Nilave ennidam nerungaathey 14

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹலோ நண்பர்களே ,
போன அத்தியாயத்துக்கு நீங்க குடுத்த கமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது , உங்களோட ஆதரவுக்கு நன்றி நண்பர்களே .
நிலவே என்னிடம் நெருங்காதே " வோட அத்தியாயம் 14 படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை பகிருங்கள் .

நிலவே என்னிடம் நெருங்காதே 14

mqdefault.jpg
ஜியா மூச்சி விட முடியாமல் கஷ்ட்டப்பட்டுக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போனவன் செய்வதறியாது திகைத்தான் ...

" ஜியா என்னாச்சி என்ன பண்ணுது " என்று என்ன செய்வது என்று புரியாமல் அவளை அவன் மார்போடு சாய்ந்திருந்த சில நொடியில் அவள் மயங்கி விழ .

தன் உயிரே போனது போல் துடித்தவன் அவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றான் .
ஆதர்ஷ் வேகமாக காரை செலுத்த அடுத்து பத்து நிமிடத்தில் அவர்கள் ஜியாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர் . வந்த சொந்தங்கள், மாப்பிள்ளை வீட்டாரு என அனைவரும் தங்களின் வாய்க்கு வந்தது போல் எதோ கூறிவிட்டு அங்கிருந்து செல்ல , திவ்யாவும் சரண்யாவும் கண் இமைக்கும் நொடியில் நடந்த இந்த நிகழ்வால் செய்வதறியாது திகைத்து நின்றனர் .

மருத்துவமனையில் ஜியாவிற்கு சிகிச்சை நடக்க , ஆஷிகோ அறையின் கண்ணாடி வழியே பேச்சி மூச்சியின்றி சிலையென உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தன்னவளின் நிலையை கண்டு நெருப்பில் பட்ட புழுவை போல் துடித்தான் . அவளது இந்த நிலைக்கு தான் மட்டுமே காரணம் என்று ஆதர்ஷிடம் கதறி அழுதான் , ஆதர்ஷ் ஆஷிக்கிற்கு ஆறுதல் கூறி கொண்டிருக்க
திவ்யாவும் சரண்யாவும் பதறிக்கொண்டு அங்கே வந்தனர் , திவ்யா ஆஷிக்கின் சட்டையை பற்றிக்கொண்டு ,

" உனக்கு இப்போ நிம்மதியா , நல்லா இருந்த பொண்ணை இப்படி கிடையில கிடத்திட்டியே , நீயெல்லாம் நல்லா இருப்பியா " என்று பொரிந்து தள்ள ,
ஆதர்ஷ் அவர்களை குறுக்கிட்டு ,

" ஆன்ட்டி ப்ளீஸ் இது ஹாஸ்பிடல் ஜியாக்கு ட்ரீட்மெண்ட் நடக்குது , இப்போ இதை பத்தி பேச வேண்டாம் " என்று கூறி அவரை சமாதானம் செய்ய ,திவ்யா கண்ணீர் மல்க ,

" கல்யாணம் வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னியே .. நான் தானே புத்தி கெட்டு போய் தப்பு பண்ணிட்டேன் , அதுக்கு இப்படியாடி பண்ணுவ உன் சித்தப்பாக்கு நான் என்ன பதில் சொல்ல , செத்து போறதுக்கா உன்னை வளர்த்தேன் " என்று துக்கம் தொண்டையை அடைக்க புலம்பிய திவ்யாவை சரண்யா சமாதானம் செய்தாள்.

என்ன தான் திவ்யா ஜியாவை திட்டிக்கொண்டே இருந்தாலும் , ஜியாவை சிறுவயது முதலே தாய்க்கு தாயாய் இருந்து வளர்த்ததால் அவள் மீது அவருக்கு பாசம் உண்டு , காலப்போக்கில் நடந்த சில நிகழ்வால் , ஜியா தன் மகள் சரண்யா வை விட அதிகம் பிடித்திருப்பதால் பொறாமை தலைதூக்கி அவரது கண்ணை மறைத்துவிட்டது , ஆனால் ஜியாவை இப்படி பார்ப்போம் என்று அவர்
நினைக்க வில்லை , அவளை இந்த நிலையில் பார்த்ததால் அவரது உள்ளம் பதறியது .
என்ன இருந்தாலும் அவரும் ஒரு தாய் தானே . பெற்றால் தான் பிள்ளையா ?
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
ஆஷிக்கின் இல்லத்தில் ,
" என்னமா இது ஜியாவை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர ஆஷிக் போயிருக்கான்னு சொன்ன , ஆனா இன்னும் வரல மணி ரொம்ப ஆகிடுச்சே "

"அதான் டி எனக்கும் தெரியலை "

" ஒருவேளை ஜியா இன்னும் கோபமா இருக்காளா "

" அதான் நான் உன்ன பேச சொன்னேன் "

" நான் எப்படி பேசுவேன் , ஏன்னா நான் அவ மேல கோபமா இருக்கேன்ல , ஒருவார்த்தை என்கிட்ட சொல்லல அந்த கள்ளி , வரட்டும் பார்த்துகிறேன் "

" முதல்ல அவங்க வரட்டும் அப்புறம் நீ என்ன பண்ணுமோ பண்ணிக்கோ ... "

"ஆஷிக் ஜியா கல்யாணத்த சீக்கிரமா பண்ணிரலாம் " என்று உள்ளம் நெகிழ ஆயிஷா கூற
" நாளைக்கே பண்ணிருவோம் " என்ற ஹாஜராவிடம்

" உங்க பையனுக்கு இன்னைக்கே கல்யாணம்ன்னு சொன்னாலும் ஓகேன்னு தான் சொல்லுவான் " என்று கேலி பேச

" உனக்கு வேற வேலையே இல்லை அவனை எதாவது சொல்லிக்கிட்டு , கல்யாணம் என்ன அவ்ளோ ஈஸியா, ஜியா வீட்ல பேசி சம்மதம் வாங்கணும் ...

அவங்க இதுக்கு ஒத்துக்கணும் எல்லாத்துக்கும் மேல உங்க அப்பா ஏற்கனவே செம கோபத்துல இருக்காரு அவர் என்ன சொல்றாரோ எவ்வளவோ இருக்கு டி ...
எல்லாத்துக்கும் மேலை ஜியாவோட கோபம் எல்லாம் தனியனும் அது ரொம்ப முக்கியம் "

" அதெல்லாம் உன் பையன் கால்ல விழுந்தே சரி பண்ணிருவான் ..... அம்மா இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்லை , அவனுக்கு கால் பண்ணு"

" ரொம்ப நேரமா ட்ரை பண்றேன் அட்டென்ட் பண்ண மாட்டிக்கிறான் டி "

" அப்போ ஆதர்ஷ் அண்ணாக்கு கால் பண்ணு "

" அவனும் போனை எடுக்க மாட்டிக்கிறான் "

" அப்போ தியா அக்காக்கு கால் பண்ணு , அவங்களுக்கு தெரியாம எப்படி இருக்கும் "

"சரி டி கேட்க்குறேன் " என்றவர் , தியாவிற்கு அழைப்பு விடுக்க , ஆஷிக்கின் நினைப்பிலே மூழ்கிருந்த தியா , கடைசி ரிங்கில் அட்டென்ட் செய்து ,

" ஹலோ ஆன்ட்டி"

" தியா மா , ஆஷிக் ஜியா எங்க உன் கூடையா இருக்காங்க "

" ஆஷிக் ஜியாவா இல்லையே "

" ஏன் கேட்க்குறீங்க "

" உனக்கு விஷயமே தெரியாதா , ஆஷிக் எதுவும் சொல்லலையே "

" இல்லை ஆன்ட்டி "

" ரெண்டு சந்தோஷமான விஷயம் ஒன்னு ஆயிஷாவோட கல்யாணம் மறுபடியும் நடக்கபோகுது "

"அட ரொம்ப சந்தோஷம் , என்னோட வாழ்த்துக்களை சொன்னேன்னு " என்று அவள் சொல்வதற்குள் அவளை தடுத்தவர்

" நில்லு மா உன் சந்தோஷத்தையும் வாழ்த்துக்களையும் அப்படியே சேர்த்து வச்சுக்கோ , ஏன்னா நீ ஆயிஷாவோட சேர்த்து ஆஷிக்கும் விஷ் பண்ணவேண்டிருக்கும் "

" என்ன ஆன்ட்டி சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலை " குழப்பத்தில் கேட்க

" அப்படியே அடி போட்டேன்னா , உனக்கு புரியலை ஜியாவும் ஆஷிக்கும் ஒருத்தருக்கொருத்தர் விரும்புறத நீ ஏன் என்கிட்ட சொல்லல "

"அதுவந்து ஆன்ட்டி "

" சரி பரவாயில்ல , எல்லாம் நல்லதுக்கு தான் "

" என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலை "

" ஆஷிக் ஜியாவை சமாதானம் பண்ண தான் போயிருக்கான் ஆதர்ஷும் கூட போயிருக்கான் , ரொம்ப நேரம் ஆச்சி இன்னும் வரல அதான் உனக்கு தெரியும்ன்னு நினைச்சி கேட்டேன் "

" ஓ... எனக்கு தெரியலை ஆன்ட்டி " என்று உள்ளடக்கிய கோபத்தோடு கூறினாள் ...

" சரி டா உனக்கு தெரிஞ்சா சொல்லு " என்று அவர் கூறுவதற்கு முன்பே கோபத்தில் போனை கட் செய்தவள் , ஆஷிக் ஜியாவை தேடி சென்றுள்ளான் என்று ஹாஜரா கூறியது அவளுக்கு எரிச்சலூட்ட போனை எரிய போனவள் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு , ஆஷிக்கிற்கு போன் செய்தாள் ரெண்டு முறை தாண்டி மூன்றாம் முறை அட்டென்ட் செய்தவனிடம் ,

"ஆஷிக் நீ எங்க இருக்க " என்று கோபமாக கேட்ட ...

" என்னாச்சி தியா ஏன் கோபமா இருக்க "

" ஆதர்ஷ் நீயா, ஆஷிக் எங்க "

" தியா ஒரு பெரிய பிரச்சனை " என்று அனைத்தையும் கூறியவன் ,

" நீ ஹாஸ்பிடல் வரும்பொழுது அம்மாவையும் ஆயிஷாவையும் கூட கூட்டிட்டு வந்திரு , இங்க வந்த டென்ஷன்ல நான் அவங்களுக்கு எதுவும் சொல்லல்ல "

" கண்டிப்பா ஆதர்ஷ் " என்றவளது உள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கூத்தாடியது ,
அழைப்பை துண்டித்தவள்

" ஜியா ... உன்னை பார்த்தாலே எனக்கு புடிக்காது இருந்தாலும் உன்னை இந்த நிலைமையில பார்க்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு ...

இதுக்கப்புறம் உன்னை பார்க்க முடியாம கூட போகலாம்ல " என்றவள் ,
இனி ஆஷிக் தனக்கு தான் என்ற ஆனந்த வெள்ளத்தில் நனைந்து கொண்டிருக்கிறாள் , ஆனால் அவள் ஒன்றை மறந்துவிட்டாள் ஜியாவை பிரிந்த இத்தனை வருஷத்தில் மாறாத ஆஷிக் இனிமேலா மாற போகிறான் , ஆஷிக்கின் மனதில் ஜியாவை தவிர வேற யாருக்கும் இடம் இல்லை என்பதை தியா இப்பொழுதாவது உணர்வாளா?
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
ஹாஸ்பிடலில் திடிரென்று ஜியா மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட ...
நர்ஸ் விரைந்து வந்து டாக்டரை அழைத்ததில் பதறியவன் அறைக்கு வெளியே நின்று ஜியா உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து நிலை குலைந்து போனான் ...

எதற்காகவும் பெரிதாய் கவலை படாதவன் நின்று மிகவும் உடைந்து போனான் ... எங்கே ஜியாவை இழந்து விடுவோமோ என்கின்ற பயத்தில் மருகுண்டு தவித்தான் ...

" ஏன் ஜியா??? எதுக்கு இப்படி ஒரு தண்டனையை எனக்கு குடுத்த??? எல்லாத்துக்கும் நான் தான் காரணம் " என்று தன்னை தானே வெறுத்தான் ...

சில நொடிகளுக்கு பின் ஜியா இயல்பு நிலைக்கு வர ... ICU வில் இருந்து வெளியே வந்த டாக்டரிடம் கண்ணீர்மல்க .. ஆத்திரம் பொங்க அவரது சட்டையை பற்றாத குறையாக

" ஏன் இப்படி ஆச்சி இத்தனை பேர் என்ன பண்ணிட்டு இருக்கீங்க ." காட்டு கத்து கத்தியவனிடம்

" லிஸன் மிஸ்டர் ஆஷிக் , உங்க எமோஷன்ஸ் புரியுது அதை காட்டற நேரம் இது இல்லை ....
அவ்வளவு அக்கறை இருக்கிற நீங்க அவங்களை ஒழுங்கா பார்த்துக்க வேண்டியது தானே உங்க மேல ப்ராப்லம் வச்சிட்டு எங்க கிட்ட கத்துறீங்க ....

எங்களால முடிஞ்சத நாங்க பண்ணிட்டு தான் இருக்கிறோம் ... நாங்க மட்டும் முயற்சி பண்ணினா போதாது அவங்களும் வாழணும்ன்னு நினைக்கணும் ....

நீங்க இங்க கத்துறது கூட உள்ள இருக்கிற பேஷண்ட்ட பாதிக்கும் இங்க மத்த பேஷண்ட்ஸும் இருக்காங்க புரிஞ்சி நடந்துக்கோங்க " என்றவர் ஆதர்ஷை பார்த்து
" கன்சோல் ஹிம் " என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்ற அடுத்த நொடி ,
ஹாஜரா ஆயிஷா தியா மூவரும் அங்கே வந்தனர் ,

" என்னடா ஆஷிக் நீயும் ஜியாவும் சேர்ந்து ஒண்ணா வீட்டுக்கு வருவீங்கன்னு சந்தோஷமா காத்துகிட்டு இருந்தேன் , ஆனா ஜியாவை இப்படி பார்க்கணும்ன்னு எழுதிருக்கே , என்னடா நடந்தது " என்ற ஹாஜராவை இறுக்க அணைத்து கொண்டவன் ,

" மா ஜியாவை பார்த்து பேசணும்ன்னு தான் அங்க போனேன் ஆனா இவ இப்படி பண்ணுவான்னு நான் சத்தியமா நினைக்கல ரொம்ப பயமா இருக்கு " என்று ஏங்கியவனை ஆறுதல் படுத்தியவர் , திவ்யாவையும் சரண்யாவையும் பார்த்ததும் இது ஜியாவின் சித்தியும் தங்கையும் தான் என்று புரிந்து கொண்டவர் , அவர்களின் அருகில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார் .. அனைவரது பிராத்தனையும் ஜியாவை சுற்றியே இருக்க...

தியா ஆஷிக்கிடம் ," ஆஷிக் நீ அழாத எல்லாம் சரியாகிரும் " என்று வெறும் வார்த்தைக்கு கூற , ஆதர்ஷ் அவளை தனியாக அழைத்து
அவளிடம் ,
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
" தியா நீ என்னவோ ஜியாக்கு இவன் மேல லவ் இல்லை இவனை வேண்டாம்ன்னு சொல்லிட்டா ,அப்படின்னு சொன்ன ...
இவனை விரும்பலைன்னா ஏன் இவ இப்படி ஒரு காரியம் பண்ணனும் , இவங்க வீட்ல பார்த்த பையனையே கல்யாணம் பண்ணிருக்கலாம்ல ....
அன்னைக்கு சரியா உனக்கும் ஜியாக்கும் என்னதான் நடந்தது ஜியா என்ன தான் சொன்னா , அந்த லெட்டர் ஜியா கொடுத்தது தானே " என்று தன் மனதில் உள்ளதை கேட்டுவிட

" என்ன ஆதர்ஷ் என்னையே சந்தேக படுறியா நீ " என்று பொங்கிய பதற்றத்தை மறைத்தவாறே கேட்க

" அப்படி இல்லை , ஏதும் மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்க்காகூட இருக்கலாம்ல அதான் கேட்டேன் .. நீ ஏன் பதற்றமா இருக்க "

" போதும் ஆதர்ஷ் பாதில விட்டுட்டு போன இப்படி ஒருத்திக்காக நீ என்கிட்ட சண்டைக்கு வர , இவ ஏன் இப்படி பண்ணினான்னு எனக்கு எப்படி தெரியும் ,

சரி பா நான் பொய் சொல்றேண்ணே வச்சுக்குவோம் இவ உண்மையாவே ஆஷிக்க விரும்பிருந்தா ஏன் விட்டுட்டு போறா , இவ தப்பானவ இப்போ கூட இதெல்லாம் ஆஷிக்க கிட்ட சிம்பதிய கிரியேட் பண்ண இவ போடுற ட்ராமா மாதிரி தான் தெரியுது " என்று அவளை பற்றி ஜியா தாறுமாறாக கூற

" யாரு டிராமா பண்றதா சொல்ற " என்ற குரல் அவர்களின் பின்னால் இருந்து வர ,
திரும்பி பார்த்த தியா ,

" அது ஆஷிக் " என்று விழிக்க

" என்னாச்சி ரெண்டு பெரும் சண்டை போட்ட மாதிரி இருக்கு " என்ற ஆஷிக்கிடம் ,

" ஆமா டா இவன் என்கிட்ட சண்டை போடுறான் , ஜியா இப்படி பண்ணினத்துக்கு நான் என்ன பண்ணுவேன் , அவ ட்ராமா பண்ணிட்டு இருக்கா ... ஆனா நீங்க தான் அது புரியாம , அவளுக்காக இப்படி உருகிட்டு இருக்கீங்க , அவ ரொம்ப மோசமானவ ஆஷிக் "

" ஸ்டாப் இட் தியா" க்ரோதத்தை உள்ளடக்கியவாறு அவன் கூற

" ஆஷிக் நான் சொல்ல வர்றத "

" போதும் இதுக்கு மேல ஒருவார்த்தை பேசாத " என்று உள்ளடக்கிய கோபம் முட்டிக்கொண்டு வெளியே வர

" நீ என்ன சொன்னாலும் சரி எனக்கு அவ டிராமா பண்ற மாதிரி தான் தெரியுது , அவ பண்ணின எதையும் நீ மறந்து மட்டும் போயிராத , அப்படி மட்டும் மறந்தின்னா உன்னை விட ஒரு முட்டாள் இந்த உலகத்துல வேற யாரும் இருக்க முடியாது "
என்று பொரிந்தவள் வேறெதுவும் பேசாது அங்கிருந்து சென்றாள் ...

" என்னடா இப்படி பேசிட்டு போறா " என்று ஆஷிக் கவலையாக கேட்க ,
ஆதர்ஷ்,
" விடு டா அவ அப்படி தான் ஆனா அடுத்த நிமிஷமே சரியாகிடுவா , இதெல்லாம் நீ யோசிக்காத இப்போதைக்கு ஜியாவை பத்தி மட்டும் யோசி சரியா " என்ற ஆதர்ஷுக்கு தன் தலையை மட்டும் லேசாக அசைத்தவன் கண்களில் கவலையோடு ,
" ஜியாக்கு வேற எதுவும் ஆகாதுல , பயமாவே இருக்குடா " என்று தவிப்புடன் கேட்க ...

" அவ உனக்கானவ , உன்னைவிட்டு எங்கையும் போகமாட்டா ...

இதுக்கு சாட்சி தான் ... இந்த ஆறு வருஷத்துக்கு அப்புறம் நீங்க ரெண்டு பெரும் ஒருத்தருக்கொருத்தர் சந்திச்சிக்கிட்டது ....

அவ உன்னைவிட்டு போகணும்ன்னா ஏன் விதி உங்களை சந்திக்க வைக்கணும் .... தயிரியமா இருடா " என்று தன் நண்பன் கூறிய ஆறுதலில் சற்று தேர்ச்சியுற்றான் .

தன் தாயும் , தன் நண்பனும் எவ்வளவோ வற்புறுத்தியும் எதுவும் சாப்பிட மறுத்தவன் ....
ஜியா இருக்கும் அறைக்கு பக்கத்திலே தன் விழிகளை மூடி அமர்ந்தவாறு தன் கடந்தகால நினைவிலே மூழ்கினான் .
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
கடந்தகாலம் அதை நினைக்கும் பொழுது அவனது இதழில் புன்னகை வந்து ஆட்கொண்டத ,

புத்தகத்தில் மூழ்கிருந்தவளை பார்த்து
" ஜியா , ஜியா " என்று பல முறை அழைத்தும் எந்த பதிலும் வராமல் போக , தன் பொறுமையை இழந்தவன் தன் விரலால் அவளை சீண்ட ...

சிறு புன்னகையோடு விரலை பற்றியவள்
" டேய் , கைய கால வச்சிட்டு சும்மா இரு " என்று புத்தகத்தில் இருந்து தன் விழியை அகற்றாமல் கூற ...

" மா...ட்....டேன் " என்று ராகம் போட்டவன் , மீண்டும் " ஜியா " என்று
கெஞ்சலாய் அழைக்க ...

அவனிடம் கோபம் கொள்ள முடியாதவள் , அவனை தன் மடியில் கிடத்தி ... அவனது மார்போடு தன் கரத்தை போட்டு கொள்ள ... அவன் அவளது கையில் தன் இதழை பதிக்க... மேனி சிலிர்த்தவள் ..

" ப்ளீஸ் டா கொஞ்சம் நேரம் சும்மா இரு ... எனக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு " என்று செல்லமாய் கெஞ்சியவளின் கையை தன் மார்பில் இருந்து நீக்கியவன் எழுந்து அமர்ந்து கொண்டு தன் விரலால் அவளது கையை சுரண்ட ....

" ஆஷிக் " என்று கோபமாக நிமிர்ந்து பார்த்தவளுக்கு , தன் அக்மார்க் புன்ன கையை மட்டும் தன் இதழோரம் சிந்தியவன் ....தன்னவளது விரல்களை தன் இதழால் தீண்ட ... கோபம் மறைந்து சின்னதாய் புன்னகைத்தவள் ,

" ஆஷிக் " என்று செல்லமாய் கண்டிக்க

" ம்ம் " என்றவாறு .... தன் குரும்பை ஆரம்பித்தவன் .....
தன் விரலால் மெல்ல அவளது கைகளில் படம் வரைந்து .. தன் முகத்தை அவளது கழுத்தில் புதைத்து ... தன் முத்தத்தால் தன்னவளை சிலிர்க்க செய்ய ,

" ம்ம் குத்துது " என்று சிணுங்கலாய் கூறியவளின் கழுத்தில் தன் முகத்தை புதைத்தவாறே ,
" நேத்துதான் செல்லம் சேவ் பண்ணினேன் , நீ வேணும்ன்னா பாரு " என்று தன்னவளது வதனத்தில் தன் கன்னத்தை கொண்டு காதலடா உரச .... வெட்கத்தில் முகமெல்லாம் சிவந்தவள் .... அவனது முகத்தை தன் கரத்தில் ஏந்தி ,
" ஆஷிக் ஏம்பா இப்படி இம்சை பண்ற " என்று கெஞ்சலாய் அவனை பார்க்க ....

அவனோ இமைமூடினால் எங்கே மறைந்துவிடுவாளோ என்று இமைத்தட்டாமல் அவளையே பார்த்தான் .... இல்லை பார்வையிலே கிறங்கடித்தான்..... கிறங்கிவள் அவனது முகத்தை செல்லமாக தன் கரம்கொண்டு திருப்ப .... முடியாது என்பது போல மீண்டும் அவளையே வைத்த அவன் கண் வாங்காமல் பார்க்க..... அவனது செய்கையில் மெல்ல சிரித்தவாறே ,

" அப்படி பார்க்காத "

"பார்ப்பேன் "

" பார்க்காத "

"என்னடி செல்லம் பண்றது நீ என் பக்கத்துல வந்தாலே , அப்படியே எனக்குள்ள ஏதேதோ பண்ணுது "

" அப்படியா அது ஒன்னு குடுத்தா எல்லாம் சரியாகிரும் "

" அப்படியா செல்லம் .... தாராளமா ஏராளமா குடு " என்று கிறக்கமாக
கூறியவனை பார்த்து கையை ஓங்க ..... ஓங்கியகையை மெல்ல பற்றிவருடியவன் ,
" போ அம்மு உனக்கு ஒழுங்காவே குடுக்க தெரியலை " என்று தன் இதழை அவளது விரலோடு விளையாட விட .....

தன் புத்தகத்தை தன் கையில் எடுத்தவள் ,
" தப்பு என் பேர்ல தான் .... நான் இன்னைக்கு இங்க வந்திருக்கவே கூடாது , அம்மாவும் தங்கச்சியும் இருக்கும் போதே நீ அந்த ஆட்டம் ஆடுவ , இன்னைக்கு என்ன விட்டுவைப்பியா நான் வீட்டுக்கு போறேன் " என்றவளை தடுத்தவன் ,

" போகாத டி "

" என்ன போகாத டி , உள்ள வரும்போது நான் என்ன சொன்னேன் "

" என்ன சொன்ன "

" கை கால வச்சிட்டு ஒழுங்கா இருப்பன்னா நான் வரேன் இல்லன்னா நான் வரமாட்டேன்னு சொன்னேன்ல "

" ம்ம் "

" அதுக்கு நீ என்ன சொன்ன "

" சரின்னு சொன்னேன் "

" இப்போ என்ன பண்ற , ப்ராமிஸ் பண்ணிட்டு இப்படி பண்ணலாமா "

" அட செல்ல குட்டி , ப்ராமிஸ் பண்றதே அத பிரேக் பண்றதுக்கு
தானே " என்று கண்ணடிக்க ,

" நீ சரியில்ல நான் கிளம்புறேன் " என்றவளிடம், தன் முகத்தை சோகமாக மாற்றியவன் ,

" போ டி உனக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லை .... மீட் பண்றதே எப்போவது அப்போ கூட படிச்சிட்டு இருக்க ....
என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கழட்டிவிட்டுட்டு உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்ன்னு நான் இருந்தா என்னை திட்டிட்டே இருக்கே ..உனக்காக ராப்பகலா முழிச்சிருந்து எத்தனை நாள் நான் ப்ராஜெக்ட் பண்ணி தந்திருப்பேன் , உனக்காக நீ படிச்சத விட நான் படிச்சது தான் டி அதிகம் எவன் டி தான் லவ் பண்ற பொண்ணோட படிப்புக்கெல்லாம் கெல்ப் பண்றது .... நீ என்னை புரிஞ்சிக்கவே மாட்டிக்கிற " என்று பாவமாய் பார்த்தவனை பார்த்து ஜியா ....

" அடப்பாவி அப்படி எத்தனாள் டா எனக்கு ப்ராஜெக்ட் செஞ்சி தந்திருக்க ,

ஒருநாளாவது என்னை தொல்லை பண்ணாம படிக்கவிட்ருக்கியா டா ,

காலேஜ்ல ஒரு க்ளாஸாவது என்னை ஒழுங்கா அட்டென்ட் பண்ண விட்ருக்கியா டா ,

டவுட் சொல்லித்தரேன் வெறும் வாய்ல சொல்லிருக்கியே தவிர என்னைக்காவது சொல்லி தந்திருக்கியா "
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#6
"அடிப்பாவி என்னடி இப்படி சொல்லிட்ட"

" உண்மைய தான் சொல்றேன் ஒருநாளாவது , இந்த புக்ல இருக்கிற ஒரு சாப்டர் வேண்டாம்... ஒரு ஹெட்டிங் சொல்லி குடுத்திருக்கியா " என்றவளை பார்த்தவாறு அவளது அருகில் வந்தவன் ,

" இந்த புக்கு" என்று அவளது கையில் இருந்த புத்தகத்தை தூக்கி மெத்தையில் எறிந்தவன்....

" மொத்த சயின்ஸையும் உனக்கு அப்படியே அக்குவேறு ஆணிவேறா க்ளாஸ் எடுத்திருக்கேன் " என்று காதலாய் பார்த்தவனை பார்வை மாற்றத்தை உணர்ந்தவள் ...

" நீ எனக்கு மொத்த சயின்ஸையும் போ டா " என்று அங்கிருந்து சற்று நகர.... தன் கரம் கொண்டு அவளை தன் பக்கம் இழுத்தவன் ,

தன் மயக்கும் கண்கள் கொண்டு தன் பார்வையாலே வருடி , தன்னவளை உச்சி முதல் பாதம் வரை அங்குலம் அங்குலமாய் அளவிட்டான் ....
ஏனோ அவனது பார்வை அவளை விட்டு நகர மறுக்க , இமைமூடாமல் அவளை ரசித்தான் ....
அவனது மருகுண்ட பார்வை அவளை கசக்கி பிழிய , உடலும் உள்ளமும் சிலிர்க்க .... அவனது பார்வையின் தீண்டலினாலே செவ்வண்ணமாய் சிவந்தவள் ....
இதற்க்கு மேல் முடியாதவளாய் தன் முகத்தை வேறுபக்கமாய் திருப்ப , அவளது காதுமடல்களை உரசியாவரு ,

" norepinephrine " என்றதும் கேள்வியாய் பார்த்தவளை , பார்த்து மெலிதாய் புன்னகைத்தவன் ,

" norepinephrine இத ஸ்ட்ரெஸ் ஹார்மோன்னு சொல்லுவாங்க ...
எப்போ எல்லாம் நம்ம மனசுக்கு புடிச்சவங்க நம்மளோட பக்கத்துல நெருங்கி வாரங்களோ ....
அப்போல்லாம் உடம்புக்குள்ள அனல் அடிச்ச மாதிரி இருக்கும் ....
முகமெல்லாம் வேர்க்கும் கை கால் எல்லாம் நடுங்கும் , லிப்ஸ் ட்ரையாகும் வார்த்தை இடமாறும்.....
முதல் முதலா நான் உன்னை கெட்டி புடிச்சப்ப கூட இப்படி தான் நீ என் முன்னாடி வெட வெடுத்து போய் நின்னுகிட்டு இருந்த " என்றவனிடம் எதையும் வெளிக்காட்டிக்காதவள் ,


" அது அப்போ திடீர்ன்னு அப்படி நடந்ததால இருக்கும் ...இப்போ அப்படிலாம் இல்ல " என்று பின்னால் சென்றவளை அதே காதல் பார்வையோடு தொடர்ந்தவன் ....

மெல்ல தன் விரல்களால் அவளது நெற்றியை வருட ,

" ஏசி போடலல அதான் ... " என்றவளை பார்த்து இதழ் ஓரம் புன்னகைத்தவன் தன் முகத்தால் தன்னவளது நெற்றியில் உள்ள வேர்வை துளிகளை ஒற்றி எடுத்து ஜன்னலின் ஓரம் ஓயாமல் பெயிது கொண்டிருக்கும் மழையை சுட்டி காட்ட....

தான் பொய் கூறி மாட்டிக்கொண்டதை நினைத்து தன் கீழ் உதட்டை கடித்தவளை பார்த்ததும் அவனுக்குள் அனல் அடிக்க அவளது பற்கள் தீண்டிக்கொண்டிருந்த தன்னவளின் இதழை தீண்ட துடித்த தன் இதழ்களை அடக்கியவன் ....பற்களில் சிக்குண்ட கீழுதட்டை மென்மையாய் சுண்டி ... தன் புருவம் உயர்த்தி என்னவென்று தன் மயக்கும் கண்களால் கேட்க ....
" ஒன்னும் இல்லை " என்று தடுமாறியவளது கரத்தை பற்றிகொண்டவன் ....
நடுங்கிக்கொண்டிருக்கும் விரல்களை சுட்டி காட்ட , சிணுங்கலுடன் ,அவனிடம் தப்பிப்பதாய் நினைத்து ,

" உள்ளுக்குள்ள அப்ப்டியே அனலா அடிக்குதுடா அதான் லேசா கை நடுங்குது ..." என்று தான் மீண்டும் உளறியதை நினைத்து தன் ஒற்றை விழியை மூடியாவாறே தன் பல்லை கடித்தவளை மேலும் தன் பார்வையாலே வருடியவனை ....
முடிவில்லாத காதல் பார்வையை வீச ..... அவள் மேலும் வெட்கி சிவக்க .... மெல்ல கண்ணாடி இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றவன் ,
அவளது விழிகளை சந்தித்தவாறு,
" Dopamine .... ஒருத்தொருக்கொருதர் அதிக காதலோடு பார்க்கும் பொழுது புதுசா பிறந்த மாதிரி ஒரு உணர்வு வரும்.... இதோ இப்போ உனக்கு வந்திருக்கே " என்று சிவந்த அவளது கன்னங்களை தட்டிவிட்டவாறு வருடியவன் ...மெல்ல தன் இதழை பதிக்க ,

" ஆஷிக் சும்மா எதாவது சொல்லிட்டு " என்று அங்கிருந்து சென்றவளை தன் கரத்துக்குள் சிறைவைத்து , சுவற்றோடு சாய்த்து அவளது இதழ்நோக்கி குனிய , அவனது தாப பார்வையில் வெட்கியபடி தன் கண்கள் மூடி இதழ்கள் மலர்ந்தபடி நின்று கொண்டிருந்தவளை மனம் குளிர ரசித்தவன் , அவளது காதருகில் சென்று ,

" oxytocin " என்றதும் தான் எதிர்பார்த்தது எதுவும் நடக்க வில்லை என்பதை உணர்ந்து வெடுக்கென விழி மலர்ந்தவளின் உள்ளதை உணர்த்தவனாய் ,

" அப்புறம் தரேன் " என்று கண்ணடித்தவன் மேலும் தொடர்ந்து
" இது தான் லவ் ஹார்மோன் , நான் உன்னை நெருங்கி முத்தம் குடுக்க வந்தேன் ....
ஆனா நீ என்னை தடுக்காம என்னை விட்டு விலகாம அப்ப்டியே நின்ன ...
நான் குடுக்கலைன்னு தெரிஞ்சது உன் கண்ல ஏமாற்றம் ....
இதெல்லாத்துக்கும் இது தான் காரணம் " என்று அவன் கூறவும் , செல்லமாக அவனது மார்பில் அடித்தவளை ... தன் மார்போடு காற்றுபுகாதலவிற்கு இறுக்கி அணைத்துக்கொண்டவன் ....
அவளது செவ்விதழ் நோக்கி குனிந்து தனக்குள்ள எரிந்து கொண்டிருக்கும் காதல் தீ தன்னவளின் இதழ் தரும் காதல் மழையில் அணையும் வரை நனைந்தான் .
அவனது இதழின் ஸ்பரிசத்தில் அவளது கண்கள் மெல்ல சொருக , இருவரும் மாறி மாறி தங்களின் காதலை முத்தத்தில் பரிமாறிக்கொண்டனர் . மூச்சி விடும் நொடி நெருங்க தன்னை அவனிடம் இருந்து பிரித்து கொண்டவளை ,

கணப்பொழுதும் விளக்கமாட்டேன் என்பது போல தன் முகத்தை அவளது கழுத்தின் வளைவில் புதைத்துக்கொண்டவன் ,

" ஸோ எதுவும் சொல்லித்தரலன்னு சொல்லாத மொத்த சயின்ஸையும் பிராக்டிகல் கம் தியரி யாவே எடுத்திருக்கேன் " என்று கழுத்தின் வளைவில் தன் இதழை பதிக்க,
ஜியாவோ புன்னகைத்தவாறே அவனது காது மடலை உரசி ," ' .....' " என்று மெல்லமாய் கூற, சிலநொடிகள் கழித்து அவள் கூறியதில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொண்டவன் ,

வெடுக்கென்று நிமிர்ந்து குறும்பாய் தன்னை சீண்டிக்கொண்டிருந்த தன்னவளது விழிகளை பார்க்க , அதிர்ந்து போய் தன்னையே பார்த்தவனை பார்த்து கண்சிமிட்ட

" உன்னை " என்று நெருங்கியவனிடம் போக்கு காட்டிவிட்டு அங்கிருந்து கீழே ஓடிவந்தவளை விரட்டிக்கொண்டு கீழே வந்தவன் ,

" ஜியா " என்றும் அழைக்கவும் ,

" ஆஷிக் , ஜியா " என்று அழைத்தவாறு ஹாஜரா வரவும் சரியாக இருந்தது , தன் தாயை கண்டதும் அவன் அசடு வழிய ....அவரோ அவன் அசடு வழியும் காரணம் அறியாமல் ,

" என்னடா நெளிஞ்சிட்டு இருக்க ஒழுங்கா ஜியாக்கு எல்லாம் சொல்லித்திரியா இல்லையா " என்றவர்

" இங்க பாருடா ஜியா இவனை விட்றாத நல்லா புடிச்சிக்கோ , என்ன வேணுமோ கேட்டு தெரிஞ்சிக்கோ சரியா , நீ வந்ததுக்கு அப்புறம் தான் இவன் ஒழுங்கா வீட்ல இருக்கான் இல்லைன்னா ஃப்ரண்ட்ஸ் கூட எங்கையாவது சுத்த போயிருவான் "

" சரி ஆன்ட்டி, நான் கிளம்புறேன் " என்றவளை தடுத்தவர் ....

" நில்லு டா நான் டீ போடுறேன் குடிச்சிட்டு கிளம்பு " என்று அவர் கிட்சனுக்குள் செல்ல .... அவர் சென்றது அவளது மென்னிடையை வளைத்து பிடித்தவனிடம் இருந்து தன்னை விளக்க முயன்றவள் ,

" ஆஷிக் விடு என்ன பண்ற " என்று விலக முற்பட்டவளை .. மேலும் அணைத்தவன்
" அம்மா தானே சொன்னாங்க இவனை விட்றாத கெட்டியா புடிச்சிக்கோன்னு , நீ புடிச்ச என்ன நான் புடிச்சா என்ன " என்று சில்மிஷித்தவனிடம் இருந்து தப்ப முயன்றவள் ,

" அம்மா " என்று கத்த அவளை தன் அணைப்பில் இருந்து விடுவிக்கவும்

அவர் அங்கே வரவும் சரியாக இருந்தது வந்தவர் ," என்னடா ஜியா " என்று பதற்றமாய் கேட்க ....

" இல்லமா , ஒரு தியரி சொல்லி குடுத்துட்டு ப்ராக்டிகலும் இப்போவே செஞ்சி காட்டிட்டு போன்னு என்ன தொல்லை பண்றாரு , ஆனா எனக்கு டயர்டா இருக்கு மா " என்று ஜியா ஹாஜராவிடம் சென்று ஒட்டிக்கொள்ள அவர் ,

" டேய் சும்மா அவளை படுத்தாத ஏதோ நீ ரொம்ப படிப்பாளி மாதிரி ... நீ உட்காரு மா ..... அவன் கடக்குறான் ..... இன்னும் இங்க என்ன டா பண்ற அந்த பொண்ணையே பார்த்து முறைச்சிகிட்டு .... நீ என் கூட உள்ள வா " என்றவர் அவனை அழைத்து கொண்டு கிட்சனுக்குள் செல்ல , ஜியாவோ ஹாலில் அமர்ந்து கொண்டு அவனை பார்த்து கண்ணடித்துக்கொண்டு , முகபாவனை காட்ட ,

ஆஷிகோ , தன் தாயை தன் அருகில் வைத்துக்கொண்டு வேறு வழியில்லாமல் ஏக்கமாய் அவளது முகபாவங்களை ரசிக்க மட்டும் செய்தான் ..... சோபாவில் இருந்து எழும்பியவள் ," ஆன்ட்டி நான் போயிட்டு வரேன் , டீ சூப்பர் "

" சரி டா பார்த்து போ "

" ஓகே பாய் ஆன்ட்டி " என்றவள் அவரிடம் இருந்து விடை பெற்றவள் ... தன்னை ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருக்கும் தன்னவனுக்கு முத்தத்தை காற்றில் பறக்கவிட அதை தன் உள்ளங்கையில் ஏந்தி தன் நெஞ்சில் பதித்து கொண்டு ... அவனும் பறந்தான் இதமாக .

ஜியாவுடனான தன் நினைவுகளுக்குள் நுழைந்தவனக்கு உதட்டில் புன்னகை வழிந்தாலும் அடுத்த நொடி, தன்னால் அவளுக்கு ஏற்பட்ட வலியை நினைத்தவனுக்கு கண்களின் ஓரம் கண்ணீர் வந்தடைந்தது .
ஆதர்ஷின் குரலில் தன் நிலையடைந்தவன் , என்ன என்பது போல் பார்க்க , ஆதர்ஷ் ," டாக்டர் வந்துட்டாரு " என்று கூற , டாக்டர் என்ன கூற போகிறாரோ என்ற ஒரு வித பதற்றத்துடன் அவரிடம் சென்றான் ...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top