NEED A HELP

#1
எனது இனிய அன்புத் தோழிகளே
என்னுடைய தோழி ஒருத்திக்கு
ஒரு பிரச்சினை

அவளின் கணவரும் என்னுடன்
பணிபுரிந்தவர்தான்
ஓய்வு பெற இன்னும் சில
வருடங்கள் இருக்கு

இவர்களுக்கு இரண்டு மகன்கள்
ஒரு மகள்
மகன்கள் நன்கு படித்தும்
நல்ல வேலை இல்லை
ஏதோ கிடைத்த வேலைக்கு
சென்று சொற்ப வருவாய்
வருகிறது
பெண் காலேஜில் படிக்கிறாள்

இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு
கேட்காதீங்க
கணவர்தான் பிரச்னை
நல்ல மனிதர்
மிகவும் அன்பானவர்
பண்பானவர்
எல்லோருக்கும் உதவி செய்யும்
மனமுள்ளவர்
தன்னால் முடிந்த உதவியை
மற்றவர்களுக்கு உடனே
செய்யத் தயங்காதவர்
கடவுளின் அருள் அவரிடம் இருப்பதாக, எங்க வீட்டுக்காரரிடம்
சாமி இருக்கு-ன்னு என்
தோழியே கூறுவாள்

இவ்வளவு நல்ல மனிதர் கடந்த
இரண்டு வருடங்களாக
வேலைக்கு செல்வதில்லை
எப்பொழுதும் காலை 5 மணிக்கே
எழுந்து எல்லாவற்றையும்
சுறுசுறுப்புடன் செய்பவர்
இப்போது பகல் 12 மணி வரை
தூங்குகிறார்
இரவில் நன்றாக தூங்குவதில்லை
எதிலும் பிடிப்பில்லை

எல்லாவற்றிலும் அவருக்கு ஒரு
ஏனோ தானோங்கிற எண்ணம்
and செயல்
அவருக்கு இருந்த லீவெல்லாம் கரைந்து போய் பாதிச் சம்பளமோ
ஏதோ ஒரு தொகை வருகிறதாம்
தற்பொழுது கொஞ்சம் கஷ்டமான
சூழ்நிலை

பையனுக்கு வேலைக்கு-ன்னு
ஒரு பெரிய தொகையை வேறு
ஏமாந்து விட்டார்
அதனால் இப்படி இருக்கிறாரோன்னு
பார்த்தால் கூடப் பிறந்த தங்கை
போல பழகிய ஒருத்திதான்
இவருக்கு ஒரு அமாவாசையன்று
முட்டையில் குங்குமம் வைத்து
சுற்றிப் போட்டாளாம்
இதை அந்த தங்கை போன்ற
பெண்ணே, சமீபமாக
இன்னொருவரிடம் சொல்லும்
பொழுது என் தோழி கேட்டிருக்கிறாள்
அந்த முட்டையை என்ன செய்தாள்
என்று கேட்க இவளால்
இயலவில்லை

எவ்வளவு பெரிய நம்பிக்கைத்
துரோகம்?
இப்பொழுதும் இதெல்லாம்
உண்டா?
இந்தக் காலத்தில் இப்படியும்
செய்வார்களா?
அன்புத்தோழிகளே இதற்கு
இந்தப் பிரச்சனை தீர என்ன
வழி?

மலையாள மாந்திரீகரிடம்
போகலாமா-ன்னு பார்த்தால்
அவள் குடும்பத்தின் மீது
இன்னும் கூடுதலாக வேற
ஏதாவது துன்பம் வந்து
விடுமோன்னு யாரிடமும்
சொல்லவும் என் தோழிக்கு
பயம்

தானுண்டு தன் வேலையுண்டு-ன்னு
யார் வம்புக்கு போகாத என்
தோழியின் மீது அவளுடைய
இரு பக்க சொந்தத்திற்கும்
பொறாமை
இவள் எப்பொழுது விழுவாள்?
நாம் கைகொட்டி சிரிக்கலாம்
என்றே காத்துக் கொண்டு
இருக்கிறார்கள்
சொந்தத்திற்கு உதவி செய்யும்
மனமில்லாததால்தான் தங்கை
போல அந்தப் பெண்ணை
நம்பி வீட்டிற்குள்ளும்
அனுமதித்திருக்கிறாள்

அடுத்த சொந்தத்திற்கு
தெரியாமல் இதை எப்படி
சரி செய்வது என்று என்னிடம்
கேட்டாள்
எனக்கும் ஒன்றும்
தோணவில்லையாதலால்
உங்களின் உதவியை
நாடுகிறேன், அன்புத் தோழிகளே
 
Last edited:
#2
எனக்கு மனதுக்கு சரி என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். அவர் வேலை டென்சனில் தீவிர டிப்ரசன் ஆகியிருப்பார். இல்லை என்றால் மூளையில் கெமிக்கல்ஸ் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம் . அவர்கள் கோவையில் இருந்தால் பி.எஸ்.ஜி. மருத்துவ மனையில் மனநல மருத்துவரை போய் பார்க்க சொல்லுங்கள். மனநல மருத்துவரை பார்க்க சொல்வதால் மனநலம் பாதித்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. எனது நெருங்கிய உறவினரே வீட்டில் நடந்த நிகழ்ச்சியால் மனம் பாதித்து உடல் எல்லாம் எரிகிறது என்றெல்லாம் சொன்னார். அவரை மனநல மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை மேற்கொண்டு இரண்டு வருடங்களில் சரியானார். மருத்துவ மனைக்கு சென்று பார்த்தால் எத்தனை பேர் நம் பார்வையில் நன்றாக இருப்பவர்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்பது தெரியும் . அவரது மகன்களை முயற்சி செய்து நல்ல வேலையை தேடிக் கொண்டு குடும்பத்தை கவனிக்க சொல்லுங்கள். உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து நல்ல வேலையை தேடச் சொல்லுங்கள்
 
#3

Thank you so much, சித்ராசரஸ்வதி டியர்
 
Last edited:
#4
ஆன்மீகத்தில் சரிசெய்ய வேண்டும் என்றால் கோவை ராமநாதபுரம் தன்வந்திரி கோவில் அருகில் உள்ள பணிக்கரிடம் பரிகாரம் செய்ய கேட்டால் சிறிய அளவில் தன்வந்திரி கோவிலில் செய்துக் கொள்ளலாம். அவர் நல்லபடியாக உடல் மற்றும் மனநிலை சரியாக நானும் தன்வந்திரியை வேண்டிக் கொள்கிறேன். வீட்டில் மருதாணி விதை, வெண்கடுகு, நாய் கடுகு, வேப்பிலை , குங்கிலியம், சாம்பிராணி, வெட்டிவேர், பூண்டு மேல்தோல், கஸ்தூரி மஞ்சள், அருகம்புல் இவை எல்லாம் பொடியாகவே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். இதை மாலை நேரத்தில் 48 நாள்கள் புகை போட்டால் பில்லி சூனியம் விலகும்
 
#5
பானுமா அவர்களை முதலில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர சொல்லுங்கள். பின்னர் சித்ரா மா சொன்னது போல மருத்துவரைப் பார்க்க சொல்லுங்கள்.
 
#6

#7
பானுமா அவர்களை முதலில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர சொல்லுங்கள். பின்னர் சித்ரா மா சொன்னது போல மருத்துவரைப் பார்க்க சொல்லுங்கள்.
Thank you so much, அல்லிவிசாலாட்சி டியர்
 
#9
முதலில் அவர் யாரிடம் மனம் விட்டு
பேசுவரோ அவர்களிடம் பேச சொல்லி அவருடைய மாறுதலுக்கான சிறு மாற்றத்தை யூகித்தால் ஏதாவது வழி கிடைக்கும். பிறகு மருத்துவரை அணுகலாம்.
இல்லை என்றால் அவருக்கு அதிக மனஉளைச்சல் மேலும் வந்துவிடும்.
கோவிலுக்கு போயிடடு வரலாம் கடவுள் அருள்புரிவார்.
கவலை கொள்ளாமல் தைரியமாகவும் நம்பிக்கையாகவும் இருக்க சொல்லுங்கள் அதுதான் இப்பொழுது ரொம்ப தேவை.
என்னில் தோன்றியதை சொல்லிட்டேன் பானுமா..🙏💖
 
Last edited:

Advertisements

Top