ஹலோ நண்பர்களே ,
போன அத்தியாயத்துக்கு நீங்க குடுத்த கமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது , உங்களோட ஆதரவுக்கு நன்றி நண்பர்களே .
நிலவே என்னிடம் நெருங்காதே " வோட அத்தியாயம் 34 படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை பகிருங்கள் .
நிலவே என்னிடம் நெருங்காதே 34
இத்தனை நாட்களாக விடாமல் வீசிய புயல் ஓய்ந்ததில்..... வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்தனர் ... ஆஷிக்கும் ஆதர்ஷும் எதையோ பற்றி பேசி சிரித்து கொண்டிருக்க ...
"என்னடா சிரிப்பு சத்தம் எல்லாம் பயங்கரமா இருக்கு என்ன விஷயம் " என்றவாறு வந்த ரோஹித்திடம் ..
ஆதர்ஷ் புன்னகையோடு
" இல்லை எனக்கு குழந்தை பிறந்தா ஆஷிக்கும் நீயும் என்ன முறை வருவீங்கன்னு கேட்டேன் இவன் சொன்னான் ...நீ பெரியப்பா ... அவன் சித்தப்பான்னு சொன்னான் அதான் சிரிப்பா இருந்துச்சு " என்று சொல்ல .. கடுப்பான ரோஹித்
" ஆமா டா உன் குழந்தைக்கு நான் பெரியப்பா ...இவன் குழந்தைக்கு நான் சித்தப்பா ... தியா குழந்தைக்கு நான் மாமா அப்புறம் மேல சொல்லுங்க ...ஆனா கடைசி வரைக்கும் என்னை அப்பாவா மட்டும் ஆக விட்றாதீங்க " என்று முணுமுணுக்க ...
" அதெல்லாம் ஆடி போய் ஆவணி வந்தா நீ டாப்பா ஆகிடுவ" என்று ஆதர்ஷ் வம்பிழுக்க
அங்கு எதற்ச்சையாக வந்த சரண்யா வாய்விட்டே சிரித்து விட ... அவ்வளவு தான் போயும் போய் இவ முன்னாடி அசிங்க பட்டுட்டோமே 'ச்ச ' என்ன நினைச்சிருப்பா என்று எண்ணியவன் ..தன்னை பார்த்து சிரித்து கொண்டிருந்த ஆதர்ஷையும் ஆஷிக்கையும் பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து செல்ல ...சரண்யாவுக்கு என்னவோ போல் ஆனது...
அவளது முக மாற்றத்தை உணர்ந்து கொண்ட ஆஷிக்
" ஏய் சரண் அவன் அப்படி தான் ...சட்டுன்னு கோபம் வரும் ஆனா சரியாகிருவான் ....அவனோட கோபம் பால் பொங்குற மாதிரி ரெண்டு செகண்ட் கூட தாக்கு புடிக்காது ... "
" சரி மாம்ஸ் நான் சும்மா தான் இங்க வந்தேன் நீங்க பேசிட்டு இருங்க " என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றவளின் விழிகள் ரோஹித்தை தேடி வட்டமிட ...
ஓரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு அலைபேசியை பார்த்து கொண்டிருந்தவனின் அருகில் ஒருவித தயக்கத்தோடு சென்றவள் ...
" ஹுக்கும் " என்று செரும ... எட்டிப்பார்த்தவன் அவளை கண்டதும் அங்கிருந்து செல்ல போக ...
" ஹலோ ..." என்று அவனை அழைக்க .... அவள் பக்கம் திரும்பிப்பார்த்தவன் ... " என்ன " என்று கேட்க ..
" சாரி நான் வேணும்னே சிரி..." என்று அவள் மேலும் தொடர்வதற்குள்
" இட்ஸ் ஓகே " என்றவன் அங்கிருந்து செல்ல ...
" ஒரு நிமிஷம் " என்று அவள் அவனை மீண்டும் அழைக்க ...
" என்ன " என்று மீண்டும் புருவம் உயர்த்தியவனிடம் ..
" தேங்க்ஸ் ...அக்காக்கு ஹெல்ப் பண்ணினத்துக்கு " என்று தன் கரங்களை பிசைந்தவளை பார்த்து லேசாய் தன் உதட்டுக்கு வலிக்காமல் புன்னகைக்க .... மேலும் தொடர்ந்த சரண்யா அவனிடம்
" எனக்கு புரியுது உங்க கஷ்டம் ..இவ்வளவு வயசாகியும் உங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகலைன்னா கஷ்டமா தான் இருக்கும் " என்றதும் ...கடுப்பானவன் ஒருவித கோபத்தோடு அவள் அருகில் வந்து
" என்ன வயசானவனா ...என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு " என்று தன் கைகளை உயர்த்தி கொஞ்சம் கோபமும் எரிச்சலும் கலந்தவாறு கேட்க ...
திடிரென்று அவன் நெருங்கி வந்து கணீர் குரலில் அப்படி கேட்டதும் திடுக்கிட்டவள் என்ன சொல்வதென்று விளங்காமல்
" சாரி சாரி ... நான் அந்த அர்த்தத்துல சொல்லல ... நீங்க அழகா தான் இருக்கீங்க " என்று மிரண்டு போய் பார்த்தவளிடம்
" அது என்ன ' தான் ன்னு ' அழுத்தி சொல்ற ..." என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்க ...
" இல்லை அழகா தான் இருக்கீங்க " என்று அவள் தன் தலையை ஆட்டியவாறே அவசரமாக கூற ... அவளது முக பாவம் அவனை அறியாமலே அவனுக்கு புன்னகையை தர ... சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவன் ...
"என்ன " என்று தன் புருவம் உயர்த்தி கேட்க ..
" என்கூட ஒரு கப் காஃபி சாப்பிடறீங்களா " என்று தன் மனதில் உள்ளதை அவள் வாய்விட்டு கேட்டவள் ...அவன் என்ன சொல்ல போகிறான் என்று ஒருவித தயக்கத்தோடு நிற்க ...அவளது முக பாவத்தை ரசித்தவன் ... ஒரு வித தீவிரமான முகத்துடன்
" என் அப்பாகிட்ட சொல்லிருவேன் " என்று சொல்ல ... ரோஹித் தன்னை சீண்டுகிறான் என்பதை அறிந்த சரண்யா ...
" உங்க அப்பாக்கெல்லாம் எனக்கு பயம் இல்லை கேப்டன் " என்று தன் புருவம் உயர்த்தி பதிலுக்கு அவள் கேலி செய்ய .. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்...

Last edited: