Nilave ennidam nerungaathey 5

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹலோ நண்பர்களே ,
போன அத்தியாயத்துக்கு நீங்க குடுத்த கமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது , உங்களோட ஆதரவுக்கு நன்றி நண்பர்களே .
நிலவே என்னிடம் நெருங்காதே " வோட அத்தியாயம் 5 படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை பகிருங்கள் .

நிலவே என்னிடம் நெருங்காதே 5

Picture1.jpg
காலை பொழுது நன்றாய் விடிந்திருக்க , டெல்லி விமான நிலையம் வழக்கம் போல மக்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது .
ஏர்போர்ட்டின் கேன்டீனில் சில ஆண் பைலட்கள் மற்றும் அவர்களோடு சில
ஏர்ஹோஸ்டர்ஸ்களும் அமர்ந்து காலை உணவை அருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருக்க ஆஷிக் தியா இருவரும் வந்து
அவர்களுடன் இணைந்து கொண்டனர் .
ஆஷிக் வழக்கம் போல கலாட்டாவாக பேச அனைவரும் சிரித்தனர்… அப்பொழுது அவர்களுள் ஒருவனின் பார்வை மட்டும் வேறெங்கோ இருக்க, அவனது பார்வை சென்ற இடத்திற்க்கே தன் பார்வையையும் சுழல விட்டவனின் கண்களில், ஜியா தன் கைக்கடிகாரத்தை பார்த்தவாறே உள்ளே வருவது தெரிந்தது.
மில்க் ஷேக்கை அருந்தியவாறே ஆஷிக் அவனிடம், "என்னடா சேனலை மாத்திட்ட போல" என்று கேட்க சட்டென்று திரும்பியவன்
பதற்றத்தோடு " என்னடா ஆஷிக் " என்று வினவ
"இல்ல ரொம்ப நேரமா அவளையே பார்த்துட்டு இருக்கியே அதான் , கேர்ள் ப்ரெண்டை மாத்திட்டியான்னு கேட்டேன் "
"அதெல்லாம் இல்லடா சும்மா தான் பார்த்தேன்… இவ எல்லாம் நம்ம டைப் கிடையாது , அன்னைக்கு நான் கொஞ்சம் சிரிச்சு பேசுனதுக்கே எரிக்கிற மாதிரி பார்த்தா , ஆனாலும் என்னடா பண்ண பார்க்காம இருக்க முடியல அழகா ஹாட்டா இருக்காளே கமிட் ஆகிருப்பான்னு நினைக்கிறேன் " என்று கூற ,
தியா அவனிடம், " ஏய் இவளாம் ஹாட்டா , இதுக்கு முன்னாடி நீ ஹாட்டானா பொண்ணுங்களை பார்த்ததே இல்லையா , அவ சரியான நாட்டுப்புறம் , ஒருகாலத்துல எப்படி இருந்தான்னு எனக்கு தான் தெரியும் , என்ன ஆஷிக் நான் சொல்றது "
" ஹண்ட்ரட் ப்ரசண்ட் ட்ரு ,இவளை எல்லாம் மனுஷன் பார்ப்பானா " என்றவனின் கண்கள் அவளையே அங்குலம் அங்குலமாய் அளவெடுக்க , அதை கண்ட அந்த பைலட் ஒருமுறை ஆஷிக்கை ஏற இறங்க பார்த்துவிட்டு ,
" மனுஷன் பார்ப்பானான்னு சொல்லிட்டு , நீ அவளையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்க " என்று கூற
தியாவோ ஆஷிக்கை பார்த்து முறைக்க அங்கே இருந்து தப்பித்தால் போதும் என்று ஆஷிக் " நான் கிளம்புறேன் பிளைட்டுக்கு டைம் ஆகிடுச்சு " என்று கூறிவிட்டு ஓடாத குறையாக சென்றான் .
பிளைட்டில் ஏறி காக் பிட்டுக்குள் வந்து அமர்ந்தவனை கண்டு ஆதர்ஷ் புன்னகைக்க , பதிலுக்கு புன்னகைத்தவன் அனைத்தும் சரியாக உள்ளதா என்று சரி பார்த்தவன் ,
"லேடிஸ் அண்ட் ஜென்டல் மென் திஸ் இஸ் கேப்டன் ஸ்பீக்கிங் . யு ஆர் ஆன் தீ போர்ட், ஃப்ளைட் Cj 345 டெல்லி டு சென்னை வி ஆர் ரெடி டு டேக் ஆப் . சீட் பெல்ட்ஸ் சைன் ஆர் ஆன், நவ் வி ரெக்யூஸ்ட் தட் யு கீப் யுவர் சீட் பெல்ட்ஸ் பாஸ்டென் , சிட் பக் ரிலாக்ஸ் அண்ட் என்ஜாய் தீ ரெஸ்ட் ஆப் யுவர் ஃப்ளைட், தங்க க் யு " என்று பிளைட் கிளம்புவதற்கான அறிவிப்பை தன் பாணியில் பயணிகளுக்கு மிகவும் அழகாக கூறினான் .
அவனிடம் இருந்து அறிவிப்பு வந்ததும் விமான பணிப்பெண்கள் அனைவரும் பயணிகள் அனைவரையும் சீட்பெல்ட் அணிய
வலியுறுத்திவிட்டு தங்களின் இருக்கையில் சென்று அமர்ந்துகொள்ள ஃப்ளைட் ரன்வேயில் இருந்து மேல்நோக்கி ஆகாயத்தை கிழித்துக் கொண்டு பறந்தது ஃப்ளையிட் ஒரு நிலையில் பறக்க தொடங்கியதும் வழக்கம் போல ஆஷிக்,
" குட் மார்னிங் , ஐம் யுவர் கேப்டன் ஆஷிக் அலாங் வித் கேப்டன் ஆதர்ஷ் , வீ ஹோப் யு ஆர் ஹவிங் பிளசண்ட் பிளைட், வீ ஆர் பிளையிங் இன் தீ அல்டியுட் ஆப் 37000 பீட் அண்ட் வீ வில் ரீச் சென்னை இன் டூ ஹார்ஸ் .
சீட் பெல்ட்ஸ் சையின் ஹஸ் ஆப்ட் பை அஸ் ,ஸோ ஐ சஜஸ்ட் யு டு சிட் பக் ரிலாக்ஸ் அண்ட் எஞ்சாய் தி ஜர்னி அண்ட் வீ ஆல்ஸோ தங்க் யு பார் சூஸிங் கோ ஆன் ஏர் "
பயணிகளை சீட் பெல்ட்டை கலட்டிக் கொண்டு ஓய்வு எடுக்குமாறு அறிவிப்பு விடுத்தான் .
 
Last edited:

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
ஃப்ளைட்டில் பயணிகளுக்கு விமானப்பணிப்பெண்கள் உணவு கொடுத்துக்கொண்டிருக்க , ஆதர்ஷும் ஆஷிக்கும் எப்பொழுதும் போல பேசிக்கொண்டாலும் அவர்களது கவனத்தை சிதறவிடாமல்
விமானத்தை செலுத்தினார்கள் .
நேஹா வரிசையாக பயணிகளுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருக்க , அப்பொழுது வயது முதிர்ந்த பெண் ஒருவர் அவளிடம் தன் அருகில் வருமாறு கூற , அவள் தன் ட்ரேயில் உள்ள உணவு தீர்ந்துவிட்டதாகவும் உணவு எடுத்துக்கொண்டு வருவதாக பதிலளிக்க . அதற்குள் அந்த பெண் நேஹாவை பார்த்து ,
" ஃப்ளைட்ல வேலை செய்யிற சாதாரண பொண்ணு நீ உனக்கு அவ்வளவு திமிரா , பிளைட்ல ஏறி உட்கார்ந்ததுல இருந்து தண்ணி வேணும்னு கேட்டுகிட்டு இருக்கேன் ஒருத்தரும் ரெஸ்பான்ஸ் பண்ணவே இல்லை வேலை செய்யிறீங்களா இல்லை அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்களா . அது சரி குட்டை ட்ரெஸ்ஸ போட்டுட்டு முகத்துக்கு மேக்கப் பண்ணவே உங்களுக்கு நேரம்
பத்தாது , உங்க தொழிலை பத்தி தெரியாததா என்ன " என்று அந்த பெண்மணி தன் வாய்க்கு வந்தது போல ஏதேதோ கூற
பயணிகள் அனைவரும் நேஹாவை ஒருமாதிரியாக பார்க்க ஆரம்பித்தனர் , மிகவும் சங்கடப்பட்ட நேஹா அந்த பெண்மணிக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்து விட்டு ," மேடம் உங்களுக்கு தண்ணி வேணும்னா முதல்லயே சொல்லிருக்கலாமே " என்று கேட்க,
" ம்ம் வேலைய பாரு " என்று ,'xxxx ' என்று நேஹாவுக்கு மட்டும் கேட்குமாறு அந்த பெண்மை தகாத வார்த்தையில் நேஹாவை திட்ட ,தன் பொறுமையை இழந்த நேஹா அந்த பெண்மணியிடம் கத்தாமல் கோபத்தை தன் கண்களில் வைத்துக்கொண்டு மிகவும் அழுத்தமாக ,
" நீங்க இப்படி பேசி என்னை இல்லை உங்களை நீங்களே தாழ்த்திக்கிறீங்க . உங்களோட வார்த்தைகள்ல இருந்தே உங்களோட கேரக்டர் நல்லா தெரியுது " என்று கூறிவிட்டு
பின்பு மிகவும் இயல்புடன் கலந்த புன்னகையுடன்," உங்களுக்கு வேற எதாவது
வேணும்னா என்னை கண்டிப்பா கூப்பிடுங்க " என்று தன் வார்த்தையால் அந்த பெண்மணியை அறைந்து விட்டு அங்கிருந்து செல்ல , அந்த பெண்மணி மற்ற பயணிகளை பார்க்க அவர்களது பார்வை எல்லாம் தன்னை மேலும் சாட்டையால் அடிப்பது போல இருக்க , தன் தவறை அறிந்து வெட்கத்தில் தலை குனிந்தார் .
நேஹா நடந்ததை தன் சக பணியாளர்களிடம் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க ,
அப்பொழுது பார்த்து பிஸ்னஸ் க்ளாசில் இருந்து யாரோ கத்துவது போல சத்தம்
கேட்க எல்லா ஏர் ஹோஸ்டர்ஸ்ஸும் அங்கே சென்று என்னவென்று பார்க்க , அங்கே நடாஷா எவ்வளவோ சமாதானம் செய்தும் ஜியா கேட்காமல் இருபத்தியைந்து வயது மதிக்க தக்க ஒரு வாலிபனின் சட்டையை பற்றி கொண்டு அவனது கன்னத்தில் பளார் என்று அறைந்து ,
" என்னடா பொண்ணுங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா , எவ்வளவு தைரியம் இருந்தா அப்படி பேசுவ , பொண்ணுங்கன்னா என்ன வேணும்னாலும் பேசுவீங்க அவங்க அமைதியா இருக்கணும் அப்படி தானே ,ஷார்ட் ட்ரெஸ் போட்டா அசிங்கமா பேசுவியா ,
ஏர் ஹோஸ்டர்ஸ்னா உனக்கு அவ்வளவு எகத்தாளமா , கொஞ்சம் நேரம் கூட உட்காரம பன்னிரண்டு மணிநேரம் கால் கடுக்க நின்னுகிட்டு இதுக்கு இடையில உன்னை மாதிரி ஆளுங்க பண்ற வேலைய கோபம் வந்தாலும் சிரிச்சிட்டே அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அவங்க படுற கஷ்டம் எல்லாம் சொன்னா தெரியாது அனுபவிச்சாதான் தெரியும் .
உன் அம்மாக்கும் தங்கச்சிக்கு இருக்கிறது தான் எங்களுக்கும் இருக்கு உன் அம்மா
தங்கச்சிகிட்ட இப்படி பேசுவியாடா " என்று ஜியா தன்னை மறந்து கோபமாக அவனை தன் வார்த்தையால் வதைத்து
கொண்டிருக்க , நேஹா நிலைமை கையை மீறி போய்விடுமோ என்று பயந்து , கேப்டன்களுக்கு தொடர்புகொள்ள போனை அட்டென்ட் செய்த ஆதர்ஷ் உடனே வருவதாக கூறிவிட்டு
சம்பவ இடத்துக்கு வரவும் ,
நடாஷா சூழ்நிலையை ஒருவகையாக சாமாளித்து அந்த நபருக்கு வேறு இடம் மாற்றிக் கொடுத்து , ஜியாவை ஆசுவாசப்படுத்த ஜியாவுக்கோ கோபம் குறைந்தபாடில்லை .
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
" ஜியா மேம் ப்ளீஸ் காம் டவுன் "
" நடாஷா இவங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் நாம சும்மா விட கூடாது, நீ என்னை ஏன் சமாதானப்படுத்திட்டு இருக்க அவனை ..." என்றவளை தடுத்த ,
நடாஷா
Picture2.jpg


" அவனுக்கு உரிய தண்டனை அவனுக்கு கிடைக்கும் , இதை பொறுமையா ஹேண்டில் பண்ணனும் , மேம் நீங்க ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்க பிரச்சனையை என்கிட்ட விடுங்க நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ் " என்று கூறிக்கொண்டிருக்க ,
" என்ன பிரச்சனை " என்றவாறு வந்த ஆதர்ஷிடம் ,
நடாஷா ," கேப்டன் அது ஒன்னும் இல்லை ,ஒரு பேசஞ்சர் என்கிட்ட தகராறு பண்ணினாரு அதான் ஜியா மேடம் டென்ஷன் ஆகிட்டாங்க "
" என்ன தகராறு "
" இப்போ எதுவும் இல்லை சார் , லெட் மீ ஹேண்டில் திஸ் " என்று அவள் கூறவும் , அவனால் வேற எதுவும் பேச முடியாமல் போக ,
" ஓகே " இதுக்கு மேலை உன் இஷ்டம் என்பது போல தன் புருவத்தை உயர்த்தி விட்டு அங்கிருந்து சென்றான் .
காக்பிட்டுக்குள் வந்த ஆதர்ஷிடம், ஆஷிக் ," என்னடா பிரச்சனை" என்று கேட்க , அவன் நடாஷா கூறியதை கூற ,
" என்ன ஜியா டென்ஷன் ஆனாளா , யார் அவன் , நீ அவனை எதுவும் பண்ணாமலா விட்ட , நான் போய் என்னனு பார்த்துட்டு வரேன் " என்று ஆஷிக் உணர்ச்சிவச பட , அவனை தடுத்த ஆதர்ஷ் ,
" டேய் போய் ,அவமானப்பட்டு வரப்போறியா "
" என்னனு கேட்டதுக்கு லெட் மீ ஹேண்டில் திஸ்னு நடுமண்டையில் ஆணி அடிச்ச மாதிரி அந்த நடாஷா சொன்னா அதுக்கு என் வேலைய நான் பார்த்துக்குறேன் நீ மூடிட்டு போன்னு அர்த்தம் , நடாஷாவே இப்படி சொல்றான்னா ஜியா இதை விட கேவலமா சொல்லுவா ஸோ நீ அமைதியா உட்காரு , இந்த
பொண்ணுங்களுக்கு ஜான்சி ராணின்னு நினைப்பு " என்றவனிடம் ஆஷிக் ," அது மச்சான் நீ முதல் தடவை ஒரு பொண்ணுகிட்ட மொக்கை வாங்கிருக்கல்ல , அதான் உனக்கு எரிச்சலா வருது போக போக பழகிடும் " என்று சிரிக்க ,ஆதர்ஷ் எதுவும் பேசாமல் முறைத்தவாறே அமர்ந்திருந்தான் .
நடாஷா அவ்வளவு சமாதானம் கூறிய பின்பும் ஜியாவின் கோபம் மட்டும் சற்றும் குறையாமல் அப்படியே இருந்தது .

Picture3.jpg
விமானம் தரையிறங்குவதற்காக தயாராக இருக்க , ஆதர்ஷ் சென்னை ஏர் ட்ராபிக் கண்ட்ரோலர்க்கு(ATC ) தொடர்புகொண்டு ,
" ATC சென்னை திஸ் ஐஸ் CJ 345 டெல்லி டு சென்னை ரெடி பார் லெண்டிங் , ஓவர் அண்ட் ஓவுட் " என்று அனுமதி கேட்க ,அங்கே பதிலுக்கு அவர்கள் ,
" யஸ் CJ 345 ட்ராபிக் வாஸ் கிளீயர்ட் , லெண்டிங் இஸ் க்ராண்ட்டட் " என்று அவர்கள் அனுமதி கொடுக்க ,
பயணிகளுக்கும் கேபின் க்ரூவ் மெம்பெர்ஸ்க்கு அறிவிப்பை பின்வருமாறு தன் பாணியில் ,
"
லேடிஸ் அண்ட் ஜென்டல் மென் திஸ் இஸ் யுவர் கேப்டன் ஆதர்ஷ் ,நவ் வீ ஆர் ரெடி
பார் லெண்டிங் இன் சென்னை கேபின் க்ரூவ் ப்ளீஸ் பிரிப்பர் பார் லண்டிங் "
கூறினான் , அவனது அறிவிப்பிற்கு பிறகு அவர்கள் மீண்டும் பயணிகளை தங்களின்
இருக்கைகளில் அமர சொல்லி சீட் பெல்ட்டை மாட்டிக்கொள்ளுமாறு அறிவுப்பு கொடுத்தனர் .
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
சென்னை விமான நிலையத்தில் மிகவும் பத்திரமாக விமானம் தரையிறங்க , நடாஷாவிடம் தவறாக பேசிய அந்த நபர் , ஏர்போர்ட்டில்
நடாஷாவையும் ஜியாவையும் ஏளனமாய் பார்த்து விட்டு அங்கிருந்து செல்ல முனையும் நேரம் பார்த்து , ஏர்போர்ட் போலீஸ் செக்யூரிட்டி அவனை கைது செய்ய அவன் அவர்களிடம் ,
" என்ன சார் என்னை ஏன் அரெஸ்ட் பண்றீங்க " என்று போலீஸிடம் கேட்க ,அவர்கள்
" ஏர்ஹோஸ்டஸ் கிட்ட தகாத முரையில பேசினத்துக்காக உங்க மேலை மிஸ் நடாஷா கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க , ஸோ நீங்க கோஆப்பரேட் பண்ணி தான் ஆகணும் " என்று கூறி
அவனை விசாரணை அறைக்கு இழுத்து செல்ல , நடாஷா , ஜியா , ஆஷிக் , ஆதர்ஷ் மற்றும் அவர்களுடன் இருந்த சகா பணியாளர்களும் உடன் சென்றார்கள் .
விசாரணை அறையில் கைது செய்யப்பட்ட அந்த நபர் ,
" சார் என் பேரு வருண் , டெல்லியில சாப்ட்வெர் என்ஜினீயர் லீவ்ல அம்மா அப்பாவை பார்க்க வந்திருக்கேன் , நான் ரொம்ப நல்லவன் , நீங்க நினைங்கிற மாதிரியான ஆளு நான் இல்லை இவங்க பொய் சொல்றாங்க
நியாயப்படி கம்ப்ளயன்ட் நான் தான் குடுக்கணும் , இவங்க தான் என் கன்னத்துல அறைஞ்சாங்க " என்று ஜியாவை கை காட்ட , போலீஸ் ஆதிகாரிகள் அவனிடம் ," அவங்க அடிக்கிற அளவுக்கு நீ என்ன பண்ணினன்னு சொல்லு "
" நான் ஒன்னும் பண்ணலை , குடிக்க தண்ணி கிடைக்குமான்னு தான் கேட்டேன் " என்று அவன் கூற , ஜியா ஆவேசத்துடன் ," டேய் பொய் சொன்னா அவ்வளவு தான் " என்று மிரட்ட ,
நடாஷா ," அவன் பொய் சொல்றான் , சாப்பாடு குடுக்கும் போது வேணும்னே என் கையை பிடிச்சான் , அப்புறம் சீட் பெல்ட் போடும் போது ஷார்ட் ட்ரெஸ்ல அழகா இருக்க , இன்னைக்கு நைட் நான் பிரீ தான் கம்பெனி குடுக்குறியா எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்னு சொன்னான் , அதனால தான் ஜியா மேடம் இவனை அறைஞ்சாங்க "
" ஆமா சார் நடாஷா சரியா தான் சொல்றாங்க அவன் அப்படித்தான் கேட்டான் அதை என் கண்ணால நான் பார்த்தேன் " என்று ஜியா கூற
நடாஷா வருணிடம் ," நான் ஏர் ஹோஸ்டஸ் தான் என்னோட வேலை கஸ்டமர்ஸ்க்கு செர்வ் பண்றது தான் ஆனா அதுக்காக என்னை நிலைமையை யுஸ் பண்ணிக்க நினைச்சா நான் சும்மா இருக்க மாட்டேன் , டூ யு கெட் தட் " என்று கண்களில் கோபம் திமிர கூறியவளை கண்டு சில நொடிகள் ஆதர்ஷ்
பிரமித்து போனான் , பிரச்சனை என்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து கண்ணீர் வடிக்கும் பெண்களின்
மத்தியில் நடாஷா செயல் ஆதார்ஷை கட்டி போட்டது என்று தான் கூறவேண்டும்
டோமெஸ்டிக் ஏர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள போலீஸ் அதிகாரி அவன் மீது IPC செக்ஷன் 509 ( பெண்ணை தகாத வார்த்தையாலும் தவறான செய்கையாலும் இழிவுப்படுத்துதல் ) மற்றும் IPC 345A (பாலியல் துன்புறுத்தல் ) பிரிவின் கீழ் FIR பதிவு செய்து, வருணை கைது செய்தனர் .
சக ஊழியர்கள் அனைவரும் நடாஷாவின் துணிச்சலையும் அறிவு பூர்வமான செய்யலையும் கண்டு வியந்து பாராட்டினார் .
நேஹா நடாஷாவிடம் ,
" இந்த மாதிரி எங்களுக்கு நடந்த அப்போ எல்லாம் நாங்க கோபப்படுவோம் அழுவோம் அப்புறம் மறந்துட்டு அடுத்த வேலையை பார்க்க போயிடுவோம் ஆனா நீ பண்ணின மாதிரி இவ்வளவு பொறுமையா நாங்க ஹேண்டில் பண்ணினதே இல்லை உன்னை பார்த்ததுக்கு அப்புறம் இவனை மாதிரி ஆளுங்கள்லாம் ஏன்
சகிச்சிக்கணும்னு தோணுது எங்க எல்லாருக்கும் இது ஒரு நல்ல இன்ஸ்பிரெஷன் " என்று கட்டி தழுவிக் கொள்ள
நடாஷா ஜியாவிடம் ,"பல நேரங்கள்ல பிரச்சனைகளை எமோஷனலா திங்க் பண்ணாம இன்டெலிஜென்ட்டா சால்வ் பண்ண வேண்டிருக்க , நீங்க எமோஷன்ல அவனை அடிச்சிட்டீங்க பதிலுக்கு அவன் உங்களை ஏதாவது பண்ணிருந்தா என்னால யோசிக்க கூட
முடியலை மேம் . நான் ரொம்ப பயந்துட்டேன் ஆனா எனக்கு நீங்க ரொம்ப
சப்போர்ட் பண்ணுனீங்க அதுக்கு எப்பவும் நான் கடன் பட்டிருக்கேன் " என்று நடாஷா கூற ,
ஆஷிக் அவளிடம் ,"
இதெயெல்லாம் நீ ஒரு இன்டெலிஜென்ட்டான்னா ஆளு கிட்ட சொல்லணும்
நடாஷா " என்று ஜியாவை ஓரக்கண்ணால் பார்க்க ,
ஜியா ஆஷிக்கை பார்த்தவாறே
"எல்லாருக்கும் இன்டெலிஜென்ட்டா ஹேண்டில் பண்ண கூடிய ப்ராப்ளம் மட்டுமே வர்றது இல்லை நடாஷா " என்று அவளது தோளில் மெல்ல தட்டி மெலிதாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்றதும் நடாஷா ஆஷிக்கை பார்த்து ," என்ன சார் நீங்க , பாருங்க மேம் கோபமா போறாங்க , உங்க மேம்க்கு கோபப்பட கூட சொல்லித்தரனுமா என்ன ஏன் பேரை சொன்னாலே அவளுக்கு ஆட்டோமெட்டிக்கா கோபம் வரும் ,
அவளை விடு " என்றவன் ," கங்கிராட்ஸ் நடாஷா ஐம் ஸோ ப்ரவுட் ஆப் யு " என்று தன் பங்கிற்கு நடாஷாவை பாராட்டிவிட்டு , ஆதர்ஷிடம் வாஷ் ரூமிற்க்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் .
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
தன்னை பார்வையாலையே ஆதர்ஷ் விழுங்கி கொண்டிருப்பதை கண்ட நடாஷாவிற்கு உள்ளுக்குள் எதோ செய்ய , இருந்து அதை வெளியே காட்டிக் கொள்ளாதவள் , பதிலுக்கு தானும் பார்க்க ,அந்த பூவையின் காந்த பார்வையின் வீச்சை தாங்க முடியாதவன் உதட்டில் புன்னகையை தழுவ விட்டவாறே அவளின் அருகில் வந்து ,
" அழகா இருக்கன்னு சொன்னா ஒரு குற்றமா அதுக்கு போய் அந்த பையனை
ஜெயிலுக்கு அனுப்பிட்டியே மா " என்று கூற , பதிலுக்கு அவள் செல்லமாய் முறைப்பது தெரிய ,
" ஏய் சாரி சும்மா கிண்டல் பண்ணினேன் , எல்லாரும் உன்னை பாராட்டினாங்க , நானும் அதையே சொன்னா உனக்கு போரடிச்சிரும் அதான் சும்மா " என்ற ஆதார்ஷை பார்த்து புன்னகைக்க ,
ஆதர்ஷ் அவளிடம் ," ஒன்னு சொல்லட்டா "
" ம்ம் "
" நீ சிரிக்கும் பொழுது அழகா இருக்க , ஆனா என்னை ஜெயிலுக்கெல்லாம் அனுப்பிறாத " என்று சிரித்தவனை பார்த்து சிரிக்க , பதிலுக்கு நடாஷா சிரிக்க ,ஆதர்ஷ் அவளிடம்
"என்கூட ஒரு கப் காஃபி சாப்பிடுறியா " என்று சிறு தயக்கத்துடன் கேட்க ,
"ஆனா ஃப்ளையிட்க்கு டைம் ஆகிடுச்சே " என்றவளை பார்த்து ஆதர்ஷ் ,
" அதுக்கு இன்னும் டைம் இருக்கு ஒரு கப் காஃபி தானே " என்றவனை பார்த்து புன்னகைக்க , இருவரும் சென்று ஒரு டேபிளில் அமர்ந்து கொண்டு காஃபிக்காக காத்துக்கொண்டிருக்க ஆதர்ஷ் அவளிடம் ,
" இருந்தாலும் நீ பண்ணினது ரொம்ப பெரிய விஷயம்ன்னு தான் சொல்லணும் ,
இப்படி ஒரு சூழ்நிலையை இவ்வளவு பொறுமையாவும் பக்குவமாவும் தைரியமாவும் நீ ஹேண்டில்
பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை ,
எல்லா பொண்ணுங்களும் தங்களோட பிரச்சனையா ஹேண்டில் பண்றதுக்கான மன வலிமையை கண்டிப்பா வளர்த்துக்கணும் அது பொண்ணுங்களுக்கும் ரொம்பவே அவசியம் " என்றவனை , நொடிப்பொழுது கூட கண்ணிமைக்காமல் நடாஷா பார்த்துக்கொண்டிருக்க , ஆதர்ஷ் அவளிடம் ," ஏய் என்னாச்சு அப்படி பார்க்குற நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா "
" என்னால நம்ப முடியலை "
" எதை நம்ப முடியலை " என்று சுற்றும் முற்றும் பார்த்தவனை பார்த்து ,
" இதை இந்த நிமிஷத்தை , நீங்க என் கூட உட்கார்ந்து காஃபி சாப்பிடுறத, நீங்க இதுவரை தனியா ஒரு பொண்ணுகூட இப்படி காஃபி
சாப்பிட்டு நான் பார்த்தது இல்லை "
" மனசுக்கு தோனனும்ல " என்று அவன் கூறியதில் மெலிதாய் புன்னகைக்க , ஆதர்ஷ் காஃபியை அருந்தியவாறே ,
" ஆமா நடாஷா உனக்கு என்னை பத்தி எல்லாமே தெரியுமா என்ன " என்று கேட்க ,அதற்க்கு நடாஷா என்ன பதில் கூறவேண்டும் என்று புரியாமல் பார்க்க , ஆதர்ஷ் தன் புருவத்தை உயர்த்தி ' நான் கேட்டதற்கு பதில் எங்கே ' என்பது போல் தன் கண்களாலே பார்க்க ,
" டைம் ஆகிடுச்சு " என்று எழுந்தவளை ,பார்த்து ஆதர்ஷ்
" ம்ம் நில்லு நானும் உன்கூட தானே வரப்போறேன் சேர்ந்தே போகலாம் " என்று அவளுடன் செல்ல , இருவருக்கும் இடையை இருக்கரங்கள் உரசுகின்ற அளவிற்கு மட்டுமே இடைவெளி இருந்தாலும் , அங்கே மௌனம் மட்டுமே வார்த்தையாகி கண்களாலே பேசிக்கொண்டனர் .
இருவருக்குமே இது ஒரு புது வித அனுபவமாக இருந்தது .
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#6
அவர்களிடம் வாஷ் ரூமிற்க்கு சென்று வருவதாக கூறியவன் , ஜியாவை தேடி அங்கும் இங்கும் அலைந்தான் . எங்கே தேடியும் கிடைக்காத ஜியா லேடிஸ் வாஷ் ரூமில் இருந்து விமான ஊழியர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு செல்வதை கண்ட ஆஷிக் புன்னகைத்தவாறே ,அவள் பின்னாலே சென்று , அவளது காதில் சற்றென்று ," ஹாய் " என்று கூற
அவளோ அவனை கண்டு கொள்ளாமல் செல்ல , மீண்டும் சென்று அவளது முன்னாள் நின்றவன் ," நான் ஒன்னும் பண்ணமாட்டேன் "
என்று கண்ணடிக்க
" என்ன வேணும் உனக்கு "
" அது நிறையா வேணும் , இப்போதைக்கு ஒன்னே ஒன்னு "
"
என்னை தொல்லை பண்ணாம நேரடியா விஷயத்துக்கு வா "
" சரி கூல் கூல் ,அந்த பையனை ஒருவழி பண்ணிட்ட போல"
"இதை கேட்க தான் வந்தியா " என்றவள் அங்கிருந்து செல்ல போக
" இல்லை இல்லை வேற ஒன்னும் கேட்கணும் . அன்னைக்கே கேட்கணும்னு நினைச்சேன் , நீ லண்டன் ரீடெர்ன்ஸ்ன்னு எல்லாரும் சொன்னாங்க , என்ன ஏதும் வெள்ளைக்காரனையோ கருப்பனையோ உஷார் பண்ணிட்டியா??? " என்று அவளை கிண்டல் செய்வது போல் நினைத்து கொண்டு தன் மனதில் உள்ளதை கேட்க
அவன் ஏன் கேட்கிறான் என்பதை உணர்ந்தவள் ," ஆமா , ஆனா அவரு வெள்ளைக்காரனும் இல்லை கருப்பனும் இல்லை .
அவருக்கு நம்ம ஊர் , என்கூட ஒண்ணா ஒர்க் பண்ணினவரு , அவரு இப்போ ஆஸ்திரேலியால இருக்காரு , குழந்தைங்க படிப்புக்காக நான் இந்தியால , அவரு நெக்ஸ்ட் இயர்ல இருந்து இந்தியாவே வந்திருவேன்னு சொல்லிருக்காரு " என்றவள் ,
அவன் ஏதும் பதில் கூறுவதற்குள், மேலும் தொடர்ந்து
" பையன் பர்ஸ்ட் படிக்கிறான் , பொண்ணு LKG ரெண்டு பேரையும் விக்காசுல தான் சேர்த்திருக்கேன்"
என்றவள் தன் கை கடிகாரத்தை பார்த்து ,
" ஃப்ளையிட்க்கு டைம் ஆச்சு ஆஷிக் நான் போகணும் "என்று அவள் இதை அனைத்தையும் கொஞ்சம் கூட சிறு உளறல் இல்லாமல் அவனது கண்களையே பார்த்து கூற , ஆஷிக்கின் முகத்தில் சோகம் குடிகொண்டது .
அவளோ அதை ரசித்தவாறு அங்கிருந்து செல்ல சில நொடிகளில் அவன் பக்கம் திரும்பி ,
" பாரு நீயும் நானும் ஒரே ஃப்ளையிட்க்கு தான் போகணும் ,ஆனா நான் மட்டும் எதோ தனியா போற மாதிரி சொல்றேன் , உனக்கும் டைம் ஆச்சுல வா சேர்ந்தே போகலாம் " என்று வேண்டும் என்றே கேட்க , கவலையாய் இருந்த ஆஷிக் , அவளிடம்
" இல்லை ஜியா நீ போ , நான் ஆதர்ஷ் கூட வந்துருவேன் " என்று கூற
" ஓகே பாய் ஆஷிக் " என்று தன் புன்னகைகை அடக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றவள் ,
கொஞ்சம் யோசித்து விட்டு , அவன் பக்கம் திரும்பி ,
"ஆஷிக் என் ஹப்பி பேரு கார்த்திக் ,
ஸோ இனிமே என்னை கூப்பிடும் போது ஜியா கார்த்திக்குனே கூப்பிடு ,
ஐ லைக் தட் " என்று அவள் கூறியதை கேட்ட ஆஷிக் நொறுங்கிய போனான் , பதில் ஏதும் கூற முடியாமல் விக்கிவிதைத்து, வாய் வார்த்தை ஏதும் இன்றி மவுனமாய் நின்றான்.
இரவு ஒரு பத்து மணி அளவில் ஆஷிக் ஆதர்ஷ் வீட்டின் காலிங் பெல்லை அழுத்த , கதவை திறந்த ஆதர்ஷ் ," டேய் ஆஷிக் இங்க என்னடா பண்ற "
" ஏன் வர கூடாதா "
" இல்லடா தியா கூட மூவி போறேன்னு சொன்னியே அதான் கேட்டேன்"
" ஆமா போனேன் அப்புறம் வந்துட்டேன் இப்போ என்ன , உள்ள வரலாமா இல்லை இங்கையே விசாரிச்சிட்டு இருக்க போறியா " என்று அவனை இடித்துவிட்டு உள்ளே வந்து சோபா மீது அமர்ந்து கொண்டு ஆதர்ஷிடம்
" டேய் நான் உன்கிட்ட ஒன்னு கேக்க போறேன் "
" இது பத்தாவது தடவ "
" என்ன , 'நான் உன்கிட்ட ஒன்னு கேட்க போறேன்னு நீ சொல்றது ' முடியல டா என்னால "
" சரி மச்சான் நான் இருக்கேன் "
" ஆமா"
" ஜியா என்ன விட்டுட்டு போனதுக்கு அப்புறம் இதனை நாள்ல நான் பொண்ணுங்க கூட சுத்திருக்கேன் ஆனா ஜஸ்ட் பிரண்ட்லியா , டேய் " என்று ஆதார்ஷை தட்டியவன் ," அமைதியா இருக்காதா ஆமான்னு சொல்லுடா அப்போ தான் எனக்கு சொல்ல வரும் "
"ஆமா "
" இது வர நான் யார்கூடையும் கமிட் ஆகல "
" ம் , டேய் விஷயத்தை சொல்லுடா "
" சொல்றேன் நான் இன்னும் யாரையும் கல்யாணமும் பண்ணிக்கல "
" அட ச்ச சொல்லி தொலையெண்டா"
" ஜியா இருக்காள்ல " என்று ஆரம்பிக்க
" மறுபடியும் முதல்ல இருந்தா" என்று கலங்கியவன் சற்றென்று டைனிங் டேபிளில் இருந்த கத்தியை எடுத்து ஆஷிக்கின் கழுத்தில் வைக்க
" என்னடா பண்ற "
" என் பொறுமையை நீ ரொம்ப சோதிக்குற , டர்ன் அரௌண்ட் ட்ரிப் பாத்துட்டு செம டயர்டுல இருக்கேன் என்னை கொலைகாரனா ஆக்காத , சொல்ல வந்ததை ரெண்டு நிமிஷத்துல சொல்லு " என்று கெடுவிதிக்க
நடந்த எல்லாவற்றையும் கூறி முடிக்க
" இதுல என்ன டா இருக்கு "
" நான் இன்னும் கல்யாணம் பண்ணல அவ மட்டும் "
" நீ பண்ணலன்னா அவ ஏண்டா பண்ண கூடாது , ஏய் வெயிட் பண்ணு அவ தான் உனக்கு வேண்டாமே அப்புறம் என்ன வெங்காயத்துக்கு இதெல்லாம் கேக்க , வா வந்து படு எனக்கு தூக்கம் வருது "
" டேய் இந்த ஒரு கேள்விக்கு மட்டும் ஆமா இல்லன்னு பதில் சொல்லிட்டு போ டா "
" ஆ என்ன "
" கல்யாணம் ஆகிருக்குமா இல்லையா "
" என்கிட்ட ஏன்டா கேக்குற "
" சொல்லுடா "
" ஒன்னு பண்ணு நேரா அவ வீட்டுக்கு போய் குழந்தைங்க இருக்காங்களா இல்லையானானு நீயே பார்த்துட்டு வா "
" செம ஐடியா டா , வா டா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திருவோம் " என்று கூற
கடுப்பான ஆதர்ஷ் " வாடா " என்றவாறு அவனை ஹாலில் தள்ளி கதவை சாத்திவிட்டு , தான் சென்று படுத்துகொண்டான் .
" டேய் கதவை திறடா"
" நீ எவ்ளோ தட்டினாலும் நான் திறக்கமாட்டேன் " என்று கூறிவிட்டு தலையணையை வைத்து தன் காதை மூடியவாறு தூங்க
" டேய் உனக்கு அவ்ளோ ஆகிப்போச்சா , என்னைக்காவது உனக்கும் என் உதவி
தேவைப்படும்டா அப்போ உன்னை பார்த்துக்கிறேன் , எனக்கு யார் உதவியும் தேவை இல்லை " என்றவன் தன் காரில் ஏறி அமர அப்பொழுது தான் அவனுக்கு ரோஹித்தின் நியாபகம் வர , அவனுக்கு கால் செய்தான்,
கடைசி ரிங்கில் எடுத்தவன் ," என்னடா இந்த நேரத்துல "
" சந்தீப் சாருக்கு கால் பண்ணினேன் அவரு அட்டென்ட் பண்ணலை , பத்து நிமிஷத்துல அவரை கூட்டிட்டு ஆபிஸ்க்கு வா " என்றதுடன் தன் போனை துண்டிக்க
" இப்பவா " என்றவனுக்கு அங்கிருந்து எந்த பதிலும் வராமல் இருக்கவே அவன் தன் காலை துண்டித்தது தெரிய தன்னை நொந்துகொண்டவாறு பாதி தூங்கியும் தூங்காமலும் சந்தீப்பை அழைத்து கொண்டு ரோஹித் அங்கே சென்றான் .
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#7
குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தவன் அவர்களை கண்டதும்
" என்ன இது இவ்வளவு பொறுப்பில்லாம இருக்கீங்க , பத்து நிமிஷத்துல வர சொன்னா பதினைஞ்சி நிமிஷம் கழிச்சி வந்திருக்கீங்க , சார் நீங்களாவது கொஞ்சம் பொறுப்பா இருக்க வேண்டாம் " என்றவனை பார்த்து ரோஹித் முறைக்க , சந்தீப் அவனிடம்
" ஏன்பா கேட்கமாட்ட , என்ன விஷயம் பா சொல்லு இந்த நேரத்துல வர சொல்லிருக்க "
" நம்ம கிட்ட வேலை பார்க்குறவங்களோட ஸ்டாப் பயோ டேட்டா வேணும் " என்று கூற ,
" அதை வச்சிட்டு நீ என்னடா பண்ண போற " என்ற ரோஹித்திடம் ,"உன் நண்பனுக்கு இது கூட தரமாட்டியாடா , என் நட்புன்னா என்னன்னு தெரியுமா , நீ என் தளபதி டா " என்று கூற ,
ரோஹித் " டேய் போதும் டா தூக்கம் வேற கண்ணை கெட்டுதுடா என்னால முடியலை சார் அவன் கேட்டதை எடுத்துட்டு வாங்க " என்று சந்தீப்பிற்கு உத்தரவு கொடுக்க,
அவர் வாட்சமனின் உதவியோடு அத்தனை ஃபைல்ஸையும் கொண்டுவந்து கொடுக்க ஆஷிக்கோ சற்று எரிச்சல் அடைந்தான் , இத்தனையும் பார்க்கும் அளவுக்கு பொறுமை சாலியாக இருந்திருந்தால் இவன் இந்த ராத்திரி இப்படி எல்லாருடைய தூக்கத்தையும் கெடுத்திருக்க மாட்டானே .
சந்தீப்பின் முன்னாள் எதுவும் கூற முடியாதவன் அவர்களை பார்த்து அசடு வலிய, அவர்களுக்கும் இவனது செய்கை ஒன்றும் புரியாமல் போக இவனையே உற்று கவனித்து கொண்டிருந்தனர் ,நேரடியாக தனக்கு வேண்டியதை கூற முடியாமல் ஒவ்வொரு ஃபைலாக பார்க்க , அவன் தேடிய எதுவும் கிடைக்காமல் போக .
" என்ன சார் இது பாதி ஜென்ஸ் ப்ரோஃபைலா இருக்கு "
" நம்மளோடது ஏர்லைன்ஸ்ப்பா இங்க பொண்ணுங்க ரெசெப்ஷன்னிஸ்ட் அப்புறம்
ஏர் ஹோஸ்டர்ஸ் மட்டும் தான் லேடிசா இருப்பாங்க மத்தவங்க எல்லாரும் ஜென்ஸ் தான இருப்பாங்க "
" இல்ல ரெசெப்ஷன்னிஸ்ட் ஏர் ஹோஸ்டர்ஸ் இவங்க எல்லாரையும் தாண்டியும் வேலைப் பார்ப்பாங்கள்ல , நல்லா யோசிங்க "
" ஆமா பாத்ரூம் கிளீன் பண்றவங்க "
" என்ன பாத்ரூம் ச்சீ , என்ன சார் நீங்க " என்று அவன் எரிச்சல் அடைய
" சார் எக்ஸாக்ட்டா என்ன வேணும்ன்னு சொன்னீங்கன்னா எங்களுக்கு ஈஸியா இருக்கும் "
" டாக்டர்ஸ் " என்று மெல்லமாக கூற , தன் நண்பன் யாரை பற்றி கூறுகின்றான் என்பதை புரிந்து கொண்ட ரோஹித் , கேலியாக ஆஷிக்கை பார்க்க , ஆஷிக் ரோஹித்தை பார்த்து அசடு வழிந்தவாறு நிற்க , சந்தீப் அவன் கேட்ட ஃபைலை எடுத்து வந்து கொடுக்க , ஒவ்வொன்றாக பேருக்கு புரட்டியவன் ஜியாவின் ப்ரோஃபைல் வந்தவுடன் நேராக அவளது பெயரை பார்க்க , வெறும் ஜியா என்று மற்றும் இருக்க , பின்பு பெர்சனல் டீடைல்ஸ் பக்கம் பார்க்க , அவளுக்கு மட்டும் எதுவும் இல்லாமல் இருக்க .
" என்ன பர்சனல் டீடெயில்ஸ் எதுவும் இல்ல "
" அது அவங்க இப்போதான் ஜாயிண்ட் பண்ணினாங்க நாளைக்கு தரேன்னு சொன்னாங்க " என்று சந்தீப் கூற
எரிச்சலோடு சோபா மீது அமர்ந்தான் , பின்பு அங்கிருந்து எழும்பியவன் ஃபைலை எடுக்க ," தம்பி விடுங்க நான் பார்த்துகிறேன் " என்று கூற ,
" சரி சார் " என்று கூறிவிட்டு அங்கிருந்து நடையை கெட்ட
அப்பொழுது சந்தீப் ," ஆஷிக் " என்று அழைக்க
" ம்ம் சொல்லுங்க சார் "
" ஜியா மேடம்க்கு இன்னும் கல்யாணம் ஆகலை அவங்க இன்னும் சிங்கிள் தான் கிறீன் வில்லா ரெஸிஸிடென்ஷியல் அபார்ட்மெண்ட்ல தான் இருக்காங்க "
" இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க "
" தெரியும் தம்பி , இது தான்னா போன்லையே கேட்டிருக்கலாம் " என்று அவர் கூற ,
" சாரி அங்கிள் " என்று அசடு வழிந்தவன் . தன்னை வெறித்து பார்த்து கொண்டிருந்த ரோஹித்திடம் ,"
பார்த்தியாடா என்கிட்ட கல்யாணம் ஆகிட்டுன்னு பொய் சொல்லிருக்கா , ஆனா நான் தான் கண்டு புடிச்சிட்டேனே" என்று கண்சிமிட்ட , அவனை பார்த்து முறைத்த
ரோஹித் ,
" கொஞ்சமாவது உனக்கு மனசாட்சி இருக்காடா , அவளுக்கு கல்யாணம் ஆகிட்டான்னு தெரிஞ்சிக்கவா டா எங்க எல்லாருடைய தூக்கத்தை கெடுத்த ,
டேய் இன்னைக்கு அவ உன் கூட தானே டெல்லி பிளையிட்ல வந்தா ,பசேஞ்சர் லிஸ்ட்டை பார்த்திருப்ப தான டா ஏண்டா சாகடிக்கிற " என்று புலம்பிய ரோஹித்தின் கன்னத்தை புடித்து கிள்ளியவன் ,
" சாரி டா செல்லம் கோபப்படாதடா " என்று கொஞ்ச ,
ரோஹித் ஆஷிக்கிடம்
" கொஞ்சினதெல்லாம் போதும் , என்னடா நடக்குது " என்று கேட்க அவன் கேட்ட எதையும் தன் காதில் வாங்காதது போல ,
" சரி டா நாளைக்கு பார்ப்போம், நல்லா தூங்கு பாய் " என்று கூறி ,ரோஹித்தை பார்த்து கண்சிமிட்டியவாறே அங்கிருந்து கிளம்பினான்.
அவன் சென்றதும் ரோஹதித் " நீ சந்தோஷமா இருக்கிறத பார்க்கும் பொழுது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா . ஆனா , மறுபடியும் நீ கவலை படுற மாதிரி எதுவும் நடத்துற கூடாது , இதே சந்தோஷம் எப்பவும் நிலைக்கணும் டா " என்று தன் மனதிற்குள் ஆஷிக்கை நினைத்து கவலை கொண்டிருக்க , ஆனால் ஆஷிக்கோ இது எதை பற்றியும் யோசிக்காமல் புன்னகை தன் முகத்தில் தாண்டவம் ஆட ,
ஜியாவிற்கு கல்யாணம் ஆகாதததை எண்ணி சந்தோஷமாக இருந்தான் .
38306076.jpg
 
Last edited:

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#8
காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது , அவள் கூறிய வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு நினைவிற்கு வர
" ரெண்டு குழந்தைங்களா ம்ம் , கிறீன் வில்லா ரெஸிஸிடென்ஷியல் அபார்ட்மெண்ட் தானே இதோ வரேண்டி " என்றவன் சில மணிநேரத்தில் அபார்ட்மென்டின் வாயிலை அடைந்தான்
ஆஷிக் அப்பார்ட்மென்டின் உள்ளே செல்வதை பார்த்த வாட்ச்மன் ,
" சார் இந்த நேரத்துல எங்க போறீங்க நீங்க யாரு "
" நான் இந்த அபார்ட்மெண்ட் " என்று அவன் முடிப்பதற்குள்
" நீங்க இந்த அபார்ட்மெண்ட் இல்லையே "
என்றவரிடம்
" ஆமா இல்லை நான் இந்த அபார்ட்மெண்ட் இல்லை,
நான் பக்கத்து அபார்ட்மெண்ட் " என்று உள்ளே செல்ல போனவனை ,தடுத்தவர் ,
" சார் எங்க போறீங்க யாரை பார்க்கணும்
" ஜியா ஜியாவ பார்க்கணும் "
"அவங்களை எல்லாம் இப்போ பார்க்க முடியாது காலையில " என்பதற்குள் , ஆஷிக் அவனுக்கு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்டி
" இப்போதும் நான் காலையில தான் வரணுமா "
" இல்ல சார் இது உங்க அப்பார்ட்மெண்ட் எப்ப வேணும்னாலும் வரலாம் "
என்று அசடு வழிய,
" சரி அவங்க எந்த ப்ளாக் "
" இது உள்ள போறதுக்கு மட்டும் தான் சார் " என்று அவன் தலையை சொரிய ,
அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்பதை உணர்ந்த ஆஷிக் மறுபடியும் இன்னொரு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்ட ,
" பி பிளாக் டவெல்வத் ப்ளோர் , நம்பர் 75 " என்று ஒப்பிக்க ,
அவன் ஆஷிக்கை பார்த்து " சார் அடிக்கடி வாங்க " என்று கூற இவன் சிரித்தவாறே உள்ளே சென்றான் .
ஜியாவின் இல்லத்தில்,
"என்ன டாக்டர் சொல்றீங்க , நான் ப்ரக்னென்டா இருக்கேன்னா , இது எப்படி முடிஞ்சிது " என்ற பெண்மணி மயங்கி விழ, சிறிது நேரத்தில் பெட்டில் மயக்க நிலையில் இருந்த பெண் கண்முழித்து ,
' ஏன் இப்படி பண்ணுனீங்க ' என்ற கேட்டுவிட்டு மீண்டும் மயக்க நிலையை அடைய , யாரோ இருவருவர் ஜியாவை பின்னால் இருந்து தள்ளிவிட்டனர் .
அங்கே வந்த ஆஷிக் அவளது வீட்டின் காலிங் பெல்லை அழுத்த ,
ஜியா ," நோ , என்னை விட்ருங்க " என்று பயத்தில் கத்த ,
முகமெல்லாம் வியர்த்த நிலையில் இருந்தவளுக்கு அப்பொழுதான் தான் கண்டது அனைத்தும் கனவு என்று புரிய தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் தன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்திக்கொண்டிருக்க , காலிங் பெல்லின் சத்தம் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது .
சத்தத்தை கேட்டவள் சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்க்க அது சரியாக மணி பன்னிரெண்டை காட்டியது ,
" இந்த நேரத்துல யாரா இருக்கும் " என்றவாறு கதவின் அருகில் சென்றவள் .
"
வரேன்" என்றவாறு சிறு தயக்கத்துடன் கதவை லேசாக திறந்தவள் செக்யூரிட்டி சேன் வழியாக பார்க்க ,
ஆஷிக் " ஹாய் "
என்று புன்னகைக்க
" நீயா??? "
என்று ஜியா எரிச்சல் அடைய
" ஆமா நான் தான் "
என்ற ஆஷிக்கிடம் கோபமாய்
" என்ன வேணும் "
என்று ஜியா கேட்டாள்.
" உன் குழந்தைங்களை பார்க்கலாம்னு வந்திருக்கேன் "
" இப்போவா அவங்க தூங்குறாங்க "
" நான் தான பார்க்க போறேன் "
" ஆஷிக் நான் திறக்க மாட்டேன் வெளியேவே கிட " என்று கதவை மூட போனவளை .பார்த்து
" சரி இப்போ நீ திறக்கலைனா நான் கத்தி ஊரை கூட்டுவேன் உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே " என்று கத்த
உடனே ஜியா கதவை திறந்து
ஆஷிக்கை உள்ளே இழுத்து கதவை சாற்றினாள்.
Picture4.jpg
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#9
" என்ன வேணும் உனக்கு "
" ஜியா , சாரி சாரி mrs ஜியா கார்த்திக் சரியா , உங்க குழந்தைங்களை எங்க தூங்கிட்டாங்களா "
" இப்போ நீ வெளிய போகப்போறியா இல்லையா " என்று அவள் கூற , அதை பொருட்படுத்தாதவன் மேலும் முன்னரே , தன் கரங்கள் கொண்டு அவனை
தடுக்க ,புன்னகைத்தவன் சற்றென்று அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு அறையின் கதவை திறக்க மெத்தை வெறுமையாகய் இருந்ததை கண்டு .
" என்ன குழந்தைங்க நைட் ஸ்டடி பண்ண போயிருக்காங்களா "
" அது வந்து அவங்க "
"அவங்க "
" எப்படி எப்படி பெரியவன் பர்ஸ்ட் படிக்கிறான் சின்ன பொண்ணு LKG செம , ஆனா பேபி நியாபகம் இருக்கா லவ் பண்ணும் போது நீ பையன் மட்டும் போதும்னு சொன்ன நான் தான்
பையன் பொண்ணு ரெண்டு பேரும் வேணும்னு சொன்னேன் கடைசில என் டெசிஷனுக்கு மாறிட்ட போல "
" ஷட் அப் "
" ஷட் அப் ,ஓகே ஜியா நீ இந்த மாதிரியெல்லாம் ட்ராமா பண்ணி என்ன ப்ரூவ் பண்ணனும்னு நினைக்கிற ,நீ இந்த மாதிரியெல்லாம் சொன்ன நான் ஜெலஸ்
ஆவேன்னு நினைக்கிறியா "
" நான் நினைக்கிறது தான் , உன் முகத்திலேயே தெரிஞ்சுதே "
" ஸோ , உனக்கு என்னை பத்தி எந்த கவலையும் இல்லை "
" கண்டிப்பா "
" அத என் கண்ணை பார்த்து சொல்லு "
" ஆஷிக் எனக்கு உன்னை பத்தி எந்த கவலையும் இல்லை , நான் எப்பவோ மூவ் ஆன் பண்ணிட்டேன் "
என்று ஜியா அவனது கண்ணை பார்த்து கூற,
ஆஷிக்,"நான் நம்ப மாட்டேன் "
"லுக் நீ மூவ் ஆன் பண்ணலன்னா நான் ஒன்னும் பண்ண முடியாது "
" பொய் சொல்ற நீ மூவ் ஆன் பண்ணல , நீ மூவ் ஆன் பண்ணிருந்தா இன்னும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம தனியாவே
இருக்க "
" யார் சொன்னாங்க தனியா இருக்கேன்னு . எனக்கு கல்யாணம் ஆகல , ஆனா எனக்கு பாய் ப்ரெண்ட் இருக்காங்க . நான் மூவ் ஆன் பண்ணிட்டேன்ங்கிறது உண்மை தான் , அதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும் " என்று அவள் செல்ல போக , அவளது கரம் பிடித்திழுத்தவன் .
" உன் லைஃப்ல வேற ஒருத்தன் இருக்கான்னு நீ சொல்றத நான் நம்பனும் . நல்லாவே பொய் சொல்ற அதை உன் கண்ணுக்கும் கொஞ்சம் சொல்லிக் குடு பாவம் அதனால பொய் சொல்ல முடியலை , இப்பவும் உன் கண்ல எனக்கான காதலை நான் பார்க்குறேன் எப்படி உனக்கான
காதல் என் கண்ல தெரியுதோ அதே மாதிரி "
" முட்டாள்தனம் "
"இல்லை இது தான் உண்மை ரெண்டு பேருமே உண்மையா காதலிச்சோம்ன்னு
உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் என்னால மூவ் ஆன் பண்ண முடியலைன்னா உன்னாலையும் பண்ண முடியாது"
" உண்மை அதுவும் உன் கிட்ட , ஆஷிக் நான் மூவ் ஆன் பண்ணிட்டேன் "
" அப்படியா ,இத்தனை வருஷம் கழிச்சு என்னை பார்க்கும் போது உனக்கு ஒன்னுமே தோணலை "
" இல்லை "
" நான் உன்னை சுத்தி சுத்தி வரும் போது உனக்கு எதுவும் தோணலை "
" இல்லை "
" உன்கிட்ட நெருக்கமா வரும் போது கூடவா"
" இல்லை இல்லை எத்தனை தடவை சொல்றது , எனக்கு எந்த பீலிங்க்ஸும் இல்லை "
என்றாள் அழுத்தமாக
" அப்படியா அப்போ நிரூபிச்சு காட்டு "
"சரி என்ன பண்ணனும் "
" பத்து நிமிஷம் நீ என் கண்ணை மட்டும் பார்க்கணும் "
" சரி " என்று அவள் அவனது கண்ணையே பார்க்க
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#10
அவன் ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி முன்னேறி வர , தனக்கு ஏற்பட்ட படபடப்பை வெளி காட்டாமல் நின்ற இடத்திலே நிற்க , இருவருக்கும் இடையே நூலளவு இடைவெளி மட்டுமே இருந்தது .
" இப்போ கூட உனக்கு எதுவுமே தோணலையா "
" இல்லை " என்றாள் ஆனால் முன்பை விட இந்த முறை அழுத்தத்தில் சிறிது தளர்வு .
அவன் மெல்ல அவளது கரத்தை தன் கரம் கொண்டு கோர்க்க , அவளது பார்வை சற்று கீழே செல்ல ," நோ லுக் இன்டூ மை ஐஸ் " என்று அவன் செய்கை செய்ய .
இவளது இதய துடிப்பின் வேகம் இன்னும் அதிகரிக்க , கோர்த்த அவளது கைகளை மெல்ல தன் இதழால் ஒற்றி எடுத்தவன் .

Picture5.jpg
முன்னால் கிடந்த அவளது கேசத்தை ஒதுக்கிவிட்டு மெல்ல அவளது கழுத்தின் மிக அருகில் சென்று இதழ் பதிக்க அவ்வளவு தான் , அவனது காதுக்கு கேட்க்கும் அளவிற்கு அவளது இதய துடிப்பின் வேகம் கூடியது
" இப்பவும் ஒன்னும் தோணலையா " என்ற அவனது கேள்விக்கு பதில் சில நொடிகள் கழித்து அதுவும் மெல்லமாக விட்டு விட்டு ," இல்லை " என்று வர .
லேசாய் புன்னகைத்தவன் ,மேலும் அவளை நெருங்க அவளை அறியாமலே அவளது கால்கள் பின்னோக்கி
சென்று சுவற்றின் மீது மோதி நிற்க தன் இருக்கரங்களை சுவற்றின் மீது வைத்து அவளது முன்னாள் வந்து நின்றவன் .
தன் விரல் கொண்டு அவளது முகத்தில் வருட ,
ஆஷிக்கின் வருடலால் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் மேனி சிலிர்த்தவள் தன் இரு கண்களையும் மூட
" நோ ஐஸ் ஓபன் " என்ற ஆஷிக் மெல்ல தன் இதழை குவித்து அவளது கன்னத்தை நோக்கி ஊத,
மேனி சிலிர்த்தவள் தாபமாய் "ஆஷிக் " என்று மென்மையாக கூற இவளது பெண்மையின் மென்மையில் தன் ஆண்மையை துலைத்து மெல்ல கிரங்கியவன் , மெல்ல அவளது கன்னங்கள் உரசியவாறு அவளது காது மடல்களில் அவளுக்கு
மட்டும் கேட்க்குமாறு ," என்ன " என்று கிசு கிசுக்க .
" பத்து நிமிஷம் " என்று அவள் கூறியதில் மெல்ல சிரித்தவன்
" இன்னும் தர்ட்டி செகண்ட்ஸ் இருக்கு " என்று கூறி அவளது கன்னங்களை உரசியவாறே
" இன்னும் உனக்கு எதுவம் தோணலையா " என்றவனது கேள்விக்கு அவளிடம் இருந்தது எந்த பதிலும் வராமல் போக . புன்னகைத்தவாறே மெல்ல அவளது இதழ் நோக்கி குனிய , அதை தடுக்க நினைத்த அவளது மூளையை அவளது உணர்வுகள் வெல்ல தன் கண்களை மட்டும் மூடிக்கொண்டாள் .
சிறிது நேரம் அதை ரசித்தவன் , அவளது மூக்கின் நுனியை தன் விரல் கொண்டு
தட்ட .
சற்றென்று தன் கண்களை திறந்தவள் அவனை பார்க்க , அவனோ
" பத்து நிமிஷம் முடிஞ்சிருச்சு , எனக்கான பதிலும் கிடைச்சிருச்சு " என்று கண்சிமிட்டிய ஆஷிக்கை . ஜியா வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க,
அவர்களது மோனா நிலையை கலைக்கும் விதமாய்
ஜியாவீட்டின் கதவை ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு தம்பதியர் தட்டினர் .
Picture6.jpg
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top