• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mr.Perfect-Mrs.Faulty-13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
இரவு வீட்டின் முன்னே விறகுகளை குவித்து நெருப்பு மூட்டி அனைவரும் அதை சுற்றி அமர்ந்தனர்.நெருப்பின் ஒளியில் பொற்பாவையாக ஜொலித்த தன் ஆரணங்கை கண்கொட்டாமல் பார்த்திருந்தான் சமர்த்.உமாவோடு ஏதோ பேசி சிரித்தபடி திரும்பிய ப்ரணதி அவனின் கிறங்கியப் பார்வையில் தடுமாறிப் போனாள்.


"ஹேய் ஒரே போரிங்...யாராவது பாடுங்க...இந்த சமயத்துக்கு சூப்பரா இருக்கும்..."என்றான் வினோத்.


"நம்ப மச்சான் சூப்பரா பாடுவான்...சமர்த் ஒரு ப்யூடிஃபுல் சாங்க எடுத்துவிடு...கேங்கறவங்க அப்படியே மயங்கிப் போயிடனும்"


ஏதோ உள்ளே சென்று எடுத்து வர காலெடுத்து வைத்த ப்ரணதி சமர்த்தின் உயிர் உருகும் குரலில் தன்னை மறந்து சிலையாக நின்று விட்டாள்.


தண்டோரா
கண்ணால நித்தமும்
படிச்ச ஆராரோ முண்டாசா
என் வாழ்வ கட்டிட வரும்
நீ பூந்தேரோ



எத்தனை மொற
நான் பாத்தாலும் பத்தல
என பேசும் வாயி சக்கரை
மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சே
பாயி உள்ளந்துடிக்குதே
உள்ளத வந்து ஆராயி



தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசா என் வாழ்வ
கட்டிட வரும் நீ
பூந்தேரோ ஓ



பொட்டு வெச்ச
பொண்ணு சுத்தி அடிக்குது
கொட்ட முத்து கண்ணு
வட்டம் கட்டி நின்னு கும்மி
அடிக்குது சொல்லு ரெண்டில்
ஒன்னு



கிழக்கால தானே
வரும் சூரியன் என நானும்
கூட நினைச்சேன் எகத்தாளம்
பேசும் மகராசி உன் முகம்
பார்க்க தூங்கி முழிச்சேன்
என்னவோ போடி உன்னையே
தாடி ரெக்க முளைக்குதடி
நெஞ்சு பறக்குதடி



தண்டோரா
கண்ணால நித்தமும்
படிச்ச ஆராரோ முண்டாசா
என் வாழ்வ கட்டிட வரும்
நீ பூந்தேரோ



செங்க கல்லும்
உன்ன கண்ட நொடியில
தங்க கல்லா மின்ன
ரொட்டி துண்டா என்ன
கன்ன குழியில மென்னு
நல்ல தின்ன



புலி மேல பாய
துணிஞ்சாலுமே மெரளாத
ஆள கவுத்த சிரிப்பால
ஏன்டி மயில் தோகைய
ஒயர் கூடையாட்டம்
இழுத்த



வள்ளலா வாடி
அள்ளியே போடி வண்டி
நொடிக்குதடி நொண்டி
அடிக்குதடி



ஹோவென்று கைத்தட்டி எல்லோரும் அவன் பாட்டைப் புகழ்ந்தனர்.


இரவு படுக்கையில் தலைசாய்த்த ப்ரணதியின் காதுகளில் அவன் பாடலே ஒலித்து இம்சித்தது.எவ்வளவு முயன்றும் தூக்கம் கண்களை தழுவ மறுத்தது.


மறுநாள் எஸ்டேட்டில் இருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் இருந்த குகை கோயில் ஒன்றுக்கு செல்வதாக முடிவாகியது.அங்கே சூரியாஸ்தமனமும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.ப்ரணதிக்கு அந்த இடம் மிகவும் பிடித்தமான ஒன்று.ஆனால் அன்று செல்ல மட்டும் ஏதோ தயக்கம்.அவன் பார்வை தன்னை நிலையிழக்கச் செய்வது அவளுக்கு நன்றாகப் புரிந்தது.வரவில்லை என்ற அவள் மறுப்பை நிராகரித்து விட்டான்‌ வினோத்.


இரண்டு மணி அளவில் டாடா சுமோ ஒன்றில் கிளம்பினர். ஏதேச்சையாக ப்ரணதி திரும்பிய போதெல்லாம் அந்த சமர்த்தின் பார்வை இவள் மீதே இருந்ததைக் கண்டு லேசாக சிவந்தது அவள் முகம்.


சிறிய குன்றின் மேல் இருந்தது அந்த குகைக் கோயில்.வேண்டும் வரமருளும் துர்க்கை அம்மன் ஒரு ஆள் நுழைந்து செல்லும் குகை உள்ளே சிறிய உருவமாகக் காட்சியளித்தாள்.


ஒருவர் பின்னே ஒருவர் உள்ளே நுழைந்தனர்.தரிசனம் முடிந்து எல்லோரும் சென்ற பின் எப்போதும் போல மேலே கட்டியிருந்த மணியை அடிக்க விரும்பினாள் ப்ரணதி.அந்த மணியை அடித்து அம்மனை வேண்டினால் அவர்கள் எண்ணியக் கோரிக்கை நிறைவேறும் என்பது அங்கிருந்தோர் நம்பிக்கை.ஆனால் உயரம் அதிகமானதால் இதுவரை அவளால் அதை அடிக்க முடியவில்லை.இன்று எப்படியாவது அடித்து விட வேண்டுமென மேலே எழும்பி எழும்பி குதித்தப் போது இரண்டு வலிய கரங்கள் அவள் இடையைச் சுற்றி இறுக்கி அவளை மேலேத் தூக்கிவிட்டது.திடுக்கிட்டாலும் தன்னை தூக்கியது சமர்த் என்பதை உணர்ந்தாள்.


இப்போது கைக்கருகில் இருந்த மணியை மும்முறை அடித்து துணையிருக்குமாறு அன்னையை வேண்டினாள்.அவள் சிற்றிடையில் அழுத்திய அவன் முகம் ஏதேதோ உணர்வை அவள் உள்ளே பொங்கச் செய்தது.


அவனாலும் இதயத்தை உரசும் அந்த உணர்வை இனி தாங்காது என அவளை பொத்தென கீழிறக்கினான்.சிவந்த முகத்தை அவன் பார்க்கும் முன் அங்கிருந்து விரைந்து விட்டாள் அவள்.


சுற்றிலும் பனிப் போர்த்திய மலைசிகரங்களை பொற்சிகரங்களாக செய்துக் கொண்டு கீழிறங்கினான் மாலை ஆதவன்.தன்னைப் போலவே நான்கடி தள்ளி அதை ரசிக்கும் சமர்த்தை ஓரக் கண்ணால் பார்த்து ரசித்தாள் ப்ரணதி.ஏதோ உணர்வில் சட்டென திரும்பி அவள் இருந்த இடத்தை பார்த்தவன் அவள் கண்கள் அவனையே ரசிப்பதைக் கண்டு ஒற்றைப் புருவத்தை உயர்த்தி என்ன என்றான்.


அவன் கண்டுவிட்டான் எனவும் உதட்டை கடித்தவள்‌ வேறுபுறம் திரும்பி நின்றுக் கொண்டாள்.முல்லை பூவை நிகர்த்த பற்களில் கடிப்பட்ட அந்த மாதுளம் இதழ்களை சுவைக்க தவித்தது அவன் மனம்.


அந்த இடத்தை விட்டு அவர்கள் கிளம்பிய போது இருட்டி விட்டது.ஒருவருக்கொருவர் கண் ஜாடைக் காட்டிக் கொண்ட ஆதித்யாவும் வினோத்தும் காரில் ப்ரணதி சமர்த் அருகில் அமரும்படி செய்துவிட்டனர்.


மேடும் பள்ளமும் இருந்த சிறிய வழியாதலால் வண்டி அப்படியும் இப்படியும் ஆடி அவளை அவன் மேல் சரித்தது.இருவரும் உரச உரச காதல் தீ பற்றி எறிந்தது இருவருள்ளும்.ஒரு பெரிய மேட்டில் கார் ஏறி இறங்கவும் சமர்த் மேல் முழுமையாக சாய்ந்த ப்ரணதியின் இதழ்கள் அவன் கன்னத்தில் சத்தமில்லா ஒரு முத்தத்தைக் கொடுத்திருந்தது.அதில் இருவருமே மின்சாரம் தாக்கியவர்கள் போலாயினர்.சமர்த்தின் கைகள் மெதுவாக அவளின் இடையைப் பற்றி அழுத்தியது.காரில் வெளி விளக்கு மாத்திரம் எறிந்ததால் அவர்களின் இந்த காதல் நாடகம் யாருக்கும் தெரியாமல் போனது.


வீடு வரும்வரை பிடித்த பிடியை விலக்கவேயில்லை அவன்.வீடு வந்து எல்லோரும் இறங்க காரின் உள் விளக்கை வினோத் போடவும் அவளை மனமேயில்லாமல் விடுவித்தான்.அதற்குள் செங்கொழுந்தாகி இருந்த ப்ரணதி மானென அங்கிருந்து ஓடி மறைந்தாள்.


தன் அறையை நோக்கி விரைந்தவளை மறைவிலிருந்து எதிர்ப்பட்ட சமர்த் இழுத்து சுவரில் சாய்த்தான்.அவளின் இருபுறமும் சுவரில் கைவைத்து அவளை சிறை செய்தான்.தன் மீன்விழிகளை பெரிதாக விரித்து அவனை பார்த்தாள் அவனின் மனைவி.அவள் முகத்தில் விழுந்த ஒற்றை கூந்தல் கற்றையை அவள் காதின் பின்னே தள்ளியவன் அவனின் மூச்சுக் காற்று அவள் முகத்தில் வீச நெருங்கி நின்றவன்


"எத வாங்கினாலும் அத கரெக்டா திருப்பிக் கொடுக்கறது என் பழக்கம்...ஸோ கார்ல கொடுத்த கிஸ்ஸ திருப்பி வாங்கிக்க"என்றவன் அவள் பட்டுக் கன்னத்தில் தன் உதடுகளை அழுத்தினான்.

Nice update
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top