• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
“என்னது மதுவை அந்த வாசு குத்திவிட்டானா..?! இப்பொழுது மது எங்கே இருக்கிறாள்.. அபூர்வா குட்டி அவளின் அருகில் இருந்தாளா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்

“இல்ல அபூர்வா என்னோடு தான் இருந்தாள்.. இப்பொழுது மருத்துவமனையில் என்னோட தாத்தா, பாட்டி இருக்காங்க..” என்றவனின் கண்கள் கலங்கியது..

“எதுக்கு இப்படி கலங்குகிறாய் ரோஹித்.. இந்த கேஸ் வெற்றி பெற்றால் எல்லாவிதமான பிரச்சனையும் முடிந்துவிடும்..” என்று சொல்லி அவனைத் தேற்ற நினைத்தான்..

“இல்ல அருண் எனக்கு மனசு வலிக்குது! மதுவின் வாழ்க்கை மட்டும் இல்லாமல், சக்தியின் வாழ்க்கை, ரஞ்சித் வாழ்க்கை எல்லாம் என்னால் அழிந்துவிட்டதே..” என்று கதறினான் ரோஹித்..

அவனைத் தட்டிக்கொடுத்து சமாதனம் செய்த அருண், “நேரம் காலம் இரண்டும் நம் கையில் இல்லை ரோஹித்.. நீ பிரிந்து சென்றதால் மட்டும் இப்படி நடந்தது என்று நினைப்பது முட்டாள் தனம்..” என்று சொன்னவன்,

“யாரோட வாழ்க்கையில் என்ன என்ன நடக்கணும் என்று இருக்கிறதோ அதெல்லாம் நடந்தே தீரும்.. நீ இங்கே இருந்திருந்தால் மதுவின் பெற்றோர் சுயரூபம் மதுவிற்கு தெரியாமலே போயிருக்கும்..” என்று கூறினான்..

“மதுவிற்கு இப்படி ஆனது யாருக்காவது தெரியுமா..?” என்று கேட்டான் அருண்..

“இல்லடா.. யாருக்கும் நான் எந்த தகவலும் சொல்லவில்லை..” என்று அவன் சொன்னதும், “யாருக்கும் சொல்லாமல் என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் ரோஹித்..” என்று கேட்டான்

பிறகு ரோஹித் முகம் பார்த்தவன், “ரோஹித் நீ ஊரில் இருந்து வந்து ஒருவாரம் தான் ஆகிறது.. ஆனால் கோர்டில் நடக்க போகும் கேஸ் வரையில் விவரம் தெரிந்து வைத்திருக்கிறாயே எப்படி..?” என்று கேட்டான்..

“மதுவின் நிலையைப் பார்த்து என்னோட மனதில் வந்த கேள்விகளுக்கு விடைதேடி வந்தேன்..” என்று சொன்னவன், “வா அருண் மதுவைப் பார்த்துவிட்டு வரலாம்..” என்று அழைத்தான் ரோஹித்..

“இப்பொழுது எனக்கு ஒன்று மட்டும்தான் புரியவில்லை..” என்றவனின் போன் அடித்தது.. அதை எடுத்தவன், “சொல்லு கயல்விழி.. என்ன இந்த நேரத்தில் போன் செய்கிறாய்..?” என்று சொல்ல, ரோஹித் அமைதியாக நின்றிருந்தான்..

“அக்காவிற்கும் மாமாவிற்கும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் செய்ய போறாங்க அண்ணா..” என்று சந்தோசமாகக் கூறினாள் கயல்விழி..

“என்ன சொல்கிறாய் கயல்விழி.. உன்னைத்தான் பெண் பார்க்க வந்ததாக சொன்னாங்க..?!” என்று சந்தேகமாகக் கேட்டான்..

“என்னைக் கேட்டு தான் வந்தாங்க.. ஜீவாவின் வீட்டில் இருந்து.. ஆனால் அக்காவிற்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் உனக்கு மாமா பத்திரிக்கை கொடுத்தாங்களா..?” என்று கேட்டதும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..

“ஏய் எந்த மாமா பத்திரிக்கை கொடுப்பாங்க.. ஆமாம் மாப்பிள்ளை யாரு..?” என்று கேட்டதும், ரோஹித்திற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..

அவன் சிரிப்பதை பார்த்தவனுக்கு சந்தேகம் எழுந்தது.. அவன் கயலிடம், “மதுமிதாவை திருமணம் செய்ய போவது ரோஹித்தா..?” என்று கேட்டான்..

“ஹப்பாடி இப்பொழுதாவது கண்டுபிடிச்சுட்டீங்களே..” என்று அருணை வாரினாள் கயல்விழி..

அவள் அவனை வாருவதைக் கண்டு சிரித்த ரோஹித்தைப் பார்த்த அருண், “இவ்வளவு ரணகளத்திலும் உனக்கு மட்டும் எப்படிடா சிரிப்பு வருது..” என்று கேட்டதும்,

“அண்ணா மாமா பக்கத்தில் இருக்காங்களா..?!” என்று கேட்டதுக்கு அருண், “ம்ம் இருக்கிறான்.. உன்னோட அக்காவிற்கு இந்த விஷயம் தெரியுமா..?” என்றான்

“அண்ணா அவளுக்கு மட்டும் உண்மைத் தெரிந்தது என்றால் கதை கந்தல் தான்!” என்று அலறினாள் கயல்விழி..

“அண்ணா அக்காவை மட்டும் குற்றாலத்தில் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டோம் என்று பயமாக இருக்கிறது அண்ணா..” என்று அவள் கலக்கமாகச் சொன்னாள்..

அவளின் கலக்கம் கண்டு, ‘நீ நினைப்பது போலவே நடந்துவிட்டது..’ என்று மனதில் நினைக்க, ‘அவளிடம் எதுவும் சொல்லாதே’ என்று சைகை செய்தான் ரோஹித்..

“ம்ம் பயப்பாடாதே கயல்விழி..” என்று அவளுக்கு ஆறுதலாகப் பேசியவன், “நீ போய் படுத்து தூங்கு கயல்.. காலையில் நான் பேசுகிறேன்..” என்று சொல்லவும்,

“ம்ம் சரிங்க அண்ணா..” என்று சொன்னவள் அழைப்பைத் துண்டித்தாள்.. அவள் அழைப்பை வைத்ததும், ரோஹித்தை முறைத்தான் அருண்..

“நீ இங்கே வந்த ஒரு வாரத்தில் என்ன என்ன விஷயம் எல்லாம் நடந்திருக்கிறது..?! எனக்கு இங்கே நடப்பது ஒண்ணுமே புரியலடா..” என்று சொன்னவனிடம், “புரியாமல் இருப்பதுதான் நல்லது அருண்..” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ரோஹித்..

அவனை முறைத்தவன் கையில் கிடைத்த பேப்பர் வைட் எடுத்து அவனை நோக்கி வீசினான் அருண்.. அதை லாவகமாக கேச் பிடித்தான்..

“இந்த அவசர ஏற்பாட்டிற்கே உன்னோட தங்கச்சிதான் காரணம்..” என்று ரோஹித் சொல்லவும் அவனைச் சந்தேகமாகப் பார்த்தான் அருண்..

“உனக்கு தெளிவாக சொன்னதான் புரியும்..” என்று அவனை சோபாவில் அமரச் சொல்லிவிட்டு,

“நான் அவளைப் பார்த்த நேரத்தில் அவள் அபூர்வாவுடன் இருந்ததைப் பார்த்து..” என்று அவன் இழுக்க அருணிற்கு அவன் சொல்ல வருவது புரிந்தது..

“ம்ம் புரியுது..” என்றான் அருண்.. அவன் எந்த அளவிற்கு அவளின் மீது உயிரை வைத்திருந்தான் என்று அருணுக்கும் தெரியும்.. அதனால் அவன் என்ன நினைத்திருப்பான் என்று அவனுக்கும் புரிந்தது..

“நான் உண்மை என்ன என்று தெரியாமல் அவளை ஒரு வார்த்தை கேட்டுவிட்டேன்.. அதுக்காக இந்த உலகத்தை விட்டு போக நினைத்துவிட்டாள்..” என்று அவன் சொல்ல,

அதுவரை அமைதியாகக் கேட்ட அருண், “என்னது தற்கொலைக்கு முயற்சி பண்ணினாளா..?!” என்று கேட்டான்

“ம்ம்..” என்று தலையசைத்தான்

“அப்புறம் என்ன நடந்தது..?” என்று கேட்ட அருணைப் பார்த்த ரோஹித், “நான் என்ன கதையா சொல்கிறேன்..?” என்று கேட்டதும்,

“பின்ன என்னடா செய்ய சொல்கிறாய்..?” என்று அவனைப் பார்த்து சலிப்புடன் கேட்டான்

“அதுதான் அவளைத் தனியாக விட்டால் பிரச்சனை வரும் என்று திருமண ஏற்பாடு செய்தேன்.. அதற்கு அவளே போய் இந்த புதிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டாள்..” என்று சொன்னவன்

“இனிமேல் என்ன செய்ய போவதாக உத்தேசம்..?” என்று கேட்டான் அருண்..

“நீ கேட்பது புரியல அருண்..” என்றான்

“இந்த கேஸ் விஷயத்தில் என்ன செய்ய போகிறாய்..?” என்று கேட்டான்..

அவனை நிமிர்ந்து பார்த்தவன், “இந்த கேஸில் விஷயத்தில் அவள் தான் எல்லாம் கண்டுபிடித்தாள்.. இதில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை.. இந்த முயற்சிகள் முழுக்க முழுக்க அவளோடது..” என்று சொன்னவனை இடைமறித்த அருண்,

“அப்போ இந்த கேஸில் நீ இன்வால் ஆகலையா..?” என்று நேரடியாகக் கேட்டான்.. இல்லை என்று தலையசைத்த ரோஹித், “இந்த வெற்றி அவளுக்கும் அவளின் முயற்சிகளுக்கும் கிடைத்த பரிசாக இருக்க வேண்டும்..” என்றவன் தொடர்ந்து,

“இந்த கேஸில் அவள் வெற்றி பெற ஃபுல் சப்போர்ட் கொடுப்பேன்.. அவளிற்கு பக்கபலமாக இருப்பேன்.. அவளையும், அபூர்வாவையும் பாதுகாப்பது மட்டும் என்னோட பொறுப்பு..!” என்று கூறினான்.. அவனது காதலை கண்டு மெய் சிலிர்த்து அமர்ந்திருந்தான் அருண்...!

அவளின் முயற்சிகளைத் திருட நினைக்காமல், அவளுக்கு வாகை சூட நினைத்த ரோஹித்திற்காக தன்னுடைய தங்கை பத்துவருடம் காத்திருந்ததில் தவறேதும் இல்லை என்று நினைத்தான் அருண்..!
Very nice superr vera level ?????????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top