Nilave ennidam nerungaathey 36 Final

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹலோ நண்பர்களே ,
போன அத்தியாயத்துக்கு நீங்க குடுத்த கமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது , உங்களோட ஆதரவுக்கு நன்றி நண்பர்களே .
நிலவே என்னிடம் நெருங்காதே " வோட அத்தியாயம் 36 படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை பகிருங்கள் .

நிலவே என்னிடம் நெருங்காதே 36

images (7).jpg
இரெண்டு வருடங்கள் இன்பமாய் கடந்த நிலையில் .... ஆஷிக் ஜீயாவின் வாழ்க்கையில் ....

" நெமி நெமி ... நானே சொல்றேனே நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க "

" ஹாய் ஃப்ரண்ட்ஸ் நான் தான் ஜியா ..உங்களோட அழு மூஞ்சு ஜியா ...
எல்லாரையும் அழுதே கடுப்பாக்கிட்டேன்ல ... உங்களுக்கு ஒண்ணு தெரியுமா இப்போ எல்லாம் நான் அழுறதே இல்லை ....எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் ...

அதெல்லாத்துக்கும் காரணம் என் ஆஷிக் ... ஆஷிக் மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்கிறதுக்கு நிஜமாவே நான் குடுத்து வச்சிருக்கணும் ...

அதுக்காக நான் பழசை பத்தி யோசிக்கிறதே இல்லன்னு சொல்ல முடியாது ...ஆனா எப்போ எல்லாம் நான் யோசிக்கிறனோ அப்போ எல்லாம் என் ஆஷிக் என்னை இறுக்கமா கெட்டி புடிச்சுக்குவான் ...
தூங்கும் பொழுது கூட என்னை கெட்டி புடிச்சிட்டு தான் தூங்குவான் ..

ஒவ்வொரு நாளும் என்னை ஸ்பெஷலா பீல் பண்ண வைக்க அவனால தான் முடியும்
அவனுக்காகவும் அவன் காதலுக்காகவும் இன்னும் எத்தனை வருஷம் வேணும்னாலும் அவன்கூட நான் வாழ்வேன் .

சின்ன வயசுல நம்ம எல்லாருக்கும் நிலான்னா ரொம்ப பிடிக்கும் .. அது நாம எங்க போனாலும் நம்மளையே சுத்தி சுத்தி வரும் பொழுது ...நிலா நமக்கு தான் சொந்தம்ன்னு நினைச்சு ரொம்ப சந்தோஷ படுவோம் ...

என்னைக்காவது ஒருநாள் அதை நெருங்கி தொட்டு பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை படுவோம் ...

ஆனா நாம வளர்ந்த பிறகு தான், நாம்மளால நிலவ நெருங்க முடியாது ..நிலவாலையும் நம்மள நெருங்க முடியாது என்கிற நிதர்சனத்தை புரிஞ்சுக்குவோம் ...

என்னோட காதல் கூட அப்படி தான் ... என் காதல நான் உணர்ந்த நேரம் நான் ரொம்ப சந்தோஷ பட்டேன் ... முதல் முதல்ல நிலவ பார்த்து சந்தோஷ படுற குழந்தையை போல நானும் காதலிச்ச நேரம் அவ்வளவு சந்தோஷமா இருந்தேன் ... என் வாழ்க்கையில எல்லாமே கிடைச்ச மாதிரி நான் உணர்ந்தேன் ...

அதுக்கப்புறம் நடந்த கசப்பான நிகழ்வுகள் என் மனசை ரொம்பவே காயப்படுத்திடுச்சு இனிமே என் வாழ்க்கையிலே காதல் திரும்ப கிடைக்குமா அப்படியே கிடைச்சாலும் என்னால அதை அனுபவிக்க முடியுமான்னு நான் ரொம்ப கவலையா இருந்தேன் ...

ஆனா கவலை எல்லாத்தையும் சரி பண்ணினது என் ஆஷிக் ... அந்த நிலவ வேணும்ன்னா என்னால நெருங்க முடியாம இருக்கலாம் ஆனா என் நிலவு என் காதல் என் ஆஷிக் என் கூடவே தான் இருக்கான்"

" என்ன நம்ம ஸ்டோரி தான் போயிட்டு இருக்கா "


"ஆமா "

" போதும் டி அவங்களுக்கு போர் அடிக்க போகுது "

" அதெல்லாம் அவங்களுக்கு அடிக்காது , ஆஷிக் ' நிலவே என்னிடம் நெருங்காதே ' நம்ம கதைக்கு இந்த தலைப்பு சரியா இருக்கும்ல .. நான் கூட இப்படி தானே நெருங்காத நெருங்காதன்னு சொல்லிட்டு இருந்தேன் "

" ஏய் அதென்ன நெருங்காதே "

" நிலவ சொன்னேன் ... உன்னை சொல்லல ..."

" அதுவும் சரி தான் அதான் நான் இருக்கனே "

" டேய் ஷேவ் பண்ணாம என்னை ஹக் பண்ணாதான்னு எத்தனை தடவ சொல்றது ... "

" நேத்து தான் பண்ணினேன் செல்லம் ... "

" ம்ம் கூச்சமா இருக்கு "

" சரி என்னைசொல்றா என் ஏஞ்சல்"

"அப்பா அம்மாவை டிஸ்டர்ப் பண்ணாதிங்கன்னு சொல்றா "

" அப்படியா சொன்னா "

" என்னடி இப்படி உதைக்கிறா .... "

"ஆமா டா நீ பக்கத்துல வந்தாலே உதைக்கிறா ... கைய கால வச்சிட்டு சும்மா இரு "

" சரி சரி ஒன்னும் பண்ணல சீக்கிரம் கீழ வா ...
பாய் ஃப்ரண்ட்ஸ் ,
ஐ லவ் யு டி பொண்டாட்டி "


" ஆஷிக் குத்துது, என் கிட்ட அடிவாங்க போற ... பாருங்க அவனை இன்னைக்கு நான் அவனை சும்மா விட போறதில்ல ...
அதுக்கு முன்னாடி உங்க எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ் என்னோட எல்லா இன்ப துன்பத்துலையும் என்கூடவே இருந்ததுக்கு ..
அப்புறம் எனக்கு இன்னும் ரெண்டு மாசத்துல குழந்தை பிறக்க போகுது ... நானும் ஆஷிக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்...
ஆஷிக் பொண்ணுன்னு சொல்றான் வீட்ல எல்லாரும் பையன்னு சொல்றாங்க ...

என்ன பேரு வைக்கிறதுனு தெரியலை நீங்க ஒரு பேரு சொல்லுங்களேன் ...

பாய் ஃப்ரண்ட்ஸ் டேக் கேர் . "
 
Last edited:

Advertisements

Latest updates

Top