Naan aval illai - 46

Monisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
Hi friends,
முந்தைய பதிவில் எல்லோருமே சையத்தை பாராட்டியதில் எனக்கு அதீத சந்தோஷம்.
அதே போல் இந்த பதிவுக்கான உங்கள் கருத்துக்களையும் மறவாமல் தந்தருளூங்கள்.விதி வலியது


"ஏ, கம்மிங் வீக் ராகவோட படம் ரிலீஸாகுது... நம்மெல்லாம் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ போறோம்... என்ஜாய் பன்றோம்" என்று வேந்தனின் நண்பன் சரவணன் சொல்லிக் கொண்டிருந்தான்.

மற்றொரு நண்பன் யோசனையோடு "படம் நல்லா இருக்கும்மா... " என்று சந்தேகித்து கேட்க,

"டே... டைரக்ட்ர் நந்தக்குமார் படம்டா... அதுவும் இல்லாம ராகவோட படமெல்லாம் வரிசையா ஹிட்தான்... இதுவும் ஹிட்டாகும்... ஹிட்டாயிடுச்சுன்னா இது அவனுக்கு ஹேட் டிரிக்" என்று ராகவின் புகழுரையை பாடிக் கொண்டிருக்க அந்த நண்பர் குழு மொத்தமாய் அதற்கு ஆமோதித்தது வேந்தனை தவிர. .அவன் மட்டும் சிகரெட்டை பிடித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான்.

அதை கண்டு கொண்ட சரவணன் "என்ன மச்சான் ? பேசவே மாட்டிற... படத்துக்கு நீ வர்றியா இல்லையா ?!" என்று கேட்கவும் வேந்தன் தன் சிகரெட்டை காலில் மிதித்துவிட்டு நிமிர்ந்து பார்த்து,

"இல்ல சரோ... நான் உடனே கெனடா கிளம்பனும்... ஸோ நான் வர முடியாது" என்க, எல்லோரின் முகமும் வாடிப்போனது.

"என்ன மச்சான் ? இப்படி சொல்ற" என்று ஒருவன் வருத்தமுற, எல்லோருமே வேந்தனிடம் அவனை இன்னும் இருவாரங்கள் தங்கியிருக்க சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவன் வேலை இருப்பதாக சொல்லி திட்டவட்டமாய் மறுத்துவிட்டு, "டைமாச்சு... வீட்டில தேடுவாங்க... நான் கிளம்பிறேன்" என்று புறப்பட, அவனை இன்னும் சிலமணி நேரம் இருக்க சொல்லி அவன் நண்பர்கள் கேட்க, யாருக்கும் அசைந்து கொடுக்காமல் அவன் தன் பைக்கை இயக்கி புறப்பட்டுவிட்டான்.

அவனின் நினைப்பெல்லாம் சாக்ஷியை பற்றியே இருக்க அவர்களோடு அவனால் இயல்பாக கலந்து பேச முடியவில்லை.

அவள் முகம் திரும்ப திரும்ப அவன் கண்முன்னே வந்துப் போய் கொண்டிருந்தது.

போதாக் குறைக்கு அவளை நெருக்கமாய் பார்த்ததிலிருந்து அவன் அவனாக இல்லை. அவளை அடைய வேண்டும் என்ற ஆசை அபிரமிதமாய் பெருகியிருக்க அவள் தன் தம்பியின் காதலுக்கு உரியவள் என்ற ஒரே விஷயம் மட்டும்தான் அவன் தன் எல்லையை மீறவிடாமல் கட்டுக்குள் நிறுத்தியிருந்தது.

ஆனால் அவளை பார்க்க வேண்டுமென்று உள்ளூர தோன்றிய ஆசையில் சாரதா இல்லத்தின் வாசலில் பைக்கோடு சென்று நின்றான்.

ஆனால் அவனின் வெகுநேரம் காத்திருப்பில் ஏமாற்றமே மிஞ்ச, திரும்பி செல்லும் போது அவளே அந்த வழியாக தனித்து நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அது அவனின் அதிர்ஷ்டமா இல்லை அவளின் துரதிஷ்டமா ? அவள் தனிமையில் நடந்து வந்து கொண்டிருக்க அவன் தன் பைக்கை தாறுமாறாக கொண்டுவந்து அவளை வழிறித்து நிற்கவும் துணுக்குற்றாள் சாக்ஷி.

"கொஞ்சங் கூட அறிவில்லயா உங்களுக்கு... இப்படி குறுக்கால வந்துதான் வண்டியை நிறுத்துவாங்களா ?!" என்றவள் கடிந்து கொள்ள அவன் உரக்க சிரித்துவிட்டு

"நானாடி உன் வழில வந்தேன்... நீதான்டி என் வழில வந்த" என்றான்.

வேந்தனின் குரலை அவள் அடையாளம் கண்டுகொண்டாள். முந்தைய நாள் மகிழ் வீட்டில் அவன் நடந்து கொண்ட விதத்தை அவளால் எப்படி மறக்க முடியும்.

அவளுக்குள் படபடப்பு அதிகரிக்க அவனிடம் பேச்சு கொடுக்காமல் அவனை அவள் கடந்து செல்ல முற்பட, எந்த பக்கமும் வழியில்லாமல் அவன் பைக் வழிமறித்தது.

தவிப்போடு "உங்களுக்கு என்ன வேணும் இப்போ ?" என்று கேட்க,

"நீதான் வேணும்" என்க, அவளுக்கு தேகம் முழுக்க பற்றி எறிந்தது போல் இருக்க அவனை சீற்றமாய் பார்த்தவள்,

"சே... நீங்க போய் மகிழோட அண்ணனா ? என்னால நம்பவே முடியல" என்றவள் முகத்தை சுளிக்க,

அவன் புன்னகை ததும்ப "நான் அவனோட அண்ணன் இல்ல... அவன்தான் என்னோட தம்பி... " என்றான்.

அவள் அங்கே நிற்க முடியாமல் செல்ல முயற்சி செய்ய அவன் வழிவிடாமல் தன் பைக்கில் அவளுக்கு தடுப்பணை போட்டபடி "நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போடி" என்றான்.

"என்ன கேட்டீங்க. ?" அவள் புரியாமல் கேட்க,

"என் கூட கெனடா வந்திருன்னு சொன்னேனே மறந்திட்டியா ?"

அவள் எரிச்சலோடு "அன்னைக்கே நான் அதுக்கு பதில் சொல்லிட்டேன்" என்றவள் உரைக்க,

"என்னடி சொன்ன ?" என்று அவன் குழப்பமாய் கேட்க,

"செருப்பு பிஞ்சிருன்னு சொன்னேனே மறந்திட்டிங்களா ?" என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லி நிறுத்த,

அவன் சினத்தோடு பைக்கில் இருந்து இறங்கி வந்து அவளை உரசியபடி "எங்க அடிடி பார்ப்போம்" என்க,

அவளும் சீற்றத்தோடு,"வேண்டாம்... நான் சத்தம் போட்டு கத்தி ஊரை கூட்டுவேன்" என்றவள் எச்சரிக்க அவன் அந்த நொடி பார்வையை சுழற்றினான்.

இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தில் குடியிருப்புகள் கூட ஒன்றிரடுதான் இருந்தது.

அவன் அலட்சியமாக சிரித்தபடி "கத்துடி... அன்னைக்கு மாறி இல்ல... இங்க உன்னை காப்பாத்த ஒரு ஈ காக்கா கூட இல்ல" என்று அவன் வன்மமாய் உரைக்க, அவளை பயம் ஆட்கொண்டது.

வெலவெலத்து போனவள் சுற்றிலும் ஏதேனும் சத்தம் எழுகிறதா என செவியை தீட்டிக் கொண்டு கேட்க, அவ்வப்போது வேகமாய் சீறிக் கொண்டு கடந்து சென்ற வாகனங்களின் சத்தம் மட்டுமே கேட்டது.

அப்போதுதான் அவள் உணர்ந்தாள். மாயாவை விடுத்து தனியே புறப்பட்டு வந்தது எத்தனை பெரிய தவறு என்று.

மகிழை பற்றிய சிந்தனையில் கோவிலில் வந்து அமர்ந்து தன்னிலை மறந்து கிடந்தவளுக்கு நேரம் கடந்து இருள் அடர்ந்து கொண்டிருப்பதை உணர முடியாமல் போனது.

கோவில் அர்ச்சகரின் குரல் கேட்டு விழிப்படைந்தவள் அங்கிருந்து அப்போதுதான் புறப்பட்டாள்.

கைப்பேசியையும் இல்லத்திலயே மறந்துவிட்டதால் அதுவும் அவளின் நேரத்தை மறக்கடித்திருந்தது. இல்லையெனில் மாயா அவளை அழைத்து இருக்கும் இடத்தை கேட்டிருப்பாளே!

அருகிலிருக்கும் கோவிலுக்குதானே என்று எப்போதும் போல் புறப்பட்டு வந்தவளுக்கு இப்படி வேந்தன் வழிமறித்து தவறாய் நடந்து கொள்வான் என்று முன்னமே தெரியுமா என்ன. ?

விதி வலியது என்பார்களே. அது அவள் விஷயத்தில் ரொம்பவும் பொருந்திப் போனது.

எச்சிலை கூட்டி விழுங்கி கொண்டு அவள் அவனை விலகி போக முயற்சி செய்ய அவன் கரம் அவளின் வெற்று இடையை அணைத்து பிடித்தது.

பதறியவள் அவன் கரத்தை இழுத்து தள்ளியபடி "யாராச்சும் காப்பாத்துங்க" என்று சத்தமிட, அவன் சிரித்து கொண்டே அவளை நெருங்கவும் அவள் தன் கையிலிருந்த ஸ்டிக்கால் அவனை தாக்க முற்பட்டாள்.

அந்த ஸ்டிக்கை அவள் வீசியதால் அவனுக்கு அடிப்பட அவளை விட்டு விலகியவன், கோபத்தில் அதனை அவள் கையிலிருந்து பறித்து தூக்கியெறிய அவளும் தடுமாறி கீழே விழ நேர்ந்தது.

அவள் ஸ்டிக் விழுந்த சத்தத்தை கேட்டு அதன் திசையை கணித்தவள் "என் ஸ்டிக்" என்று தட்டுத்தடுமாறி எடுக்க போக, அப்போது யாரும் எதிர்பாராமல் அதிவேகமாய் வந்த கார் அவளை இடித்தது.

தடுமாறி அவள் எழமுடியாமல் ரோட்டில் விழ, அவளை காப்பாற்ற முற்பட்டால் தான்தான் பிரச்சனையில் சிக்கி கொள்வோம் என்று எண்ணியவன் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதை கூட கவனிக்காமல் வேகமாக தன் பைக்கை ஓட்டிச் சென்றுவிட்டான்.

இந்த சம்பவத்தை வேந்தன் சொல்லி முடிக்கும் போது அவன் முகம் குற்றவுணர்வில் மூழ்கியிருக்க, மகிழ்
உயிரற்ற பார்வையோடு கிடந்தான்.

அவன் பார்வை கண்ணெதிரே இருக்கும் எதையும் காட்சிபடுத்தவில்லை. சாக்ஷியின் முகத்தை மட்டுமே முன்னிறுத்தியது. அந்த சம்பவத்தை கற்பனை செய்து பார்த்து துடித்து போயிருந்தான்.

'என்னை விடவா உங்களுக்கு அவர் மேல கோபம்' என்று மருத்துவமனையில் அவள் கேட்டதின் அர்த்தத்தை இப்போது புரிந்தது அவனுக்கு.

அவள் உரைத்தது எத்தனை வலி மிகுந்த வார்த்தை. அதனை உணராமல் அவளை கடிந்து கொண்டதை எண்ணி வருத்தமுற்றவன் தன் அவசர புத்தியை தானே சாடிக் கொள்ள, "மகிழ்" என்று வேந்தனின் அழைப்பு அவனை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

"உன்னை கொல்லனுங்கிற அளவுக்கு வெறி எனக்கு வருது... ஆனா முடியல... உன் உயிரை அவ காப்பாத்தியிருக்கா பாரு... அது அதுதான் உனக்கு பெரிய தண்டனை... நீ உயிரோட இருக்கிற ஒவ்வொரு நொடியும் அதை நினைச்சி நினைச்சி குற்றவுணர்வில சாகனும் டா" என்றவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் உரைக்க, அவனின் கோபத்தையும் வலியையும் வேந்தனால் அப்போது புரிந்து கொள்ள முடிந்தது.

அதே நேரம் அது சரி செய்ய கூடிய கோபமும் அல்ல என்று அவனுக்கு தெரியும். ஆனால் சாக்ஷியை பார்த்து மன்னிப்பு கோர வேண்டும் என்று அவன் மனம் துடித்து கொண்டிருந்ததும் உண்மை.

அன்று அவனுக்கு விபத்து நிகழ்ந்து எல்லோரும் அவனை அவள் காரில் கிடத்திய போது அறைகுறை மயக்கத்தில்தான் இருந்தான்.

அவள் காரில் அவன் தலையை நிமிர்த்தி பிடித்த போது அவனும் அவள் முகத்தை பார்க்க நேர்ந்தது. அந்த மயக்க நிலையிலும் அவள் முகத்தை அவன் விழிகள் அடையாளம் கண்டுகொண்டன. மறக்க கூடிய முகமா அது.

அதுவும் அவனை பார்த்த நொடி அவள் பார்வையில் கோபம் ஏற்பட்ட போதும் அதனை மறந்து அவன் உயிரை காப்பாற்ற அவள் துடித்ததை இப்போது எண்ணினாலும் அவனுக்கு வலியாயிருந்தது.

சாக்ஷி வாழ்க்கையில் தான் ஏற்படுத்திய குழப்பத்திற்கும் அவளுக்கு செய்த அவமானத்திற்கும் மன்னிப்பு என்ற வார்த்தை ஈடாகாதுதான்.

ஆனால் வாழ்நாட்களை எண்ணி கொண்டிருக்கும் அவனுக்கு அந்த மன்னிப்பை கோர்வதன் மூலமாக லேசாய் ஒரு மனஅமைதி கிட்டும் என்ற நப்பாசைதான்.


மின்சாரத்தை பாய்ச்சியது


ராகவ் சினிமாவில் உடையலங்காரம் செய்யும் கைதேர்ந்த நிபுணர்களை வைத்து ஜென்னியின் திருமண உடைகளை வடிவமைக்க ஏற்பாடு செய்தான்.

அவள் சொன்னபடிதான் உடைகள் எல்லாம் வடிவமைக்கப்பட்டு வந்தன. ஆனால் அவள் ஒன்றுவிடாமல் எல்லா உடைகளையும் குறை சொல்லி அங்குள்ளவர்களை ஒரு வழி செய்து கொண்டிருந்தாள்.

அந்த நீளமான வெள்ளை கவுனை அவள் தரையில் தவழ அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்தவள், "ஏதோ மிஸ்ஸிங்... இல்ல ராகவ்" என்று கேட்க, அவன் நொந்துவிட்டான்.
 

Monisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
அவன் பார்வைக்கு அது அழகாகதான் இருந்தான். அவளோ அந்த உடையில் பேரழகியாகதான் தெரிந்தாள். ஆனால் அவள் பார்வைக்கு மட்டும் அப்படி என்ன குறை தெரிகிறது என்று அவனால் கணிக்க முடியவில்லை.


அவளோ உடை வடிவமைபாளர்களிடம் "இன்னும் கூட கொஞ்சம் கிராண்டா இருந்திருக்கலாம்... அன் இன்னும் கூட கொஞ்சம் டெக்ரேட்டிவ்வா இருந்திருக்கலாம்" என்று அவள் திருப்தியடையாமல் உரைக்க,

"இல்ல மேடம்... இன்னும் கிராண்டா பண்ணா கவுன் வெயிட்டாயிடும்... மோரோவர் இது எய்ட்டீன் லேக்ஸ்... இன்னும் வொர்க் பண்ண ரேட் இன்கிரீஸ் ஆகும்" என்று சொல்லவும் கோபமான பார்வையோடு "வாட் நான்ஸென்ஸ்..மணி இஸ் நாட் அ மேட்டர்... எனக்கு மாடிபைஃவ் பண்ணி நான் சொன்ன மாரி பண்ணுங்க... யாருமே இவ்வளவு கிராண்டா போட்டிருக்க கூடாது... அப்படி இருக்கனும்... வெயிட்டெல்லாம் பத்தி யோசிக்காதீங்க... எவ்வளவு கனமா இருந்தாலும் அதை நான் தாங்குவேன்" என்றவள் அழுத்தமாய் சொல்லவும்,

ராகவ் அவளிடம் "வெயிட்ட இருந்தா உனக்குதான் கஷ்டம்" என்றான்.

அவள் புன்னகையித்துவிட்டு "லைஃப்ல ஒரு தடவைதான் சில வாய்ப்புகள் கிடைக்கும்... அதை தவறவிட்டா அப்புறம் திரும்பி அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமலே போயிடும்... ஸோ எனக்கு எல்லாமே தி பெஸ்ட்டா இருக்கனும்" என்று தீர்க்காமாய் அவள் கூறவும் அவனும் வேறுவழியின்றி அவள் சொன்னதை புரிந்தும் புரியாமலும் ஆமோதித்தான்.

அதே நேரம் உடை வடிவமைப்பாளர்களிடம் அவள் எப்படி சொல்கிறாளோ அவ்விதம் செய்ய சொன்னவன், பணத்தை பற்றி கவலை இல்லை என்றான்.

ஆனால் அவன் தந்தையை பிரிந்துவந்திருக்கும் நிலையில் பணத்தின் முக்கியத்துவம் அவனுக்கு புரிய ஆரம்பித்திருந்தது.

அவள் தேர்வு செய்யும் எல்லாமே தனித்துவமாய் ஆடம்பரமாய் இருந்தது.

அவன் பத்து மடங்காய் பார்த்தாள். அவள் இருபது மடங்காய் தேர்ந்தெடுதாள்.

மனோ நேரடியாக சொல்லாவிட்டாலும் பணம் செலவழிவது குறித்து ஒளிவுமறைவாய் எச்சரிக்கை மணியை அடித்து கொண்டுதானிருந்தான்.

ஆனால் ராகவின் மனம் அவளை தாண்டி எதையும் சிந்திக்கவில்லை.

அவனின் மூளையை மழுங்கடிக்கும் போதையாக அல்லவா அவள் இருந்தாள்.

போதை என்பதே நம்மை மறக்கடிப்பதுதானே. அவன் மொத்தமாய் அந்த நொடி மறக்கடிக்கப்பட்டிருந்தான்.

ஜென்னி அந்த வெள்ளை கவுனில் அத்தனை ஆடம்பரமாகவும் அழகாகவும் காட்சியளிக்க அவளை ஆழ்ந்து ரசித்து கொண்டிருந்தவன் அவளின் காதருகே ஹஸ்கி குரலில் "நீ இந்த டிரஸ்ல அப்படியே தேவதை மாறி இருக்க... இப்பவே கூட நம்ம மேரேஜ் நடந்தா எனக்கு ஹேப்பிதான்" என்றதும் அவனை அவள் திரும்பி முறைக்க,

அவன் மேலும் "இப்பவே உன் விரலில் மோதிரம் போட்டுட்டா கூட எனக்கு ஒகே" என்றவன் கிறக்கத்தோடு அவள் கரத்தை பற்றவும்

"எங்க இருக்கோம்னு கொஞ்சம் யோசிச்சிட்டு பேசுங்க" என்று அவள் கரத்தை அவசரமாய் இழுத்து கொண்டு விலகி சென்றாள்.

அவன் ஏக்கமாய் பெருமூச்செறிந்திருக்க,

ஜென்னி அப்போது அவள் விரலில் சூடியிருந்த மோதிரத்தை பார்த்து புன்னகையித்து கொண்டாள்.

டேவிட் அவளுக்கு அணிவித்த மோதிரம் அது.

அவள் மனம் அந்த நொடி அங்கே நிற்காமல் பின்னோக்கி சென்றது. ராகவை பற்றி கேள்வி எழுப்பி டேவிட் பார்த்த பார்வையில் அவளின் மனோதிடம் வலுவிழந்தது.

எல்லோரையும் தன் சாமர்த்தியான பேச்சால் சமாளித்தவளுக்கு டேவிடை மட்டும் அப்படி முடியவில்லை. அவன் பார்வையில் ஏதோ ஓன்று இருந்தது. உண்மையை பேச சொல்லி அவளை பணித்தது.

மனதில் உள்ள எதையும் மறைக்காமல் அவள் சொல்லிவிட டேவிடை அன்று முற்றிலுமாய் வேறுபரிமாணத்தில் கண்டாள். அத்தனை கோபமாய் மாறியவனை மீட்டு கட்டுக்குள் கொண்டு வர அவள் ரொம்பவும் சிரமப்பட்டுவிட்டாள்.

சாது மிரண்டால் காட கொள்ளாது என்பார்களே!

அப்படிதான் இருந்தது அவனின் சீற்றம்.

ஆனால் ஒருவழியாக ஜென்னி அவனிடம் கெஞ்சலாய் வேண்டி கேட்க, மெல்ல தன் கோபத்திலிருந்து இறங்கி வந்தவன் "நீ சொன்னதுக்காக பார்க்கிறேன்... இல்லன்னா அந்த ராகவை இப்பவே கொன்னு புதைச்சிடுவேன்" என்க, அவள் மூச்சை இழுத்துவிட்டாள்.

ஒருவழியாய் அவனை சமாளித்தாயிற்று என்று அவள் நிம்மதியடைய, டேவிட் தன் கைகடிகாரத்தை பார்த்தான்.

அவன் புறப்பட போகிறானோ என்ற அச்சத்தில் "ப்ளைட்டுக்கு லேட்டாயிருக்கும் இல்ல" என்க,

அவன் புன்முறுவலோடு "இல்ல ஜென்னி... இன்னும் டைம் இருக்கு... இப்ப கிளம்பினா கூட ப்ளைட்டை பிடிச்சிடலாம்" என்றவன் சொல்லவும் அதிர்ந்தவள்,

"அப்போ கிளம்ப போறீங்களா ?" என்றவள் ஏக்கப் பார்வையோடு கேட்டாள்.

"போக வேண்டாங்கிறியா ?!" அவன் அவளை கேள்விகுறியாய் பார்க்க, "உம்ஹும்" என்று மறுப்பாய் தலையசைத்தாள்.

அந்த பயணச்சீட்டை அவள் முன்னரே இரண்டாய் கிழித்து அவள் கரத்தில் வைக்க, அவள் முகமெல்லாம் பிரகாசித்தது.

"இதைதானே நீ எதிர்பார்த்த" என்றவன் கேட்க, அவள் புன்னகை இழையோட "ஹ்ம்ம்" என்றாள்.

"உன் தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம்" என்று அவன் சன்னமான குரலில் சொல்லி அவளை நெருங்கி வர, "டேவிட்" என்றவள் பதட்டமடைந்தாள்.

"நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ஜென்னி" என்றவன் பார்வை அவள் விழியோடு கலந்திருக்க,

அவள் தயக்கத்தோடு "நான் சொல்றதை கேளுங்க டேவிட்" என்றதும் அவன் கரத்தை அவள் உதட்டில் மூடியவன் "நீ எதுவும் சொல்ல வேண்டாம்... நம்ம கல்யாணம் நடக்கதான் போகுது... அது நடந்தே தீரும்..." என்று அவன் சொல்லும் போதே அவள் வியப்பின் விளிம்பில் இருக்க, டேவிட் தன் அறை கப்போர்ட் கதவை திறந்து துழாவி எதையோ எடுத்து வந்தான்.

அவள் கலக்கத்தோடு என்னவென்று பார்க்க அவன் தன் கரத்திலிருந்த மோதிரத்தை காட்டி "உன்னை காதலிக்க ஆரம்பிச்சதும் இதை நான் உனக்காக ஆசையா வாங்கி வைச்சது" என்றவன் அதனை காட்ட அவன் கரத்திற்குள் அது மின்னலென பளிச்சிட்டு கொண்டிருந்தது.

அவள் பதட்டத்தோடு "அவசர படிறீங்களோன்னு தோணுது... வெறுமையா ஒரு வாழ்க்கை எத்தனை நாளுக்கு வாழ முடியும்... ப்ராக்டிக்கலா கொஞ்சம் யோசிச்சி பாருங்க" என்க, அவளை மட்டுமே குறியாய் பார்த்திருந்த அவன் விழிகள் அவளை தன்வசம் இழுத்து கொண்டிருந்தது.

அவன் ரொம்பவும் நிதானமாக "உன் பயமும் கவலையும் எனக்கு நல்லா புரியுது ஜென்னி... நீ சொல்ற மாதிரி வெறுமையா ஒரு வாழ்க்கையை வாழ முடியாதுதான்... ஆனா காதலோடு வாழலாம்... கடைசி வரைக்கும்... இந்த டேவிடுக்கு நரைச்சி வயசாகி முடியெல்லாம் கொட்டி கெழவனாகிற வரைக்கும்" என்ற போது அவள் விழியில் நீர் நிரம்பி நின்றது.

இருப்பினும் அவன் சொன்னதை அவளால் அப்போதும் ஏற்க முடியவில்லை.

வெறும் காதலோடு மட்டும் தன்னோடு அவனை வாழ சொல்வது சுயநலம் அல்லவா ?

அவனின் ஆசபாசங்கள் எல்லாம் பொய்த்து போகாதா ?

அதுவும் டேவிட் மாதிரி எந்த பொண்ணையும் சிந்தையாலும் தீண்டி அறியாதவனுக்கு இது தான் பெரிய அநியாயம் இல்லையா என்றவள் தவிப்புற,

"என்ன ஜென்னி யோசிக்கிற. ?" என்று டேவிட் கேட்க,

"உங்களுக்கு மனசு உடம்புன்னு இரண்டுத்தையும் முழுசா என்னால கொடுக்க முடியாது... அப்புறம் எப்படி ?

சொல் பேச்சு கேளுங்க டேவிட்... என்னை விட்டுவிடுங்க ப்ளீஸ்... என்னால வாழ்க்கை பூரா ஒரு கில்டி ப்லீங்கோட... உம்ஹும் என்னால முடியாது" என்று தலையசைத்து அவள் அழுத்தமாய் மறுப்புதெரிவிக்க,

அவள் தலையயை நிமிர்த்தி பிடித்தவன்
"கில்டியெல்லாம் எதுக்கு ?... முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கோ... அன்னைக்கு உன் வாழ்க்கையில நடந்தது பெரிய அநியாயம்... ரொம்ப ரொம்ப மோசமான விபத்து

அதனால மனசளவில் நீ ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கதான்... என்னால புரிஞ்சிக்க முடியாது... ஆனா தாம்பத்யங்கிறது வேற... இட்ஸ் ப்யூர்லி மென்ட் வித் லவ்...

அது நமக்குள்ள நடக்கும் ஜென்னி... நீ விருப்பபடும் போது நடக்கும்... நீ விருப்பப்பட்டாதான் நடக்கும்" என்றவன் அந்த கணம் அவள் கரம் பற்றி விரல்களில் அந்த வைர மோதிரத்தை அவள் கவனிக்கும் முன்னரே அணிவித்தான்.

"டேவிட்" என்று அவள் அதிர்ச்சியோடு அவளின் விரலுக்கு மெருகேற்றியிருந்த அந்த மோதிரத்தை பார்க்க, அவன் கரத்தை சுவற்றில் ஊன்றி அவளை தன் கரத்திற்குள் நிறுத்தினான் அவளை தொடாமலே.

அவள் விழிகள் அவனை மட்டும் நிலைநிறுத்தி கொண்டிருக்க, அவள் கரத்தை பற்றியபடி "ஐ லவ் யூ ஜென்னி" என்று சொல்லி அவன் மோதிரம் அணிவித்த அவள் கரத்தை பற்றி முத்தமிட்டான்.

மின்சாரத்தை பாய்ச்சியது போல் அவள் தேகமெல்லாம் சிலிர்ப்படைந்தது.

அவள் உடலெல்லாம் உஷ்ணம் ஏறி கொண்டிருக்க, அவளிடம் நெருக்கமாய் வந்து அவள் நெற்றியில் அழுத்தமாய் தம் இதழ்களை பதிக்க, அவள் உணர்வுகள் கிளர்த்தெழுந்து கொண்டன.

அவனின் தீண்டலை அவள் வெகுவாய் ரசிக்க, அவன் பார்வை சற்று இறங்கி அவள் இதழ்களை நோக்கி வரவும் அவள் கலக்கத்தோடு தம் விழிகளை இறுக மூடிக் கொள்ள, அவன் கரம் அவள் கன்னத்தை வருடியபடி "டோன்ட் வொர்ரி... நீயா பழசை மறந்து எல்லாத்தையும் இயல்பா அக்செப்ட் பண்ணிக்கிற வரைக்கும் நான் வெயிட் பன்றேன்" என்ற சொல்லி அவன் விலகவும் அவள் விழிகளை திறந்தவள் அந்த முத்தத்தை அவன் தரவில்லை என்று உள்ளூர ஏமாற்றமடைந்தது உண்மை.

பெண்மையின் உணர்வுகள் முற்றிலும் விசித்திரமானது. எது வேண்டும் வேண்டாம் என்பதை அவளாலயே பல நேரங்களில் புரிந்து கொள்ள முடியாது.

முதல்முறையாய் அவன் நெருக்கத்தில் அவள் உணர்ந்தது அச்சமல்ல. நாணம் என்பது புரிந்தது.

அவள் வாழ்க்கையில் நடந்த சில கோர சம்பவங்கள் அவள் ஆசைகளையும் கனவுகளையும் உடைத்திருக்க, அவற்றை எல்லாம் கடந்து வெகுதூரம் பயணித்து வந்தவளுக்கு மீண்டும் அத்தகைய ஆசை மறுபடியும் டேவிடால் துளிர்விட்டிருந்தது.

ஆனால் அவள் இப்போது உருவாக்கி வைத்திருக்கும் சிக்கல் அவள் கழுத்தையே இறுக்க வாய்ப்பிருக்கிறது.

எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் ராகவிற்கு அவள் தர போகும் ஏமாற்றம் அவனை எந்நிலைக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும்.

அது அவளுக்கு எத்தகைய ஆபத்தை வேண்டுமானாலும் உண்டுபன்னலாம். எல்லாவற்றையும் அவள் முன்னமே முடிவு செய்துதான்.

ஆனால் அந்த நொடி அவளுக்குள் டேவிடோடு வாழ வேண்டுமென்று உண்டான ஆசை அவளை கொஞ்சம் பலவீனமாக்கி கொண்டிருந்தது.
 

vijaya mahesh

Well-known member
#6
டேவிட் ring போட்டுட்டான். அப்ப டேவிட்டுக்கு ஜென்னிதான் .ராகவ் தான் ஜென்னி வாழ்க்கையில் cross பண்ணிஇருக்கான் .அப்படித்தானே சிஸ்டர்
 
#8
As per இன்றைய அப்டேட்,
அன்று, ஸ்டிக்கை வேந்தன்
பிடுங்கி வீசிட்டான்
கார் மோதி சாக்ஷி, கீழே
விழுந்திட்டாள்
So, சாக்ஷிக்கு சேதாரம்
எதுவுமில்லை-ன்னு-தான்
தோணுது
அப்புறம் எப்படி சாக்ஷியின்
ஆடைகள் கிழிந்திருந்தது,
மோனிஷா டியர்?
ஜென்னித்தா வேறு,
மனசையும், உடம்பையும்
உனக்கு முழுசா தர
முடியாது-ன்னு, இவள்,
டேவிட்டிடம் சொல்லுறாள்
ஒண்ணுமே புரியலையே?
இவளை இடித்த காரில்
வந்தது, டேவிட் இல்லையா?
வேறு கெட்ட நபர்களோ?
இவளோட வாழ்க்கையில
நடந்த கோர சம்பவங்கள்
என்ன?
ஒருவேளை, சாக்ஷியை
வேந்தன் விட்டுட்டு ஓடின
பிறகு, காரில் வந்தவர்கள்
இவளை நாசம் செய்து
விட்டார்களா?
டேவிட்டுடன் ஹேப்பியாக
வாழ ஆசைப்படுபவள்,
திருமணம்-ன்னு சொல்லி
ராகவ்வை ஏன் ஏமாற்ற
வேண்டும்?
ஜென்னி ஏமாற்றுவது
தெரிந்தால், ராகவ் இவளை
சும்மா விடுவானா?
ராகவ்வின் தந்தை, அவனுக்கு
பணம் கொடுக்கலையா? ஏன்?
ராகவ்வுக்கு பணக் கஷ்டமா?
இவ்வளவு நாள் ராகவ்,
சம்பாதித்த காசை என்ன
செய்தான்?
ராகவ்வுடன் நடக்காத
கல்யாணத்துக்கு
ஜென்னி, ஏன் இப்படி
ஆடம்பரமாக உடை
எடுக்க வேண்டும்,
மோனிஷா டியர்?
 
Last edited:

Advertisements

Latest updates

Top