• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 6
காலையில் நேரத்தில் காரில் கிளம்பிய இருவரும் மதியம் குற்றாலத்தில் இருந்தனர்.. காரின் உள்ளே இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவே இல்லை.. குற்றாலத்தை நெருங்க நெருங்க அதன் வனப்பு கீர்த்தியின் கண்ணைக் கவர்ந்தது..
காரில் இருந்த ஏசியை ஆப் செய்துவிட்டு, காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு வேடிக்கைப் பார்க்க, அந்த மதிய நேரத்தில் கூட மழை பொழிய போவது போல வானம் இருண்டு, கார்மேகத்தால் வானம் மூடப்பட்டு இருந்தது..
குளிர்காற்று முகத்தில் பட, சந்தோசமாக இதழை விரித்து சிரித்தான் ரோஹித்.. அவனின் முகம் ஒரு கம்பீரத்துடன் மலர்ந்திருந்தது..
அவனின் முகம் பார்த்த கீர்த்தி, “டேய் ரோஹித் நீ எனக்கு ரொம்ப புதுசாக தெரிகிறாய்..” என்று சொன்னவளின் முகத்தை கேள்வியாக நோக்கினான் ரோஹித்
“உனக்கு நான் புதுசாக தெரிகிறேனா..?” என்று கேட்டவன் ரோட்டில் கவனத்தை செலுத்த, “நீ புதுசுதான்.. உன்னோட மனதில் இருக்கும் காதல் இப்பொழுதுதான் முகத்தின் வழியாக வெளிப்படுகிறது..” என்று சொன்னவள் வேடிக்கைப் பார்க்க ஆரமிக்க,
அது மெயின் ரோட்டில் இருந்து மாறி ஒரு மண் ரோட்டில் செல்ல, அந்த ரோட்டின் இருபுறமும் மரங்கள் சாலைக்கு அரணாக அணிவகுத்து நின்றது..
சாலையின் இருபுறமும் வயல்வெளிகள் இருக்க, அதை பார்த்த கீர்த்தி, “ரோகித் இந்த இதம் அந்த அமெரிக்காவில் கிடைக்காது.. எங்கு திரும்பினாலும் பசுமை பார்க்க பார்க்க பரவசமாக இருக்கிறது..” என்று சொல்லியவள் வேடிக்கைப் பார்க்க, ரோஹித் அமைதியாக காரை செலுத்திக்கொண்டு இருந்தான்..
அந்த ரோட்டில் ஒருபக்கம் வண்டியை வளைத்துத் திருப்ப, எதிரே ஒரு குட்டிப்பொண்ணு, “நோ மது! இது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.. இந்த ரோஜாதான் நம்ம வாங்க போறோம்..” என்று இரண்டு வயது குழந்தை சொல்ல,
“சரிம்மா நீ வா.. நான் ரோஜா எடுத்துட்டு வீடிக்கு போறேன்..” என்று சொல்ல, “இரும்மா நானும் வரேன்..” என்று பெரியவள் கூறினாள்..
“யார் வீட்டுக்கு முதலில் போவாங்களோ அவங்களுக்கு சாக்கி வாங்கித் தரேன்..” என்று அந்த குட்டி பொண்ணு சொல்லிவிட்டுத் திரும்பி ரோட்டைக் கிராஸ் செய்ய, “அபூ நில்லுடி கார் வருது..” என்று கத்தியவள்,
கார் வருவது தெரிந்தும் குழந்தைக் காப்பாற்ற ஓடியவள் நொடி பொழுதில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு எதிர்புறம் செல்ல, காரின் குறுக்கே ஒரு குட்டிப்பொண்ணும் வருவதைப் பார்த்து ரோஹித் வண்டியின் வேகத்தைக் குறைக்க, அதற்குள் அந்த குழந்தைக்கு மிக அருகில் வந்துவிட்டதை உணர்ந்து பிரேக் அடித்தான் ரோஹித்..
அதற்குள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு எதிர்புறம் சென்றவள், மனம் படபடவென்று அடித்துக் கொள்ள, குழந்தையை நெஞ்சோடு அணைத்து அப்படியே கண்மூடி நின்றாள்..
“அம்மா..” என்று குழந்தை பதட்டத்துடன் அழுக ஆரமிக்க, “செல்லம் ஒன்னும் இல்ல கண்ணா கண்ணை திறந்து பாரும்மா..” என்று குழந்தையின் தலையை வருடிக் குழந்தையின் பதட்டம் குறைக்க, அந்த குழந்தை அவளை இறுக்கி அணைத்துக் கொண்டது..
வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்த கீர்த்தி, ரோஹித் சடர்ன் பிரேக் போட, “என்னடா..?” என்று அவனைக் கேள்வியுடன் பார்த்தவள், அவனின் பார்வை சென்ற திசையைப் பார்த்து, அவளும் அத்திசையை நோக்க, அந்தப்பெண் திரும்பி நின்றிருக்க,
ரோஹித் கோபத்துடன் இறங்கி அந்த பெண்ணை நோக்கிச் செல்ல, இவனின் கோபம் அறிந்த கீர்த்தியும் இறங்கி அவனை பின்தொடர்ந்தாள்.. அவன் அந்த பெண்ணை நோக்கி கோபத்துடன் சென்றவன், அவள் முகத்தைப் பார்க்காமல்,
“பத்திரமாக பார்த்துக் கொள்ள தெரியாத உங்களுக்கெல்லாம் எதுக்கு குழந்தை..? எனக்கும் குழந்தை இருக்கு என்று பிலிம் காட்ட பெற்றுக் கொள்கிறீர்களா..?” என்று கோபத்துடன் கேட்க,
அவனின் குரல் கேட்டும் கூட பதட்டம் தெளியாமல் அப்படியே பிள்ளையை இறுக்கி அணைத்தவண்ணம் நின்றிருந்தாள் அவள்.. அவளுக்கு இவனின் குரல் கிணற்றில் இருந்து கேட்பது போல இருந்தது..
அவள் பதில் சொல்லாமல் நின்றது இன்னும் அவனின் கோபத்தைக் கிளறியது..
“நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் இப்படி பதில் பேசாமல் நின்றால் என்ன அர்த்தம்.. இவங்களை எல்லாம் என்னதான் செய்வதோ..?” என்று அவன் மீண்டும் கோபத்தில் கத்த,
அவனை நோக்கி வந்த கீர்த்தி, “ரோஹித் என்னடா இந்த திட்டுத்திட்டு திட்டுகிறாய்..? அவங்க பாவம் உன்னைவிட அந்த குழந்தை மேல் அதிகம் பாசம் வைத்திருப்பவரிடம் இப்படி பேசாதே..” என்று அவனைக் கண்டித்தாள்
“என்ன குழந்தை மேல் பாசம் பொங்கி வழியுது..? நான் கொஞ்சம் கவனிக்காமல் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும்.. இதுக்கு எல்லாம் இவளின் கவன குறைவுதான் காரணம்..” என்று அவளையே குற்றம் சாட்டியவன், அவளை மரியாதைக் கொடுக்க மறந்து பேச, அது வரையில் பதட்டத்தில் இருந்தவள்,
“மற்றவர்களை மரியாதை இல்லாமல் பேச சொல்லித்தான் உங்களைப் பெற்றவர்கள் உங்களுக்கு கற்றுக் கொடுத்தார்களா..? குழந்தை வருவது கூட தெரியாமல் காரை ஓடி வந்த உங்களுக்கு இந்த கோபத்திற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை..” என்று அவள் அதே கோபத்துடன் பதில் கொடுத்தாள்..
அவளின் பதிலில் அவனின் கோபம் எல்லைக் கடக்க, “குழந்தை ரோட்டில் போவதைக் கூட கவனிக்காமல் இருக்கிறாய்..?! நீயெல்லாம் என்னோட பெற்றோரைப் பேச வந்துவிட்டாள்..” என்று அவனும் கோபத்தில் கத்த ஆரமித்தான்..
“ரோஹித் இப்பொழுது நீதான் பிரச்சனையை வளர்க்கிறாய்..” என்று கீர்த்தி அமைதியாகக் கூறினாள்.. அவளின் மனம், ‘இந்த பெண் யாரோ..? ஆனால் அவள் குழந்தை மேல் எவ்வளவு பாசத்தையும், உயிரையும் வைத்திருப்பாள்.. இவன் சொல்வது போல நடத்திருந்தால் இந்த இழப்பு அவளுக்குத்தானே..’ என்ற ரீதியில் யோசித்தது..
‘ரோஹித்..’ என்று மனம் கூச்சல் இட, சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.. அவள் கண்ணை அவளாலேயே நம்பமுடியவில்லை.. எதிரே நின்றிருந்தவன் அவளின் ரோஹித்.. அவனும் அவளைப் பார்க்கும் முன்னே முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.. அவள் திரும்பிப் பார்த்ததை இருவரும் கவனிக்கவே இல்லை..
“எதுக்கு எங்க அப்பா, அம்மாவை சம்மந்தம் இல்லாமல் இழுக்கிறாள்..? எங்க அம்மா, அப்பாவைப் பேசுவதற்கு இவளுக்கு என்ன உரிமை இருக்கு..?” என்று கோபத்தில் அவன் கத்த ஆரமிக்க,
நொடிபொழுதில் அவனின் முகம் பார்த்துத் திரும்பியவள், ‘எனக்கு எந்த உரிமையும் இல்லை..’ என்று மனதில் அவனின் கேள்விக்கு பதில் அளித்தவள்,
அவள் கையில் இருந்த குழந்தையைப் பார்த்தாள்.. அந்த குழந்தையும் பதட்டம் தெளிந்து அவளைப் பார்த்து அரிசிப்பல் தெரிய சிரிக்க, குழந்தையின் முகம் பார்த்து முகம் மலர்ந்தாள்..
“என்னோட அபூக்குட்டி சிரிக்குது!” என்று குழந்தையின் தலையை வருடிவிட,
“பயந்துட்டியா அம்மா.. அபூர்வாக்கு ஒன்னும் ஆகலை..” என்று குழந்தை அவளின் முகத்தில் முத்தம் பதிக்க, அவளும் குழந்தைக்கு முத்தம் கொடுத்தாள்..
அந்த குழந்தை அபூர்வா என்று சொல்ல, தீடிரென திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தான்.. அவள் அவனுக்கு முதுகு காட்டி நின்றிருக்க, குழந்தையின் மலர்ந்த முகம் மட்டும் அவனின் கண்ணில் பட்டது..
அந்த குழந்தையின் முகம் பார்த்து, ‘அபூர்வா..?!’ என்று அவனின் மனதில் கேள்வி எழ, காலையில் கண்ட கனவு அவனின் கண் முன்னே படமாக விரிந்தது..
அதே யோசனையுடன், அவனின் முன்னே குழந்தையை அணைத்து நின்றிருந்த பெண்ணைப் பார்த்தான் ரோஹித்..
‘இவள் மதுவாக இருக்கவே கூடாது கடவுளே..!’ என்று மனதில் வேண்டிக் கொண்டவன், கோபம் தணிந்து அந்த இடத்தில் பதட்டம் படர்ந்தது..
இவன் தீடிரென திரும்பியது கீர்த்திக்கு, ‘இன்னும் என்னென்ன பண்ண போகிறானோ கடவுளே! அந்த பெண்ணை இவனிடமிருந்து காப்பாற்று..!’ என்று மனதில் வேண்டிக் கொண்டாள்..
விதி வெகு சுவாரசியத்துடன் அவர்களின் அருகில் இருந்து அடுத்து நடக்க போவதை அழகாக கணித்துக் கொண்டிருந்தது.. அது விளையாட்டு களத்தில் நின்று உற்சாகமாக கூச்சலிட்டது..
அவனின் மனம் எங்கும் ‘ஜில்..’ என்ற உணர்வு பரவ, அவன் அவளின் மேலே பார்வையைப் பதித்தான்..
“இருக்கும்டி உனக்கு கொழுப்பு கொஞ்ச நேரத்தில் உயிரே போய் வந்தது எனக்கு தானே தெரியும்..” என்று அவள் குழந்தையைப் பார்த்து சிரிக்க, இவர்களின் உரையாடலை கேட்ட கீர்த்திக்கு கூட சிரிப்பு வந்தது..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவனின் முன்னே சேலையில் கூந்தல் இடையோடு கவிபாட நின்றிருந்த பெண்ணின் முகம் மட்டும் அவனின் கண்ணுக்குத் தெரியவே இல்லை..
‘அடுத்தவர் உடமையை நீ ரசிக்கிறாய்..’ என்று அவனின் மனம் அவனுக்கு எச்சரிக்க வழங்க,
“ரோஹித் விடுடா.. வா நாம் போகலாம்..” என்று சொன்ன கீர்த்தி,
“அவனுக்கு பதிலாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்..” என்று அவளிடம் சொல்ல, அப்பொழுதும் திரும்பாமல் நின்றிருந்தாள்..அவள் பதில் எதுவும் பேசாமல், அப்படியே அமைதியாக நின்றாள்..
அவனின் மனம், ‘இப்பொழுதே போய்விடு ரோஹித்.. நீயும் என்னை காயப்படுத்தினால் என்னால் அதை தாங்க முடியாது..’ என்று கண்களை மூடிக்கொள்ள, குழந்தை அவளைப் பார்த்து சிரித்தது!
“ஐயோ மது பயப்பிடுகிறாள்..” என்று குழந்தை குலுங்கிச் சிரிக்க, கீர்த்தியின் பிடியில் இருந்து கையை உருவியவன்,
‘அவளின் முகத்தைப் பார்த்தே ஆகவேண்டும்’ என்று கோபம் தலைக்கு ஏற, அவளின் முன்னே போய் நின்றான்..
“டேய் ரோஹித் இன்னும் என்னடா..?” என்று சலிப்புடன் கேட்ட கீர்த்தி அவனை நோக்கி வர, அவளின் விழிகள் மூடிய முகத்தைப் பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படி சிலையானான்..
கீர்த்தியின் குரல் கேட்டு கண்ணைத் திறந்த மதுமிதா அப்படியே அவனைப் பார்த்தவண்ணம் சிலையாக நின்றுவிட்டாள்..
‘எது நடக்க கூடாது என்று இருவரும் நினைத்தார்களோ அது நல்லபடியாக நடந்து முடித்தே விட்டது..’ அவனின் முகம் உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தது..
அவளின் முகத்தைப் பார்த்த ரோஹித், ‘நீ இவ்வளவு தானா..?!’ என்று அவன் ஒருவிதமான பார்வை பார்க்க, அவனின் முன்னே நிற்க கூனிக்குறுகிப் போனாள் மதுமிதா..
‘நீ அப்படியெல்லாம் இருக்க மாட்டாய், எனக்காகவே காத்திருப்பாய் என்று நினைத்தேன்..’ என்று மனதில் அவளுடன் உரையாட, அவனின் பார்வை வைத்தே மனதை படித்தவள்..
‘இப்பொழுதும் சொல்கிறேன் நான் தவறி சொன்ன ஒரு வார்த்தை.. இப்பொழுது உங்களைக் கூட தவற நினைக்க வைத்துவிட்டது.. நான் இன்னும் உங்களுக்காக காத்திருக்கிறேன் என்று சொன்னாலும் நீங்க நம்ப போவது இல்லை..’ என்று மனதில் அவனுக்கு பதில் கொடுக்க,
‘போதும் உன்னோட நடிப்பை நம்ப நான் முட்டாள் இல்லை..’ என்று அவளின் பார்வைக்கு பதில் வழங்கியவன், இந்த பார்வை பரிமாற்றம் கூட கீர்த்தி அருகில் வரும் பொழுது அவளின் கண்களுக்கு சாதாரணமாகவே தெரிந்தது!
ஆனால் நேசித்த இரு நெஞ்சங்களும் கண்ணீர் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது.. விதியின் விளையாட்டு மறுபடியும் ஆரம்பம் ஆனது..
“வா கீர்த்தி..” என்றவன் காரை நோக்கிக் கோபத்துடன் நடந்தான்.. அவன் இவ்வளவு கோபம் கொண்டு கீர்த்தி பார்த்தே இல்லை அவனின் பின்னோடு அவனைத் தொடந்தாள் கீர்த்தி..
அவன் செல்வதைப் பார்த்து அவளின் கண்களில் கண்ணீர் மழை பொழிய, வானமும் மழையை பொழிய ஆரமித்தது.. ரோஹித் கோபத்துடன் காரை எடுக்க, அவனைப் பார்த்தவள் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் மழைதுளியுடன் கலந்து மண்ணை அடைந்தது
“ஐயோ அம்மா மழை வருது! ஜாலி ஜாலி ஜாலி..” என்று உற்சாகத்துடன் கத்திய அபூர்வா,
“அந்த அங்கிள் உன் மேல கோபத்தில் இருக்கிறார் அம்மா..” என்று வருத்தத்துடன் கூறிய மகளைப் பார்த்து சிரித்தவள்,
“அந்த அங்கிள் எப்பொழுதும் கோபத்தில் தான் இருப்பார் குட்டிம்மா.. நீ வா நாம் மழையில் நனைத்துக்கொண்டே வீட்டுக்கு போகலாம்..” என்று சொன்னவள் மகளின் கரத்தில் தனது கரத்தைக் கொடுத்து, மகளைப் பின் தொடர்ந்தாள் மதுமிதா..
இங்கே இப்படி என்றால் டெல்லியில்..
அவளுடன் டெல்லி வந்த ஜீவா, ஹோட்டலில் அவர்களின் ரூமிற்கு செல்ல இருவருக்கும் தனி தனி அறைகள் போடப் பட்டிருக்க, அங்கே சென்றவர்கள் குளித்துவிட்டு சாப்பாட்டு வேலையை முடித்துவிட்டு படுக்க, அன்றைய தினம் முடிந்துவிட்டது..
மறுநாள் காலையில் மீட்டிங் நடக்கும் அறைக்குள் சென்றவர்கள் மீட்டிங்கில் நடந்த அனைத்தையும் கவனித்து குறிப்பெடுத்து அதில் உள்ள நன்மை தீமையை ஆராய்ந்து அதில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வரை மாலை ஆகிவிட்டது..
அந்த மீட்டிங் முடிந்தவுடன் எல்லோரும் ட்ரிங்க்ஸ் சாப்பிட்ட செல்ல அந்த ஹோட்டலில் இருந்த கார்டனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே அங்கிருந்த தூணில் சாய்ந்து நின்றாள்..
அவளின் மனம், ‘அக்கா நான் என்ன செய்தேன் எதுக்கு நீ என்னை வழியனுப்ப வரவில்லை..?’ என்று மனதில் கேட்டவள் கண்கள் கலங்கியது..
அவளின் செய்கைகளை தூரத்தில் இருந்து பார்த்த ஜீவா, “இவளுக்கு எப்பொழுது பார்த்தாலும் அக்காவின் நினைவுதானா..?!” என்று வாய்விட்டுக் கூறியவன் குடிக்க ஆரமித்தான்..
அங்கே குடித்தவர்கள் தள்ளாடியபடி தங்களின் அறைகளுக்கு செல்ல, ஜீவா மட்டும் அவளை நோக்கி வந்தான்.. அவனின் மனதில் அவனுக்கும் சில கேள்விகள் இருந்தது..
அவன் அருகில் வருவதைப் பார்த்து கண்களைத் துடைத்துக் கொண்ட கயல், “என்ன ஜீவா நீயும் ஃபுல்ல அடித்துவிட்டாய் போல தெரிகிறது..?” என்று அவள் சிரிக்க முயன்றாள்..
அவளின் கேள்வியில் அவளை நிமிர்ந்து பார்த்தவன், “எனக்கும் ஒரு டவுட் கயல்..?!” என்று கேட்க, அவளின் விழிகள் அவனைப் பார்த்து என்ன என்று கேட்டது..
“இல்ல யாரோட ஓடிபோய் குழந்தையோடு வந்த உன்னோட அக்கா நல்லவங்க என்று எப்படி இன்னும் நம்புகிறாய்..?!” என்று கேட்டான்..
அவனின் கேள்வியில் அவனின் சட்டையைக் கொத்தாகப் பற்றிய கயல்விழி, “என்னடா கேட்ட என்னோட அக்கா ஓடிபோய் தப்பான வழியில் குழந்தை பெத்துக் கொண்டாள் என்ற சொல்கிறாய்..?” என்று கேட்டு அவனது கன்னத்தில் ஆவேசத்துடன் அறைய ஆரமித்தாள்..
அவளின் கையில் அடிகளை வாங்கியவன், “நான் இப்படி கேட்டதுக்கு உனக்கு இவ்வளவு கோபம் வருகிறதே..? இதை மாதிரி தானே எல்லோரும் உன்னோட அக்காவை பேசுகிறார்கள்.. அப்பொழுது உனக்கு தெரியவில்லையா..?” என்று அவளின் கைகளைத் தடுத்துக் கொண்டே கேட்டான்
“எல்லோரும் கேட்டால் அவள் தப்பானவள் என்று நினைப்பா..? அவள் எந்த தப்பும் செய்யாமல் தண்டனை வழங்கப்பட்ட நிரபராதி.. உண்மை என்ன என்று அவளுக்கு தெரியும்.. என்னோட அக்காவை நீயும் தப்பாக நினைத்துவிட்டாய் இல்ல..” என்று ஒருவித வெறுப்புடன் கேட்டவள், அவனை விட்டு விலகிச் சென்றாள்..
‘ச்சே..!’ என்றவன் தலையில் அடித்துக் கொண்டான்.. ஆனால் அந்த கேள்விக்கும் அவனுக்கு பதில் வேண்டும் இல்லை என்றால் அவனின் பெற்றொர் கயல்விழியை திருமணம் செய்ய தடை விதிப்பார்கள்..
“ஏய் கயல் நில்லுடி!” என்று அவள் பின்னே ஓடியவன், அவள் நிற்காமல் செல்ல எட்டி அவளின் கைகளைப் பிடித்தது இழுத்தான்..
அவன் இழுத்த இழுப்பில் அவனின் மேலேயே வந்து விழுந்தவளின் இதழ்களை அவன் சிறை செய்ய, அவனின் கட்டுப்பாட்டிற்குள் அடங்காமல் அவனின் மார்பில் கோபத்துடன் அடித்தாள் கயல்விழி..
அத்தனை அடியையும் சமாளித்து அவளின் இதழை சுவைத்து அவளை விட்டு விலகி நின்று அவளைப் பார்த்து அவன் சிரிக்க, அவள் அழுதபடி அவளின் அறையை நோக்கி ஓட்டினாள்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Ayyayyo, Rohit Madhumithaavai santhitha neram sariyillainnu polave Sandhiya Sri dear?
Madhuvai Rohit thappaaga ninaichittaane paa?
Aboorvaa Sakthivel Radhika ivanga kuzhanthaiyaa?
Appadeennaa Madhuvodavidam kuzhanthai Aboorva eppadi vanthaal?
Sakthivelum Radhikavum yeathavathu vibathil sikki iranthuttaangalaa Sandhiya Sri dear?
Bussaa illai train ah pa?
Vibathu nadantha samayathil Madhumithaa pakkathil irunthaalaa
Adhanaal Kuzhanthai Aboorvaa Madhuvidam kidaithaalaa?
Onnume puriyalaiye paa?
Aanaal thannoda akkaa enthath thappum seiyyalai nnu Kayalvizhi uruthiyaaga nambukiraale paa?
Ithuthaan rattha pandhamo Sandhiya Sri dear?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top