• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mr.Perfect-Mrs.Faulty-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
அந்த முரட்டுக் கரங்கள் இவளின் மென்மையான கையில் மெதுவாக மேலேறியது.அவனின் மூச்சுக் காற்று இவள் கன்னங்களில் சூடேற்றியது.இடையை சுற்றியிருந்த இன்னொரு கை அதை இறுக்கியது.மென்மையாக இவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் இவளின் பட்டு இதழ்களை தன் அழுத்தமான இதழ்களால் மூடினான்.

ட்ட்ட்ட்ட்ட்ட்ரிரிரிரிரிங்ங்ங்ங்......

என்ற சத்தத்தில் திடுக்கிட்டு கண் விழித்தாள் நியதி.கண்ட கனவின் தாக்கம் அவள் உடலெல்லாம் நடுங்கியது.

'சே...தூ....போயிம் போயிம் இவனோடவா அப்பேர்ப்பட்ட ரோமாண்டிக் கனவு... இந்த மாதிரி கெட்ட கனவு என் பத்தொன்பது வருஷ வாழ்க்கைல நா கண்டதே இல்ல...அம்மா அதுக்குத் தான் மனோ ஜபம் சொல்லிட்டு தூங்கனும்னு சொன்னாங்க...கேட்டனா...இல்லியே...அடே சே...uk uk...உன் டெரரர் மூச்சிக்கு என் கூட இப்படி ஒரு கனவா....தூங்குனதே ராத்திரி ஒரு மணிக்கு...இதுல சின்ன புள்ள இந்த மாதிரி கனவு வந்தா பயந்து தூக்கம் அம்பேல்...'என்று வேகமாக குளியலறையில் நுழைந்தவள் பிரெஷால் பல் மட்டுமல்லாது உதடுகளையும் பரபரவெனத் தேய்த்தாள்.அதுவும் போதாது போல் சோப்பினால் நான்கைந்து முறை தேய்த்தாள்.துணி சோப்பையும் விடவில்லை...அப்போது தான் சிறிது சமாதானம் ஆனது அவளுக்கு.

குளியலறையின் வெளியே வந்தவள் தன் பெரியப்பா சித்தப்பா அத்தை பெண்கள் மானாங்காணியாகப் படுத்திருப்பதையும் ஸ்ருதி அக்கா மட்டும் எழுந்து அமர்ந்திருப்பதையும் கண்டாள்.

"என்னடி நிதி! ஆச்சர்யம்...இவ்ளோ சீக்கிரம் எழுந்திருச்சிட்ட? உடம்புக்கு ஒண்ணுமில்லையே"

"சே சே... அதெல்லாம் ஒன்னும் இல்லைக்கா... பரிட்சைக்கு வச்ச அலாரம் சேன்ச் பண்ண மறந்திட்டேன்...நா போயி காப்பிக் குடிச்சிட்டு அப்புறம் வந்து தூங்குறேன்"என்றாள்.பின்னே கெட்டக் கனவால் பயந்து எழுந்தேன் என்றா சொல்ல முடியும்.

வேறு யாரும் எழுந்திரிக்க வில்லை.ராத்திரி ஒரு மணி வரை கார்ட்ஸ் கேரம் என விளையாடியவர்கள் அதன் மேல் தான் தூங்கினர்.அவர்கள் ஐந்தாறு பேர் ஏறக்குறைய ஒன்றிரெண்டு வயது வித்யாசத்தில் இருந்தனர்.இதில் ப்ளஸ் டூ படிக்கும் கடைக்குட்டி ஜெயாவைத் தவிர பாக்கி இருந்தவர்களுக்கு எல்லாம் ஒரு மாத லீவில் இருந்தனர்.வார லீவுக்கே லூட்டி அடிப்பவர்கள் ஒரு மாத லீவை விடுவார்களா?எப்போதுமே பெரியப்பா ஞானசேகரின் வீட்டில் தான் குடும்பம் முழுவதுமே கூடுவர்.அதிலும் கிராமத்தில் தன் சின்ன மகனோடு இருக்கும் பாட்டி மரகதவல்லியைப் பார்ப்பதற்காக குடும்பத்தவர் அனைவருமே நாளை கிராமத்திற்கு செல்வதாக முடிவாகியிருந்ததால் முக்கால்வாசி பேர் நேற்றே அங்கே குழுமி விட்டனர்.

தாங்க முடியாமல் வரும் தூக்கத்தை கொட்டாவி விட்டு விரட்டியபடி கீழே இறங்கி வந்த நியதி நேராக கிச்சனுக்குச் சென்று அங்கே தன் மூத்த இரு ஓரகத்திக்களோடு சமையலையறையில் இருந்த தன் தாய் சந்தியாவிடம்

"ம்மா.... ஸ்ட்ராங்கா ஒரு கப் காப்பி கொடுங்க"எனவும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் அவர்.ஏனெனில் நியதி காலை ஐந்திரை மணிக்கு எழுந்ததாக சரித்திரம் பூகோளம் எதுவுமே இல்லை.எப்போதுமே பத்து மணி காலேஜுக்கு எட்டு மணிக்குத் தான் எழுவாள்.அதன் பின் அன்னையை விரட்டி கத்தி வேகவேகமாக ஸ்கூட்டியில் பறந்தாலும் ஒவ்வொரு முறை கல்லூரித் தொடங்கி இருக்கும்.லீவு நாட்களிலோ இன்னும் மோசம்...பத்து மணியோ பதினொன்றோ...இன்று திடிரென இத்தனை சீக்கிரம் அவள் குரல் கேட்டதும் அவர் திடுக்கிட்டதில் வியப்பில்லை.

"என்னடி இது அதிசயம்...இவ்ளோ சீக்கிரம் எழுந்திரிச்சிட்டே?!!!"

"என்னமோ எந்திரிச்சிட்டேன்...விடுங்களேன்"என்றாள் கடுப்பாக...வேறு என்ன சொல்வது...பாழாய்போன தன் கனவையா கூற முடியும்.

"சரி...சரி...இந்தா....உனக்கு இது தம்பிக்கு ஹால்ல இருக்கான் அவனுக்கு குடுத்துடு"

எந்த தம்பி என்று எண்ணியவாறு சென்றவள் அங்கே ஒருவரையும் காணாமல் இன்னொரு கப்பிலிருந்த காப்பியை தன்னதில் ஊற்றிக் கொண்டு பெரியப்பாவின் ரேடியோவில் எஃப் எம்மில் பாட விட்டாள்.பழைய ரேடியோவாக இருந்தாலும் பெரியப்பாவின் கவனிப்பில் அது இத்தனை ஆண்டுகளாகியும் நன்றாக ஓடியது.

ரேடியோவை உயிர்ப்பித்தவள் நேராக சென்று அங்கிருந்த சிறிய டீ டேபிளில் இருபுறமும் காலைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள்.கையில் அள்ளிக் கொண்டு வந்திருந்த பிஸ்கேட்டைத் திண்பதும் காப்பியை ஒரு வாய்க் குடிப்பதும் என காலை ஆட்டிக் கொண்டிருந்தாள்.எஃப் எம்மில் 'அடுத்து தேவ் பட பாடல்' எனவும்

'யூ ஆர் மை கேர்ள்'என ஆரம்பிக்கவும்

"சூப்பர்ர்ர்ர்...."எனக் கத்திய நியதி வாயில் இரு விரல்களை வைத்து நீளமாக விசில் அடித்தாள்.

"ஹீரோ! உங்கள யாரும் பீட் பண்ண முடியாது....."என்றவள் பாடலோடு சத்தமாகப் பாடியவள் கையில் ஒட்டியிருந்த பிஸ்கெட் பொடியை தன் பேண்ட்டில் துடைத்துக் கொண்டு மீதி இருந்த காபியும் குடித்தாள்.

பாடல் பாதி மட்டுமே ஆகியிருந்த போது திடிரென நின்றுவிட்டது...'என்ன கரெண்ட் போயிடிச்சா'என்று மெயின் சுவிட்சைப் பார்த்தவள் அது எறிந்துக் கொண்டிருக்கவும் ஏதோ உணர்வில் மெதுவாகத் திரும்பிப் பார்த்தால் அங்கே இவளைக் கோபமாக முறைத்தபடி ரேடியோ அருகே நின்றிருந்தான் சமர்த்.

காலைக் கனவின் தாக்கமும் இப்போது அவன் முறைப்பும் சேர்ந்து வேகமாக எழ முயன்றவள் கால் தட்டி டேபிளோடு சேர்ந்து பொத்தென விழுந்தாள்.

அப்போதுதான் ஹாலுக்குள் நுழைந்த சித்தப்பா கேசவனின் மகன் அஸ்வின், சமையலறையிலிருந்து வெளியே வந்த சந்தியா, மாடியிலிருந்து வந்த சமர்த் தங்கை வித்யா என அனைவரும் இவளைத் தூக்குவதற்காக அருகில் வந்தனர்.அருகில் வரும்போதே அஸ்வினும் வித்யாவும் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே வந்தனர்.அவர்கள் சிரிப்பால் கோபமுற்ற நியதி அவர்கள் கைகளைப் பிடிக்காமல் தானே எழுந்து நின்றாள்.காத்திருந்தால் போல அர்ச்சனையை ஆரம்பித்தான் சமர்த்.. நியதியின் அத்தை பெற்ற சீமந்த புத்திரன்.

"கொஞ்சம் கூட டீசென்சியே இல்ல...இப்பிடி தான் நடு ஹால்ல டேபிள் மேல உட்காந்திட்டு சத்தமா பாட்டு கேப்பாங்களா!பாரு தின்ன கையை கூட பேண்ட்ல தடவியிருக்க... கொஞ்சம் கூட வயசுக்கு தகுந்த புத்தியில்ல....கழக் கூத்தாடி மாறி இது என்ன டிரெஸ்ஸு?"

"நீ விடு சமர்த் இவளுக்கு எத்தன சொன்னாலும் அவ்வளவுதான்....எரும மாட்டு மேல எண்ணெய் மழை பேஞ்சது போல போய்கிட்டே இருப்பா....ஏய் போயி முதல்ல குளிச்சு நல்ல ட்ரெஸ்ஸா போட்டு வா...போ...போ...அவனை என்ன முறைக்கிற நல்லது சொன்னாப் பிடிக்காதே...போ...போ"
என அவர் பங்குக்கு திட்டினார் சந்தியா.


'இவன் ஜாக்கிங் போயிட்டான்னு நெனைச்சு மாட்டிக்கிட்டேனே...டேய் uk என்னையா திட்றே!ஒரு நாள் இருக்குடா உனக்கு...."என்று கோபத்தில் கொந்தளித்தவளாக மாடிக்குச் சென்றுவிட்டாள்.

சமர்த் நியதி இருவருமே சிறுவயதிலிருந்தே இப்படித்தான்.சமர்த்திற்கு எந்த ஒரு விஷயத்திலும் பெர்ஃபக்ஷன் வேண்டும்.அவன் அறை ஆகட்டும் அவன் பொருட்களாகட்டும் கரெக்டாக வைத்துக் கொள்வான்.வீட்டிலும் எந்த பொருளும் அதனதன் இடத்தில் இருக்க வேண்டும்.சிறிது சரியில்லாவிட்டாலும் வேலையாட்களுக்கு மண்டகப்படி தான்.அவன் குணத்தை பெரியவர்கள் பாராட்டினாலும் சிறியவர்கள் அவனிடம் பயந்து பயந்தே இருந்தனர்.ஆனால் கட்டுப்பாடு ரகளை ஒன்றைத் தவிர வேறு எல்லாவற்றிலும் சமர்த் நல்லவனே.குடும்பம் நண்பர்கள் என்றால் உயிரையும் விடுவான்.

ஆனால் நியதியோ சிறு சிறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாள்.எப்படி செய்தால் என்ன வேலை சரியாக முடிந்தால் சரி என்பவள்.வாழ்வை ரசித்து வாழ வேண்டுமே தவிர கட்டுப்பாடு சட்டத் திட்டம் என அதில் முழுகி வாழ்வின் இனிமையைக் கெடுத்துக் கொள்ள கூடாது என்பது அவள் எண்ணம்.ஆனால் அவள் குணம் எவ்வளவு ஆலட்சியமாகத்‌ தோன்றினாலும் குடும்பம் என்றால் முதலில் வந்து நிற்பது நியதி தான்.வெளியேயும் யார் கஷ்டத்தில் இருந்தாலும் ஓடி சென்று உதவுவாள்.அவர் யார் என்ன ஏது எதுவுமில்லை.இவள் செய்த உதவிக்கு நன்றியைக் கூட மறுத்து விடுவாள்.

ஆனால் சமர்த்திடம் மட்டும் இந்த மென்மையெல்லாம் காணாமல் போய்விடும்.குடும்பத்தவர்கள் விரும்பியோ அவனிடம் பயந்தோ செய்யும் போது நியதி மட்டும் முடியாது நீ யார் கேட்பது என எதிர்த்துப் பேசுவாள்.சிறு சிறு விஷயத்திற்கும் போர்க் கொடித் தூக்குவாள்.இதனால் இருவருக்கும் எப்போதுமே வாக்குவாதம் தான்.ஒரு அரைமணி நேரம் கூட இருவராலும் ஒரே இடத்தில் சண்டையிடாமல் அமைதியாக இருக்கவே முடியாது.

சமர்த்தின் தாய் லலிதா நியதிக்கும் சந்தியா சமர்த்துக்கும் ஆதரவாக பேசி சமாதானம் செய்து விடுவர்.இளைஞர் பட்டாளத்துக்கோ இந்த சண்டைகளை வேடிக்கை பார்ப்பது மொபைல் பார்ப்பதை விட சுவாரஸ்யமானது.

இவ்வளவு தீவிரமான இவர்கள் சண்டை எப்போது தான் தீருமோ?நியதியின் கனவு இவர்கள் வாழ்வில் மாற்றம் வரும் முன்னறிவிப்பா?

Superb start nice update
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top