• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 45 (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 45

இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் முடிந்ததும், திருமண மண்டபத்தில் எஞ்சி இருந்தது இந்த மூன்று குடும்பம் மட்டுமே.. கயல்விழி – ஜீவா இருவரையும் சென்னை அழைத்துச் செல்ல வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லிவிட்டுச் செல்ல வந்தனர் இருவீட்டு பெரியவர்களும்...

திருமணம் முடிந்து வந்தவர்கள் சென்னை செல்ல ரோஹித் வீட்டில் உள்ள அனைவரிடமும், “நாங்க கிளம்புகிறோம்..” என்று சொல்லிவிட்டு மதுவிடம் வந்த சுசீலா, அவளின் நெற்றியில் முத்தமிட்டு,

“வீட்டுக்கு கண்டிப்பாக மூவரும் வரணும்.. அவங்க மட்டும் புது ஜோடி இல்ல நீங்களும் புதுஜோடிதான்..” என்று ரோஹித்தையும் மதுவையும் அழைத்தனர் ஜீவாவின் பெற்றோர்..

அவர்கள் அப்படி சொல்லவும் மதுமிதா ரோஹித்தைப் பார்க்க, அவனும் சரியென்று தலையசைக்க, இருவரையும் பார்த்த பெரியவர்கள் மனம் மகிழ்ந்தது..

அப்பொழுது அங்கே வந்த அபூர்வாவை அழைத்த மதுமிதா அவளைத் தூக்கிக்கொண்டு, “அபூக்குட்டி பாட்டி, தாத்தாவிற்கு பாய் சொல்லுங்க..” என்று சொல்ல மதுவையும், அவர்களையும் பார்த்தவள்,

“அம்மா கொஞ்சம் என்னை கொஞ்சம் இறக்கிவிடுங்க..” என்று சொல்ல அவளும் இறக்கிவிட்டதும், “அப்பா..” என்று அழைத்துக்கொண்டு ரோஹித்திடம் ஓடியவள்,

“அப்பா பாட்டி தாத்தாவைக் கூப்பிடுங்க..” என்று சொல்ல அவளைப் பார்த்தவன், “எதுக்கு பூமா..” என்று புரியாமல் கேட்டான்,

“கூப்பிடுங்க..” என்று சொன்னவள் அங்கே இருந்த மதுவின் பெற்றோர், ரோஹித் பெற்றோர், ரோஹித் தாத்தா பாட்டி, ரஞ்சித் – கீர்த்தி, ஜீவா – கயல்விழி அனைவரையும் அழைத்து வந்தாள்..

அவள் செய்வதை அனைவரும் புரியாமல் பார்க்க மதுவும், ரோஹித்தும் ‘இவள் ஏதோ பெரிதாக பிளான் பண்ணுகிறாள்..’ என்று நினைத்து கணவனும் மனைவியும் பார்வையைப் பரிமாறிக்கொள்ள,

தனது தந்தையிடம் வந்து, “அப்பா என்னைத் தூக்குங்க..” என்று சொல்ல, ஜீவா கயலின் காதில், “இன்னைக்கு என்ன கேள்வி கேட்டு மற்றவரைக் குழப்ப போகிறாளோ..” என்ற புலம்பினான்.. கயல்விழி மெல்ல சிரித்தாள்..

“அப்பா இந்த அம்மா யாரைப் பார்த்தாலும் பாட்டி, தாத்தா என்று சொல்றாங்க.. அப்படி என்றால் என்னோட ஒரிஜினல் தாத்தா பாட்டி யாரு..?” என்று கேட்டதும், அங்கிருந்த அனைவரும் ஒருநிமிடம் திகைத்து நின்று அடுத்த நிமிடமே சிரிக்க ஆரமித்தனர்..

ஜீவா கயலிடம், “எப்படி குழப்புகிறாள் பாரு..” என்று சொல்ல, “கொஞ்சம் சும்மா இருங்க..” என்று அவனை மிரட்டினாள் கயல்விழி..

ரஞ்சித் கீர்த்தியிடம், “இந்த மது அவளைக் கெடுத்து வைத்திருக்கிறாள்.. பாரு எப்படி மானத்தை வாங்குகிறாள் பாரு..” என்று மெதுவாகச் சொல்ல,

“எல்லாம் நீங்க கொடுத்த ட்ரைனிங் தான்.. சரியாக வேலை செய்யுது வானரங்களா..! நீ, மது, சஞ்சனாவின் மறுபதிவு அவள்..” என்று கீர்த்தி சொல்ல, அவளை முறைத்தான் ரஞ்சித்..

“இதுதான் உன்னோட குழப்பமா..?” என்று ரோஹித் அபூர்வாவிடம் கேட்டதும், ஆமாம் என்று தலையை மேலும் கீழும் அசைத்தாள் அபூர்வா..

“எல்லோருமே உன்னோட தாத்தா, பாட்டிதான்..” என்று சொல்லவும், “லூசாப்பா நீ..?” என்று கேட்டதும் ஜீவா மனதில், ‘அடித்தால் பயபுள்ள சிக்ஸரு..’ என்று நினைக்க, மதுவோ, ‘மானத்தை வாங்குகிறாளே..’ என்று நினைத்துக்கொண்டு ரோஹித்தை நிமிர்ந்த்துப் பார்க்க, அவனோ அவளிடம் எப்படி புரிய வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்..

“என்ன வாய் பேசுகிறாள்..?” என்று மேகநாதனும், சுசீலாவும் பேசிக்கொள்ள, “அப்படியே மது மாதிரியே சொல்கிறாள் பாரு அமுதா..” என்று மதுவின் பெற்றோர் தங்களுக்குள் பேசிக்கொள்ள, மாணிக்கமும் கல்யாணியும் பேத்தியின் பேசுவதைக் கேட்டு புன்னகைத்த வண்ணம் இருக்க, ரோஹித் தாத்தா – பாட்டி இருவரும் அவளின் விளையாட்டு கண்டு தங்களுக்குள் புன்னகைத்துக்கொண்டிருந்தனர்..

அபூர்வா ஏதோ சொல்ல மற்றவர்கள் அவளைக் கேள்வியாகப் பார்க்க, “அப்பா இவங்க யாருப்பா..?” என்று சிவரத்தினத்தையும், காமாட்சியையும் காட்டிக் கேட்டாள்..

“இவங்க என்னோட தாத்தா, பாட்டி..” என்று சொல்லவும், “எனக்கும் தாத்தா, பாட்டி.. உங்களுக்கும் தாத்தா, பாட்டியா..?” என்று ரோஹித்தை எதிர்கேள்விக் கேட்டாள்..

“ம்ம் நீ அவங்களுக்கு கொள்ளு பேத்தி..” என்று அவன் விளக்கம் சொல்ல, அங்கிருந்த அனைவருமே சிரிப்பை அடக்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தனர்...

“அப்போ இவங்க..?” என்று மாணிக்கம், கல்யாணியைக் கேட்டாள்.. “அவங்க என்னோட அப்பா, அம்மா உனக்கு பாட்டி, தாத்தா..” என்று சொல்ல,“அப்போ இவங்க..?” என்று மதுவின் பெற்றோரைக் கைகாட்டினாள்..

ஜீவா, ‘ஸ்ஸ் அப்பா முடியலைடா சாமி..’ என்று நினைத்துக்கொண்டு அமைதியாக நிற்க, கயல்விழி கலகலவென்று சிரித்தாள்..

“இது அம்மாவோட அப்பா, அம்மா..” என்று சொல்ல, “எனக்கு தாத்தா, பாட்டி..” என்று அபூர்வா சொல்ல, “ஹப்பாடா புரிஞ்சிருச்சா..?!” என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான் ரஞ்சித்..

“இவளுக்கு விளக்கம் சொல்வது நான்.. பெருமூச்சு விடுவது நீயா..?” என்று ரஞ்சித்தை முறைத்தான் ரோஹித்.. இவர்கள் சின்னபிள்ளை போல சண்டை போட, பெரியவர்கள் அபூர்வாவின் விளையாட்டை ரசித்தனர்..

“அதெல்லாம் சரிப்பா..” என்று சொல்ல, “இன்னும் என்னம்மா..?” என்று பாவமாகக் கேட்ட ரோஹித்தைப் பார்த்து அனைவருமே வாய்விட்டுச் சிரித்தனர்.. அவர்கள் அனைவரும் சிரிப்பதைப் பார்த்து, “உங்களுக்கு எல்லாம் என்னைப் பார்த்தால் எப்படி தெரிக்கிறது..?” என்று கேட்டு முறைக்க,

“விளக்கம் சொல்ல சரியான ஆள் என்று தெரியுது..” என்று கீர்த்தியும், மதுவும் கோரஸ் பாட, கயல் இருவருக்கும் ஹை – பை கொடுக்க, ஜீவாவும் ரஞ்சித்தும், “மூவரும் ஒண்ணு கூட்டிடாங்க..” என்று சொல்ல அங்கே சிரிப்பலை அடங்க கொஞ்ச நேரம் ஆனது..

“இவங்க எனக்கு எப்படி தாத்தா, பாட்டி..?” என்று ஜீவாவின் பெற்றோரை கைகாட்டி கேட்டாள்.. அவள் கேட்டதும், ஜீவா, ‘மறுபடியும் முதலில் இருந்தா..?’ என்று நினைத்தான்.. “இவங்க உனக்கு யாரு..?” என்று ஜீவா, கயலைக் கைகாட்டி கேட்டான் ரோஹித்..

“இது தித்தி, தித்தப்பா..” என்று சொல்ல, “சித்தப்பாவோட அப்பா, அம்மா உனக்கு யாரு..?” என்று கேட்டதும், “எனக்கு பாட்டி தாத்தா..” என்று சொல்ல ரோஹித் பெருமூச்சு விட்டான்..

அவன் செய்கை கண்டு அங்கே இருந்த அனைவரும் சிரிக்க, அங்கே சிரிப்பலை அடங்க கொஞ்ச நேரம் ஆனது.. அதன்பிறகு அனைவரும் கிளம்ப அவர்களைத் தடுத்த மாணிக்கம்,

“நீங்க எல்லாம் இங்கேயே தங்க வேண்டியது தானே..?” என்று கேட்டதும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “இல்லங்க நாங்க சென்னை கிளம்புகிறோம்..” என்று அமுதா சொல்ல அவர்களை தடுத்தவர்,

“இன்று எல்லோரும் எங்களின் வீட்டில் தங்கி இருங்க.. நாளை எல்லோரும் சென்னை போகலாம்..” என்று சொல்ல, அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, எல்லோரிடமும் சொல்லிவிட்டு சென்னை செல்ல, அமுதா சேகர் இருவரும் மகளைப் பார்க்க அவள் பேசவே இல்லை.. ரோஹித் எடுத்துச் சொல்லியும் அவள் பேசவே இல்லை..

கயலிடம், “நீ சந்தோசமாக போடா.. அக்கா உன்னை அங்கு வந்துப் பார்க்கிறேன்..” என்று சொல்லவும் மதுவைக் கட்டியணைத்துக் கொண்டு அழுதாள்.. அவளை சமாதானம் செய்வதற்குள் அவளிற்கு போதும் போதும் என்றானது..

அவர்கள் கிளம்பிச் செல்ல, ரஞ்சித் – கீர்த்தியை ரோஹித்தின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் பெரியவர்கள்.. பெரியவர்கள் ஒரு காரிலும் சிறியவர்கள் ஒரு காரிலும் வந்தனர்.. ஆனால் வழியிலேயே, “ரோஹித் நாங்க நேராக எங்களின் வீட்டிற்கு போகிறோம்..” என்று கீர்த்தி கூறினாள்..

அதுவரை அமைதியாகவே வந்த ரோஹித், அவள் கூறியதில் இருந்த காரணத்தை உணர்ந்த ரோஹித் காரை ரஞ்சித் வீட்டின் முன்னே நிறுத்த, அவர்கள் பின்னோடு வந்த காரை நிறுத்தி இறங்கியவர்கள் வீட்டிற்குள் சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்து மதுவின் கையில் கொடுக்க அவள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தாள்..

அடுத்தடுத்த வேலைகளை முடித்துவிட்டு இரவு அவர்கள் இருவரையும் அங்கேயே தனியாக விட்டுவிட்டு ரோஹித் வீட்டினர் கிளம்பினர்..

இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தவள் அருகில் வந்து அணைத்துக் கொண்டான் ரஞ்சித்.. அவனின் அணைப்பில் அடங்கியவள்,

“எனக்கு எல்லாம் கனவு போலவே இருக்கிறது..” என்று சொல்ல, அவளின் முகத்தைப் பார்த்தவன், “கனவு கிடையாது செல்லம்.. இது நிஜம் தான்..” என்று சொல்லி அவளைத் தன் பக்கம் திருப்பிய ரஞ்சித் அவளின் கண்களில் கலக்கம் கண்டு, “என்னம்மா ஏன் இப்படி இருக்கிறாய்..?” என்று கேட்டான்..

“ரஞ்சித் நீ என்னைக் கீர்த்தியாகப் பார்க்கிறாயா..? இல்ல சஞ்சனவாகவா..?” என்று கேட்டதும் அவளின் மனநிலை புரிந்த ரஞ்சித், “ஒன்றை மட்டும் புரிந்துக்கொள் கீர்த்தி.. சஞ்சனா நம்முடைய காதலின் அஸ்திவாரம்.. அவள் இல்லை என்றால் நான் உன்னைக் காதலித்திருக்க மாட்டேன்.. ஆனால் உன்னைக் காதலித்த பிறகு சஞ்சனா பற்றிய நினைவுகளை சேமித்த என்னுடைய இதயம் இப்பொழுது உனக்காக துடிக்கிறது.. உனக்கு ஒன்று என்றால் என்னால் தாங்க முடியாது.. அதனால் இறந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் குழப்பாதே..” என்று அவளிற்கு தெளிவாக எடுத்துரைக்க அவளின் மனம் தெளிந்து அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தாள்..

அவளின் புன்னகை முகம் கண்டவன், “இப்பொழுது நன்றாக சிரி..” என்று அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.. “ஸ்ஸ் வலிக்குதுடா எருமை..” என்று சொல்ல,

“தாலி கட்டிய கணவனுக்கு நல்ல மரியாதை..” என்று அவன் அவளைக் கிண்டல் செய்ய, அவள் அவனை முறைத்தாள்.. அவளின் முறைப்பை ஒரு முத்தம் வைத்து சமாதானம் செய்தான் ரஞ்சித்..

அப்படியே அவனின் மார்பில் சாய்ந்த கீர்த்தி, “ரஞ்சி எனக்காக ஒரு பாட்டு பாடும்மா..” என்று சொல்ல, “நான் பாடனும் என்றால் ஒரு கண்டிசன் நீ என்னுடன் பாட வேண்டும்..” என்று சொல்ல சிரித்தவள், “ம்ம் சரிம்மா..” என்று சொல்ல, அவனும் பாட ஆரமித்தான்.. அவனின் பாடல் வரிகள் கேட்டு அவனின் காதலில் மனம் கசிந்துருக அவளும் பாட ஆரமித்தாள்..

உன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை

ஆனாலும் நீ கிடைத்தாய்..

எங்கு எங்கோ சுற்றி வந்த என்னை நிற்கவைத்து

அடையாளம் நீ கொடுத்தாய்..

உன்னைச் சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி

பத்து விரல் நான் மடிப்பேன்

புது மஞ்சத் தாலி மின்ன மெட்டி கேலி பண்ண

பக்கத்தில் நான் கிடப்பேன்

கண்ணில் மீனை வச்சி புத்தும் புதுத் தூண்டில்

போட்டது நீயல்லவா

கள்ளத்தனம் இல்லா உன் வெள்ளை உள்ளம் கண்டு

விழுந்தது நான் அல்லவா

உலகமே காலடியில் கரைந்ததே ஓர் நொடியில்

உன்னருகே நான் இருந்தால்

தினம் உன்னருகே நான் இருந்தால்” என்று இருவரும் சேர்ந்து பாட பாடலை பாடி முடித்ததும் அவளைத் தூக்கிக்கொண்டு படுக்கை அறைக்குள் சென்றவன் அவனின் காதலை வேறு விதத்தில் அவளுக்கு உணர்த்த அவளும் அவனிடம் பாடம் கற்றாள்..
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
காலையில் பத்துமணி கிளம்பியவர்கள் மாலை நான்கு மணிக்கு சென்னையை அடைந்தனர்.. வீட்டிற்கு சென்றவர்கள் அடுத்தடுத்த வேலைகளை முடித்துவிட்டு கயல்விழியை அலங்கரித்து ஜீவாவின் அறைக்குள் அனுப்பி வந்தனர்..

உள்ளே சென்றதும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த ஜீவாவைப் பார்த்தவள், “தூங்குகிறாயா உனக்கு இருக்குடி மாப்பிள்ளை..” என்று சொல்லிக் கொண்டே அவனின் அருகில் சென்றவள் அவன் தூங்குவதைப் பார்த்து, ‘என்னை அழுக வைத்தாய் இல்ல..” என்று யோசித்தவள் கண்களில் பட்டது தண்ணீர் வைத்திருந்த வாட்டர் கேன்..

அதை எடுத்து அவனின் முகத்தில் ஊற்ற அரக்க பறக்க எழுந்து அமர்ந்தான் ஜீவா.. அவன் எழுந்து அமர்ந்ததும் அவனைப் பார்த்து சிரித்தவள்,

“இப்பதான் ஜீவா நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்..” என்று அவள் கிண்டலாகக் கூறவும், “என்னடி மனசில் நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?” என்று கேட்டு படுக்கையில் இருந்து எழுந்தவன்,

“முதலிரவு அன்று படுத்து தூங்கும் ஒரே நல்லவன் நீதான் என்று நினைத்தேன் ஜீவா..” என்று குழந்தை போல சொன்னவளைப் பார்த்து,

“பார்க்க அப்படியே குழந்தை போலவே செய்கிறாய்.. ஆனால் நீ பண்ணும் சேட்டை யார் கண்ணுக்கும் தெரியாது..” என்று புலம்பியவன்,

“முதலிரவில் கணவன் தூங்கினால் எழுப்பனும் என்ற சென்ஸ் கூட இல்லையா..?” என்று அவன் கேட்டதும்,

“நான் எல்லாம் தொல்லை ஒழிந்தது என்று தூங்கும் கேஸ். ஆனாலும் நான் எதுக்கு உன்னை எழுப்பினேன் தெரியுமா..? நான் நல்ல தூங்குவேன்.. நான் துங்குவதை நீ பார்த்துக் கொண்டிருப்பாய்.. இதுதான் உனக்கு பனிஷ்மென்ட் என்று கூறியவள் அவனின் தூக்கத்தில் ஒரு வாட்டர் கேன் தண்ணியை ஊற்றிவிட்டு படுக்கையில் படுத்து உறங்க ஆரமித்தாள்..

அவளையே பார்த்தவன் கொஞ்ச நேரத்தில் அவளின் அருகில் வந்து, “நல்ல தூங்குகிறாய்..” என்று கூறியவனின் பார்வையில் அவளின் அழகு படவே அவளின் தலையில் இருந்து கால்வரையில் அளந்தவன்,

“இதுக்குமேல் சும்மா இருந்த நல்ல இருக்காது..” என்று வாய்விட்டு கூறியவன், அவளின் அருகில் சென்றவன் அவளின் இதழோடு இதழ் பதிக்க தூக்கத்தில் அவனின் முத்தத்தை உணர்ந்தவள் கண்விழிக்காமல் படுத்திருக்க, அவள் விழித்திருக்கிறாள் என்று உணர்ந்தவன்,

“ஏய் கயல்.. நீ தூங்கல எனக்கு தெரியும்..” என்று அவனப் சொல்ல விழிதிறந்து அவனைப் பார்த்தவள், “என் மீது கோபமா செல்லம்..?” என்று வருத்ததுடன் கேட்டான்..

அவனின் வருத்தம் கண்டவள் எழுந்து அவனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு, “இல்லம்மா என்னோட அக்கா மீது எந்த தவறும் இல்லை என்று என்னோட அம்மா, அப்பாவிற்கு புரிய வைக்க நீ எடுத்த முடிவு என்னோடமூளைக்கு புரிந்தாலும், என்னோட மனசுக்கு புரியலடா..” என்று சொல்ல,

“உன்னை ரொம்பவே காயப்படுத்திவிட்டேனா..?” என்று கேட்டான் ஜீவா, அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் இல்லை என்று தலையசைத்துவிட்டு, “நான் தான் உன்னை ரொம்பவே காயப்படுத்திவிட்டேன்.. ஸாரிடா..” என்று சொல்லவும், அவளை அணைத்துக் கொண்டான் ஜீவா.. மெல்ல மெல்ல அவனின் மௌனநிலைக்கு மாற இருவரும் ஒருவராகக் கலந்தனர். அவர்கள் பிரிவு அவர்களுக்கு ஒரு நிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது..

ரஞ்சித் வீட்டில் இருந்து கிளம்பியவர்கள் நேராக வீட்டிற்கு வர சரியாக இருந்தது.. அவர்கள் அனைவருக்கும் இரவு உணவை ரெடி செய்தவள் அனைவரையும் சாப்பிட வைத்து பெரியவர்கள் அவர்களின் அறைக்கு செல்ல, கல்யாணி அபூர்வாவைத் தூக்கிச் சென்றுவிட, அவர்களின் அறைக்கு சென்றாள் மதுமிதா..

என்றும் போல இல்லாமல் இன்று அவளின் அறைக்கு செல்ல அவளின் கால்கள் பின்னிக் கொள்ள, அறைக்குள் சென்றவள் கதவைச் சாத்த, அந்த அறையில் ரோஹித் இல்ல..

அவனைத் தேடியவள் மாடிக்கு சென்றாள்.. அங்கே வெறும் தரையில் படுத்திருந்தான் ரோஹித்.. அவனைப் பார்த்தவள் அவனின் அருகில் சென்று அவனின் தோளைத் தொட, அவன் நினைவின் தாக்கத்தில் இருந்து விடுப்பட்டான்..

அவளைப் பார்த்து என்ன என்பது போல புருவம் உயர்த்த, “இங்கே எதுக்கு வந்தீங்க ரோஹித்..?” என்று கேட்டாள்..

“ஏன் மது நான் இங்கே இருப்பதில் உனக்கு என்ன பிரச்சனை..?” என்று கேட்டதும், அவளின் கண்கள் தானாகவே கலங்கியது..

“எதுக்கு இப்பொழுது அழுகிறாய்..?” என்று எழுந்து அமர்ந்தான் ரோஹித்.. “நீ எதுக்கு இப்படி பேசுகிறாய்..?” என்று வருத்ததுடன் கேட்டாள்..

“உனக்கு என்னம்மா விடிந்தவுடன் வெளிநாட்டிற்கு கிளம்ப இருக்கிறாய்..” என்று சொல்லவும், அவனைப் பார்த்தவள், “என்னை நம்பு நான் எங்கேயும் போகவில்லை.. நான் இங்கேதான் இருக்க போகிறேன்..” என்று அவள் அவனைப் பார்த்துக் கூறவும், அவளின் கைகளை எடுத்து அவனின் தலையில் வைத்துக்கொண்டு

“இப்பொழுது உண்மையைச் சொல்லு..” என்று சொல்லவும், “இல்ல ரோஹித் நான் போகலடா.. எனக்கு என்னோட ரோஹித் தான் வேண்டும்.. வேற யாரும் வேண்டாம்..” என்று சொல்லி அழுதாள்..

அவளை இழுத்து தனது மடியில் பட்டுக் கொண்டவன், “அப்புறம் எதற்கு நீ பாஸ்போர்ட் விசா எல்லாம் எடுத்து வைத்தாய்..?” என்று கேட்டவன், “உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா..?” என்று கேட்டதும் அவனின் வாயைத் தனது கை கொண்டு மூடினாள்..

“இல்ல சத்தியமாக இல்லடா.. ஆனால்..” என்று அவள் இழுக்க, “நீ என்னை நம்பவே இல்லையே.. அதில்தான் என்னோட மனம் வலிக்கிறது..” என்று அவள் கதறி அழுக, அவளை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டு, “ உன்னை நான் நம்புகிறேன் அழுகாதே மதும்மா..” என்று சொல்ல அவளிற்கு அழுகை மட்டும் வந்தது..

அவள் அதிகமாக அழுகவும் அவளின் இதழில் இதழ் பொருத்தி சிறை செய்தவன் கொஞ்சம் நேரம் கழித்தே அவளின் இதழை விடுவிக்க அவளின் அழுகை நின்றது.. “ஐ லவ் யூ டீ. நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது மதுமிதா.” என்று அவன் சொல்லவும் அவனின் விழிகளைப் பார்த்தவள் அவனின் மீது சரிய அவனோ அவளை தாங்கிய வண்ணம் தரையில் சரிந்தான்..

“கொஞ்ச நேரத்தில் பயப்படுத்திவிட்டாய்..” என்று கூறியது அவனைப் பார்த்து கலகலப்பாக சிரித்தாள்.. அவளின் மலர்ந்த முகம் பார்த்துக் கொண்டே, “ஏன் செல்லம் அம்மா, அப்பா இருவருக்கும் ஏன் தண்டனை ரொம்ப குறைவாகக் கொடுத்தாய்..?” என்று அவளின் முகத்தை விரலால் வருடிக்கொண்டே கேட்டான்..

“என்னோட அம்மா அப்பாவிடம் நான் பேசவே மாட்டேன்.. அவர்களுக்கு அதுதான் பனிஷ்மென்ட்..” என்று கூறியவளைப் பார்த்தவன், “அதுதான் ஏன்..?” என்று கேட்டான்..

“உன்னைத் தப்பாக பேசினாங்க இல்ல அதுதான்..” என்று சொல்ல அவளை அணைத்துக் கொண்டவன், “ம்ம் நல்ல பனிஷ்மென்ட் இப்பொழுது மழை வந்தால் நல்ல இருக்கும் செல்லம்..” என்று சொல்ல, அவனின் விரல்களும் உதடும் அவனின் பயணத்தைத் துவங்க, அவனை தடுக்க அவன் அவளின் எதிர்ப்பை மீறி அவளை ஆக்கிரமிக்க,

“ரோஹித் உன்னோட பாட்டு கேட்டு ரொம்ப நாளானது கொஞ்சம் பாடுப்பா..” என்று அவள் கெஞ்சவும் சரியென தலையசைத்தவன் அவனின் காதலை அவனின் பாடலில் வெளிப்படுத்த அவளும் அவனுடன் இணைந்து பாட ஆரமித்தாள்.. அவர்கள் சந்தோசத்தையும் காதலையும் சொல்வது போல இருந்தது அந்த பாடல்..

ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்

மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே

நீர் அருவிகள் ஓர் நதியென ஏன் நடக்கிறது..

வான் கடலெனும் தன் துணைதனை தான் கலந்திடவே!

செந்தாழம் பூ கார்காலம் வந்ததும் கூத்தாடுதே யாரைக்கண்டு..

மின்னலெனும் தன்காதல் நாயகன் வானத்திலே மின்னக்கண்டு..

அதில் கதை கோடி உண்டு..”

என்று அவள் பாடிட அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க பன்னீரைத் தூவி வாழ்த்தியது மழை.. அதில் நனைந்தவண்ணம் பாடினாள் மதுமிதா..

“நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும் நாம் இணைதிடவே

உன் உறவினில் என் மனதினில் தேன் பெருகிடுதே.

என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம் உன் கண்களே சொல்கின்றதே..

பூங்கூந்தளில் பூசூடும் பூவிது உன் தோளிலே சாய்கின்றதே..

மனம் சதிராடும் காலம்..”

மழைகாற்று வீச இருவரும் ஒரே மனநிலையில் இருக்க மழையும் பொழிய அதில் ஆசை தீர நனைந்தவர்கள், இருவரும் பாடலில் ஒன்றிணைத்தனர்..

“தேன் சுவைதனைப் பூமணந்தனை நார் பிரித்திடுமா..

யார் பிரித்திடும் வெண்ணிலவினை வான் பிரிந்திடுமோ..?

ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள் எந்நாளுமே மாறாதைய்யா

நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள் எந்நாளுமே நீங்காதம்மா..

கண்ணா அதுதானே காதல்..” என்று அவள் பாட அங்கிருந்து எழுந்தவன், அவளை கைகளில் ஏந்திக்கொண்டு அறைக்குள் சொல்ல, அவளோ அவனின் தோளில் கோடி போல் கிடந்தாள்.. அவளை படுக்கையில் விட்டவன், அவளைப் பார்வையில் அளந்தான் அவனின் பார்வையின் பொருள் புரிந்து வெக்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்தாள்.. வெளியே பொழிந்த மழைக்கு உள்ளே இருவரும் சேர்ந்து தங்களின் காதல் பயணத்தில் முதல் அத்தியாயத்தைத் எழுத தொடங்கினர்.. இருவரின் காத்திருப்பும் அழகாக கைகூடியது..

நேசித்த இந்த இரு நெஞ்சங்களும் பலபல இன்னல்களைத் தாண்டி இப்பொழுதும் எப்பொழுதும் இணைந்திருக்க அவர்களை வாழ்த்துவோம்..
 
Last edited:

Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka
காலையில் பத்துமணி கிளம்பியவர்கள் மாலை நான்கு மணிக்கு சென்னையை அடைந்தனர்.. வீட்டிற்கு சென்றவர்கள் அடுத்தடுத்த வேலைகளை முடித்துவிட்டு கயல்விழியை அலங்கரித்து ஜீவாவின் அறைக்குள் அனுப்பி வந்தனர்..

உள்ளே சென்றதும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த ஜீவாவைப் பார்த்தவள், “தூங்குகிறாயா உனக்கு இருக்குடி மாப்பிள்ளை..” என்று சொல்லிக் கொண்டே அவனின் அருகில் சென்றவள் அவன் தூங்குவதைப் பார்த்து, ‘என்னை அழுக வைத்தாய் இல்ல..” என்று யோசித்தவள் கண்களில் பட்டது தண்ணீர் வைத்திருந்த வாட்டர் கேன்..

அதை எடுத்து அவனின் முகத்தில் ஊற்ற அரக்க பறக்க எழுந்து அமர்ந்தான் ஜீவா.. அவன் எழுந்து அமர்ந்ததும் அவனைப் பார்த்து சிரித்தவள்,

“இப்பதான் ஜீவா நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்..” என்று அவள் கிண்டலாகக் கூறவும், “என்னடி மனசில் நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?” என்று கேட்டு படுக்கையில் இருந்து எழுந்தவன்,

“முதலிரவு அன்று படுத்து தூங்கும் ஒரே நல்லவன் நீதான் என்று நினைத்தேன் ஜீவா..” என்று குழந்தை போல சொன்னவளைப் பார்த்து,

“பார்க்க அப்படியே குழந்தை போலவே செய்கிறாய்.. ஆனால் நீ பண்ணும் சேட்டை யார் கண்ணுக்கும் தெரியாது..” என்று புலம்பியவன்,

“முதலிரவில் கணவன் தூங்கினால் எழுப்பனும் என்ற சென்ஸ் கூட இல்லையா..?” என்று அவன் கேட்டதும்,

“நான் எல்லாம் தொல்லை ஒழிந்தது என்று தூங்கும் கேஸ். ஆனாலும் நான் எதுக்கு உன்னை எழுப்பினேன் தெரியுமா..? நான் நல்ல தூங்குவேன்.. நான் துங்குவதை நீ பார்த்துக் கொண்டிருப்பாய்.. இதுதான் உனக்கு பனிஷ்மென்ட் என்று கூறியவள் அவனின் தூக்கத்தில் ஒரு வாட்டர் கேன் தண்ணியை ஊற்றிவிட்டு படுக்கையில் படுத்து உறங்க ஆரமித்தாள்..

அவளையே பார்த்தவன் கொஞ்ச நேரத்தில் அவளின் அருகில் வந்து, “நல்ல தூங்குகிறாய்..” என்று கூறியவனின் பார்வையில் அவளின் அழகு படவே அவளின் தலையில் இருந்து கால்வரையில் அளந்தவன்,

“இதுக்குமேல் சும்மா இருந்த நல்ல இருக்காது..” என்று வாய்விட்டு கூறியவன், அவளின் அருகில் சென்றவன் அவளின் இதழோடு இதழ் பதிக்க தூக்கத்தில் அவனின் முத்தத்தை உணர்ந்தவள் கண்விழிக்காமல் படுத்திருக்க, அவள் விழித்திருக்கிறாள் என்று உணர்ந்தவன்,

“ஏய் கயல்.. நீ தூங்கல எனக்கு தெரியும்..” என்று அவனப் சொல்ல விழிதிறந்து அவனைப் பார்த்தவள், “என் மீது கோபமா செல்லம்..?” என்று வருத்ததுடன் கேட்டான்..

அவனின் வருத்தம் கண்டவள் எழுந்து அவனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு, “இல்லம்மா என்னோட அக்கா மீது எந்த தவறும் இல்லை என்று என்னோட அம்மா, அப்பாவிற்கு புரிய வைக்க நீ எடுத்த முடிவு என்னோடமூளைக்கு புரிந்தாலும், என்னோட மனசுக்கு புரியலடா..” என்று சொல்ல,

“உன்னை ரொம்பவே காயப்படுத்திவிட்டேனா..?” என்று கேட்டான் ஜீவா, அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் இல்லை என்று தலையசைத்துவிட்டு, “நான் தான் உன்னை ரொம்பவே காயப்படுத்திவிட்டேன்.. ஸாரிடா..” என்று சொல்லவும், அவளை அணைத்துக் கொண்டான் ஜீவா.. மெல்ல மெல்ல அவனின் மௌனநிலைக்கு மாற இருவரும் ஒருவராகக் கலந்தனர். அவர்கள் பிரிவு அவர்களுக்கு ஒரு நிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தது..

ரஞ்சித் வீட்டில் இருந்து கிளம்பியவர்கள் நேராக வீட்டிற்கு வர சரியாக இருந்தது.. அவர்கள் அனைவருக்கும் இரவு உணவை ரெடி செய்தவள் அனைவரையும் சாப்பிட வைத்து பெரியவர்கள் அவர்களின் அறைக்கு செல்ல, கல்யாணி அபூர்வாவைத் தூக்கிச் சென்றுவிட, அவர்களின் அறைக்கு சென்றாள் மதுமிதா..

என்றும் போல இல்லாமல் இன்று அவளின் அறைக்கு செல்ல அவளின் கால்கள் பின்னிக் கொள்ள, அறைக்குள் சென்றவள் கதவைச் சாத்த, அந்த அறையில் ரோஹித் இல்ல..

அவனைத் தேடியவள் மாடிக்கு சென்றாள்.. அங்கே வெறும் தரையில் படுத்திருந்தான் ரோஹித்.. அவனைப் பார்த்தவள் அவனின் அருகில் சென்று அவனின் தோளைத் தொட, அவன் நினைவின் தாக்கத்தில் இருந்து விடுப்பட்டான்..

அவளைப் பார்த்து என்ன என்பது போல புருவம் உயர்த்த, “இங்கே எதுக்கு வந்தீங்க ரோஹித்..?” என்று கேட்டாள்..

“ஏன் மது நான் இங்கே இருப்பதில் உனக்கு என்ன பிரச்சனை..?” என்று கேட்டதும், அவளின் கண்கள் தானாகவே கலங்கியது..

“எதுக்கு இப்பொழுது அழுகிறாய்..?” ஏறனு எழுந்து அமர்ந்தான் ரோஹித்.. “நீ எதுக்கு இப்படி பேசுகிறாய்..?” என்று கேட்டாள்..

“உனக்கு என்னம்மா விடிந்தவுடன் வெளிநாட்டிற்கு கிளம்ப இருக்கிறாய்..” என்று சொல்லவும், அவனைப் பார்த்தவள், “என்னை நம்பு நான் எங்கேயும் போகவில்லை.. நான் இங்கேதான் இருக்க போகிறேன்..” என்று அவள் அவனைப் பார்த்துக் கூறவும், அவளின் கைகளை எடுத்து அவனின் தலையில் வைத்துக்கொண்டு

“இப்பொழுது உண்மையைச் சொல்லு..” என்று சொல்லவும், “இல்ல ரோஹித் நான் போகலடா.. எனக்கு என்னோட ரோஹித் தான் வேண்டும்.. வேற யாரும் வேண்டாம்..” என்று சொல்லி அழுதாள்..

அவளை இழுத்து தனது மடியில் பட்டுக் கொண்டவன், “அப்புறம் எதற்கு நீ பாஸ்போர்ட் விசா எல்லாம் எடுத்து வைத்தாய்..?” என்று கேட்டவன், “உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா..?” என்று கேட்டதும் அவனின் வாயைத் தனது கை கொண்டு மூடினாள்..

“இல்ல சத்தியமாக இல்லடா.. ஆனால்..” என்று அவள் இழுக்க, “நீ என்னை நம்பவே இல்லையே.. அதில்தான் என்னோட மனம் வலிக்கிறது..” என்று அவள் கதறி அழுக, அவளை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டு, “அழுகாதே மதும்மா..” என்று சொல்ல அவளிற்கு அழுகை மட்டும் வந்தது..

அவள் அதிகமாக அழுகவும் அவளின் இதழில் இதழ் பொருத்தி சிறை செய்தவன் கொஞ்சம் நேரம் கழித்தே அவளின் இதழை விடுவிக்க அவளின் அழுகை நின்றது.. “ஐ லவ் யூ டீ. நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது மதுமிதா.” என்று அவன் சொல்லவும் அவனின் விழிகளைப் பார்த்தவள் அவனின் மீது சரிய அவனோ அவளை தாங்கிய வண்ணம் தரையில் சரிந்தான்..

“கொஞ்ச நேரத்தில் பயப்படுத்திவிட்டாய்..” என்று கூறியது அவனைப் பார்த்து சிரித்தாள்.. அவளின் மலர்ந்த முகம் பார்த்துக் கொண்டே, “ஏன் செல்லம் அம்மா, அப்பா இருவருக்கும் ஏன் தண்டனை ரொம்ப குறைவாகக் கொடுத்தாய்..?” என்று அவளின் முகத்தை விரலால் வருடிக்கொண்டே கேட்டான்..

“என்னோட அம்மா அப்பாவிடம் நான் பேசவே மாட்டேன்.. அவர்களுக்கு அதுதான் பனிஷ்மென்ட்..” என்று கூறியவளைப் பார்த்தவன், “அதுதான் ஏன்..?” என்று கேட்டான்..

“உன்னைத் தப்பாக பேசினாங்க இல்ல அதுதான்..” என்று சொல்ல அவளை அணைத்துக் கொண்டவன், “இப்பொழுது மழை வந்தால் நல்ல இருக்கும் செல்லம்..” என்று சொல்ல, அவனின் விரல்களும் உதடும் அவனின் பயணத்தைத் துவங்க, அவனை தடுக்க அவன் அவளின் எதிர்ப்பை மீறி அவளை ஆக்கிரமிக்க,

“ரோஹித் உன்னோட பாட்டு கேட்டு ரொம்ப நாளானது கொஞ்சம் பாடுப்பா..” என்று அவள் கெஞ்சவும் சரியென தலையசைத்தவன் அவனின் காதலை அவனின் பாடலில் வெளிப்படுத்த அவளும் அவனுடன் இணைந்து பாட ஆரமித்தாள்.. அவர்கள் சந்தோசத்தையும் காதலையும் சொல்வது போல இருந்தது அந்த பாடல்..

ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்

மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே

நீர் அருவிகள் ஓர் நதியென ஏன் நடக்கிறது..

வான் கடலெனும் தன் துணைதனை தான் கலந்திடவே!

செந்தாழம் பூ கார்காலம் வந்ததும் கூத்தாடுதே யாரைக்கண்டு..

மின்னலெனும் தன்காதல் நாயகன் வானத்திலே மின்னக்கண்டு..

அதில் கதை கோடி உண்டு..”

என்று அவள் பாடிட அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க பன்னீரைத் தூவி வாழ்த்தியது மழை.. அதில் நனைந்தவண்ணம் பாடினாள் மதுமிதா..

“நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும் நாம் இணைதிடவே

உன் உறவினில் என் மனதினில் தேன் பெருகிடுதே.

என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம் உன் கண்களே சொல்கின்றதே..

பூங்கூந்தளில் பூசூடும் பூவிது உன் தோளிலே சாய்கின்றதே..

மனம் சதிராடும் காலம்..”

மழைகாற்று வீச இருவரும் ஒரே மனநிலையில் இருக்க மழையும் பொழிய அதில் ஆசை தீர நனைந்தவர்கள், இருவரும் பாடலில் ஒன்றிணைத்தனர்..

“தேன் சுவைதனைப் பூமணந்தனை நார் பிரித்திடுமா..

யார் பிரித்திடும் வெண்ணிலவினை வான் பிரிந்திடுமோ..?

ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள் எந்நாளுமே மாறாதைய்யா

நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள் எந்நாளுமே நீங்காதம்மா..

கண்ணா அதுதானே காதல்..” என்று அவள் பாட அங்கிருந்து எழுந்தவன், அவளை கைகளில் தூக்கிக்கொண்டு அறைக்குள் சொல்ல, அவளைப் பார்வையில் அளந்தவன், வெளியே பொழிந்த மழைக்கு உள்ளே இருவரும் சேர்ந்து தங்களின் காதல் பயணத்தில் முதல் அத்தியாயத்தைத் எழுத தொடங்கினர்.. இருவரின் காத்திருப்பும் அழகாக கைகூடியது..

நேசித்த இந்த இரு நெஞ்சங்களும் பலபல இன்னல்களைத் தாண்டி இப்பொழுதும் எப்பொழுதும் இணைந்திருக்க அவர்களை வாழ்த்துவோம்..
Super
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top