• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Minnal vizhiye - 8(a)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
View attachment 9832

மின்னல் விழியே – 8

திரு ஹனியை தன் குழந்தை என்க, அதில் வினு மொத்தமாக உடைந்தாள்... ஆனாலும் மனதில் அவனை தவறாக நினைக்க முடியவில்லை... தவறு வேறு எங்கோ இருப்பது போல் இருந்தது.... எதையும் யோசிக்க முடியாமல் வினு செயலிழந்தது போல் திருவை பார்த்தவாறு நின்றாள்.

விக்கியை கண்ட ஹனியோ,.”டேடிடி... பேட் பாய்..”. விக்கியை சுட்டிக் காட்டி திருவிடம் ஹனி போட்டுக் கொடுக்க, ஏற்கனவே அதிர்ச்சியில் சிலையாகியிருந்தவன் ஹனியின் குற்றச்சாட்டில்,

‘அடப்பாவமே அப்பவே ஹிட்லர் மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன் ஆனா ஹிட்லரோட ரிலிஸ்சா இருக்கும்னு நினைக்கலையே’ என்று மனதில் ஹனியை நினைத்து பேய்முழி முழித்தான்.

விக்கியை பார்த்து மெலிதாக சிரித்த திரு ஹனியிடம், “விடு பேபி...லெட்ஸ் கோ” என்றவாறு அவர்கள் இருவரையும் கண்டுக்கொள்ளாது கிளம்ப.... ஹனி இருவரையும் முறைத்தவாறே சென்றாள்....

“ஹிட்லர் பார்ட் டூ” தன்னையும் அறியாமல் விக்கியின் வாய் முணுமுணுத்தது.....

அவர்களின் முன் கம்பீரமாக ஹனியை அறிமுகப்படுத்தியிருந்தாலும் வினுவின் கண்களில் தோன்றிய வேதனையும் கலக்கமும் திருவின் மனதை பிசைந்தது..

“என்னை ஏன் அப்படி பார்த்தா.... ம்ம்ஹூம் அவளுக்காக இரக்கப்படாத திரு... இது தான் சரி.... அவ என்னை விட்டு தள்ளியிருக்கிறது தான் அவளுக்கு நல்லது....” தன் மனதை சமன் படுத்த முயன்றவனிடம் அவளுக்கு நல்லதா இல்லை உனக்கு நல்லதா என மனசாட்சி எதிர் கேள்வி கேட்க... அதற்கு விடை தெரியாமலும் விடை அளிக்க முடியாமலும் தலையை அழுந்த கோதியவாறே அவளை திரும்பி பார்க்க சொல்லி தூண்டும் மனதை கடிந்தவாறே திரும்பியும் பாராமல் அங்கிருந்து சென்றான்....

தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்த விக்கிக்கு அப்போது தான் வினுவின் ஞாபகம் வர, அவசரமாக அவளை திரும்பி பார்த்தான்... அவளோ நின்ற இடத்திலேயே வேரோடி போயிருந்தாள்...

“வினு....” அவள் கைகளை பிடித்தவாறு விக்கி அழைக்க... திரும்பி பார்த்தவளின் கண்களில் இருந்த வெறுமையும் கலக்கமும் அவன் இதுவரை பார்த்திராதது.... அதில் திருவின் மேல் அத்தனை கோபம் எழுந்தாலும், முதலில் வினுவை கவனிக்க வேண்டும் என மனம் உணர்த்த, அவளை அழைத்துக் கொண்டு, அந்த ஐஸ்கிரிம் பார்லரின் ஒரு டேபிளிள் சென்று அமர்ந்தான்....

எதுவும் பேசாமல் தனக்குள் வினு உளன்றுக் கொண்டிருக்க.... விக்கி தான் பேசினான்...

“வினு.... அந்த ஹிட்லர் வேணாம் டி... அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு போல டி... இதெல்லாம் நமக்கு செட்டாகாது... நாம பேசாம இங்க இருந்து கிளம்பிடலாம்... இதானால தான் முதல்ல இருந்தே உன்ன அவாய்ட் பண்ணிருக்கார் போல டி...” தன் அக்காவை ஏமாற்றிவிட்டாறே என்று திருவின் மேல் கோபம் எழுந்தாலும் வினுவை இங்கிருந்து அழைத்து சென்றுவிட்டால் அனைத்தும் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் விக்கி, வினுவிற்கு புரிய வைக்க முயன்றான்...

“என்னால அவனை விட முடியாது…. எனக்கு அவன் தான் வேணும்... யார் என்ன சொன்னாலும் அவன் தான் வேணும் அவன் பொய் சொல்றான்... அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்காது....” தீவிர யோசனையில் இருந்தவள், கண்கள் கலங்க, உதடு துடிக்க அழுத்தமாக கூற... விக்கிக்கு அவள் மேல் கோபம் வந்தது...

“பைத்தியமா டி நீ??? அவருக்கு ஒரு குழந்தை இருக்கு டி.... “கோபத்தை கட்டுப்படுத்தியவாறே விக்கி சொல்ல...

“அது அவனோட குழந்தையா இருந்தால், இனி அவ எனக்கும் குழந்தை தான்....” உறுதியாக கூறியவளை எதைக் கொண்டு அடிக்கலாம் என்பது போல் விக்கி பார்த்தான்.

“சரி குழந்தையை ஏத்துக்குவ... ஆனா அவரோட மனைவிய என்ன பண்றதா உத்தேசம்???? அவங்ககிட்ட போய் கேட்க போறியா??? உங்க புருஷனையும் பொண்ணையும் எனக்கு குடுங்கன்னு....” விக்கி காட்டமாக கேட்க.... அவன் கூறும் உண்மை சுட்டாலும் காதல் கொண்ட மனது எற்க முடியாமல் ஊமையாக அழுதது.

“இல்ல...இல்ல.... என் திருவுக்கு கல்யாணம் ஆகியிருக்காது... அப்படி ஆகியிருந்த கண்டிப்பா இவ்வளவு நாள்ல அதை சொல்லியே என்னை அவன்கிட்ட இருந்து விலக்கியிருப்பான். ஆனா அவன் ஒரு தடவை கூட சொல்லவே இல்ல.... கண்டிப்பா அவனுக்கு மனைவின்னு யாரும் இல்ல... நீ அப்படி சொல்லாதே...” விக்கி கூறுவதை ஏற்க முடியாமல் தன் காதுகளை பொத்திக் கொண்டு வினு கத்த..... விக்கி செய்வதறியாமல் திகைத்தான்....

இவ்வளவு தூரம் திரு அவளை பாதித்திருக்கிறானா??? என விக்கி அதிர, வினுவும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தாள்....

“சரிக்கா.. நீ சொல்ற மாதிரியே அவருக்கு மனைவின்னு யாரும் இல்லாம இருக்கலாம் அதுக்காக அவரை நீ ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்க போறியா???” கேட்கும் அவனுக்கே வலித்தாலும் வினுவிற்கு நிதற்சனத்தை, நல்ல தம்பியாக உரைக்க முயன்றான்....

“நிச்சயமா.... அவன் லைஃப்ல மனைவின்னு யாரும் இல்லாட்டி நான் அவனை விட மாட்டேன்.... நான் ரெண்டாம் தாரமா போறத பத்தி எனக்கு கவலையில்லை... ஒருவேளை அவனுக்கு மனைவின்னு ஒருத்தங்க இருந்தா நான் ஒதுங்கிக்கிறேன்...” என்றவளின் குரலில் இருந்த வலியை விக்கியால் புரிந்துக் கொள்ள முடிந்தது...

‘காதல் இப்படித்தான் இருக்குமா??’ என விக்கிக்குள் ஒரு கேள்வி எழ, ‘இப்படி தான் இருக்கும்னா எனக்கு இந்த காதலே வேண்டாம்டா சாமி’ என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டான் அந்த பாசக்கார சகோதரன்.

“வினு ப்ளிஸ் புரிஞ்சிக்கோ.... லவ்க்கே நம்ம அப்பா ஓ,கே சொல்ல மாட்டாங்க... இதுல ஒரு குழந்தையோட இருக்கிறவரை கட்டிக்க ஒத்துக்கவே மாட்டாங்க....” விக்கி மீண்டும் அவளுக்கு எடுத்துரைக்க... வினுவிற்கு கோபம் துளிர்த்தது...

“ஏன் டா அவனை அப்படி சொல்ற... அவனுக்கு கல்யாணமே ஆகியிருக்காதுன்னு சொல்றேன்... நல்லா கேட்டுக்கோ... அவனை தவிர, வேற யாரையும் நான் கட்டிக்க மாட்டேன்...” கண்கள் கலங்க...மூக்கு விடைக்க கூறியவளை பார்க்க விக்கிக்கு பாவமாக இருந்தாலும் உண்மையை ஒத்துக் கொள்ள மறுக்கிறாளே என கோபமாக வந்தது....

“வினுனு.....” விக்கி எதோ கூற வர, அவன் அருகே வந்து அமர்ந்தான் ஹரி...

ஹரியை சந்திப்பதற்க்காக தான் திரு ஹனியோடு வந்திருந்தான்... சரியாக கிளம்பும் சமயத்தில் விக்கியும் வினுவும் திருவை கண்டு அவனிடம் பேச, சற்று தொலைவில் ஹனியோடு தன் மனைவியிடம் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த ஹரி அவர்களை கவனித்தான். முதலில் யாராக இருக்கும் என்று யோசித்தவன் இருவரின் உருவ ஒற்றுமையில், அவர்கள் தான் திரு கூறும் இரட்டை வால் குரங்குகளாக இருக்கும் என்று அனுமானித்து தன் மனைவி மதுவிடம் பின்பு பேசுவதாக கூறி அழைபேசியை அனைத்தான்.

அவன் அருகில் செல்வதற்குள் அவனோடு நின்றிருந்த ஹனி திருவிடம் ஓட. அதன்பின் தான் திரு ஹனியை அவர்கள் இருவரிடமும் அறிமுகப்படுத்தியது.

அவர்கள் அருகில் செல்லாமல் ஹரி அங்கிருந்தே அவர்களை கவனித்தான். அவனுக்கு வினுவும் விக்கியும் நம்பத்தகுந்தவர்கள் தானா?? என்று அறிய வேண்டியிருந்தது. அதனால் திரு சென்ற பின்பும் அவர்கள் பேசுவதை அவர்கள் அறியாமல் பக்கத்து டேபிளில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். ஹனியை பற்றி அறிந்த பின்னர் திருவை விலகி செல்வார்கள் என்று அவன் நினைக்க,

அதற்கு மாறாக வினுவின் ‘ அவள் இனி என்னுடைய பொண்ணு’ என்ற வார்த்தை அவனை நிஜமாகவே சபாஷ் போட வைத்தது. மேலும் அவர்கள் பேசியது முழுவதையும் கேட்டவன் இதற்கு மேல் அமைதியாக இருக்க வேண்டான் என்று எண்ணி தான் விக்கியின் அருகில் சென்று அமர்ந்தான்..

“ஹாய் ரெட்ட வால் மங்கிஸ்” திரு அவர்களுக்கு வைத்திருக்கும் பட்டப் பெயரை வைத்து அவன் அழைக்க, வினுவும் விக்கியும் யார் இந்த புதியவன் என்பது போல் பார்த்தனர்....

“யார் நீங்க ????” விக்கி கேட்க...

“என்னோட நேம் ஹரி.... திரு என்னோட ப்ரெண்ட் தான்...உங்களை பத்தி திரு சொல்லியிருக்கான்” என்றவுடன் வினுவும் விக்கியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, மனமோ ‘ நம்மளை பத்தி சொல்லியிருக்கானா?? கண்டிப்பா நல்லதா சொல்லியிருக்க மாட்டான்’ என அந்த நிலையிலும் திருவை நினைத்து கேலி பேசியது.

அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்டுக் கொள்ளாதவன், “அப்போவே உங்களை பார்க்கணும்னு ரொம்ப ஆசை .... இப்போ தான் சான்ஸ் கிடைச்சிருக்கு....” என்றவன் வினுவை பார்த்து சிரிக்க... இவன் எதற்க்காக தங்களை பார்க்க விரும்பினான் எனப் புரியாமல் குழப்பத்துடன் பார்த்தனர் இருவரும்...

“எங்களை பத்தியெல்லாம் ஹிட்லர் சொல்லியிருக்காரா????” முதலில் வியந்த விக்கி பின் தானாகவே, “எப்படியும் நல்லதா சொல்லியிருக்க மாட்டார்” என்று உச்சுக் கொட்டிக் கொள்ள.,

அவனது ஹிட்லர் என்ற விழிப்பில் வியந்த ஹரி, “ஹிட்லரா???? யாரு திருவையா சொல்ற??? அவனுக்கு ஏத்த நேம் தான்...” அவர்கள் திருவிற்கு வைத்திருக்கும் பெயரை கேட்டு, ஹரி வெடி சிரிப்பு சிரிக்க...

விக்கி ‘அவனை லூசா இருப்பானோ’ என்ற ரீதியில் பார்த்தான்...

இருவரும் தன்னை ஒருமாதிரி பார்ப்பதை உணர்ந்த ஹரி, “சாரி ...சாரி... அவனை ஹிட்லர்னு சொன்னதும் சிரிப்பு வந்திடுச்சு... நீ சொன்னது சரி தான் விக்கி... அவன் உங்களை பத்தி நல்லவிதமா சொல்லலை தான். ஆனா அவன் முதல் முதலா உங்களை பத்தி தான் என்கிட்ட பேசியிருக்கான்... நீங்க அந்த அளவுக்கு அவனை டிஸ்டர்ப் பண்ணியிருக்கிங்க...” என்றான் உண்மையாக.

“யாரு நாங்களா டிஸ்டர்ப் பண்றோம்???? அவர் தான் என் அக்காவை டிஸ்டர்ப் பண்றார்.... ஏங்க அவர் இப்படி இருக்கார்???... எப்பவும் சிடுசிடுன்னு...”. வினுவின் கலங்கிய முகத்தை கண்டதால் விக்கி ஆதங்கமாக திருவை பற்றி கேட்க.... ஹரியின் முகமோ சுருங்கியது....

“அவன் அனுபவிச்ச வலி அப்படி விக்கி... சின்ன வயசுல இருந்து நாங்க ஒண்ணா தான் வளர்ந்தோம். ஆனா இன்னைக்கு என்னைக்கூட நம்பாம விலகியே இருக்கான்...” திருவை நினைத்து ஹரி பெருமூச்சு ஒன்றை விட... வினு ஹரியின் முகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்...

“அவர் எப்படியும் இருக்கட்டும். அவரோட மனைவி எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க... நாங்க அவங்களை பார்க்கணும்....” திருவின் மனைவியை சந்தித்தால் நிச்சயம் வினு மாறி விடுவாள் என்ற நம்பிக்கையில் மற்றவற்றை விடுத்து விக்கி கேட்க... ஹரியோ மீண்டும் சிரித்தான்...

“ஹா.... ஹா... மனைவியா???? அப்படி யாரும் திருக்கூட இல்லை...”

“ஏன் எங்க போய்ட்டாங்க???? விட்டுட்டு போய்ட்டாங்களா???” விக்கி குறைபட வினு அவனை அதட்டினாள்... “என்ன பேசுற விக்கி?,”

“நீ சும்மா இரு. எனக்கு உன் லைஃப் தான் முக்கியம்....” வினுவை அடக்கியவன் ஹரியை நோக்கி திரும்ப, அவன் இருவரையும் நெகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்....

“நீங்க சொல்லுங்க ஹரி... ஹிட்லரோட வைஃப் எங்க இருக்காங்க???”

“திருவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா அதுவும் எனக்கு தெரியாம????” ஒற்றை விரலை கன்னத்தில் தட்டி ஹரி யோசிக்க..... அவன் பாவனையே திருவிற்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதை வினுவிற்கு உணர்த்திவிட... அவள் முகம் சட்டென்று மின்னியது சந்தோஷத்தில்,….
Nala apdye nan shock akiten ????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top