• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mr.Perfect-Mrs.Faulty-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
பத்து நாட்களுக்கு பிறகு

மரகதவல்லி பாட்டி இறந்து இன்று பத்து நாட்கள் ஆகியிருந்தது.சமர்த் நியதியின் கழுத்தில் தாலிக் கட்டிய அன்றிரவே பாட்டியின் உயிர் தன் கணவரைத் தேடி வானுலகத்திற்குப் பறந்துவிட்டது.

திடீர் திருமணம் பாட்டியின் மரணம் என குடும்பத்தவர்கள் அனைவரும் ஒருவிதமான அதிர்வில் மவுனமாகி விட்டனர்.அவரவர் தங்கள் வேலைகளை மவுனமாக செய்தனர்.நியதி மற்றும் சமர்த்தின் நிலையோ மகாமோசமாக இருந்தது.

இப்படி ஏன் ஆனது?எதனால் வாழ்வில் இந்த எதிர்பாரா திருப்பம்? எப்படிப்பட்ட பிரச்சனைக்கும் எளிதில் தீர்வு கண்டுவிடும் சமர்த்துக்கே இந்த திடீர் திருமணம் குழப்பத்தைக் கொடுத்துவிட்டது.

முதல் இரண்டு நாட்களுக்கு ஹிமாவின் கால்கள் வந்தது பின்பு அதுவும் நின்றுவிட்டது.அவளிடம் என்னவென்று விளக்குவது என்பதை அறியாத சமர்த் அவளைத் தொடர்புக் கொள்ள விழையவில்லை.இறுதி காரியம் ஆனவுடன் பிறகு வருவதாகக் கூறி சென்னை சென்றுவிட்டான்.

பாட்டியின் இறுதி காரியம் வரை வெளியே இருந்த நியதி அது முடிந்த பின் தன் அறையிலேயே முடங்கிவிட்டாள்.சாப்பாடு கூட நித்திலா சித்தியின் வற்புறுத்தலால் ரூமிலேயே உண்டாள்.மூன்றாம் நாளும் இதே தொடரவும் நித்திலா நியதிக்கு உணவு தந்தவள் அவள் உணவுண்டப் பின் தினமும் போல் போகாமல் அறையின் கதவை அடைத்துத் தாளிட்டு வந்து நியதியின் அருகில் அமர்ந்தாள்.அவளைக் கேள்வியாக நோக்கிய நியதியின் தலையை அன்பாக தடவியவள்

"நியதிம்மா!என்னடா இது... இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப் போற?"

அவளின் அன்பானப் பேச்சில் உடைந்த நியதி சித்தியை இறுக்கிக் கட்டிக் கொண்டு வெடித்து அழுதாள்.நித்திலாவும் நிறுத்த முயற்சிக்கவில்லை.உள்ளே அடைத்திருந்தவைகள் எல்லாம் கண்ணீரோடு சென்று அவள் இதயம் லேசானால் தான் இவள் எதைக் கூறினாலும் அவள் மனதில் ஏறும் என்று உணர்ந்து பேசாமல் அவள் முதுகைத் தடவியவாறு இருந்தாள்.சிறிதுசிறிதாக அழுகை அடங்கி லேசானக் கேவல் கேட்கவும் அவளை தன்னிலிருந்து பிரித்து அவள் கண்ணீரைத் துடைத்து குடிக்க நீர் கொடுத்தாள்.அவள் குடித்துக் கொடுத்த டம்பளரை அருகிலிருந்த மேசையில் வைத்தவள் நியதியின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள்.

"நியதி இங்க பார் உன் மனசு இப்ப எப்படி இருக்குன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது... திடீர்ன்னு அத்த இப்படி சொல்லுவாங்கன்னு யாரும் எதிர்பார்க்கல... பெரியவங்க அவங்க மனசுல அந்த நேரத்துல ஏதோ தோணிடிச்சு அண்ணியும் அம்மாவோட கடைசி ஆசைன்னு ஒத்துகிட்டாங்க...நடந்தது நடந்திடுச்சு...இனிமே அதையே நினைச்சுக்கிட்டு கலங்கறதுல அர்த்தமேயில்ல...அதுக்காக சமர்த்த ஏத்துகிட்டுத் தான் ஆகனும்னு நா சொல்ல வரல.... இப்படி ஆனதையே நெனைச்சு உன்னை நீனே உருக்கிக்கறது சரியில்லேனு தான் சொல்றேன்.இந்த புது உறவால நீ உன் இயல்ப விட்டு மாறிடாதே...நீ முதல்ல எப்படி இருந்தையோ இனிமேலும் அப்படியே இரு......

அக்கா அண்ணிலாந் சொல்லியிருக்காங்க நீயும் சமர்த்தும் எப்பவும் ஏட்டிக்குப் போட்டியாவே இருப்பீங்கன்னு...எல்லோருமே காதலிச்சு கல்யாணம் பண்றது இல்ல...நம்ம நாட்டுல எத்தனையோ பொண்ணுங்களுக்கு பெத்தவங்க பாத்து பண்ற கல்யாணம் தான் அதிகம்...முன்னேப் பின்னே பழக்கமே இல்லாத கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க காதல் கல்யாணம் பண்ணவங்கள விட புரிதலோட ஒருதருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து உயிருக்குயிரா வாழ்றவங்களும் இருக்காங்க...கல்யாணம் மனுஷனால நடத்தப்பட்டதா தெரிஞ்சாலும் நிஜமாவே அது கடவுள் போட்ட முடிச்சு தான்.நீ சமர்த்தோடத் தான் வாழனும்னு நா சொல்லல...வாழ முயற்சி பண்ணிப் பாருன்னு தான் சொல்றேன்"

"அவனுக்கு என்ன கண்டாலே பிடிக்கலையே சித்தி...நா மட்டும் சரின்னு சொன்னா போதுமா... அவனும் சொல்ல வேண்டாமா... இந்த கல்யாணம் செல்லாதுன்னு அவன் ஆர்க்யூ பண்ணா?"

"அவன் அப்படி சொல்வான்னு நீயாவே ஏன் நினைக்கற.... இதைத்தான் சொன்னேன் முயற்சி பண்ணாமயே தோல்வியப் பத்தி ஏன் யோசிக்கிற...முயற்சி செஞ்சு பாரு...அப்படி ஒண்ணும் இப்பவே நீங்க சேர்ந்து வாழப் போறது இல்ல... அண்ணி உன் படிப்ப நிறுத்த மாட்டாங்க...நல்லாப் படி...உன் கால்ல நிக்கற அளவு முன்னேறு....காலப் போக்குல இரண்டு பேருக்கும் மனசு சேர்ந்தா சந்தோஷமா சேர்ந்து வாழுங்க...இல்லேன்னா அந்த காலம் மாறி இல்லையே இப்பத்தான் எப்ப வேண்ணா அவங்கவங்க வழில போலாமே...அது போல பிரிஞ்சு அவங்கவங்க வழில போங்க...அப்படி ஒரு சந்தர்ப்பம் வரவே வேண்டாம்...அப்படி வந்தா உனக்கு ஆதரவா நான் இருக்கேன்..."

நியதியின் முகம் யோசனையைக் காட்டியது.தான் கூறியதெல்லாம் அவள் மனதில் வாங்கியிருக்கிறாள் என்று புரிந்துக் கொண்ட நித்திலா நிம்மதியடைந்தாள்.

"நியதி இப்ப இதெல்லாம் ஏன் சொன்னேன் தெரியுமா...அண்ணி இந்த சாங்கியமெல்லாம் முடிஞ்சவுடனே உன்ன அவங்க வீட்டுக்கேக் கூட்டிட்டு போகப் போறாங்களாம்.அக்காவும் சரின்னு சொல்லிட்டாங்க...அதுனால நீ எதப் பத்தியும் யோசிக்காம அங்க போயி இரு...நீ எப்பவும் போல சந்தோஷமா இருக்கு...எது வந்தாலும் எதிர்த்து நில்லு... பெண்கள் நினைச்சா எப்படிப்பட்ட முள் பாதையும் தன்னோட மனோ தைரியத்தால மலர் பாதையா மாத்திடலாம்...."என்று அவள் தோளை அன்போடுத் தட்டிக் கொடுத்தவள் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறும் முன் நியதியின் புறம் திரும்பியவள்

"ஆனா சமர்த் நீ நெனைக்கற அளவு கெட்டவன் இல்ல"என்றபடி சென்றுவிட்டாள்.

நித்திலா கூறிச் சென்றதையே இரவு முழுவதும் யோசித்தாள் நியதி.அவர் சொல்வது போல் இப்பொழுதே தான் ஏன் கலங்க வேண்டும்...தன் படிப்பு முடியும் வரை நேரம் இருக்கிறதே...அதற்குள் என்ன நடக்கிறது என்று பொறுமையாக இருந்து பார்க்கலாம்... இனிமேல் படிப்பில் தன் கவனத்தை செலுத்துவது என்றும் மற்றதையெல்லாம் காலத்தின் கையில் விட்டுவிடுவது எனத் தீர்மானத்தவள் விடியும் வேளையில் கண்ணயர்ந்தாள்.

மறுநாள் குளித்து புத்தம்புது மலராக துள்ளிக் குதித்து ஆடாவிட்டாலும் சாதாரணமாக கேள்வி கேட்டு பதில் சொல்லி என்றிருந்த நியதியைப் பார்த்து வீடே வியப்பில் ஆழ்த்தது.ஆனால் யாரும் எதுவும் கேட்கவில்லை.

பதினாறாம் நாளுக்காக முன் தினம் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் சமர்த்.சிறு பேகில் இரண்டு செட் உடைகளை வைத்தப் போது அவனின் போன் ஒலித்தது.திரையில் ஹிமாவின் எண்களைக் கண்டு கட் செய்யப் போனவன் வேண்டாமென முடிவெடுத்து ஆன் செய்தான்.

"ஹலோ சமர்த்! ஏன் இத்தன நாள் போன் அட்டெண்ட் பண்ணல?நா உங்கள உடனே பாக்கனும்...ஒரு இம்ப்பார்டெண்ட் மேட்டர் பத்தி பேசனும்...ப்ளீஸ் நாம எப்பவும் மீட் பண்ற ஹோட்டல்க்கு இப்ப வரீங்களா?"

மறுக்க நினைத்தவன் இல்லை இதற்கு இன்றே ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் எனத் தீர்மானித்தவன்

"ஓகே ஹிமா!நாம இப்பவே மீட் பண்ணலாம்...நா ஆஃப் நவர்ல அங்கே இருப்பேன்...பை"

என்று போனை ஆஃப் செய்தவன் பேகை மூடி எடுத்துக் கொண்டு சென்று காரின் பின் சீட்டில் வைத்தவன் காரை அந்த ஹோட்டலை நோக்கி விட்டான்.மனம் மட்டும் ஹிமாவிடம் இதை எப்படி கூறுவது?அவளை எப்படி சமாதானம் செய்வது என்றதிலேயே உழன்றது.

காரை ஹோட்டல் வளாகத்தில் பார்க் செய்தவன் நேராக ஏஸி ஹாலின் உள்ளே சென்றான்.அங்கே மூலை டேபிளில் இவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் ஹிமா.நேராக சென்று அவளுக்கு எதிர் டேபிளில் அமர்ந்தான்.இத்தனை நாட்கள் கழித்து இவனைக் கண்டும் அவள் முகத்தில் எந்த உற்சாகமும் இல்லை.சிறியதாக புன்னகைத்தவள்

"ஹவ் ஆர் யூ சமர்த்?"என்றாள் ஃபார்மலான குரலில்.

"ஐம் ஃபைன் ஹிமா....ஏதோ இம்ப்ராட்டெண்ட் மேட்டர்னு சொன்னியே என்ன அது?"என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

"அது...சமர்த்...அது...நாம ஃபஸ்ட் மீட் பண்ண போது வி ஆர் ஒன்லி இன் அவர் டீன் ஏஜ்....அப்போ நமக்கு ஆஃப்டர் மேரேஜ் லைஃப் பத்தி எந்த திங்க்கிங்கும் இல்ல...ஐ திங்க் அந்த ஏஜ் லைஃப் லாங் இருக்கப் போற ஒரு விஷயத்தைப் பத்தி டிஸிஷன் எடுக்க கரெக்டான ஏஜ் இல்ல...இப்ப திங்க் பண்ணா தட்ஸ் நாட் எ ட்ரூ லவ்...இட்ஸ் ஒன்லி ம்யூச்வல் அட்ராக்ஷன்...ஸோ எனக்கு இப்ப இந்த ரிலேஷன்சிஷ்ப்ப நெக்ஸ்ட் லெவல் கொண்டு போக இஷ்டமில்ல...ஸோ ஐ திங் வி ஹவ் டூ ப்ரேக் அப் திஸ் ரிலேஷன்ஷிப்..வாட் யூ ஸே"என்றாள் கூலாக.

ஏனோ மனதில் இருந்த பாரம் விலகியதைப் போல் உணர்ந்தான் சமர்த்.அவளுக்கு எப்படி தன் திருமணத்தைப் பற்றி சொல்லி சமாதானம் செய்வது என எண்ணிக் கொண்டு வந்தால் அவள் ஏனென்றால் அவர்களது காதலே இல்லை...அது வெறும் இளவயதின் கவர்ச்சி என்றும் உறவை முறித்துக் கொள்ளலாம் என்கிறாள்.அவளின் இந்த திடீர் மாற்றம் எதனால் என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை.

ஆனால் இதற்கு பின்னால் ஹிமாவின் தந்தை மனோகரின் மாஸ்டர் மைண்ட் இருந்தது.அவள் சமர்த்தை பற்றிக் கூறிய போது மறுப்பேதும் கூறாமல் சரி என்றவர் அவர் அவளுக்காக பார்த்து வைத்திருந்த தீரஜ்குமாரின் பார்ட்டிகளுக்கு அழைத்துச் சென்றார்.வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அவனைப் பற்றி அவ்வப்போது புகழ்ந்தார்.

நிதானமாக சமர்த் பற்றிய நினைவுகளை மாற்றி அந்த இடத்தில் தீரஜின் பற்றிய நினைவுகளை அவளேயறியாமல் புகுத்தி விட்டார்.பேச்சோடு பேச்சாக எவ்வளவு பெரிய ஆள் தீரஜ் ஆனால் அந்த கர்வம் சிறிதும் இல்லாமல் ஹிமாவை பெண் கேட்டார்...என்ன செய்வது ஹிமா ஏற்கெனவே சமர்த்தை விரும்பிவிட்டாளே.... பெற்றோர் சுற்றம் என்று தீரஜிற்கு யாருமே மில்லை..மஹாராணியாக வாழ்ந்திருக்கலாம்... எல்லாவற்றையும் விட காதல் உயர்ந்தது...அப்படி இப்படி என்று பேசி ஹிமாவே தான் தீரஜ்ஜை திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறுமாறு செய்துவிட்டார்.

ஒரு வாரக் காலத்தில் அவர் நடத்திக் காட்டிய இந்த சதி வேலை வியப்பை அளிக்கலாம்.ஆனால் கல்லூரி காலத்திலேயே திருமணத்திற்கு பின் அவர்கள் லண்டன் சென்று செட்டிலாக வேண்டும் என்ற அவளின் ஆசையை அவள் வெளியிட்டப் போது தன் குடும்பமே தனக்கு எல்லாம் அவர்களை விட்டு தான் எங்கும் வரப் போவதில்லை என்று கண்டிப்பாக கூறியிருந்தான்‌ சமர்த்.அப்போதே இது என்ன இப்படி சொல்கிறான்...சரி திருமணம் ஆனப் பின் எப்படியாவது சரி செய்துக் கொள்ளலாம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள்.
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஆனால் அப்பா தேர்ந்தெடுந்திருந்த தீரஜ் இப்போது இருப்பதே லண்டனில் தான்.போனஸாக அவனுக்கென்று யாருமேயில்லை.இந்த இரண்டு பாயிண்ட் போதுமானதாக இருந்தது அவளுக்கு சமர்த்தைத் தூக்கி எறிந்து விட்டு தீரஜை தேர்ந்தெடுப்பதிற்கு.இது எதையும் அறியாத சமர்த் அவள் மாற்றத்தை எண்ணி ஆச்சரியப்பட்டதில் வியப்பில்லை.


ஆனால் யோசித்தால் அவள் சொன்ன விஷயம் அவனுக்கும் சரியென்றேத் தோன்றியது.அந்த வயதில் அழகான ஆண் பெண் அருகருகே இருந்த போது உண்டாகும் கவர்ச்சி காதலாகத் தோன்றுவது இயல்பே.அவன் அவளை உண்மையாகவே நேசித்திருந்தால் அவளின் இந்த நிராகரிப்பு அவனுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும்.ஆனால் அவள் கூறியதைக் கேட்டு அவன் மனம் அப்பாடா என்றதே ஒழிய ஐய்யோ இப்படி ஆகிவிட்டதே என கலங்கவேயில்லை.இது என்ன விசித்திரமான இதயம் என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.அவன் முகத்தில் எந்த வருத்தமும் இல்லாததைக் கண்டு சமாதானமடைந்த ஹிமா விட்டால் போதுமென


"ஸோ சமர்த் இத சொல்லத் தான் கூப்பிட்டேன்...ஓன் மோர் திங்... எனக்கு நெக்ஸ்ட் வீக் மேரேஜ்...தீரஜ் இன்டெஸ்டீரிஸ் ஓனர் மிஸ்டர் தீரஜ்குமாரோட... நீங்க என் பிரெண்டா அதுல கலந்துக்கனும்...இது மேரேஜ் கார்ட்.. எனக்கு இம்பார்டெண்ட் வேல இருக்கு...ஸோ பை"என்றவாறு எழுந்துக் கொண்டாள்.அப்போது சமர்த் சிறு புன்னகையோடு


"கங்கிராஜுலேஷன்ஸ் ஹிமா!அண்ட் தேங்க் யூ ஸோ மச்"என்றான்


"தேங்க்ஸ்.... எதுக்கு?"


"எனக்கு போன வாரம் என் மாமா பொண்ணோட மேரேஜ் ஆயிடுச்சு...அத உங்கிட்ட சொல்லிட்டு போலாம் தான் சந்திக்க சரின்னு சொன்னேன்...இப்ப நீயும் அதுக்கு தகுந்தாற்போல உன் மேரேஜ் கார்ட் கொடுக்கறே...ஐ ம் ஹாப்பி ஃபார் யூ....விஷ் யூ ஹாப்பி மேரிட் லைஃப்...குட் பை.."என்று அவளை வாழ்த்தியவன் அங்கிருந்து அகன்றான்.அப்பாடா இந்த பெரிய பிரச்சினை இன்றோடு தீர்ந்தது என மகிழ்ச்சி அடைந்தான்.


ஆனால் அவனுக்கு தெரியவில்லை...ஹிமாவின் அத்தியாயம் இன்னும் வாழ்வில் முடியவில்லை என்று.


மறுநாள் பதினாறாம் நாளுக்காக எல்லா பொருட்களையும் சரி செய்துக் கொண்டிருந்தனர்.காரியம் ஆற்றங்கரை மண்டபத்தில் நடப்பதால் அங்கு கொண்டு செல்ல சுலபமான முறையில் எல்லாவற்றையும் பிரித்து பிரித்துக் கட்டி வைத்தனர்.நியதியும் தன்னால் முடிந்தவரை எல்லா வேலையிலும் எல்லாருக்கும் உதவினாள்.மறுநாள் சீக்கிரமாக போக வேண்டியிருப்பதால் பத்து மணி ஆனபோது தூங்க போகுமாறு அவளை அனுப்பி விட்டனர்.தூக்கக் கலக்கத்தில் அவள் மாடிப் படியில் கால் வைத்தபோது வாயிலில் கார் வந்து நிற்கும் ஓசைக் கேட்டது.சமர்த் தான் என்பதை உணர்ந்தவள் வேகமாக படிகளில் ஏறி தன் ரூமிற்கு சென்று கதவை அடைத்துக் கொண்டு விட்டாள்.ஏனோ அவனை நேருக்கு நேராக சந்திக்க இல்லாத தயக்கங்கள் வந்தது.


ஆனால் அவன் இருக்கும் வீட்டில் தானே நீ இனிமேல் வாழ வேண்டும்.அப்படியிருக்கும் போது அவனைப் பார்ப்பதற்கே பயந்தால் எப்படி என்று அவள் மனம் அவளைக் கேள்வி கேட்டது.மனம் கேட்டக் கேள்விக்கு பதிலை ஆராய்ந்தவாறே தூங்கிப் போனாள்.


காலை ஏழு மணி எழுந்தவள் பரபரப்பாக குளித்து டிசைன் ஏதுமில்லாத ப்ளைன் சுடிதாரை அணிந்தவள் தாயின் அறிவுரையால் நெற்றியில் ஒட்டுப் ****** வைத்தவள் பாட்டி அவளுக்கு கொடுத்துச் சென்ற குங்குமசிமிழில் இருந்த குங்குமத்தை நெற்றி வகிட்டில் தீற்றிக் கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்தவள் தன் முகம் தனக்கே வித்தியாசமாக தெரிவதைக் கண்டு திகைத்து நின்றாள்.கீழே அன்னையின் குரல் தன்னைக் கூப்பிடும் குரல் கேட்டவள் வேகமாக படிகளில் இறங்கி வந்தவள் அங்கே படியேறிக் கொண்டிருந்த சமர்த்தின் மேல் மோதப் பார்த்து கண் சிமிட்டும் நேரத்தில் சமாளித்து கைப்படியைப் பிடித்துக் கொண்டு சமாளித்து நின்றாள்.


சமர்த்தும் சுவர் மேல் சாய்ந்து நின்று அவளை மேலும் கீழும் நோட்டம் விட்டான்.அவள் படிகளில் வேகமாக இறங்கியதால் அவள் டாப்பின் வெளியே அவன் கட்டிய தாலி ஊஞ்சலாடி அவள் அவனின் மனைவி என்று பறைசாற்றியது.அவளின் வெண்மையான நெற்றியில் வகிட்டு குங்குமம் செந்தணல் போல் ஜொலித்தது.


கீழே சந்தியாவின் குரல் நியதியின் பேரை உரக்க அழைக்கவும் இருவரும் அந்த மோன நிலையிலிருந்து வெளியே வந்தனர்.


'சே....எல்லாம் இவளால் தான் அன்று இவள் மட்டும் அந்த இடத்தில் இல்லாமல் இருந்திருந்தால் இந்த திருமணமே நடந்திருக்காது'என்று அவன் எண்ணம் சென்றால் நியதியும்


'இவன் மட்டும் அன்னிக்கு ஊர்லேந்து வர்லேன்னா பாட்டி அப்படி ஒரு விஷயத்தை நினைச்சுக் கூடப் பாத்துருக்க மாட்டாங்க....இவன் கூட காலம் பூரா எப்படி வாழறது?'என்று மனதிற்குள் அவனைத் திட்டித் தீர்த்தாள்.


அவரவருக்கு வேலை இருந்ததால் அவன் மாடிக்கும் நியதி கீழேயும் அவரவர் வழியில் சென்றனர்.


அன்று பாட்டியின் பதினாறாம் நாள் நல்லபடியாக நடந்து முடிந்தது.அன்று கிளம்பக் கூடாது என்பதால் மறுநாள் மதியம் உணவுண்டு இரண்டு கார்களில் எல்லாரும் கிளம்பி விட்டனர்.புறப்படும் முன் நித்திலா தான் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு நல்லபடியாக வாழுமாறு ஆசிர்வதித்தாள்.


அவரவர் வீடுகளில் இறக்கிவிட்டு சமர்த்தின் குடும்பம் வீடு வரும் போது இரவு எட்டு மணி ஆகியிருந்தது.முதலில் உள்ளே நுழைந்தது ஆரத்தி கரைத்துக் கொண்டு வந்து சமர்த் நியதிக்கு லலிதாவும் வித்யாவும் ஆரத்தி எடுத்தனர்.வலது காலை வைத்து அந்த விசித்திர தம்பதிகள் இருவரும் உள்ளே சென்றனர்.


பலவருடங்களாக ஒருவருக்கொருவர் சண்டயிட்ட அவர்களுக்கு காதலைக் கற்றுக் கொடுக்க அவர்களின் விதி அங்கேக் காத்துக் கொண்டிருந்தது
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top