• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 9
டெல்லியில் மீட்டிங் அனைத்தையும் முடித்துக்கொண்டு சென்னை வந்தனர் ஜீவாவும், கயல்விழியும்.. சென்னை ஏர்போர்ட் வந்துவுடன் கயலின் முகம் பார்த்தான் ஜீவா..
“கயல் இன்னும் என்மேல் கோபம் போகலையா..?! அன்று தெரியாமல் ஏதோவொரு யோசனையில் அப்படி கேட்டுவிட்டேன்.. அதுக்கு பேசாமல் இருந்து என்னை எதற்கு வதைக்கிறாய்..?” என்று சோகமாகக் கேட்டான்..
“நான் உன்னிடம் பேசலை என்றால் வலிக்கிறதா ஜீவா.. இப்படி எத்தனை பேர் டைலாக் கேட்டுவிட்டேன்.. எனக்கு என்னோட அக்காதான் பெருசு!” என்று கூறியவள்,
ஜீவாவிற்கும் கோபம் வந்தது.. ஆனாலும் கட்டுப்படித்துக் கொண்டு அவளையே முறைத்தான்.. அன்னையிடம் இருந்து போன் வரவே அவர்களிடம் பேசலாம் என்று அந்தபக்கம் சென்றாள்..
“ஹலோ அம்மா எங்களுக்கு இன்னும் நான்கு நாட்கள் மீட்டிங் இருக்கிறது..” என்று சொல்ல,
“................”
“இல்லம்மா! நான் என்ன வேண்டும் என்ற பண்ணுகிறேன்..? மீட்டிங் இன்னும் நடக்கவே இல்லை அம்மா.. அந்த கிளைன்ட் வராததால் மீட்டிங் தள்ளிப் போடப்படுள்ளது..” என்று கூறினாள்..
“...............”
“ம்ம் சரிம்மா நான் சண்டே வந்துவிடுவேன்.. இடையில் டைம் கிடைக்கும் பொழுது போன் பண்ணுகிறேன்..” என்று சொல்லி போனை வைத்தாள் கயல்விழி..
அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜீவா, “ரொம்ப நல்ல போய் சொல்கிறாய்..” என்று சொல்லி சிரிக்க,
“உன்னோட கூட்டணி அமைத்தால் சரமாரியாக பொய் சொல்லத்தான் வேண்டும்.. என்னதான் செய்வது எல்லாம் என்னோட தலையெழுத்து..” என்று கடுப்புடன் கூறினாள்..
“ஹப்பாடா! எப்படியோ இந்த லூசு என்னுடன் பேசிவிட்டது.. இப்பொழுதுதான் மனதிற்கு நிறைவாக இருக்கிறது..” என்று அவன் சிரிப்புடன் கூற,
“உன்னையெல்லாம் என்ன செய்யணும் தெரியுமா..? மின்கம்பத்தில் கட்டிவைத்து தோலை உரிக்கணும்..” என்று அவள் கோபத்துடன் கூறினாள்..
“மின்கம்பத்திற்கு கட்டிவைக்க வேண்டாம் கண்ணம்மா.. உனக்கு கட்டிவைத்தாலே போதும்..” என்று சொல்ல அவனை எதுவும் செய்ய முடியாத கடுப்பில் நின்றிருந்தாள் கயல்விழி.. இருவரும் சேர்ந்து தூத்துக்குடிக்கு ப்ளாட் ஏறினார்..
மகள் சென்றதும் அவளிற்கு பிடித்த பணியாரத்தைச் செய்த மதுமிதா, சமையலை முடித்துவிட்டு, வெளியே வந்து அலுப்பு தீர நன்றாகக் குளித்தாள்..
அவள் குளித்துவிட்டு வெளியே வந்து தலையைத் துவட்டிவிட்டு, மகள் வருவாள் என்று பணியாரத்தை எடுத்து டைனிங் டேபிளில் வைத்தாள்..
மாலை நேரம் என்பதால் பாடல் பார்க்க டிவியைப் போட்டாள்.. அதில் வந்த சேனலை மாற்றியவள் பாட்டு சேனல் வரவே அதை அப்படியே விட்டாள்..
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்!
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூமாலை தூவும்!”
காற்றினில் சாரல் போல பாடுவேன்
பூக்களில் தென்றல் போல தேடுவேன்
நீ வரும் பாதையில் கண்களால் தவமிருப்பேன்

என்ற பாடல் பாடியது! அதனுடனே பாட ஆரமித்தாள்.. அதற்குள் வீட்டிற்கு வந்த அபூர்வா, “அம்மா சூப்பராகப் பாடறீங்க..” என்று சொன்னவள் அன்னையின் மடியில் வந்து அமர்ந்தாள்..
“அபூக்குட்டிக்கு அம்மா பாட்டு பிடித்திருக்கிறதா..?” என்று மகளை மடியில் அமரவைத்த வண்ணம் கேட்ட மதுவைப் பார்த்த அபூர்வா..
“மதுவின் பாட்டு யாருக்குத்தான் பிடிக்காது..” என்று தாடையைப் பிடித்து கொஞ்சியவள், “அம்மா பாடுங்க..” என்று கூறிவிட்டு டிவியைப் பார்க்க ஆரமித்தாள்.. மகளின் நெற்றியில் முத்தம் இட்டவள்,
உன்னைப் பார்த்த நாளில் தான்
கண்ணில் பார்வை தோன்றியது
உந்தன் பெயரைச் சொல்லித்தான்
எந்தன் பாஷைத் தோன்றியது
உன்னை மூடி வைக்கத்தான்
கண்ணில் இமைகள் தோன்றியது
உன்னைச் சூடிப்பார்க்கத்தான்
பூக்கள் மாலை ஆகியது
நீ என்னைச் சேர்ந்திரும் வரையில்
இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ தங்கிய நெஞ்சில்
யாருக்கும் இடமே இல்லை
பார்த்துப் பார்த்து ஏங்கிய சொந்தம்
வாசலில் வந்து சேர்ந்ததே!

என்ற வரியை முடிக்கும் வேளையில் வாசலில் வந்து நின்றான் ரோஹித்.. இவள் கண்களை மூடிக்கொண்டு கண்களில் கண்ணீர் வழிய பாடுவதைப் பார்த்தவன்,
“பாட்டெல்லாம் நல்ல இருக்கிறது.. ஆனால் பாட்டில் உள்ள வரிகளுக்கும் உனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லையே!”என்று ஒருவிதமான நக்கலுடன் கூறினான் ரோஹித்..
அவளைப் பின்தொடர்ந்தது வந்தவன் அவளின் பாடல் கேட்டு அப்படியே நின்றான்..
அப்பொழுதுதான் கண்ணைத் திறந்த மதுமிதா, அவனைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்தாலும் பிறகு தன்னைத் தேற்றிக்கொண்டு கண்கள் இரண்டையும் துடைத்துக்கொண்டு அபூர்வா பக்கம் திரும்பியவள்,
“செல்லம் பின்னாடி தோட்டத்தில் இருக்கும் ரோஜா செடியில் எத்தனை பூக்கள் இருக்கிறது..? அதில் எத்தனை மலர்ந்த பூக்கள், எத்தனை உதிர்ந்த பூக்கள் என்று எண்ணிவிட்டு வாடா..” என்று சொல்ல,
“சரிம்மா” என்று சொல்லிய அபூர்வா பின்வாசலின் வழியாக வெளியே சென்றாள்..
அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் அவனின் உருவத்தில் இருந்த மாற்றத்தையும், அவனின் முகத்தில் இருக்கும் கோபத்தையும் நொடியில் கணித்துவிட்டாள்..
‘அவன் எதற்கு இங்கே வந்தான்..? இவன் இங்கேயே எப்படி வந்தான்.. இவன் வருவான் என்று நான் நினைக்கவே இல்லை..’ மனதில் எழுந்தாலும், அவனையே பார்த்தவள் அவனின் உருவத்தை மனப்பெட்டகத்தில் சேமித்தாள்..
சிவரத்தினம் வீட்டில் இருந்து வெளியே வந்த அபூர்வா, “அந்த அங்கிள் அம்மாவைத் திட்டு வாங்க.. அதனால் நாம் அம்மாவிடம் அவர் வந்திருப்பது பற்றி சொல்லிவிடுவோம்..” என்று வேகமாக வீட்டை நோக்கி ஓட்டினாள்
அவள் சென்ற மறுநொடியே அறைக்குள் வந்தவன், “இந்த தாத்தா என்னன்னமோ சொல்கிறார்..” என்று புலம்பியவன் பால்கனியில் நிற்க, குழந்தை செல்லும் வழியைப் பார்த்தான்..
அறைக்குள் சென்றவன் உடனே வெளியே வர, “என்ன ரோஹித் மண்டப்புழு ரொம்ப கொடையுதோ..?” என்று சிரித்தபடியே படியேற, ‘எனக்கு இருக்கும் இம்சை பத்து என்று இப்பொழுது இவளும் என்னைக் கேலி செய்ய ஆரமித்துவிட்டாள்..’ என்று மனதில் நினைத்தவன்,
“கீர்த்தி உன்னோட கேள்விக்கு அப்புறம் பதில் சொல்கிறேன் நீ உன்னோட அறைக்கு போ.. நான் இப்பொழுது வ்ந்து விட்டுகிறேன்..” என்று கூறியவன் அவசரமாகப் படியிறங்கிச் செல்ல,
“இவன் போகின்ற வேகத்தைப் பார்த்தால் ஏதோ சரியில்லை..” என்று வாய்விட்டுக் கூறியவள், அறைக்குச் சென்று பேக்கை வைத்தவள், அவனுக்கே தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்..
கீர்த்தி செல்வதைப் பார்த்து அவளின் அருகில் வந்த சிவரத்தினம், “என்னம்மா கீர்த்தி இவ்வளவு அவசரமாக நீ எங்கே போகிறாய்..” என்று கேட்டார்
“தாத்தா எனக்கு அபூர்வாவைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது..” என்று கூற,
“அவங்க நம்ம பின் வீட்டில் தான் இருக்காங்க.. இந்த வழியாக போ..” என்று வழிகாட்டியவர், அவரது வேலையைப் பார்க்க சென்றார்.. காமாட்சி சமையல் அறையில் இருந்ததால் அவர்கள் இருவரையும் கவனிக்கவே இல்லை..
கீர்த்தி ரோஹித்தை தொடர்ந்து செல்ல, அவளின் வீட்டின் முன்னே நின்றான்.. அவளும் அப்படி மறைவாக நின்றாள்..
குழந்தை வெளியே செல்லும் வரையில் அமைதியாக இருந்த மதுமிதா, “நான் இங்கே இருக்கிறேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும்..?” வெடுக்கென்று கேட்டாள்..
“என்னோட வீட்டில் இருந்துக் கொண்டு என்னிடமே இப்படிக் கேட்பது உனக்கு முட்டாள் தனமாக இல்லையா மது..?” என்று அவனும் நக்கலாகப் பதில் கொடுத்தவன்,
“ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் தான்..” என்று சொன்னவன் உள்ள வர அவளும் அசராமல் அப்படி நின்று அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்..
“ஏன் எனக்கு தைரியம் இருக்கக் கூட்டாதா..?” என்று அவளும் அவனை எதிர்த்துக் கேள்விக் கேட்டாள்..
“அதுதான் சொல்லிவிட்டேனே உனக்கு தைரியம் அதிகம் என்று! என்னைக் காதலித்து விட்டு, என்னிடமே ‘நான் எங்க வீட்டில் யாரைப் பார்த்து மாப்பிள்ளை என்று கைகாட்டுகிறார்களோ அவனைத் தான் திருமணம் செய்வேன் என்று சொன்னதை நடத்தியே காட்டிவிட்டாய் இல்ல.. உனக்கு இல்லாத தைரியமா..?!” என்று அவன் சரியாக அவளைக் குறிப்பார்த்து அடித்தான்..
அவனின் கேள்வி அவளின் இதயத்தில் குத்தி ரணமாக்கினாலும், அவள் எதுவுமே பேசாமல் அவனைப் பார்த்தபடியே, “என்ன பண்றது நாங்கெல்லாம் வெறும் வாய்ச்சொல் வீரர் கிடையாது என்று நிரூவிக்க வேண்டியிருக்கிறதே..” என்று அவளும் அவனுக்கு பதில் கொடுத்தாள்..
அவளின் பதிலில் அவனுக்கு கோபம் இன்னும் அதிகரிக்க, “உனக்கு எல்லாம் அசிங்கவே இல்லையா..? ஒருத்தனை மனத்தால் நினைத்துவிட்டு இன்னொருத்தனுக்கு முந்தானை விரிப்பவளுக்கு பேரே வேற..” என்று அவன் ஒரு விதமான பார்வையோடு கேட்க,
அவனின் பார்வையில் கூனிக்குறுகிப் போனாள்.. அவளின் இதயத்தை யாரோ வாள் கொண்டு அறுப்பது போலவே இருந்தது.. அவளுக்கு இதெல்லாம் கேட்டுக்கேட்டு மரத்துப்போச்சு! அவனின் கேள்வியில் அவளின் இதயம் தான் அதிகம் கதறியது..
ஒருவர் செய்யாத தப்பிற்கு ஆயுள்தண்டனை கொடுத்தால் அவனின் மனநிலை என்னவோ அதேபோல தான் அவனின் முன்னே நின்றிருந்தாள் மதுமிதா..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
‘என்னோட தலை எழுத்து என்னதான் என்று எனக்கே தெரியவில்லை.. செய்யாத தப்பிற்கு என்னை கூண்டில் கைதியாக நிற்கவைத்து தீர்ப்பு வழங்குவதே.. என்னோட தலை விதி என்றால் அதை யாரால் மாற்ற முடியும்..’ என்று நினைத்தவள்,
“அதுக்கு என்ன பெயர் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள் ரோஹித்.. அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட எனக்கு நேரம் இல்லை.. இப்பொழுது என்னோட மகள் என்னுடன் இருக்கிறாள்.. எனக்கு அது போதும்..” என்று அமைதியாகக் கூற,
அவளைப் பார்த்தவன், “உனக்கெல்லாம் சர்வசாதாரணமாக போய்விட்டது.. உன்னைக் காதலித்ததுதான் நான் செய்த பெரிய தப்பு.. மனத்தைக் குப்பையாக வைத்திருக்கும் உன்னைக் காதலித்தேன் என்று நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது..” என்று கூறியவன்,
அவள் அதற்கும் அப்படியே அமைதியாக நிற்க, “நீயெல்லாம் எந்த ரகம் என்றே தெரியலை..!” என்று சொன்னவன் வாசலை நோக்கி நடக்க,
“ரோஹித் ஒரு நிமிஷம்..!” என்று அழைத்தவள், அவன் நின்றுத் திரும்பிப்பார்க்க,
“நீயேந்த ரகமோ அதுதான் நானும்.. நீ மட்டும் என்ன ஒழுங்க..?! மனசைப் பற்றியெல்லாம் பேசுக்கிறாய்..? அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறாளே கீர்த்தி அவள் யாரு..? நீயெல்லாம் எப்படிப்பட்டவன் என்பதும், உன்னோட குணமும் இதில் இருந்தே தெரியுதே..” என்று அவள் இகழ்ச்சியாகக் கூறினாள் மது..
அவளின் கேள்வியில் கோபம் தலைக்கு ஏற, வெறியுடன் அருகில் வந்தவன் அவளின் கழுத்தைப் பிடித்து நெரிக்க அவள் மூச்சுவிட்ட முடியாமல் அவனின் கையை எடுக்க போராட,
“உன்னை அன்னைக்கே கொல்லாம் விட்டது என்னோட தப்புடி!..” என்று கூறி அவளின் கழுத்தை நெரிக்க, அதுவரை வெளியே இருந்துக் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தி,
“டேய் ரோஹித் அவளின் கழுத்தில் இருந்து முதலில் கையேடுடா..” என்று கத்த, அவன் அவளின் கழுத்தை நெரிப்பதை விட்டுவிட்டு திரும்பிப் பார்த்தான்..
அவன் கையை எடுத்ததும் அவள் மூச்சை இழுத்துவிட்ட முடியாமல் அப்படியே மூச்சு இரைக்க, அப்படி சோர்த்து சோபாவில் அமர்ந்தாள்.. அப்பொழுது கூட அவளின் கண்கள் கலங்கவே இல்லை..
“ஏய் கீர்த்தி நீ எப்படி இங்கே..?” என்று கோபத்துடன் கேட்டான் ரோஹித்.. அவனின் முகத்தில் கொலைவெறித் தாண்டவம் ஆடியது..
“உனக்கு எதுக்குடா இவ்வளவு கோபமும் வக்ரமும்..?” என்று கேட்டவள் வீட்டின் உள்ளே வந்தாள்..
“அவள் உன்னை என்ன வார்த்தை சொன்னாள் தெரியுமா..?” என்று கோபம் அடங்காமல் அப்படி கேட்டான்..
“நான் உனக்கு யார்..? என்ன உறவு..? என்று அவங்களுக்கு தெரியாது என்று நினைத்தாயா..? உனக்கு பதிலடி கொடுக்க அவளுக்கு ஒரு நொடி போதும்.. ஆனால் அவள் அதை செய்யவில்லை.. அதுக்கு காரணம் என்ன என்பதை முதலில் யோசி..” என்று அவளும் கோபத்துடன் பதில் கொடுத்தாள்..
“அவள் உன்னைத் தாப்பாக சொன்னதால் தான் இத்தனைக் கோபமும் என்பது உனக்கு புரியவே இல்லையா..?” என்று அவன் கோபத்துடன் கேட்டான்..
“நீ நட்பிற்கு கொடுக்கும் மரியாதையைக் கொஞ்சம் காதலுக்கும் கொடுக்கப்பார்.. எல்லோரையும் போல காதலிப்பது அப்புறம் சண்டை வந்தால் காதலித்தவளைத் தனியே தவிக்க விட்டுவிட்டு வெளிநாடு செல்வது, அவள் உனக்காகப் போராடிக் காத்திருந்தாள் என்றால் அவள் நல்லவள்.. அதுவே கட்டாயத்தின் பெயரில் வேறொருவனைத் திருமணம் செய்து குழந்தை பெற்றாள் என்றால் அவள் உன்னோட பாஷையில் வேசியா..?” என்று கோபம் தணியாமல் அவளும் அனல் பறக்க பதில் கொடுத்தாள்..
அவளின் பதிலில் அவனுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் முதல்முதலாக சிலையாகி நின்றான்.. அவனுக்கே அவன் செய்தது தப்பு என்று புரிய வைத்தாள் கீர்த்தி.. மது வலியைத் தாங்க முடியாமல் அப்படியே மயங்கிச் சரிந்தாள்..
அப்பொழுதுதான் கீர்த்தியைப் பார்த்தவன், “அவள் உன்னைத் தப்பாக நினைத்து உனக்கு தப்பாகவே தெரியலை..? நான் கேட்ட கேள்விதான் உனக்கு தப்பாக தெரிகிறாதா..?” என்று அவன் கேட்க,
“ஏழு வருடம் காத்திருப்பாள் என்று நினைத்தே அவளின் நினைவுகளை சுமந்து வாழ்ந்த உனக்கு, அவள் காத்திருக்கிறாள் என்று புரியாமல் வார்த்தைகளைத் தவற விட்டுவிட்டாயே..? அது உனக்கு தெரியலையா ரோஹித்..?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்க,
“ஏய் நீ என்ன சொல்கிறாய்..? இவள் எனக்காகவே காத்திருக்கிறாள்..?!” என்று அவளின் முகத்தைப் பார்த்தவன், மதுவின் முகத்தைப் பார்த்தான்..
இவன் கழுத்தை நெரித்ததில் மயக்கத்தில் சோபாவில் சரிந்து அமர்ந்திருந்தாள்.. அவளின் நெற்றியில் திருமணத்திற்கான அடையாளமாக சுமங்கலி பெண்கள் நெற்றியில் சூடும் குங்குமம் இல்லை.. அவளின் கழுத்தில் தாலியும் இல்லை.. அவளின் கால்களில் மெட்டியும் இல்லை..
‘கீர்த்தி சொன்னது உண்மையா..?’ என்ற ரீதியில் அவளை நிமிர்ந்துப் பார்த்தான் ரோஹித்.. அவனின் பார்வையில் இருந்த கேள்வியில் அவனைப் பார்த்து ‘ஆம்’ என்று தலையசைத்தாள் கீர்த்தி..
“உன்னோட கோபத்தால் இப்பொழுது பார்த்தாயா..? ஆத்திரக்காரனுக்கு புத்தி இல்லை என்பது உன்னோட விஷயத்தில் சரியாக இருக்கிறது..” என்று அவனைப் பார்த்துக் கூறியவள்,
“நீ இங்கே தான் வருகிறாய் என்று தெரிந்துதான் உன்னைப் பின்தொடர்ந்து வந்தேன்.. அவளை நீ முதலில் பேசியது உன்னோட காதல் மேல் வைத்திருந்த நம்பிக்கையை உடைத்துவிட்டாள் என்று ஆதங்கத்தில் பேசுகிறாய் என்று நானும் அமைதியாக இருந்தேன்..” என்று கூறியவள்,
“ஆனால் அவள் எப்பொழுது உன்னை என்னுடன் வைத்து பேசினாலோ அப்பொழுதே தெரிந்துவிட்டது.. அவள் இன்னும் உன்னை மட்டும் நேசிக்கிறாள் என்று..! அடுத்தவன் மனைவியாக இருப்பவளுக்கு உன்னோட வந்த என்னைப்பற்றி என்ன கவலை..? அதுவும் ஒரு குழந்தைக்கு தாயானவள் இந்த கேள்வியைக் கேட்கவே மாட்டாள்..” என்று உறுதியாகக் கூறினாள்..
“உன்னோட கோபத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, இவள் ஏன்இப்படி தனித்து இருக்கிறாள்.. அதற்கு யார் காரணம்..? என்று யோசிக்கப்பார்..” என்று கூறியவள் மதுவின் அருகில் சென்று அவளுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பினாள்
அவள் கண் விழித்தது, “என்னோட பெயர் கீர்த்தி.. நான் ரோஹித்தின் தோழி..!” என்று அறிமுகம் செய்ய,
“வேண்டும் என்றே உங்களை நான் தப்பாக நினைக்கவில்லை, ஏதோவொரு வேகத்தில் அப்படிக் கேட்டு விட்டேன்.. ஸாரிங்க..” என்று கூறவும் அபூர்வா உள்ளே வந்தாள்..
அவளின் பதிலில் மலைத்து நின்றான் ரோஹித்.. கீர்த்தி சொன்னது அனைத்தும் உண்மை என்பதை மதுவின் வார்த்தைகளே சொன்னது..
அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் அப்படியே நின்றிருந்தான் ரோஹித்.. நிதானமாக இருப்பவனையே தடுமாற வைத்துவிட்டது அவளின் மேல் கொண்ட காதல்..!
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
ஆனால் அவள் எப்பொழுது உன்னை என்னுடன் வைத்து பேசினாலோ அப்பொழுதே தெரிந்துவிட்டது.. அவள் இன்னும் உன்னை மட்டும் நேசிக்கிறாள் என்று..! அடுத்தவன் மனைவியாக இருப்பவளுக்கு உன்னோட வந்த என்னைப்பற்றி என்ன கவலை..? அதுவும் ஒரு குழந்தைக்கு தாயானவள் இந்த கேள்வியைக் கேட்கவே மாட்டாள்..” என்று உறுதியாகக் கூறினாள்..
super kirthi........ correct analysis:):):):)nice epi sis:love::love::love::love::love:
 




Priya tl

நாட்டாமை
Joined
Feb 6, 2018
Messages
92
Reaction score
94
Location
Tiruppur
Wowwww:love::love::love::love::love::love: ....... rohith ku ivlo kovam agathu enna nu unmaiya therinchukama kova paduran ...... unmai yella therincha feel pannuvan la:unsure::unsure:
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Wowwww:love::love::love::love::love::love: ....... rohith ku ivlo kovam agathu enna nu unmaiya therinchukama kova paduran ...... unmai yella therincha feel pannuvan la:unsure::unsure:
thanks priya sellam for your comments...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top