• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha iru Nenjangal -23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 23
மதுரை முழுவதும் இருந்த அவனின் சொந்தபந்தங்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைக்க, அவனது தாத்தா- பாட்டி இருவரும் வந்தனர்..
அவர்கள் காரில் வரும் பொழுது எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு அமைதியாக வந்தவள், “தாத்தா நாம் எங்கே போகிறோம்..?!” என்று கேட்டாள்..
“நாம் கோவிலுக்கு போகிறோம் குட்டிம்மா..” என்று பதில் சொல்ல அவளும் அமைதியாக வந்தாள்.. அவள் அவளின் அன்னை பற்றி கேட்கவும் இல்லை அதேபோல யாரையும் தொந்தரவு செய்யவும் இல்லை அவள் மிகவும் அமைதியாக வந்தாள்..
அவர்களின் சொந்த வீடு மதுரையில் இருப்பதால் அங்கே நேராக வந்தவர்கள் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அங்கே இருந்த வீட்டைப் பார்த்து,
“பாட்டி இது யாரோட வீடு..?” என்று கேட்டாள் ..
“இதுவும் நம்மளோட வீடுதான் கண்ணம்மா..” என்றவர் காரை விட்டு இறங்கி அவளைத் தூககிக் கொள்ள, அவளும் அமைதியாக வீட்டிற்கு சென்றாள்..
அங்கிருந்த ஹோலில் அமர்ந்து இருந்த ரோஹித் அவள் வருவதை கண்டு ‘அவள் என்ன சொல்கிறாள் என்று பார்போம்..?’ என்று அமைதியாக அமர்ந்திருக்க, அவனை பார்த்தவள்,

தாத்தாவின் பக்கத்தில் வந்த அபூர்வா, “தாத்தா இந்த அங்கிள் கோபமாக பேசுவாரே..” என்று அவள் ரோஹித்தைக் காட்டிக் கூறியதைக் கேட்ட பெரியவர்கள், சிரித்துவிட்டனர்..
“அவன் உன்னை எதுவும் செய்ய மாட்டான்.. முக்கியமா என்னோட குட்டிம்மாவை கோபமாக பேச மாட்டான்..” என்று அவளை தூக்கிக்கொண்டு அவளது தாத்தா சொல்ல,
“அப்படியா..?!” என்று கேட்டதைப் பார்த்து ரோஹித்திற்கே பாவமாக இருந்தது.. இருப்பினும் அவன் அமைதியாக இருந்தான்..
“அப்போ நான் அந்த அங்கிளிடம் போகவா..?” என்று தாத்தாவைக் கேட்டாள் அபூர்வா,
“அவன் அங்கிள் இல்லை அபூர்வா..” என்றார் சிவரத்தினம்..
“அவர் அங்கிள் இல்லையென்றால் அவர் யாரு..? நான் அவரை எப்படி கூப்பிட வேண்டும்..” என்று சமத்துப் பெண்ணாகக் கேட்டாள் அபூர்வா..
“அவன் உன்னோட அப்பா..” என்று அவளுக்கு சொல்லிக் கொடுக்க, “என்னோட அப்பாவா..?” என்று கேட்டவள் ரோஹித் முகத்தையே பார்த்தாள்
அவள் சிவரத்தினத்திடம் இருந்து இறங்கி அவனிடம் செல்ல, அதுவரையில் அமைதியாக இருந்தவன் எழுந்து அவளின் அருகில் வர அவனின் எதிரே நின்று இடையில் கையூன்றி அவனையே பார்த்தாள்..
“அபூக்குட்டிக்கு அப்பாவைப் பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டான்..
“உங்களுக்கு அம்மாவைப் பிடிக்குமா..?” என்று தலையைச் சரித்துக் கேட்டாள் அபூர்வா.. அவளின் முகம் பார்த்தவன், அவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன்,
“அம்மாவை எனக்கு இவ்வளவு பிடிக்கும் என்று கைகள் இரண்டையும் நீட்டி விரித்துக் காட்ட, அவனிடம் புன்னகையுடன் வந்து அவனைக் கட்டிக் கொண்டாள் அபூர்வா..
“அப்பாவிற்கு அபூர்வாவை பிடிக்குமா..?!” என்றாள் அபூர்வா..
“அப்பாவிற்கு அபூர்வாவை ரொம்ப பிடிக்கும்..” என்று சொன்னவன், அவளைத் தூக்கிக் கொள்ள,
“அப்பா அம்மா என்னிடம் ஒன்றுமே சொல்லல..” என்று சொன்னவள், அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு சலுகையாக முத்தம் கொடுக்க, அவனும் அவளிற்கு முத்தம் கொடுக்க குதுகலத்துடன் சிரித்தாள்
அவளின் புன்னகையில் அவனுக்கு சந்தோசம் இரட்டிப்பாக மாற, “தாத்தா – பாட்டி நீங்க இருவரும் சென்று பத்திரிக்கை கொடுத்துவிட்டு வாருங்கள்..” என்றவனின் சந்தோசம் கண்டு பெரியவர்கள் தங்களின் வேலையை கவனிக்க துவங்கினர்..
அவளை தூக்கிச்சென்று காரில் அமர வைத்தவன், “செல்லம் நாம் எங்கே போகலாம்..” என்று கேட்க, “அப்பா முதலில் கோவிலுக்கு போகலாம் அப்பா..” என்றாள் அபூர்வா..
“இல்லடா நாம் அப்புறம் கோவிலுக்கு போகலாம்..” என்றவன் அவளை அழைத்துச் சென்று அவளுக்கு பிடித்த பொம்மைகளையும், விளையாட்டு பொருட்களையும் வாங்கிக் குவித்தவன்
அவள் ஊர் சுற்றிவிட்டு உறங்குவதைப் பார்த்து மகிழ்ந்து அவளின் நெற்றியில் முத்தம் வந்தவன், “டிரைவர் வண்டியை எடுங்க..” என்று கூறியவன் காரின் கதவுகளை இறக்கிவிட்டு, அவனின் மடியில் படுத்திருந்த மகளின் தலையை வருடிக் கொடுத்துக்கொண்டே வந்துக்கொண்டே இருந்தவன்,
அவனின் மனம் திடீரென்று படபடவென்று அடித்து கொண்டது.. மனம் முழுவது யாரோ தன்னை விட்டு பிரிந்து செல்வது போல தோன்றியது.. அவனது நினைவுகளில் அவள் மையமாக இருக்க அலைபேசியை எடுத்தான்
அதிலிருந்து மதுமிதாவிற்கு அழைத்தவனின் அழைப்பு போய் கொண்டே இருக்க, இவனுக்கு பிரசர் தலைக்கு ஏறியது.. ஏனோ அவள் எடுக்காமல் இருப்பது அவளுக்கு ஏதோ ஆபத்து என்று அவனின் மனம் அடித்துக் கொள்ள, அந்த அழைப்பு எடுக்கப்பட்டது..
“ரோஹித்... அபூவைப் பத்தி.. த்தி.. தி.. பத்திரமாகப் பார்த்துக் கொள்..” என்றவளின் பேச்சு விட்டு விட்டு வர, “நீ அவளுக்கு பாதுக்காப்பாக இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்குடா..” என்று சொன்னவளின் மூச்சு வாங்க பேசினாள் மதுமிதா..
“ஏய் மது என்னடி ஆச்சு உனக்கு..? எதுக்கு இப்படி எல்லாம் பேசுகிறாய்..?” என்று போனில் கத்தியவனின் குரல் அவளுக்கு சென்றடைவதற்கு அவள் மயங்கிச் சரிந்தாள்.. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்த ஒரு சின்ன திருப்பத்தில் காரை திருப்ப,
“ஏய் மது! ஏய் பேசுடி..” என்று கத்தியவனின் குரலில் குழந்தை விழித்துக் கொள்ள எழுந்தவள், காரின் கதவுகளின் வழியே வெளியே பார்த்தவள்,
“அப்பா.. அம்மா அம்மாஆஆ..” என்று கத்த அவளின் குரலில் நிமிர்ந்தவன், “டிரைவர் வண்டியை நிறுத்துங்க..” என்று சொன்னவன் கீழே இறங்கிப் பார்க்க, ரத்தவெள்ளத்தில் கிடந்தாள் மதுமிதா..
அவளின் முகம் பார்த்தவன், “ஏய் மது..” என்று அவளின் அருகில் ஓடியவன் அவளை ரத்த வெள்ளத்தில் பாத்தவன் மனம், தனது துடிப்பை நிறுத்தியது..
அவளை இரு கைகளில் ஏந்தியவன் காரின் பின் சீட்டில் அவளோடு ஏற, “அம்மா.. அம்மா.. அம்மா..” என்று அழுதாள் அபூர்வா,
“இல்லடா அம்மாவிற்கு ஒன்னும் இல்லை கண்ணா..” என்று குழந்தையை சமாதானம் செய்தவன் கண்கள் கலங்கியது.. அவன் அபூர்வாவை விடவும் குழந்தையாக மாறிவிட்டான்..
“மதும்மா கண்ணைத் திறந்து பாருடா.. நான் ரோஹித் வந்திருக்கிறேன் மதுமிதா.. ஏய் கண்ணை திறந்து பாருடி!” என்று அவளின் கன்னத்தில் தட்டி எழுப்பியவன், கதறி அழுதான்..
அவன் அழுவதைப் பார்த்த அபூர்வா, “அப்பா அழுகாதீங்க அம்மாக்கு ஒன்னும் ஆகாது..” என்று அவனின் கண்களை துடைத்துவிட்டாள்.. அவர்கள் மூவரும் சேர்ந்து மதுமிதாவை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர்..
[அபூர்வா அனைவரும் அவளைத் தனியே விட்டு விட்டு வந்த பிறகு என்ன நடந்தது..?! சிலமணி நேரம் முன்னே சென்று பாப்போம்..]
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவர்கள் அனைவரும் சென்றதும் வீடே தனது கலையை இழந்த வண்ணம் இருக்க, மழைகாலம் என்பதால் எங்கோ இருந்த மரம் ஒன்றில் அமர்ந்திருந்த கருங்குயில் தனது தனிமையை விரட்ட கானம் இசைக்க அந்த இனிமையில் தன்னை தொலைத்து தனிமையில் அமர்ந்திருந்தாள் மதுமிதா..!
அவள் வாசலில் அமர்ந்திருக்க வானம் இருட்ட மழை வரும் என்று தென்றல் செய்தி சொல்ல, அப்படியே அமர்ந்திருந்தாள்.. இந்த மழையில் தான் அவனை முதலில் சந்தித்தேன் என்று மனம் சொல்ல, அவனின் நினைவுகளில் கண்களை மூடியவள்,
‘ரோஹித் எங்கே சென்றான்..? காலையில் இருந்து நான் அவனைப் பார்க்கவே இல்லையே..?!’ என்ற எண்ணம் மனதில் எழுந்தது..
அவள் அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு அருகில் இருந்த பூக்களை புகைப்படமாக எடுத்துக்கொண்டு ஏதோ யோசனையுடன் தனிமையில் அமர்ந்திருந்தவள், அந்த செல்லில் ரஞ்சித் – கீர்த்தியின் புகைப்படம் இருப்பதைப் பார்த்தவள்,
“இந்த கீர்த்தி அப்படியே சஞ்சனாவின் குணம்.. அதே விளையாட்டு தனமும், குறும்புத்தனம் அப்படியே இவளிடம் இருக்கிறது..” என்று தனியாக பேசிக் கொண்டிருந்தவளின் செல்லில் ஒரு “கீன்” சத்தம் வந்து குறுஞ்செய்தி வந்திருப்பதை அவளிற்கு உணர்த்தியது..
“யார்..?!” என்ற யோசனையில் போனைப் பார்த்தவள், ‘என்ன மதுமிதா என்னை ஞாபகம் இருக்கிறதா..?!’ என்ற செய்தியைப் படித்தவள் உள்ளம் படபடத்தது...!
தனது நிம்மதி முழுவதும் சென்ற இடம் தெரியாமல் சென்று மறைய, அருணிற்கு போன் செய்தவள், “அண்ணா அவன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டானா..?” என்றவள்,
அவன் எதிர்புறம் சொன்ன தகவலில் தலைச்சுற்ற அப்படியே நின்றாள்.. ‘இன்னும் எத்தனை எத்தனை கொடுமைதான் நான் பார்க்க வேண்டுமோ..?’ என்று நினைத்தவள் ஒரு விதத்தில் நிம்மதி அடைந்தாள்..
அபூர்வா அவளின் அருகில் இல்லாதது அவளிற்கு வசதியாகப் போனது.. வீட்டின் உள்ளே சென்றவள், கையில் ஒரு பர்ஸை மட்டும் எடுத்துக்கொண்டு, வெளியே வந்து கதவை அடித்தவள்
“அண்ணா நான் மதுரை வந்து கொண்டே இருக்கிறேன்..” என்று தகவல் சொன்னவள், போன் வைத்துவிட்டு ரயிலில் அன்று மாலை மதுரையை அடைந்தவள், அன்று இரவு அங்கிருந்த ஒரு ஹோட்டலில் தாங்கியவள், குளித்து முடித்து கையோடு வாங்கி வந்த சுடிதாருக்கு மாறியவள்,
அங்கே இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றவள், நன்றாக அம்மனை தரிசனம் செய்தவள், கோவிலின் பிரகாரத்தில் வந்து அமர்ந்தாள்..
“அண்ணா நான் இங்கே மதுரை வந்து விட்டேன்..” என்று சொன்னவள் மனம் முழுவதும் வாசுதேவன் உள்ளே செல்ல, அவனின் வாக்குமூலத்தையும் வாங்கவே அமைதியாக இருந்தாள்.. அவளிற்கு தேவையானச் சாட்சிகளையும் திரட்டியவள் அடுத்து நடக்கவிருப்பதைக் கவனித்தவண்ணம் அமைதியாக இருந்தாள்..
அவளிற்கு தெரியும் அவன் அவளைப் பின் தொடர்ந்து வந்திருப்பான் என்று..! அவளது கணிப்பு சரியாக இருந்தது.. அவளின் எதிரே வந்து அமர்ந்தான் வாசுதேவன்..
“என்ன நான் அப்படியே அமைதியாக இருந்து விடுவேன் என்று நினைத்தாயா..? எங்கே என்னோட மாமன் மகளின் குழந்தை..?!” என்று கேட்டவனிடம் பதில் பேசாமல் இருந்தவள்,
“அவளால் உனக்கு என்ன யூஸ்..?” என்று அவனைக் கேள்விக் கேட்டாள் மதுமிதா..
“அவள் உயிரோடு இருந்தால் யாருக்கும் எந்த யூஸும் கிடையாது.. அதுவே அவள் இறந்து விட்டால் சொத்து முழுவதும் எனக்கு வந்துவிடும்..” என்று கோணலாக சிரித்தான்
“வாசு எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை..” என்றாள் மதுமிதா அவனிடம் இருந்து உண்மையை வாங்கும் நோக்கத்துடன்!
“உனக்கு என்ன புரியவில்லை..?!” என்றான் வாசுதேவன்
“குழந்தை இல்லாமல் இருந்தால் என்ன செய்திருப்பாய்..? நான் கேட்பது ராதிகா திருமணம் செய்யாமல் இருந்திருந்தாள்..?” என்று கேட்டாள்
“அவளை நான் திருமணம் செய்திருப்பேன் சொத்து எனக்குதான் வந்திருக்கும்.. ஆனால் அதற்குள் அவள் அந்த சக்தியை திருமணம் செய்துக் கொண்டாள்..” என்றவன் அவளை நோக்கினான்..
அவளோ ஒரு முடியுடன், “அவள் தான் இறந்து விட்டாள்.. அத்தோடு விட்டுவிட்டு உன்னோட வேலையைப் பார்ப்பது தானே..?” என்றாள் மதுமிதா..
“அது எப்படி முடியும்..?” என்றான் வாசுதேவன்..
“ஏன் முடியாது..?” என்றாள் மதுமிதா
“குழந்தை இறந்தால் மட்டுமே சொத்து எனக்கு வரும்! அன்று நடந்த விபத்திலேயே அந்த குழந்தையும் சேர்ந்து இறந்திருக்கும் என்று நினைத்தேன்.. ஆனால் அது எனக்கு அல்வா கொடுத்து விட்டது.” என்று அவனின் வாயிலிருந்தே உண்மை வந்தது..
“என்ன சொல்கிறாய்..? எனக்கு ஒன்றுமே புரியவில்லை..?!” என்று அவனிடமே கேட்டாள் மதுமிதா..
“உனக்கு எதற்கு புரிய வேண்டும்..?” என்று எகிறினான் வாசுதேவன்..
“எனக்கு உண்மையான காரணம் தெரிந்தால் மட்டுமே நான் குழந்தையைக் கொடுப்பேன்.. இல்லையென்றால் அவளை நீ கண்ணால் கூட பார்க்க முடியாது..” என்று மிரட்டினாள் மதுமிதா..
“உன்னோட மிரட்டல் எல்லாம் என்னிடம் பலிக்காது மகளே..!” என்று அவனும் அவனது பங்கிற்கு மிரட்டினான்
“உன்னோட மிரட்டல் எல்லாம் என்னிடம் செல்லுபடியே ஆகாது வாசுதேவன்.. உனக்கு குழந்தை எனக்கு உண்மை எப்படி என்னோட கணக்கு..?” என்று அவனைப் பார்த்து புருவம் உயர்த்தியவள்,
“உனக்கு சொத்தை அனுபவிக்க வேண்டும்.. எனக்கு அன்னைக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டும்..” என்று அவனை மிரட்டினாள்
“அதுக்கு வேற ஆளைப் பாரு.. என்னால் உண்மை சொல்ல முடியாது..” என்றவனின் பார்வை அவளை எரித்தான்..
“நீயாக உண்மை சொல்லும் வரையில் குழந்தை உன்னோட கைகளுக்கு கிடைக்காது..” என்றவள் எழுந்துக் கொள்ள, அவனும் கோபத்தோடு எழுந்தான்..
“நானும் பார்க்கிறேன் குழந்தை என்னோட கைகளுக்கு மாட்டாமல் போய்விடுமா..?!” என்றவன் எழுந்து வாயிலை நோக்கிச் சென்றான்.. அவன் அமைதியாக சென்றதற்கு மற்றொரு காரணம் அவள் இருந்த இடமும் நேரமும் தான்..
அவள் மக்கள் திரளின் மத்தியில் அமைதியாக அமர்திருந்தாள்.. அதனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. அவன் முன்னே செல்ல அவள் அவனின் பின்னோடு வெளியே சென்றாள்...!
அவள் பயமின்றி நடக்க, அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.. ‘இனியும் இவளை விட்டு வைத்தால் என்னோட காலம் முழுவதையும் ஜெயிலில் தான் கழிக்க வேண்டும்..’ என்று நினைத்தவன், அவளின் அருகில் வேகமாகச் சென்று அவள் ஹோட்டல் செய்யும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவளை வழிமறித்தான்..
அவனை அவள் எதிர்பார்க்கவில்லை.. அவனுக்கு தேவை குழந்தை என்பதால் தன்னை எதுவும் செய்ய மாட்டான் என்று நினைத்தவள் அவன் அவளை வழிமறிக்க, அவளுக்கு மனம் ஜில் என்றது..
இருப்பினும் மனதில் இருந்த பயத்தை மறைத்துக் கொண்டு, “டேய் இன்னைக்குதான் வந்திருக்கிறாய்..? நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்றவள் அவனைத் தாண்டி நடக்க, அவளின் கைகளைப்பிடித்து இழுத்தவன்
கண்ணிமைக்கும் நேரத்தில் அவளின் வயிற்றைப் பதம் பார்த்து அவனின் கையில் இருந்த கத்தி..! “அம்மாஆஆ..” என்று அலறியவள் வயிற்றைப் பிடித்துக்கொண்டு கீழே சரிய, அவளைப் பார்த்து சிரித்தவன், “உன்னோட மிரட்டல் எல்லாம் என்னிடம் பலிக்காது!” என்றவன் உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்றான்..
அவளுக்கு இதெல்லாம் நடக்கும் என்று தெரியும்.. ஆனால் அது இவ்வளவு விரைவாக நடக்கும் என்று தெரியாது.. அவள் இதை இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.. அவன் குத்திய இடத்தில் இருந்து நிற்காமல் இரத்தம் வழிய அப்படியே கீழே விழுந்து கிடந்தாள்..
அந்த நேரம் ரோஹித் அழைப்பு வர அதை பேசியவள், அந்த நேரத்தில் அவளின் மனம் நிம்மதி அடைந்தது.. அபூர்வாவை அவனிடம் சேர்த்துவிட்டேன்.. ‘ராதி உன்னோட மகளை பத்திரமாக என்னோட ரோஹித்திடன் சேர்த்துவிட்டேன்.. எனக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது என்றால் அது என்னோட இறப்பில் தான் எனக்கு கிடைக்கும் போல தெரிகிறது..’ என்று மனதில் நினைத்தவள் கண்கள் சொருக அப்படியே மயங்கிச் சரிந்தாள்..
அந்த வழியாக வந்த ரோஹித் அவளைக் கண்டுவிட்டு அவளை மருத்துவமனையில் சேர்த்தான்.. மது உயிர் பிழைப்பாளா..? யார் இந்த வாசுதேவன்..?
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சந்தியா ஸ்ரீ டியர்
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 
Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka

Oh god?????
Enn eppade nadanthichu pawam mathu
 
sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
vasudevan than radhika& sakthi irapuku karanama:unsure::unsure::unsure::unsure::unsure: madhu pilaithu vituvaal thane sis:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: nice epi sis
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top