது என்ற கேள்வி எல்லாவற்றையும் கவனித்தவன்.... குழந்தையை அணைத்தவாறே பெருமையாக, “மீட் மை டாட்டர் ஹனி.” என்றான்.....

விழிகள் தொடரும்.......
 
Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
Naan nambamaaten ithu thiru pappa lethan d akil pappa athan thannoda aththa vinu maari irukka ??

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top