• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - 02

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
bepannaah_official1_31338854_219084202200802_2606427450770456576_n.jpg
சுற்றிலும் இருள் சூழ்ந்து இருக்க வேகமாக தன் பைக்கில் ஆள் அரவமற்ற அந்த சாலையில் பறந்து சென்று கொண்டிருந்தான் அஜய்ராஜ்.


ஆறு அடி உயரம், அழகிய உருவம் ஆப்பிள் போல இருப்பானே என்ற பாடல் வரிகள் அவனுக்கு கச்சிதமாக பொருந்தும்.


ஆனால் அவன் முகத்தில் மருந்துக்கேனும் சிரிப்பு என்பது இருக்கவில்லை.


இருபத்து எட்டு வயதை நெருங்கி கொண்டிருக்கும் அஜய்ராஜ் அஸிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்.


கடுமையான முகத்துடன் விசாரணைகளை மேற்கொள்வதால் என்னவோ வெளி உலகில் அவன் சிரித்தே பல வருடங்கள் ஆயிற்று.


ஆனால் வீட்டில் எப்போதும் கலகலப்பாக இருக்கும் அஜய் சில தினங்களாக வீட்டிலும் தன்னை மறந்து சுற்றி கொண்டு இருந்தான்.


நைட் டியூட்டி முடிந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த அஜயின் முகத்தில் பல்வேறு சிந்தனைகள் இன்னும் ஓடி கொண்டேயிருந்தது.


சிந்தனை வாய்ந்த முகத்துடன் வீட்டுக்குள் நுழைந்த அஜய்ராஜ் எதிரில் தன்னையே பார்த்து கொண்டு நின்ற தன் அன்னை கனகாவை கண்டு கொள்ளாமலேயே அவரை கடந்து தன்னறைக்குள் சென்று நுழைந்து கொள்ள கனகா குழப்பமாகவும், கவலையாகவும் அஜயை பார்த்து கொண்டு நின்றார்.


"என்ன கனகா யோசிச்சுட்டு இருக்க???" என்றவாறு வந்த தன் கணவர் ராஜஷேகரைப் பார்த்த கனகா


"எல்லாம் அஜயை பற்றி தான்....இந்த பையன் வர வர சரியா யாரு கூடவும் பேச மாட்டேங்குறான்....சரியாக சாப்பிட மாட்டேங்குறான்.....அவன் மனசுல என்ன தான் இருக்குதுனுலே தெரியல....." என்று வருத்தமாக கூறவும்


அவர் தோளில் ஆதரவாக கை போட்டு கொண்ட ராஜஷேகர்
"விடும்மா வேலை டென்ஷனா இருக்கும்...நீ போய் டின்னர் ஏற்பாடு பண்ணு....நான் போய் அஜயை கூட்டிட்டு வர்றேன்....." என்று விட்டு செல்ல அஜயின் அறையை நோக்கி சென்ற ராஜஷேகரைப் பார்த்து பெருமூச்சு விட்ட வண்ணம் கனகா தன் வேலைகளை கவனிக்க சென்றார்.


அஜயின் அறைக் கதவை தட்டி விட்டு ராஜஷேகர் வெளியில் காத்து நிற்க குளித்து விட்டு தலையை துவட்டிக் கொண்டே வந்து கதவைத் திறந்த அஜய்
"அப்பா எப்போ பா ஊருக்கு வந்தீங்க????" என்று ஆச்சரியமாக கேட்டான்.


"அட கடவுளே!!!! அப்பா ஊருக்கு வந்தது கூட தெரியாமல் என் பையன் இருந்துருக்கானே....இது என்ன கொடுமை....." என்று தலையில் கை வைத்து கொண்டு ராஜஷேகர் கூறவும்


அவரைப் பார்த்து சமாளிப்பது போல சிரித்துக் கொண்ட அஜய்
"உங்களுக்கு தெரியாததாப்பா??? நம்ம வேலை அப்படி.....அதுவும் இப்போ நடந்துட்டு இருக்குற விசாரணை ஒரே கன்பியூஸன்.....இந்த டென்ஷன்ல அம்மா கிட்ட கூட சரியாக பேசவே இல்லை....அம்மா என்ன நினைச்சாங்களோ தெரியல....." என்று வருத்தமாக கூறவும்


அவன் தோளில் தட்டி கொடுத்த ராஜஷேகர்
"சரி சரி பீல் பண்ணாம வந்து உங்க அம்மாவை சமாதானப்படுத்து.....உன்னை நினைச்சு ரொம்ப கவலை படுறா...." என்று கூற கையில் இருந்த டவலை அருகில் இருந்த மேஜை மேல் வைத்த அஜய் வேகமாக கனகாவைத் தேடி சென்றான்.


டைனிங் டேபிளில் சாப்பாடு வைத்து கொண்டு நின்ற கனகாவின் பின்னால் வந்து அவர் தோளில் சாய்ந்து கொண்ட அஜய்
"ஐ மிஸ் யூ ஸோ மச் ம்மா....." என்று கூறவும் கனகா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.


"அம்மா....என் வேலையை பற்றி உனக்கு தெரியும் தானே....அப்படி இருந்தும் நீ இப்படி உன் முகத்தை நாலு முழத்துக்கு தூக்கி வைக்கலாமா??? ப்ளீஸ் மா ஸாரி இனி இப்படி உன் கூட பேசாமல் இருக்க மாட்டேன்.....போதுமா??? ப்ளீஸ் மா....ஸ்மைல்.....ஸ்மைல்....." என்று அவர் கன்னத்தை அஜய் பிடிக்கவும் அவனது கையை தட்டி விட்ட கனகா மறுபுறம் திரும்பி நின்றார்.


"இந்தா புள்ள கனகா....இப்போ நீ என் கூட பேசலேனு வை அப்புறம் நானும் அப்பாவும் உன்னோட பேவரிட் 'மாங்குயிலே....பூங்குயிலே' சாங்க்கு டான்ஸ் ஆடிடுவோம் பார்த்துக்கோ....." என்று அஜய் கூறவும்


"அய்யோ....." என்று அவசரமாக திரும்பிய கனகா


"வேண்டாம் சாமி....எனக்கு கோபமெல்லாம் போச்சு....எனக்கு கனகா நடிச்சதுலயே புடிச்சது அந்த ஒரு பாட்டு தான்....அதையும் பார்க்க விடாமல் பண்ணிடாதீங்க...." என்று கூற சிரித்துக்கொண்டே டைனிங் டேபிளில் ராஜஷேகரும், அஜயும் அமர்ந்து கொண்டனர்.


ராஜஷேகர் மற்றும் கனகாவின் ஒரே வாரிசு தான் அஜய்ராஜ்.


ராஜஷேகர் எம்.ஆர் டிடெக்டிவின் எம்.டி, கனகா சிறந்த இல்லத்தரசி.


அஜயின் தட்டில் சாப்பாட்டை வைத்து விட்டு அவனது எதிரில் அமர்ந்து கொண்ட கனகா
"அஜய் அம்மா ஒண்ணு சொன்னா கேட்பியா???" என்று கேட்டார்.


"ஏதோ வில்லத் தனமாக கேட்கப் போற போல இருக்கே....சரி என்ன விஷயம் சொல்லும்மா....." என்று அஜய் கூறவும்


ராஜஷேகரைப் பார்த்து
"சொல்லவா???" என்று சைகையில் கனகா கேட்க


"சொல்லு....." என்று ராஜஷேகர் கனகாவைப் பார்த்து வாயசைத்தார்.


"உங்க அப்பா அடிக்கடி வேலை விஷயமாக பாரின், வெளியூர்னு போயிடுறாரு....நீயும் உன் வேலையில் ரொம்ப பிஸியாக இருந்துடுற.....நான் மட்டும் வீட்டில் தனியாக நீங்க வர்ற வரைக்கும் சும்மாவே உட்கார்ந்து இருக்கணும்.....அதனால நீ ஒரு கல்யாணம் பண்ணிட்டேனா
மருமகள், பேரக்குழந்தைங்கனு வீடு நிறைஞ்சு போயிடும்லே....." என்று விட்டு கனகா ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் அஜயின் முகத்தைப் பார்த்து கொண்டு இருக்க அவனோ தட்டில் இருந்த சாப்பாட்டை அளைந்து கொண்டு இருந்தான்.


அஜய் மௌனமாக இருப்பதை பார்த்து அவனது தோளில் கை வைத்த ராஜஷேகர்
"எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போற அஜய்??? உன் வயசு பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணி குழந்தை, குட்டினு இருக்காங்க....எங்களுக்கு இருக்குற ஒரே பையன் நீ....உன் கல்யாணத்தைப் பார்க்க எங்களுக்கு ஆசையாக இருக்காதா???" என்று கேட்கவும்


புன்னகத்து கொண்டே ராஜஷேகர் மற்றும் கனகாவைப் பார்த்த அஜய்
"இப்போவாச்சும் உங்களுக்கு இந்த ஐடியா வந்துச்சே...." என்று கூறி சிரிக்க


"அடப்பாவி....." என்றவாறு அவனை ஆச்சரியமாக பார்த்தார் கனகா.


"அய்யோ அம்மா....நான் சும்மா ஜோக்குக்கு சொன்னேன்.....இவ்வளவு நாள் உங்களை லோன்லியா பீல் பண்ண வச்சதுக்கு ஸாரி....அன்ட் உங்க இஷ்டப்படி கல்யாணத்துக்கு பொண்ணு பாருங்க....உங்களுக்கு பிடிச்சு இருந்தா எனக்கு ஓகே....." என்று விட்டு எழுந்து சென்ற அஜயை பார்த்து கண் கலங்கிய கனகா


"எல்லாம் நல்ல படியாக நடக்கணும் கடவுளே......" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டார்.


அறைக்குள் வந்து சிறிது நேரம் தன் லேப்டாப்பை பார்த்து கொண்டு இருந்த அஜய் வெளியில் ஏதோ சத்தம் கேட்கவும் தன் அறையில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான்.


வெளியே யாரையும் காணாமல் போகவே சிறிது நேரம் அமைதியாக மறைந்து நின்று யாராவது வருகின்றார்களா என்று அஜய் பார்த்து கொண்டு நிற்கையில் திடீரென்று பூனை ஒன்று அவன் முன்னால் பாய திடுக்கிட்டு கால் தவறி கீழே விழுந்தவன் சுற்றிலும் பார்த்து விட்டு
"நல்ல வேளை யாரும் பார்த்துடல....." என்றவாறு எழுந்து நின்றான்.


மேஜை மேல் இருந்த தன் கன்னை எடுத்து தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்ட அஜய் மறு கையால் டார்ச்சை எடுத்துக் கொண்டு தன் அறையில் இருந்து வெளியேறி சென்றான்.


ஹாலில் டிவி பார்த்து கொண்டிருந்த ராஜஷேகர் அஜய் கையில் டார்ச்சோடு வருவதைப் பார்த்து
"இந்த நேரத்தில் எங்கபா போற???" என்று கேட்டார்.


"ஒண்ணும் இல்லை ப்பா....தூக்கம் வரல அது தான் சும்மா தோட்டத்தில் நடந்துட்டு வரலாம்னு போறேன்...." என்று அஜய் கூறவும்


"நான் வேணும்னா கூட வரவா???" என்று ராஜஷேகர் கேட்டார்.


"இல்லை ப்பா.....பரவாயில்லை....ஒரு ஐந்து நிமிஷம் தான்....சும்மா ஒரு வாக் போயிட்டு வந்துடுறேன்....." என்றவாறு வேகமாக வீட்டை விட்டு வெளியேறி சென்ற அஜய் தன் அறை இருக்கும் பக்கமாக சென்றான்.


சுற்றிலும் டார்ச் வெளிச்சத்தை பரவ விட்டவன் வித்தியாசமாக ஏதாவது தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்து பார்த்தான்.


யாரோ ரகசியமாக பேசுவது போல சத்தம் கேட்கவும் மெல்ல சத்தம் எழுப்பாதவாறு எட்டு வைத்து நடந்து சென்ற அஜய் தன் கையில் இருந்த டார்ச்சை சத்தம் வந்த திசையை நோக்கி திருப்ப அங்கே யாரும் இருக்கவில்லை.


"யாரையும் காணோம்.....ஆனா எனக்கு சத்தம் கேட்டுச்சே....." என்று அஜய் யோசித்து கொண்டு நிற்கையில் அவனின் பின்னால் காலடி ஓசை கேட்டது.


தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கன்னை எடுத்து லோட் செய்தவன் சட்டென்று பின்னால் திரும்பி
"ஹேண்ட்ஸ் அப்....." என்று கூற


ராஜஷேகர் அதிர்ச்சியாக கைகள் இரண்டையும் தூக்கி கொண்டு
"அடேய்.....நான் உன் அப்பாடா....." என்று கூறவும்


"அய்யோ......" என்று தன் தலையில் தட்டி கொண்ட அஜய்


"ஸாரி பா.....யாரோ திருடன் வந்துட்டான்னு நினைச்சு....ஸாரி....." என்று கூற ராஜஷேகர் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டார்.


"போலீஸ் எல்லா நேரத்திலும் அலார்டா இருக்கணும்னு உன்னை பார்த்தாலே புரியும்.....ஏதோ சத்தத்தை கேட்டு நீ கன்பியூஸ் ஆகி இருப்ப....பனி நேரத்தில் ரொம்ப நேரம் வெளியே நிற்காதே....வா உள்ளே போகலாம்....." என்றவாறு ராஜஷேகர் அஜயை அழைத்து கொண்டு செல்ல


ராஜஷேகரை குழப்பமாக பார்த்த அஜய்
"நீங்க இந்த நேரத்தில் எதுக்கு வெளியே வந்தீங்க???" என்று கேட்டான்.


"ஹா....ஹா....ஹா.....போலீஸ் இன்விஸ்டிகேஷனா???" என்று சிரித்துக்கொண்ட ராஜஷேகர்


"நீ வாக் போறேன்னு சொல்லும் போதே எனக்கு தெரியும்....நீ வாக் போகல வேற ஏதோ வேலையாக தான் போறேனு....அது தான் உன் பின்னாலேயே வந்தேன்.....நீ போலீஸ்னா நான் டிடெக்டிவ் டா....." என்றவாறு தன் மீசையை முறுக்கி விட்டு கொள்ள அவரை பார்த்து புன்னகத்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்த அஜய் ராஜஷேகரிடம் சொல்லி விட்டு தன்னறைக்குள் நுழைந்து கொண்டான்.


ஆனால் அவன் உள்மனது ஏனோ ஒரு வித்தியாசமான உணர்வை சுற்றி வந்து கொண்டிருந்தது.


சிறிது நேரம் ரேடியோவை ஆன் செய்து பாட்டு கேட்டு கொண்டிருந்தவன் சிறிது நேரத்தில் அப்படியே உறங்கி விட அது வரை நேரமும் அஜயின் அறையின் பின்புறமாக பதுங்கி இருந்த ஒரு உருவம் வேகமாக ஓடிச்சென்று அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாண்டி வீதிக்கு பாய்ந்து சென்றது.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
நள்ளிரவு நேரம் தன் வீட்டில் அசந்து தூங்கி கொண்டிருந்த சரோஜா அவளது போன் அடிக்கவும் தூக்க கலக்கத்தில் தட்டுத்தடுமாறி போனை ஆன் செய்து காதில் வைத்தாள்.


மறுமுனையில்
"சரோ....." என்று ஒலித்த நவீனின் குரலில் தூக்கி வாரிப் போட எழுந்து அமர்ந்த சரோஜா
கோபமாக போனில் இருந்த நவீனின் பெயரை முறைத்து பார்த்தாள்.



"ஹலோ....ஹலோ.....சரோ....லைன்ல இருக்கியா??? ஒரு ஹெல்ப்.....ப்ளீஸ்...." என்ற நவீனின் குரலில்
சரோஜாவின் கோபம் எல்லை மீற



கண்களை மூடி தன்னை சமன் செய்து கொண்டவள்
"இதோ பாருங்க நவீன்....எதுவாக இருந்தாலும் காலையில் ஆபீஸ்ல பேசுங்க....இப்போ நான் பிஸியாக இருக்கேன்....." என்று விட்டு மறுமுனையில் நவீன் பதில் சொல்வதற்கு முன்பே போனை கட் செய்தவள் தன் அருகில் தூங்கி கொண்டிருந்த வித்யாவின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டு மீண்டும் உறங்கத் தொடங்கினாள்.



காலையில் வழக்கம் போல தயாராகி வந்த சரோஜா கணேஷோடு வம்பு இழுத்து கொண்டே சாப்பிட்டு கொண்டிருக்க அவளது முதுகில் அடி ஒன்று வைத்த வித்யா
"எத்தனை தரம் சொல்லி இருக்கேன்.....அவனோட வம்பு பண்ணாதேனு.....நாளைக்கு கல்யாணம் ஆகி போனா அங்கேயும் இப்படி தான் இருப்பியா???" என்று கோபமாக கேட்கவும்



அவரைப் பாவமாக பார்த்த சரோஜா
"இந்த வீட்டில் இருக்குற வரை தானே என்னால இவ்வளவு ப்ஃரீடமா இருக்க முடியும்....அது புரியாமல் நீங்க இப்படி திட்டுறீங்களே....." என்று கண்கள் கலங்க கூற வித்யாவிற்கும் சிறிது கவலையாகி போனது.



கணேஷும் கவலையுடன் சரோஜாவைப் பார்க்க அவனை பார்த்து கண்ணடித்த சரோஜா பாவமாக தன் முகத்தை வைத்து கொண்டு வித்யாவைப் பார்த்தாள்.


"அடிப்பாவி....என்னம்மா ஆக்ட் பண்ணுறா??? இவளுக்கு சரோஜானு சரியா தான்யா பேர் வைச்சிருக்காங்க....." என்று நினைத்துக் கொண்ட கணேஷ் சரோஜாவையே பார்த்து கொண்டு இருக்க


சரோஜாவை தன்னோடு அணைத்துக் கொண்ட வித்யா
"ஸாரி டா.. .அம்மா ஏதோ கோபத்தில் இப்படி பண்ணிட்டேன்....." என்று கூற



"இட்ஸ் ஓகே விடும்மா....நீ தானே சொன்ன இட்ஸ் ஓகே....." என்ற சரோஜாவை வாய் பிளந்து கணேஷ் பார்த்து கொண்டு இருந்தான்.


"இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்க....இப்போ தான் தரகர் போன் பண்ணி இருந்தாரு....அந்த யோசனையாக வந்த நான் தான் ஏதேதோ பண்ணிட்டேன்....ஈவ்னிங் ஏர்லியா வந்துடு.....சரியா???" என்று வித்யா கேட்கவும்
இந்த முறை சரோஜா அதிர்ச்சியாகி நின்றாள்.



கணேஷ் அவளை பார்த்து சிரிப்பதை கட்டுப்படுத்த பெரும் பிரயத்தனப்பட அவனை ஓரக் கண்ணால் முறைத்து பார்த்த சரோஜா வித்யாவைப் பார்த்து சிரித்த முகத்துடன் சரியென்று தலையை ஆட்டி வைத்தாள்.


வித்யா மலர்ந்த முகத்துடன்
"இது தான் என் பொண்ணு....." என்று சரோஜாவிற்கு திருஷ்டி கழித்து விட்டு செல்ல கணேஷ் வயிற்றைப் பிடித்து கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினான்.



"டேய் ஓவரா பண்ணாம அடங்குடா....." என்று சரோஜா கோபமாக கணேஷைப் பார்த்து கூறவும்


சிரித்துக் கொண்டே தன் கண்களை துடைத்து கொண்ட கணேஷ்
"ஆனாலும் நீ பண்ண ஆக்டிங்க்கு இந்த ஆப்பு உனக்கு தேவை தான்....ஈவ்னிங் வா உனக்கு சிறப்பாக கல்யாணக் கச்சேரி நடத்திடுவோம்....." என்று விட்டு கணேஷ் நிற்காமல் ஓடி விட சரோஜாவோ கோபத்தோடு தரையில் தன் காலை உதைத்து கொண்டாள்.



"இப்போ எதுக்கு இவ்வளவு அவசரமாக கல்யாணம்????" என்று சிணுங்கிக் கொண்ட சரோஜா அதனை வாய் விட்டு வித்யாவிடம் சொல்ல மனமின்றி தன் ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்து ஆபீஸ் நோக்கி புறப்பட்டாள்.


ஆபீஸ் வந்து சேர்ந்ததும் நேற்று ராஜஷேகர் சொன்ன இண்டர்வியூ பற்றி ஞாபகம் வரவும் ஒரு கணம் சரோஜாவிற்கு உதறல் எடுத்தது.


ஆனாலும் தன் பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் தைரியமாக ஆபீஸினுள் நுழைந்தவள் இண்டர்வியூ நடக்கும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.


இண்டர்வியூவில் சரோஜா செலக்ட் ஆகி விட
"ஹப்பாடா.....ஒரு பெரிய கண்டத்தை தாண்டியாச்சுடா சாமி......" என்றவாறு நிம்மதியாக அவளது கேபினுள் சென்று சரோஜா அமர்ந்து கொள்ள



"ஹாய் சரோ......" என்றவாறு நவீன் அவள் முன்னால் வந்து நின்றான்.


பல்லைக் கடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்திய சரோஜா
"எஸ் சொல்லுங்க....." என்று தன் எதிரில் இருந்த பைல்களை பார்த்து கொண்டே கூறினாள்.



"ஒரு இம்பார்ட்டண்ட் மேட்டர்.....கேன்டீன்ல போய் டீ சாப்பிட்டுகிட்டே பேசலாமா???" என்று நவீன் கேட்கவும்


குழப்பமாக அவனை பார்த்த சரோஜா
"இன்னையோட இந்த பறங்கிக்காய் மண்டைக்கு என்ட் கார்ட் போட்டுடணும்....." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே



"ஓகே வாங்க போகலாம்....." என்றவாறு எழுந்து கொண்டாள்.


கேன்டீனில் சென்று காலியாக இருந்த ஒரு பெஞ்சில் சரோஜா அமர்ந்து கொள்ள இரண்டு டீ கப்களை எடுத்து கொண்டு வந்த நவீன் சரோஜாவின் எதிரில் அமர்ந்து கொண்டான்.


டீயை எடுத்து குடித்து கொண்டே
"சொல்லுங்க என்ன விஷயம்???" என்று சரோஜா கேட்கவும்



பதட்டத்துடன் சுற்றிலும் ஒரு தரம் தன் பார்வையை சுழல விட்ட நவீன்
"இந்த விஷயத்தை
உங்களை தவிர வேறு யார்கிட்டயும் சொல்ல முடியாது.....எனக்கு இதை விட்டா வேற வழியும் தெரியல....உங்க கிட்ட தான் இதைப் பற்றி என்னால ஓபனா பேச முடியும்....." என்று கூற
சரோஜாவிற்கு இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறத் தொடங்கியது.



"அடேய்....ஏடாகூடமாக ஏதாவது சொல்லி தொலைச்சுடாதடா....." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட சரோஜா
தயக்கத்துடன் நவீனைப் பார்த்து கொண்டு இருக்க



தன் கண்களை ஒரு முறை இறுக மூடி திறந்த நவீன்
"நான் உங்க....." என்று இடை நிறுத்த சரோஜாவிற்கு இதயத் துடிப்பு ஒரு கணம் நின்றது.



"என்ன????" என்று அதிர்ச்சியாக சரோஜா கேட்கவும்


தன் முன்னால் இருந்த டீயை ஒரே மிடறில் குடித்து முடித்த நவீன் சரோஜாவை நிமிர்ந்து பார்த்து
"நான் உங்க பிரண்ட் கார்த்திகாவை லவ் பண்ணுறேன்....நீங்க தான் எப்படியாவது கார்த்திகா கிட்ட இதை பற்றி சொல்லணும்......" என்று ஒரு மூச்சில் கூறி முடிக்க சரோஜா அவனை பார்த்து வாய் விட்டு சிரித்தாள்.



"ஏன் சரோ சிரிக்குற???" என்று நவீன் புரியாமல் கேட்கவும்


சிரிப்பதை நிறுத்தி கொண்ட சரோஜா
"இதை சொல்லவா இவ்வளவு பில்டப் பண்ணிங்க??? நீங்க தான் எல்லா கேர்ள்ஸ் கூடவும் பேசுறவங்க தானே....அப்படி போய் கார்த்திகா கிட்ட சொல்லிடுங்க...." என்று கூற



அவளைப் பாவமாக பார்த்த நவீன்
"நான் எல்லா கேர்ள்ஸ் கூடவும் பேசுறவன் தான்....ஆனால் லிமிட் தாண்ட மாட்டேன்....கார்த்திகாவை லவ் பண்ண ஆரம்பித்ததில் இருந்து நான் உங்களை தவிர வேற யார்கிட்டயும் பேசுறதே இல்ல....நீங்க கார்த்திகாவோட க்ளோஸ் பிரண்ட் நீங்க சொன்னா அவ கண்டிப்பாக இதை பற்றி யோசிப்பா.....நான் அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்....." என்று கூறவும் சிறிது நேரம் யோசித்து கொண்டு இருந்தாள் சரோஜா.



"பர்ஸ்ட் நீங்க கார்த்திகா கிட்ட உங்க மனசுல இருக்குறத சொல்லுங்க....அப்புறம் இதை பற்றி நான் யோசிக்குறேன்.....உங்க கேரக்டர் என்னை கார்த்திகா கிட்ட உங்களைப் பற்றி சொல்ல தயங்க வைக்குது.....ஸாரி....." என்று விட்டு சரோஜா எழுந்து சென்று விட நவீன் கவலையுடன் சரோஜாவையே பார்த்து கொண்டு இருந்தான்.


ஆபீஸ் முடிந்து வந்து ஸ்கூட்டரில் சரோஜா ஏறி அமர்ந்து கொள்ள காலையில் வித்யா கூறிய வார்த்தைகள் சரோஜாவின் காதில் எதிரொலித்தது.


"எந்த அப்பாவி நம்ம கிட்ட மாட்டப் போறானோ!!!" என்று யோசித்து கொண்டே தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த சரோஜா அதே யோசனையோடு வீதியில் ஸ்கூட்டரை ஓட்டி கொண்டிருந்தாள்.


திடீரென்று வீதியில் ஏதோ சத்தம் கேட்கவும் தன் ஸ்கூட்டரை நிறுத்திய சரோஜா சுற்றிலும் திரும்பி பார்த்தாள்.


நான்கு வீதிகள் இணையும் நடுப் பகுதியில் தான் ஸ்கூட்டரை நிறுத்தி இருப்பதை தாமதமாக உணர்ந்து கொண்ட சரோஜா வேகமாக தன் ஸ்கூட்டரை ரிவர்ஸ் எடுக்க நினைக்கையில் எதிரில் வேகமாக வந்த ஜீப் அவள் ஸ்கூட்டரில் மோத சரோஜா அடித்து தூக்கி வீசப்பட்டாள்.......
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top