Nilave ennidam nerungaathey 4

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹலோ நண்பர்களே ,
போன அத்தியாயத்துக்கு நீங்க குடுத்த கமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது , உங்களோட ஆதரவுக்கு நன்றி நண்பர்களே .
நிலவே என்னிடம் நெருங்காதே " வோட அத்தியாயம் 4 படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை பகிருங்கள் .

நிலவே என்னிடம் நெருங்காதே 4
Picture1.jpg


பப்பில் டிஜேவின் இசைக்கேற்ப இளம் பெண்கள் ஆண்கள் என்று இருபாலரும் தங்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து ஆடிக் கொண்டிருக்க ஆஷிக்கும் தனது பெண் தோழியுடன் ஆடிக் கொண்டிருந்தான் .

ஆதர்ஷ் தனியே ஒரு நாற்காலியில் அமர்ந்து ஒரு கிளாசில் மதுபானத்தை மெல்ல மெல்ல
அருந்தியாவாறே தன் மொபைலில் மூழ்கி இருந்தான். அப்பொழுது அவனருகே வந்து அமர்ந்த ஒரு பெண் தன்னை அவனுக்கு அறிமுகப்படுத்திகொண்டு அவனிடம் பேசிக்கொண்டிருக்க , அவனும் அவளுடன்
பேசிக் கொண்டிருந்தான் .
அப்பொழுது ஆஷிக்கின் அலைபேசி ஒலிக்க , அதில் காவ்யா என்ற பெயர் வர ஆஷிக் பிசியாக ஆடிக் கொண்டிருப்பதை பார்த்தவன் ,தனக்குள் ,
" போனை ஏண்டா என்கிட்ட தர இத்தோட சுமார் பத்து தடவை இந்த காவ்யா கால் பண்ணிட்டா , உன்னை என் நண்பனா வச்சிட்டு நான் என்னவெல்லாம் சமாளிக்க வேண்டியதா
இருக்கு " என்று புலம்பியவன் ,
சிறு எரிச்சலுடன் போனை கட் செய்ய ,எதிரே இருந்த பெண் , அவனை கவனிப்பதை உணர்ந்தவன் , தன் முகபாவனையை மாற்றி கொண்டு வராத புன்னகையை வற்புறுத்தி வரவைத்து அவளை
பார்த்து சிரிக்க ,பதிலுக்கு சிரித்தவள் ," ஷல் வி டான்ஸ் " என்று கேட்க
" கண்டிப்பா லெட்ஸ் கோ " என்றவன் தனது நாற்காலியில் எழும்பிய மறுநொடி தனது போன் ஒலிக்க மிகவும் எரிச்சல் அடைந்தவன் , அந்த பெண்ணிடம் வேலை இருப்பதாக கூறி விடைபெற்றுக்கொண்டு நேராக சென்று ஆஷிக்கை அழைக்க ,
இசையின் மழையில் நனைந்து கொண்டிருந்த ஆஷிகோ " என்னடா " என்று ஆடியவாறே கேட்க , எரிச்சல் அடைந்த ஆதர்ஷ்
" பார்க்கிங் ஏரியாவுக்கு உடனே வா " என்று முறைக்க
" சொல்லுடா நான் பிஸியா இருக்கேன் " என்று புன்னகையாய் கூற
" அடீங்க இப்போ வர போறியா இல்லையா " என்று கண்டிப்பாய் கூறியவனிற்கு மறுப்பு கூற முடியாமல் ஆஷிக்
" போ டா வரேன் " என்று வேண்டாய் வெறுப்பாய் கூறியவன் , தன் தோழிகளிடம் ," கர்லஸ் ஐ வில் பீ பேக் " என்று கூறிவிட்டு வெளியே சென்று ஆதர்ஷின் தோளில் தட்டியவாறு அவனது கையில் இருந்த ட்ரிங்க்ஸ் கிளாஸை வாங்கி காரின் மீது ஏறி அமர்ந்து கொண்டு ,
" என்னடா சொல்லு "
" டேய் உன் கேர்ள் ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஏண்டா என் நம்பரை குடுக்குற "
"
உனக்கு யூஸ் ஆகுமேன்னு தான் குடுத்தேன் , ஏன் என்னாச்சு"
"
ம்ம் மண்ணாச்சு , டேய் இந்த காவ்யா போன் பண்ணிட்டே இருக்கா டா அவ தொல்லை தாங்க முடியல , அவகிட்ட பேசி தொலை டா "
" ஐயோ ப்ளீஸ் டா ஷாப்பிங் போறதுக்காக கூப்பிடுவா , நாளைக்கு தியா மூவிக்கு கூட்டிட்டு போனு சொல்லிருக்கா அவள் கிட்ட என்ன சொல்லி தப்பிக்குறதுனு நானே முழிச்சிட்டு இருக்கேன், இதுல இவ வேறையா முடியாதுடா என்னால… நீயே எதாவது சொல்லி சமாளிடா"
" எதாவது "
"ம்ம் என்னத்தையோ சொல்லி சமாளி " என்று ஆஷிக் கூற ,
ஆதர்ஷ் தன் மனதிற்குள் ,
" இப்போ நான் பண்ண போற காரியத்துல இனிமே நீ எந்த பொண்ணுக்கும் என் நம்பரை குடுக்க மாட்ட டா என் நண்பா " என்றவன்
அந்த பெண்ணின் போன் காலை அட்டெண்ட் செய்து ,
" ஹாய் காவ்யா ,
எப்படி இருக்க ,
எஸ் ஐம் குட் ,
ஆஷிக் தான உன்ன பத்தி தான் பேசிட்டு இருப்பான் , நீ எப்ப கால் பண்ணுவேன்னு ஏங்கிட்டு இருப்பான் .
அவன் போன்ல சிக்னல் இல்லாம இருந்திருக்கும் அதான் அட்டென்ட் பண்ணிருக்க மாட்டான் .
அவன் என் கூட தான் இருக்கான் ,
அவன்கிட்ட பேசணுமா , அவன் இவ்வளவு நேரம் என்கூட தான் பேசிட்டு இருந்தான் நீ கால் பண்றதுக்கு கொஞ்சம் நேரம் முன்னாடி தான் அவன் ப்ரெண்ட் ரீனா வந்தா ,
ஆமா ரீனா தான் ரெண்டு பேரும் இதோ பத்து நிமிஷத்துல வந்திருவோம்ன்னு எதோ முக்கியமா பேசணும்னு சொல்லிட்டு ரூம்குள்ள போனாங்க , ஆனா ரூம்க்குள்ள போய் அரை மணிநேரம் ஆச்சு " என்றதும் ஆஷிக் அவனிடம் இருந்து போனை வாங்க முற்பட அவனை தடுத்த ஆதர்ஷ் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு காவ்யாவிடம் ," ரொம்ப நேரமா கதவை தட்டிட்டு இருக்கேன் " என்று தன் காரின் கதவை தட்டியவன் ,
" ஆனா ரெண்டும் பேரும் திறக்க மாட்டிக்காங்க அப்படி என்னதான் ரெண்டு பேரும் உள்ள பண்ணுவாங்கன்னு தெரில , பேசணும்னு சொன்னாங்க ஆனா பேச்சு சத்தமே கேட்கலை வேற ஏதும் பண்ணுவாங்கன்னு நினைக்கிறன் , ஏன் காவ்யா அவங்க உள்ள அப்படி என்ன தான் பண்ணுவாங்க " என்று அந்த பெண்ணையே கேட்க ,
சட்டென்று ஆதர்ஷின் கையில் இருந்து போனை வாங்கிய ஆஷிக் , "காவ்யா ஆதர்ஷ் விளையாடுறான் " என்று கூற அவளிடம் இருந்து எந்த வித பதிலும் வராமல் போக ,அப்பொழுது தான் அவள்
போனை கட் செய்திருந்தது தெரிய ,
ஆஷிக் ஆதரிஷிடம் ," என்னடா போனை வச்சிட்டா , அறிவிருக்காடா ஏன் டா இப்படி பண்ணின அவ என்ன நினைச்சிருப்பா "
" என்னடா நான் என்ன சொல்ல வரேன்னு முழுசா கேட்காம வச்சிட்டா , அவ முழுசா கேட்ருக்கனும் டா , ஆஷிக் ரூம்ல இருக்கான் ரீனா வாஷ் ரூம்ல இருக்கான்னு சொல்ல வர்றதுக்குள்ள ச்ச , இப்படி கட் பண்ணிட்டு போய்ட்டாளே " என்று ஆஷிக்கை பார்க்க ,
ஆஷிக் சிரித்தவாறே
" யு ஆர் டிஸ்கஸ்டிங் " என்று அடிக்க
அவனை தடுத்தவாறே ஆதர்ஷ் "எஸ் ஐ நோவ் " என்று கூறி ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரித்தனர் .
" இனிமே என் நம்பரை குடுப்ப "
" சத்தியமா மாட்டேன் டா , சரியான சகுனி டா நீ "
என்றவாறு ஆதர்ஷின் கழுத்தை விளையாட்டாக ஆஷிக் நெறிக்க , இருவரும் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்து கொண்டிருந்தனர் .
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
அப்பொழுது ஆஷிக்கையே உற்று பார்த்து கொண்டிருந்த ஆதர்ஷ் சிறு புன்னகையுடன் ," டேய் ஆஷிக் " என்று அழைக்க , மொபைலில் கேம் விளையாடி கொண்டிருந்தவன் , ஆதர்ஷின் பக்கம் திரும்பாமலே
" சொல்லு டா "
என்று கூறிவிட்டு கேமிலே கவனமாய் இருக்க
" ரொம்ப சந்தோஷமா இருக்க போல "
என்று ஆதர்ஷ் கூறவும் , " ஓ " என்று கத்தியவன் ரொம்ப நாளா இந்த லெவலை முடிக்க ட்ரை பண்ணிட்டு இருந்தேன் இப்போ முடிச்சிட்டேன் என்று கூற
" அது இருக்கட்டும் முதல்ல எனக்கு பதில் சொல்லு , ரொம்ப சந்தோஷமா இருக்க போல "
" ஆமா ரொம்ப நாள் கழிச்சி இந்த கேமை கம்ப்ளீட் பண்ணிருக்கேன்ல "
" ஓ உங்களுக்கு நான் எதை பத்தி பேசுறேன்னு தெரியாது "
என்ற ஆதர்ஷின் பார்வையிலையே , அவன் எதை பற்றி பேச வருகிறான் என்பதை புரிந்து கொண்ட ஆஷிக் , சில நொடிகளுக்கு பிறகு தன் மௌனம் கலைத்து,
" நீ எதைப்பத்தி பேசவரன்னு எனக்கு நல்லாவே புரியுது மச்சான் , நான் ஜியாவை மறக்க முடியாம கஷ்டப் படுறது உண்மை தான் ,
எப்படி டா அவளை மறக்கமுடியும் காதலை எனக்குள்ள முதல் முதலா விதைச்சவடா அவ , என்னைக்கும் அவ இங்க இருப்பா " என்று தன் இதயத்தை காட்டியவன் ,
" மத்தவங்க மாதிரி நான் மூவ் ஆன் பண்ணிட்டேன் அப்படி இப்படின்னு நான் பொய் சொல்ல மாட்டேன் .
அவ இல்லாம எனக்கு ஒரு வாழ்க்கையே இல்லை என்று இருக்கிற போது நான்
எப்படிடா மூவ் ஆன் பண்ணுவேன் . இருந்தாலும் என்னை பத்தி முழுசா புரிஞ்சிக்காம என் ஃபேமிலிய சுட்டிக்காட்டி என்னை தனியா விட்டுட்டு போனவடா அவ. நினைச்சாலே கோபமா வருதுடா எவ்ளோ வலிக்குது தெரியுமா, அவளுக்கு வலிக்கலையா, என்னை பத்தி நியாபகமே வராதா என்ன?? நான் மட்டும் தான்டா ஃபீல் பண்றேன் அவ நல்லா தான் இருக்கா , எல்லாம் அவ பண்ணிட்டு என் மேல தப்பு இருக்குற மாதிரி பேசுறாடா அதான் தாங்கிக்க
முடியல. இப்போ கூட எல்லாத்தையும் மறந்துட்டு அவளோட நான் வாழ தயாரா
இருந்தாலும் அவ முடியாதுன்னா தான் சொல்லுவா தப்பெல்லாம் என்னோடதுனு
சொல்லுவா… சரியான திமிர் புடிச்சவடா அவ ,அவ எனக்கு வேண்டாம்" என்றவன் தன் கண்களின் ஓரம் கசிந்த கண்ணீரை துடைத்துவிட்டு ,கையில் இருந்த கிளாசை காட்டி
" மச்சான் இந்த ட்ரிங்க்ஸ் மேல சத்தியம் பண்ணி சொல்றேன் அவ எனக்கு சத்தியமா தேவையே இல்லை " என்றவன் அந்த க்ளாசில் இருந்த இருந்த மதுபானத்தை ஒரே நேரத்தில் தன் வாயில் ஊற்றி அந்த காலி கிளாசை தரையில் போட்டு உடைக்க , ஆதர்ஷ் ஆஷிக்கிடம்
" டேய் என்னடா கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி சத்தியம் எல்லாம் பண்ணின இப்போ என்னனா அந்த க்ளாசையே உடைச்சிட்ட அப்போ சத்தியத்தையும் உடைச்சிருவியா " என்று கேட்டு புன்னகைக்க
"சிரிடா ஏன் சிரிக்க மாட்ட எல்லாம் என் விதி "
"அப்படி இல்லடா , உன் மனசுல இருக்கிற ஈகோவை தூக்கி போட்டுட்டு அமைதியா திங்க் பண்ணுன்னு சொல்றேன் "
"ஈகோ எனக்கு இருக்கா அவளுக்கு இருக்கா டா "
"பொறுமையா யோசி "என்ற ஆதரிஷிடம் ,
"வண்டிய எடுக்கிறியா??? தூக்கம் வருது " என்று கூறி காரில் அமர , ஆதர்ஷ் தனக்குள் ,
" எனக்கு தெரியும் டா நீ ஜியாவை இன்னும் லவ் பண்றனு ,
உன் காதல் உண்மையானது டா அதுவே உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கும் " என்றவன் , ஆஷிக்குடன் அவனது இல்லம் சென்றான் .
காலை பொழுது இனிதாய் மலர , தன் கரங்களை கொண்டு சூரிய கதிரை மறைத்தவாறு எழும்பியவன் ,
" டேய் ஆதர்ஷ் என் வீட்ல என்னடா பண்ற , ஓ நைட்டு நல்லா ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு போதையில என் வீட்டுக்கே வந்துட்டியா "
"நான் போதையில , போ டா "
" என்னடா "
" எரும மாடு நல்லா பாரு இது என் வீடு போதையில இருந்தது நீ , இங்க பாரு டைம் ஆச்சி சீக்கரம் கிளம்பி ரெடி ஆகு " என்ற ஆதர்ஷ் தன் தலையை துவட்டியவாறு கண்ணாடியின் முன்பு நின்று கொண்டிருக்க ,
புன்னகைத்தவாறு அவனது அருகில் வந்து அவனது தோளில் கை போட்டவாறே ஆஷிக், " அப்டினா நேரத்து நைட்டு நீ பாலிவுட் ஸ்டைல்லே என்னை உன் வீட்டுக்கு கொண்டு வந்திருக்க "
" என்ன உளர்ற "
" அதான் டா ஹீரோயின் தெரியாம ட்ரிங்க்ஸ் பண்ணிருவாங்க அப்புறம் போதையில என்னலாமோ பேசுவாங்க , ஹீரோ வேற வழியே இல்லாம தான் வீட்டுக்கு கூட்டிட்டு வருவாரு அப்புறம் அவங்களுக்குள்ள போடா எனக்கு வெக்கமா இருக்கு எதுவும் தெரியாத மாதிரி கேட்ப… ஸ்கூல் படிக்கும் போதே குரூப் ஸ்டடியின்னு சொல்லிட்டு நாம இதை பத்தி தான் பேசுவோம் " என்று கண்ணடித்தவன்
" டேய் வெயிட் நீ என்ன எதுவும் யூஸ் பண்ணிக்கலையே " என்று கேட்க , தன் கையில் இருந்த டவலால் ஆதர்ஷ் ஆஷிக்கை அடிக்க ,
ஆஷிக் " டேய் விடுடா " என்று ஓட
" இனிமே இப்டி பேசுவ "
" மாட்டேன் மாட்டேன் " என்று கூற ,
" போ டைம் ஆச்சு ரெண்டு பேருக்குமே இன்னைக்கு மார்னிங் பிளைட் இருக்கு " என்று கூற ,
" போலாம் டா " என்றவன்
ஆதர்ஷை தன் பக்கம் திருப்பி , " டேய் மச்சான் இப்போ
எல்லாம் நீ நல்லா மெயின்டேன் பண்ற போல , கட்டு கலையாம இருக்கியே டா " என்றவன் அவனது இடுப்பில் கிள்ள ,
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
ஆதர்ஷ் சிரித்தவாறே ," டேய் அப்படி பண்ணாத டா கூச்சமா இருக்குடா ப்ளீஸ் " என்று கூற , ஆஷிக் அவனை சீண்டி கொண்டே இருக்க ஆதர்ஷ் அவனை நோக்கி
" டேய் உனக்கு வேற வேலையே இல்லையா யாரோட இடுப்பு கிடைச்சாலும் இப்படி
கிள்ளுவியா " என்று கேட்க ,
அவ்வளவு நேரம் சிரித்துக்கொண்டிருந்த ஆஷிக் , " ஆமா டா தப்பு தான் இது தான் எல்லாத்துக்கும் காரணம் மாத்திக்கிறேன் " என்று
கூறிவிட்டு பாத்ரூமிற்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டான்
ஆதர்ஷ் கதவை தட்டியவாறு ," டேய் சாரி டா நான் அதை நினைச்சு சொல்லலை " என்று கூற ஆஷிக் , ஜியாவுடன் தனக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பை தனக்குள் நினைத்து பார்த்து ,
" இவ்ளோ வலி நீ எனக்கு குடுப்பன்னு தெரிஞ்சிருந்தா நான் உன்ன பார்க்காமலே இருந்துருக்கலாம் ஜியா " என்றவன் கோபத்தில் தன் முன்னே இருந்த கண்ணாடியை ஓங்கி தன் கரம் கொண்டு அடித்தான் .
தன் கோபம் தீர ஷவரில் தன்னை நனைத்தவன், பின்பு கதவை லேசாக திறந்து
லேசாக இரும,
சத்தம் கேட்டு ஆதர்ஷ் ," மச்சான் என்னடா " என்று கேட்க
ஆஷிக்கோ யாரிடமோ பேசுவது போல ," டவல் " என்று மட்டும் கூற ,
" வா இங்க தான் இருக்கு வந்து எடுத்துக்கோ "
" கிறுக்கா டா பிடிச்சிருக்கு டவலை தாடா "
" அப்போ மன்னிச்சிட்டேன்னு சொல்லு "
" உன்னோட பெரிய தொல்லையா போச்சுடா "
" இப்போ என் சாரியை ஏத்துக்க போறியா , இல்ல நான் உள்ள வரட்டா"
என்ற ஆதர்ஷிடம்
" டேய் வந்து கிந்து தொலைச்சிறாத மன்னிச்சு தொலையிறேன் " என்றவன் சிறிது
நேரம் கழித்து டவலை கட்டிக் கொண்டு வெளியே வந்த ஆஷிக்கிடம் ஆதர்ஷ்
" சாரி மச்சான் " என்று மன்னிப்பு கேட்க ஆஷிக் ,
" விடு டா எனக்கு உன் மேல கோபம் எல்லாம் இல்லை எனக்கு என் மேலையே கோபம் . சொல்ல தெரியலை டா , அவளை பத்தி யாரவது நியாபகப்படுத்துனா எனக்கு கோபம் வருது அதே நேரம்
அவளை பார்த்தால் என்னோட கோபத்தை வெளி காட்ட முடியல என் மனசுகுள்ள
சந்தோஷமா இருக்கு .
சில நேரம் எனக்கு என் மேலையே கோபம் இருக்கு ஒருவேளை என் குடும்பத்தை
பத்தின உண்மையை ஏற்கனவே சொல்லிருந்தா அவ என்னைவிட்டு போயிருக்க மாட்டாளோ , தெரியலடா ரொம்ப கன்பியூஷனா இருக்கு "
" டேய் வா டா வந்து உக்காரு" அவனை பெட்டில் அமரவைத்த ஆதர்ஷ் தன்
நண்பனின் கரத்தை பற்றிக்கொண்டு


"எனக்கு தெரியும்டா நீ ஜியாவ எவ்வளவு உண்மையா லவ் பண்ணினன்னு . நீ எத்தனையோ பொண்ணுங்க கூட பழகிருக்க , ஆனா ஜியாவ லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து நீ அவகிட்ட எவ்வளவு நேர்மையா இருந்தன்னு எனக்கு தெரியும் , நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சதுக்கு காரணமே நீங்க ஒருத்தர ஒருத்தர் சரியா
புரிஞ்சிக்காம போனது தான் . நீ எதுக்கும் வருத்தப்படாத எல்லாம் சரியா நடக்கும் " என்று ஆறுதல் கூற


பதிலுக்கு தன் தலையை மட்டும் ஆட்டிய ஆஷிக் , ஆதர்ஷிடம்

" டேய் மச்சான் ராத்திரி குடிச்சிட்டு நான் ஏதும் கலாட்டா பண்ணலைல "

" அப்டி எதுவும் பெருசா பண்ணல ஆனா கொஞ்சம் பண்ணின "

" அம்மா என்ன சொன்னாங்க "

" நீ அதிகமா குடிச்சா என் வீட்டுக்கு வர்றதும் , நான் மட்டையான உன் வீட்டுக்கு வர்றதும் என்ன புதுசா "

" ஏதும் திட்டுனாங்களா , அவன் குடிச்சா நீ குடிக்கிறது இல்லை நீ குடிச்சா அவன் குடிக்கிறது இல்லை , என்னைக்காவது ஒரு நாள் நீங்க ரெண்டு பேரும் குடிச்சி ட்ரங் அண்ட் ட்ரைவ்ல மாட்டி போலீஸ் காரங்க கிட்ட உதைவாங்கன்னும் அதை நானும் அவன் அம்மாவும் பார்த்து ரசிக்கணும்ன்னு ,

தோளுக்கு மேல வளர்ந்துடீங்க உங்கள எங்களால அடிக்க முடியல அட்லீஸ்ட் அவங்களாவது அடிக்கட்டுமேன்னு சொன்னாங்க"

" என்னடா தெலுங்கு வில்லன் ரேஞ்சுக்கு சொல்லிருக்காங்க "

" ஆல் மம்மிஸ் அப்படி தான் டா "

" சரியா சொன்ன டா "

"வேலைக்கு வர்றதா ஏதும் ஐடியா இருக்கா இல்ல , இப்படியே பேசிட்டு இருக்க போறியா சீக்கிரமா கிளம்பு நான் கீழ வெயிட் பண்றேன் " என்று கூறிய ஆதர்ஷ் அங்கிருந்து செல்ல சிறிது நேரம் கழித்து இருவரும் ஏர்போர்ட் வந்தடைந்தனர் .

இருவரும் இன்று தங்களுக்கான ஷெட்யூல் என்ன வென்று பார்த்து கொண்டிருக்க .

ஆஷிக் " ச்ச என்னப்பா இது " என்று எரிச்சல் அடைய , அதை வாங்கி பார்த்த

ஆதர்ஷ் ," என்னடா "

" பாருடா கூட வர்ற கோ பைலட்ல ஆர்மபிச்சு , டாக்டர்ஸ் எல்லாரும் ஆம்பளைங்க அதுவும் வயசானவங்க , போரடிக்கும்டா, அதுவும் சென்னை வெயில் வேற அங்க அதிகமா இருக்கும் .

சரி நீ ரொம்ப ஹப்பியா இருக்க உனக்கு எங்க " என்று ஆதர்ஷின் கையில் இருந்த ஷெட்யூலை வாங்கி பார்த்தவன் ,

" என்னடா உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு போ , இன்னைக்கு கோவா போற அதுவும் கோ பைலட் நிஷா , கோவா வேற பயங்கரமான ஏரியா ஒரே மஜாதான்னு சொல்லு , டேய் நீ எல்லாம் அங்க போய் என்னடா பண்ணுவ நான் வரேன் டா " என்று சொல்ல ,

" என்னடா ஜியா கூட டைம் ஸ்பென்ட் பண்ணனுமா " என்று ஆதர்ஷ் அவனை வம்பு இழுக்க

" என்ன உளர்ற " என்று அவன் மழுப்ப

" ஓ சாருக்கு ஜியா கோவா வர்றது தெரியாது , கீழ அவங்க பேரை நீங்க பார்க்கலை "

" எனக்கு ஃப்ளைட்க்கு டைம் ஆச்சி பாய் " என்ற ஆஷிக் அங்கிருந்து ஓடாத குறையாக செல்ல , அதை கண்ட ஆதர்ஷ் சிரித்தவாறு தன் பிலைட்க்கு சென்றான் .

ஃப்ளைட்டில் ஆதரஷ்ஷை கண்ட இரு கண்கள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க , ஆதர்ஷோ எதையும் காணாமல் ஜியாவின் அருகில் சென்று ,

" என்கிட்ட குடு நான் ஹெல்ப் பண்றேன் " என்று கூறி , அவளது பையை வாங்கி பெட்டிகள் இருக்கு இடத்தில் வைத்து ," சிம்பிள் முடிஞ்சிருச்சு " என்று கூறிவிட்டு பொதுவாக அவளுடன் பேசிக்கொண்டிருக்க , நடாஷாவின் இரு கண்களோ அவனை ஏக்கமாக பார்த்தது .

இதை கவனித்த ஜியாவிற்கு நடாஷாவின் கண்களில் காதல் கலந்த ஏக்கம் புலப்பட , சின்னதாக புன்னகைத்தவள் எதுவும் கூறாமல் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு தன் அறையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

பிளைட் ஸ்டார்ட் ஆகி ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்க , நடாஷாவின் அருகில் வந்த ஜியா அவளிடம் நட்பாக பேசிக்கொண்டிருக்க , திடீரென்று மணியை பார்த்தவள் டீ போட ,ஜியா நடாஷாவிடம் ,

" என்னாச்சி மணியை பார்த்த உடனே டீ போடுற யாருக்கு இவ்வளவு அவசரமா போடுற "

" ஆதர்ஷ் சாருக்கு மேடம் , சார் எப்பவும் பிளைட் டேக் அப் ஆனா அரைமணிநேரத்துல கிறீன் டீ கேப்பாரு "

" அப்படியா உங்க ஆதர்ஷ் சார் வேறன்ன எல்லாம் கேட்பாரு "

" மார்னிங் பிளைட் ன்னா கிறீன் டீ மட்டும் தான் , மதியம்ன்னா டீ சாப்பிட மாட்டாரு ஜஸ்ட் வெஜ் பர்கர் மட்டும் சாப்பிடுவாரு " என்று அவள் ஆர்வமாக கூற அதை புன்னகையோடு ஜியா கவனிக்க அப்பொழுது ஜியா தன்னை கேலி பார்வை பார்ப்பது புரிந்து , " சரி மேடம் இப்போ வந்திர்றேன் " என்று அவள் அங்கிருந்து கிளம்ப போக
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
" ஏய் நடாஷா நில்லு கொஞ்சம் நேரம் கழிச்சு போனா உங்க சார் எங்கையும் போக மாட்டாரு நில்லு " என்று அவளை தடுத்த ஜியா

" என்ன ஆதர்ஷை பிடிச்சிருக்கா ....

பயப்படாம சொல்லு நான் அவன் கிட்ட சொல்லமாட்டேன் " என்று கேட்க

" எங்க மேம் எனக்கு பிடிச்சு என்ன செய்ய அவர் தான் என்ன நிமிர்ந்து கூட பார்க்க மாட்டிக்காரே , அவரு இதனால் வர என் பேர கூட ஒழுங்கா சொன்னதில்லை " என்று சலிப்பாய் கூறியவளை , சிலநொடிகள் கண் கொட்டாமல் பார்த்த ஜியா

" அவன்கிட்ட பேசிருக்கியா "

" இல்ல , என்ன மேடம் பேச "

" நீ பேசாத வரைக்கும் இந்த உலகம் உன்னை கேட்கணும்னு நீ எப்படி எதிர்பார்ப்ப. நீ பேசு அது மட்டும் இல்லாம அவனை கேட்கவும் வை "

" என்ன பேச " என்றவளை பார்த்து புன்னகைத்தவள் ,

" ஏதாவது பேசு உங்க ஷர்ட் நல்லா இருக்கு , அப்படி எதாவது சொல்லி ஸ்டார்ட்
பண்ணு "


" ம்ம் முயற்சி பண்றேன் " என்றவள் ஜியா கொடுத்த பூஸ்ட்டில் உள்ளே காக்பிட்க்குள் சென்றாள்.

அவளை கண்டவன் ," எனக்கு கிறீன் " என்று கூறுவதற்குள்

" சார் உங்க கிறீன் டீ " என்று கொடுக்க ,

" உனக்கு எப்படி தெரியும் "

" எப்பவும் இந்த டைம்க்கு நீங்க கிறீன் டீ குடிப்பீங்க சார் " என்ற அவளது பதிலில் வியந்தவன் ,

" இம்ப்ரெஸ்ட் , தேங்க்ஸ் ஷாஷா " என்று கூறியவாறு டீயை பருக , சற்று எரிச்சல் அடைந்த நடாஷா ஜியா கூறிய வார்த்தைகளை தன் நினைவில் கொண்டுவந்து ,

" சார் ஐயம் நாட் ஷாஷா, ஐயம் நடாஷா " என்று சற்று சத்தத்தோடு சேர்ந்து அழுத்தமாக கூற , அதுவரை தன் வேலையிலே மும்முரமாக இருந்தவன் முதன் முதலாக அவளை நிமிர்ந்து பார்த்தான் .
17267608_1243318042402949_8775920608790708224_n.jpg
இதழ் விரிந்த மொட்டு போல விரிந்த கண்களுடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்களில் சில நொடிகள் மூழ்கி போயிருக்க . திடீரென்று பிளைட்டில் டர்புலென்ஸ் ஏற்பட்டு , லேசாக பிளைட் ஆட , அவனது கையில் இருந்த டீ அவனது சட்டையில் கொட்டி அவனது கையில் பட .


டீயின் சூட்டில் " ஸ்ஸ் " என்று ஆதர்ஷ் சத்தமிட

இதை கண்டு பதறியவள் உடனே பர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எடுத்து வந்து அவனது கையை பிடித்து காயப்பட்ட இடத்தில் லேசாக ஊதிவிட அதில் சில்லென்று சிலிர்த்து நின்றான் , பிறகு மருந்து தடவி விட்ட பின்பு நடாஷா அவனை பார்க்க ,

அவளது ஸ்பரிசத்தில் லயித்திருந்த ஆதர்ஷ், சிலநொடிகள் கழித்து அவளை பார்த்து ,

" நீ புதுசா , உன்னை நான் இப்போ தான் பார்க்குறேன் " என்று கேட்க , அதில் லேசாக புன்னகைத்தவள் ,

" நாலு வருஷமா இருக்கேன் , நீங்க இங்க வேலைக்கு ஜாயிண்ட் பண்ணின நாள்ல இருந்து நான் இருக்கேன் நீங்களும் நானும் CJ 216 டெல்லி போபால் மும்பை ஃப்ளைட்ல தான் பர்ஸ்ட் ட்ராவல் பண்ணினோம் , உங்களுக்கும் எனக்கும் அதுதான் பர்ஸ்ட் ஃப்ளைட் " என்று அவள் கூறியதில் சிலநொடிகள் திகைத்து இருந்தவன் பின்பு தன் இயல்பு நிலைக்கு திரும்பி ,,

" தெரியலை " என்ற ஒற்றை பதிலை மட்டும் என்ன கூறுவதென்று தெரியாமல் கூற,

" ம்ம் என்ன மாதிரி சாதாரண ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் எப்படி கேப்டன் உங்க கண்ணுக்கு தெரிவோம் " என்ற நடாஷா அங்கிருந்து செல்ல போக அவள் கூறியதிற்கு பதில் எதுவும் கூறாதவன் வெறும் " தேங்க்ஸ் " என்று மற்றும் கூற கூற ,

நடாஷா தனக்குள் ," இப்போ கூட பேரை சொல்ல மாட்டிக்காரு , மறுபடியும் மறந்திருப்பாரு " என்று நினைக்க , அவளது விழியில் உள்ள சிறு எரிச்சல் கலந்த கோபத்தில் அவள் மனதில் உள்ளதை புரிந்து கொண்டவன் , அவளது கோபத்தை ரசித்தவாறே ,தன் இதழ் ஓரம் புன்னகை தளும்ப
" நடாஷா , தங்க யு ஸோ மச் " என்று தன் இரு கண்களையும் லேசாக மூடி திறக்க , அவளும் பதிலுக்கு சிறு புன்னகையோடு ," யு ஆர் வெல்கம் கேப்டன் ஆதர்ஷ் " என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் .


அவள் சென்றவுடன் , உதட்டில் உள்ள புன்னகை மாறாமல் ஆதர்ஷ் ,

"குட் மார்னிங் லேடிஸ் அண்ட் ஜென்டல்மென் திஸ் இஸ் யுவர் கேப்டன் ஆதர்ஷ் அண்ட் பர்ஸ்ட் ஆபிசர் நிஷா , நார்மலி டர்புலென்ஸ் மே காஸ் சேன்ஜ் இந்த ஃப்ளைட் ரூட் , பட் டுடே , திஸ் டர்புலென்ஸ் இஸ் லிட்டில் டிப்ரண்ட், இட் காஸஸ் செஞ் இன் மை லிட்டில் ஹார்ட் , நவ் இட்'ஸ் டைம் டு தங்க ஆல் ஆப் யு பார் ஃப்ளையிங் இன் கோ ஆன் ஏர் GoOnAir ஏர்லைன்ஸ்.

வி நவ் ரெடி பார் யுவர் டெஸ்டினேஷன் இன் கோவா . வி ஹோப் தட் யு ஆள் ஹட்
அ என்ஜாயபுள் ஃப்லைட் வித் அஸ் .


கேபின் க்ரூவ் ப்ரிப்பர் ஃபார் லேண்டிங் "என்று அவன் கூறி முடிக்கவும் , நடாஷாவும் ஜியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர் .
17077227_1878058705774596.jpg
86C_mahima-makwana1.jpg
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top