• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nan aval illai - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
HI MONISHA..
TERRIFIC...SLIGHTLY UNRAVELING ONE THING BY TWISTING MANY THINGS...WOOOW.....THAT TOO WIH VARIANT N VARIANCE IN CHRN N CHRS.......WONDERFUL AGAIN....
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
காந்தமானவள்
வேந்தன் சென்ற சில நிமிடங்களில் எழில் அறைக்குள் நுழைய, அவளை சலிப்பாய் பார்த்தான் மகிழ்.

"நீ வேற அட்வைஸ் பண்ண வந்துட்டியா...?!" என்றான்.

"அது இல்லடா... உனக்கு போஃன் வந்திருக்கு... உன் போஃன் ஸ்விட்ச்ட் ஆஃப்ல இருக்காமே" என்றாள்.

"இப்போதைக்கு என்னால யார்கிட்டயும் பேச முடியாது... "

"உன் ஆபிஸ்ல இருந்து மகிழ்"

"ப்ச்... போ எழில்" என்று தவிர்க்க அவள் விடாமல் "பேசுடா" என்றாள்.

அவனின் மனநிலையை மாற்ற இது ஒரு சந்தர்ப்பம் என்று எண்ணியவள் அவன் கரத்தில் அந்த பேசியை தினிக்க, வேண்டா வெறுப்பாய் அதனை காதில் நுழைத்து சிரத்தையின்றி "ஹ்ம்ம்ம்" என்றான்.

"சாரி... உன்னை டிஸ்டர்ப் பன்றேன்னு புரியுது... இருந்தாலும் உன் நிலைமை எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்னு"

"நீ ஏன் கால் பண்ணன்னு எனக்கு புரியுது ஷாலு... இப்ப இருக்கிற நிலைமையில என்னால ஷோவெல்லாம் பண்ண முடியாது... புரிஞ்சிக்கிட்டு என்னை கொஞ்ச நாளைக்கு டிஸ்டர்ப் பண்ணாதே... ஐ நீட் அ பிரேக்" என்றான்.

"புரியுது... ஆனா நீ ஸ்டேஷன் வந்தா உனக்கு ஒரு ரிலீஃப் கிடைக்கும்னு"

"என் சாக்ஷி தவிர வேறெதுவும் எனக்கு ரிலீஃப் தர முடியாது"

"ஒகே ... டேக் யுவர் டைம்... இது சொல்லலாம்னு தெரியல... பட் உன் லிஸனர்ஸ் எல்லோரும் நீதான் ஷோ நடத்தனும்னு ரிக்வஸ்ட் பன்றாங்க..." என்று சொல்ல அவன் எந்தவித பதிலுரையும் கொடுக்கவில்லை.

"சரி நான் வைச்சிடிறேன்" என்று அவள் அழைப்பை துண்டித்துவிட அவன் கைப்பேசியை தன் தமக்கையிடம் கொடுத்து பார்வையிலேயே வெளியேப் போகச் சொன்னான்.

அவளும் இயலாமையோடு வெளியேறிவிட அவன் மனம் தன்னவள் எண்ணத்தில் வெதும்பி கொண்டிருந்தது.

அவளை பார்க்க முடியாமல் அவள் இல்லாமல் தனக்கு மட்டும் இந்த உலகத்தில் என்ன வேலை என்ற ஒரு விரக்தி மனதை அழுத்தியது.

அவளின் நினைவு மட்டுமே இப்போதைக்கு அவனின் ஆறுதல்.

முதல் முதலாய் அவளின் குரலைதான் கேட்டான்.

எத்தனையோ பேர் அவன் குரலுக்கு அடிமையாயிருக்க அவனை மயக்கியது அவள் குரல் மட்டுமே!

அவன் ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளர். சிறுவயதிலிருந்தே அவன் பேசுவதில் வல்லவன். படிக்கிறானோ இல்லை ஓயாமல் பேசி அனைத்து ஆசிரியர்களிடமும் தண்டனை பெறுவான். எல்லோருமே அவனிடம் குறையாய் சொன்ன விஷயத்தை நிறையாய் மாற்றிக் கொண்டான்.

அவனின் துருதுருப்பான பேச்சை தன் வேலையாய் மாற்றிக் கொண்டான்.

எல்லோருமே அவன் வசீகரமான குரலிலும் அடை மழையாய் கொட்டித் தீர்க்கும் அவன் பேச்சிலும் கவர்ந்திழுக்கப்பட, அவள் மட்டும் விதிவிலக்கா என்ன?

அவளுக்கு அவன் நிகழ்ச்சியை கேட்பதில் அலாதியான இன்பம்.

அவன் ஆண்மை நிறைந்த குரல்... அவன் பேசும் விதத்தில் இருந்த நேர்த்தி மற்றும் தெளிவு என அவளின் ரசனைக்குரியவனாய் அவன் மாறியிருந்தான்.

மகிழ் எப்போதும் போல் அன்று நிகழ்ச்சியை தொகுத்து கொண்டிருந்தான். காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி.

"நீங்க கேட்டிட்டு இருக்கிறது ரேடியோ ஸ்கை... 95. 5... நான் உங்க மகிழ்... இன்னைக்கு நாம பேசப் போற விஷயம் காதல் காதல் காதல்... காதல்னு சொன்னதுமே எல்லோர் மனசிலும் பட்டாம்பூச்சி பறக்குமே... காதல் அனுபவமே ஒரு சுவராஸ்யம்... ஆனா காதல் அனுபவமே இல்லாதவங்களுக்கு அது இன்னும் இன்னும் சுவராஸ்யம்... ஏன்னா தெரியாத விஷயத்திலதான் ஆர்வமும் ஈர்ப்பும் அதிகமாயிருக்கும்... எனக்கும் அப்படிதான்... ஸோ லிஸனர்ஸ் எல்லாரும் டபுள் த்ரீ... டபுள் த்ரீ... டபுள் சிக்ஸ் ...டபுள் சிக்ஸுக்கு கால் பண்ணி என்கிட்ட உங்க இறந்த கால காதல் நிகழ் கால காதல் அப்புறம் வருங்கால காதல்னு எந்த மாதிரியான காதல் அனுபவமா இருந்தாலும் ஷேர் பண்ணிக்கலாம்... " என்று படபடவென பேசி முடிக்க வரிசையாய் நிறைய நேயர்கோளோடு பேசிய போதுதான் முதல் முறையாய் சாக்ஷி அவனிடம் பேசினாள்.

"ம்ம்ம்... சொல்லுங்க சாக்ஷி... என்ன பண்ணிட்டிருக்கீங்க"

"கச்சேரிகளில் வீணை வாசிக்கிறேன்"

"சூப்பர்... வீணைன்னு சொன்னதும் நம் பாரதியாரோட கவிதை ஞாபகத்துக்கு வருது... என்னம்மா எழுதியிருப்பாருன்னு தெரியுங்களா..."

"தெரியுமே"

"அப்போ சாக்ஷி நம்ம நேயர்களுக்காக அந்த கவிதையை சொல்லாலமே... பாடனாலும் ஒகேதான்... உங்க வாய்ஸ் வேற ஸ்வீட்டா இருக்கு"

"அய்யோ... பாடத் தெரியாது... வேண்ணா சொல்றேன்"

"வீணை வாசிக்கும் சாக்ஷி நமக்காக வீணையடி நீ எனக்கு கவிதையை சொல்லப் போறாங்க... ம்ம்ம்... சொலல்லுங்க சாக்ஷி"

"பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!


வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!


வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!


வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!


வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!
" என்று அவள் நிறுத்துவிட


"ம்ம்ம்... இன்னும் மூடியலயே"

"முழுசா சொல்லிட்டிருந்தா ஷோ முடிஞ்சிருமே"

"பரவாயில்லை... நீங்க சொல்லிட்டிருந்தா... கேட்டிட்டே இருக்கனும் போல இருக்கு... கன்டின்யூ பண்ணுங்க"

"இல்ல அவ்வளவுதான் நினைவு இருக்கு" என்றாள்.

"என்ன சாக்ஷி நீங்க... ? அடுத்த வரிதான் எனக்கு ரொம்ப பிடிச்ச வரி... அதெப்படி மறந்தீங்க... காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு... என்னம்மா ரசிச்சி எழுதி இருக்காருயா... " என்றான். அந்த வரியை அவன் குரலால் கேட்கவே அவள் நினைவில்லை என்று பொய்யுரைத்தாள்.

அவன் அந்த வரியை சொன்னதும் உணர்வுகள் பொங்கிய அவளின் முகப்பாவனைகளை அவன் பார்த்திருக்க வேண்டும். அதற்கான கொடுப்பனை அவனுக்கு இல்லையே!
"சரி பாரதியோரோட காதல் இருக்கட்டும் ... இந்த வீணை நாயகியின் காதலை பத்தி சொல்லாமே" என்று கேட்க லேசாய் ஒரு மௌனம்.


" அருவியா கவிதையெல்லாம் கொட்டிட்டு... காதல்னதும் சட்டுன்னு ஸைலன்ட்டாயிட்டீங்க... சொல்லுங்க ப்யூச்சரா... பாஸ்ட்டா... ப்ரஸன்ட்டா"

"எனக்கு ப்ரஸன்ட்டதான்... ஆனா ப்யூச்சரான்னு நீங்கதான் சொல்லனும்" என்றாள்.

ஒயாத அலைகள் போல பேசிக் கொண்டிருந்தவன் அவள் சொன்னதன் அர்த்தம் புரியாமல் சற்று நிதானித்து "என்ன சொல்ல வர்றீங்க சாக்ஷி" என்று கேட்க

"உங்களை மாதிரி ஒருத்தர் கிடைச்சா காதலிக்கலாமே..." என்று பளிச்சென்று அவள் சொல்ல

மகிழுக்கு உண்மையிலேயே பட்டாம்பூச்சி பறந்த உணர்வுதான்.

அவள் யாரோ ? என்னவோ ? சட்டென்று சுதாரித்து கொண்டவன் "கவலைப்படாதீங்க... கண்டிப்பா என்னை மாதிரி தொன தொனன்னு பேசிற ஒருத்தர் உங்களுக்கு துணையா கிடைப்பாரு... இது சாபமா வாரமா தெரியல.. எனி ஹவ்... ஆல் தி பெஸ்ட்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தவன்.

நேயர்களிடம் "இன்னும் காதலை பற்றி நிறைய பேசுவோம்... நிறைய பேரோட பேசுவோம்... அதுக்கு முன்னாடி பேக் டூ பேக் அழக அழகான காதல் பாடல்கள் வந்திட்டிருக்கு... உங்களுக்காகவே... கேட்டு என்ஜாய் பண்ணுங்க... நீங்க கேட்டிருக்கிறது மியூசிக் ஜர்னி... நான் உங்க மகிழ்" என்றான்.

அடுத்த கணமே அவன் ஒலிக்க செய்த அந்த பாடல் காற்றாய் மாறி பலரின் செவிகளை தன்வசப்படுத்தியது

"காதல் மழையே காதல் மழையே
எங்கே விழுந்தாயோ... கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ !"


இந்த பாடல் பாடிக் கொண்டிருக்க, மகிழின் மனமும் காதல் சாரலில் நனைந்தது. அவளின் வார்த்தைகள் நனையச் செய்திருந்தது.

அவள் குரலில் ஏதோ மாயம் இருக்கிறது.
காந்தமாய் அவனை ஈர்த்து அவளிடம் கொண்டு சேர்த்தது. View attachment 921


ஹாய் மக்களே,
போன அத்தியாயத்தோட கருத்க்கள் செம. ஆனா கேள்விகள் கேட்டா நான் என்ன பதில் சொல்ல?


இந்த கதை நீங்கள் படித்த கதைகளங்களோடு ஒன்றிப் போகாது. எதிர்பாராத திருமணம்... எதிர் எதிராய் நிற்கும் காதலன் காதலி... இப்படியானதல்ல... கொஞ்சம் ரிஸ்க் எடுத்து இந்த முயற்சியில் இறங்கியிருக்கேன். உங்கள் பிடிக்குமோ பிடிக்காதோங்கிற பயம் இருக்கு.

இயல்பான கதை களத்தில் இருந்து விலகி உளவியல் ரீதியாக சில மனிதர்களின் உணர்வுகளை ஆராயும் கதைகளம்.

ஒரு வித்தியாசமான பயணமா நினைச்சு தொடர்ந்து வந்து உங்கள் கருத்து மற்றும் லைக்ஸ் கொடுத்துவிடுங்கள்.

சீக்கிரம் பதிவு கொடுக்கனுங்கிற கட்டளையையும் முடிஞ்சளவுக்கு பின்தொடர முயற்சி செய்றேன்.

எல்லா வாசக நண்பர்களுக்கு நன்றி

மோனிஷா
magizh romba pavam than...
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
வேந்தன் கொஞ்சம் selfish....

மகிழ் & சாக்ஷி லவ் each other....

ப்ரோபோசல் cute.... 😍

ஆனா உண்மையாவே அவங்க இறந்துட்டாங்களா....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top