Latest Episode Neelamani's Ennai yarendru Arivaya?-Final

#93
ரொம்ப நல்லா இருந்தது பா கதை. .மிகவும் அருமை. .நவீனுக்கு கடைசி வரை தோசை சுடுற வேலை தான். .அந்த சீன மாத்தவே இல்லை பா நீங்க. .தோசை மன்னன் :p
 
#94

நன்றி உமா. இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி பா. பெண்களே எத்தனை நாள் தோசை சுட்டது? அதான் கதையிலயாவது மாத்துவமே என்று நினைச்சேன்:LOL::LOL::LOL:
 
#95
R
ஹை பிரெண்ட்ஸ்!
என்னை யாரென்று அறிவாயா கடைசி அத்தியாயத்துக்கு வந்து விட்டோம். இந்த நீண்ட பயணத்தில் என்னோடு முதலில் இருந்து கூடவே வந்து ஊக்கம் கொடுத்த தோழமைகளுக்கும் பின்னால் வந்து சேர்ந்து கொண்டு ஆதரவு அளித்த தோழமைகளுக்கும் என் அன்பு. உங்கள் உற்சாகப்படுத்தும் கமெண்ட்ஸ் தான் என்னை தாமதமானாலும் கட்டாயம் கதையை முடிக்க தூண்டியது. மீண்டும் பிறிதொரு சமயத்தில் சந்திப்போம் டியர்ஸ்! அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

View attachment 6074

Final[/QUOTE ]அருமை இருந்தது
 
#96
சகோதரி நீலாமணிக்கு,
தங்களின் நாவல் ‘என்னை யாரென்று அறிவாயா?” பற்றி சிலவரிகள் சகோதரி. தந்தையின் சொந்தம் அறிய வந்த நாயகியை, சொத்துக்காக வந்தவள் என நாயகன் பேச போய், அவனிடமே வேலைக்கு சேர்ந்து, தன் சுயத்தை நிறுபித்து, சில பல மோதல்களுக்கு பின் கரம் பிடித்த நாயகியின் கதை. நல்ல அருமையான கரு சகோதரி. அதையும் கெடாமால் அருமையாக தந்துயிருக்கிறீர்கள். வாழ்த்துகள் சகோதரி.

“காதலெனும் தேர்வெழுதி” நாவலை எழுதிய சகோதரியா, இது என இந்த நாவலை படிக்கும் போதே தோன்றியது சகோ. அவ்வளவு வளர்ச்சி, நல்ல எழுத்து நடை, ஆர்வத்தை கூட்டிக்கொண்டே போய் இறுதியில் நிறைவு செய்தது அருமை சகோ. உங்களின் அடுத்த கட்டஎழுத்து. முக்கிய இடங்களில் நாவலை முன்சென்றுபின் வருவது என அருமையாக அமைத்து இருக்கிறீர்கள் .நல்ல மெனகிட்டு இருக்கிறீர்கள். எதையும் மேன்போக்காக சொல்லமால், விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள். தனியார் தொலைக்காட்சி நிலையம், அங்கு அவர்களின் உழைப்பு, அதன் செயல்பாடுகள் என ஆரம்பித்து, நாயகியின் ஒப்பனை, குதிரை பிரசவம், மரங்கள் சூழ் வீடு, வீட்டுவிலங்குகள், என பயணித்து சென்றது அருமை சகோ. உதாரணமாக ஹேலிகாப்டரில் பறந்தார்கள் என சொல்லாம். ஆனால் அங்கேயும் வெதர் செக்கிங், வானிலை நிலவரம் அறிந்துக்கொள்ளுதல் என விளக்கம் அருமை.

இந்த நாவலை பற்றி நிறைய பேசலாம் சகோ. ஆனால் ஒரு கடிதம் எல்லாத்தையும் மறக்க செய்கிறது சகோ. ஆம்! விஜயானந்த் கடிதம் சகோ. நாவல் இறுதி பகுதியை நெருங்க, நெருங்க. லட்சுமிக்கு என்ன பிளாஷ்பேக் போடபோகிறீர்கள், குறைந்தது 5 அல்லது 6 பதிவு வருமே, சொந்த தந்தையை 2௦ வருடம் மகளை பார்க்காமல் செய்ததற்கு நியாமான காரணம் வேண்டுமே, வாசகரை எப்படி சரிக்கட்டபோகிறீர்கள் என நினைத்துக்கொண்டே இருந்தேன் சகோ. அந்த கடிதம் பலரையும் சரிகட்டிவிட்டது சகோ.

1.மகள் போன்ற வயது உடைய சிறுமியிடம் தவறு செய்யும், அப்பனிடம் மகளையே அனுப்பமாட்டேன் என லட்சுமி செய்தது நியாயமே என நினைக்க வைத்துவிட்டீர்கள். அவருடைய கோபம் மிக மிக நியாயமே, தூக்கி எறிந்தது நல்லதே என சொல்ல வைத்துள்ளீர்கள் சகோதரி.

2. அப்பனின் ரகசியம் அறிந்து, தன் தாய் செய்தது சரியே என நாயகியை உணர வைத்துள்ளீர்கள்.

3. தன்னை கறிவேப்பிலை போல் நினைத்துவிட்டார் என நினைத்த நாயகனுக்கு, உன்னை மாப்பிள்ளையாக மனதுக்குள் வைத்து இருக்கேன் என நாயகனுக்கு விளங்க வைத்துயிருக்கிறீர்கள்.

4. பெண்ணை பெற்ற தகப்பனுக்கு உலகிலே கொடிய தண்டனை, தவறு செய்துவிட்டு தன் பெண் முன்னால் தலைகுனிந்து இருப்பது தான். விஜயானந்த், தன் குற்றத்தை தன் பெண்ணுக்கே கடிதம் எழுதும் போதும், உன் தாயாரை தவறாக நினைக்கதே என கூறும் போது, அவரின் வலியை உணர வைக்கிறீர்கள்.

ஒரு சின்ன கடிதத்தில், இப்படி பல விஷயங்களை அடங்கி இருக்கும் படி, அந்த கடிதத்தை அமைத்து இருக்கிறீர்கள்.

அடிக்கடி வரும் நாயகனின் சோகம், நாயகியின் சீன்கள் என நாவலில் வரும் ரிபீட்டை கொஞ்சம் எடிட்டிங் செய்து டிரீம் பண்ணால் இன்னும் பஜக் என்று மனதில் ஒட்டிகொள்ளும் சகோதரி. அதேநேரம் தவறு செய்யாத நாயகியின் அம்மா, தாத்தாவை, பாபாவை தரிசித்தவுடன், பரலோகம் பார்சல் செய்துவிட்டீர்களே. ஏன் சகோ? அதுவும் நல்லது தான். ஹீரோயினுக்கு தொல்லை தராமல், அவளுக்கு குற்றவுணர்வுகள் இல்லாமல் குடும்பம் நடத்த செய்துயிருக்கிறீர்கள். நல்ல நாவலுக்கு என் வாழ்த்துகள் சகோதரி.
 
#97

Intha kathai ezhuthumbothu enaku niraya prachanaigal. Enakum udambu sariyillamal Poi en petrorukum udambu sariyillamal Egappatta kashtangaluku idaiye intha kathai ezhuthinen. Athanai mana ulaichalkalum unga urchagam tharum vaarthaigal maraka vaithuvittathu. En muthal kathai aarambithu indru varai kathaiyai aazhnthu padithu virivana vimarsanam tharum unga akkaraiyai ku miguntha Nandri bro
 
#98

வாழ்த்துகள் சகோதரி.
 
Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top