• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 2
அமெரிக்காவில் சிகாகோ மாகாணத்தில் இருந்த ஒரு பிளாட்டில், ரோஹித் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, காலிங்பெல் நிற்காமல் அலறியது..
அவனும் இரண்டு காதுகளையும் நன்றாக மூடிக்கொண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, காலிங்பெல் மட்டும் நிற்காமல் அடித்துக் கொண்டே இருக்க,
“சரியான இம்சை..” என்று திட்டிய வண்ணம் படுக்கையில் இருந்து எழுந்து சென்ற ரோஹித் கதவைத் திறக்க, “டேய் எருமை கதவைத் திறக்க இவ்வளவு நேரமா..? என்னோட கீய் கொடு நான் போய் படுக்கிறேன்..” என்று கடுப்புடன் கூறிய கீர்த்தியைப் பார்த்தவன்,
“உன்னோட கீயை என்னிடம் எதுக்கு கொடுத்துட்டுப் போறா..?” என்று அவனும் கடுப்புடன் கேட்க, “நான் மட்டும் அந்த மைதா மாவு காரனிடம் நைட் சிப்ட் செய்துட்டு வருவேன்.. நீ மட்டும் நல்ல தூங்குவியோ..?” என்று அவளும் எகிறினாள்
“ஆகமொத்தம் நான் நிம்மதியாகத் தூங்கக் கூடாது.. அதுதானே உன்னோட திட்டம்..?” என்று கோபத்துடன் கேட்டான் ரோஹித்
“நான் மட்டும் தூங்காமல் தானே வேலை செய்கிறேன்.. நீ மட்டும் எப்படி நிம்மதியாகத் தூங்கலாம்..?” என்று சத்தமிட்ட கீர்த்தியைப் பார்த்து,
“ஐயோ சாமி நைட் கத்தி ஊரைக்கூட்டி பஞ்சத்து வைத்திராதே தாயே! இது ஒன்னும் நம்ம ஊரு கிடையாது..” என்று அவன் கையெடுத்துக் கும்பிடுவதைப் பார்த்து மெல்ல மலை இறங்கிய கீர்த்தி..
“ரோஹித் சாவியைக் கொடு! நான் போய் தூங்குகிறேன்..” என்று அவள் சோர்வாக சொல்ல, “முதலில் சாப்பிட்டியா கீர்த்தி..?” என்று கேட்டான் ரோஹித்
அவள் இல்லை என்று தலையை இடமும் தலையை ஆட்ட, “லூசு வா சாப்பிட்டுவிட்டு அப்புறம் சென்று தூங்கு..” என்று அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றான்
இரவு பன்னிரண்டு மணக்க மணக்க தக்காளி சாதம் செய்து வைத்திருக்க அதை மோப்பம் பிடித்த கீர்த்தி, “டேய் ரோஹித் நீ மட்டும் எப்படித்தான் இப்படி மணக்க மணக்க சமையல் செய்கிறாய் என்று தெரியவில்லை..” என்று சொன்னவள் டைனிங் டேபிளில் அமர்ந்தாள்
அவளின் கேள்விக்கு அழகிய சிரிப்பை பதிலென கொடுத்தான் ரோஹித், அதைப் பார்த்த கீர்த்தி, “எல்லா கேள்விக்கும் உன்னோட பதில் சிரிப்புதானா..? உன்னோட அந்த அழகான புன்னகைக்கு பின்னால் இருக்கும் மர்மம் தான் என்ன என்று எனக்கே தெரிய மாட்டேன் என்கிறது..” என்று புலம்பியபடியே சாப்பிட ஆரமித்தாள்
“உனக்கு இப்ப இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம் தானா..?” என்று கேட்ட ரோஹித், தனக்கும் ஒரு தட்டில் சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு அவளின் எதிரில் அமர்ந்தான்
“நீயும் இன்னமும் சாப்பிடலையா லூசு..” என்று கேட்ட கீர்த்தியைப் பார்த்த ரோஹித், “நீயில்லாம் நான் மட்டும் எப்படிடா சாப்பிடுவேன்..?” என்று கேட்டவனை விழிகள் இரண்டும் தெறிக்கும் அளவிற்கு அவனைப் பார்த்தாள் கீர்த்தி
“அப்படியெல்லாம் சொல்வேன் என்று எதிர் பார்க்காதே கீர்த்தி..” என்று சிரிப்புடன் சொல்லி கண்ணடிக்க, “ஃபிராடு நீ அவ்வளவு நல்லவனோ என்று நினைத்து ஒரு நிமிஷம் ஏமாந்துவிட்டேன்..” என்று சொன்ன கீர்த்தி,
“இது இரண்டாவது ரவுண்டா..?” என்று சந்தேகமாகக் கேட்டாள் கீர்த்தி
“இல்லடா வந்தவுடன் லேப்டாப்பில் வொர்க்கை முடித்துவிட்டு அப்படி படுத்துவிட்டேன்..” என்று சொன்ன ரோஹித் சாப்பிட, அவனைப் பார்த்த கீர்த்தி
“டேய் ரோஹித் எனக்கு ஒரு சந்தேகம்..?” என்று கேட்ட கீர்த்தியைப் பார்த்து கேள்வியாக ஒற்றை புருவம் உயர்த்தினான் ரோஹித்
“உன்னோட ஊரில் அத்தனை சொத்துகள் அனைத்தையும் வைத்துக் கொண்டு இங்கே வந்து வேலை செய்யும் அளவிற்கு என்ன நிலைமை வந்தது..?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்ட கீர்த்தியைப் பார்த்த ரோஹித்
“உனக்கு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகணுமா..?” என்று எதிர் கேள்விக் கேட்டவனைப் பார்த்து, “சொல்லாதே நல்ல சாப்பிடு..” என்று சொன்ன கீர்த்தி கோபத்துடன் சாப்பிட ஆரமித்தாள்
அவளின் கோபம் எதுவரைக்கும் என்று அவனுக்கும் தெரியும், அதனால் அவனும் எதுபற்றியும் கவலையும் இல்லாமல் சாப்பிட ஆரமித்தான் ரோஹித்
நல்ல சாப்பிட்டு முடித்தவுடன் எதுவும் பேசாமல் எழுந்து சென்ற கீர்த்தி, கீயை எடுத்துக்கொண்டு அவளின் ஃப்ளாட்டிற்கு சென்றாள்
அவனும் எழுந்து கதவை அடைத்துவிட்டு அதன்மேல் சாய்ந்து நின்று, “நான் என்னடி பண்ணினேன்.. என்னிடம் அப்படி பேச உன்னால் எப்படி முடிந்தது..” என்று கேட்டவன் ஆழ மூச்செடுத்து தன்னை சமாதானம் செய்துக்கொண்டு படுக்கை அறையை நோக்கிச் சென்றான்
காலையில் எழுந்த கீர்த்தி, அவனுக்கும் சேர்த்து காபி போட்டுவிட்டு அலைபேசியைக் கையில் எடுத்து, ரோஹித்துக்கு அழைத்தாள்..
தூக்கக்கலக்கத்தில் செல்லை எடுத்தவன், “ஹலோ..” என்று சொல்ல, “டேய் எருமை எழுந்திரு! வந்து காபி சாப்பிடு..” என்று அழைக்க, “ம்ம் வருகிறேன் கீர்த்தி..” என்று சொல்லிவிட்டு அலைபேசியை வைத்தவன் குளியலறைக்குள் புகுந்தான்.. கீர்த்தி காலை சமையலை சமைக்க ஆரமித்தாள்..
இதுதாங்க கீர்த்தி, எப்பொழுது எந்த கோபத்தையும் பத்து நிமிடத்திற்கு மேல் அவளால் பிடித்தது வைத்திருக்க முடியாது.. கீர்த்தி ரோஹித்தின் உயிர்தோழி என்றே சொல்லலாம்.. கீர்த்திக்கு பிறந்தது வளந்தது எல்லாம் அமேரிக்கா தான். அவளின் பெற்றொர் இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட, இவள் இவளது பாதையில் செல்ல ஆரமித்தாள்..
அமெரிக்காவில் பிறந்தப்பெண் என்றதும் கிளப், டான்ஸ், பார்ட்டி, டேட்டிங் என்று செல்லும் பெண்களில் இருந்து இவள் முற்றிலும் மாறுபட்டவள்.. அவளுக்கு இது எதுவுமே பிடிக்காது..
அவள் பார்க்கும் அனைவரும், “நீங்க தமிழ்நாடா..?” என்று கேட்கும் அளவிற்கு தமிழும் பேசுவாள்.. தமிழ்நாட்டு பெண் போலவே இருப்பாள்.. அவளுக்கு இந்தியா என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் சின்ன வயதிலேயே அவள் தமிழை மிகவும் விருப்பத்துடன் கற்றாள்..
அங்கே வரும் இந்தியப்பெண்களுடன் தோழியாக பழகுவாள்.. அப்படியே நாட்கள் விரைய அவளுக்கு கிடைத்த முதல் இந்திய தோழன் தான் நம்ம ரோஹித்..
முதலில் இவனுடன் விளையாட்டாக பழகிய கீர்த்தி, பிறகு நல்ல தோழியாக பழகவும் ஆரமித்துவிட்டாள்.. இவள் அமெரிக்காவில் பிறந்து இந்திய கலச்சாரம் படி வளர்ந்த அமெரிக்காவின் தமிழ் பேசும் மங்கை!
அன்று விடுமுறை என்பதால் மெதுவாக எழுந்து குளித்துவிட்டு வந்த ரோஹித்தைப் பார்த்த கீர்த்தி, “வரும் நேரத்தைப் பாரு.. ஆடி அசைந்து மெதுவாக வருவதற்குள் இந்த காபி மாட்டுக்கு வைக்கும் புண்ணாக்கு தண்ணியை விடவும் மோசமாக ஆகிவிட்டது..” என்று அவனைக் கடிந்துக் கொண்டவள் மறுபடியும் காபி போட்டு அவனின் கையில் கொடுத்துவிட்டு தானும் ஒரு கப்பை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்
ரோஹித் வழக்கம் போல வம்பிழுக்காமல் அமைதியாக இருப்பதைப் பார்த்து புருவம் உயர்த்தினாள் கீர்த்தி, “என்னடா காலையில் ஒரே யோசனையாக இருக்கிறாய்..?” என்று கேட்டாள்
“இல்ல கீர்த்தி நைட் வீட்டிற்கு கால் பண்ணினேன் யாருமே எடுக்கல.. அண்ணனுக்கும் கால் பண்ணினால் அவனும் எடுக்கவே இல்லை.. அதுதான் ஒரே யோசனையாகவே இருக்கிறது..” என்று சொல்ல
“கவலைப்பாடாதே! கண்டிப்பாக போன் வரும்.. இங்கே ராத்திரி என்றால் அங்கே பகல், ஏதாவது வேலையாக இருந்திருக்கலாம்.. அதுக்கு இப்படித்தான் இருப்பியா..?” என்று திட்டியவள்
அவளின் அலைபேசியை எடுத்து அவனின் வீட்டிற்கு அழைத்தாள்.. அந்த அழைப்பை எடுத்து கல்யாணி, “ஹலோ..” என்று சொல்ல, “அம்மா நான் கீர்த்திம்மா..” என்று சொல்ல,
அதுவரையில் அழுதுக்கொண்டு இருந்த கல்யாணி, “ஒரு நிமிஷம் கண்ணா..” என்று சொன்னவர் எழுது சென்று முகம் கழுவிவிட்டு வர, “டேய் ரோஹி அம்மா பேசறாங்க..” என்று எதிரில் இருந்த ரோஹித்திடம் அவள் சொல்ல, ‘பேசு கீர்த்தி..’ என்று சைகை செய்தான் ரோஹித்
“சொல்லும்மா நல்ல இருக்கிறாயா..?” என்று பாசத்துடன் கேட்டார் கல்யாணி
“என்னங்கம்மா உங்களின் தூக்கத்தைக் கேடுத்துவிட்டேனா..?” என்று வருத்தமாகக் கேட்ட கீர்த்தியின் கேள்விக்கு சிரித்தவர்,
‘அதைக் கெடுக்கத்தான் நான் பெத்து வைத்திருக்கேனே ஒன்று அது என்னோட தூக்கத்தை நல்ல கெடுத்துவிட்டது’ என்று மனதில் பெரிய மகனை திட்டியவர்,
“இல்லம்மா நான் இன்னும் தூங்கவில்லை..” என்று கூறியவர், “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்மா நல்ல இருக்கிறாயா..?” என்று செல்லமாகக் கேட்க,
“நான் நல்ல இருக்கேன் அம்மா.. அப்பா எங்கே..?” என்று கேட்டாள் கீர்த்தி
“அவர் தூங்குகிறார் கீர்த்திம்மா..” என்று சொன்னவர், கணவன் நொடிந்து போயி உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து கண்ணீரை அவரின் முந்தானையில் துடைத்தார்..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“பாவம் அம்மா ரோஹித் ரொம்ப பயந்துவிட்டான்.. யாருமே என்னோட போனை எடுக்கவே இல்லை என்று ரொம்பவே வருத்தமாக கூறினான் அதுதான் உங்களுக்கு அழைத்ததேன்..” என்று தான் அழைத்த காரணத்தைக் கூறிய கீர்த்தி ரோஹித்திடம் போனைக் கொடுத்தாள்
“அம்மா.. எப்படிம்மா இருக்கீங்க..? உடம்பிற்கு எதுவும் இல்லையே.. நான் ரொம்பவே பயந்துவிட்டேன் அம்மா..” என்று கூறிய மகனின் ஒலியைக் கேட்ட அந்த அன்னை,
“இல்ல கண்ணா உடம்பிற்கு ஒன்னும் இல்லை... நாங்கள் ஒரு கல்யாணம் என்று சென்றதால், யாரும் யாரும் உன்னோட கவனிக்கவில்லை போல..” என்று சமாளிப்பாகக் கூறிய கல்யாணி,
“நீ எப்படிப்பா இருக்க..? எப்போ இந்தியா வருகிறாய்..?” என்று கேட்க, “அம்மா இன்னும் மூனே வருடம் நான் அங்கே வந்துவிடுவேன்..” என்று சொல்லி அன்னையைத் தேற்றியவன்,
“அம்மா அண்ணா எங்கே..? நான் போன் பண்ணியும் போன் எடுக்கவே இல்லை.. அவன் வந்தால் என்னிடம் பேச சொல்லுங்கள்..” என்று சொல்ல,
‘அவன் நாம் எல்லாம் வேண்டாம் என்று சென்றுவிட்டான் கண்ணா.. இனிமேல் வரவே மாட்டான்..’ என்று மனதில் நினைத்தவர் கணவன் மெல்ல எழுவதைப் பார்த்து அவரிடம் போனைக் கொடுத்தார்..
“டேய் ரோஹித் என்னப்பா இப்போ போன் பண்ணிருக்க..? உனக்கு எதுவும் இல்லையே..?” என்று ஒருவிதமான படபடப்புடன் கேட்க, “நீங்களும் அண்ணாவும் ஏன் போனே எடுக்கல..” என்று வருத்தமாக கேட்டான்
“இல்லப்பா அண்ணா நேற்று செல்லை தண்ணியில் போட்டுவிட்டான்.. அதனால் போன் வந்தால் அடிக்கிறதே தவிர, போன் வருவதே தெரியவில்லை அதுதான் பேசாமல் இருந்திருப்பான்.. அவனே கூப்பிடுவான்..” என்று சொன்னவர்
“நீ நல்ல சாப்பிட்டு சந்தோசமாக இருக்க வேண்டும்..” என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தி, “அதுக்கு அந்த மைதா மாவுக்காரன் விடமாட்டான்..” என்று ரோஹித்திடம் இருந்து போனை வாங்கி சாரி சாரி, போனைப் பிடுங்கி பேசிய கீர்த்தியின் குரலைக் கேட்டு அத்தனை வருத்தத்தையும் மீறி சிரித்துவிட்டார் மாணிக்கம்
“கீர்த்திம்மா நீ தப்பி தவறி அமெரிக்காவில் பிறந்துவிட்டாய்.. நீ அங்கு பிறக்க வேண்டிய பெண்ணே கிடையாது செல்லம்..” என்று மாணிக்கம் புன்னகையுடன் சொல்ல,
“அப்போ நான் மாணிக்கத்திற்கும் மிஸஸ் மாணிக்கத்திற்கும் மகளாகப் பிறந்திருக்க வேண்டுமா அப்பா..” என்று கேட்ட கீர்த்தியின் காதைப் பிடித்தது திருகினான் ரோஹித்
“ஐயோ அப்பா இந்த ரோஹித் காதைப் பிடித்து திருகுகிறான்..” என்று கத்திய கீர்த்தியின் குரலைக் கேட்டு, “டேய் ரோஹித் என்னோட மகளை எதற்கு காதைப் பிடித்து திருகுகிறாய்..?” என்று கண்டிக்க,
“பாரு அப்பா என்னோட காதை ஏன் பிடித்து திருகுகிறாய் என்று கேட்கிறார் அதற்கு முதலில் பதில் சொல்லுடா..” என்று போனை அவனின் கையில் கொடுத்தவள், சிரிப்புடன் நிற்க,
“அப்பா சொல்லுங்க..” என்றவனிடம் அவர் என்னமோ சொல்ல, “சரீங்க அப்பா..” என்று சொன்னவன் குறுஞ்சிரிப்புடன் கீர்த்தியைப் பார்த்தான்
“ம்ம் சரீங்க அப்பா அப்படியே செய்துவிடுகிறேன்.. ம்ம் ம்ம் சரி சரி..” என்று சிரிப்புடன் அவன் சொல்லிக்கொண்டு இருக்க, ‘அவர் அப்படி என்னதான் சொல்லி இருப்பார்..?’ என்று யோசனையுடன் நின்றிருந்த கீர்த்தியைக் கூர்ந்து பார்த்தவன் போனை வைத்தான்!
“டேய் அப்பா என்னடா சொன்னார்..?” என்று கேட்ட கீர்த்தியுடன், “ம்ம் எங்க ஊரில் பிள்ளைகள் மரியாதை இல்லாமல் பேசினால்...” என்று அவன் இழுக்க,
“பேசினால்..” என்று எடுத்துக் கொடுத்தாள் கீர்த்தி, அவளின் முகத்தைப் பார்த்தவன், “அப்படி பேசினால் விறகு கட்டை எடுத்து விளாசிவிடுவார்கள்..” என்று ரோஹித் சிரிப்புடன் கூறினான்
“யூ மீன் அடுப்பு எரிக்க யூஸ் பண்ணும் மரத்தின் குச்சிகள்..?” என்று அவளுக்கு தெரிந்த தமிழில் கேட்டாள்
“ரொம்ப சரியாக சொல்லிவிட்டாய் கீதும்மா.. ஆனால் அந்த கட்டை இங்கே கிடைக்காது என்ற காரணத்தால்..” என்று ரோஹித் நிறுத்த, “நீ அடிக்க போறது இல்ல இதுவும் சரிதானே..?” என்று கேட்டவளைப் பார்த்து இல்லை என்று தலை அசைத்த ரோஹித்,
சமையல் அறைக்குள் சென்று ஒன்றே எடுத்து வந்தான்.. அவன் கையில் இருந்ததை பார்த்து, “ஐயோ சட்டுகம்...” என்று ஓட ஆரமித்தாள்
“ஏய் கீர்த்தி நில்லுடி! ஒரு இரண்டு அடிமட்டும் வாங்கிட்டு போடா..” என்று ரோஹித் அவளைத் துரத்த, “அடப்பாவி அதில் அடித்தால் வலுக்கும் எருமை..” என்று சொல்லியவாறு நிறக்காமல் ஒட்டிய கீர்த்தியைப் பார்த்து சிரித்தான் ரோகித்
“உன்னை இன்னைக்கு வெளுக்காமல் விடுவது கிடையாது..” என்று அவளைத் துரத்தியவனைப் பார்த்து, “டேய் ராகி என்னை விட்டுவிடா, என்னால் ஓடவே முடியலடா..” என்று சொல்லி ஓட்டும் வேகத்தை மெல்ல மெல்ல குறைக்க ஓடுவதை நிறுத்திய ரோஹித்
“என்ன சொன்ன கீர்த்தி..?” என்று அவன் புருவம் உயர்த்தி சிரிப்புடன் கேட்க, “அண்ணா என்னை விட்டுவிடு!” என்று கையெடுத்து கும்பிட்ட, கீர்த்தியைப் பார்த்து நன்றாக வாய் விட்டு சிரித்தான் ரோஹித்
“அப்பா என்ன சொன்னார் தெரியுமா..?” என்று அவன் அவளிடம் கேட்க, இல்லை என்று தலை அசைத்தாள் கீர்த்தி
“நீ இந்தியா வரும் பொழுது என்னோட மகளையும் இங்கேயே அழைத்து வந்துவிடு என்று சொன்னார்..” என்று சொன்ன ரோகித்தைப் பார்த்து கண்கலங்கினாள் கீர்த்தி
“எனக்கு யாரும் இல்லை என்ற நிலை மாறி எனக்கும் அப்பா, அம்மா, அண்ணா எல்லோரும் இருக்கின்றனர்..” என்று சந்தோசத்துடன் கண்கலங்கி நின்ற கீர்த்தியைப் பார்த்த ரோஹித்திற்கு ஒரு மூன்று வயது குழந்தை பொம்மை கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் நிற்பது போலவே இருந்தது
“நீ சொன்னாலும், சொல்லாவிட்டாலும், எங்க வீட்டு பொண்ணுதான்..” என்று சொல்ல அவனுக்குமே கண்கலங்கியது.. நட்பு என்ற மலரின் வாசம் நீங்காமல் அந்த பூஞ்சோலை எங்கும் பரவியது..
மகனிடம் பேசிவிட்டு போனை வைத்த மாணிக்கம், “நீ ஏதாவது அவனிடம் சொன்னியம்மா..?” என்று கேட்டார்
“இல்லைங்க அவன் கண்காணாத தேசத்தில் இருந்து ரொம்பவே கவலைப்படுவான்.. அதுதான் நான் எதுவும் அவனிடம் சொல்லவே இல்லை..” என்று சொன்னவர்,
“கீர்த்தி நல்ல பொண்ணு! அவள் இந்த வீட்டில் பிறந்திருந்தால் எப்படி இருக்கும்..?” என்று நினைத்தவர், “நம்ம சக்தி பற்றி இப்பொழுது எதுவும் அவனிடம் சொல்ல வேண்டாங்க.. அவன் இங்கே வந்த பிறகு அவனிடம் சொல்லிக் கொள்ளலாம்..” என்று சொன்னவர் தூங்க சென்றார்..
மனைவியைப் பார்த்த மாணிக்கம், ‘மனதில் எவ்வளவு கவலை வைத்துக் கொண்டு இவளால் எப்படி இவ்வளவு சரியாக முடிவெடுக்க முடிகிறதோ..? அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்..” என்று அவரும் படுக்கை அறையை நோக்கி சென்றார்..
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Naan kooda Keerthi thaan Rohitthoda lavvaro nnu ninaichen Sandhiya Sri dear
Keerthi paavamppaa
Maanikkamum Kalyaniyum Keerthiyai Pettha ponnaaga ninaithu pasaam kaattuvathum nallaathaanirukku Sandhiya dear
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top