• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 35

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 35

இவர்கள் இப்படி இருக்க அங்கே சென்னையில் காலையிலேயே கடலின் முன்னே நின்று அன்றைய நாளை ரசித்துக் கொண்டிருந்தாள் கயல்விழி.. அவள் ஜீவாவை வரச்சொல்லி இருக்க அவன் இன்னும் வரவில்லை என்பதால் கோபத்தில் நின்றிருந்தாள்..

அவளுக்கு அதிகம் கோபத்தைக் கொடுக்காமல் வந்து சேர்ந்தான் ஜீவா.. அவன் வந்தும், அவனை திரும்பிப் பார்த்தவள், “என்ன ஜீவா இவ்வளவு லேட்..?” என்று கேட்டதும்,

“நீ எதுக்கு என்னை இங்கே வரச்சொன்னாய்..?” என்று நேரடியாகக் கேட்டான் ஜீவா. அவனது கேள்வியில் இருந்தது கடமையா..? வெறுப்பா..? விருப்பமின்மையா என்பதை பிரித்தறிய முடியவில்லை கயல்விழியால்

“எங்கள் வீட்டில் நம்முடைய திருமணத்திற்கு ஓகே சொல்லிட்டாங்க.. ஆனால் என்னோட அக்காவை நீ தவறாக பேசியது இன்னும் அப்படியே இருக்கிறது..” என்று கயல்விழி அவனைப் பார்த்துக் கூறினாள்..

அவளின் முதல் வாக்கியம் கேட்டு அவனின் முகம் மலரும் என்று எதிர்பார்த்த கயல்விழி ஏமாந்துதான் போனாள்.. அவனது முகத்தில் கொஞ்சம் இருந்த புன்னகையும் மறைந்தது..

‘நான் சொன்னதைக் கேட்டு சந்தோசம் இல்லையா..?’ என்று மனதில் வருத்தத்தோடு நினைத்தாள் கயல்விழி..

அவளின் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பு மறைவதைப் பார்த்தவன் மனமும் வலித்தது.. ஆனால் அந்த வலியைத் தனக்குள்ளே மறைத்துக் கொண்டான் ஜீவா..

அதற்கு காரணம் அவன் அவள் மீது வைத்த காதலே..! அவள் கொண்ட காதல் எப்படி என்று அவனுக்கு தெரியாது.. ஏன் என்றால் இவர்கள் இருவரும் இன்னமும் காதலைச் சொல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்..

குற்றாலம் செல்லும் பொழுது அவனுக்கு இருந்த நம்பிக்கை திரும்ப வந்த பிறகு அவனிடம் இல்லை.. கயலின் வீட்டிற்கு தன்னுடைய தாய், தந்தை சென்று பெண் கேட்டதை நினைத்து சந்தோசப்பட்டான்..

ஆனால் அவன் வீட்டிற்கு வந்த அன்று அவனின் அப்பா அம்மா பேசிக்கொண்டதைக் கேட்டு அவனின் அடிவயிற்றில் பகிர்றேன்றது.. காரணம் கயல்விழி உயிராக நினைக்கும் அக்காவை அவனின் அப்பா அம்மா தவறாகப் பேசிக்கொண்டிருந்தனர்..

அப்பொழுதே முடிவு செய்துவிட்டான் இந்த திருமணம் நடக்காது என்று.. இவர்கள் பெருந்தன்மையுடன் கயல்விழியை ஏற்றுக் கொண்டாலுமே, மற்றவர்கள் தவறாக பேசுவதை நிறுத்தவும் மாட்டார்கள்..

இவளும் மற்றவர்களிடம் சண்டை போடாமல் இருக்க மாட்டாள்.. இதனால் தினமும் வீட்டில் சண்டைதான் நடக்கும் காலப்போக்கில் அது பெரிதாக மாறினால், பாதிக்கப்படுவது இவர்கள் வாழ்க்கைதான் என்பதை சரியாக கணித்தவன் யோசனையில் ஆழ்ந்தான்..

“உன்னோட அக்காவை தப்பாக பேசியது என்னோட தவறுதான்.. என்னை மன்னித்துவிடு!” என்று கயலிடம் மன்னிப்பு கேட்டான் ஜீவா..

அவன் மன்னிப்புக் கேட்டதும் கயலிற்கு மனதை என்னமோ செய்தது.. அவளின் முகத்தைப் பார்க்காமல் மணலில் அமர்ந்தவனைப் பார்த்து அவள் கேள்வியாக புருவம் உயர்த்த, “நீயும் வந்து உட்காரு..” என்று கூறினான்

அவள் எதுவும் பேசாமல் இரண்டடி இடைவெளி விட்டு தள்ளி அமர்ந்தாள் கயல்விழி.. அவனின் முகத்தைப் பார்க்க, அவன் ஏதோ பலத்த யோசனையில் இருந்தான்..

“என்னடா என்னமோ யோசிப்பது போல தெரிகிறது..?” என்று கேட்டாள் கயல்விழி.. அதுக்கும் காரணம் இருந்தது அவனின் மௌனம் அவளை என்னமோ செய்தது..

“முதலில் நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..” என்று கூறியவன், அவளின் முகத்தைப் பார்க்க அவள் திகைப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்...

“எதுக்கு மன்னிப்பு என்று தானே யோசிக்கிறாய்..?” என்று கேட்டதும் அவளின் கட்டளை இன்றி அவளின் தலை தானாக அசைந்து ஆமாம் என்றது..

“எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை..” என்று அவளின் தலையில் இடியை இறக்கினான் ஜீவா.. அவளின் காதுகளையே அவளால் நம்பமுடியவில்லை..

“ஜீவா நீ என்ன சொல்கிறாய்..?!” என்று அதிர்ச்சியில் மீண்டும் கேட்டாள்

“எனக்கு இந்த திருமணத்தில் இஸ்டம் இல்லை கயல்விழி.. இந்த திருமணத்தை நிறுத்திவிடலாம்..” என்று அவன் சொன்னதைக்கேட்டு அவளிற்கு தலை சுற்றியது!

“எதுக்கு ஜீவா என்னை வேண்டாம் என்று சொல்கிறாய்..? நான் என்ன தப்பு செய்தேன்..?” என்று குழந்தை போல கண்கலங்க கேட்டவளைப் பார்த்து அவனின் மனம் கதறியது..

“உன்னோட அக்காவைத் தானே நீ இன்னமும் உயிராக விரும்புகிறாய்.. அதுதான் பிரச்சனை..?!” என்று நேரடியாக பதில் சொன்னவன் ஜீவா..

“என்னோட அக்காவை நான் விரும்புவது தவறா..? அதற்கும் நம்முடைய திருமணத்திற்கும் என்ன சம்மந்தம்..?” என்று கேட்டாள் கயல்விழி..

“உன்னோட அக்காவைத் தவறாக பேசினாள் உனக்கு பிடிக்காது.. உன்னை முழுவதும் புரிந்ததால் நான் ஒன்றும் சொல்லாமல் இருந்தாலும் மற்றவர்கள் ஏதாவது சொல்ல, அது நம்முடைய திருமண வாழ்க்கையைப் பாதிக்கும் கயல்விழி..” என்றவன், அவள் ஏதோ சொல்ல வர அவளைக் கைநீட்டித் தடுத்தவன்,

“நான் சொல்லி முடித்து விடுக்கிறேன்..” என்றவன் அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடந்தான்..

“உன்னோட பாசத்தால் பாதிக்கபடுவது நாம் மட்டும் இல்லை.. என்னோட அப்பா, அம்மாவின் நிம்மதி, அவங்களின் சந்தோசம் எல்லாம் தான்..” என்று சொன்னவன்,

“நாளைக்கே உன்னோட அக்காவை என்னோட அம்மா தவறாக பேசினால், நீ அதுக்கு பதில் கொடுப்பாய்.. என்னோட அம்மாவும் அதற்கு பதிலுக்கு பதில் கொடுப்பார்கள்.. அப்புறம் வீடு வீடாக இருக்காது கயல்..” என்று சொல்லவும், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்,

“போதும் ஜீவா..” என்று சொல்லியவளை அவன் இடைமறிக்க, “நீ சொன்னது அனைத்தையும் நான் பொறுமையாக கேட்டேன் இல்லையா..?” என்று கேட்டதும் ஆம் என்று தலையசைத்தான்

“இப்பொழுது நான் சொல்வதை நீ கொஞ்சம் பொறுமையாகக் கேளு..” என்று சொன்னவள் தொடர்ந்தாள்..

“என்னால் உன்னோட நிம்மதி போய்விடும் என்று நினைக்கவில்லை.. என்னோட அக்காவின் பாசம், நம்ம திருமண வாழ்க்கைக்கு எதிரியாக மாறிவிடும் என்று நினைக்கிறாய்..” என்று அவள் நேரடியாகக் கேட்டாள்..

அவளின் கேள்வியில் அவன் ஆம் என்று தலையசைக்க, “அவளை எந்த அளவிற்கு விரும்புகிறேனோ அந்த அளவை விட உன்னை அதிகமாகக் காதலிக்கிறேன் ஜீவா..” என்று சொல்லியவள்,

“லூசு மாதிரி அக்கா அக்கா என்று பைத்தியமாக இருக்கிறாள் என்று நீ நினைக்கிறாய்.. நல்ல இருப்பவர்களுக்கு கூட யோசிக்கும் திறன் இருக்கும்.. என்னை போல விளையாட்ட இருக்கும் பெண்கள் தான் அதிகம் சென்சிடிவாக இருப்பார்கள்..” என்று சொன்னவள் வார்த்தைகள் இல்லாமல் கண்களில் கண்ணீர் வழிய,

“உனக்கு என்னோட காதல் விளையாட்டு போல ஜீவா.. நான் உன்னை எந்த அளவு காதலிக்கிறேன் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது..” என்று சொன்னவளின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்,

“இந்த கண்ணீர் வேற நேரம் கேட்ட நேரத்தில் வரும்.. பசங்களுக்கு பொண்ணுங்க அழுதே காரியத்தை சாதிக்கின்றனர் என்று சொல்வதற்கு வசதியாக இருப்பதற்கு வருகிறது..” என்று சொன்னவளைப் பார்த்தவன் மனது,

‘இதுதான் தனது நெஞ்சை குத்துகிறது என்று அவனால் சொல்ல முடியவில்லை.. ஏன் என்றால் பெண்களின் காதலை முள் என்று சொல்கின்றனர்.. மலர் என்றும் மயங்குகின்றனர்..’

‘ஒரு பெண்ணின் மனதை புரிந்தவனிற்கு அவளின் மனது மலர் போன்றது.. அவளைப் புரியாதவனுக்கு அவளின் மனது முள் போன்றது.. முள்ளையும் மலராக மாற்ற காதலால் முடியும்.. மலரையும் முள்ளாக மாற்றவும் இந்த காதலால் முடியும்’

இப்பொழுது கயல்விழி முள்ளாக இருக்கிறாளா..? இல்லை மலராக இருக்கிறாளா..? என்று நினைத்துக் கொண்டிருந்தான்.. அவனின் நினைவுகளைக் கலைத்தது அவளின் வார்த்தைகள்..

“எல்லாத்தையும் விளையாட்டாக எடுத்த என்னால் உன்னோட காதலை விளையாட்டாக எடுக்க முடியவில்லை.. மது இருக்கும் இடத்தை நான் ரஞ்சித்திற்கு கூட இந்நாள் வரையில் சொன்னது கிடையாது..” என்று கூறியவள்,

“உன்னை அங்கே அழைத்துச் சென்றேன் காரணம்.. எனக்கு இவனைப் பிடித்திருக்கிறது.. என்னோட அக்காவிற்கும் இவனைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக!” என்று சொன்னவள் அவனின் திகைத்த விழிகளைப் பார்த்து புன்னகை பூத்தாள்..

அந்த புன்னகையில் உயிர்ப்பே இல்லை.. அவளின் முகம் பார்த்தவன், “கயல்விழி நீ இப்படி சிரிக்காதே எனக்கு மனம் வலிக்கிறது..” என்று அவளிடம் கூறிவிட்டான் ஜீவா..

“உனக்கு வலிக்கும் என்பதற்காக நான் புன்னகைக்காமல் இருக்க முடியாது ஜீவா..” என்று விரக்தியாகக் கூறியவள் தொடர்ந்தாள்..

“என்னோட அக்கா நட்பிற்கு கொடுத்த மரியாதை விட ரோஹித் மேல் வைத்திருந்த காதல் தான் அதிகம்.. என்னோட அக்கா அமைதியாக இருந்தாள்.. அதுக்கு அவள் காதலிக்கவே இல்லை என்று சொல்ல முடியுமா..?” என்று கேட்டதும் அவளின் கேள்வியில் இருந்த நியாயம் அவனுக்கு புரிந்தது..

“எங்கக்காவை உன்னோட வீட்டில் யாரும் தவறாக பேசாம மாட்டார்கள் என்றால் நமக்குள் எதற்கு பிரச்சனை வரப்போகிறது..” என்று சொன்னாள் கயல்விழி..

“நீ புரியாமல் பேசுகிறாய் கயல்விழி..” என்று சொல்லவும், அவனை கைநீட்டித் தடுத்தவள்,
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“எனக்கு நல்ல புரியுது ஜீவா.. நான் உன்னைக் காதலிக்காமல் இருந்தால் தான் நீ சொன்னது அனைத்தும் நடக்கும்..” என்றவளின் விழிகளைப் பார்க்க அவனிற்கு பாவமாக இருந்தது.. அவள் அழுகையை அடுக்க நினைத்ததின் மூலம் கண்கள் நன்றாக சிவந்திருந்தது..

எல்லோரும் இணையும் பொழுது காதலைச் சொல்வார்கள்.. ஆனால் இவர்கள் காதல் பிரிவில் தொடங்குகிறது.. இது பிரிவின் தொடக்கமா..? இல்லை வாழ்க்கையின் முடிவா..? அதை இருவரும் தான் முடிவு செய்ய வேண்டும்..

மற்றவரின் கண்களுக்கு அவள் சாதாரணமாக பேசுவது போல இருக்கும்.. ஆனால் அவனிற்கு மட்டும் தெரியும் அவளின் மனதின் கதறல்!

“ஆனால் அப்படியே நடந்தாலும் உனக்காக நான் அமைதியாக இருப்பேன் என்பதை ஏன் நீ புரிந்துக் கொள்ளவே இல்லை..”அவன் இடையில் ஏதோ சொல்ல வரவே,

“வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டால் அதை அப்பொழுதே முடித்துவிட வேண்டும்.. உனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாய்.. சோ உன்னோட விருப்பம் நீ வீட்டில் சொல்லி திருமணத்தை நிறுத்திவிடு..” என்று சொன்னவள்,

“என்னோட அக்காவின் வீட்டிற்கு வந்த பொழுதே இதை சொல்லியிருக்கலாம்.. என்னோட அக்காவை இன்னமும் தப்பாகவே நினைக்கிறாய் இல்லையா..?” என்று சொல்லவும்,

“உன்னோட அக்காவை பற்றி தப்பாக பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.. அவங்க தான் உன்னோட அக்கா என்பது எனக்கு குற்றாலம் வரும் வரையில் சத்தியமாக தெரியாது..” என்று அவன் சொல்ல அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்..

அவனின் வார்த்தையில் அவள் அதிகம் அதிர்ந்தாள்.. அவளின் மனம் காதலின் வலியை விடவும் அவளின் அக்காவை அவன் தவறாக நினைக்கவில்லை என்பது அவளுக்கு கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது..

அவள் யோசனையில் இருப்பதைப் பார்த்தவன், “என்னடா இவன் இப்படியெல்லாம் பேசுகிறான் என்று யோசிக்காதே.. உன்னோட அக்கா நிஜத்திலேயே ரொம்ப நல்லவங்க.. ஒரு குழந்தைக்காக தன்னோட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக மாற்றிக் கொள்ள அவர்களால் எப்படித்தான் முடிந்ததோ..?!” என்று அவன் சொல்லவும்

“உனக்கு என்னோட அக்காவின் பாஸ்ட் தெரியுமா..?” என்று கேட்டாள் கயல்விழி.

“ம்ம் நன்றாக தெரியும் கயல்விழி..” என்று சொல்லவும், அவள் திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.. அவளிற்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை.. அவள் கண்களில் காதல் தோற்று போன சோகத்தைக் காணமுடியவில்லை அவனால்..!

அவளின் முகத்தைப் பார்த்த ஜீவா, “ஒரு இரயில் பயணத்தில் தான் உன்னோட அக்காவை நான் சந்திக்க நேர்ந்தது.. அந்த சந்திப்பு என்னோட வாழ்க்கையில் மறக்கவே முடியாது..” என்றான் ஜீவா..

“அந்த சந்திப்பில் தான் உன்னோட அக்காவையும், அபூர்வாவையும் நான் காப்பாற்றினேன்! அப்பொழுது என்ன விஷயம் என்று அவர்களிடம் விசாரித்த பொழுது, குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று சொல்லிவிட்டு அங்கே வந்த பெரியவருடன் சென்று விட்டார்கள்..” என்று சொல்லவும்,

‘அதுக்குத்தான் அக்கா என்னிடம் யார் என்ன கேட்டாலும் உண்மையைச் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கினாளா..? அபூர்வா உயிருக்கு ஆபத்து என்றால் அதில் இவளுக்கும் எதாவது ஆகிவிடுமே..’ என்று தமைக்கையைப் பற்றி யோசிக்க ஆரமித்தாள்

“அப்பொழுது அவர்களைக் கொல்ல வந்த ஒருவனை போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுத்த ஒருவர் என்னை விடவும் இரண்டு அல்லது மூன்று வருடம் பெரியவன், ஒரு கற்பழிப்பு கேஸில் அவனை உள்ளே தள்ளிட்டு வெளிநாடு சென்றுவிட்டான்.. அவனை நான் ஒரே முறைதான் பார்த்தேன்” என்று கூறினான் ஜீவா,

“அவர் எப்படி இருப்பார் ஜீவா..?” என்று கேட்டவள் தனது மொபைலை எடுத்து அதிலிருந்த போட்டோஸ் அனைத்தையும் காட்ட, அதில் அருணுடன் நின்றிருந்த ரோஹித்தைக் காட்டி,

“இவரைத்தான் நான் அன்று பார்த்தேன்.. அவர்கள் கத்தியால் மதுவையும் அபூர்வாவையும் குத்த நினைக்க, அதை நான் தடுத்து அவர்களை அந்த கம்பார்ட்மெண்டில் இருந்து இறக்கிவிட்டது, என்னோட அருகில் வந்த இவர், ‘அவனை என்னிடம் ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள்.. நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்..’ மறுநாள் காலையில் நியூஸ் பேப்பரில் வேறொரு பெண்ணின் கற்பழிப்பு வழக்கில் இவனை உள்ளே தள்ளியிருந்தார்..” என்று அவன் விளக்கம் சொல்லவும் கயல்விழி மனம்,

‘நான் மாமாவை எவ்வளவு தவறாக நினைத்தேன்.. ஆனால் அவர் அக்காவின் மீது எவ்வளவு அக்கறையாக இருந்திருக்கிறார்..’ என்று நினைத்தவளை தோளைப் பிடித்து உலுக்கினான்..

“ம்ம் என்ன ஜீவா..?” என்று கேட்டதும், “இவர் யார் கயல்விழி..?” என்று கேட்டான்.. அவனின் முகத்தைப் பார்த்தவள்,

“என்னோட அக்காவைக் கட்டிக் கொள்ள போகிறவர், என்னோட அக்காவின் அக்மார்க் காதலன் தான் இந்த ரோஹித்..” என்று சொல்லவும், அவளின் காதல் எவ்வளவு உயர்ந்தது என்று அறிந்துக் கொண்டான் ஜீவா..

மதுவின் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டும் என்று நினைத்தவன் இந்த திருமணம் ஏற்பாடு செய்ததில் மகிழ்ந்திருந்தான்.. அதுவும் அவள் காதலித்தவனைக் கரம் பிடிக்கிறாள் என்பதும் இன்னுமே மகிழ்ந்து போனான்..

அவனின் முகத்தைப் பார்த்தே அவனின் மகிழ்ச்சியைக் கவனித்தாள் கயல்விழி.. அவளின் முகத்தைப் பார்த்தவன்,

“இப்பொழுது சொல்கிறேன் கயல், எனக்கு உன்னோட அக்காவின் மீது எந்த தவறும் இல்லை.. பழியைப் போட்டவர்கள் உன்னோட அப்பா, அம்மா..” என்று சொல்லவும் கயல்விழி மெல்ல தலைக் குனிந்தாள்..

“அவர்களாக உண்மையை ஒப்புக்கொள்ளும் வரையில் இவர்கள் அனைவரும் உன்னோட அக்காவைத் தவறாக தான் பேசுவார்கள்..” என்று அவன் சொல்ல அவள் அந்த இடத்தை விட்டு எழுந்தாள்..

அவளோடு எழுந்தவன், “என்ன கயல் கிளம்புகிறாயா..?!” என்று கேட்டான்.. அவனின் முகத்தில் பார்த்தவள், “ரொம்ப தேங்க்ஸ் ஜீவா என்னோட அக்காவை நீயாவது சரியாக புரிந்துக் கொண்டாயே..” என்று சொன்னவள் முகத்தில் புன்னகை என்பது மருந்திற்கும் கிடையாது..

“ஜீவா உன்னோட மனதிற்கு பிடித்த பெண்ணாய் பார்த்து திருமணம் செய்து சந்தோசமாக இரு!” என்று சொன்னவள் அவளின் வழக்கமான பாணியில்,

“எப்பொழுதும் பெண்கள் தான் பசங்களிடம், ‘ நீ எனக்கு வேண்டாம் என்று சொல்வார்கள், நம்ம கொஞ்சம் வித்தியாசம் இல்லையா..?! அதுதான் நீ என்னை வேண்டாம் என்று சொல்கிறாய்..” என்று விளையாட்டு போல சொன்னவளின் மனதின் வலி அவன் புரிந்துக் கொண்டான்..

“உனக்கு பொண்ணு பிறந்தால் என்னோட பெயரை மட்டும் வைக்காதே ஜீவா.. கயல்விழி என்ற பெயர் ராசியே இல்லை.. அவளிற்கு பிடித்த யாரும் அவளின் பக்கத்தில் இருக்க மாட்டார்கள்..” என்று சொன்னவள்,

“பாய் ஜீவா..” என்று சொல்லிவிட்டு திரும்பியவள் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க, அவனைத் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்!
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 
Last edited:

Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka

கயல் பாவம் என்ன
 
Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Jeeva ipadi kayal a alavachitiye.. Ithukku unaku kayal kitta irukku da..
 
sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
ennappa inku madhu problem solve aakuthuna....... kayal& jeeva piriya mudivu pannitanga............
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top