• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - 03

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி......
40539986_332897497277717_7806821532645981274_n.jpg
வித்யா பரபரப்பாக வாசலை பார்ப்பதும் வீட்டினுள் வேலைகளை செய்வதுமாக நடந்து கொண்டிருக்க ஹாலில் அமர்ந்து போனை பார்த்து கொண்டிருந்த கணேஷ்
"எதுக்கு மா இவ்வளவு டென்ஷன் ஆகுற??? சரோஜா என்ன சின்ன குழந்தையா??? வழக்கமாக அவ வர்ற டைம் தானே இது....அவ வந்துடுவா....நீ டென்ஷன் ஆகாம உன் வேலையை பாருமா......" என்று கூறவும்


"அவ வந்துடுவானு எனக்கும் தெரியும்....ஆனா அவ வர்றதுக்குள்ள தரகர் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களோட வந்துட்டா என்ன பண்ணுறது???இன்னைக்குனு பார்த்து போனையும் எடுக்க மாட்டேங்குறா...." என்று வித்யா கவலையுடன் கூற கணேஷின் மனதிலும் சிறு கவலை எழுந்தது.


"சீக்கிரம் வர்றேன்னு தானே சொல்லிட்டு போனா....." என்று யோசித்து கொண்டே எழுந்து நின்ற கணேஷ்


"அம்மா....நான் எதுக்கும் நம்ம தெரு முனை வரைக்கும் நடந்து போய் பார்த்துட்டு வர்றேன்....." என்று விட்டு வீட்டில் இருந்து வெளியே வர அவர்கள் வீட்டின் முன்னால் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.


"என்னப்பா லேட் ஆகுதுனு நீயே எங்களைத் தேடி வந்துட்ட போல....." என்று சிரித்துக்கொண்டே காரில் இருந்து இறங்கியவரைப் பார்த்து திருதிருவென்று விழித்த கணேஷ்


"அப்படி எல்லாம் இல்லை அங்கிள்....வெளியே கடைக்கு கொஞ்சம் போகலாம்னு தான் வந்தேன்.....நீங்க முதல்ல உள்ளே வாங்க....." என்று வந்தவர்களை உள்ளே அழைத்து சென்றவன் வித்யாவைத் தேடி சென்றான்.


"அம்மா அவங்க எல்லோரும் வந்துட்டாங்க....இன்னும் இந்த சரோஜாவை காணோம்...." என்று கணேஷ் வித்யாவிடம் படபடப்பாக கூற வித்யாவின் பதட்டம் மேலும் கூடியது.


"அம்மா நீ போய் அவங்க கூட எப்படியாவது பேசி சமாளி.....நான் சரோஜாவை பார்த்துட்டு வர்றேன்...." என்று விட்டு கணேஷ் பின் வாசல் வழியாக வெளியேறி சென்று விட வித்யா முகத்தில் அரும்பிய வியர்வை துளிகளை துடைத்து கொண்டு முகத்தில் வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு ஹாலை நோக்கி சென்றார்.


"என்ன பொண்ணு அலங்காரத்திற்கு உதவி பண்ணிட்டு இருந்திங்க போல???" என்று வந்திருந்த பெண் ஒருவர் கேட்கவும்


சமாளிப்பாக அவரை பார்த்து சிரித்துக் கொண்ட வித்யா
"அது....அலங்காரம் எல்லாம் இல்ல.....அது.....பொண்ணு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சுனு சொன்னா....அது தான் அவளை சீக்கிரம் வரச்சொல்லி சொல்லிட்டு இருந்தேன்....." என்று கூறவும் அங்கு இருந்த அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் குழப்பமாக பார்த்து கொண்டனர்.


"இன்னைக்கு நாங்க பொண்ணு பார்க்க வர்றோம்னு காலையிலேயே சொன்னோம் தானே....ஹால்ப் டே லீவு போட்டு வரக் கூட உங்க பொண்ணுக்கு நேரம் இல்லையா என்ன???" என்று அங்கிருந்தவர்களில் வயதான நபர் ஒருவர் கேட்கவும் வித்யா பதில் எதுவும் கூறாமல் கையை பிசைந்து கொண்டு நின்றார்.


வீதியில் ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்த கணேஷ் வழியில் சரோஜா எங்காவது தென்படுகின்றாளா என்று தன் பார்வையை சுற்றிலும் சுழல விட்டு கொண்டே தன் போனில் சரோஜாவிற்கு அழைப்பு எடுத்து கொண்டிருக்க மறுமுனையில் சரோஜாவின் போன் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.


வித்யா ஒரு புறம் தவிப்புடனும், கணேஷ் மறுபுறம் பயத்துடனும் சரோஜாவை பற்றி யோசித்து கொண்டிருக்க சரோஜாவை அரை மயக்கத்தில் தன் கைகளில் ஏந்தி கொண்டு ஹாஸ்பிடலினுள் வேகமாக நுழைந்தான் அஜய்ராஜ்.


சரோஜாவின் நெற்றியில் இருந்து சொட்டு சொட்டாக இரத்தம் வடிந்து கொண்டிருக்க அவசரமாக அவளை ஸ்ட்ரெச்சரில் கிடத்திய அஜய் துரித கதியில் அவளுக்கு சிகிச்சைகளை ஆரம்பிக்க செய்தான்.


சரோஜாவிற்கு சிகிச்சைகள் ஆரம்பித்து விட களைத்துப் போய் ஓய்வாக அமர்ந்த அஜயிடம்
சரோஜாவின் கைப்பையை கான்ஸ்டபிள் ஒருவர் கொண்டு வந்து கொடுக்கவும் அதை வாங்கி பார்த்த அஜய் அதிலிருந்த அவளது ஐ.டி யை எடுத்து பார்த்தான்


"சரோஜா....." என்ற அவளது பெயரை படித்த அஜயின் இதழ்கள் தானாக புன்னகையில் வளைந்தது.


எம்.ஆர் டிடெக்டிவ் என்ற பெயரை பார்த்ததும் அஜய் யோசனையாக
"அப்பா ஆபீஸ்ல வேலை செய்யுற பொண்ணா???" என்று பார்த்து கொண்டு இருக்கையில் சரோஜாவிற்கு சிகிச்சைகளை முடித்துக்கொண்டு டாக்டர் வெளியே வரவும் சரியாக இருந்தது.


"டாக்டர் அவங்க எப்படி இருக்காங்க???" என்று அஜய் கேட்கவும்


கையில் இருந்த தன் க்ளவுஸை கழட்டி கொண்டே
"நத்திங் வெரி சீரியஸ்....தலையில் அடிபட்டு பிளட் லாஸ் ஆனதால மயக்கம் போட்டுட்டாங்க.....நல்ல வேளை பலமாக அடி எதுவும் பட்டுடல....அப்புறம் அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சதும் ஹாஸ்பிடல் பார்மலிட்டிஸ் எல்லாம் முடிச்சுட்டு நீங்க அவங்கள கூட்டிட்டு போகலாம்....." என்று விட்டு டாக்டர் சென்று விட அஜய் சரோஜா இருந்த அறைக்குள் சென்றான்.


தலையில் ஒரு பெரிய கட்டு போடப்பட்டிருக்க கையில் டிரிப்ஸ் ஏற ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் சரோஜா.


"சரோஜா...." என்று புன்னகையோடு கூறிய அஜய் சற்று முன் நடந்த நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தான்.


ஒரு விசாரணை விடயமாக வேகமாக அவனுடைய போலீஸ் வாகனத்தில் அஜய் சென்று கொண்டிருந்தான்.


பல இடங்களில் இருந்து அவனுக்கு தொடர்ச்சியாக அழைப்பு வந்து கொண்டே இருக்க எல்லாவற்றையும் புளு டூத் மூலமாக பேசிக் கொண்டே வந்தவன் அப்போது தான் எதிரில் ஒரு பெண் ஸ்கூட்டரில் நடு வீதியில் நிற்பதைப் பார்த்தான்.


"யார் இது நடு ரோட்டில் நிற்குறது???" என்று அஜய் யோசித்த வண்ணம் அவளை பார்க்க அவளோ பதட்டத்துடன் சுற்றிலும் பார்த்து கொண்டு நின்றாள்.


அவசரமாக ஸ்கூட்டரை அவள் ரிவர்ஸ் எடுப்பதற்குள் அஜயின் வாகனம் அவளை நெருங்கி இருந்தது.


அஜய் பதட்டத்துடன் வேகமாக பிரேக்கை அழுத்த அதற்குள் அவனது ஜீப் அவளை அடித்து தூக்கி இருந்தது.


"அய்யோ.....பிரேக் போடுறதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே......." என்று
பதட்டத்துடன் ஜீப்பில் இருந்து இறங்கிய அஜய் வேகமாக அந்த பெண்ணின் அருகில் சென்றான்.


அடித்த வேகத்தில் தூக்கி வீசப்பட்டவள் நல்ல வேளையாக அருகில் இருந்த காகிதங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் விழுந்து கிடந்தாள்.


விழுந்த வேகத்தில் அவளது நெற்றியில் அடிபட்டு இருக்க அவசரமாக அவளை தன் கைகளில் ஏந்தி கொண்ட அஜய் தன் ஜீப்பில் அவளை ஏற்றிக் கொண்டு ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தான்.


ஹாஸ்பிடல் செல்லும் வழியில் தன்னுடைய உதவியாளர் ஒருவருக்கு அழைப்பு எடுத்து நடந்த எல்லாவற்றையும் சொல்லி அவளுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வரச் சொன்னவன் வேகமாக ஹாஸ்பிடலை வந்து அடைந்தான்.


அஜய் தன்னுடைய சிந்தனையில் மூழ்கிப் போய் நிற்க சரோஜா மயக்கம் தெளிந்து மெல்ல கண் திறந்தாள்.


சரோஜாவிடம் அசைவு தெரிவதை வேகமாக கண்டு கொண்ட அஜய் சரோஜாவின் அருகில் செல்ல நினைத்து அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.


"இப்போ நாம அவகிட்ட போய் பேசி போனா ஆக்சிடெண்ட் பண்ணது நான் தான் தெரிஞ்சு ஏதாவது பிரச்சினை வந்துடுச்சுனா என்ன பண்ணுறது?? ஏற்கனவே கொடுத்த கேஸை முடிக்கலனு காட்டுக் கத்து கத்துறானுங்க....இப்போ இந்த மேட்டரும் அவங்க காதுக்கு போனா.....வேணாம்.....வெளியில் போய் பார்மலிட்டிஸ் முடிச்சுட்டே நம்ம போயிடலாம்....." என்று நினைத்துக் கொண்டவன் தன் கையில் இருந்த சரோஜாவின் ஹேண்ட் பாக்கை அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு அஜய் வெளியேறி சென்று விட மயக்கத்தில் இருந்து கண் விழித்த சரோஜா அறையில் இருந்து வெளியே சென்ற அஜயின் பின் புறத் தோற்றத்தையே கண்டாள்.


"என்ன இது போலீஸ் மாதிரி இருக்கு??? ஆமா இது என்ன இடம்?? நான் இப்போ எங்க இருக்கேன்???" என்று யோசித்த வண்ணம் சரோஜா இருக்க


நர்ஸ் ஒருவர் அவளருகில் வந்து
"மேம்....நவ் ஆர் யூ ஓகே???" என்று கேட்டார்.


"யா....ஐ யம் ஆல்ரைட்....பட் எனக்கு என்ன ஆச்சு???" என்று குழப்பமாக சரோஜா கேட்கவும்


"உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சுனு அட்மிட் பண்ணாங்க....சின்ன காயம் தான்....இப்போவும் உங்களுக்கு வலி இருக்கா???" என்று அந்த நர்ஸ் கேட்டார்.


"இல்ல வலி எல்லாம் இல்ல....என்னை யாரு இங்க அட்மிட் பண்ணது??? என்னோட திங்க்ஸ் எல்லாம்???" என்று சரோஜா கேட்டுக் கொண்டிருக்கையில் அந்த அறைக்குள் ஒரு கான்ஸ்டபிள் வந்தார்.


"மேடம் உங்க பேக்கை ஸார் டேபிளில் வைச்சிருக்குறதா சொன்னார்....அப்புறம் உங்க ஹாஸ்பிடல் பில்லையும் அவரே பே பண்ணிட்டாரு....உங்களை உங்க வீட்டுல டிராப் பண்ண சொல்லி சொன்னாரு....நீங்க வந்தீங்கனா போகலாம்....." என்று அந்த கான்ஸ்டபிள் கூறவும்


அவனை விசித்திரமாக பார்த்த சரோஜா
"என்னங்க நடக்குது இங்க??? நீங்க பாட்டுக்கு வந்தீங்க....ஏதேதோ சொல்லுறீங்க....யாருங்க உங்க ஸார்?? அவரு எதுக்கு என் பில்லை பே பண்ணணும்??" என்று கேட்டாள்.


"அது....வந்து...எங்க ஸார் சரியாக தான் வந்தாரு....நீங்க தான் ரோட்டை பார்க்காம....." என்று அந்த கான்ஸ்டபிள் இழுக்கவும்


அவனைக் கூர்மையாக பார்த்த சரோஜா
"ஓஹ் ஆக்சிடெண்ட்டும் பண்ணிட்டு அதை மறைக்க ஹெல்ப்பும் பண்ணுறீங்களா??? கண்டிப்பாக இதை நான் சும்மா விட மாட்டேன்....போலீஸ் ஸ்டேஷன்ல உங்க ஸார் மேல கம்ப்ளயிண்ட் பண்ணாம விடமாட்டேன்....உங்க ஸார் யாரு?? டீடெயில்ஸ் சொல்லுங்க....சொல்லுங்க...." என்று கூறி கொண்டே கட்டிலில் இருந்து இறங்கியவள் தன் ஹேண்ட் பாக்கை எடுத்து அதிலிருந்த நோட் புக்கை எடுத்தாள்.


"ம்ம்ம்....டீடெய்ல்ஸை சொல்லுங்க....." என்று சரோஜா அதட்டலாக கேட்கவும்


அவளை பரிதாபமாக பார்த்த கான்ஸ்டபிள்
"ஸாரோட பேரு அஜய்ராஜ்....அஷிஸ்டென்ட் கமிஷனர்....." என்று கூற நோட்புக்கில் மும்முரமாக எழுதி கொண்டிருந்த சரோஜா அதிர்ச்சியாக அவரை நிமிர்ந்து பார்த்தாள்.


"அசிஸ்டெண்ட் கமிஷனரா???" என்று அதிர்ச்சியாக முணுமுணுத்த சரோஜா


உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு
"என் உயிரை காப்பாற்றுனதுக்காக உங்க ஸாரை சும்மா விடுறேன்....இல்லேனா இன்னைக்கு அவர் கதை காலியாகி இருக்கும்...." என்று கூற அவளருகில் நின்ற நர்ஸ் மற்றும் கான்ஸ்டபிள் அவளறியா வண்ணம் தங்கள் சிரிப்பை மறைத்து கொண்டனர்.


"என்ன இரண்டு பேரும் நக்கலாக சிரிக்குற மாதிரி இருக்கு???" என்று சரோஜா கேட்கவும்
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"அப்படி எல்லாம் இல்லை மேடம்....நீங்க வாங்க நான் உங்களை உங்க வீட்டுல டிராப் பண்ணுறேன்....." என்று கான்ஸ்டபிள் கூற


"அய்யய்யோ....." என்று தலையில் கை வைத்த சரோஜா


"வீட்டுல வித்யா???" என்று பதட்டத்துடன் கூறி கொண்டே வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள்.


அவளை பின் தொடர்ந்து வந்த கான்ஸ்டபிள் வண்டியை ஸ்டார்ட் செய்ய அவசரமாக அதில் ஏறி அமர்ந்த சரோஜா ஹேண்ட் பாக்கில் இருந்த தன் போனை எடுத்து பார்த்தாள்.


போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கவும் பதட்டத்துடன் தன் போனை பார்த்த சரோஜா
"அண்ணா உங்க போனை கொஞ்சம் தர்றீங்களா??? வீட்டுக்கு தகவல் சொல்லணும்....." என்று கான்ஸ்டபிளிடம் கேட்க


"இந்தாம்மா பேசு....." என்று தன் போனை சரோஜாவிடம் அவர் கொடுத்தார்.


"தாங்க்ஸ் ணா....." என்று சொல்லி கொண்டே போனை வாங்கிய வேகமாக நம்பரை டயல் செய்தாள்.


மறுமுனையில் போன் எடுக்கப்பட
"அம்மா...நான் சரோஜா....."


"குடும்ப மானத்தை வாங்குறதுக்குனே இப்படி பண்ணுனியா????.....விளையாட்டுப் பொண்ணு தானேனு நான் நினைச்சா கடைசியில் இப்படி குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைச்சுட்டியேடி....." என்ற வித்யாவின் பேச்சில் சரோஜா ஸ்தம்பித்து போய் இருந்தாள்.


"அம்மா....நான்..."


"எதுவும் பேசாமல் முதல்ல ஒழுங்காக வீட்டுக்கு வந்து சேரு....." என்று விட்டு வித்யா போனை வைத்து விட சரோஜா கண்கள் கலங்க போனையே பார்த்து கொண்டு இருந்தாள்.


"மேடம் உங்க வீடு....." என்ற கான்ஸ்டபிளின் குரலில் கலங்கிய தன் கண்களை துடைத்து கொண்ட சரோஜா


"மேடம் எல்லாம் வேண்டாம் ணா.....நார்மலாகவே நீங்க பேசுங்க....." என்றவள்


"இந்தாங்க அண்ணா உங்க போன்....." என்றவாறு அவரது போனை கொடுத்து விட்டு வீட்டினுள் செல்ல போக


"ஒரு நிமிஷம்...." என்ற கான்ஸ்டபிளின் அழைப்பில் அவரை திரும்பி பார்த்தாள்.


"உங்க ஸ்கூட்டரில் சின்ன டேமேஜ்....அதனால அதை சர்வீஸ்க்கு கொடுத்துருக்கோம்....நைட்குள்ள உங்க வண்டியை நானே எடுத்துக் கொண்டு வந்து தந்துடுறேன்...." என்று அவர் கூறவும்


அவசரமாக மறுப்பாக தலை அசைத்த சரோஜா
"நீங்க இவ்வளவு பண்ணதே போதும்....வண்டியை நானே கலெக்ட் பண்ணிடுறேன்.....நீங்க அந்த சர்வீஸ் சென்டர் அட்ரஸை மட்டும் கொடுங்க...." என்று கேட்டாள்.


அந்த கான்ஸ்டபிள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் தன் முடிவில் உறுதியாக இருந்த சரோஜா அட்ரஸை அந்த கான்ஸ்டபிளிடமிருந்து வாங்கிய பின்பே வீட்டிற்குள் நுழைந்தாள்.


ஹாலின் ஒரு மூலையில் அமர்ந்து வித்யா அழுது கொண்டிருக்க கணேஷ் அவரருகில் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டிருந்தான்.


"அம்மா...." என்ற சரோஜாவின் அழைப்பில் கோபமாக நிமிர்ந்து பார்த்த வித்யா தலையில் கட்டோடு நின்று கொண்டிருந்த சரோஜாவை பார்த்து பதட்டம் அடைந்தவறாக


"சரோஜா என்னமா ஆச்சு???" என்றவாறு அவளருகில் ஓடி வந்தார்.


"என்ன ஆச்சு சரோஜா உனக்கு???" என்றவாறு கணேஷ் மறுபுறம் சரோஜாவின் அருகில் வரவும்


கலங்கிய தன் கண்களை யாரும் அறியாமல் துடைத்து கொண்ட சரோஜா
"வர்ற வழியில் ஒரு ஆக்சிடெண்ட்.....அது தான் நான் வர்ற லேட் ஆச்சு....." என்று கூறவும் வித்யா அவளை கவலையாக பார்த்தார்.


"அம்மா கோபத்தில் உனக்கு என்ன ஆச்சுனு கேட்கவே இல்ல....ஸாரி மா....." என்று வித்யா வருத்தத்துடன் கூறவும்


அவர் தோள் மேல் சாய்ந்து கொண்ட சரோஜா
"விடும்மா....நீ என்கிட்ட ஸாரி சொல்லணுமா????" என்றவள்


"தரகர் வந்து ஏதாவது பிரச்சினை பண்ணாரா???" என்று கேட்டாள்.


வித்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும் அவரை நிமிர்ந்து பார்த்த சரோஜா
"அம்மா உன்னை தான் கேட்குறேன்.....என்ன ஆச்சு???" என்று அதட்டலாக கேட்டாள்.


அப்போதும் வித்யா அமைதியாக இருக்கவும் கணேஷின் புறம் திரும்பிய சரோஜா
"கணேஷ் சொல்லு என்ன ஆச்சு???" என்று கேட்டாள்.


வித்யாவையும், சரோஜாவையும் மாறி மாறிப் பார்த்த கணேஷ் நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கூறினான்.


"நான் தெரு முனை வரைக்கும் வந்து பார்த்தேன் உன்னை காணவும் இல்ல....கார்த்திகா அக்காவுக்கும் போன் பண்ணி பார்த்தேன்....நீ அப்போவே போயிட்டேனு சொன்னாங்க.....அம்மா கிட்ட சொல்லலாம்னு வீட்டுக்கு வந்தா ஆளாளுக்கு சத்தம் போட்டுட்டு இருந்தாங்க....கோபம் வந்து நானும் கத்திட்டேன்....உடனே மாப்பிள்ளை வீட்டுக் காரங்க கோபமாக அம்மாவை திட்டிட்டு சத்தம் போட்டுட்டே போயிட்டாங்க.....தெருவில் இருக்குற எல்லோரும் வேடிக்கை பார்த்தாங்கலே தவிர ஒருத்தரும் நமக்கு ஆதரவாக பேச வரல....."என்று கவலையுடன் கணேஷ் கூறவும்


அவனது தோளில் ஆதரவாக கை வைத்த சரோஜா
"இந்த சொஸைட்டி அப்படி....ஒருத்தங்க தப்பு செஞ்சா அதை தான் பெரிதா பேசி அவங்களை அவமானப்படுத்தப் பார்க்குமே தவிர அவங்க நல்ல குணம் ஒண்ண கூட கண்டுக்காது......நாம என்ன தான் அவங்களுக்கு ஆயிரம் நல்லது பண்ணி இருந்தாலும் நம்ம செஞ்ச ஒரு தப்பை தான் இந்த உலகம் பெரிதா பார்க்கும்...." என்று கூற வித்யா அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டார்.


"விடும்மா....கடவுள் எல்லாம்
காரணம் இல்லாமல் பண்ண மாட்டாரு.....இந்த ஆக்சிடெண்ட்டும் ஏதாவது ஒரு நல்ல விடயத்துக்காக நடந்திருக்கலாம்லே.....இந்த சம்பந்தம் தடைப் பட்டது கூட ஏதாவது நன்மைக்காக தான் இருக்கும்....." என்று சரோஜா கூறவும் கண்கள் கலங்க தன் அக்காவை கணேஷ் பார்த்து கொண்டு நின்றான்.


"சரி சரி ஓவரா ரீல் விடாமல் போய் பிரஸ் ஆகிட்டு வா....வாங்கி வைச்ச பஜ்ஜி, சொச்சி எல்லாம் வெயிட்டிங்....." என்று கணேஷ் கூறவும் அவனது தலையில் செல்லமாக தட்டிய சரோஜா தன்னறையை நோக்கி சென்றாள்.


சிறிது நேரத்தில் சரோஜாவும் வந்து விட வழக்கம் போல அவர்களது வீடு கலகலப்பை வாரி இறைத்தது.


சிரிப்பும், கேலியுமாக சாப்பிட்டு கொண்டிருந்த சரோஜா ஏதோ ஞாபகம் வந்தவளாக
"அம்மா ஸ்கூட்டர் சர்வீஸ்ல இருக்கு....நாளைக்கு ஆபீஸ் போக ஸ்கூட்டர் வேணும்....நான் போய் எடுத்துட்டு வர்றேன்....." என்று விட்டு எழுந்து கொள்ள


அவளை முறைத்து பார்த்த வித்யா
"இந்த நேரத்தில் தனியாக போய் நீ கண்டிப்பாக ஸ்கூட்டரை எடுக்கத் தானா வேணும்??? காலையில் பார்த்துக்கலாம் சும்மா இரு...." என்று கூறவும் சரோஜா முகம் வாட அவரை பார்த்தாள்.


"இந்த காலத்தில் எதை எதையோ திருடுறான்....என் ஸ்கூட்டரை எப்படி நான் நம்பி ஒரு நைட் பூராவும் விட்டு வைக்குறது??? நான் தனியா ஒண்ணும் போகலமா....கணேஷும் தான் கூட வரப்போறான்....." என்று சரோஜா கணேஷைப் பார்த்து கொண்டே கூற


"இது எப்போ????" என்று அதிர்ச்சியாக கணேஷ் அவளைப் பார்த்தான்.


"என்னமோ சொல்ற??? சரி சரி சீக்கிரமாக போயிட்டு சீக்கிரமாக வாங்க....." என்று வித்யா கூறவும்


சிரித்துக் கொண்டே எழுந்து நின்ற சரோஜா
"போகலாமா கணேஷ்???" என்று கணேஷைப் பார்த்து கேட்டாள்.


"ஹிஹிஹிஹி போகலாமே....." என்று சரோஜாவை பார்த்து கூறியவன்


"ராட்சசி கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்க விடுறாளா பாரு????" என்று திட்டிக் கொண்டே செல்ல சரோஜா உள்ளுக்குள் சிரித்து கொண்டே கணேஷைப் பின் தொடர்ந்து சென்றாள்.


"அக்காவுக்கு இது கூட பண்ணலனா எப்படி தம்பி???" என்று சரோஜா கேட்கவும்


அவளை திரும்பி பார்த்த கணேஷ்
"நீ அக்காவா? இல்லை என் மாமியாரா? எனக்கே அடிக்கடி கன்பியுஸ் ஆகுது...." என்று கூற அவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்த சரோஜா போகும் வழி முழுவதும் அவனை வம்பிழுத்துக் கொண்டே சென்றாள்.


ஸ்கூட்டரை சர்வீஸில் இருந்து எடுத்து கொண்ட பின் கணேஷ் வண்டியை ஓட்டி கொண்டு வர சரோஜா பின்னால் இருந்து வந்து கொண்டிருந்தாள்.


வண்டியில் ஏறி அமர்ந்த பின்பும் சரோஜா ஓயாமல் பேசிக் கொண்டே வர சலித்து கொண்ட கணேஷ் அவர்களது தெருவைப் பார்த்ததும்
"மவளே.....நீ இன்னைக்கு காலி....." என்று எண்ணி சிரித்துக் கொண்டே அவர்களது தெருவிற்குள் வண்டியை செலுத்தினான்.


அவர்களது தெருவுக்குள் நுழையும்போது சட்டென்று கணேஷ் வண்டியை நிறுத்தவும்

"ஏன்டா வண்டியை நிறுத்துன???" என்று கேட்ட சரோஜா தன் அருகில் இருந்த இடத்தை பார்த்து பேயறைந்தாற் போல அதிர்ச்சியுடன் கணேஷின் தோளினை இறுகப் பற்றி கொண்டாள்......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top