• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mr.Perfect-Mrs.Faulty-14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
அந்த ரம்மியமான காலைப் பொழுதில் சமர்த்,ஆதித்யா,வினோத் மூவரும் ஆளரவமற்ற சாலையில் ஜாகிங் செய்துக் கொண்டிருந்தனர்.அவ்வப்போது ஆதியும் வினுவும் ஜாடைக் காட்டிக் கொண்டு சிரிப்பதை சகித்த சமர்த் சிரிப்பு அதிகமாகவே,


"டேய் என்னாங்கடா.... நானும் அப்போலேந்து பாக்கறேன்...ஏதோ ஜாடைக் காட்டி சிரிங்கறீங்க? என்ன விஷயம்?"


"எல்லாந் நம்ம தலயோட காதல் லீலைகளை பத்தி தான்...வேற என்ன!அது தான் இப்ப ஹாட் ந்யூஸ்...நாங்களாலாம் அதே கார்ல வரோம்னு கொஞ்சமாச்சும் யோசனை பண்ணீங்களா?"என்று சிரித்தான் ஆதி.


"அதானே?!ஏன் மாப்பி!ஒரு கன்னி பையனை வச்சுக்கிட்டு இப்படி பண்ணி அவன் மனச கலைக்கறீங்க...இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்"என்றான் வினு.


கண்கள் முறைத்தாலும் சிரித்தபடி அவர்களைப் பார்த்த சமர்த்,


"டேய் ரொம்ப ஓட்டாதீங்கடா!ஒரு சைவ கிஸ்ஸுக்கு இவ்ளோ பில்டப்பா?"


"பாவம் பக்கத்துல உக்காந்து வரட்டும்னு பாத்தா...சைவ கிஸ்ஸா?நாங்க யாரும் இல்லேன்னா அசைவமா மாறியிருக்குமா?"என்று அவனை வாரினான் வினு.


"க்கூம்...உங்க தொங்கச்சி அதுக்கெல்லாம் விட்ருவாளாக்கும்!"என்று நொடித்தான் சமர்த்.


முன்தின இரவு வாங்கியதை திருப்பியவன் மெல்ல கன்னத்தில் கொடுத்த முத்தத்தை இதழில் தொடர முயன்ற போது திடுக்கிட்ட ப்ரணதி அவனை தள்ளிவிட்டு ஓடி அவள் அறைக்குச் சென்று கதவை இறுக மூடி விட்டாள்.ஏமாற்றத்தில் ஒற்றைக் காலை நிலத்தில் உதைத்தவன் தன் அறைக்குச் சென்று விட்டான்.இப்போது அதைக் கூறி அவர்களின் கிண்டலை அதிகப்படுத்த விரும்பாமல் மவுனமானான் சமர்த்.


மூவரும் பேசியபடி கேட் உள்ளே நுழைந்தப் போது சமர்த்தின் முஷ்டி இறுகி முகம் கோபத்தில் சிவந்ததை கண்டு வினுவும் ஆதியும் அவன் கண் சென்ற திசையைக் கண்ட அவர்கள் கண்களும் சிவந்தது.அங்கே ரோஜா பாத்தியை கொத்திக் கொண்டிருந்தாள் ப்ரணதி.அவளுக்கு சிறிது தூரத்திலிருந்த மரத்தின் மறைவிலிருந்து கிரிஷ் அவள் அங்க அசைவுகளை கெட்ட கண்ணோடு பார்த்துக் கொண்டிருந்தான்.


"சே...இவன் இப்படிப்பட்டவனா?!!பிரண்டுன்னு நெனைச்சு வீட்டுக்கு கூப்பிட்டா இவன் என் தங்கையே டாவடிக்கறானா!இவன...."என்று அவனை அடித்து நொறுக்கும் கோபத்தோடு கிளம்பிய வினுவை கைப்பிடித்துத் தடுத்த சமர்த்,


"வினு!கோபப்படாதே...இப்போ போயி அவனை கேட்டேன்னு வை...ஐயோ! எனக்கு ஒண்ணுமே தெரியாதே!என் எதிர்ல இருந்தது பொண்ணான்னு பச்சபுள்ள மாதிரி கத திரிப்பான்...என் பொண்டாட்டிய பாத்த கண்ண நா நோண்டறேன்...சமயம் வரட்டும்...."என்று அவனை அடக்கினான்.


"இருந்தாலும் மாப்பி!இவன இப்படியே விட்றதா?!"


"உன்னை விட எனக்கு நூறு மடங்கு கோபம் வருது மச்சான்!ஆனா இந்த மாதிரி பொறுக்கிங்கள ரெட் ஹாண்டா புடிக்கனும்....இப்ப சும்மா இரு...நா அவன் மேல கண்ண வைக்கிறேன்...நியதிக்கு எந்த பிராப்ளமும் ஆகாது...இப்ப அவனை அந்த இடத்த விட்ட கூட்டிட்டு போங்க..."


சரியென அப்போதுதான் வந்தவரைப் போல கிரிஷ் அருகில் சென்று ஏதோ பேச்சுக் கொடுத்து அவனை அப்பால் அழைத்துச் சென்றனர் ஆதியும் வினுவும்.


புது வகையான ரோஜா செடி ஒன்றை தோட்டக்காரன் கொண்டு வந்து கொடுத்ததை தன் கையாலையே நட்டுக் கொண்டிருந்த ப்ரணதி தன் பின்னே


"குட்மார்னிங்...!"


என்ற சமர்த்தின் குரலில் திடுக்கிட்டு அந்த சிமிண்ட் தரையிலேயே பொத்தென விழுந்து விட்டாள்.முன்னொரு நாள் தான் திட்டியதும் நியதி பொத்தென டேபிளோடு விழுந்ததும் நினைவிற்கு வந்து அன்றைக்கு வராத சிரிப்பு இன்று அவனையும் மீறி வெளிவந்து விட்டது.


"ஹாஹாஹா...வினு என்னமோ என் தங்கை வீர தீர பராக்கிரமின்னு பீத்திக்கரான்...ஹாஹா...நீ என்னடான்னா ஒரு குட்மார்னிங்க்கு பயந்து இப்படி விழற... ஹாஹாஹா..."


உடையில் ஒட்டிய மண்ணைத் தட்டியவாறே எழுந்து நின்ற ப்ரணதி


"திடிர்னு பின்னாடி வந்து குட்மார்னிங் சொன்னா...பயப்படாம என்ன செய்யறதாம்"


என்று தன்னிலை விளக்கியவள் மறந்தும் அவன் முகம் பார்க்கவில்லை.நேற்றைய நினைவில் இப்போதும் அவள் கன்னங்கள் செம்மை நிறம் கொண்டன.அந்த ஆப்பிள் கன்னங்களை சுவைத்துப் பார்க்க மனம் துடித்தாலும் அவளை ரொம்பவும் மிரட்ட விரும்பாமல் கண்களுக்கு மட்டும் அவளை திகட்ட திகட்ட பார்க்க அனுமதித்தான்.


ஆனால் அவன் கண்களே அவளை மயக்க போதுமான அஸ்திரம் என்பதை அவன் அறியவில்லை.அவன் ஒரு பார்வையில் அவள் சூரியன் கண்ட பனிப் போல் உருகுவதை எண்ணித் திகைத்தது அவள் மனம்.


தலையை அசைத்து அந்த பிரமையிலிருந்து வெளி வந்தவள் அங்கிருந்த ஹோஸ் பைப்பில் வரும் நீரால் தன் கால் கைகளை கழுவிக் கொண்டாள்.அவள் பைப்பை கீழே இடுமுன் அதை கையில் வாங்கிய சமர்த் அதில் வந்த நீரை அவளறியாமல் கன்னத்தில் அப்பிக் கொண்ட மண்ணை மெதுவாக தன் கைகளால் கழுவினான்.


அவன் தீண்டல் அவளுள் குழப்பத்தை விளைவித்தது.அது கண்டதும் காதல் கொண்ட காதலனின் தயக்கமான தீண்டல் இல்லை. இவள் எனக்கே உரியவள் என்ற உரிமையான தீண்டலாக இருந்தது.அவள் சுருங்கிய புருவம் அவள் குழப்பத்தை தெளிவாக்கவே சட்டென தன் கைகளை எடுத்து விட்டான் சமர்த்.


காலை சிற்றுண்டிக்கு டைனிங் டேபிள் நிரம்பி இருந்தது.அவள் இடம் அதுதான் என்பது போல் சமர்த் அருகே ஒரே ஒரு காலி இடம் அவளுக்காக காத்திருந்தது.அவனின் சீண்டல் பார்வையில் நனைந்தபடி உணவுண்டவளுக்கு திடிரென தன் காலை உரசிய கடினமான காலை உணர்ந்து திடுக்கிட்டாள்.அது சமர்த் அல்ல என்பது அவளுக்கு தெளிவான ஒன்று.அவன் அணுகுமுறை நேரடியானது.இது போல சின்னத்தனம் அவனுக்கு இல்லை என்பதில் எள்ளளவும் அவளுக்கு ஐயமில்லை.


உணவுண்ணாமல் ப்ரணதி ஒரு மாதிரியாக இருக்கவும் கண்களாலேயே என்ன என்று கேட்டான் சமர்த்.அதற்கு யாருமறியாமல் கண்களால் தன் கால்களை சுட்டிக் காட்டினாள்.அவள் ஜாடையும் அவளுக்கு நேரெதிரே அமர்ந்திருந்த கிரிஷின் அசட்டு புன்னகையும் அவனே ஏதோ செய்திருக்கிறான் என்பதை நொடியில் கண்டுக் கொண்டான் அவளின் கணவன்.


மறுமுறை அவனின் கேடுக்கெட்ட வேலையை அவன் தொடரும் முன் ப்ரணதியின் கால்கள் மேல் தன் காலை நன்றாக மறைக்கும் படி வைத்துக் கொண்டு விட்டான் சமர்த்.அவள் ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றதும் மீண்டும் தன் கால்களை டேபிள் கீழே விட்ட கிரிஷ் ஒரு நிமிடத்தில்


"ஐயோயோயோ...!"என்று அலறியபடி எழுந்து நின்றான்.ப்ரணதிக்காக நீட்டிய அவன் காலை தன் திண்மையான காலால் பதம் பார்த்திருந்தான் சமர்த்.


கிரிஷின் அலறலில் அங்கிருந்தோர் தம் நாற்காலியை விட்டு எழுந்து என்ன என்ன என்று அவனை விசாரித்தனர்.திருடனுக்கு தேள் கொட்டினால் கத்த முடியுமா..! கதற முடியுமா...!அந்த கேடுக் கெட்டவனும்


"இல்ல...இல்ல... ஒண்ணுமில்ல...அது கால்ல எறும்பு கடிச்சிடுச்சு...அது தான் வேற ஒண்ணுமில்ல... நீங்கள்லாம் டிபன் சாப்பிடுங்க....வினோத் இஃப் யூ டோண்ட் மைண்ட்... எனக்கு டிபன ரூமுக்கே அனுப்பறீங்களா?"என்றான் வலி தாளாமல்.


"ஷ்யூர்...கிரிஷ்... நீங்க போங்க...நா ரூமுக்கே அனுப்பறேன்"என்றான் வினோத்.


போகும் முன் சமர்த்தை வேண்டும் மட்டும் முறைத்து விட்டே சென்றான் அவன்.சிறிதாவது அவனுக்கு வலிக்க செய்ததில் சமர்த்திற்கு பரம சந்தோஷம்.என்ன விஷயம் என்று ஜாடையில் கேட்ட நண்பர்களுக்கு பிறகு என்று சைகைச் செய்தான்.


தனிமையில் அவனை சந்தித்த ப்ரணதி கவலை அப்பிய முகத்தோடு


"அன்னிக்கு காப்பி கொடுத்த போது கையத் தொட்டு வாங்கினான்....நேத்தி படில இறங்கும் போது இடிச்சிட்டு சாரி தெரியாம இடிச்சிட்டேன்ங்கறான்... இன்னிக்கு இப்படி...என்னை பாத்தா அந்த மாதிரி பொண்ணு மாதிரி தெரியுதா?"என்று அவள் கண்கள் கலங்கியது.


அவள் கண்ணீர் அவன் இதயத்தை கிழித்தது.அந்த கிரிஷை துவம்சம் செய்து விடும் கோபம் எழுந்தது அவன் மனதில்.


"ஷ்....நிதி! டோண்ட் வொரி...இனிமே அவன் உன்னை தொல்லை பண்ணமாட்டான்..."


"என்ன பண்ண போறீங்க? கலாட்டா எதுவும் வேண்டாம்...அப்பா ஹெல்த் தெரியும்ல..."


"காதும் காதும் வச்ச மாதிரி விஷயம் முடிஞ்சுடும்...நீ கவலைப்படாம நிம்மதியா இரு"


விஷயம் அறிந்து தாம் தூம் என்று கோபத்தில் குதித்தான் வினோத்.


"மாப்பி!இனிமே என்னால பொறுக்க முடியாது...அந்த பொறுக்கி நாயி...நாம அவ்வளவு பேரு இருக்கும் போதே இப்படி பண்றான்னா... அவனுக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும்...அவனை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விட்றதில்ல..."என்று எழப் போனவனை கைப்பிடித்து தடுத்த சமர்த்
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
வினு!அவசரப்படாதே!நான் சொல்றபடி செய்"என்று அவன் ப்ளானை விவரித்தான்.அதை கேட்டு ஆதி வினு முகம் புன்னகையில் விரிந்தது.


"கிரி மவனே உனக்கு இன்னிக்கி சங்குதாண்டி...!"என்றான் ஆதி.


இரண்டு ரவுண்டு ஆகியிருந்தது...மூன்றாவதை க்ளாசில் ஊற்றிய கிரிஷின் முன்பு வந்து நின்றாள் வேலைக்காரப் பெண்.


"ஐயா!ப்ரணதி அம்மா உங்ககிட்ட என்னமோ பேசனுமா...உங்களை பத்து மணிக்கு குடோனுக்கு வர சொன்னாங்க..."


"என்ன குடோனுக்கா?!!...சரி சரி வரேன்னு சொல்லு"என்றவுடன் அந்த பெண் அகன்றாள்.


வெளியே வந்து "எஸ்...."என்றான் பெண் வேடத்திலிருந்த வினு.


"இது என்னடா பழம் தானா கனிஞ்சு வருது...எப்படியானா என்ன கைக்கு கிடைச்சா சரி.."என்று மீதமிருந்த சரக்கை உள்ளே இறக்கியவன் பத்து மணிக்காக காத்திருந்தான்.


உறைய வைக்கும் அந்த இரவு குளிரை பொருட்படுத்தாமல் குடோனை சென்றடைந்த கிரிஷுக்கு அங்கே அவனுக்காக காத்திருந்த ப்ரணதியின் உருவம் போதையை மேலும் ஏற்றியது.மெதுவாக சென்று திரும்பி நின்றிருந்த ப்ரணதியின் தோளில் கை வைத்தவன்


"ஹே ப்யூட்டி..‌நீனே என்னை கூப்பிடுவேன்னு எனக்கு நல்லாத் தெரியும்... இந்த கிரிஷோட பர்ஸ்னாலட்டி அப்படி...உன்னை பாத்ததுலேந்து சாப்பாடு தூக்கம் எதுவும் வேண்டாம் நீதான் வேண்டும்னு என் மனசு தவிக்குது...ப்ளீஸ் இனிமே என்னால காக்க முடியாது...வா நம்ம ரூமுக்கு போய்டலாம்"என்று வாய்க்கு வந்தபடி உளறினான்.


"கிரி....உங்க மனைவிக்கு தெரிஞ்சுட்டா..."என்றாள் முகத்தை துப்பட்டாவால் மறைத்திருந்த ப்ரணதி.


"அது கெடக்கு கோட்டான்....அவன் அப்பன் சொத்துக்கு ஆசைப்பட்டு இந்த குரங்கை கட்டிக்கிட்டு மானே தேனான்னு புகழ வேண்டியதா போச்சு...அத நினைச்சு நீ வொரி பண்ணிக்காதே ப்யூட்டி...அது இத்தன நேரம் சாப்பாட்ட நல்லா ஒரு கட்டு கட்டிட்டு கட்டையா படுத்திருக்கும்...உன்னை அந்த சொர்க்கத்துக்கே நா கூட்டிட்டு போறேன்...வா ப்யூட்டி..."என்று அவள் கையைப் பிடித்து இழுக்கவும்


"நீ என்னடா சொர்க்கத்துக்கு ஓனரா?நா காட்றேன்டா உனக்கு நரகத்தை..."என்றபடி மறைவிலிருந்து வெளிப்பட்டான்‌ சமர்த்.அவன் பின்னேயே ஆதித்யாவும் ப்ரணதியும் கடைசியாக கிரிஷின் மனைவி சீமாவும் வெளிப்பட்டனர்.


மனைவியைக் கண்டதும் கிரிஷ் நடுநடுங்கிப் போனான்.அவள் தயவில் மாமனார் வீட்டோடு வாழும் வீட்டு மாப்பிள்ளை ஆதலால் அவளை பற்றிய தன் அபிப்பிராயத்தை அவள் கேட்டு விட்டாள் என்றதும் சப்தநாடியும் ஒடுங்கி விட்டது அவனுக்கு.


அதுவரை பெண் வேஷத்தில் இருந்த வினோத்தும் அதை நீக்கி தன் சர்ட் கையை மடித்துவிட்டபடி அவனை நெருங்கினான்.


"வினு!நீ விடு... இன்னிக்கு அவன் என் வேட்டை....ஏன்டா பொண்ணு கேக்குதா பொண்ணு....காபியை கையைத் தொட்டுதான் வாங்குவியா?...எதிர்ல வந்தா இடிச்சிக்கிட்டுதான் போவியா?...டேபிள் கீழே கால விடுவியா?..."என்று ஒவ்வொன்றுக்கும் அவனை வெளுத்து வாங்கிவிட்டான் சமர்த்.மூக்கு வாயிலிருந்து ரத்தம் குபுகுபுவென வெளியேறியது அவனுக்கு.விட்டால் அவனை கொன்றே விடுவான் என்று பயந்த வினுவும் ஆதியும் ஆளுக்கொரு பக்கமாக அவனை இழுக்க முயன்றனர்.ஆனால் அவனை அசைக்கவே முடியவில்லை.


மெதுவாக அவன் அருகில் வந்த ப்ரணதி அவன் கைகளை மென்மையாக பற்றி


"விடுங்க...சமர்த்... வேண்டாம்..."என்றாள்.


அவள் தொடுகையில் அவ்வளவு நேரம் இருந்த ரௌத்திரம் குறைந்து அவன் முகம் மென்மையானது.இதே போல் முன்பொரு முறை நடந்த ஒரு சம்பவம் அவள் மனக்கண் முன்பு கணநேரம் வந்து போனது.ஆனால் மறுநொடியே அது மாயத்தோற்றமாகி மறைந்தது.


கணவனின் துரோகத்தால் மனம் நொந்த சீமா அனைவரிடமும் மன்னிப்பு வேண்டி காயமுற்ற கணவனோடு அப்பொழுதே புறப்பட்டு விட்டாள்.


எல்லா அரவமும் அடங்கி அவரவர் தங்கள் அறைக்குச் சென்ற பின் ப்ரணதியை அவள் அறைக்கு விட உடன் வந்த சமர்த் அவள் அறை வாயிலுக்கு வரவும் அவனை காதல் ததும்பும் கண்களால் ஏறிட்டவள்


"தேங்க்ஸ்...!"என்றாள் மெல்லிய குரலில்.


கண்களால் காதல் கவிதை வாசித்த அவளின் மணாளனோ


"தேங்க்ஸ் இப்படித்தான் சொல்றதா?"என்றான்.


அதன் அர்த்தம் புரிந்தாலும்,


"பின்ன எப்படி சொல்றதாம்...தமிழ்ல நன்றின்னு சொல்லட்டுமா?"என்றாள் புரியாதவள் போல்.


"நா சொல்றது உனக்கு புரியல இல்ல?!!!"


"ம்ஹூம்...."என்றாள் காதில் இருந்த ஜிமிக்கி நடனமாட.


"புரியாதவங்களுக்கு புரிய வைக்கலாம்...புரிஞ்சே புரியாத மாதிரி நடிக்கறவங்கள ஒண்ணும் பண்ண முடியாது...நா தூங்க போறேன்...குட் நைட்"என்று பெருமூச்சோடு உரைத்தவன் திரும்பி நடக்கத் தொடங்கினான்.


"சமர்த்....!"என்ற அவளின் குரலில் நின்றவனின் அருகில் வந்தவள் சிறிதே மேலெழும்பி தன் பட்டு இதழை அவனின் அழுத்தமான உதட்டில் பட்டும்படாமல் முத்தமிட்டவள் மானென தன் அறைக்கு சென்று கதவை தாளிட்டுக் கொண்டு விட்டாள்.


அவளாக கொடுத்த முதல் முத்தத்தில் அவன் இதயம் சிறகில்லாமல் பறந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top