Teaser :
“இந்த இடத்துக்கு இதுவரைக்கும் யாரும் தைரியமா வந்தது இல்ல. அப்படியே வந்தாலும் அவங்க உயிரோட இருந்தது இல்ல. உங்களுக்கு அந்த கிழட்டு வக்கீல் நிலைமை தெரியும் தானே!” நக்கலாக சிரித்தாள் அரச குடும்பத்துக் கடைசி இளவரசி.
“அவர் எதுனால செத்தாருன்னு யாருக்கும் தெரியாது, ஆனா எனக்குத் தெரியும். அவரோட இறப்பு இயற்கையானது இல்லை. அதுவும் எனக்குத் தெரியும். யார் காரணம்னு எல்லாருக்கும் ஒரு நாள் நான் சொல்லுவேன்.” எதற்கும் அஞ்சாத அவனது ஆண்மை பொருந்திய குரல் எதிரே நின்றிருந்தவளை சற்று அசைத்துப் பார்த்தது. அவளுக்கு லேசாக வியர்க்க, அவனுக்கு அதுவே அவளைக் காட்டிக் கொடுத்தது.
அச்சத்தை உள்ளே மறைத்தவள், “ஓ! நீங்க இங்க இருக்கற சக்தி வாய்ந்த நம்பூதரிங்கள விட பெரிய ஆள் போலிருக்கே மிஸ்டர் விஜய் பூபதி.
“ஹா ஹா..” தன் ஆறடிக்கும் பொருந்தியபடி அடக்கமாகச் சிரித்தவன், “உங்க நம்பூதரிங்க பத்தி எனக்குத் தெரியாது ஆனா அவங்கள சிலர் எப்படி எல்லாம் யூஸ் பண்றாங்கன்னு தெரியும்.” மேலும் அவளுக்குக் கிலியைக் கிளப்பினான்.
“நீங்க இதுக்கு மேல போக முடியாது. இந்தக் கதவை யாராலும் திறக்க முடியாது. இது நாகபந்தம் அப்படீங்கற மந்திரக் கட்டால பூட்டப் பட்டிருக்கு. இதை பெரிய பெரிய யோகி இல்ல நாக சக்தி உள்ளவங்களால மட்டும் தான் திறக்க முடியும். அப்படிபட்டவங்க இந்த உலகத்துல யாருமே இல்ல. சோ உங்க வேலை இந்த இடத்தோட முடியுது. நீங்க கிளம்புங்க.” இதற்கு மேல் அவன் இங்கு இருந்தால் எங்கே தன் முகமே அவனுக்கு உண்மையை விளக்கிவிடுமோ என்று அவனை அங்கிருந்து விரட்ட முயன்றாள் இளவரசி ஜானவி வர்மா.
“சரி அப்படிப்பட்டவங்கள இந்த உலகம் முழுவதும் தேடி, நான் கூட்டிட்டு வந்து இந்தக் கதவை திறக்கறேன்.” உறுதியோடு கூறியவன் அந்த பத்மநாபஸ்வாமி கோவிலில் இருந்து புறப்பட்டான்.

************************************************************************
இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே! உண்மை சம்பவங்கள் சிலவற்றை வைத்து முழுக்க முழுக்க என் கற்பனையை தோய்த்த கதை தான் இது. இதன் அடிப்படை பத்மநாபஸ்வாமி கோவிலில் நிலவும் மர்மங்கள்! மற்ற படி என் கதையில் வரும் எதுவும் நிஜத்தில் இல்லை என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.
விரைவில் இதற்குப் பொருத்தமான தலைப்பை தேர்ந்தெடுத்து விட்டு உங்களை
சந்திக்கிறேன்.

Last edited: