• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mr.Perfect-Mrs.Faulty-11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
வாவ்! இன்ப அதிர்ச்சி....
பிரணதி தான் சமர்த்தின் நியதியா?
இந்த சந்தோஷம் நிலைக்குமா?
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
வாவ்! இன்ப அதிர்ச்சி....
பிரணதி தான் சமர்த்தின் நியதியா?
இந்த சந்தோஷம் நிலைக்குமா?
???
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
உணர்வு பூர்வமான பதிவு சகோ
????
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
டார்ஜிலிங்கை நெருங்கிக் கொண்டிருந்தது அந்த கார்.சுழித்தோடும் நதியும் தூரத்தில் பனி உறைந்த சிகரங்களும் அவள் மனதைத் தாலாட்டியது.இயற்கை அவள் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட விந்தை என்ன?!!


முகத்தில் குளிர் காற்று வீச வெளியே தெரிந்த இயற்கையில் தன்னைத் தொலைந்திருந்தவளை,


"ப்ரணதி! என்ன யோசனை?"என்றான் அவள் அருகில் அமர்ந்திருந்த இளைஞன்.


அவள் கேள்வியில் லேசாக விரிந்த புன்னகையோடு,


"இல்ல வினு! இந்த அழகான ஊர விட்டு ஒரு மாசம் எப்படி கொல்கத்தாவுல இருந்தேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு"


"ஏன் கொல்கத்தாவுக்கு என்ன?சூப்பரான சிட்டி....பழசும் புதுசும் சேர்ந்த அழகான ஊரு...எங்கே திரும்பினாலும் சுத்தி வர ட்ராம் வண்டி,தேவைப்பட்டத வாங்க பஜார்கள்,பார்த்து ரசிக்க சினிமா தியேட்டர்ஸ்ன்னு ஜாலியான ஊராச்சே!"என்றான் வினு என்ற வினோத் அவளைப் பற்றி தெரிந்தே.


அவன் வர்ணனையில் அவனைத் திரும்பி முறைத்த ப்ரணதியைப் பார்த்து சிரித்தான்.


"எத்தனை இருந்தாலும் இந்த சூழல்ல கிடைக்கற நிம்மதி கோடி பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் அங்கே கிடைக்காது..."என்றாள் உணர்ச்சியோடு.


"ஓகே! ஓகே! டேக் இட் ஈசி மை டியர் சிஸ்டர்....!இதோ வீடு வந்திடுச்சு"என்றான்.


உண்மையாகவே அவர்களின் வீடு சுற்றிலும் டீ தோட்டத்தின் மத்தியில் கம்பீரமாக எதிரே தெரிந்தது.பிரிட்டீஷ் ஆட்சியில் கட்டப்பட்ட அந்த வீட்டை தன் சொந்த ஊரான மதுரையை விட்டு சிறு வயதிலேயே டார்ஜிலிங் வந்து செட்டிலான வினோத்தின் தந்தை மகேந்திரன் வாங்கி சிற்சில மாற்றங்களை செய்து பராமரித்து வந்தார்.சுற்றிலும் இருந்த டீ தோட்டமும் டவுன் அருகே இருந்த ரிசார்ட்டும் கொல்கத்தாவில் இருந்த பிஸ்னஸும் அவர்கள் சொத்து.


கொல்கத்தாவில் இருந்த பிஸ்னஸ் விஷயமாகவே ப்ரணதி அங்கே சென்று ஒரு மாதம் இருந்து இப்போது தான் ஊர் திரும்பியிருந்தாள்.வேலையாட்கள் சாமான்களை உள்ளே எடுத்துச் செல்ல அண்ணனோடு பேசியபடி உள்ளே சென்றாள்.


"இவங்க ரெண்டு செட்டும் நேத்திக்கே வந்திட்டாங்க...என் பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் நைட் வராங்க...நீ போயி இப்போ ரெஸ்ட் எடு... நாளைக்கு எல்லாரையும் இன்ட்ரோட்யூஸ் செஞ்சுக்கலாம்"


"ம்...இவ்னிங் இப்ப இருக்கறவங்கள பாக்கறேன்...ஐல் டேக் கேர் ஆஃப் எவிரி திங்...யூ டோண்ட் வொரி"என்றவள் மேலே இருந்த தன் அறைக்கு சென்று விட்டாள்.


கோடை விடுமுறைக்கு எப்போதுமே அவர்கள் வீடு உறவினர் நண்பர்களால் நிரம்பி இருக்கும்.அவர்களை உபசரித்து கவனித்துக் கொள்வது ப்ரணதியின் பொறுப்பு.அவளும் ஆர்வமுடன் வந்தவர்களை எந்த குறையும் இல்லாது அவர்கள் ஊர் திரும்பும் வரை கவனிப்பாள்.


இந்த முறை அவ்வளவு விருந்தினர் இல்லை.இரண்டு திருமணமான ஜோடிகளும் வினோத்தின் வயதை ஒத்த அவனின் இரு நண்பர்கள் என ஆறு பேர்கள் மட்டுமே.


குளித்து காலை உணவை தன் அறையிலேயே முடித்த ப்ரணதி படுத்து உறங்கி விட்டாள்.ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவளை சமையல்காரம்மா மீனாட்சி மதிய உணவிற்கு எழுப்பினார்.லேசாக ஒருக்களித்து படுத்த ப்ரணதியிடம்


"ப்ரணதிம்மா!ஐயா நீங்க சாப்பிட்டவுடனே அவங்க ரூமுக்கு வர சொன்னாங்க..."என்று அவர் கூறியதும் விடுக்கென்று எழுந்தமர்ந்த ப்ரணதி முகம் கழுவி உணவுண்டு மகேந்திரனின் அறையை அடைந்து புத்தகத்தில் ஆழ்ந்திருந்த அவர் தோளை லேசாகத் தொட்டாள்.புத்தகத்திலிருந்து தலை நிமிர்த்திய மகேந்திரன் மலர்ந்த புன்னகையோடு,


"ப்ரணதி!எப்படிடா இருக்கே?என்னடா இப்படி இளைச்சு போயிட்டே?சரியா சாப்பிட்றது இல்லியா?"


"உங்களுக்கு அப்படி தான் தெரியும்...நா நல்லா சாப்பிட்டு ரெண்டு கிலோ ஜாஸ்தியாகி வந்திருக்கேனாக்கும்.... நீங்க தான் சரியா சாப்பிடாம லாஸாகி இருக்கீங்க...இந்த வினு தடியன் தான் மட்டும் நல்லா திண்ணு கொழுத்து போயிருக்கான்...உங்கள சரியா பாத்துக்கவேயில்ல"என்றாள்.


"அப்படியெல்லாம் இல்லடா! உனக்கு பயந்து அவன் என்ன நல்லாத்தான் பாத்துக்கிட்டான்... எனக்கும் வயசாகலையா...இன்னிக்கோ நாளைக்கோ..."


சென்ற வருடம் மகேந்திரனுக்கு இரண்டு முறை ஹார்ட் அட்டாக் ஆகியிருந்தது.. இன்னுமொரு முறை வந்தால் அவர் உயிருக்கே ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.அதனால் அவர் முடிந்தவரை தன் அறையில் ஓய்வாகவே இருந்தார்.தனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் தன் மக்களின் கதி என்ன என்று சதா கவலையிலேயே இருந்தார்.இப்போதெல்லாம் அவர் பேச்சில் அது அவ்வப்போது வெளிப்பட்டது.


"அப்பா......அப்பிடியெல்லாம் பேசக் கூடாதுன்னு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்... எனக்கும் வினுக்கும் உங்கள விட்டா யார் இருக்காங்க....நீங்க இனிமே இதுமாதிரி பேசினா உங்க கூட நா பேசவே மாட்டேன்..."என்றாள் கண்ணீர் மல்க.


"பாப்பா!கோவிச்சுக்காதடா!நா இனிமே அப்படியெல்லாம் பேசவே மாட்டேன்...நீ கண்ணைத் துடை முதல்ல..."


"ம்....சரி.... நீங்க சாப்பிட்டாச்சா? டேப்லெட் போட்டிங்களா?"


"எல்லா ஆச்சு....கெஸ்ட் எல்லாரும் வந்தாச்சா?"


"இல்ல... இன்னும் இரண்டு பேரு ...வினுவோட பிரெண்ட்ஸ்... ராத்திரி வராங்களாம்...நா இப்ப வந்தவங்கள பாத்திட்டு வரேன்... நீங்க ரெஸ்ட் எடுங்க..."


வந்த கெஸ்ட்களில் ஒரு ஜோடியான உமா மற்றும் ஜெகன் நல்லவிதமாக பழகினர்.ஆனால் இன்னொரு ஜோடியில் மனைவி சீமா மிகவும் அலட்டல் அவள் கணவன் கிரிஷ் அவளுக்கு மேல் அலட்டினான்.அவர்களிடம் அதிகம் ஒட்டாமல் உமா ஜெகனோடு சகஜமாக பழகினாள் ப்ரணதி.
Hlo sis ena puriyatha puthirave iruke ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top