• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mr.Perfect-Mrs.Faulty-6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
நம் நூதனத் தம்பதிகள் பெரியப்பா வீட்டிற்கு சென்று வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது.பீச்சில் நடந்த நெருக்கத்தில் நியதி வெட்கத்திலும் சமர்த் தயக்கத்திலும் ஒருவரையொருவர் அதிகம் பார்த்துக் கொள்ளாமலே கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தனர். மூன்றாம் நாள் மாலை கல்லூரியில் ஸ்பெஷல் க்ளாஸ் முடித்து நியதி வீட்டிற்கு வரும்போது இரவு ஏழு மணி ஆகியிருந்தது.வாயிலில் சமர்த்தின் காரைக் கண்டு வேகமாக வீட்டினுள் சென்றவள் இருளில் முழுகியிருந்த வீட்டைக் கண்டுத் திகைத்தாள்.ஹாலின் விளக்கைப் போட்டவள்


'இத்தென்ன வீடு இவ்ளோ இருட்டா இருக்கு....சமர்த் எங்க?'


என்று தனக்குள் பேசியபடி அவனைத் தேடிக் கொண்டு மாடிக்கு விரைத்தாள்.அங்கும் எல்லா இடமும் இருளாகத் தான் இருந்தது.அதைக் கண்டு அவளுக்கு இன்னுமும் பயமாகி விட்டது.வேகமாக சமர்த்தின் அறைக்கு விரைந்தவள் அங்கே விளக்கைப் போட்ட போது தன் படுக்கையில் நினைவின்றி ஏதோ பிதற்றியபடி படுத்திருந்தான் சமர்த்.விரைந்து அவனருகே சென்று அவன் தோளைத் தட்டி எழுப்ப முயன்றாள்.ஆனால் அவனின் உடல் உடையை மீறி சுட்டப் போது அவனுக்கு கடுமையான ஜுரம் அடித்துக் கொண்டிருந்ததை அறிந்து


'ஐய்யோ இப்படி பயங்கரமா சுடுதே....எவ்ளோ நேரமா இப்படி இருக்கானோ?இப்ப நா என்ன செய்றது....'


என்று ஒரு கணம் மலைத்தவள் மறுகணம் வேகமாக செயல்படத் தொடங்கினாள்.அவன் ஆபிஸ் உடையைக் கூட மாறியிருக்க வில்லை.அவன் காலிலிருந்த சாக்ஸை கழற்றி ரூம் மூலையில் போட்டவள் அவனின் முழுக் கைச் சட்டை சிறிது தயக்கத்தோடு கழற்றினாள்.திண்ணென்ற அவனின் மார்பும் தேக்குமர முதுகும் அவளுள் நடுக்கத்தைப் பரப்பியது.அவனின் பீரோவில் அழகாக அடுக்கப்பட்டிருந்த உடைகளில் சற்று கனமான டீசர்ட்டை எடுத்து கஷ்டப்பட்டு அவனுக்கு அணிவித்தாள்.ஆனால் பேண்டை எப்படி மாற்றுவது?!!!!


தன் கைகளில் இருந்த வீட்டில் அணியும் பேண்ட்டை அழுதுவிடுபவள் போல் பார்த்தாள்.


'ஐய்யோ கடவுளே...இது என்னப்பா நியதிக்கு வந்த சோதனை!'


என்று புலம்பியவள் கண்களை இறுக மூடியவாறு தட்டுத்தடுமாறி அவனுக்கு பேண்ட்டை அணிவிப்பதற்குள் வியர்த்து விறுவிறுத்து விட்டாள்.அதற்குள் அவள் முகம் செங்கொழுந்தாகி இருந்தது.அவனுக்கு தலையணையை சரியாக வைத்து கனமானப் போர்வையால் போர்த்தினாள்.


வீட்டு டாக்டருக்கு போன் செய்து விட்டு எலுமிச்சை சாறு சேர்த்த நீரில் சுத்தமான வெள்ளைத் துணியை நனைத்து அவன் நெற்றியில் வைத்தாள்.அரைமணி நேரத்தில் வந்த டாக்டர் சமர்த்தை பரிசோதித்து அவனுக்கு ஃப்ளூ ஜுரம் என்று அறிவித்தார்.ஊசி ஒன்றைப் போட்டு அதற்கு தேவையான மாத்திரைகளைக் கொடுத்தவர்


"ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்கனும்மா....நாலு மணி நேரத்திற்கு ஒரு முறை நா கொடுத்த மாத்திரை கொடுத்திருங்க....சிவ்ரிங் வரலாம்...பயப்பட ஒண்ணுமில்ல...நா காலைல வந்து பாக்கறேன்"


என்று நியதிக்கு அறிவுறுத்தி விட்டு சென்று விட்டார்.


டாக்டர் சென்றபின் ஹோவென்று வந்தது நியதிக்கு.குடும்பத்தவர் யாரையும் அழைக்க முடியாத நிலைமை.பெரியப்பா உடல்நலம் கெட்டவர்...அவரை விட்டு பெரியம்மாவை அழைப்பது சரியில்லை.ஸ்ருதி அக்காவிற்கு தேர்வு சமயம்.நியதி மற்றும் சாருலதாவின் குடும்பம் லலிதா சென்றிருந்த திருமணத்திற்கு சென்றுவிட்டிருந்தனர்.இன்னும் இரண்டு நாட்களுக்கு யாரும் வரப்போவதில்லை.என்ன செய்வது என எண்ணிக் கலக்கியவள்...இல்லை சமர்த்திற்கு சரியாகுவரை தான் தைரியமாக இருக்க வேண்டும்....அவனை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தாள்.


கீழே செய்ய வேண்டிய வேலைகளை விரைவாக முடித்துவிட்டு மேலே அவன் அறைக்கு சென்று அவனருகில் அமர்ந்தாள்.நெற்றியிலிருந்த துணியை அவ்வப்போது நனைத்து அவன் நெற்றியில் வைத்த வண்ணமிருந்தவள் மீண்டும் நாலு மணி நேரத்திற்கு பிறகு மருத்துவர் கூறியபடி மாத்திரைகளை அவனை தன் நெஞ்சில் சாய்ந்தவாறு சிரமப்பட்டு அவனுக்கு கொடுத்தாள்.அவனை சரியாக படுக்க வைத்தவள் அவனையே கண் கொட்டாமல் பார்த்திருந்தாள்.தன் நினைவில்லாமல் படுத்திருந்தவன் ஏதோ ஆதரவற்ற சிறுவனாகத் தோன்றினான்.அவனை கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தவள் தன்னையுமறியாமல் உறங்கிவிட்டாள்.


ஏதோ அசைவில் திடுக்கிட்டு கண் விழித்த நியதி அதீத குளிரால் தூக்கி தூக்கிப் போட்டுக் கொண்டிருந்த சமர்த்தைக் கண்டு பயந்து விட்டாள்.என்னதான் டாக்டர் நடுக்கம் வருமென்று கூறியிருந்தாலும் நிஜமாக அதைப் பார்த்த போது அவள் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது.என்ன செய்வதென்றே தெரியாமல் கையை பிசைந்தவள் சட்டென தோன்றிய வழியை செயல்படுத்த முடிவெடுத்தாள்.


சமர்த்தின் மேலிருந்த போர்வைகளை அகற்றி ஒரு கணம் தயங்கிய நியதி தலையை ஆட்டித் தயக்கத்தை உதறியவள் நடுங்கிக் கொண்டிருந்த கணவனின் மேலேறி படுத்துக் கொண்டு விட்டாள்.எப்போதும் அவனின் நடுக்கம் குறைந்தது எப்போது இவள் உறங்கினாள் எதுவுமே அவளுக்குத் தெரியாது.


முகத்தில் அடித்த சூரிய ஒளியில் அழுத்திய இமைகளை கஷ்டப்பட்டு திறந்த நியதிக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை.மெதுவாக எழ முயன்றவளை எழ முடியாமல் தன் வலிமையான கரங்களால் அணைத்தவாறு துயின்றுக் கொண்டிருந்தான் சமர்த்.


கணவனின் கரங்களில் இருக்கிறோம் என்றவுடன் என்றுமில்லாத நாணம் சூழ்ந்தது அந்த பூவைக்கு.உலகின் எந்த தீங்கும் தன்னை நெருங்கிட முடியாத பாதுகாப்பு உணர்வை அளித்த அவனின் அணைப்பு இப்படியேத் தொடராதா என அவளின் பெண்ணுள்ளம் ஏங்கியது.ஆனால் அவன் விழித்து தன்னை இந்த நிலையில் பார்த்தால் என்ன நினைப்பானோ என்று அவள் இதயம் தடதடத்தது.அவளின் இடையையும் தோளையும் இறுக்கியிருந்த கரங்களை மெதுவாக தன்னிடமிருந்து பிரித்தவள் சட்டென தன் அறைக்கு சென்றுவிட்டாள்.


அவள் குளித்து தயாராகி அவனுக்கு கஞ்சி தயாரித்துக் கொண்டு வந்த போது சமர்த் லேசாக விழித்திருந்தான்.கஞ்சியை அருகிலிருந்த மோடாவில் வைத்தவள் அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.கொதிக்க வில்லை என்றாலும் சூடு இருக்கத்தான் செய்தது.


அவள் தொடுகையில் முழுதாக விழித்திருந்த சமர்த் காய்ந்த தன் உதடுகளை கஷ்டப்பட்டு திறந்து


"நிநியதி....!"


"முகம் கழுவி இந்த கஞ்சிய குடிங்க... அப்பத்தான் மாத்திரை போட்டுக்க முடியும்... ஜுரம் இன்னும் பூரா விடல....ஒரு வாரம் ரெஸ்ட்ல இருக்க சொல்லியிருக்கார் டாக்டர்....இப்ப செக் அப் பண்ண வந்திடுவார்...."


அவள் உதவியோடு முகம் கழுவி அவள் செய்த கஞ்சியை குடித்து அவள் கொடுத்த மாத்திரையை விழிங்கியவன் கண்களால் அவளை விழிங்கினான். வீட்டில் அவள் எப்போதும் அணியும் சாதாரண காட்டன் சுடியைத் தான் அணிந்திருந்தாள்.அலையென சரிந்த கூந்தலை எடுத்து ஒரு க்ளிப்பில் அடக்கியிருந்தாள்.மேக்கப் எதுவும் செய்யாமலேயே மின்னிய பொன் முகத்தை விட்டு தன் கண்களை அகற்றவே முடியவில்லை அவனால்.


அவனை சரியாக தலையணையை சரி செய்து அவனைப் படுக்க வைத்தாள்.அவளின் அருகாமை ஏதேதோ உணர்வுகளை உற்பத்தி செய்தது அவன் மனதில்.தன் மேல் பதிந்த அந்த கைகளை அப்படியே இழுத்து தன் மேல் அவளைப் போட்டுக் கொள்ளத் துடித்த ஆவலை பிரயாசைப் பட்டு அடக்கிக் கொண்டான்.


காலை மறுமுறை வந்த டாக்டர் அவனை பரிசோதித்து ஜுரம் சிறிது குறைந்துவிட்டதாகவும் மாத்திரைகளை தொடருமாறும் கூறிச் சென்றார்.அன்றைக்கெல்லாம் தூக்கமும் விழிப்புமாக இருந்தான் சமர்த்.அவன் விழித்த நேரமெல்லாம் நியதி அவனருகேயே அமர்ந்ததைக் கண்டு தன்னை எப்படி அன்போடு பார்த்துக் கொள்கிறாள் என்ற உவகையடைந்தது அவன் இதயம்.


அன்று இரவு சமர்த்தின் ஜுரம் விட்டிருந்தது இருந்தாலும் அவனைத் தனியே விட பயந்து அவன் ஆழ்ந்து உறங்கிய பின் அவனின் கட்டிலில் மறுபுறத்திலேயே படுத்துக் கொண்டு விட்டாள் நியதி.காலையில் அவன் எழு முன்பே எழுந்து சென்றுவிட வேண்டுமென்று தீர்மானத்திருந்தாள்.


ஆனால் முன் இரவே தூங்கியிருந்ததால் விடியற்காலையிலேயே விழித்து விட்ட சமர்த் தன் அருகே பூங்குவியல் என தூங்கிய தன் மனைவியைக் கண்டு ஒரு கணம் நின்றுத் துடித்தது அவன் இதயம்.


விடிவிளக்கின் ஒளியில் மோகனச் சிலையென தூங்கியவளின் எழிலில் அவளை அப்படியே வாரி அணைத்திட துடித்தது அவன் மனம்.ஆனால் அவளின் உறக்கம் கலைந்து விட்டால் என்று எண்ணி தயங்கியவன் தன் விரலால் அவள் முகத்தில் மென்மையாக கோலமிட்டவன் அது அவளின் உதட்டில் வந்து நின்றதும் மேலே செல்லாது அங்கேயே நின்றுவிட்டது அவனின் விரல்.


அந்த கோவைக்கனியை ஒரு முறை தீண்ட விழைந்தது அவன் உதடுகள்.ஆனால் ஒரு விதமான தயக்கம் தடுத்தது.ஆசையும் தயக்கமுமான அந்த போராட்டதில் ஆசை வென்றுவிடவே அவனை காந்தமென கவரும் இதழை மென்மையாக மூடியது அவனின் இதழ்கள்.ஆனால் தூக்கத்தில் அவனின் மடதி அவன் தோளை அழுத்தவும் திடுக்கிட்டு தன்னிலை அடைந்த சமர்த்


'சே...என்ன காரியம் பண்ணிட்டேன் நான்...மனைவியே ஆனாலும் அவ விருப்பம் தெரியாம அவளை தொடலாமா... அதுவும் படிக்கிற பொண்ணு.... ம்ஊம் அவ படிப்பு முடியற வரைக்கும் என் மனச கட்டுப்படுத்திக்கிட்டு தான் ஆகனும்... அவளுக்கு எந்த டிஸ்ட்ராக்ஷனும் ஆகக் கூடாது....அவ படிப்பு முடிஞ்ச பின்னால தான் எதுவும்..."என்று காதலில் பொங்கிய இதயத்தை வைராக்கியம் என்ற ஆயுதத்தால் அடக்கி விட்டான் நியதியின் மணாளன்.





சாரி பிரண்ட்ஸ் ஐ நோ....யூடி சின்னது.... கண்டிப்பா அடுத்த யூடி பெரிசா வரும் பிரண்ட்ஸ்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top