• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nambikkai malar-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"என்னடா தங்கம்! ரொம்ப தீவீரமாக யோசிச்சிட்டிருக்க?" என்ற தாய் வாணியின் குரல் கேட்க பலத்த சிந்தனையில் இருந்த ஸ்வேதா தாயை பார்த்தாள்.

"எந்த ஆபரை அக்செப்ட் பன்னி எந்த ஸ்கூல்ல நான் ஜாயின் பன்றதுன்னு ஒரே குழப்பமாக இருக்கும்மா. நீயே நல்ல ஸ்கூலா செலக்ட் செஞ்சு தா" என்று இரண்டு பள்ளிகளின் அப்பாயின்மென்ட் ஆர்டரை நீட்டினாள் ஸ்வேதா.

வாணி இரண்டையும் வாங்கி அதை பிரிக்காமல் கிழித்து குப்பையில் போட "அம்மா!" என்றாள் ஸ்வேதா.

"ஸ்வேதா குட்டி! இவங்க உனக்கு என்ன சம்பளம் தரப் போறாங்க? நாலாயிரம் இல்லே அஞ்சாயிரம் இதுக்கு நீ மாசம் முழுக்க பாடுபடனுமா?"

"அந்த மெட்ரிக் ஸ்கூலில் எட்டாயிரம் ஸ்டார்ட்டிங் வருசத்துக்கு ஆயிரம் ரூபா இன்கிரிமென்ட் தரன்னு சொல்லியிருக்காங்க" என்றாள் ஸ்வேதா.

"உன் அழகுக்கு நீ ஒரு விளம்பர சூட்டிங் பன்னா போதும்டா. ஒரு நாளில் பத்தாயிரத்துக்கு மேல சம்பாதிக்கலாம்" என்றாள் தாய்.

"அம்மா! எனக்கு அதுல இஷ்டம் இல்லம்மா. என்னை கட்டாயப் படுத்தாதே" என்ற மகளிடம்,
"சரி அம்மா உன்னை இந்த விஷயத்துல கட்டாயபடுத்தலை ஆனா இந்த ஸ்கூல் வேலை எல்லாம் போக வேண்டாம்" என்றாள் வாணி.

"அம்மா! எனக்கு சும்மா இருக்க பிடிக்கலை. வீட்டில் இருந்து நான் என்ன செய்ய?"

"உன்னை யார் சும்மா இருக்க சொல்றது? குக்கரி கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலிஷ் அப்படின்னு போ" என்றாள் வாணி.

சரிம்மா என்ற ஸ்வேதாவின் டீச்சர் கனவு கலைந்துவிட்ட நிலையில் தன் அறைக்கு சென்றாள்.

அழகிய காந்த கண்கள், இரு செர்ரி பழ நிற இதழ்கள், உயிர் வாங்கும் நாசி, ஆப்பிள் கன்னங்கள், நீளமான கருத்த அடர்த்தியான கூந்தல், சின்ன முகம், சிற்றிடை, நல்ல கோதுமை நிறமுடைய இருபத்தி இரண்டு வயது பார்பி டால்தான் ஸ்வேதா.

சினிமாவில் ஒரிரு படங்களில் கேரக்டர் ரோல் என்ற பெயரில் தலை காட்டிக் கொண்டு விளம்பர படங்களில் நடித்து வரும் கலைவாணியின் ஒரே மகள்.

அழகில் தன்னைவிட பத்து மடங்கு உடைய மகளை கதாநாயகி ஆக்க வேண்டும் என்பதே வாணியின் லட்சியம்.

அம்மாவை சிறுவயது முதல் பார்க்கும் ஸ்வேதாவுக்கு அந்த வாழ்க்கையில் துளி கூட விருப்பமில்லை.

அம்மாவின் விருப்பபடி குக்கரி கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ் சென்று வந்த மகளை எப்படியும் மாடல் ஆக்கி விட திட்டம் போட்டாள் கலைவாணி.

பட்டுசேலை விளம்பரம் ஒன்று வர அதை சரியாக பயன்படுத்தி கொண்டாள் வாணி.

"ஸ்வேதா தங்கம்! பட்டுசேலை விளம்பரம் ஒன்று வந்திருக்கு. சிட்டில பேமஸ் டெக்ஸ்டைல் ஷாப்போட விளம்பரம். கடை ஒனரே என்னிடம் கேட்டதும் உன்னை கூட கேட்காம சரின்னு ஒத்துகிட்டேன். சாரிடா தங்கம்" என்றாள் கலைவாணி.

"சில்க் சேரி விளம்பரம்தானே நான் பன்றேன் அம்மா. வீட்ல சும்மா இருக்க எனக்கும் போராடிக்கதான் செய்யுது. எனக்கும் பொழுது போகும். அமெளன்ட்டும் கிடைக்கும்"
என்று ஸ்வேதா ஒருவழியாக சம்மதித்தாள்.

அடுத்த சில தினங்களில் விளம்பர சூட்டிங் தொடங்கியது.

முதல் விளம்பரம் என்பதால் அவள் தாய் வாணி உடன் இருந்து உதவி செய்தாள்.

"வாணி மேடம்! உங்க மகளா?" என்று கேட்டார் குறுந்தாடி இயக்குநர்.

"ஆமா சார். அவளுக்கு மாடலில் இன்டெரஸ்ட் இல்லை. உங்க ஆட் அப்படிங்கறதால நான் கஷ்டபட்டு சம்மதிக்க வைச்சு கூட்டிட்டு வந்திருக்கேன். கொஞ்சம் பார்த்துகோங்க சார்" என்றாள் கலைவாணி.

"சரி வாணி மேடம். நீங்க கவலையேபடாதீங்க. அவ என் பொண்ணு மாதிரிதான்" என்று அவர் செல்ல, கடை ஒனர் வர தன் அம்மா அவரிடமும் சகஜமாக பேசுவதை பார்த்து பிரமித்தாள் ஸ்வேதா.

Message…
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
ஸ்வேதாவிற்கு புதுபட்டு புடவைகள், மேட்சிங் பிளவுஸ், செயின,வளையல்கள், பொட்டு வரை விதவிதமாக வழங்கபட அவள் அணிந்து மகிழ்ந்தாள்.

அவளுக்கு விதவிதமான ஹேர்ஸ்டைலில் பின்னி விட்டு மேக்கப் டச் செய்து அவளை எழில் மங்கையாக மாற்றி விட தன்னை பார்த்து தானே ரசித்தாள்.

"ஸ்வேதா செல்லம்! நீ கேமரா முன்னாடி நிற்கிறமோன்னு நினைக்க கூடாது. நீ இயல்பாக இரு. டைரக்டர் என்ன செல்றாரோ அப்படியே செய். அம்மாவை பாரு. நான் முன்னாடிதான் நிற்பேன்." என்று அறிவுரை வழங்கினாள் வாணி.

முதன்முதலில் பல கேமராக்கள் அவளை வட்டமிட பலபேர் சூழ்ந்திருக்க அவள் நின்றாள்.

ஸ்வேதாவுக்கு சற்றே வெட்கம் குடி கொள்ள அவளுக்கு பயமும் ஏற்பட ஆரம்பித்தது.

இந்த அம்மா எங்கே போனாங்க? நான் எதிரில் இருக்கேனாங்களே என்று கண்கள் தாயை தேட ஆரம்பித்தது.

வாணி எதிரில் நிற்க அவள் நிம்மதியடைந்து தாயை பார்க்க அவள் என்ன செய்ய வேண்டும் என்று சைகை செய்தாள்.

அனைத்து கேமராக்களும் ஒரு சேர ஒளி உமிழ ஆரம்பித்தது.

கிளாப் அடிக்கப்பட்டு ஸ்டார்ட் ஆக்சன் என்று சொல்ல அவள் சற்று தடுமாற ஆரம்பித்தாள்.

தாய் முன் நின்றபடி நான் இருக்கேன் என்றபடி பார்க்க தாயின் ஜீன்ஸ் வேலை செய்ய ஒயிலாக நடந்தாள் ஸ்வேதா.

முதல் ஷாட்டில் இருந்து கடைசிவரை அவள் சிறப்பாக நடித்து முடித்தாள்.

முதல் விளம்பர சூட்டிங்கில் அட்டகாசமாக ஒன்று இரண்டில் டேக்கில் எல்லாவற்றையும் நடித்து அசத்தினாள் ஸ்வேதா.

"உங்க டாட்டர் அசத்திட்டா. இது அவளின் பர்ஸ்ட் சூட்டிங் மாதிரியே தெரியவில்லை. அவங்களுக்கு நடிப்பு இயல்பாக வருது. எந்த டிரஸ் போட்டாலும் பிட் ஆகுது. சினிமாவுல வந்தா நிச்சயமாக நம்பர் ஒன் ஆக வரலாம்" என்று வானாளாவ புகழ்ந்தார் டைரக்டர்.

"ரொம்ப தாங்க்ஸ் சார். எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்" என்று வழிந்தபடி சொன்ன வாணிக்கு அவரின் பாராட்டு போதை ஏற்ற ஸ்வேதாவுக்கு எரிச்சலாய் ஆனது.

ஸ்வேதாவுக்கு நடிப்புக்கு இருபதாயிரம் ருபாய் செக் தரபட அவளுக்கும் மகிழ்ச்சி.

தன் மகளை வீட்டுக்கு வரும் வரை வானாளவ புகழ்ந்தாள் வாணி.

வீட்டில் உடை மாற்றிவிட்டு டிவிமுன் அமர்ந்த மகளிடம் "அம்மாவுக்கு இப்ப எல்லாம் வாய்ப்பு குறைஞ்சிட்டே வருது. எனக்கு வாய்ப்பு கிடைச்சாலும் இந்தமாதிரி பெரிய தொகை கிடைக்கறதில்லை. நீதான் செல்லம் இந்தமாதிரி சின்ன விளம்பரங்களில் நடிச்சா போதும். நாம இதேமாதிரி வசதியாக வாழ்ந்துடலாம்" என்ற தாயை அதிர்ச்சியாக பார்த்தாள் ஸ்வேதா. Write your reply...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சக்திப்ரியா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திப்ரியா டியர்
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எஸ்டேட், ஹாஸ்பிடல்,
அனாதை ஆசிரமம், ஸ்கூல்
and டீ பேக்டரி-ன்னு,
பல சொத்துக்களுக்கு
சொந்தக்காரியான, அகிலா
மகள் சௌந்தர்யாவை,
எந்த வசதியையும் அனுபவிக்க
விடாமல், ஏன் ஏழையாக
வளர்க்கிறாள்?
கணவன் விட்டுட்டு போனதாலா, சக்திப்ரியா டியர்?

ஆனால், நல்ல பெண்
ஸ்வேதாவை, பணத்துக்காக
அம்மா கலைவாணி
கெட்ட வழியில் கொண்டு
போகிறாளே பா?
சௌந்தர்யா and ஸ்வேதா
இருவரின் அப்பாவும்
ஒருவரோ-ன்னு எனக்கு
டவுட்டாக இருக்கு,
சக்திப்ரியா டியர்

சௌந்தர்யாவின் அப்பா,
கெட்டவரா?
அகிலாவை விட்டுட்டு
வாணியை சேர்த்துக்
கொண்டாரா?
ஏனெனில் சினிமா
நடிகையான கலைவாணி,
திருமணம் செய்திருப்பாள்-ன்னு
எனக்கு தோணலை பா

கவிதாம்மா என்ன
சொல்லப் போறாங்க,
சக்திப்ரியா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top