• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nerungathe..Nerungiye Vilagathe - UD 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Naemira

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 21, 2018
Messages
2,761
Reaction score
11,533
Age
31
Location
Thovalai
ஹலோ நண்பர்களே ,

இதுவரைக்கு எனக்கு நீங்க எல்லாரும் நிறைய ஆதரவு குடுத்திருக்கீங்க அதே ஆதரவை " நெருங்காதே ...நெருங்கியே விலகாதே "க்கும் குடுப்பீங்கன்னு நம்பி என்னுடைய முதல் அத்தியாயத்தை பதிவிடுறேன் ....
இதோ "நெருங்காதே ...நெருங்கியே விலகாதே" யோட அத்தியாயம் 1 படிச்சிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிருங்கள் .

நெருங்காதே ...நெருங்கியே விலகாதே 1

s.jpg
மும்பை மக்கள் அனைவரும் நித்திரைக்குள் தங்களை நுழைத்திருந்த நேரம் ....
வானம் என்னும் மெத்தைதனில் , மேகம் என்னும் போர்வைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு துயில் கொண்டிருந்த வெண்மதி .... தென்றல் காற்றின் சிலிர் சிலிர்ப்பில் , போர்வையை விளக்கிவிட்டவாறு மெல்ல எட்டி பார்த்து தன் உறக்கத்தை முறித்துக்கொண்டு ... மினுமினுக்கும் அந்த நட்ச்சத்திரக்கூட்டத்தை பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்த , அந்த அழகான இரவு காட்ச்சியை , தன் அறையின் பால்கனியில் உள்ள ஒரு தூணில் சாய்ந்தவாறு ஒரு பெண் ரசித்துக்கொண்டிருந்தாள் ......

" என்ன அதிசயம் நிலவெல்லாம் ரசிக்க ஆரம்பிச்சிட்ட அதுவும் மெய்மறந்து !! " புன்முறுவலோடு வந்த குரல் பக்கம் திரும்பியவள் ....

" ஏது நான் மெய்மறந்து .... நல்ல ஜோக் தான் , தினமும் நீ இந்த வானத்தையே ரசிச்சி பார்த்துட்டு இருப்பியே .... அப்படி என்ன தான் அந்த வானத்துல தெரியுதுன்னு நானும் வந்து பார்த்தேன் "

" ஏதவாது தெரிஞ்சிதா "

" ம்ம்ம் எங்க ஒன்னும் இல்லை .... அதே வானம் கலர் கூட அதே கருப்பு தான்..... ப்ளாக் அண்ட் வெயிட் மூவி மாதிரி இருந்துச்சு ... நீ மட்டும் எப்படி தான் டெய்லி ராத்திரி இந்த வானத்த புதுசா பார்க்கிற மாதிரி பார்த்துட்டு இருக்கியோ .... " ஆச்சரியமாய் கேட்ட ரேஷ்மாவை .... பார்த்து சிறு புன்னகையை மட்டும் சிந்தினாள்...

" நீ எப்பவும் இப்படி சந்தோஷமா சிரிச்சிட்டே இருக்கணும் .... ஷாரி ரொம்ப நல்லவனா தெரியிறான் .... இந்த முறையாவது எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் உன் கல்யாணம் நடக்கணும் "

" கண்டிப்பா நடக்கும் ... கவலைப்படாத ரேஷு ..."

" எப்படி கவலைப்படாம இருக்க முடியும் ... அதான் ஏழரை நாட்டு சனியை கசின்ங்கிற பேர்ல கூடவே வச்சிருக்கியே ... அதை நினைச்சாதான் பயமா இருக்கு ... ஏய் ஸ்வாதிந்தா பேசமா உன் கல்யாணம் முடியிற வரைக்கும் அவளை நான் கிட்னாப் பண்ணிரவா ???"

"ரேஷு " கோபமாக புருவத்தை உயர்த்தினாள் ....

" நீ என்ன முறைச்சாலும் சரி ... உன் தங்கச்சு பண்றதெல்லாம் சுத்தமா சரியில்ல .... "

"அவ சின்ன பொண்ணு .. வசதியா வாழ்ந்தவ ... திடீர்ன்னு மிடில் க்ளாஸ் வாழ்க்கைய ஏத்துக்கணும்ன்னா கஷ்டமா தானே இருக்கும் ... அவளும் அத்தையும் ரொம்பப்பாவம் ... மாமா போனதுக்கு அப்பறம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க ..."

" ஏது அவ பாவம் ... மனசாட்சியோடு பேசு டி ... அவ எந்த கஷ்டமும் படலை ... அவளால நீங்கதான் கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க ... இப்போ புதுசா ஒருத்தனும் சேர்த்திருக்கான் ... இவளுடைய சுயரூபம் மட்டும் தெரிஞ்சிது கவுதம் விட்டுட்டு போனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை "

" ரேஷ்மா அப்படி சொல்லாத ..... ஆஹானா கவுதமை நேசிக்கிறா "

" ஐயோ அப்புறம் முடியலை ...அவ கவுதமை நேசிக்கலை ...அவனுடைய பதவி அவனுடைய செல்வாக்கு அவனுடைய பணம் இதெல்லாத்தையும் நேசிக்கிறா ... ஆனா இதெல்லாம் உனக்கு புரியாது ...
என் பயம் எல்லாம் அவளை நினைச்சு தான் ... நாளைக்கு ஷாரிக்கை பார்த்துட்டு கவுதமைவிட ஷாரிக் பெட்டரா இருக்கான் ... கவுதமை விட்டு குடுத்த மாதிரி ஷாரிக்கையும் விட்டு குடுன்னு சொல்லிருவாளோன்னு நெஞ்சு திக்கு திக்குன்னு அடிச்சிக்குது .... நீயும் ஒரு முட்டாள் ....சரின்னு சொன்னாலும் இல்லை இல்லை கண்டிப்பா சரி சொல்லிருவ ... அதான் அவளை கிட்ணப் பண்ணவான்னு கேட்டேன் "

" ஏய் அஹானா அந்த மாதிரி கிடையாது ...கவுதமை அவ உண்மையா நேசிச்சா .... அதனால நான் கவுதம்கிட்ட எடுத்து சொன்னேன் அவரும் புரிஞ்சிக்கிட்டாரு ....
ஏதோ நான் கவுதமை லவ் பண்ணின மாதிரியும் ... அஹானாக்காக என் காதலையே நான் விட்டு கொடுத்த மாதிரியும் பேசுற ...
கவுதம் என்னை பொண்ணு பார்க்க வந்தாரு அஹானாக்கு அவரை புடிச்சிருந்துச்சு ... வீட்ல சொன்னேன் அஹானாக்கும் கவுதமும்க்கும் ஃபிக்ஸ் பண்ணினாங்க ... இதுல விட்டு குடுக்கிறதுக்கு என்ன இருக்கு .... "

" அது எப்படி உன் அஹானாக்கு மட்டும் உனக்கு சொந்தமான விஷயங்கள் மேலையே அதிகமான லவ் வருது ... உனக்கு வாங்குன டிரஸ் ... உனக்கு புடிச்ச நகை ... இப்போ உனக்கு பார்த்த மாப்பிள்ளை ... "

"ரேஷு "

" என்னை முறைக்காத ... டிரஸ் நகையெல்லாம் கூட ஓகே ... ஆனா எப்போ கவுதமை வேணும்ன்னு கேட்டாளோ அப்பவே அவளுடைய லிமிட்டை அவ க்ராஸ் பண்ணிட்டா ... இனிமையாவது அவ ஒழுங்கா இருக்கணும் இல்லைன்னா நல்லா இருக்காது ..."

" அப்படி எதுவும் ஆகாது ரேஷு ...நாளைக்கு அவ வீட்டுக்கு வரும் பொழுது அவகிட்ட சண்டை போடாத "

" அது அவ நடந்துக்கிறதை பொறுத்து ... "

" ரேஷு "

" சரி சண்டை போடலை ... ஆடிஷன்ல என்ன சொன்னாங்களாம் "

" சான்ஸ் வரும் பொழுது கூப்புடுறேன்னு சொல்லிருக்காங்க ...பாவம் ரொம்ப முயற்ச்சி பண்ணிட்டு இருக்கா ... அவ ஆசைப்பட்ட மாதிரியே அவளுக்கு நல்ல படத்துல ஹீரோயின் சான்ஸ் கிடைக்கணும் "

" அதுக்கு உன் அஹானா நல்லா நடிக்கணும் " நக்கலாக கூற ... செல்லமாய் முறைத்தாள் ஸ்வாதிந்தா....
 
Naemira

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 21, 2018
Messages
2,761
Reaction score
11,533
Age
31
Location
Thovalai
இந்தியாவின் மாநிலமான ராஜஸ்தானின் தலைநகரம் ஜெய்பூரில்..... ஊரே உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் .... ஊருக்கு ஒதுக்குபுறமான ஒரு காட்டு பகுதியில் , ஒரு பாழடைந்த பங்களாவின் முன் வந்து நின்ற கருப்பு நிற காரை பின்தொடர்ந்து , ரெண்டு மூன்று கார்கள் வந்து நின்றன .
கருப்பு நிற காரில் இருந்து நல்ல வாட்ட சாட்டமாக அடர்ந்த தாடியுடன் , நடத்தற வயதை தாண்டிய ஒருவன் இறங்க ,அவனை சுற்றி அவனுக்கு பாதுக்காப்பாக மற்ற கார்களில் இருந்து ஆயுதம் ஏந்திய அடியாட்களும் இறங்கினர் . அவனை வரவேற்க உள்ளே இருந்து , கழுத்து நிறைய தங்க சங்கிலிகளை அடுக்கியவாறு ஒரு நாற்பது வயதை கொண்ட ஒருவன் .... தன் கரங்கள் கூப்பியபடி ,

" வாங்கோ சூரஜ் பாய் ,உங்களுக்காக தான் நான் காத்துகிட்டு இருந்தேன் " என்ற படி இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துகொண்டனர் .

" வாங்க கஷ்யப் சார் , எப்படி இருக்கீங்க , டீலிங் எல்லாம் பக்கா தானே " மீசையை முறுக்கினான் .....

" ஆமா ஜி , க்ளையண்ட் இப்போ வந்திருவாரு ..வாங்க உள்ள போலாம் " என்று கஷ்யப் கூறிய பின் ...... சூரஜ்ஜின் அடியாட்க்கள் கொஞ்சம் பேர் வெளியே காவலுக்கு நிற்க ..... பாதி பேர் மட்டும் சூரஜின் பாதுகாப்புக்காக உள்ளே சென்றனர் .

மதுபானத்தை தன் வாயில் சரித்தபடி சூரஜ் " இப்போ தான் போன நிம்மதி திரும்ப வந்தமாதிரி இருக்கு .... அவன் நமக்கு எவ்வளவு ஆட்டம் காட்டிட்டான் ... கொஞ்சம் குடைச்சலா குடுத்தான் ... அவன் கதைய முடிச்சதும் அப்பறம் தான் நிம்மதியே வந்திருக்கு ... அந்த 'பார்த்' செத்ததுக்கு அப்புறம் இவனை விட்டு வச்சது தப்பா போச்சு .... அப்பவே காலிபண்ணிருக்கணும் ...புதுசு புதுசா முளைக்கிறானுங்க " முகத்தில் ஆக்ரோஷம் தெறித்தது

" சரியா சொன்னீங்க பாய் "

" என்ன கஷ்யப் உங்க க்ளையண்ட் எப்போ வருவாரு "

" சூரஜ் பாய் ...இப்போ வந்திருவாரு "

" கீழே ஏதோ சத்தம் கேக்குற மாதிரி இல்ல "

" அதுவந்து சூரஜ் பாய் " என்று கஷ்யப் சமாளிக்க ....சூரஜ் தன் ஆளுங்களை கீழே என்ன நடக்கின்றது பார்த்துவிட்டு வர கட்டளையிட ..... அடுத்த நொடி அவர்களது இருந்த அறைகதவை உடைத்துக்கொண்டு ஆறடி உயரம் .... ட்ரிம் செய்ய பட்ட தாடி என்று கம்பிரமான தோற்றம் கொண்ட ஒரு இளைஞன் , தன் முகத்தை மூடிக்கொண்டு , வேட்டையாடும் வேங்கையின் தீராத தாகத்தை விழிகளில் தெறிக்கவிட்டபடி சூரஜின் முன் வந்து நின்றான் .

சூரஜ்ஜின் ஆட்டகள் அவனை தாக்க துப்பாக்கி எடுத்த மறுநொடி , அந்த இளைஞன் உடன் வந்த ஆட்கள் சுரஜ்ஜின் ஆட்க்களை சுட்டு மண்ணில் வீழ்த்தினர் .

" யாருடா நீ " சூரஜ் பற்களை கடித்தான்
கபட புன்னகையுடன் சூரஜின் முன்னாள் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டவன் ..... முறைத்து பார்த்துக்கொண்டிருந்த சூரஜை பார்த்து " பயப்படுறியே சூரஜ் " என்று கேலியாக சிரிக்க ....

ரௌத்திரத்துடன் சூரஜ் தன் ஜிப்பாவில் இருந்து துப்பாக்கியை எடுப்பதற்குள் ..... அவனது கட்டை விரல் குருதி வலிய தரையில் வீழ்ந்தது ....

" ஆ..... " என்று சூரஜ் வான்பிளக்க கத்தினான் ....

" பேசிட்டு இருக்கேன் துப்பாக்கிய எடுக்கிற .... ச்ச ச்ச என்ன பாய் ....பாரு கத்தியெல்லாம் கரையாகிடுச்சு " இயல்பாய் நெற்றியை நீவினான் ....
சூரஜ் தன் எதிரில் இருப்பவன் யார் என்பதை கணிப்பதற்குள் சூரஜின் கால்களை பிடித்து ஒரே இழுப்பில் தன் பக்கம் இழுத்து .... தன் வலது காலை அவனது நெஞ்சின் மீது வைத்து அழுத்தியபடி .... நாற்காலியில் ஒய்யாரமாய் சாய்ந்தமர்ந்தான் ....
முகமெல்லாம் வேர்வை வழிய ... விழிகளில் தொனித்த பயத்துடன்

" நான் யாருன்னு தெரியாம விளையாடுற ... நான் நினைச்சேன் உன்னை உரு தெரியாம அழிச்சிருவேன் .... " பயத்தை மறைத்து கடுமையாக எச்சரித்த சூரஜின் குரல் அறையில் எதிரொலிக்க ....

" ம்ம்ம் அப்புறம் " பொறுமையாக புருவம் உயர்த்த ...நிலைகுலைந்தான் சூரஜ் .....

" நீ தயிரியமானவனா இருந்தா முதல்ல உன் முகத்த காட்டு டா... " மீண்டும் சீறினான் ....
காதை மூடிக்கொள்ளும் அளவிற்கு அவனது சிரிப்பொலி எக்காளமாய் எதிரொலிக்க .....
சூரஜின் விழிகளை தன் பார்வையாலே ஆழ துளைத்தவன்

" காட்ட நான் தயாரா இருக்கேன் பார்க்க உனக்கு தயிரியம் இருக்காடா " இடியை போல முழங்கியவனின் குரல் ... சூரஜின் பயத்தை மேலும் அதிகரித்தது ....

" கோ... கோன் .... ஹே து ??? யா ...யார் நீ .... என்கிட்ட இருந்து என்ன வேணும் " வார்த்தைகள் தடுமாறியபடி உளறினான் ....

" துமாரா அந்த் .... உன்னுடைய அழிவு " விழிகள் சிரித்தபடி நெருப்பை கக்குகியது ..... நொடி பொழுது தாமதிக்காமல் அவன் தன் முகத்திரையை கிழித்தெறிய .... நாடி நரம்பெல்லாம் அடங்கிபோக வார்த்தைகள் இன்றி

" நீ நீ ..... " என்றபடி சூரஜ் தடுமாற ....

" நான்.... தான் .... உன் எமன் டா " பற்களை நறநறத்தபடி ... சூரஜின் மார்பில் ஓங்கி மிதித்தான் ......

f.jpg
 
Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Theri baby... Semma story டாலி?
 
Naemira

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 21, 2018
Messages
2,761
Reaction score
11,533
Age
31
Location
Thovalai
ஆரம்பமே அதிரடியா இருக்கே....sema start நெமி.....
Thank you shaju .... for ur support..keep supporting....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top