• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Mr.Perfect-Mrs.Faulty-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
தன் ஸ்கூட்டியில் பெரியப்பா வீட்டை நோக்கி பறந்துக் கோண்டிருந்தாள் நியதி.மனம் உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது.யாரோ சம்பந்தம் இல்லாத ஒருவனை நம்பும் தன் கணவன் கட்டிய மனைவியை நம்பாதது தாங்க முடியாத வலியைக் கொடுத்தது.சிறு வயதிலிருந்தே அது தப்பு இது தவறு என்று பேசி பேசியே அவன் என்றாலே வெறுப்பின் உச்சியில் இருந்தவளை அவனே தன் மென்மையாலும் ஓயாது அவளையேத் தொடரும் பார்வையாலும் அதை காதலாக மாற்றியிருந்தான்.....ஆம் காதல்தான்....அதை ஒத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை அவளுக்கு.அதனாலையே இன்று அவனின் நம்பிக்கையின்மை இந்தளவு தாக்கிவிட்டது அவளது மனதை.


அந்த சுரேஷை நினைத்தால் அவளுக்கு உடலெல்லாம் எரிந்தது.எப்படிப்பட்ட மனிதன் இவன்.உலகில் இருக்கும் அத்தனைக் கெட்டப் பழக்கங்களையும் வைத்துக் கொண்டு பூவை விட மென்மையான தன் ஸ்ருதி அக்காவை மணக்க நினைக்கிறானே...சீக்ரெட் பிடிப்பதைக் கூட வெறுப்பாக பார்க்கும் ஸ்ருதி குடி பெண்கள் சகவாசம் என இருக்கும் இவனை மணந்தால் அவள் நிலை என்ன ஆகும்?


'இல்ல இந்த கல்யாணம் நடக்க நான் விட மாட்டேன்....என்ன ஆனாலும் சரி இத நிறுத்தியே தீருவேன்....சாட்சி தானே வேணும்....ஒண்ணென்ன ஓராயிரம் சாட்சி.....நா கொண்டு வரேன்...'


பாரடைஸ் ஹோட்டலின் முன் தன் ஸ்கூட்டியை நிறுத்தியவள் ரிசப்ஷன் அருகே சென்று


"எக்ஸ்க்யூஸ் மீ...ஒரு இம்பார்ட்டண்ட் டீடைல்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்ஸ்ல செக் பண்ணனும்... கொஞ்சம் ஆபிஸ் இன்சார்ஜ பாக்க முடியுமா?"


"அந்த மாதிரியெல்லாம் கேக்கறவங்களுக்கு எல்லாம் ரெகார்ட்ஸ் காட்றதில்ல மேம்...சாரி"


"ப்ளீஸ்....புரிஞ்சுக்கோங்க....அது ரொம்ப இம்பார்ட்டெண்ட்..."


"சாரி மேம்....அப்படி பண்ண முடியாது... ஹோட்டல் ரூல்ஸ்... நீங்க டிஸ்டர்ப் பண்ணாம போங்க"என்று இந்த முறை சிறிது கடுமையாக கூறினாள் வரவேற்பு பெண்.


அங்கிருந்து சிறிது தள்ளி வந்த நியதி மேலே என்ன செய்வதென யோசித்தாள்.அவள் எண்ணம் சிசிடிவி ஃபூடேஜில் பதிவாகியிருக்கும் அந்த சுரேஷின் லீலைகளை வீட்டில் காட்டி திருமணத்தை நிறுத்தி விடுவது என்று.ஆனால் அப்படி வெளி ஆட்களுக்கு அதையெல்லாம் காட்ட முடியாது என்கிறார்களே! இப்போது என்ன செய்வது என யோசித்த போது சட்டென நிஷாவின் நினைவு வந்தது அவளுக்கு.


நிஷாவின் தந்தை அந்த ஹோட்டலில் ஒரு பங்குதாரர்.அதனாலையே அவர்கள் விழாவெல்லாம் அங்கேயே நடத்தினர்.அவள் கூறினால் ஹோட்டல் நிர்வாகம் கண்டிப்பாக ஃபூடேஜை காட்டுவார்கள்.தன் போனில் நிஷாவின் எண்ணை அழைத்தாள்.இரண்டு மூன்று ரிங் சென்ற பின் போனை எடுத்தாள் நிஷா


"ஹலோ நிஷா!நா நியதி..."


"ஹாய் மச்சி!என்னடி விஷயம்?நா நாளைக்கு தான் காலேஜ் வருவேன்.... இன்னிக்கு ரிலேடிவ்ஸ் வந்திருக்காங்க....காலேஜுல இன்னிக்கு என்ன மேட்டர்?"


"நிஷா...நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்... ரொம்ப அர்ஜென்ட்...என்ன ஏது அதெல்லாம் அப்புறம் சொல்றேன்...."என்று தனக்கு அந்த ஃபூடேஜின் தேவையைக் கூறினாள்.


"இவ்ளோதானே...நா இப்பவே போன் பண்ணி சொல்லிட்றேன்...யூ டோண்ட் வொர்ரி...பை..."


ஐந்து நிமிடங்களில் மாயாஜாலம் போல அந்த ஹோட்டல் மேனேஜரே வந்து நியதியை ஆபிஸ் அறைக்கு அழைத்துச் சென்றார்...குடிக்க ஜுஸ் கூட வந்தது.அவள் எந்தந்த வீடியோ தேவை என்று விவரித்தாள்.ஆனால் அவள் எதை எதிர்ப்பார்த்து வந்தாளோ அது அங்கே இல்லை.தினமும் நூறாரு பேர்கள் அங்கே வந்து போகிறார்கள்.வருபவர் பதினெட்டு வயதுக்கு மேலே இருக்க வேண்டுமே தவிர அவர்களைப் பற்றி வேறு எந்த விவரமும் ஹோட்டலில் கேட்பதில்லை என்று மேஜேர் கூறினார்.ஆறு மாதத்திற்கு முன்பான ஃபூடேஜை அவள் கேட்ட போது


"சாரி மேம்...நாங்க ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி எல்லா ஃபூடேஜயும் டெலிட் பண்ணிடுவோம்.போன வாரம் தான் அத பண்ணினோம்...."


சே...என்றானது நியதிக்கு.அவள் மலை போல் நம்பியது அன்று பப்பில் தன் நினைவின்றி லீலைகள் புரிந்த சுரேஷின் வீடியோவைக் காட்டினால் இந்த திருமணம் கண்டிப்பாக நின்றுவிடும் என்று தான்.ஆனால் அதே இல்லையென்றானதும் அவளுக்கு மேலே என்ன செய்வதென்றே தெரியவில்லை.


ஏமாற்றத்தோடு அவள் வெளியே வந்து அவள் பைக் அருகே சென்ற போது


"மேடம் கொஞ்சம் நில்லுங்க!"


என்றபடி அவளருகில் வந்தான் அவளுக்கு அங்கே ஜுஸ் கொண்டு வந்து வைத்த வெய்டர்.


என்ன என்பது போல் அவனைப் பார்த்தாள் நியதி.


"மேடம் நீங்க தேடற ஆளப் பத்தி எனக்கு தெரியும்னு நினைக்கிறேன்....இங்க வரவங்க முக்கால்வாசி பேர எனக்கு அடையாளம் தெரியும்..."


மனதில் நம்பிக்கை கீற்று அடிக்க


"அப்படியா?!!! சுரேஷ்னு ஒருத்தர் இங்க அடிக்கடி வருவாரான்னு தெரியாது....அவர பத்தி டீடெயில்ஸ் வேணும்.... ரொம்ப அர்ஜென்ட்...இது ஒரு பொண்ணோட வாழ்க்கை பிரச்சினை...."


"மேடம் அவரு போட்டோ இருந்தா காட்டுங்க நா பாத்து சொல்றேன்..."


என்றதும் ஃபேஸ்புக்கில் இருந்த சுரேஷின் ஃப்ரஃபைல் பிச்சரை அவனிடம் காட்டினாள்.


அதை இரண்டு நிமிடம் உற்று நோக்கிய அந்த ஆள்


"ஓ....இவரா!இவர நல்லாத் தெரியுமே....நாலு அஞ்சு வாட்டி வந்திருக்காரு...எப்ப வந்தாலும் வேற வேற பொண்ணுக் கூடத் தான் வருவாரு....போன வாட்டிக் கூட ஃபுல்லா ஏதிக்கிட்டு வேற யாரோ கூடவோ வந்த பொண்ண கைப் புடிச்சு இழுத்து ஒரே கலாட்டாவா..போச்சு...நாங்கெல்லா சேர்ந்து சரிப் பண்ணிட்டோம்...மேனேஜர் காது வரக் கொண்டு போல...ஐந்து பத்து டிப்ஸ கெடுத்துப்பானேன்னு...."


சுரேஷைப் பற்றி சந்தேமென்றாலும் அவன் இவ்வளவு கேவலமானவன் என்பதைக் கேட்ட போது அவள் கோபம் உச்சியை அடைந்தது.
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
சீ...மனுசனா இவன்?!!! இந்த கருமத்துக்கு கல்யாணம் ஒரு கேடா!தேவதை மாதிரி இருக்கற அக்காவுக்கு இந்த சாக்கடை புழுவா புருஷன்...நோ....நெவர்.... இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்காது...நடக்க விடமாட்டேன்...'என்று மனதிற்குள் சூளுரைத்தாள் நியதி.


"இதப் பாருப்பா.... இந்த ஆளு எங்க அக்காவ கல்யாணம் பண்ண பாக்குறான்...நீ நாளைக்கு நா சொல்ற அட்ரசுக்கு வந்து நீ இப்போ என்கிட்ட சொன்னதெல்லாம் அங்க சொல்லனும்.....வரியா?"


"சரி மேடம்...நீங்க விலாசத்தக் கொடுங்க நா கண்டிப்பா வரேன்...எங்கே வேண்ண சொல்லுவேன் இந்தாளு பொறுக்கின்னு"


அவனிடம் நிச்சியம் நடக்கும் ஹாலின் அட்ரசைக் கொடுத்துவிட்டு அவனுக்கு கை செலவுக்கு ஐநூறு ரூபாய்களையும் கொடுத்துவிட்டு இனி திருமணம் நின்றுவிடும் என்ற நிம்மதியோடு வீட்டைச் சென்றடைந்தாள் நியதி.அந்த வெய்டரை ஹாலுக்கு வர சொன்ன காரணம் அந்த சுரேஷயும் வைத்துக் கொண்டே சமர்த் எதிரில் அவனின் வண்டவாளங்களை வெளிச்சம் போட வேண்டும் என்பதே.


மதியம் அவளிடம் கோபமாக பேசி விட்டதால் மனதிற்குள் வருந்தினான் சமர்த்.சற்று மென்மையாக கூறி அவளுக்கு புரிய வைத்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது.அப்பொழுதே வீட்டிற்குச் சென்று அவளை சமாதானம் செய்ய வேண்டும் என எண்ணினான்.ஆனால் திடிரென வந்த அவசர வேலையால் இரவு பத்து மணிக்கு தான் அவன் வீடு வர முடிந்தது.


லலிதா வந்து பரிமாறியதிலேயே மனைவி கடுங்கோபத்தோடு இருக்கிறாள் என்று உணர்ந்துவிட்டான்.வேகமாக உணவுண்டு அவள் அறைக்கு வந்த போது அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.காய்ந்த கண்ணீர் கோடு அவனின் பேச்சை எண்ணி அழுதிருக்கிறாள் என்று காட்டியது.அது அவன் இதயத்தை கத்திக் கொண்டு கீறியது போல் வலியை உண்டாக்கியது.அவள் முகத்தில் வந்து விழுந்திருந்த கூந்தல் சுருளை காதின் பின்னால் ஒதுக்கியவன் அவளின் பட்டுக் கன்னத்தில் அழுத்தமான முத்திரை ஒன்றைப் பதித்தான்.


காலை எல்லோரும் பெரியப்பாவின் வீட்டில் கூடியிருந்தனர்.மதிய உணவிற்கு பின் தான் எல்லோரும் நிச்சயம் நடக்கவிருக்கும் ஹாலிற்கு செல்லவிருந்தனர்.கைகள் அம்மா பெரியம்மா கூறிய வேலைகளை செய்தாலும் மனம் மட்டும் இந்த நிச்சயம் நின்றால் அவளின் குடும்பம் எந்த அளவு வேதனைப்படும் என்று வருந்தினாள்.ஆனால் சுரேஷின் முகத்திரை கிழிந்தால் அனைவரும் நிம்மதி தான் அடைவார்கள் என திடமடைந்தாள்.


மதிய உணவுண்டு ஒரு மணி நேரத்தில் அனைவரும் ஹாலை சென்றடைந்தனர்.சமர்த் எத்தனை முயன்றும் மனைவி அருகில் நெருங்கவே முடியவில்லை.இவன் முகம் காணவும் அந்த இடத்தில் அவள் நிற்பதே இல்லை.எப்படித்தான் அவளை சமாதானப் படுத்துவதோ ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு.


அங்கிருந்த மூலைச் சேரில் யோசனையோடு அவன் அமர்ந்திருந்த போது அங்கு வந்த இளைஞர் பட்டாளம் அவனைச் சுற்றி அமர்ந்துவிட்டனர்.


"என்ன மாம்ஸ்!இப்படி பேஸ்த்து அடிச்ச மாறி உட்கார்ந்திருங்கீங்க....?"


"அதெல்லாம் ஒன்னும் இல்லைடா...சும்மா தான் உட்கார்ந்திருக்கேன்..."


"எங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நெனைச்சியா?டேய் அண்ணா! நீயும் அவளும் கண்ணாமூச்சி ஆட்றது வீட்ல எல்லாருக்குமே தெரியும்..."என்று அவனை வாரினாள் வித்யா.


"அது பெரிசா ஒண்ணும் இல்லை...சின்ன மிஸ்அண்டர்ஸ்டேண்டிங்....சரியாய்டும்...நீங்கள்லா அத பெரிசு பண்ணாதீங்க"


"நாங்க ஏன் பெரிசு பண்ணப் போறோம்?! சீக்கிரம் ரெண்டு பேரும் சரியாய்டுங்க இல்லேன்னா பெரியவங்கள்ட்ட சொல்லிடுவோம்"என்று அவனை மிரட்டினான் அஸ்வின்.


ஆனால் அவர்களின் அந்த சிறு ஊடல் இன்னும் சிறிது நேரத்தில் பெரிதாகப் போவதை அப்போது அவன் அறியவில்லை.


பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஸ்ருதியை அழகாகத் தயார் செய்து ரூமில் அமர்ந்தியிருந்தனர்.எல்லா வேலையும் ஓரளவு முடிந்துவிட்டது.நான்கு மணிக்கு சுரேஷ் வீட்டினர் வந்து விட்டனர்.நிச்சயத்துக்கு இன்னும் நேரமிருந்ததால் எல்லாரும் சென்று கொஞ்சமாக சிற்றுண்டி உண்டு வந்தனர்.


ஹாலிலின் வாயிலிலேயே அந்த வைட்டருக்காகக் காத்திருந்தாள் நியதி.அவனும் சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டான்.இப்போதே பெரியவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று முதலில் சமர்த்துக்கு கூறி அவனே அவர்களுக்கு நிதானமாக விளக்குவான் என்று முடிவெடுத்தவள் அங்கே ஹால் பொறுப்பாளரோடு பேசிக் கொண்டிருந்த சமர்த் அருகே சென்று நின்றாள்.இதுவரை தன்னைக் கண்டு ஓடிய மனைவி இப்போது தானே வந்து அருகில் நிற்கவும் உள்ளம் துள்ளினாலும் சீரியஸான அவளின் முகம் ஏதோ வில்லங்கம் என்று கூறியதால் அவளே கூறட்டும் என்று மவுனமாக நின்றான்.


"ஒரு முக்கியமான விஷயம்.... அந்த மா....ப்பிள்ளைய கூட்டிட்டு கார்டனுக்கு வாங்க"என்று மா வில் அழுத்திக் கூறினாள்.


"எதுக்கு கூட்டிட்டு வரனும்...இங்க பார் நியதி....எங்கிட்ட உளறின மாறி அவருக்கிட்ட ஏதாவது பேசி இன்ஸெல்ட் பண்றதுக்கா...உன் அதிபுத்திசாலி மூளை சொல்றதெல்லாம் கேக்கறத நிறுத்து...நா அவர கூட்டிட்டு எங்கையும் வர மாட்டேன்..."


"வரமாட்டிங்களா?!!!அப்ப சரி அப்போ உள்ள வந்து எல்லார் முன்னாடியும் சொல்றேன்...அப்ப உங்க கீரிப்பிள்ளை மானம் தான் கப்பலேறும்....பரவாயில்லையா?!!!"


அவள் கூறியதைக் கேட்டு திடுக்கிட்ட சமர்த் அவள் எதையும் செய்யக் கூடியவள் தான்...பெரியவர்களுக்குத் தெரிந்து பிரச்சினை பெரிசாவதை விட தானே இதை இன்றோடு முடித்துவிடுவதே சரியானது என்று தீரமானித்தான்.


"சரி...நா கூட்டிட்டு வரேன்..இது லாஸ்ட் டைமா இருக்கட்டும்..."என்று உள்ளே சென்றவன் ஐந்து நிமிடங்களில் சுரேஷ் அவனின் தங்கை கணவன் இருவரோடு கார்டனுக்கு வந்தான்.அங்கே அந்த வெய்டரோடு கணகணவென்ற கோபத்தோடு நின்றிருந்தாள் நியதி.அவர்கள் அருகில் வந்ததும் சுரேஷ்


"சமர்த் இங்க எதுக்கு எங்கள கூட்டிட்டு வந்திங்க?இது யாரு?என்ன விஷயம்?"என்று கேட்டான்


அவன் கேள்வியில் உள்ளுக்குள் கொதித்தாள் நியதி.'ஆஹா...ஆஹஹா...ஒன்னுமே தெரியாத பச்சக் கொழந்த...வாயில வெரல வச்சுக் கடிக்க கூடத் தெரியாது....பண்ற கேப்மாறி தனமெல்லாம் பண்ணிட்டு எப்படி நல்லவன் மாதிரி நடிக்கறான்!அடேய் உன் நடிப்புக்கு ஆஸ்கார் விருது தான்டா கொடுக்கனும்'மனதில் அவனைத் திட்டித் தீர்த்தவள்


"அப்பா வெய்டர்....உனக்குத் தெரிஞ்ச சாரோட நல்லலல கொணத்தையெல்லாம் சொல்லு..."


"நியதி....!"


"நீங்க சும்மா இருங்க...இவன் தண்டவாளத்தை எல்லாம் இந்த வெய்டர் சொல்லுவான்...அப்ப தெரியும் உங்களுக்கு இந்த ரோக் எப்படிப்பட்டவன்னு"


"வாட் இஸ் திஸ் சமர்த்?!! உங்க மனைவி என்ன இப்படி கண்டபடி பேசுறாங்க...சோசைட்டில எனக்குன்னு ஒரு ஸ்டேடஸ் இருக்கு...நிச்சத்தார்த்தம்ன்னு சொல்லி இன்ஸெல்ட் பண்றீங்களா?"


"நிறுத்து உன் ட்ராமாவ....இவன் சொல்லுவான்...நீ பெரிய மனுஷன்னா?சீப் மனுஷனான்னு...நீ சொல்லுப்பா பப்ல நடந்தத"


"ஆமா சார் இந்த ஆளு பப்புக்கு எப்பவும் வேற வேற பொண்ணுங்களோட வருவான் சார்... அன்னைக்கு குடி போதைல வேற ஒருத்தர் கூட வந்தப் பொண்ண கைய்யப் புடிச்சு இழுத்து கேவலமா நடந்தார் சார்.............அப்படி சொல்லுன்னு இந்தம்மா தான் பணம் கொடுத்து கூட்டயாந்தாங்க சார்....பணத்தாசைல வந்தாலும் செய்ற வேலை உறுத்தலா இருந்துச்சி சார்... அதுவும் இவர் மூஞ்சிய பாத்து பாவமாயிடுச்சு சார்...ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டேன் சார்...இவர் யாருன்னே எனக்கு தெரியாது சார்......நா சத்தியமா இவர பாத்ததே இல்ல சார்....என்னெ மன்னிச்சு வுட்ருங்க சார்.... இனிமே என்னிக்கும் இது மாதிரி தப்பு பண்ண மாட்டேன் சார்...."என்றானே பார்க்கலாம்.


நியதியின் காலின் கீழ் பூமி நழுவியது.அந்த வெய்டர் கதையை இப்படி மாற்றி சொல்வான் என்று கனவிலும் அவள் எண்ணியிருக்க வில்லை.


"ஏய்....வெய்டர் ஏன் பொய் சொல்ற?உண்மைய சொல்லு....இந்த ஆளு பொண்களோட பப்க்கு வரல....குடுச்சிட்டு கலாட்டா பண்ணல....? நேத்திக்கு உண்மைய சொன்னவன் இன்னிக்கு ஏன் பொய் சொல்றே?...இப்ப உண்மைய சொல்லப் போறியா?இல்லயா?"


"நியதி......!"


"சொல்லு....உண்மைய..."


"நியதி....ஷட் அப் ....."


"இல்ல இவன் பொய் சொல்....


"ஐ ஸே ஷட் அப் நியதி!வெய்டர் நீ போப்பா.... இனிமே இது மாதிரி என்னிக்கும் செய்யாத...."


அவன் செல்லவும்


"ஸாரி சுரேஷ்....என் வொய்ப் ஒரு ஸ்டுபிட்....ஏதோ தெரியாம செஞ்சுட்டா....அவ செஞ்ச இந்த நான்சென்ஸுக்கு நா சாரி கேட்டுக்கறேன்.... நீங்க எதையும் மனசுல வச்சுக்காதீங்க.... நீங்க உள்ள போங்க.... இனிமே இவளால எந்த ப்ராப்ளமும் வராம நா பாத்துக்கிறேன்..."


"இட்ஸ் ஓகே சமர்த்....பாவம் அவங்க ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ல செஞ்சுட்டாங்கன்னு நெனைக்கிறேன்.... பரவாயில்லை அவங்கள இதுக்காக ஒண்ணும் திட்டிடாதீங்க...நா உள்ளே போறேன்...வாங்க மாப்ள போலாம்"என்று இருவரும் உள்ளே சென்று விட்டனர்.


ரத்தமென சிவந்த கண்களால் மனைவியை முறைத்த சமர்த் அவள் கூறத் தொடங்கிய போது வேண்டாம் என தடுத்து


"வேண்டாம்... இன்னும் எந்த விளக்கமும் சொல்லி உன்னை நீயே இன்னும் கீழ இறக்காத....நா மொதல்லயே சொன்னேன்...வீணா ஒத்தர சந்தேகப்படாதேன்னு... பணத்தைக் கொடுத்து பொய் சாட்சிய கொண்டு வந்து அவர் முன்னாடி என் மரியாதைய கெடுத்துட்ட....இது தான் உனக்கு லாஸ்ட் வானிங்....இனிமே கல்யாணம் முடியற வரைக்கும் வீட்ட விட்டு வெளியல எங்கயும் போக கூடாது... அண்டர்ஸ்டேன்ட்"என்று அவளை பேசவே இடம் கொடாமல் அவனே பேசி அங்கிருந்து அகன்று விட்டான்.


அதிர்ச்சி தாளாமல் அங்கேயே மடிந்து அமர்ந்துவிட்டாள் நியதி.இனி என்ன என்பது பூதாகாரமாக நின்று அவளை மிரட்டியது.உலகமகா கெட்டவன் சுரேஷ் என்று தெரிந்தும் அவனை அக்கா திருமணம் செய்வதைத் தான் எப்படி வேடிக்கைப் பார்க்க முடியும்?தலை வெடித்து விடும் போல வலித்தது.தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்தாள்.அருகில் நிழலாடுவதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தால் எள்ளல் நகையோடு நின்றிருந்தான் சுரேஷ்.


"ச்சுச்சு....பாவம் ஜேம்ஸ்பாண்ட் லேடி இப்படி தோத்து என்னடா பண்றதுன்னு உக்கார்ந்திருக்கறத பாத்தா ஐயோ பாவம்னு தோணுது..... கஷ்டப்பட்டு தேடி இவன கெட்டவன்னு நிரூபிக்க சாட்சியக் கொண்டு வந்தா...அவன் திடிர்னு ப்ளேட்ட திருப்பிட்டான்னு உனக்கு ஆச்சரியமா இருக்கா....நீ ஐநூறு ரூபாய் கொடுத்து உண்மைய சொல்ல சொன்னா...நா ஐம்பதாயிரம் கொடுத்து அந்த உண்மையோட கழுத்தை நெரிச்சு கொன்னுட்டேன்.....நேத்து நீ பாரடைஸ்ல அந்த வெய்டரோட பேசினத என் தங்கச்சி புருஷன் அதாவது என் செல்ல மாப்ள குடிக்க பாருக்கு வந்தவன் உங்க பேச்ச ஒட்டுக் கேட்டு எனக்கு சொல்லிட்டான்.... அந்த வெய்டருக்கு பணத்தைக் கொடுத்து இங்க வராம செஞ்சுருக்கலாம் ஆனா எனக்கு அது போதாதே....என்னைப் பத்தி போட்டுக் கொடுத்து தி கிரேட் ஞானசேகரன் மாப்ள ஆகற என் கனவை கலக்க பாத்த உன்ன உன் புருஷனே சீ ன்னு காரித் துப்பனும்னு தான் அந்த வெய்டர இங்க வர சொல்லி என்னை கவுக்க நீ போட்ட பிளான்ல உன்னையே கவுத்திட்டேன்.... இனிமேயாவது இந்த சுரேஷ் விஷயத்துல தலையிடாம நல்ல புள்ளையா கல்யாணத்துக்கு வந்தோமா இரண்டு அட்சதய போட்டாமா சோத்த தின்னோமான்னு போயிக்கிட்டே இருக்கனும்.... புரிஞ்சுதா"


என்று விஷத்தை கக்கிவிட்டு அந்த கருநாகம் அங்கிருந்து அகன்றது.


'பாவி!பாடுபாவி!இது இத்தனையும் உன் வேல தானா?!!நீ கெட்டவன்னு நிரூபிக்க இருந்த ஒரு சாட்சியும் அழிச்சிட்டியேடா!.......இல்ல நா இத்தோட விடமாட்டேன்.....உன் முகமூடிய கிழிச்சு....உன் அயோக்கியதனத்தை வெளில அதன் பேருக்கும் புரிய வச்சு....எந்த புருஷன் உன் பேச்சக் கேட்டு என்னைத் தப்பா நெனைச்சாரோ அவரே உன்னை அடிச்சு பீஸ் பீஸா உன்னை கிழிக்க வைக்கல...நா மிஸஸ் நியதி சமர்த் இல்ல'
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top