• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 30

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அவள் சிரிப்பதைப் பார்த்து, “எதுக்கு சிரிக்கிறீங்க..?” என்று கேட்டாள் மதுமிதா..

“நீ சொன்னதைக் கேட்டு சிரிக்காமல் என்ன செய்ய..?” என்று கேட்டவளைப் புரியாமல் பார்த்தாள் மதுமிதா..

“உன்னால் தான் அபூர்வா பூமிக்கு வந்தாள்.. நீ அபூர்வாவை உன்னோட மகளாகப் பார்க்கிறாய்.. அதுவும் எனக்கு தெரியும்..” என்று சொன்னவளிடம்

“அதுக்காக இந்த விஷயத்தில் நான் செய்ய என்ன இருக்கிறது என்று தான் புரியல..” என்று கேட்டாள் மதுமிதா..

“இருக்கு ஒரு விஷயம் இருக்கு!” என்று சொன்னவளை, கேள்வியாகவே நோக்கினாள் மதுமிதா..

“எனக்கு உன்னைப் பற்றி தெரியும் மதுமிதா.. நீ பணத்தை மதிக்க மாட்டாய்.. அதே மனதையும் அதன் உணர்வுகளையும் மதிப்பாய் அது எனக்கு தெரியும்..” என்று கூறிய ராதிகாவின் கணிப்பு சரியாக இருந்தது..

“எனக்கு இன்னைக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று மனசு படபடன்னு இருக்கு.. ஆனால் அது ஏன் என்று தெரியலடா..” என்று கூறிய ராதிகாவின் வாயை மூடினாள் மதுமிதா..

“அக்கா என்ன நேரத்தில் என்ன விஷயம் பத்தி பேசிட்டு இருக்கீங்க..?!” என்று மிரட்டினாள் மதுமிதா.. அவளின் கைகளை விலக்கியவள்,

“எனக்கு ஏதாவது ஆனால் என்னோட மகளை காப்பாற்ற வேண்டியது உன்னோட பொறுப்பு.. அவளை அனாதையாக விட்டுவிடாதே மதுமிதா..” என்று அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள்

“என்னால் அவனை எதிர்த்து போராட முடியுமா அக்கா..? எனக்கு இன்னும் பதினைந்து நாளில் திருமணம் ஏற்பாடு பண்ணிருக்காங்க.. அதை தடுக்க என்ன வழி என்று தெரியாமல் இருக்கேன்..” என்று புலம்பினாள் மதுமிதா.. அவளைப் பார்த்து சிரித்தாள் ராதிகா.. அவளின் சிரிப்பின் மர்மம் தெரியாமல் விழித்தாள் மதுமிதா..

“அவளை அவரின் குடும்பத்துடன் சேர்த்துவிடு! முக்கியமாக அவரின் தம்பியிடம் அவளைப் பத்திரமாக சேர்த்துவிடு! மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்..” என்று சொன்னாள் ராதிகா..

“அக்கா இதெல்லாம் நீங்க இறந்தால் தானே நடக்கும்..?! அதுவரை அதைப்பற்றியும், அந்த வாசுதேவன் பற்றியும் கவலை இல்லாமல் இருங்க..” என்று சொல்லவும், “நான் அபூர்வாவை பார்த்துக் கொள்கிறேன்..” என்று சிரித்தவளைப் பார்த்து கோரமாக சிரித்தது விதி.

“இந்த டென்ஷன் அனைத்தும் ரஞ்சித், சஞ்சனா திருமணம் நல்லபடியாக நடக்குமா..? என்பதால் வந்த பதட்டம்.. ரிலாக்ஸ் அக்கா..” என்று அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டாள் மதுமிதா..

“என்ன சுயநலவாதி என்று நினைத்துவிட்டாய் இல்ல..” என்று ராதிகா கேட்டதற்கு, “நினைக்காமல் என்ன அக்கா பண்ணட்டும்.. நானும் சாதாரண மனிஷிதான்! எனக்கு என்னோட அம்மா அப்பாவே நல்லது செய்ய நினைக்கல அக்கா..” என்று சொன்னவள் அவளை விட்டு விலகி நின்றாள்..

அவளின் அருகில் வந்தாள் ராதிகா.. “எனக்கு என்னோட காதல் தான் அக்கா பெரிது என்று என்னால் இப்பொழுதே அவரைத் தேடித் போக முடியும்.. ஆனால் என்னோட அப்பா, அம்மா இருவரின் வளர்ப்பும் தப்பு என்று முத்திரைக் குத்தப்படும் என்றுதான் அமைதியாக இருக்கிறேன்..” என்று சொன்னவளைப் புரியாமல் பார்ப்பது இப்பொழுது ராதிகாவின் முறையானது!

“என்ன அக்கா ஒன்றும் புரியல இல்ல..?” என்று கேட்டவள், “என்னோட அப்பா, அம்மா காதல் திருமணம் செய்தவர்கள்.. அவர்களின் மகளும் அப்படிதான் இருப்போம் என்று சொல்வார்கள்.. அந்த ஒரு காரணத்துக்காக அமைதியாக இருக்கிறேன்..” என்று சொல்லவும் இவர்கள் இருந்த அறையின் கதவுகள் தட்டபட்டது..

“ம்ம் இதோ வந்துவிட்டோம்..” என்று குரல் கொடுத்தவர்கள் சீக்கிரம் தயாராகி வெளியே வர, வெளியே நின்றிருந்த இருந்த ரஞ்சித்,

“மனமகளே ரெடி ஆனால் நீங்க இருவரும் தயாராகி வருவதற்கு இவ்வளவு நேரமா..?” என்றவனைப் பார்த்து முறைத்தாள் ராதிகா..

“ஹலோ இன்னைக்கு கல்யாண பெண்ணைவிட அழகாக இருக்க வேண்டியது நாங்கதான்.. ஏன் என்றால் துணைப்பொண்ணு நாங்க தாண்டா..” என்று சொன்னாள் மதுமிதா..

அப்பொழுது அங்கே வந்த சக்திவேல், “என்ன இங்கே நின்று அரட்டை.. சீக்கிரம் வாங்க..” என்று அனைவரையும் அழைக்க, புன்னகையோடு அவனைப் பின்தொடர்ந்தனர் மூவரும்.

“அக்கா அபூர்வா குட்டி எங்கே..?” என்று கேட்டவளின் கண்களில் தான் முதலில் பட்டது அவர்களை மறைந்து நின்று பார்க்கும் ஒருவனைப் பார்த்துவிட்டு,

‘இது வாசுதேவனாக இருக்குமோ..?’ என்று நினைத்தவள் தனது தலையில் அடித்துக் கொண்டாள். ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்..’ என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்..

அவள் மறுபடியும் திரும்பிப் பார்க்க அந்த நபர் அங்கே இல்லை.. ‘எதுக்கும் நாம் கொஞ்சம் ஜாக்கரதையாக இருக்க வேண்டும்..’ என்று நினைத்தவள், மனதில் ஒரு திட்டம் தீட்டினாள்..

“அவள் காரில் இருக்கிறாள்..” என்று பதில் சொன்னான் சக்திவேல்.

“காரில் போகின்ற அளவிற்கு வளர்ந்துவிட்டாளா..?” என்று கேட்டதற்கு, “என்னோட மகள் தூங்குகிறாள்.. சஞ்சனாதான் வைத்திருக்கிறேன் என்று சொன்னாள் அதுதான் அவளிடம் கொடுத்துவிட்டு உங்களைக் கூப்பிட வந்தேன்..” என்று சொன்னவன் ஒரு காரில் ஏற, ரஞ்சித் சக்தி இருவரும் முன்னாடி சீட்டில் அமர, பெண்கள் மூவரும் பின்னோடு அமர்ந்தனர்..

அப்பொழுதான் இன்னொரு காரை கவனித்த ராதிகா சக்தியிடம், “அந்த கார் எதற்கு..?” என்று கேட்டாள்..

“திருமணம் கோவிலில் ஏற்பாடு செய்திருக்கிறது. அங்கே தேவையானவற்றை எடுத்து போக அந்த காரையும் சேர்த்து ஏற்பாடு செய்தேன்..” என்று சொல்லவும், மதுவிற்கு ஒரு யோசனை தோன்றியது அதை ராதிகாவிடம் சொல்லிவிட்டு அதன் படியே செய்துவிட்டாள்..

அவர்கள் ஐந்து பேரும் சந்தோசமாக காரில் சென்றுக் கொண்டிருக்க, சஞ்சனா மணமகள் என்ற காரணத்தால் அரட்டை அடிக்காமல் அமைதியாக வர முன்னாடி அமர்ந்திருந்த ரஞ்சித் அவளை புடவையில் பார்த்ததால் மெய் மறந்து அமர்ந்திருந்தான்..

அவளின் அழகு அந்த புடவையில் ஒளிவிட கண்ணாடி வழியே அவளை சைட்டடித்த வண்ணம் வந்து கொண்டிருக்க, சக்திவேல் மிகவும் கவனமாக காரை ஓட்ட, ரஞ்சித்தை ரசித்துக் கொண்டிருந்த சஞ்சனாவை கிண்டல் செய்து சிரித்தனர் மதுவும் ராதியும்!

சஞ்சனாவின் முகம் சிவந்து போக அப்பொழுதும் அமைதியாகவே இருந்தாள்.. ஒரு திருப்பத்தில் காரைத் திருப்பிய சக்திவேல் தனக்கு எதிரே வந்த தண்ணி லாரியின் வேகம் கண்டு, காரை ஒடித்து திருப்பும் முன்னாடியே அந்த காரை மோதியது லாரி.

“டமால்..” என்று அவனது காரில் வந்து மோதிய லாரியில் இருந்தவன் இறங்கும் முன்னரே,. அவர்கள் வந்த கார் அப்படியே பள்ளத்தில் உருள, ரத்த வெள்ளத்தில் மிதந்தனர் ஐவரும்!
Omggg ???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top