• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mr.Perfect-Mrs.Faulty-15(pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
சென்னை விமான நிலையம்...தன்னவளை சுமந்து வரும் விமானத்திற்காக காத்திருந்தான் சமர்த்.அவர்கள் சென்னை வரும் முன் அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு சமர்த் ஒருவாரம் முன்பே சென்னை வந்துவிட்டிருந்தான்... முக்கியமாக குடும்பத்தவர்களை தயார் செய்ய.


எப்போதும் போல பெரியப்பா வீட்டிற்கு அனைவரையும் அழைத்திருந்தான்.நிதானமாக அவர்கள் யாரும் அதிர்ச்சி ஆகாத வண்ணம் நிதானமாக நியதி உயிரோடு இருப்பதையும் பழைய விஷயங்கள் எதுவும் அவளுக்கு நினைவில்லை என்றும் உரைத்தான்.


அத்தனை நாட்களாக நியதியின் நினைவில் மருகியவர்கள் அவள் உயிரோடு தான் இருக்கிறாள் என்ற உண்மையில் சந்தோஷக் கூத்தாடினர்.இளையவர்களோ ஹோவென கத்தி தங்கள் சந்தோஷத்தை கொண்டாடினர்.ஆனால் எல்லோருக்குமே நியதிக்கு தங்கள் யார் நினைவும் இல்லை என்றதில் வருத்தமே.அவள் உயிரோடு இருப்பதே பெரிதென தங்களை சமாதனப்படுத்திக் கொண்டனர்.


டாக்டர் கூறியதெல்லாம் விவரித்து அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினான் சமர்த்.அவளை புதியவளாகப் பார்த்து நடந்துக் கொள்வதை நினைத்தாலே அவர்களுக்கு தாங்க முடியாத துக்கமாக இருந்தது.ஆயினும் அவள் உடல்நலன் கருதி அனைவரும் அதற்கு ஒப்பினர்.


அவள் தன் அருகிலேயே வைத்துக் கொள்ள அவன் எண்ணிய போது அவர்கள் அதிஷ்டமாக நியதி அதிகம் விரும்பும் அவர்கள் பக்கத்து வீடு விலைக்கு வரவே உடனே அதை வாங்கிவிட்டான்.அவளுக்கு பிடித்தவை என்பவை எல்லாம் வாங்கி குவித்து அவள் வரவுக்காக தயாராக இருந்தது அந்த வீடு.


விமானம் வந்துவிட்டதற்கான அறிவிப்பு வரவே தன் இனியவளை காணத் துடித்தது அவன் கண்கள்.விமானத்திலிருந்து தந்தையின் கையைப் பிடித்தபடி வினோத் வர அவர்கள் பின்னே மேகம் விலக பளிச்சிடும் நிலவு போல் கண்கள் மன்னவனைத் தேட படிகளில் இறங்கினாள் ப்ரணதி.


இந்த ஒரு வார பிரிவு அவன் இல்லாமல் தான் இல்லை என்பதை அவளுக்கு தெளிவாக உணர்த்தி இருந்தது.ஏழு யுகமாக கழிந்த ஏழு நாட்களுக்கு பிறகு அவனை காணப் போகும் துடிப்பு அடுத்து காட்டும் பளிங்கு போல் அவள் முகம் காட்டியது.


தூரத்தில் கையசைத்தவாறு இவர்களை நெருங்கினான் சமர்த்.இருவரின் கண்களும் பின்னிப் பிணைந்தன.அவன் கைச்சிறையில் அடைந்துவிட துடித்த மனதை பிரயாசைப்பட்டு அடக்கிக் கொண்டாள் அவனின் மனதுக்கினியாள்.


இருவரின் பார்வை பரிமாற்றம் நீளவும் அருகே நின்றிருந்த வினோத் "ம்கூம்"என பொய்யாக இருமி இருவரையும் நனவுலகுக்கு இழுத்து வந்தான்.விமான பரிசோதனைகள் முடிந்து லக்கேஜை பெற்றுக் கொண்டு சமர்த் காரோட்ட நால்வரும் அவர்கள் இனி வாழப் போகும் புது வீட்டை வந்தடைந்தனர்.


வழியெங்குமே ப்ரணதியின் கண்கள் சுற்றுப்புறத்தை உற்றுப் பார்த்த வண்ணமே இருந்தது.அவளின் நெற்றி சுருக்கம் ஏதோ ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்ள போராடுவதை உணர்த்தியது.பேக் வ்யூ கண்ணாடியில் மனைவியின் முகத்தில் தெரியும் மாற்றங்களை சமர்த்தும் கவனித்துக் கொண்டே வந்தான்.


எப்போதும் வரும் வழியில் அல்லாமல் நியதிக்கு மிகவும் பரிசியமான வழியில் காரை அவன் விட்டதே அவளுக்கு சிறிதளவாவது பழைய நினைவை உண்டாக்கத் தான்.ஆனால் அவன் எதிர்ப்பார்த்த அளவு எந்த மாறுதலும் இல்லை.


வீட்டை அடைந்து காரிலிருந்து இறங்கிய ப்ரணதி அந்த வீட்டையும் பக்கத்து வீட்டையும் கண்கொட்டாமல் பார்த்திருந்தாள்.


'இது என்ன இந்த வீடு இரண்டையும் பார்த்த மாதிரி இருக்கே!....ஆனா இதுக்கு முன்னாடி நா இங்க வந்ததே இல்லையே...இது என்ன பிரமை?!!!'


"ப்ரணதி!என்னடா திகைச்சு நின்னுட்டே...வா உள்ள போலாம்..."என்று வினோத் அவள் தோளைத் தொடவும் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு அவனுக்கு தலையசைத்தாள்.அவர்கள் குளித்து தயாரானதும் மதிய உணவிற்கு அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் சமர்த்.


இல்லவே இல்லை என்று அவளை நினைத்து உருகியவர்கள் ஊணும் உயிருமாக அவள் வாயிலில் வந்து நிற்கவும் வீட்டோர் அனைவரும் பொங்கியெழுந்த அழுகையை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு புன்னகைத்தனர்.


"வலது காலை வச்சு உள்ளே வாடா பட்டுக்குட்டி".....எங்கோ தொலைவில் மனதின் ஆழத்தில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு வாயிலைத் தாண்டப் போன ப்ரணதி அப்படியே நின்று விட்டாள்.இதை யார் கூறியது? எப்போது கூறியது?என்பது எதுவும் அவளாள் கணிக்க முடியவில்லை.


அவள் உள்ளே வருவதை ஆவலாகப் பார்த்திருந்தவர்கள் அவள் வாயிலருகே சிலையென நின்று விட்டதைக் கண்டு என்னவோ ஏதோவென கவலைக் கொண்டனர்.முதலில் சுதாரித்த லலிதா


"என்னாச்சு மா...ஏன் அங்கேயே நின்னுட்டே?வாட...வாம்மா உள்ளே"


என்றவரை ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு.இப்போது தான் பார்க்கும் ஒருவரிடம் ஏன் தன் மனம் இவ்வளவு சொந்தம் கொண்டாடுகிறது என்பது அன்றைய புதிர்களில் ஒன்றானது.


பதில் கூறாமல் தலையசைத்தவள் உள்ளே சென்று சமர்த் கைக்காட்டிய சோபாவில் அமர்ந்துக் கொண்டவள் சுற்றிலும் இருந்தவர்களை பார்க்கவும் அவர்களை இன்னார் என அறிமுகப்படுத்தினான் சமர்த்.அவர்கள் அனைவருமே தனக்கு மிகவும் நெருங்கியவர்கள் என்றே தோன்றியது அவளுக்கு.ஒருவேளை சமர்த் உயிருக்குயிராக நேசிக்கும் தன் இதயம் அவனை சேர்ந்தவர்களை தன்னவர் என எண்ண வைத்திருக்குமோ என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்.


ஆதித்யாவின் மனைவி ஸ்ருதி,சமர்த்தின் தங்கை வித்யா,அவனின் சிறிய மாமாவின் மகன் அஸ்வின் முதலியவர்களோடு சிறிது நேரத்திலேயே சகஜமாக பேசிப் பழகத் தொடங்கிவிட்டாள் அவள்.அஸ்வினின் ஜோக்குகளுக்கு கலகலவென சிரித்தவளை அனைவரும் ஆசைப் பொங்கப் பார்த்தனர்.


"ஹா...ஹா... ம்ஹூம் இனிமே சிரிக்க முடியாது என்னால...அஸ்வின் ப்ளீஸ் ஸ்டாப் யுவர் ஜோக்ஸ்...."என்றவாறே திரும்பிய போது சமர்த்தும் லலிதாவும் அவள் அருகில் வந்தவர்கள்


"ப்ரணதி! இன்னும் முக்கியமான ஒருத்தர பாக்கனும்...அவங்களால நடந்து வர முடியாது... அவங்க மேல இருக்கற ரூம்ல இருக்காங்க...போலாமா?"என்றான் சமர்த்.


"ஆமா...மேல போயி அவங்கள பாரும்மா...உன்னை பாத்தா அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க..."என்றார் லலிதா.


யாராக இருக்கும் என்று எண்ணியபடி சமர்த்தை பின்தொடர்ந்த ப்ரணதி அவன் ஒரு அறையின் கதவைத் திறந்த போது அங்கே படுக்கையில் கைகால் செயல்படாத ஒரு பெண்மணி படுத்திருப்பதைக் கண்ட அவள் கண்கள் அவளையறியாமல் கண்ணீரைப் பொழிந்தது.ஹோவென திரண்ட துக்கம் தொண்டையில் அடைத்துக் கொண்டு அவளை பேசவிடாமல் செய்துவிட்டது.சமர்த் ஒருவன் அங்கே நிற்பதையே மறந்தவளாக படுக்கையை நெருங்கியவள் அங்கேயே அமர்ந்து அவரின் செயல்படும் நிலையில் இருந்த கைகளை தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டாள்.அவள் தொடுகையில் லேசாக கண்விழித்த சந்தியா மகளைக் காணவும் அவரின் கண்கள் உடைப்பெடுத்தது.அவருக்கு ஏற்கெனவே சமர்த் நியதியைப் பற்றிக் கூறியிருந்ததால் அவர் அதிர்ச்சி அடையவில்லை.அவர் கண்ணீரைத் துடைத்தவள் சமர்த்தை நிமிர்ந்துப் பார்த்து


"இவங்க யாரு?ஏன் இப்படி ஆயிடுச்சு?"


"இவங்க எங்க அத்தை...சந்தியா...ஒரு அதிர்ச்சியான விஷயம் கேள்விப்பட்டதுல ஷாக்காகி ஸ்ட்ரோக் ஆயிடுச்சு..."


"ஓ....‌இத சரிப் பண்ண முடியாதா?"


"கொஞ்ச நாள் ஆகலாம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க....நீ வந்த வேளை அவர் சீக்கிரம் குணமானாலும் ஆகலாம்..."


"நா அப்பப்ப வந்து இவங்கள கவனிச்சுக்கறேன்... நீங்க வேணா பாருங்க சீக்கிரம் சரியாடுவாங்க..."என்றாள்.
அவளேயறியாத பாசத்தோடு.



சொன்னபடியே தினமும் தந்தையை கவனித்த நேரம் போக ப்ரணதி தன் நேரத்தை சமர்த்தின் வீட்டிலேயே கழித்தாள்.அதிலும் முக்கியமாக சந்தியாவிடமே இருந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக சரிச் செய்தாள்.மகள் உயிரோடு வந்துவிட்டாள் என்ற மாமருந்தே அவர் விரைவில் குணமாக காரணமானது.சிறிது சிறிதாக எழுந்தவர் எண்ணி இரண்டே மாதத்தில் அவள் கை பலத்தில் அறையிலேயே மெதுவாக நடந்தார்.பேச்சும் சிறிது தெளிவாக வரத் தொடங்கியிருந்தது.


ப்ரணதியின் நினைவுகள் மட்டும் இன்னுமும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது.சமர்த்தின் குடும்பத்தோடு பழக பழக அவர்கள் அவளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்ற எண்ணம் மேலும் மேலும் வலுப்பெற்றது.
 




Last edited:

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
இன்னிலையில் ஒரு நாள் ஷாப்பிங் சென்ற ப்ரணதி தையல் கடையில் நின்ற போது வெளியே ரோட்டில் இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று தாயைப் பிரிந்து நடுரோட்டில் தத்தி தத்தி நடந்து வந்துக் கொண்டிருந்தது.ட்ராபிக் குறைவான நேரமானாலும் வேகமாக ஒரு பைக் அந்தபுறத்திலிருந்து வருவதைக் கண்ட ப்ரணதி ஒரே ஓட்டமாக ஓடி குழந்தையை தூக்கியவள் நிலைத் தடுமாறி ப்ளாட்ஃபார கல்மேல் விழுந்தாள்.குழந்தையை அவள் அணைத்து பிடித்திருந்ததால் நல்லவேளையாக அதற்கு எந்த கெடுதலும் நேரவில்லை.


ஆனால் விழுந்த வேகத்தில் தலையில் அடிப்பட்ட ப்ரணதி நினைவிழந்தாள்.அவள் தலை காலத்திலிருந்து ரத்தம் வழிந்தோடியது.நொடியில் நடந்துவிட்ட விபத்தைக் கண்டு அதிர்ந்த பொதுமக்கள் குழந்தைக்காக அழுதக் கொண்டு வந்த அதன் தாயிடம் ஒப்படைத்து ப்ரணதியை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.


எங்கும் இருண்டிருந்த மனதில் எண்ணங்களின் அணிவகுப்பு.....


"நியதி!இந்த காப்பிய தம்பிக்கு கொடு...."


'எந்த தம்பி'


'டேய் யூகே!என்னையா திட்ற!ஒரு நாள் இருக்குடா உனக்கு'


"இந்ததத....தா...லி..ய...நி..ய...தி..கழுத்....து..ல.‌.க....ட்....டு"


"அத்தே! நீங்க ஊருக்கு போகத்தான் வேணுமா?"


"என்னமோ மோகினி பிசாசு அடிச்ச மாதிரி ஓட்றானே"


"அந்த சுரேஷ் ஒரு பொம்பளை பொறுக்கி..‌அவன் நம்ப ஸ்ருதி அக்காவுக்கு பொருத்தமானவன் இல்ல..."


"சாட்சி வேணுமா சாட்சி....சாலிட் ப்ரூஃப்போட வரேன்"


"இந்த பிங்க் பூ அழகா இருக்குல்ல"


கப்பலில் சுழன்றாடியதும் கணவனின் அணைப்பும் இருவரின் இணைவும் கப்பல் தளத்தில் தனியாக நின்ற போது.......


திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் நியதி.தலையில் பட்ட காயம் வலியை கூட்டவே "இஸ்....."என தலையைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தாள்.சுற்றிலும் கண்களை ஓட்டியவள் தான் ஒரு மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தாள்.


தான் எப்படி அங்கு வந்தோம் என்பதெல்லாம் குழப்பமாக இருந்தது.மெதுவாக எழுந்து அமர்ந்தவள் படுக்கை அருகே கைப்பை காணவும் தன்னுடையதாக இருக்கலாம் என எண்ணி அதை திறந்துப் பார்த்தாள்.அதில் கைபேசி காணவும் எடுத்து உயிர்ப்பித்தாள்.


கைபேசியின் நாட்காட்டி காட்டிய நாளை பார்த்தவளுக்கு தலைச் சுற்றியது.அவர்கள் கனடா சென்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டதாக அது காட்டியது.தலை வேறு வெடித்து விடுமோவென விண்ணென்று தெறித்தது.


இந்த குழப்பங்கள் அகல கணவனை காண்பதே சரியென்று முடிவெடுத்தவள் தள்ளாடியபடி எழுந்து மெதுவாக அந்த அரசு மருத்துவமனையை விட்டு வெளியேறி ஆட்டோ ஒன்றை அழைத்து கணவனின் ஆபிஸ் முகவரியை உரைத்தாள்.


ஆபிஸ் வாயிலில் ஆட்டோ நின்றதும் கைக்கு கிடைத்த பணத்தை ஓட்டுனரிடம் கொடுத்து விட்டு சோர்ந்த உடலை தாங்கியபடி ஆபிஸில் நுழைந்தாள்.


அங்கே அனைவரும் அவளை அறிந்தவராதலால் அவளை மரியாதையோடு அழைத்துச் சென்று சமர்த்தின் ரூம் அருகே விட்டுச் சென்றனர்.கதவு பூட்டப்பட வில்லையாதலால் லேசாக அதை திறந்தவள் அங்கு கண்ட காட்சியில் மின்சாரம் தாக்கியவள்‌ போல் அதிர்ந்து நின்று விட்டாள்.


அங்கே சுற்றுப்புறம் மறந்து தன் நெஞ்சில் சாய்ந்திருந்த நங்கையிடம்


"ஷ்....அழாதே ஹிமா!மாற்ற முடியாததுன்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லை... எல்லாத்தையும் சரிப் பண்ணிடலாம்..."


"சாரி சமர்த் நம்ப காதலை தூக்கி எறிஞ்சிட்டு போனதுக்கு இது தான் எனக்கு கிடைச்ச தண்டனை...."


வந்த சுவடே இல்லாமல் திரும்பி நடந்து விட்டாள் நியதி.


சமர்த் ஹிமா காதல் என்ற மூன்று வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் அவள் மூளையில் இல்லவே இல்லை.....அதையே உருப்போட்டவாறு வெகு நேரம் நடந்தவள் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத தெருவில் நடந்த போது ஒரு கறுப்பு நிற வேன் அவள் அருகில் வந்து நிற்கவும் அதன் உள்ளே இருந்தவர்‌ நியதியை பற்றி உள்ளே இழுத்தவுடன் வேன் மின்னல் வேகத்தில் பறந்து விட்டது.இரண்டொருவர் என்ன ஏது என்று ஆராயும் முன் வேன் அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டது.
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
அடடா ஏம்ப்பா சமர்த்த இப்படி சோதிகரீங்க பவி sis அவன் பாவம்மல? நியதி நீ எப்பதன் இப்படி அவசரப்பட்டு முடிவு எடுக்கரத விட போரையோ கதையே முடிய போகுது இன்னும் நீ வளரவே இல்லமா?
பவி sis அப்படியே ஹேப்பியா முடிச்சு இருக்கலாம் இல்ல? இப்ப எதுக்கு ஹேமாவை திரும்ப கூட்டிட்டு வந்து குழப்பம் பண்றீங்க
Twist குடுங்கன்னு கேட்டோமா???,ஜாலியா ஸ்டோரி முடியணும் samarth-niyathi happy ஆகனும் ?அவ்ளோதான்??
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
அடடா ஏம்ப்பா சமர்த்த இப்படி சோதிகரீங்க பவி sis அவன் பாவம்மல? நியதி நீ எப்பதன் இப்படி அவசரப்பட்டு முடிவு எடுக்கரத விட போரையோ கதையே முடிய போகுது இன்னும் நீ வளரவே இல்லமா?
பவி sis அப்படியே ஹேப்பியா முடிச்சு இருக்கலாம் இல்ல? இப்ப எதுக்கு ஹேமாவை திரும்ப கூட்டிட்டு வந்து குழப்பம் பண்றீங்க
Twist குடுங்கன்னு கேட்டோமா???,ஜாலியா ஸ்டோரி முடியணும் samarth-niyathi happy ஆகனும் ?அவ்ளோதான்??
Correctu correctu correctu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top