Nilave ennidam nerungaathey 15

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹலோ நண்பர்களே ,
போன அத்தியாயத்துக்கு நீங்க குடுத்த கமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது , உங்களோட ஆதரவுக்கு நன்றி நண்பர்களே .
நிலவே என்னிடம் நெருங்காதே " வோட அத்தியாயம் 15 படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை பகிருங்கள் .

நிலவே என்னிடம் நெருங்காதே 15

12751182_1093540610705760_424934084_n.jpg

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து டாக்டர் வந்ததும் அனைவரும் என்னவோ எதோ என்று அவரின் அருகில் சென்றனர் , பதற்றத்துடன் டாக்டரின் அருகில் வந்த ஆஷிக் அவரிடம் எதுவும் கேட்கும் முன்பே , அவர்
" பேஷண்ட் இப்போ நல்லா இருக்காங்க உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை ஆனா இப்போதைக்கு அவங்க மயக்கத்துல தான் இருப்பாங்க அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துட்டு வாங்க ....
மயக்கம் தெளிய ரெண்டு மூணு மணிநேரம் ஆகும் , ரொம்ப நேரம் உள்ள இருக்காதீங்க .... நையிட் பேஷண்ட் கூட யாரவது ஒருத்தங்க ஸ்டே பண்ணுங்க " என்றவர் ...

ஆஷிக்கை தனியாக அழைத்து,

" அவங்க ஏற்கனவே மெண்டலி டிஸ்டர்பா இருக்காங்க அதனால அவங்க கிட்ட பேசும்போது பார்த்து பேசுங்க ...."

" ஓகே டாக்டர் நான் டிஸ்டர்ப் ஆகாம பார்த்துகிறேன் ... வேற ஹெல்த்க்கு எதுவும் பிரச்சனை இல்லையே " என்று தவிப்புடன் கேட்க ..

" இல்லை MR ஆஷிக் ஷீ இஸ் ஃபைன் டேக் கேர் " என்றார் ..

' ஷீ இஸ் ஃபைன் ' என்று மருத்துவர் கூறிய பிறகு தான் ஆஷிக்கிற்கு போன உயிர் மீண்டும் தன்னிடம் வந்தது போல நிம்மதி அடைந்தான் .

வேகமாக உள்ளே சென்று மயக்க நிலையில் இருக்கும் ஜியாவை தன் கண்களில் நீர்வழிய பார்த்து மகிழ்ந்தான் ,
"போன உசுரு வந்துருச்சு
உன்னை தேடி திருப்பி தந்துருச்சு
இது போல ஒரு நாளே வர வேணாம் இனி மேலே
நொடி கூட எட்டி இருக்காத
என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத"

அவனது கால்கள் அவளது அருகில் மெல்ல அவனை அழைத்து செல்ல , நேராக இருந்த அவளது இருகால்களையும் தன் நெஞ்சோடு பற்றிக்கொண்டு முத்தமிட்டான் , அவனது கரங்கள் மெல்ல அவளது நெற்றியை மெலிதாய் வருடியது , அவனது கண்களோ அவளது கையின் நரம்பின் வழியே ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருப்பதை பார்த்து மெல்ல கசிந்தது ....
அவனது இதழின் தீண்டலிலும் சரி அவனது விரல்களின் வருடலில் சரி அவனது பார்வையின் தீண்டலிலும் சரி , காமம் கலக்காத அதீத காதல் வெளிப்பட்டது , ஆஷிக் ஜியாமீது கொண்டுள்ள கலப்படமற்ற காதல் வெளிப்பட்டது ....
அவனது முத்தத்தின் அழுத்தம் அவனது அழுத்தமான காதலை வெளிப்படுத்தியது , அவனது ஐவிரலின் வருடல் ஜியா தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்தியது , ஆஷிக்கின் பார்வையில் தீண்டலை தாண்டி ஒரு வித தவிப்பு , கணப்பொழுதும் இனி உன்னை நான் நீங்கமாட்டேன் என்று அவன் உள்ளம் ஏங்கியதை வெளிப்படுத்தியது ...

இதை அனைத்தையும் வெளியில் இருந்து பார்த்த திவ்யாவின் கண்கள் தன்னையும் மீறி கசிந்தது , தனது சுயநலத்துக்காக ஜியாவின் வாழ்க்கையை பலி கொடுக்க பார்த்தோமே என்று அவரது உள்ளம் குமுறியது ...

அவரது வேதனையை உணர்ந்து கொண்ட ஹாஜரா ,

" நீங்க அழாதீங்க அதான் ஜியா ஆபத்துல இருந்து மீண்டு வந்துட்டாள்ல , வாங்க உள்ள போய் ஜியாவை பார்ப்போம் " என்றவர் சரண்யா ஆயிஷா ஆதர்ஷுடன் உள்ளே சென்றார்.

ஆதர்ஷ் ஆஷிக்கின் கைகளை ஆறுதலாய் பற்றி கொண்டு ,

" பீல் பண்ணாத எல்லாம் சரியாகிரும் " என்று ஒரு நண்பனாய் ஆறுதல் கூறினான் .

சில நொடிகள் கழித்து அங்கும் வந்த நர்ஸ் ," ரொம்ப கூட்டம் கூடாதீங்க , பார்துடீங்கன்னா கிளம்புங்க , யாரவது ஒருத்தர் பேஷண்ட் கூட இருந்தா போதும்.... யார் இருக்க போறீங்க " என்று சிறு கண்டிப்புடன் கேட்க...
" நான் தான் இருக்க போறேன் " என்று தன் கண்களை துடைத்தவாறே திவ்யா கூற ,சற்றென்று அவரை குறுக்கிட்ட ஆஷிக்,

" சித்தி , அதுவந்து ஆன்ட்டி நீங்க எதுக்கு சிரமம் பட்டுக்கிட்டு ஜியா கூட நான் ஸ்டே பண்றேன் .... சரண்யா தனியா இருப்பாள்ல "என்றவன் ஒருவித பதற்றத்துடன் திவ்யா என்ன கூறுவார் என்று அவரையே பார்க்க திவ்யா வழக்கத்துக்கு மாறாக ஆஷிக் மீது
எந்த வித கோபமும் கொள்ளாமல் ,

" இல்லை தம்பி நான் பார்த்துக்கறேன் .... சரண்யா பத்தி பிரச்சனை இல்லை " என்று தயக்கத்தை மறைத்தவாறு கூற ...
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
" நான் பார்த்துகுறேன்னே " என்று ஆஷிக் மீண்டும் கூற ...
கண்களில் தொனித்த தயக்கத்துடன் அவர் " சரியா இருக்காது பா " என்றதும் ...

" இல்லை ஆன்ட்டி ..." என்று ஆஷிக் மீண்டும் ஆரம்பிக்க அவனை இடைமறைத்த ஹாஜரா திவ்யாவின் சங்கடத்தை புரிந்து கொண்டவராய்

" அதான் அவங்க சொல்றாங்களா ஆஷிக் காலையில ஜியாவை பார்க்க வரலாம் " என்று மகனின் நிலையையும் புரிந்து கொண்டவராய் தன்மையோடு அவனுக்கு நிதர்சனத்தை புரியவைக்க அவர் முற்பட ... ஆஷிக் வந்த கோபத்தை உள்ளடக்கியவாறு இருவரையும் பார்த்து ...

" நீங்க என்னை உங்க பையன் ஆஷிக்கா பார்க்காதீங்க ... ஜியாவோட ஹஸ்பண்டா பாருங்க தப்பா தெரியாது ... அவளை பாருங்க இந்த நிலைமையில எப்படி என்னால அவளை விட்டுட்டு வர முடியும் ....
ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணும் பொழுது பேஷண்ட் உங்களுக்கு யாருன்னு கேட்டாங்க ... வைஃப்ன்னு சொன்னேன் ... என் மனசை புரிஞ்சிக்கோங்க " என்றவன் ..... தளர்ந்த குரலில் " ப்ளீஸ் " என்று பரிதாபமாய் கேட்க ...

" சரி தம்பி ஆனா எதுவும் தேவைன்னா எனக்கு " என்பதற்குள் ஆஷிக் ...

" நானே பார்த்துகிறேன் " என்று அவசரமாய் கூறியவன் பின்பு தன் பதற்றத்தை குறைத்துக்கொண்டு ,

" நான் பார்த்துகிறேன் , அதை மீறி எதுவும் தேவைன்னா நான் உங்களுக்கு போன் பண்றேன் " என்று கூறியவனிடம் ,

" பத்திரமா பார்த்துக்கோ பா " என்றவர் ஜியாவை கலக்கத்துடன் பார்க்க , திவ்யாவின் கைகளை பற்றிக்கொண்ட ஹாஜரா ,

"நீங்க கவலை படாதீங்க ஆஷிக் பார்த்துக்குவான் ... ராத்திரி ஆகிடுச்சு நானே உங்களை வீட்ல டிராப் பண்ணிறேன் " என்றவர் ஆஷிக்கிடம்

"ஜியாவை பார்த்துக்கோ "என்றவாறு அவனது தலையை பாசமாய் தடவிக்கொடுத்து விட்டு மூவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல ... ஆதர்ஷ் அவர்களுக்கு துணையாக அவர்களோடு சென்றான் .

அனைவரும் சென்ற பிறகு ஜியாவையே வைத்த கண்கள் வாங்காமல் பார்த்து கொண்டே , அவளோடு தான் பயணித்த அந்த அழகான தருணத்தை எண்ணி எறும்பாய் நகர்ந்த இந்த நொடிகளை சுகமாய் கடந்துகொண்டிருந்தான் .
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
பொழுது புலர சூரிய கதிர்களின் ஒளி பட மெல்ல மெல்ல மயக்கத்தில் இருந்து தன் கண்களை திறந்த ஜியா மெல்ல தன் கைகளை அசைக்க , கையின் மேல் நரம்பில் போட்ட ஊசியின் வலியால் 'ஆ ' கத்த , அவளது சத்தத்தால் தன் தூக்கத்தில் இருந்து விழித்தவன் , ஜியா தன் படுக்கையில் இருந்து எழும்ப முயற்சி செய்துகொண்டிருப்பதை பார்த்து சட்டென்று தன் நாற்காலியில் இருந்து எழுந்தவன் .

ஜியாவின் அருகில் வந்து

" ஜியா என்ன பண்ற நீ மெதுவா படு , உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு நான் செய்யிறேன் "என்றவனிடம்

" இல்லை நான் பார்த்துகிறேன் " என்றவள் அங்கிருந்து எழும்ப முயற்சி செய்ய ,

" இப்போ தான் முழுசா என் உயிர் என்கிட்ட வந்த மாதிரி இருக்கு " என்றவனை , தன் கண் கொட்டாமல் பார்த்தவளை , கண்டவனின் கண்கள் தானாய் கலங்க ,

அவளது உள்ளமோ மறைவாய் கலங்கியது .....

கண்கள் தொட்டு அவனது கன்னத்தின் வழியே வடிந்த கண்ணீரை தன் உள்ளங்கையில் அவள் ஏந்த , இருவரது விழியும் ஒருவரோடு ஒருவராக மூழ்க அங்கே மௌனமே வார்த்தையாகி போனது .

"போன உசுரும் வந்துருச்சு

உன்னவாரி அணைக்க சொல்லிருச்சு

இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்

உன நானும் ஒட்டி இருப்பேனே

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிரிப்பேனே

சேர்ந்து இருக்கும் உள்ளத்துல

துணை யாரு நமக்கு வெள்ளத்துல

உயிர் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது

நடந்தாலே அது சுகம் தானே

துணையாக நானும் வாருவேனே

சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே

ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்

நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே"

அவர்களது மோன நிலையை கலைக்கும் விதமாய் வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அவளது சித்தப்பா ஷங்கர் , ஜியாவிடம் சென்று தன் கண்கள் கலங்க ,

" ஏன் டா இப்படி பண்ணின உன் சித்தி சொன்னதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல , நான் இல்லாத நேரம் பார்த்து உனக்கு இப்படி ஒரு காரியம் பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லடா அவளுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்"

" சித்தப்பா ப்ளீஸ் அப்படியெல்லாம் சொல்லாதீங்க அவங்க மேல எந்த தப்பும் இல்லை , சித்தி மேல கோபம் படாதீங்க "

" இல்லடா அவ அப்படி பண்ணிருக்க கூடாது ,சரி நீயாவது சித்தப்பாக்கு ஒரு போன் பண்ணிருக்கலாம்ல ......
ஏண்டா இப்படி ஒரு காரியம் பண்ணின , இதை பண்றதுக்கு முன்னாடி ஒரு முறை கூடவா என்னை பத்தி நீ யோசிக்கல , என் அண்ணன் உன்னை என் கையில புடிச்சி குடுத்த அந்த நாள்ல இருந்து இந்த நாள் வர உன்னை என் பெத்த பொண்ணா தானே பார்த்துட்டு இருக்கிறேன் ...
அப்புறம் ஏண்டா இப்படி பண்ணின , எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிருக்கலாமே " என்று கதறி அழுத்தவரை பார்த்து ஜியாவும் அழ , உடனே ஆஷிக் ஷங்கரின் தோளை பற்றி ,

" அங்கிள் ப்ளீஸ் எமோஷனல் ஆகாதீங்க , அதான் ஜியா நமக்கு உயிரோட கிடைச்சிட்டாலே அதுவே பெரிய விஷயம் நடந்த எல்லாத்தையும் கெட்ட கனவா நினைச்சி மறந்திருங்க , ஜியா கிட்ட இப்போதைக்கு இதை பத்தி பேசவேண்டாம் அவள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும் " என்ற ஆஷிக்கின் வார்த்தையிலும் அவனது கண்களிலும் ஜியா மீது எவ்வளவு அக்கறை வைத்துள்ளான் என்பது அவருக்கு புரிய , மெல்ல ஜியாவின் தலையை கோதிவிட்டவாறே, அவர் அவளிடம் .....

" நீ அழாத டா எதை நினைச்சும் மனசை போட்டு குழப்பிக்காத எல்லாம் சரி யாகும் " என்றவர் ஆஷிக்கின் கரம்பிடித்து

" ரொம்ப நன்றி என் பொண்ணோட உயிரை காப்பாத்தினத்துக்கு சரியான நேரத்துக்கு அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்திருக்கீங்க , இதுக்கு என்ன கைம்மாறு செய்ய போறேன்னு எனக்கே தெரியலை " என்று கண்ணீர் ததும்ப கூற அவரது கரத்தை நன்கு பற்றியவன் உதட்டில் சிறு புன்னகையுடன் ,

" நன்றி சொல்லி என்ன மூணாவது மனுஷனா ஆக்காதீங்க , இது என்னோட கடமை , ஜியா இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால கற்பனை கூட பண்ணி பார்க்க முடியலை " என்றவனின் கண்களும் கலங்கியது ,

அவனுக்கு பதிலாய் தன் தலையை மட்டும் லேசாய் அசைத்து அவனது தோளை தட்டியவர் ," ராத்திரி முழுக்க நீங்க தான் இருந்திருக்கீங்க , அது தான் நான் வந்துட்டேன்ல நான் பார்த்துகிறேன் , நீ வீட்டுக்கு கிளம்புங்க நீங்க ரொம்ப சோர்வா இருக்கிறீங்க " என்று அவர் கூற

" அதெல்லாம் எனக்கு ..." என்று துடங்குவதற்குள் உள்ளே வந்த ஆதர்ஷ் ஜியாவிடம் நலம் விசாரதித்து விட்டு , ஆஷிக்கிடம் ,

" வாடா அதான் அங்கிள் வந்துட்டாங்கல்ல நாம கிளம்பலாம் " என்றவன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு ஆஷிக்கின் பதிலை கூட கேட்க்காமல் அவனை அங்கிருந்து அழைத்துக்கொண்டு வெளியே வந்தான் .வெளியே வந்ததும் ஆஷிக் ,

" டேய் ஏண்டா என்னை கூட்டிட்டு வர "
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
" ஏண்டான்னா என்ன அர்த்தம் , அவங்க வீட்ல எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் உனக்கு என்ன டா அங்க வேலை "

" ஜியா ஹாஸ்பிடல்ல இருக்கும் போது நான் அங்க இருக்க வேண்டாமா "

" என்னன்னு சொல்லி அங்க இருப்ப ???என்ன உரிமையில இருப்ப ??? அவருக்கு என்ன பதில் சொல்லுவ??? நேத்து நைட் சொன்னீயே ஐஞ்சி வருஷம் லவ் பண்ணிருக்கேன் ... ஜியாவை நான் என் மனைவியா தான் பார்க்கிறேன்னு அதை சொல்ல போறியா ... சொல்லுடா "

" ஆமா டா அது தான் உண்மை , அவ என்ன விரும்புறா எனக்காக சூசைட் வர போயிருக்கா , இன்னும் என்னடா உரிமை வேண்டிருக்கு ,.... ஏற்கனவே அவங்க சித்திக்கு தெரியும் , இப்போ அவ சித்தப்பாவுக்கு புரிஞ்சிருக்கும் ..... எல்லாரும் பெரியவங்க இதுகூடவா புரிஞ்சிக்காம இருப்பாங்க நான் ஜியா கூட இருக்கேன் , நீ கிளம்பு " என்று கிளம்பியவனை தடுத்த ஆதர்ஷ் ,
" ஆஷிக் , புரியாம பேசாத என்ன தான் அவங்களுக்கு உன்னோட லவ் மேட்டர் தெரிஞ்சாலும் .... உன் வீட்ல இருந்து பெரியவங்க போய் பேசுற வரைக்கும் அவங்க நீ ஜியாகிட்ட க்ளோஸ் ஆகுறத அனுமதிக்க மாட்டாங்க , முதல்ல உன் வீட்ல பேசு உன் அம்மா அப்பாவை அவங்க வீட்ல போய் பேச சொல்லி ஒரு முடிவு எடுக்க சொல்லு அதுதான் நல்லதுன்னு என்னக்கு தோணுது , ஒரு உறுதி பண்ற வரைக்கும் நீ கொஞ்சம் அடங்கி இரு ... "

" அப்போ இன்னைக்கே பண்ணிரலாம் " என்று எந்த வித சலனமும் இல்லாமல் கூறிய ஆஷிக்கை அடிப்பதா ?? முறைப்பதா ?? என்று கடுப்பானவன் ... கோபத்தில் சீரியவாறே

" நீ என்ன மட பயலா ??? சொல்லிகிட்டே இருக்கேன் கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம ஜியா ஜியான்னு கடுப்ப கிளப்பிட்டு இருக்க ... எல்லா விஷயத்துலையும் ஏண்டா அவசர படுற??? , ஜியா முதல்ல வீட்டுக்கு வரட்டும் ....
அப்புறம் மத்த விஷயங்களை பத்தி பேசிக்கலாம், ஆனா இதெல்லாத்துக்கும் முன்னாடி நீ ஜியாகிட்ட பழைய விஷயங்கள் எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வா ....
அவ மனசுல உள்ளே எல்லா சந்தேகத்தையும் க்ளீயர் பண்ணிரு .
ஜியா உன்னை விரும்புறது க்னபார்ம் ஆகிடுச்சு ஆனா ஏன் அவ உன்னை விட்டு போனா ? அது இன்னும் கேள்வியா தானே இருக்கு எல்லாத்தையும் சால்வ் பண்ணு இனிமே உங்களுக்குள்ள பிரிவே வர கூடாது அதுக்கு தான் சொல்றேன் " என்று ஆதர்ஷ் அனைத்தையும் தெளிவாக எடுத்து கூற , அதற்க்கு ஆஷிக் பதில் ஏதும் கூறாமல் இருக்க ,

" என்ன பதிலே வரல " என்ற ஆதர்ஷிற்கு அவன் கூறியதிற்கு ஒப்புதல் கூறுபவன் போல தன் தலையை அசைத்தவன் ," நீ சொல்ற மாதிரியே பண்றேன் டா " என்று கூறிவிட்டு ஆதர்ஷுடன் தன் இல்லம் திரும்பினான் ஆஷிக் .
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#8
நாட்கள் உருண்டோட , ஒருநாள் ஹாஜரா மெல்ல தயங்கி தயங்கி தன் லேப்டாப்பில் மூழ்கிருந்த தன் கணவன் அருந்துவதற்கு தேநீர் கொடுத்தவாறே ,

" என்னங்க வேலையா இருக்கீங்களா " என்று ஆரம்பிக்க

" இல்ல தூங்கிட்டு இருக்கேன் ... பார்த்தா எப்படி இருக்கு வேலையா தான் இருக்கேன் பின்ன நான் என்ன உன்னையும் உன் புள்ளையும் மாதிரி வெட்டி வேலை பார்த்துட்டு அதை சாதனையா சொல்றவன்னு நினைச்சியா .... நான் ஒருமணிநேரத்துல லட்சத்தை சம்பாதிக்கிறவன் அதெல்லாம் உனக்கெங்க தெரிய போகுது " என்று அவர் ஒருவரி கேள்விக்கு ஐந்து வரியில் விடையை நெருப்பாய் அள்ளி தெளிக்க

'இதுக்கே இப்படி பேசுறாரு ஆஷிக் விஷயத்தை எப்படி சொல்றது ' என்று தன் மனதிற்குள் புலம்பிய ஹாஜரா இனிமேல் வேலைக்காது என்றவராய் அங்கிருந்து செல்ல போக ,

" ஏய் நில்லு , உங்கிட்ட கொஞ்சம் பேசணும் " என்று தடுத்த அஸாத் , தன் லேப்டாப்பில் மூழ்கியவாறே ,

" அந்த பொண்ணு யாரு டி " என்று மிரட்டும் தோரணையில் கேட்க , திடுக்கிட்ட ஹாஜரா தயங்கியவாறே ,

" யாரை கேட்குறீங்க " என்று கேட்க லேப்டாப்பை சட்டென்று மூடியவர் ,தன் நாற்காலியில் இருந்து எழும்பி ,

" என்ன யாரை கேட்குறீங்களா , ஓங்கி விட்டேன் அவ்வளவு தான் பார்த்துக்கோ உனக்கு நான் யாரை கேட்குறேன்னு தெரியாது , எதுவும் கேட்க்காம இருக்கேன்னு எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்காத "

" எனக்கு நீங்க சொல்றது புரியலை "

" ஏய் , உன் பையன் எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்குனானே அவளை பத்தி தான் சொல்றேன் "

" ஜியா பத்தி சொல்றீங்களா "

" என்ன ரொம்ப சந்தோஷமா சொல்ற மாதிரி இருக்கு "

" அப்படி இல்லங்க "

" என்ன மாதிரியான பொண்ணு கூடலாம் உன் பையனை பழக விட்ருக்க டி "

" ஜியா நல்ல பொண்ணுங்க "

" சர்டிபிகேட் குடுக்கிற அப்போ உனக்கு ஏற்கனவே அவன் விஷயம் தெரிஞ்சிருக்கு "

" இல்லங்க "

" இங்க பாரு உன் பையன் கிட்ட அவளை விட்டு தள்ளியே இருக்க சொல்லு அவங்க ஸ்டேட்டஸ் எங்க?? நம்ம ஸ்டேட்டஸ் எங்க ?? " என்று கடுமையாக கேட்க

" ஆஷிக் அவளை ரொம்ப விரும்புறான்ங்க " என்று மெல்லமாய் மூணு முணுத்தார்

" உன் பையன் நான் செத்து போணும்ன்னு ரொம்பவே விரும்புறான் !! என்ன செத்து போட்டா ?? "என்று இறுகிய குரலில் அழுத்தத்தோடு கேட்க

" என்னங்க இப்படியெல்லாம் சொல்றீங்க , "

" இங்க பாரு உன்கிட்ட பேச எனக்கு நேரம் இல்லை ஆஷிக்கோட கல்யாணம் இந்தியாலையே பெரிய பணக்கார வீட்டு பொண்ணுகூட தான் நடக்கும் .....

அதனால எவ்வளவு காதலிக்கணுமோ அதெல்லாம் ஆயிஷாவோட கல்யாணத்துக்கு முன்னாடியே காதலிச்சிக்க சொல்லு , ஆயிஷா கல்யாணம் முடிஞ்சதும் அவனுக்கு தான்.... பொண்ணு கூட பார்த்துட்டேன் " என்று அஸாத் கூறிய மறுநொடி , எதிர்முண்ணையில் இருந்து

" முடியாது " என்ற வார்த்தை துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாவை போல அழுத்தமாய் வர , வார்த்தை வந்த திசையை நோக்கி எட்டிப்பார்த்தவர் ... அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த ஆஷிக்கை பார்த்து முறைக்க ...

அவன் தன் பேண்டின் இரு பாக்கெட்டிற்குள்ளும் கையை விட்டவாறே உள்ளே நடந்து வந்து அவர் முன்னால் இருந்த படுக்கையின் மேல் அமர்ந்து கால் மீது கால் போட்டவாறு ,

" முடியாதுன்னு சொன்னேன் " என்னபண்ணுவீங்க என்பது தன் புருவம் உயர்த்தி பார்க்க ,

அவனை வெறித்து பார்த்தவாறு " இதுக்கு என்ன அர்த்தம் "என்று அஸாத் கேட்க

" முடியாதுன்னு அர்த்தம் " என்று ஏளனமாய் புன்னகைத்தான்

" நமக்கு நிகரான ஸ்டேட்டஸ்ல உள்ள பொண்ணு , நீ பாரு உனக்கு கண்டிப்பா புடிக்கும் "

" உங்களையே எனக்கு புடிக்கல , ஏன் உங்க பேர என் பேருக்கு பின்னாடி சேர்த்துகிறதே எனக்கு எரிச்சலா இருக்கு ... இதுல நீ பார்க்கிற பொண்ண??" என்று ஏளனமாய் சிரிக்க

" ஆஷிக் "என்று கர்ஜித்தவரை மீண்டும் எரிச்சல் ஊட்டும் விதமாய் ,

" அவ்வளவு தான ஐ வாண்ட் மோர் " என்று நக்கலடிக்க

" ஹாஜரா உன் பையனை அமைதியா இருக்க சொல்லு " என்று தன் மனைவியை பார்த்து கடிந்து கொள்ள ....

ஹாஜரா ஆஷிக்கிடம் ," அப்படியெல்லாம் பேசாத ஆஷிக் "

" மா " என்று ஒற்றை வரி கூறியவன் , அஸாத்திடம் ,அவரை போல பாவனை செய்து ,

" 'ஹாஜரா உன் பையனை அமைதியா இருக்க சொல்லு இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ' என்று சிரித்தவன் ,

" அம்மா உண்மையாவே இவருக்கு என்ன பண்ணனும்ன்னு தெரியாது என்னை ஒன்னும் பண்ண முடியலை அதனால உங்க கிட்ட கோபத்தை காட்டுறாரு "

" ஆஷிக் நீ கொஞ்சம் சும்மா இரு " என்றவர் தன் கணவரிடம் ,

"ஏங்க அவன் சொல்றத மனசுல வச்சிக்காதீங்க , ஜியா ரொம்ப நல்ல பொண்ணு இவனும் விரும்புறான் பேசாம " என்று அவர் கூறி முடிப்பதற்குள் ,

" என்னடி டி சொல்ற " என்று அவர் தன் மனைவியின் மீது கை ஒங்க ஓங்கிய கையை குறுக்கே வந்து பிடித்த ஆஷிக் ,

"இனிமே என் அம்மா மேல கையை நீட்டுநீங்க அவ்வளவு தான் பார்த்துக்கோங்க " என்றவனிடம்

" உனக்கு ஏண்டா புரியமாட்டிக்குது நான் பண்றது எல்லாமே உன் நல்லதுக்கு தான் நம்ம தகுதிக்கு பொருத்தமான பொண்ணை நீ சொல்லிருந்தீன்னா நானே உன் கல்யாணத்தை நடத்திருப்பேன் ...
நீ சொல்ற பொண்ணு நம்ம கால் தூசிக்கு வருவாளா என் மேலை உள்ள கோபத்தை தூக்கி போட்டுட்டு கொஞ்சம் பொறுமையா யோசி உனக்கே புரியும் ...
நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்னு நான் நீயும் ஆயிஷாவும் நல்லா இருக்கனும்ன்னு தான் இதெல்லாம் பண்றேன் , ஒரு பொறுப்புள்ள அப்பா என்ன பண்ணுவாரோ அது தான் நான் பண்றேன் "

" பொறுப்புள்ள அப்பா நீங்க " என்று வாய்விட்டு சிரித்தவன் " ஆயிஷாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களே .... இத தான் பொறுப்புள்ள அப்பான்னு சொல்றீங்களா ... ஒன்னு சொல்லட்டா நீங்க பண்ண போறதுக்கு பேரு கல்யாணம் இல்லை உங்க பொண்ணை வச்சி பண்ற பிஸ்னஸ் டீல் .... ஆயிஷாவுக்கு மட்டும் அந்த பையனை புடிக்காம இருந்திருக்கட்டும் அவங்களை வீட்டுக்கே வர விட்ருக்க மாட்டேன் அவளுக்கு புடிச்சிருக்குனு சொன்ன ஒரே காரணத்துக்காக தான் நான் அவங்க கிட்ட போய் பேசுனேன் . " என்று கடுமையுடன் கூற

" ஆமா பிஸ்னஸ் டீல் தான் ஆனாலும் நான் ஒன்னும் ஏதோ பிச்சைகாரனுக்கு என் பொண்ணை பேசலை .... நல்ல வசதியான வீட்ல தான் அவளுக்கு பிக்ஸ் பண்ணிருக்கேன் இங்க என் பொண்ணு ராஜகுமாரின்னா அங்க அவ மகா ராணியா இருப்பா ...

டெல்லி பங்களூர் சென்னையின்னு பெரிய பெரிய சிட்டியில சமீரோட அப்பா ஹோட்டல் பிஸ்னஸ் பண்றாரு , சமீர் ரொம்ப நல்லவன் அவன் அப்பா பேச்சை தட்ட மாட்டான் ... டெல்லில சொந்தமா ஹாஸ்பிடல் நடத்திட்டு வரான் , உன்னை மாதிரி பெத்த தகப்பனை மதிக்காம என் பேச்ச கேட்க்காம மாசத்துக்கு இன்னொருத்தன் கையை எதிர்பார்க்கல "

" ஆமா நான் மாசத்துக்கு இன்னொருத்தர் கையை எதிர்பார்க்கிறவன் தான் ஆனா நான் யாரையும் ஏமாத்தல ..... சொந்தமா உழைச்சி அதுல நிம்மதியா வாழ்றேன் , என் வாழ்க்கையை எனக்கு புடிச்ச மாதிரி வாழ்றேன் ...
எனக்கு உங்க அளவுக்கு பிசினஸ் பண்ண தெரியாம இருக்கலாம் , ஆனா ஒரு அம்மாவுக்கு நல்ல புள்ளையா இருக்க தெரியும் ..... ஒரு தங்கச்சிக்கு நல்ல அண்ணனா இருக்க தெரியும் .. எல்லாத்துக்கும் மேல எனக்கு வரபோற மனைவிக்கு நேர்மையா இருக்க தெரியும் ... அவளை மரியாதையை நடத்த தெரியும் ...என் குழந்தைங்களுக்கு நல்ல அன்புள்ள அப்பாவா இருக்க தெரியும் ,
அப்புறம் என்ன சொன்னீங்க சமீர் அவன் அப்பாக்கு கீழ் படியிரான் ...
அவன் அப்பா கட்டுன மனைவி கூட இருக்கும் போது இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலையே ....
கல்யாண வயசுல புள்ளைங்க இருக்கும் பொழுது அவங்க வயசுல உள்ளே பொண்ணு கூட பிஸ்னஸ் ட்ரிப்ன்னு சொல்லிட்டு ஊர சுத்தலையே " என்றவுடன் கோபமுற்ற அஸாத் , ஆஷிக்கின் சட்டை காலரை பற்றி இழுக்க , கோபமுற்ற ஆஷிக் அவரது இரு தோள்களையும் பிடித்து தள்ளிவிட , தடுமாறியவரை ஹாஜரா தங்கி புடிக்க அவரை தட்டிவிட்டவர் ,

" பார்த்தியா டி உன் புள்ளை பண்ற வேலைய "

"ஆஷிக் இதோட விடு டா "

"அம்மா நீங்க சும்மா இரு "

" என்ன புள்ளை பண்ற வேலையா , முதல்ல நீங்க என்னைக்காவது நல்ல அப்பனா எனக்கு இருந்திருக்கிறியா ?? இல்லை !! என் அம்மாக்கு நல்ல கணவனாவாவது இருந்திருக்கியா??? இல்லை . அப்போ நான் மட்டும் ஏன் உங்களுக்கு புள்ளையா இருக்கணும் , என் உடம்புல உங்க ரத்தம் ஓடுதுன்னு நினைக்கும் போதே எனக்கு அருவருப்பா இருக்கு , நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க ..
என் அம்மா மேல இனிமே கை வச்சீங்க வச்ச கைய உடைச்சி இன்னொரு கையில குடுத்துட்டு போயிட்டே இருப்பேன் .... கல்யாணம் பண்றது காது குத்துறதெல்லாம் ஆயிஷாவோட நிப்பாட்டிக்கோங்க என் வாழ்க்கையில ஏதாவது முக்கை நுழைச்சிங்க அவ்வளவு தான் ......
அப்புறம் ஜியாவை நான் லவ் பண்றேன் அவளை தான் நான் கல்யாணம் பண்ணுவேன் இதுல உங்க முடிவெல்லாம் எனக்கு தேவையே இல்லை புரியுதா ...
இந்த மேல கைவைக்கிற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் சரியா .
முதல்ல நல்ல புருஷனா நல்ல அப்பாவா நல்ல குடும்ப தலைவனா நல்ல மனுஷனா நீங்க மாறுங்க அப்போ வந்து நான் எப்படி பட்ட புள்ளைன்னு சொல்லுங்க " என்றவன் அங்கிருந்து செல்ல ...

" அவன் கோபத்துல சொல்றான் நான் அவனை மன்னிப்பு கேட்க சொல்றேன் " என்ற ஹாஜராவிடம்

" அவனை நல்லா எனக்கெதிரா பேச வச்சிட்டு இப்போ நடிச்சிட்டு இருக்கியா ... நான் நல்ல புருஷன் இல்லையா ..
உனக்கு எனக்கு மனைவியா இருக்கவே தகுதி இல்லை " என்று இறுக்கமாக அவரை பார்த்து ..." வெளியிலே போ " என்று அறையே அலறும் அளவிற்கு கத்த ... ஹாஜரா அழுதுகொண்டே அங்கிருந்து சென்றார் ..
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top