• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 8
வீட்டிற்கு மகள், மருமகன் வந்திருப்பதாக நினைத்து வாசலுக்கு வந்த சிவரத்தினம், காரில் இருந்து இறக்கிய பேரனைப் பார்த்து அப்படியே வாயடைத்து நின்றார்..
கணவனின் பின்னோடு வாசலுக்கு வந்த காமாட்சி, “என்னங்க யார் வந்திருக்காங்க..?” என்று அவரைக் கேட்டவண்ணம் வாசலைப் பார்க்க அங்கே பேரனைப் பார்த்தவர்..
“ரோஹித் கண்ணா!” என்று கண்களில் கண்ணீர் மழை பொழிய ரோஹித்தை நோக்கிச் சென்று அவனை அணைத்துக் கண்ணீர் விட்டார்.. தன்னை வந்து கட்டிக்கொண்ட பாட்டியைக் கட்டிக் கொண்டவன்,
“பாட்டி நான் வந்துவிட்டேன் இல்ல அழக்கூடாது..” என்று அவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டான் ரோஹித்.. அவனின் முகத்தை கையில் தாங்கிய காமாட்சி,
“எங்களைப் பார்க்க வர உனக்கு ஏழு வருசம் ஆச்சாடா கண்ணா..” என்று கேட்க, “பாட்டி நான் இங்கு வராமல் எங்கே போக போகிறேன்..” என்று கேட்டவன், அவனின் பாட்டியை அணைத்துக் கொண்டு தாத்தாவைக் கேள்வியாகப் பார்க்க அவரின் பார்வையில் எந்த வேறுபாடும் இல்லை..
“என்ன தாத்தா வந்தவனை வாசலில் நிற்க வைத்தே அனுப்பிவிடலாம் என்று யோசனை செய்வது போல இருக்கிறது..?” என்று கேலியாகக் கேட்டான்..
“உன்னைப் பார்த்து எத்தனை வருடம் ஆகிவிட்டது.. நீ இப்படி திடீரென்று வந்தது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது கண்ணா..” என்று கூறியவர்,
“காமாட்சி நீ போய் ஆரத்தி கரைத்து எடுத்து வா..” என்று கூற அதுவரையில் அழுதுக்கொண்டு இருந்தவர், ஆரத்தி கரைக்க உள்ளே சென்றார்..
“வாம்மா கீர்த்தி! நல்ல இருக்கிறாயா..?” என்று கேட்ட சிவரத்தினத்தை ஆச்சரியமாக பார்த்தாள் கீர்த்தி..
அதுவரையில் பாட்டி, தாத்தா, பேரன் மூவருக்கும் நடக்கும் பாசத்தைப் பகிர்ந்துக் கொள்வதை அருகில் இருந்து கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திக்கு தாத்தாவின் அழைப்பு ஆச்சரியமாக இருந்தது..
“தாத்தா என்னோட பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்..?” என்று அவள் ஆச்சர்யத்துடன் கேட்டாள்.. அதுவரையில் பழக்கம் இல்லாத இடத்திற்கு வந்து விட்டோமே! என்ற எண்ணம் அவளின் உள்ளே சிறிது தயக்கம் இருந்தது...
ரோஹித் தாத்தாவின் வரவேற்பில் அவளின் மனதின் சங்கடம் மறைந்து மெல்லிய புன்னகை அவளின் முகத்தில் அழகாக படர்ந்தது..
அவளின் முகத்தில் வந்த தெளிவைப் பார்த்த சிவரத்தினம், “என்னம்மா கீர்த்தி பழக்கம் இல்லாத இடத்திற்கு வந்துவிட்டோம் என்று கொஞ்சம் கலக்கமாகவே இருந்தாய் போல, இப்பொழுது தயக்கம் இல்லையே..?!” என்று சந்தோசமாகக் கேட்டார்..
அவளின் மனதில் ஓடியதை நொடியில் படித்ததை நினைத்து ‘இல்லை’ என்று தலையசைத்தாள்..
“தாத்தா நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லை..” என்று மெல்லிய புன்னகை முகத்தில் படரக் கேட்டாள்..
“இந்த ஏழு வருடத்தில் உன்னைப் பற்றி பேசுவது தானே என்னோட மகளிற்கு வேலை..” என்று சிரித்துவிட்டு, நிமிர்ந்து பார்க்க, காமாட்சி ஆரத்தி கரைத்து எடுத்து வந்தார்..
“இருவரும் சேர்ந்து நில்லுங்க கண்ணா..” என்று இருவருக்கும் சேர்ந்து ஆரத்தி சுற்றினார்..
மழையில் நனைந்து வந்த மதுமிதா, வீட்டிற்குள் நுழைந்த மறுநொடி, “அபூர்வா இங்கே வா..” என்று அழைக்க உள்ளே இருந்த டெடிபியர் உடன் வெளி வந்தாள்
“உன்னோட டெடிபியரை அங்கே வைத்துவிட்டு வா அபூ.. தலை துவட்டிவிட்டு ட்ரஸ் மாற்றிவிட்டு அப்புறமாக விளையாடலாம்..” என்று சொன்ன மது அவளைத் தூக்கிச்சென்று குளிக்க வைத்தாள்..
“எதுக்கு அம்மா குளிக்க வைக்கிறீங்க..” என்று கேட்டாள் மகள்..
“மழையில் நனைத்தால் உடம்பு வலிக்கும்.. நீங்க குட்டி பொண்ணா அதனால் உனக்கு ரொம்ப வலிக்கும் செல்லம் அதுதான்.. குளித்துவிட்டு ட்ரஸ் மாற்றிக்கலாம்..” என்று விளக்கம் கொடுத்து அவளைக் குளிக்க வைத்து தலையை துவட்டி, ட்ரஸ் மாற்றி விட்டாள் மது..
“அம்மா நான் பாட்டி வீட்டிற்கு போய்விட்டு வருகிறேன்..” என்று அனுமதி கேட்ட மகளைப் பார்த்தவள், “ம்ம் சரி.. ஆனால் சீக்கிரம் வரவேண்டும்.. அம்மா உனக்காக பணியாரம் செய்ய போகிறேன்..” என்று அவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து மகளின் கன்னத்தில் முத்தம் பதித்தாள் மது..
“என்னோட செல்ல அம்மா..” என்று மதுவின் தாடையைப் பிடித்துக் கொஞ்சிய அபூர்வா, அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தாள்..
“அம்மா நான் நீங்க செய்வதற்குள் வந்துவிடுகிறேன்..” என்று வெளியே சென்றாள் அபூர்வா..
மகள் சென்ற திசைப் பார்த்து நின்ற மதுவின் மனம், ‘இவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாதே..’ என்று நினைத்தவள் மனதில் ரோஹித்தின் உருவம் தோன்றவே,
‘யாருமே நம்பாத பொழுது நீங்க மட்டும் நம்புவீங்க என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்.. நீங்கள் என்னை நம்பாமல் காயப்படுத்த நினைத்தாலும் அதுக்கும் நான் தயார்தான்..’ என்று நினைத்தவள் சமையல் அறையை நோக்கிச் சென்றாள்..
“உள்ளே போங்க கண்ணா..” என்று இருவரிடமும் சொன்னவர் ஆரத்திய கீழே உற்றிவிட்டு வீட்டின் உள்ளே வர, பின் வாசலின் வழியாக உள்ளே வந்த அபூர்வா,
“தாத்தா எங்கே இருக்கீங்க..?!” என்று கத்தியபடி உள்ளே வர, வீட்டின் உள்ளே நுழைந்த ரோஹித்தும், கீர்த்தியும் அவளைப் பார்த்து கொஞ்சம் அதிரவே செய்தனர்..
“இங்கே இருக்கேன் குட்டிம்மா..” என்று அவர்களின் பின்னோடு வீட்டுக்குள் வந்த சிவரத்தினம் குரல் கொடுக்க, அவளைப் பார்த்து அபூர்வா அரிசிப்பல் தெரிய அழகாக சிரித்தாள்..
“குட்டிம்மா.. அதுக்குள் ட்ரஸ் மாத்திட்டியா..?! நீ மழையில் நனைந்து உன்னோட பாட்டிக்கு தெரியாது..” என்று சத்தமாக சொன்னார்..
“ஐயோ தாத்தா! பாட்டிக்கிட்ட நீங்களே மட்டி விட்டிருவீங்க போல.. உஸ்ஸ்ஸ்ஸ்..” என்று வாயின் மேல் விரல் வைத்து அவரை அமைதியாக இருக்க சொன்னாள்.. அவரும் அப்படியே செய்தார்.
இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்த ரோஹித்திற்கு ஆச்சர்யமாக இருந்தது.. ஒரு குட்டி பொண்ணு என்ன விவரமாகப் பேசுகிறாள்.. அதுவும் அவனது தாத்தாவிடம் பேசுகிறாள் என்று அவனுக்கே ஆச்சர்யம் தாங்கவே இல்லை..
அந்த குட்டிபெண்ணைப் பார்த்து, ‘இந்த குட்டி இங்கே தான் இருக்கிறாளா..?!’ என்று ஒருபக்கம் மனம் துள்ளலுடன் நினைத்தாலும் மறுபக்கம் ரோஹித், ‘இவளின் அம்மாவை நல்ல திட்டிவிடுவான்’ என்றும் நினைத்தாள்..
அப்பொழுதுதான் புதிதாக வந்த இருவரையும் அவள் பார்த்துவிட்டு, ‘அச்சச்சோ..!’ அம்மாவைத் திட்ட இந்த அங்கிள் இங்கேயே வந்துட்டாங்க..’ என்று கையை உதறியவள்..
“தாத்தா இவங்க யாரு..?” என்று தாத்தாவின் அருகில் சென்று கேட்க, அவளைத் தூக்கிக்கொண்டவர்,
“இது என்னோட பேரன் ரோஹித்.. இது என்னோட பேத்தி கீர்த்தனா..” என்று அறிமுகம் செய்ய அவர்களைப் பார்த்தவள்,
“நான் யார் தாத்தா..” என்று அவரிடமே கேட்டாள் அபூர்வா.. அவளின் கேள்வியில் ஆச்சர்யமாக பார்ப்பதே ரோஹித், கீர்த்தியின் வேலையாக இருந்தது..
“நீயும் என்னோட பேத்திதான் கண்ணா..” என்று உள்ளே வந்த காமாட்சி, “உள்ளே வா கண்ணா..” என்று இருவரையும் வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“அபூர்வா மழையில் நனைந்தாய் போல.. எங்கே இருவரும் போட்டு வந்தீங்க..? மழை வரும் என்று தெரிந்தே இருவரும் வெளியே சென்றிருக்கீங்க..?” என்று அவளைக் குறுக்கு விசாரணை செய்ய,
“இல்ல பாட்டி நாங்க ரோஜா செடி வாங்க போனோம்.. மழை வருவதற்குள் வந்துவிடலாம் என்று தான் சென்றோம்.. செடி வாங்கிவிட்டு வருவதற்குள் மழை வந்துவிட்டது..” என்று பாட்டிக்கு பதில் கூறியவள்,
தாத்தாவின் அருகில் குனிந்து, “இதுக்குத்தான் தாத்தா சொன்னேன்.. நீங்க நான் சொல்வதைக் கேட்காமல் என்னை மாட்டி விட்டிடிங்க..?!” என்று அவரிடம் ரகசியம் பேசினாள்.. அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தார்..
“தாத்தா என்னை மாட்டிவிட்டு சிரிக்கிறீங்க..?” என்று கேட்டாள்
“இல்லம்மா நானே உன்னோட பாட்டிக்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன் எனக்கு கம்பெனிக்கு ஆள் வேண்டாமா..?” என்று சிரிப்புடன் கேட்டார்..
“அதுக்கு என்னை இப்படியா மாட்டிவிடுவது போங்க தாத்தா நீங்க..” என்று சிணுங்கினாள் அபூர்வா
அவளின் பேச்சில் கவரப்பட்ட கீர்த்தி, “உன்னோட பெயர் என்ன குட்டி..?” என்று சந்தோசமாகக் கேட்டாள் கீர்த்தி..
“மை நேம் இஸ் அபூர்வா..” என்று சொல்ல, “அப்படியா..!” என்றுக் கேட்ட கீர்த்தி, அவளைத் தூக்கிக் கொள்ள அவளிடம் சீக்கிரம் சென்றவள்,
“ஆண்ட்டி தாத்தா பாட்டிக்கிட்ட அங்கே அம்மாவிடம் அங்கிள் சண்டை போட்டதைச் சொல்லாதீங்க..” என்று அவளின் காதோடு இரகசியமாக சொன்னாள் அபூர்வா,
அந்த குழந்தைக்கு இருந்த அறிவு திறனைப் பார்த்து வியந்த கீர்த்தி, “ஏன் சொல்ல கூடாது..?!” என்று இரகசியமாகக் கேட்டாள்
“பாட்டி அம்மாவைத் திட்டுவாங்க.. அப்புறம் வருத்தம் படுவாங்க.. அம்மா, பாட்டி, தாத்தா பாவம் இல்ல அதுதான் சொல்லாதீங்க..” என்று கூறினாள் அபூர்வா
“சரி செல்லம் ஆண்ட்டி யாரிடமும் எதுவும் சொல்லமாட்டேன்..” என்று அவளின் இரு கன்னத்திலும் முத்தம் வைத்தாள்.. அவளும் கீர்த்தியின் இரு கன்னத்திலும் முத்தம் பதித்தாள்..
முன்னால் வீட்டிற்குள் சென்ற ரோஹித், ‘இந்த குட்டிப்பெண் இங்கே இருக்கிறாள் என்றால் மதுவும் இங்குதான் இருக்கிறாள்..’ என்று மனதில் நினைத்தவன் அவளைக் கண்களால் தேடினான்..
அவள் அவனின் கண்ணீர்க்கு தட்டுப்படவே இல்லை.. ‘எங்கேடி இருக்கிறாய்..?’ என்று மனதில் நினைத்தவன் வீடு முழுவதும் பார்வையால் தேடினான்..
அதற்குள் எல்லோரும் வீட்டின் உள்ளே வர, “தாத்தா இந்த குட்டிம்மா யாரு..? அதுவும் என்னோட இடத்திற்கே வெட்டு வைக்கிறாள்..?” என்று சிரிப்புடன் கேட்டான்
“நீங்க எல்லோரும் பேசிட்டு இருங்க.. நான் உங்களுக்கு சாப்பிட எதாவது எடுத்து வருகிறேன்!” என்று சொன்ன காமாட்சி சமையல் அறையை நோக்கி வேகமாக நடந்தாள்..
“நீ உட்காரு ரோஹித்..” என்று சோபாவைக் காட்டிய சிவரத்தினம், ஒரு சோபாவில் ரோஹித்தும், இன்னொரு சோபாவில் கீர்த்தியும், அபூர்வாவும், அமர்ந்தனர்..
“உன்னோட கேள்விக்கு எல்லாம் நான் அப்புறமாக பதில் சொல்கிறேன்.. நீ எப்பொழுது இந்தியா வந்தாய்..?” என்று கேட்டார்..
“இரண்டு நாள் தான் தாத்தா ஆகிறது.. அங்கிருந்து வந்தும் உங்களைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது அதுதான் உடனே கிளம்பி வந்துவிட்டேன்..” என்று பதில் கூறினான் அவரின் பேரன்
“கீர்த்திம்மா நீயும் இந்தியா வருவாய் என்று தெரியும்.. ஆனால் இவ்வளவு விரைவாக நான் உன்னை எதிர்பார்க்கவேயில்லை..” என்று கூற அதை அவள் காதில் வாங்கினாள் தானே! அவள் அபூர்வா உடன் பேசுவதில் ரொம்ப தீவிரமாக இருந்தாள்..
கீர்த்தியும், அபூர்வாவும் பேசுவதை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹித்..
“ம்ம் இவளுக்கும் ஐஸ் வைத்துவிட்டாளா..?” என்று கேட்டு இருவரையும் பார்த்தவர், “நீ என்னப்பா கேட்டாய்..?” என்று பேரனின் பக்கம் திரும்பினார்..
அவரின் கேள்வியில் அவரை நிமிர்ந்து பார்த்த ரோஹித், “இவள் யாரு தாத்தா..?” என்று குழந்தையைப் பார்த்தவண்ணம் கேட்டான்..
“இவள் நம்முடைய பள்ளிக்கூடத்தில் வேலைப் பார்க்கும் பெண்ணின் மகள்.. இவள் தான் இந்த வீட்டின் உயிர்ப்பே..” என்று கூறியவர்,
“இவள் இங்கே வரும் பொழுது, இவள் ஆறு மாதக்குழந்தை..” என்று கீர்த்தியின் மடியில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்த அபூர்வாவைப் பார்த்தவர்,
“இவளின் அம்மாவிற்கு யாருமே இல்லை.. இவள் தான் அவளின் சொந்தம், பந்தம் எல்லாம்..!” என்று சொல்ல அதுவரையில் அவர் சொன்னதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியானான்,
“என்ன தாத்தா சொல்றீங்க..?” என்று கேட்டவன், “இவளின் அம்மாவிற்கு சொந்தம், பந்தம் என்று யாரும் இல்லைப்பா..” என்று சொல்லவும், அவனின் பாட்டி சிற்றுண்டியுடன் வரவும் சரியாக இருந்தது..
இவர்களின் பேச்சைக் கேட்ட கீர்த்தி, ‘ரோஹித் எதுக்கு இவளின் அம்மா பற்றி இவ்வளவு விசாரிக்கிறான்..?’ என்ற கேள்வி அவளின் மனதில் எழுந்தது..
“இந்தப்பா உனக்கு பிடித்த கேசரி கிளறி இருக்கிறேன்..” என்று கூறியவர், பேரனின் கையிலும், கீர்த்தியின் கையிலும் சிற்றுண்டியைக் கொடுத்தார்..
“இதை சாப்பிட்டுக் கொண்டிருங்க.. நான் உங்களுக்கு சாப்பிட எடுத்து வைக்கிறேன்..” என்று சொன்னவர் உள்ளே சென்றார்,
ரோஹித் மனம், ‘இவள் இன்னும் என்னென்ன பொய் சொல்லி வைத்திருக்கிறாள்.. இல்லை இந்த மூன்று வருடத்தில் இவளுக்கு திருமணம் நடந்தபிறகு இவளின் அப்பா, அம்மா இருவரும் இறந்துவிட்டார்களோ..?’ என்று யோசனையுடன் அமர்ந்திருந்தான் ரோஹித்..
“தாத்தா அம்மா என்னைத் தேடிக்கொண்டு இருப்பாங்க.. நான் அம்மாவிடம் போகிறேன்..” என்று அவள் எழுந்து செல்ல, அவளைத் தொடர்ந்தது ரோஹித்தின் பார்வை..!
“என்னம்மா சொன்னாள் அபூக்குட்டி!” என்று சிரித்தவர், “உன்னிடம் தனியாக ரகசியம் எல்லாம் பேசினாள்..” என்றவரிடம், “தாத்தா அவளிற்கு இரண்டு வயது இருக்குமா..?” என்று கேட்டாள் கீர்த்தி..
“ம்ம் இரண்டு வருடம் தான் ஆகிறது.. அவளின் அம்மா என்றால் இவளுக்கும் உயிர்..” என்று கூறியவர், “இருவருக்கும் மேல் உள்ள அறைகள் உள்ளது.. இருவரும் சென்று அலுப்பு தீர குளித்துவிட்டு வாருங்க..” என்று கூறியவர் எழுந்து பின்புறம் சென்றார்..
ரோஹித் இன்னும் யோசனை கலையாமல் அமர்ந்திருந்தான்.. அவனை யோசனையுடன் பார்த்த கீர்த்தி, “என்ன ரோஹித் பழைய நினைவுகளா..?” என்று அவனிடம் கேட்டாள்
அப்பொழுதுதான் யோசனை கலைந்து எழுந்தவன், “ம்ம் பழைய நினைவுகள் தான்..” என்று பதில் கொடுத்தவன் மாடிக்குச் சென்றான்..
அவனைப் பார்வையில் தொடர்ந்த கீர்த்தி, “நீ இப்பொழுதுதான் பேசவே ஆரமித்திருக்கிறாய் ரோஹித்.. உன்னோட மனதில் உள்ள பெண்ணைக் கண்டறிந்து அவளை உன்னிடம் சேர்க்காமல் நான் இந்தியா விட்டு போவதாக இல்லை..” என்று கூறியவள் அவனைப் பின்தொடந்தாள்..
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
Hi Sandhya, UNGA story romba beautiful. Vidama padikaren inda kadhaiya.. Nala kondu poreenga..mayil iragal varuduvathai pola..best wishes.. inum niraya azagana uds edirpakaren ?
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
apoorva kutti patti ,thathavuku pet so cute......... madhu enge irukiral endru thedukiran so nice:love::love::love::love:
“நீ இப்பொழுதுதான் பேசவே ஆரமித்திருக்கிறாய் ரோஹித்.. உன்னோட மனதில் உள்ள பெண்ணைக் கண்டறிந்து அவளை உன்னிடம் சேர்க்காமல் நான் இந்தியா விட்டு போவதாக இல்லை..” என்று கூறியவள் அவனைப் பின்தொடந்தாள்..
:):):):):):)waiting eagerly sis(y)(y)
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Hi Sandhya, UNGA story romba beautiful. Vidama padikaren inda kadhaiya.. Nala kondu poreenga..mayil iragal varuduvathai pola..best wishes.. inum niraya azagana uds edirpakaren ?
thanks aparna for your comments.. :love::love::love: thodarnthu padinga ennoda best kodukka paarkkiren... :):)
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
apoorva kutti patti ,thathavuku pet so cute......... madhu enge irukiral endru thedukiran so nice:love::love::love::love:

:):):):):):)waiting eagerly sis(y)(y)
thanks devi for your comments:love::love:
 




Priya tl

நாட்டாமை
Joined
Feb 6, 2018
Messages
92
Reaction score
94
Location
Tiruppur
:love::love::love::love::love: ....... rendu perum ore placea la iruntha enna nadakum:unsure::unsure: ..... rohith madhu mela kova paduvan ah ila avala pathi unmaiya therinchupana:unsure::unsure::unsure:o_Oo_O
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top