• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
‘என்னோட தலை எழுத்து என்னதான் என்று எனக்கே தெரியவில்லை.. செய்யாத தப்பிற்கு என்னை கூண்டில் கைதியாக நிற்கவைத்து தீர்ப்பு வழங்குவதே.. என்னோட தலை விதி என்றால் அதை யாரால் மாற்ற முடியும்..’ என்று நினைத்தவள்,
“அதுக்கு என்ன பெயர் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள் ரோஹித்.. அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட எனக்கு நேரம் இல்லை.. இப்பொழுது என்னோட மகள் என்னுடன் இருக்கிறாள்.. எனக்கு அது போதும்..” என்று அமைதியாகக் கூற,
அவளைப் பார்த்தவன், “உனக்கெல்லாம் சர்வசாதாரணமாக போய்விட்டது.. உன்னைக் காதலித்ததுதான் நான் செய்த பெரிய தப்பு.. மனத்தைக் குப்பையாக வைத்திருக்கும் உன்னைக் காதலித்தேன் என்று நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது..” என்று கூறியவன்,
அவள் அதற்கும் அப்படியே அமைதியாக நிற்க, “நீயெல்லாம் எந்த ரகம் என்றே தெரியலை..!” என்று சொன்னவன் வாசலை நோக்கி நடக்க,
“ரோஹித் ஒரு நிமிஷம்..!” என்று அழைத்தவள், அவன் நின்றுத் திரும்பிப்பார்க்க,
“நீயேந்த ரகமோ அதுதான் நானும்.. நீ மட்டும் என்ன ஒழுங்க..?! மனசைப் பற்றியெல்லாம் பேசுக்கிறாய்..? அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறாளே கீர்த்தி அவள் யாரு..? நீயெல்லாம் எப்படிப்பட்டவன் என்பதும், உன்னோட குணமும் இதில் இருந்தே தெரியுதே..” என்று அவள் இகழ்ச்சியாகக் கூறினாள் மது..
அவளின் கேள்வியில் கோபம் தலைக்கு ஏற, வெறியுடன் அருகில் வந்தவன் அவளின் கழுத்தைப் பிடித்து நெரிக்க அவள் மூச்சுவிட்ட முடியாமல் அவனின் கையை எடுக்க போராட,
“உன்னை அன்னைக்கே கொல்லாம் விட்டது என்னோட தப்புடி!..” என்று கூறி அவளின் கழுத்தை நெரிக்க, அதுவரை வெளியே இருந்துக் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தி,
“டேய் ரோஹித் அவளின் கழுத்தில் இருந்து முதலில் கையேடுடா..” என்று கத்த, அவன் அவளின் கழுத்தை நெரிப்பதை விட்டுவிட்டு திரும்பிப் பார்த்தான்..
அவன் கையை எடுத்ததும் அவள் மூச்சை இழுத்துவிட்ட முடியாமல் அப்படியே மூச்சு இரைக்க, அப்படி சோர்த்து சோபாவில் அமர்ந்தாள்.. அப்பொழுது கூட அவளின் கண்கள் கலங்கவே இல்லை..
“ஏய் கீர்த்தி நீ எப்படி இங்கே..?” என்று கோபத்துடன் கேட்டான் ரோஹித்.. அவனின் முகத்தில் கொலைவெறித் தாண்டவம் ஆடியது..
“உனக்கு எதுக்குடா இவ்வளவு கோபமும் வக்ரமும்..?” என்று கேட்டவள் வீட்டின் உள்ளே வந்தாள்..
“அவள் உன்னை என்ன வார்த்தை சொன்னாள் தெரியுமா..?” என்று கோபம் அடங்காமல் அப்படி கேட்டான்..
“நான் உனக்கு யார்..? என்ன உறவு..? என்று அவங்களுக்கு தெரியாது என்று நினைத்தாயா..? உனக்கு பதிலடி கொடுக்க அவளுக்கு ஒரு நொடி போதும்.. ஆனால் அவள் அதை செய்யவில்லை.. அதுக்கு காரணம் என்ன என்பதை முதலில் யோசி..” என்று அவளும் கோபத்துடன் பதில் கொடுத்தாள்..
“அவள் உன்னைத் தாப்பாக சொன்னதால் தான் இத்தனைக் கோபமும் என்பது உனக்கு புரியவே இல்லையா..?” என்று அவன் கோபத்துடன் கேட்டான்..
“நீ நட்பிற்கு கொடுக்கும் மரியாதையைக் கொஞ்சம் காதலுக்கும் கொடுக்கப்பார்.. எல்லோரையும் போல காதலிப்பது அப்புறம் சண்டை வந்தால் காதலித்தவளைத் தனியே தவிக்க விட்டுவிட்டு வெளிநாடு செல்வது, அவள் உனக்காகப் போராடிக் காத்திருந்தாள் என்றால் அவள் நல்லவள்.. அதுவே கட்டாயத்தின் பெயரில் வேறொருவனைத் திருமணம் செய்து குழந்தை பெற்றாள் என்றால் அவள் உன்னோட பாஷையில் வேசியா..?” என்று கோபம் தணியாமல் அவளும் அனல் பறக்க பதில் கொடுத்தாள்..
அவளின் பதிலில் அவனுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் முதல்முதலாக சிலையாகி நின்றான்.. அவனுக்கே அவன் செய்தது தப்பு என்று புரிய வைத்தாள் கீர்த்தி.. மது வலியைத் தாங்க முடியாமல் அப்படியே மயங்கிச் சரிந்தாள்..
அப்பொழுதுதான் கீர்த்தியைப் பார்த்தவன், “அவள் உன்னைத் தப்பாக நினைத்து உனக்கு தப்பாகவே தெரியலை..? நான் கேட்ட கேள்விதான் உனக்கு தப்பாக தெரிகிறாதா..?” என்று அவன் கேட்க,
“ஏழு வருடம் காத்திருப்பாள் என்று நினைத்தே அவளின் நினைவுகளை சுமந்து வாழ்ந்த உனக்கு, அவள் காத்திருக்கிறாள் என்று புரியாமல் வார்த்தைகளைத் தவற விட்டுவிட்டாயே..? அது உனக்கு தெரியலையா ரோஹித்..?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்க,
“ஏய் நீ என்ன சொல்கிறாய்..? இவள் எனக்காகவே காத்திருக்கிறாள்..?!” என்று அவளின் முகத்தைப் பார்த்தவன், மதுவின் முகத்தைப் பார்த்தான்..
இவன் கழுத்தை நெரித்ததில் மயக்கத்தில் சோபாவில் சரிந்து அமர்ந்திருந்தாள்.. அவளின் நெற்றியில் திருமணத்திற்கான அடையாளமாக சுமங்கலி பெண்கள் நெற்றியில் சூடும் குங்குமம் இல்லை.. அவளின் கழுத்தில் தாலியும் இல்லை.. அவளின் கால்களில் மெட்டியும் இல்லை..
‘கீர்த்தி சொன்னது உண்மையா..?’ என்ற ரீதியில் அவளை நிமிர்ந்துப் பார்த்தான் ரோஹித்.. அவனின் பார்வையில் இருந்த கேள்வியில் அவனைப் பார்த்து ‘ஆம்’ என்று தலையசைத்தாள் கீர்த்தி..
“உன்னோட கோபத்தால் இப்பொழுது பார்த்தாயா..? ஆத்திரக்காரனுக்கு புத்தி இல்லை என்பது உன்னோட விஷயத்தில் சரியாக இருக்கிறது..” என்று அவனைப் பார்த்துக் கூறியவள்,
“நீ இங்கே தான் வருகிறாய் என்று தெரிந்துதான் உன்னைப் பின்தொடர்ந்து வந்தேன்.. அவளை நீ முதலில் பேசியது உன்னோட காதல் மேல் வைத்திருந்த நம்பிக்கையை உடைத்துவிட்டாள் என்று ஆதங்கத்தில் பேசுகிறாய் என்று நானும் அமைதியாக இருந்தேன்..” என்று கூறியவள்,
“ஆனால் அவள் எப்பொழுது உன்னை என்னுடன் வைத்து பேசினாலோ அப்பொழுதே தெரிந்துவிட்டது.. அவள் இன்னும் உன்னை மட்டும் நேசிக்கிறாள் என்று..! அடுத்தவன் மனைவியாக இருப்பவளுக்கு உன்னோட வந்த என்னைப்பற்றி என்ன கவலை..? அதுவும் ஒரு குழந்தைக்கு தாயானவள் இந்த கேள்வியைக் கேட்கவே மாட்டாள்..” என்று உறுதியாகக் கூறினாள்..
“உன்னோட கோபத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, இவள் ஏன்இப்படி தனித்து இருக்கிறாள்.. அதற்கு யார் காரணம்..? என்று யோசிக்கப்பார்..” என்று கூறியவள் மதுவின் அருகில் சென்று அவளுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பினாள்
அவள் கண் விழித்தது, “என்னோட பெயர் கீர்த்தி.. நான் ரோஹித்தின் தோழி..!” என்று அறிமுகம் செய்ய,
“வேண்டும் என்றே உங்களை நான் தப்பாக நினைக்கவில்லை, ஏதோவொரு வேகத்தில் அப்படிக் கேட்டு விட்டேன்.. ஸாரிங்க..” என்று கூறவும் அபூர்வா உள்ளே வந்தாள்..
அவளின் பதிலில் மலைத்து நின்றான் ரோஹித்.. கீர்த்தி சொன்னது அனைத்தும் உண்மை என்பதை மதுவின் வார்த்தைகளே சொன்னது..
அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் அப்படியே நின்றிருந்தான் ரோஹித்.. நிதானமாக இருப்பவனையே தடுமாற வைத்துவிட்டது அவளின் மேல் கொண்ட காதல்..!
Veryyy nicee
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top