• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 47

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
பேரிடியாய் இறங்கியது


மகிழ் டேவிடை சந்திக்க அவனின் அலுவலக அறைக்குள் வர அனுமதி கோரவும் "எஸ் கம்மின்" என்றான் டேவிட்.

டேவிடிடம் பேசிவிட வேண்டும் என்று ஒருவாரமாக முயன்று அவனுக்கு இப்போதுதான் அதற்கான வாய்ப்புகிட்டியது.

வேந்தன் சொன்னவற்றை எல்லாம் கேட்ட பின்னர் மகிழின் மனநிலை இன்னும் மோசமாகியிருந்தது.

சாக்ஷி ஏன் அன்றே இது பற்றி தன்னிடம் சொல்லவில்லை என்ற கேள்வியும், அவள் இன்னும் என்னவெல்லாம் மறைத்திருக்கிறாளோ என்ற யோசனையும் அவனை தவிப்புற செய்திருக்க, அவளை அன்றி வேறொரு சிந்தனையே இல்லை அவனுக்கு.

அன்று அவள் வேண்டுமென்றே பேச்சை திசைதிருப்பி தன்னை கோபமூட்டியிருக்கிறாளோ என்று எண்ணத் தோன்றியது.

அவள் அந்தளவுக்கு ஒருவிஷயத்தை மறைக்க முற்படுவது அவனுக்குள் சந்தேகத்தையும் பயத்தையும் பெருக்கியது.

மனம் போன போக்கில் அவன் சிந்தனை வரையறையின்றி பயணிக்க,
அவளுக்கு தவறாக அஎதுவும் நேர்ந்திருக்க கூடாதே என்கிற கவலை அவனை எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபட விடாமல் முடக்கியிருந்தது.

இறுதியாய் உண்மையை தெரிந்து கொள்ள டேவிடை சந்திக்க முடிவெடுத்தவன், பிராயத்தனப்பட்டு அவனை பார்க்க அனுமதியும் பெற்றான்.

மகிழ் டேவிடின் முன்னிலையில் ஒரு வித அச்சத்தோடு நிற்க "உட்காருங்க மகிழ்... நமக்குள்ள என்ன பாஃர்மாலட்டி ?" என்று டேவிட் உரைத்து புன்முறுவல் செய்யவும்,

"நீங்க எனக்கு பாஸ்... பாஃர்மலிட்டி பார்க்காம எப்படி ?" என்றவன் கேட்க,

அவன் சிரித்து கொண்டே "நான் உங்களை ப்ரண்டாதான் நினைக்கிறேன் மகிழ்" என்றவன் மேலும் "ஹ்ம்ம்... நீங்க என்கிட்ட பெர்ஸன்லா பேசினுமா... இல்லை அபிஃஷியலாவா ?!" என்று யோசனையோடு கேட்க மகிழ் நிதானித்து "பெர்ஸனலாதான்" என்றான்.

"அப்போ ஆபிஸ்ல வேண்டாம்... நம்ம ஈவனிங் வெளியே போய் பேசுவோமே" என்று அவன் சொல்ல, "ஒகே சார்" என்று தலையசைத்து சம்மதம் தெரிவித்தான்.

********

வாஸனின் வீடு.
மனோ வாஸனிடம் வகையாய் சிக்கிக் கொண்டிருந்தான்.

அவன் அச்சத்தில் நடுக்கமுற, வாஸன் கொந்தளிப்போடு காட்சியளித்தார்.

"யாரை கேட்டிறா கல்யாண ஏற்பாடெல்லாம் நடக்குது ? அதுவும் கிறிஸ்துவ முறைப்படி நடக்க போகுதாம்" என்றவர் கேட்டதும்,

"பாஸ்தான்... ஜென்னி மேடம் விருப்பம்னு" என்று தயங்கிய பார்வையோடு சொல்லி கொண்டிருக்கும் போதே, "நடக்காதிரா... இந்த கல்யாணத்தை நான் நடக்க விடாம மாட்டேன்... " என்று அவர் ரௌத்திரமாய் உரைத்தார்.

அப்போது ஆங்காரமாக "அப்படி ஏதாச்சும் பண்ணி வைச்சீங்க... நான் மனிஷனாவே இருக்க மாட்டேன்" என்று ராகவ் சொல்லியபடி வீட்டிற்குள் நுழைய, மனோவிற்கு நிம்மதி பெருமூச்சுவந்தது.

தப்பி பிழைத்தோம் என்று அவன் எண்ணி கொண்டிருக்க,

ராகவ் "வா மனோ போலாம்" என்றழைத்தான்.

வாஸனுக்கு கோபம் அதிகரித்த போதும் சற்று அமர்த்தலாகவே மகனிடம் "நீ அவசரபடிற ராகவ்... பெரிய பிரச்சனையில சிக்க போற" என்றார்.

"பிரச்சனையா ?!" என்றவன் எகத்தாளமாய் சிரித்துவிட்டு "எனக்கு பிரச்சனை கொடுக்கிற ஒரே ஆள் நீங்க மட்டும்தான்" என்றான் ராகவ்.

வாஸன் முறைப்போடு "அந்த ஜென்னித்தா உன்னை முட்டாளாக்கிறா ராகவ்... நீ நினைக்கிற மாதிரி விக்டரோட சொந்த மக இல்ல அவ" என்றவர் சொல்ல,

ராகவ் அவர் வார்த்தையை நம்பாமல் எள்ளலாய் நகைத்தபடி "இப்படி எல்லாம் சொல்லி கல்யாணத்தை நிறுத்திறதுக்கு ஐடியாவா ?!" என்றதும் அவர் சீற்றத்தோடு அவர் வைத்திருந்த சில போட்டோக்களை தூக்கி அவன் மேல் எறிந்தார்.

ராகவ் புரியாமல் அவற்றை எல்லாம் பார்க்க, அதில் வீணையோடு அமர்ந்திருந்தவளை கூர்ந்து பார்த்து "ஜென்னி" என்க,

அவன் தந்தை வாஸன் "அவ பெயர் ஜென்னி இல்லை... சாக்ஷி" என்றார்.

அவன் தன் தந்தையை குழப்பமாய் நோக்க, மனோவும் அதிர்ச்சியோடு அந்த போட்டோக்களை பார்த்தான்.

இதே தோற்றத்தில் ஜென்னியை சில நாட்கள் முன்பு பார்த்த நினைவு இருந்தது ராகவிற்கு. ஆனால் அதற்கு முன்னரே அவளை எங்கேயோ பார்த்த நினைவும் அவனின் நினைவில் ஒளிந்து கொண்டிருந்தது. எங்கே எப்போது என்று அவனால் நினைவுப்படுத்தி கொள்ள முடியவில்லை.

அவன் அந்த யோசனையில் சிலையாய் நின்றுவிட வாஸன் தன் மகனிடம் "உன்னை அவ முட்டாளாக்கிட்டிருக்கா ராகவ்... ஆனா ஏன் எதுக்குன்னுதான் எனக்கு தெரியல" என்றவர் சொல்ல அவன் பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்த ஒரு போட்டோவை தன் கையில் எடுத்து கொண்டு வெளியேறினான்.

அவனால் அவர் சொன்னதை எல்லாம் முழுவதுமாய் நம்ப முடியவில்லை.. அந்தளவுக்கு அவளை நேசித்துவிட்டேன்.

ஆனால் அவள் தன்னை நேசிக்கிறாளா ? இந்த கேள்வியை தனக்குத்தானே கேட்டு கொண்டவனுக்கு உண்மையிலயே அதனை உறுதிப்படுத்தி கொள்ள முடியவில்லை.

அவளை தன்னவளாக மாற்றி கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் கண்மூடிதனமாய் இருந்துவிட்டோமோ என்று எண்ணமுற்றவனுக்கு அவனை சிந்திக்கவிடாமல் மறக்கடித்திருந்த
காதலென்ற மோகத்திரை மெல்ல விலகி கொண்டிருந்தது.

*******

டேவிடின் கார் சாரதா இல்லத்தின் வாசலில் நிற்க, மகிழ் குழப்பமானான்.

அவன் இறங்காமல் தயக்கமாக பார்க்க,

"என்ன மகிழ் யோசிக்கிறீங்க... இறங்குங்க" என்றான் டேவிட்

அவன் தவிப்போடு "இங்கே எதுக்கு ?" என்று கேட்கவும் அவன் புன்னகையித்துவிட்டு,

"பழக்கப்படாத இடத்துக்கு வந்த மாதிரி இப்படி யோசிக்கிறீங்க" என்று கேள்வி எழுப்பியவன் மேலும் "நீங்க இறங்கி உள்ளே போங்க மகிழ்... நான் காரை பார்க் பண்ணிட்டு வந்திடுறேன்" என்க,

மகிழுக்கு வேறுவழி இருக்கவில்லை. உள்ளே சென்றே தீர வேண்டும் என்ற இக்கட்டோடு அவன் நுழைய காவலாளி முதற்கொண்டு அங்குள்ள குழந்தைகள் வரை அன்பாய் அவனை நலம் விசாரித்து அவனின் இறுக்கமான மனநிலையை தளர்த்திவிட்டிருந்தனர்.

அதற்குள் அவன் வந்திருக்கும் செய்தி மாயாவின் செவிக்கு எட்டியிருக்க, கணவனை பார்க்கும் ஆர்வத்தில் அவசரமாய் ஓடி வந்தவள் மகிழை நேரெதிரே பார்த்தபடி நின்றுவிட்டாள்.

உடல் இளைத்து வாட்டமுற்றிருந்த அவளின் தோற்றம் அவன் மனதை ஏதோ செய்ய அவள் தாமதிக்காமல் அவனை அவள் இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.

அவளுக்குள் இருந்த ஏக்கத்தையும் தாபத்தையும் அவளின் தழுவலில் அவன் நன்காகவே உணர்ந்து கொண்டான்.

ஜென்னி ராகவின் கல்யாணம் பற்றிய செய்தி பரவலாய் பேசப்பட்டு கொண்டிருக்க, மகிழை தான் தவறாக எண்ணிக் கொண்டுவிட்டோமோ என்று வேதனையுற தோன்றியது அவளுக்கு.

அவன் இல்லாத அந்த நாட்கள் அவனுடன் இருந்த நாட்களை மட்டுமே நினைவுப்படுத்த அதீத காதலில் அவள் செய்த தவறுதான் அது.

அவற்றை எல்லாம் தாண்டி அவனை அப்படி அணைத்து கொள்ள வேறொரு காரணமும் இருந்தது. அவனுக்காக ஏங்கி தவித்த தவிப்போடு அவனின் உயிரை சுமக்கின்ற பூரிப்பும் கூட சேர்ந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்.

இதை உணராத மகிழ் அவளை விலக்கிவிட்டு "மாயா ப்ளீஸ்... நான் என் பாஸ் டேவிட் சாருக்காக இங்கே வந்திருக்கேன்" என்றவன்.

"அப்போ என்னை பார்க்க வரலயா ?!" ஏமாற்றமாய் மாறிய அவளின் விழிகளை நேர்கொண்டு பார்க்காமல் "இல்லை" என்க, அவள் மனமுடைந்து கண்ணீரோடு அங்கிருந்து அகன்றுவிட, அவளின் வலி மிகுந்த பார்வை அவனின் மனதையும் வேதனையில் மூழ்கடித்தது.

பின்னோடு நடந்து வந்த டேவிட் அவனின் முகமாற்றங்களை பார்த்து "என்னாச்சு மகிழ் ?" என்று வினவ, அவன் ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தான்.

பின்னர் டேவிடும் மகிழும் முன்னேறி மாயாவின் வீட்டிற்குள் நுழைய,
யாழ்முகைக்கு மகிழை பார்த்ததும் உள்ளம் இன்பத்தில் திளைத்திட உடன் டேவிட் வருவதை பார்த்து தன் மனஉணர்வுகளை கட்டுபடுத்தி கொண்டு இருவரையும் வரவேற்று முகப்பு அறையில் அமர வைத்தார்.

மகிழ் அவரிடம் "இவர்தான் எங்க சேனல் எம்.டி" என்று அறிமுகம் செய்யவும் யாழ்முகையும் மாதவனும் ஆச்சரயத்தில் மூழ்கினர்.

டேவிட் அவர்களை நலம் விசாரித்து இயல்பாக பேச்சு கொடுக்க, அவனின் பேச்சிலும் நடவடிக்கையிலும் வெகுவாய் ஈர்க்கப்பட்டனர்.

டேவிட் பேச்சு வாக்கில் "மாயா எங்கே ?" என்று கேட்க மகிழின் முகத்தில் அத்தனை தவிப்பு,

யாழ்முகை மகளிடம் விஷயத்தை சொல்ல, அவள் மறுப்புதெரிவிக்க எண்ணினாலும் டேவிட் அழைக்கும் போது அப்படி தவிர்க்க முடியவில்லை.

டேவிடுடனான முதல் சந்திப்பில் அவன் தன்னை எத்தனை மரியாதையாக நடத்தினான் என்பதை அந்த நொடி நினைவுகூர்ந்தவள் முகத்தை துடைத்து கொண்டு அவள் அழுத சுவடை மறைத்தபடி வெளியே வந்து அவனை நலம் விசாரித்தாள்.

அதோடு அவன் தந்த நன்கொடை பணத்தை பற்றிய விவரங்களை கேட்க வந்தானோ என எண்ணி அதனை பார்வையற்றவர்களின் சிகிச்சைக்காக பயண்படுத்திய விவரங்களை கூறியவள் அவனிடம் "வெயிட் பண்ணுங்க சார்... நான் போய் பில்ஸ் எல்லாம் எடூத்துட்டு வர்றேன்" என்று உள்ளேசெல்ல போக,

"மாயா வெயிட்... நான் அதுக்காக வரல" என்றான்.

அவள் யோசனைகுறியோடு அவனை பார்க்க, "எனக்கு சாக்ஷியோட திங்க்ஸ் எல்லாம் பார்க்கனும்... முடியுமா ?!" என்று கேட்க, மகிழுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

காரில் வரும் போதே மகிழ் சாக்ஷிக்கு நிகழ்ந்தது என்ன என்று கேள்வி எழுப்ப "சொல்றேன் மகிழ்... நாம போக வேண்டிய இடத்துக்கு போன பிறகு சொல்றேனே" என்றவன் சாரதா இல்லத்திற்கு அழைத்துவந்து அவன் மனைவி முன்னிலையில் அமர்த்தி சங்கடத்தில் ஆழ்த்துவான் என்று எதிர்பார்க்கவில்லை.

அதோடு அல்லாமல் அவன் சாக்ஷியின் பொருட்களை பார்க்க வேண்டுமென்று சொல்ல அவனுக்கு உள்ளூர கோபத்தை ஏற்படுத்த, மாதவனும் யாழ்முகையும் நடப்பவற்றை கவனித்து வியப்படைந்தனர்.

அங்கே சூழ்ந்து கொண்ட மௌனத்தை கலைத்தபடி "ஏன் மாயா யோசிக்கிறீங்க? முடியாதா ?" என்று ஏக்கப்பார்வையோடு டேவிட் கேட்க, அவள் தன் கணவனை ஏறிட்டாள்.

சாக்ஷியின் பொருட்களை எல்லாம் தன் தோழியின் நினைவாக பாதுகாத்து வைத்தது அவளாக இருந்தாலும் அவற்றின் மீது பித்து பிடித்திருந்தவன் அவன்தானே !

மகிழ் மாயாவின் பார்வை புரிந்து அவனே டேவிடிடம் "பார்க்கலாம்... வாங்க" என்று வழிகாட்டி அழைத்து கொண்டு போக டேவிட் புன்முறுவலோடு "நீங்களும் வாங்க மாயா" என்றழைத்தான்.

சாக்ஷியின் அறையை பார்த்து டேவிட் மெய்மறந்து ரசித்திருந்தான். ரொம்பவும் சிறியதான அறைதான் எனினும் அது அத்தனை சீராக அடுக்கிவைக்கப்பட்டிருக்க, நிறைய பாடல் சீடி, அதுவும் பாரதியார் கவிதைகள், க்ளாஸிக்கல் மியூசிக் என ஒவ்வொன்றும் தனித்தனியாக வரிசையாய் வைக்கப்பட்டிருந்தன.

அவன் உண்மையிலயே தேடிவந்தது சாக்ஷியின் வீணையைதான்.

அதனை பார்த்த சிலாகிப்பில் தொட்டு அந்த வீணையின் தந்தங்களை மிதமாக வருடியவன் "இந்த வீணையை எனக்கு தர மூடியுமா மாயா ?!" என்று கேட்க இருவரும் ஒரு சேர அதிர்ந்தனர்.

மாயா இறுக்கமான பார்வையோடு "நீங்க இதை கேட்கிறீங்களா இல்ல சாக்ஷி கேட்டாளா ?" என்றவள் வினவ,

"அவளுக்காகதான் நான் கேட்கிறேன்" என்றான்.

"நீங்க யாரு அவளுக்கு ?" பளிச்சென்று வெளிப்பட்டது மாயாவிடம் இருந்து அந்த கேள்வி.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இதே கேள்வியை சாக்ஷி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த போது கேட்கபட்டது அவன் நினைவுக்கு வந்தது.

அதற்கு அன்று அவளின் கணவன் என்று விடையளித்ததையும் எண்ணி கொண்டவன், இப்போது அப்படி சொல்ல முடியாமல் "நான் ஜென்னியோட ப்ரண்ட்" என்று பதிலளிக்க,

"நானும் ஒரு காலத்தில அவளுக்கு ப்ரண்டாதான் இருந்தேன்... அதுவும் பெஸ்ட் ப்ரண்ட்... ஆனா இப்போ யாரோவாயிட்டேன்" என்று மாயா எளக்காரமான புன்னகையை இதழ்களில் தவழ விட்டு சொல்ல,

"நீங்க இப்பவும் அவளுக்கு பெஸ்ட் ப்ரண்ட்தான் மாயா... இன்னும் கேட்டா அவ உங்களை ப்ரண்டுக்கும் மேல ஒரு அம்மான்னுதான் சொல்லியிருக்கா ?" என்றவன் சொல்லிக் கொண்டிருக்க மாயாவின் முகம் அதிர்ச்சியோடு மாற்றமடைய,

அவன் மேலும் "நீங்கதான் மாயா அவ நட்பை மறந்துட்டீங்க" என்றான்.

அவள் கோபம் எழ, "நான் மறந்தேனா ? திஸ் டூ மச்... மறக்கிறவளா இருந்தா அவளோட ரூமை அவளோட திங்க்ஸை ஏன் இப்படி பார்த்து பார்த்து பாதுகாக்கனும்... எங்கயோ அவ பாட்டுக்கு போயிட்டு.. எங்களை எல்லாம் மறந்துட்டா... என்னை தேடி வரனும்னு கூட அவளுக்கு தோணலயே... அப்புறம் என்ன.. மன்னாங்கட்டி பெஸ்ட் ப்ரண்ட் ?" என்று மாயா தன் மனவேதனையை சினத்தோடு கொட்டி தீர்க்க,

"மாயா கொஞ்சம் பொறுமையா பேசு... இந்த அவசர புத்திதான் உன் பிரச்சனை?" தன் மௌனத்தை கலைத்தபடி மகிழ் அவளிடம் உரைக்கவும்,

"நீங்க பேசாதீங்க மகிழ்... நான் உங்களுக்கும் நல்ல ப்ரண்டாதானே இருந்தேன்... நல்ல மனைவியா இருக்கவும் முயற்சி செஞ்சேன்.. ஆனா எல்லாமே பொய்யா போயிடுச்சே... எல்லோருக்குமே நான் இரண்டாம் பட்சமாதான் போயிட்டேன்... என் காதல் நட்பு எதுக்கும் மரியாதை இல்லையே" உணர்ச்சிவசத்தால் கண்ணீர் வழிந்தோட கூறியவளை பார்த்த மகிழுக்கு அவள் மீது இரக்கம் பிறந்தது.

ஆனால் இப்படி டேவிட் முன்னிலையில் எல்லாலற்றையும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமா என அவன் வருத்தமுற நிற்க,

டேவிட் இருவரையும் பார்த்து விட்டு "நீங்க நினைக்கிற மாதிரி இல்லை மாயா... ஜென்னி என்கிட்ட எல்லோரையும் விட மாயாதான் முதல்லன்னு சொல்லி இருக்காங்க" என்க,

மாயா அவனை நிமிர்ந்து பார்த்து "இதை நான் நம்பனுமா ?" என்றவள் அலட்சியமாய் கேட்க,

"நான் ஏன் பொய் சொல்லனும் ?"

"நீங்க ஏன் அவளுக்காக பேசனும்... ஏன் அவளுக்கு வாயில்லையா ? ஊமையாயிட்டாளா என்ன ? பார்வையில்லாம இருந்த போது மனசில இருந்து பார்த்தா... இன்னைக்கு பார்வை இருக்கு... ஆனா அவக்கிட்ட மனசு இல்ல" வெறுப்போடு அவள் சொல்ல,

"அவ மனசில இருந்து பார்த்த... அதே மனசு அன்னைக்கு அவளை பார்த்தவனுக்கு இல்லையே... ஊமையிட்டாளான்னு கேட்டீங்க இல்ல ? ஊமையைதான் ஆயிட்டா... அவ உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத ஊமையாயிட்டா... எங்க சொன்னா நீங்க தாங்க மாட்டீங்களோன்னு ஊமையாயிட்ட" என்று ஆதங்கத்தோடு விழியில் நீர் சூழ டேவிட் உரைக்க,

மகிழ் படபடப்போடு "என்ன சொல்றீங்க டேவிட் சார் ?" என்று அச்சத்தோடு
கேட்க, அவன் தன் கண்ணீரை காட்டாமல் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

அந்த அறையை நிசப்தம் சூழ, டேவிட் தன் கனிர் குரலில் அந்த மௌனத்தை உடைத்து "அன்னைக்கு இங்கிருந்து கிளம்பி போன சாக்ஷிக்கு என்னாச்சுன்னு தெரியுமா மாயா உங்களுக்கு ?!" என்றவன் கேட்க, அவன் என்ன சொல்ல போகிறானோ என மாயாவின் முகம் வெளிறிப் போனது.

மகிழ் முகமெல்லாம் வியர்வை துளிர்விட்டது.

டேவிட் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு, "அவளுக்கு நடந்தது வெறும் ஆக்ஸிடென்ட் மட்டும் இல்லை... " என்று நிறுத்தியவன்

குரலை தாழ்த்தி சற்று அழுத்தமாய் "ஷீ வாஸ் ப்ரூட்டலி ரேப்ட்" என்றான்.

மாயா மகிழ் இருவருமே அவன் சொன்னதை கேட்ட மாத்திரத்தில் பேச்சற்று போய் நின்றனர்.

அந்த வார்த்தை பேரிடியாய் வந்திறங்கியது.

மாயா தன் இரு காதுகளையும் பொத்திக் கொண்டு உணர்வுகள் பொங்க வெடித்தழ ஆரம்பித்தாள். அவள் கைகள் உதறலெடுக்க உதடுகள் துடிக்க கண்ணீர் வெள்ள பெருக்காய் மாறியிருக்க,

"சாக்ஷி" என்றபடி அவள் அழுதுக் கொண்டிருந்தாள்.

ஆனால் மகிழ் துளியளவும் கலங்கவேயில்லை. அவனோ தன் புலன்கள் அனைத்தும் செயலிழுந்து போன நிலையில் நின்றிருந்தான்.

வரிசையாய் நிறைய அதிர்ச்சிகளையும் காயங்ளையும் கடந்து வந்துவனுக்கு அவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்றளவுக்காய் மாறியிருந்தது இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பின்.

உள்ளூர அவன் உணர்வுகள் சிதிலாய் சிதிலாய் நொறுங்கி கொண்டிருக்க, அழுவதற்கான எந்தவித சாத்தியகூறுகளும் அவன் விழிகளில் தென்படவில்லை.

இருவருமே சாக்ஷியை அந்தளவுக்கு நேசித்தவர்கள். ஆதலாலயே ஜென்னிக்கு அவர்கள் இருவரிடமும் இந்த விஷயத்தை தெரிவிக்க மனம் வரவில்லை.

ஆனால் டேவிடுக்கோ ஜென்னியின் மீது அவர்கள் கொண்ட தவறான புரிதல் மாற வேண்டும் என்று எண்ணியே அந்த உண்மையை வெளிப்படுத்தினான்.

இப்போது அவர்கள் இருவரின் வேதனையை பார்த்த பின்னர் அவன் மனம் ரொம்பவும் கனத்து போனது.

யாரை சமாதானம் செய்வதென்றே அவனுக்கு தெரியவில்லை. மாயா கதறி அழுதுகொண்டிருக்க, மகிழ் உணர்வே இல்லாத நிலையில் நின்று கொண்டிருந்தாலும் மனதளவில் நொறுங்கி போயிருந்தான் என்பதை அவன் விழிகள் உணர்த்தின.இருவரும் வெவ்வேறு நிலையில் இருக்க, வலி என்னவோ ஒன்றுதான்.

அழுகைதான் நம் சோகத்தின் வடிகால் எனும் போது மகிழ் தன் வேதனையை வெளியேற்றாமல் இருப்பதை பார்த்து டேவிட் அவன் அருகாமையில் வந்து "மகிழ்" என்றழைக்க,

"யார் சாக்ஷியை இப்படி பண்ணுது டேவிட் சார் ?" என்றவன் அப்போதே உணர்வுகள் பெற்று கண்ணீரை உகுக்க தொடங்கியிருந்தான்.

************
ராகவ் தன் வீட்டின் படுக்கை அறையில் அமர்ந்து ஒரு விஸ்கி பாட்டிலை திறந்து குடிக்க போக, மனோ அதிர்ந்து "வேண்டாம் பாஸ்... மேடமுக்கு நீங்க டிரிங்க் பன்னா பிடிக்காது" என்று அவனை தடுக்க முற்பட்டான்.

"அந்த மேடமுக்கு என்னையே பிடிக்குமான்னு தெரியலயே" என்று வேதனை நிரம்ப பார்வையோடு சொல்லியவன், அதிர்ச்சியின் மொத்த உருவமாய் அமர்ந்திருந்தான்.

"பாஸ் நீங்க அவசர படிறீங்க... அப்பா சொன்னதெல்லாம் பொய்யா கூட இருக்கலாம்" என்று மனோ உரைக்க,

அவன் கூரிய பார்வையோடு சாக்ஷியின் போட்டோவை பார்த்து "இல்ல... மனோ... டேட் பொய் சொல்ற மாதிரி தெரியல... அவதான் என்னை முட்டாளாக்கி விளையாடிட்டிருக்கா ?" என்றவன் சொல்லிமுடித்த மறுகணம் அந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடாக விஸ்கி பாட்டிலை திறந்து ஒரே முடக்கில் குடித்து முடித்தான். மனோ அவனை தடுக்க முடியாத இயலாமையோடு பார்க்க,

ராகவின் தலை கிறுகிறுவென சுழல ஆரம்பித்தது.

ஜென்னியை சந்தித்ததிலிருந்து நடந்தேறிய நிகழ்வுகள் மாறி மாறி அவன் நினைவுகளுக்குள் அலைமோதிக் கொண்டிருக்க,

எப்போது சாக்ஷி என்பவள் தன் வாழ்க்கையில் நுழைந்திருப்பாள் என்ற கேள்வியே அவன் மனதை சுற்றி சுழன்று கொண்டிருந்தது.

அதீத போதை நிலையில் அவன் நினைவுதப்பி கொண்டிருந்த போதும் அவன் யோசனை தடைபடவில்லை.

அன்று...

ராகவின் மூன்றாவது படம் வெளியாக காத்திருந்தது. பிரபல இயக்குனர் நந்தக்குமாரின் படம்.

படம் வருவதற்கு முன்னதாக அதன் வெற்றியை எல்லோரும் பறைசாற்றி கொண்டிருக்க, புகழின் உச்சாணி கொம்பை தொட்டுவிடும் துடிப்பில் இருந்தான் அவன்.

அதிவிரைவில் அவனுக்கான தனி அங்கிகாரம் அந்த படத்தின் மூலமாக கிடைக்க போகிறதென்பதில் அவனுக்கு ஐயபாடில்லை.

வாஸனின் மகன் ராகவ் என்பது மாறி ராகவின் தந்தை வாஸன் என்று சொல்ல போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

அதுதான் அவனின் கனவும் கூட.

அந்த படத்தின் டிரெயிலரும் பாடல்களும் மக்களுக்கிடையில் பலத்த வரவேற்ப்பை பெற்றுவிட்டதாக தகவல். அதுவே படத்தின் வெற்றியை கிட்டதட்ட உறுதி செய்துவிட, ராகவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

புகழ் என்ற போதை மெல்ல அவன் மூளைக்குள் ஏற, அன்று அபரிமிதமான உற்சாகத்திலும் போதையிலும் மிதந்தான் ராகவ்.

Hi friends,
இந்த Fb ராகவ் Pt of viewல வரனும்ங்கிறதாலதான் இங்கே இந்த சீனை கொண்டு வந்திருக்கேன்.

நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடுத்த பதிவு சற்று கனமான பதிவாகதான் இரூக்கும்.

மறவாமல் இந்த அத்தியாயத்தின் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். முந்தைய பதிவில் எல்லோரும் திருப்தி அடைந்ததில் எனக்கும் மிகுந்த ஆனந்தம். டேவிட்தான் ஹீரோவா என்று தெரிவிக்கபடாமலே அவன் இந்தளவுக்கு உங்கள் மனதில் இடம்பெற்றிருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மோனிஷா டியர்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடுத்த பதிவு சற்று கனமான பதிவாகதான் இரூக்கும்... ok ka... saakshi ku nadanthatha teriya varum bothu magil mattum illa naangalum udaya thaan pooroom nu munnadiyae teriyum.. waiting for such a sad episode and maya and sakshi friendship
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top