• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal -32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
“வாழ்க்கையில் எத்தனை நாள்தான் அடுத்தவர் நிழலில் நிற்பது.. எனக்கு என்ன பெயர் வந்தாலும் என்னோட கடமையை முடிக்காமல் நான் சாக மாட்டேன் அம்மா..” என்று சொன்னவள், மதுரையில் இருந்து அன்றே கிளம்பிவிட்டாள்..

அவள் அங்கிருந்து சென்ற நாளோடு அந்த டைரியின் கடைசி பக்கம் வந்தது.. அவளின் டைரியைப் படித்தவன் கண்களில் கண்ணீர் மட்டும் இருந்தது..

அண்ணனும், அண்ணியும் இறந்துவிட்டனர் என்ற வலியைத் தாங்க முடியாமல் இடத்தை விட்டு எழுந்து அந்த அறையை விட்டு வெளியே வந்தான்..

வீட்டை விட்டு வெளியே வந்து கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்றான்.. வானில் நிலா ஊர்வலம் போக, இதமான தென்றல் அவனை வருடிச் செல்ல, அவனின் மனம் வலியைத் தாங்க முடியாமல் துடித்தது..

அப்படி இருந்து அவனுக்கு இப்பொழுது கிடைத்த ஒரு நிம்மதி என்னவென்றால் அவனின் அண்ணன் குழந்தை தான் அபூர்வா.. அவளிற்கு துணையாக மதுமிதா வைத்த பாசம்..

உலகத்தில் இன்னமும் விலை கொடுத்து வாங்க முடியாத இரண்டு பொருள் இருக்கிறது.. ஒன்று ஒரு பெண் ஒருவரின் மேல் வைக்கும் உயிர் நேசம்.. இன்னொன்று உயிருக்கும் மேலாக ஒருவரின் மீது வைக்கும் பாசம்..! இரண்டிலும் தான் உயர்ந்தவள் என்பதை நிரூபித்திருக்கிறாள்..

மதுமிதா அபூர்வாவின் மீது வைத்த உயிர் பாசம் தான் அவளை வாழ்க்கையை துச்சமாக நினைக்க வைத்தது.. ரோஹித் மேல் வைத்திருந்த காதல் தான் அவளை உயிர் வாழ வைத்தது.. காதல் என்பதை சொல்லிப் புரிவதை விடவும் உணர்ந்து தெரிந்துக் கொள்வதே மேல் என்பதை உணர்ந்தான் ரோஹித்..!

‘தான் அவளைப் பிரிந்து நான் பட்ட துன்பத்தைவிட அதிக மடங்கு துன்பத்தை அனுபவித்து இருக்கிறாள் என்னோட காதலி..’ என்று நினைத்தவன் மனது கதறியது அவளின் நிலையை கண்டு!

ஒருவரின் வாழ்க்கையில் எது எல்லாம் நடக்க கூடாதோ அதெல்லாம் நடந்து முடிந்தது.. இதுவரை நடந்ததை மாற்ற யாராலும் முடியாது.. ஆனால் நடக்க விருப்பத்தை மாற்ற முடியும்..’ என்று நினைத்தான் ரோஹித்..

காலம் இரண்டு அறிய பொக்கிஷத்தை அவனின் கையில் கொடுத்திருக்கிறது அதை பாதுக்காப்பதே வானின் முதல் வேலை..! அப்படியே நின்றவன் மனம் மட்டும் கேள்வி கேட்டது..

மனதில் இருந்த அனைத்துக் கேள்விக்கும் விடை கிடைத்தது அந்த டைரியின் மூலமாக.. அவளின் மனதின் கவலைகள், அவளின் காதலின் ஆழம் எல்லாம் சொன்னது அந்த டைரி..!

டைரி சிலருக்கு நேரக்குறிப்பு

சிலருக்கு நாள் குறிப்பு

சிலருக்கு நினைவுகளின் குறிப்பு

சிலருக்கு வலிகளின் குறிப்பு

எனக்கு அது எனது காதலியின்

மனதைப் பிரதிபளிக்கும் கண்ணாடி..!” என்று மனம் சொன்னது..

‘மதும்மா என்னை மன்னித்துவிடு! உன்னை விட்டு பிரிந்து சென்றதுதான் நான் செய்த முதல் தவறு..’ என்று தலையில் அடித்துக் கொண்டவன், மனம் அவளைப் பார்க்க வேண்டும் என்று துடித்தது..

அப்பொழுதான் அவனுக்கு புரிந்தது தான் அவனின் தவறும்.. அவளின் தாய், தந்தை செய்த அதே தவறைத் தான் நாம் செய்து வைத்திருக்கிறோம் என்று..!

எல்லா கேள்விக்கும் விடைத் தெரிந்துவிட்டது ஒரு கேள்வியைத் தவிர..?!

‘இப்பொழுது அந்த வாசுதேவன் எங்கே இருக்கிறான் அவனின் எண்ணம் என்ன..? இப்பொழுது மதுவைக் கத்தியால் குத்த காரணம் என்ன..?’ அப்பொழுது தான் அவனுக்கு தேவையான தகவலைக் குறிப்பிட்ட டைரி நினைவிற்கு வர மீண்டும் வீட்டிற்குள் சென்று அடுத்த டைரியை எடுத்தான்..

அதில் சில தேதிகள் குறிப்பிடப்பட்டு, அதற்கு தேவையான தகவலைக் கீழே குறித்திருந்தாள் மதுமிதா..

அவளின் குறிப்பின் படி, அவர்களின் விபத்து தானாக நடந்தது கிடையாது.. அது மிகவும் கவனமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்று கண்டுபிடித்திருந்தாள்..

‘இவள் எப்படி இதை இவ்வளவு சரியாக எழுதி வைத்திருக்கிறாள்..?!’ என்று யோசித்தவன் கைகள் லேப்டாப்பில் அந்த குறிப்பில் இருந்த தேதியில் இருக்கும்

அதில் அவர்கள் வெளியே சென்ற பொழுது அவள் எதர்ச்சியாக எடுத்த வீடியோ, மற்றும் புகைப்படம் வழியாக வாசுதேவன் மாட்டிக் கொண்டான்..

அவளின் குறிப்பை படித்தவன் முகம் நம்பாமல் இருக்க, அவனின் கையில் இருந்த புகைப்படமும், அவளின் லேப்டாப்பில் இருந்த வீடியோவில் பேசி பதிவு செய்திருந்தாள் மதுமிதா..

அவர்கள் மதுரையில் இருந்து எங்கே வெளியே சென்றாலும் அவள் எடுக்கும் புகைப்படத்தில் ஏதாவது ஒன்றில் வாசுதேவனின் முகம் இருந்தது.. அவள் தேதி போட்டு பதிவு செய்திருந்த வீடியோவிலும் அவனின் முகத்தை வட்டம் இட்டு காட்டிருந்தாள் மதுமிதா..

அவன் அந்த நாளைத் தேர்ந்தெடுக்க காரணம் அன்று அனைவரும் எப்படியும் மகிழ்ச்சியில் கவனமாக இருக்க மாட்டார்கள் என்பதே..!

அவன் லாரியில் வந்து மோதி காரை பள்ளத்தில் உருள வைத்தவன், ‘அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனரா..?’ என்று இறங்கி வந்துப் பார்த்தவன்,

“ஹப்பாடி ஸ்பார்ட் அவுட்.. இவங்களைக் கொல்ல எத்தனை திட்டம் தீட்ட வேண்டி இருக்கிறது..?!” என்று சொல்லியவனின் முகம் மதுவின் போனில் இருந்த கேமராவில் தெளிவாகப் பதிவாகி இருந்தது..

அதுமட்டும் இல்லாமல் கார் டிரைவர் ஐ விட்னஸ்.. அவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனை வரை வந்தவனின் வீடியோ பதிவை அருணின் மூலம் மருத்துவமனையில் பேசி வாங்கி வைத்திருந்தாள்..

அவன் அன்றைய நாளில் இருந்து அவன் செய்யும் செலவு, வரவு அவன் செல்லும் இடம் அவன் ஒரு நாளில் செய்யும் வேலை வரையில், இப்படி அனைத்து தகவலையும் பிங்கர் டிப்ஸில் வைத்திருந்தாள் மதுமிதா..

‘அவளின் நடவடிக்கை எல்லாம் மதுவிற்கு பிறகு அபூர்வாவின் பாதுக்காப்பை இன்னமும் பலப்படுத்த அபூர்வாவிற்கு அல்லது மதுவிற்கோ எதாவது நடந்தாலும் அதை செய்தவன் வாசுதேவன் தான் முழுக்க முழுக்க காரணம்..’ என்று எழுதியிருந்தாள்..

அவளின் குறிப்பை படிக்க படிக்க மதுவின் புத்திக்கூர்மை கண்டு வியந்துதான் போனான்.. மதுமிதா முகம் பார்ப்பவைகள் அனைவரும் யார் எது சொன்னாலும் கலங்காமல் வழியைத் தனக்குள் மறைத்துக் கொண்டு புன்னகையுடன் செயல் படும் ஒரு பெண்ணாகவே பார்த்தனர்..

ஆனால் பூவும் புயலும் ஒன்றுதான் என்பதை தனது திறமையின் மூலம் நிரூப்பித்து காட்டியிருந்தாள்.. ராதிகாவின் குழந்தை இன்னும் இறக்கவில்லை என்பதை அவனுக்கு தெரியவைத்து, அவனை அவளைத் தேடி வர வைத்தும் அவள் தான் என்று தெரிந்தது..

‘இவள் இப்படி செய்தற்கும் ஒரு காரணம் இருக்கிறது.. சொத்திற்கு வாரிசு இருக்கிறது என்றால் அவன் செலவழிக்கும் தொகைக்கு கோர்ட்டில் கணக்கு காட்ட வேண்டும்.. அதுமட்டும் இன்றி, அதற்கு அவனுக்கு தண்டனையும் கிடைக்கும் என்பதால் பயத்துடன் அவளைப் பார்க்க வந்திருக்கிறான்..’ என்று நினைத்தான் ரோஹித்!

இப்பொழுது அவனை மிரட்டத்தான் சென்றிருக்கிறாள்.. அவளின் பேச்சில் அவன் அவளைக் குத்திவிட்டான்.. இதுதான் நடந்தது என்று என்று யூகித்து அறிந்தான் ரோஹித்..

மதுமிதா இருந்த இடத்தில் இருந்தே இத்தனை தகவலையும் திரட்டியவள் இந்த காரியத்தில் இப்பொழுது இறங்க காரணம் ரோஹித் உடன் இருக்கிறான் என்ற தைரியம் மட்டுமே..!

இந்த கேஸ் கோர்ட்டில் ஜெய்க்கும் என்று நம்பிக்கையுடன் மனுப்போட்டாள் மதுமிதா.. குறிப்புகளைப் படித்தவன் கண்களுக்கு பட்டது அவள் வெளிநாடு செல்ல எடுத்திருந்த பாஸ்போர்ட் அண்ட் விசா, இந்த கேஸ் முடிந்தவுடன் அவள் வெளிநாடு செல்ல எல்லா ஏற்பாடுகளையும் பக்காவாக செய்து வைத்திருந்தது அவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது..
So sad girls mela than easy ellla pallium po2ranga
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top