• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nambikkai malar-7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
செளந்தர்யாவிற்கு இங்கே பள்ளி வாழ்க்கை பழக ஆரம்பித்து விட்டது.

காலையில் எழும் செளந்தர்யா அழகாக கோலம் போட்டு முடித்த பின் கவிதாம்மா தரும் காபி குடித்து விட்டு சமையலில் சிறு உதவிகளை செய்வாள்.

செளந்தர்யா குளித்து முடிக்க டிபன் ரெடியாக இருக்க அதை சாப்பிட்டுபின் பள்ளி செல்வாள்.

கவிதா அம்மா உத்தரவுபடி மதிய சாப்பாட்டுக்கு வீடு வந்து செல்லும் அவள் மாலையில் வீட்டிற்கு திரும்பி தோட்டத்தை பார்வையிட்டு சில பராமரிப்பு வேலைகள் செய்வாள்.

மாலை வீட்டில் பூஜை முடித்த பின் கவிதாம்மாவிடம் பேசி கொண்டு இருப்பாள்.

செளந்தர்யா இரவு சமையல் வேலை முடிந்து டிபன் சாப்பிட்ட பின் அவினாசுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அறைக்கு சென்று புத்தகத்தில் மூழ்கி விடுவாள்.

செளந்தர்யா சினிமா சீரீயல்களை பார்ப்பதே இல்லை என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருக்க அதை பற்றி கேட்க நினைத்தாள்.

செளந்தர்யா நியுஸ் சேனல்கள் பார்த்தபின் டிஸ்கவரி சேனல் சென்று பின் ஸ்போர்டஸ் சேனல்களை ஆராய்ந்துக் கொண்டிருக்க கவிதா அங்கு வந்து அருகில் அமர்ந்தார்.

"தங்கம்! நான் ரொம்ப நாளாக உன்னை ஒன்று கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்டா" என்றார் கவிதா.

"என்ன அம்மா அது?" என்று அவள் பார்வையை கவிதா பக்கம் திருப்பினாள்.

"உன் மாதிரி இளம் வயசு ஆளுக சினிமா பார்ப்பாங்க இல்லைன்னா பாட்டு சீரீயல் இல்லைன்னா ஏதாச்சும் என்டர்டெயின்ட்மென்ட் நிகழ்ச்சி பார்ப்பாங்க. நீ என்னாடன்னா நியூஸ் சேனல், டிஸ்கவரி சேனல், ஸ்போர்ட்ஸ் சேனல் அப்படி பார்க்கிறியே ஏன்?"

"அம்மா! என் சின்ன வயசுல இருந்தே அம்மா என்னை அதிகமாக டிவி பார்க்க விட மாட்டாங்க. சினிமா, சீரியல், பாட்டு எதுவும் அவங்களும் பார்க்க விட மாட்டாங்க. என்னையும் அவங்க கூட நல்ல விஷயங்களை செய்ய சொல்லி அவங்களும் செய்ய அதே பழகி போச்சும்மா. " என்றவளை ஆச்சரியமாக பார்த்தாள் கவிதா.

"ஸ்கூல், காலேஜ் போன பின் உன் பிரண்ட்ஸ் அதை பற்றி பேசியிருப்பாங்களே?"

"ஆமாம்மா. நான் அங்கேயும் மேக்சிமம் படிப்பு பற்றி பேசிட்டு இருப்பேன் அப்புறம் எப்பவாது நான் பார்த்த படங்கள், பேப்பர்ல படிச்ச செய்தி இதை எல்லாம் வைச்சு சமாளிப்பேன்."

"இங்கேதான் அந்த மிலிட்டரி இல்லையே இப்ப பார்க்கலாம் இல்லையா?"

"இல்லை. என் அம்மா ஏன் என்னை பார்க்க விடலை அப்படின்னு தெரியாது ஆனா அவங்க என் நல்லதுக்குதான் செய்யறாங்க. நான் அவங்க கண் முன்னாடி இல்லைன்னாலும் அவங்க காட்டின வழியில் நடக்க விரும்பறேன்." என்று பேசிய செளந்தர்யாவை பார்த்து பிரமித்தாள் கவிதா.

"சரி உன் அம்மாகிட்ட இது பற்றி நீ கேட்டியா?"

"இல்லைம்மா. அவங்க எப்பவும் வேலை வேலைன்னு இருக்கிற காரணத்தால் அவங்க பார்க்க வாய்ப்பில்லை. என்னையும் கூட வைச்சுகிட்டதால் நான் பார்க்க முடியலை. இதை தவிர வேற என்ன காரணம் இருக்க போகுது? "

"சினிமா பாட்டு கேட்கிற பழக்கம் உண்டா?"

"ம் அது கேட்பேன். மைண்ட் ரிலாக்ஸ் ஆக நான் மியூசிக் கேட்பேன்."

"சரிடா தங்கம்! நல்லாபடியாக அதையாவது கேளுடா" என்று கவிதா சொல்ல,
"அம்மா! காலேஜ்ல படிக்கிறப்ப எங்க அம்மாவும் நீங்களும் சினிமா பார்த்திருக்கீங்களா? அம்மா அப்பவும் என்னை மாதிரி பார்க்க மாட்டாங்களா?" என்று கேட்டாள் செளந்தர்யா.

"உன் அம்மாதானே அவள் அப்பவும் அப்படிதான் தங்கம். சினிமாவே பிடிக்காதுடா." என்றாள் கவிதா.

"தாயை போல் புள்ளை இல்லையா அம்மா" என்று செளந்தர்யா கேட்க "ஆமா தங்கம்" என்றாள் கவிதா.
Message…
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"சரிம்மா வாங்க நாம் டிபன் செய்யலாம். அவினாஷ் வர நேரமாச்சு" என்று செளந்தர்யா கூப்பிட இருவரும் சமையல் அறை நோக்கி சென்றனர்.

"சாரிடா தங்கம்! எந்த சினிமா உன் அம்மாவுக்கு இப்பொழுது பிடிக்காமல் இருக்கிறதோ அந்த சினிமாவில் அவள் மிக பெரிய நாயகியாக இருந்தவள். மெகா நடிகையின் மகளுக்கு சினிமா பிடிக்கவில்லையா? எல்லாம் விதியின் விளையாட்டு" என்று மனதில் நினைத்தபடி சென்றாள் கவிதா.

செளந்தர்யாவிற்கு வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைக கூட தன் வீட்டிற்கு செல்லாமல் இருந்தாள்.

"ஏன்டா தங்கம்! வீட்டுக்கு நீ போயி அம்மாவை பார்த்துட்டு வரலையா? என்றாள் கவிதா.

"இல்லைமா" என்றவள் பதில் சொல்ல "ஏன்?" என்று கவிதா புருவம் உயர்த்தி கேட்டாள்.

"அம்மா வீட்டுக்கு இப்பவே போனா அவங்க பாசம் என்னை வர விடாம தடுக்கும். நான் இப்பதான் கொஞ்சம் இங்கே செட் ஆக ஆரம்பிச்சிருக்கேன். சோ நான் லாங் லீவ் கிடைக்கிற வரைக்கும் அங்கே போகலை"

"சரிடா" என்ற கவிதா அவளை பார்க்க தாயை பிரிந்த ஏக்கம் அவள் புன்னகையை மீறி தெரிந்தது.

கவிதாவின் வீட்டின் உள்ளே கார் ஒன்று நுழைய அதை பார்த்த செளந்தர்யாவுக்கு மனதில் ஆனந்தம் நடம் புரிய ஆரம்பித்து விட்டது.

காரில் இருந்து இறங்கி வந்த அம்மா அகிலாவை பார்த்த நிமிடத்தில் அவள் ஆனந்தமாகி தாயை பிரிந்த கன்று குட்டியாகி மாறி தாவி சென்று அணைத்துக் கொண்டாள்.

தாய் மகள் இருவரின் பாச பிணைப்பை பார்த்த ரசித்த கவிதாவுக்கும் ஆனந்தமே.

"அம்மா நல்லா இருக்கீங்களா?" என்று செளந்தர்யா கேட்க,
"நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்கே?" என்றாள் அகிலா.

"நான் நல்லா இருக்கேன்மா." என்று செளந்தர்யா கூற,
"சரிடா" என்று மகளை முத்தமிட்டாள் அகிலா.

"அம்மா... நான் உங்களுக்கு டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்" என்று வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் சென்றாள் செளந்தர்யா.

"வா அகிலா... இப்பதான் என் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?"

"வரனும் விருப்பம்தான் எங்க முடியுது கவிதா. எஸ்டேட், ஸ்கூல், ஹோம் அப்படின்னு ஏதோ வேலை இருக்குதே"

"நீ சொல்றதும் சரிதான். ஏதோ அவினாஷ் இருக்கறதால அவன் பார்த்துகிறதாலே எனக்கு அதிகம் பிராபளமில்லை"

"நான்தான் என்ன பன்றதுன்னு தெரியலை. மேனேஜர்கள் எல்லாவற்றையும் பார்க்கிறதால் நானும் கொஞ்சம் மூச்சு விட முடியுதுப்பா"

"அம்மா டீ" என்றபடி இருவருக்கும் டீ தந்துவிட்டு தானும் குடிக்க ஆரம்பித்தாள் செளந்தர்யா.

அகிலா தன் தோழியுடனும் மகளுடனும் தன் நேரத்தை கழித்தாள்.

கவிதாவும் செளந்தர்யாவும் சமைக்க அகிலா உதவி செய்ய சமையல் வேலை எளிதாக முடிந்தது.

அகிலா நீண்ட நாளுக்கு பின்னர் தன் தோழியுடனும் மகளுடனும் அமர்ந்து மதிய சாப்பாடு சாப்பிட்டது அவளுக்கு மன நிறைவு அளித்த்து.

அகிலா அங்கு சாப்பாடு முடித்து விட்டு சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பி சென்றாள்.

அம்மாவின் வருகை உற்சாகம் அளிக்க தன் வேலைகளை சிறப்பாக தொடர்ந்தாள் செளந்தர்யா.
Write your reply...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சக்திபிரியா டியர்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
hi sakthi akka,
akila periya nadikaiya..?! athuthaan sountharyaavai padam paarkka vidaamal thaduththangala..? appo santhiran kalaivaaniyai emaarri azhaithuvanthu nadutheruvil vidduviddu, akilaavai thirumanam seythuk kondaaraa..? ivanga ovvoruththarukkum irukkum thodarpu konjam puriyuthu.. aanal ennoda kanippu sariya enru thaan theriyavillai..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top