Latest Episode Nizhalin Nijam - 15

Husna

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹலோ பிரண்ட்ஸ்...... கதையோட இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதால் என்னால முடிந்த அளவு வேகமாக அப்டேட் கொடுக்க முயற்சி பண்ணுறேன்.....
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி.....:love::love:
MV5BYTMxZWE4ZTAtNzUzMi00NjZmLWI1OGUtMGRlYzZiN2ExMDA4XkEyXkFqcGdeQXVyODc2MzQyNzc@._V1_.jpg IMG_20181128_194613.png

அரண்மனை போன்ற அந்த வீடு திருமணத்திற்கான அலங்காரங்களால் ஜொலித்து கொண்டிருக்க மனம் நிறைந்த கனவுகளோடு சரோஜா மற்றும் அஜய் தங்கள் திருமணத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.


பிரமாண்டமான அந்த ஹாலின் நடுவில் மேடை அமைக்கப்பட்டு பூக்களின் தோரணங்கள் அந்த இடத்தை அலங்கரிக்க பூந்தோட்டத்தின் நடுவில் நிற்பது போல ஒரு கணம் எல்லோரும் அந்த இடத்தை வியந்து பார்த்தனர்.


திருமணத்திற்கான சடங்குகள் ஆரம்பித்து விட வேஷ்டி, சட்டை அணிந்து கம்பீரமாக வந்து அமர்ந்த அஜயை பார்த்து கனகா சந்தோஷமாக புன்னகத்து கொண்டார்.


உறவினர்கள் ஒவ்வொரு புறமாக திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்று கொண்டிருக்க அஜய் அய்யர் சொன்ன மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான்.


"பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ...." என அய்யர் கூறவும் அஜய் ஆவலாக சரோஜா வரும் பாதையை பார்த்து கொண்டு இருந்தான்.


சிவப்பு மற்றும் மெரூன் நிறம் கலந்த பட்டு சேலை அணிந்து இயல்பான அவள் அழகை மேலும் மெருகேற்றும் ஒப்பனையோடு தோழிகள் கேலி செய்யும் போது வெட்கப்பட்டு தலை அசைக்க அந்த அசைவில் அவள் கம்மல்கள் அசைந்தாட அஜயின் மனமும் அந்த கம்மலோடு சேர்ந்து ஆட்டம் கண்டது.


அஜயை பார்த்ததும்
வெட்கம் சரோஜாவை சூழ்ந்து கொள்ள புன்னகையோடு அவன் அருகில் அமர்ந்து கொண்டவள் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


சரோஜா பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல சரோஜாவின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் அவனைப் பார்த்ததும் சிரித்து கொண்டே கண் சிமிட்டினான்.


அஜயின் புன்னகை சரோஜாவையும் தொற்றிக் கொள்ள புன்னகையோடு தலை குனிந்து அமர்ந்தவள் அடுத்த சடங்குகளை செய்யத் தொடங்கினாள்.


அர்ச்சதையை எல்லோரும் எடுத்துக் கொள்ள அஜய் அய்யர் கொடுத்த தாலியை சரோஜாவின் சங்கு கழுத்தில் கட்டி விட கனகா மற்றும் வித்யா சந்தோஷமாக அந்த தருணத்தை பார்த்து கண் கலங்கி நின்றனர்.


"மாமா கங்கிராட்ஸ்....என் அக்காவை பத்திரமாக பார்த்துக்கோங்க..." என கணேஷ் அஜயின் கை பற்றி குலுக்கபுன்னகையோடு அவனைப் பார்த்தவன்
"உங்க அக்காவை என்னை நல்லா பார்த்துக்க சொல்லிடுபா...." என்று கூற


"உங்களை...." என்ற சரோஜா செல்லமாக அஜயின் தோளில் தட்டினாள்.


பெரியவர்கள் அனைவரிடமும் புது மணத் தம்பதி ஆசிர்வாதம் வாங்கி கொள்ள இந்த சந்தோஷம் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்று வித்யா மனதார வேண்டிக் கொண்டார்.


அஜய் மற்றும் சரோஜாவை ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளமும் சூழ்ந்து கொள்ள அந்த இடமே சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது.


"அடுத்தது நம்ம கணேஷிற்கு தான் மேரேஜ் போல...பொண்ணு பார்த்துடலாமா கணேஷ்???"


"கணேஷ் தான் ஆல்ரெடி பொண்ண பார்த்து வைச்சுட்டான் தானே...இப்போவே கல்யாணம் பண்ணி வைச்சாலும் அவனுக்கு ஓகே தான் இல்லையா???" என கணேஷின் நண்பர்கள் கணேஷை வம்பிழுக்க கணேஷ் சரோஜாவைப் பார்த்து திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றான்.


"என்ன பொண்ணு பார்த்துட்டானா???" என சரோஜா அதிர்ச்சியாக கணேஷைப் பார்க்க


"அய்யய்யோ சரோஜா அப்படி எல்லாம் எதுவும் இல்லை....அவனுங்க சும்மா என்னை வம்பிழுக்கிறாங்க....வாயை மூடுங்கடா...." என தன் நண்பர்களை அதட்டியவன் அவர்கள் எல்லோரையும் காலில் விழாத குறையாக இழுத்து கொண்டு சென்றான்.


"கேடி எப்படி எஸ் ஆகுறான் பாருங்க...." என சிரித்துக் கொண்டே சரோஜா அஜயின் புறமாக திரும்ப அஜயோ வைத்த கண் வாங்காமல் சரோஜாவைப் பார்த்து கொண்டு இருந்தான்.


அஜயின் பார்வையில் பேச்சு எழாமல் வெட்கம் குடி கொள்ள தலை குனிந்த சரோஜா தன் கை விரல்களைப் பார்த்து கொண்டு இருந்தாள்.


"என்ன பேச்சு நின்னுடுச்சு???" என அஜய் கேட்கவும்


நிமிர்ந்து அவனைப் பார்த்த சரோஜா
"ஒண்ணும் இல்லையே...." என்று கூற அஜய் புன்னகையோடு அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டான்.


"ரோஜா நான் ஒண்ணு கேட்கவா???" என மெல்லிய குரலில் அஜய் கேட்கவும்


அவனது ரோஜா என்ற அழைப்பில் முகம் மலர அவனைப் பார்த்தவள்
"கேளுங்க...." என்று கூறினாள்.


"என்னை உனக்கு பிடிச்சுருக்கா???" என அஜய் கேட்கவும்


கோபமாக அவனை முறைத்து பார்த்தவள்
"கல்யாணம் எல்லாம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் கேட்குற கேள்வியை பாரு...." என அவன் கைகளை தட்டி விட்டு எழுந்து சென்று விட அஜய் புன்னகையோடு சரோஜாவை பார்த்து கொண்டு இருந்தான்.


சிரித்துக்கொண்டே சரோஜாவை பின் தொடர்ந்து வந்த அஜய் அவளது கையை பற்றி அழைத்து கொண்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்ல
"என்ன பண்ணுறீங்க அஜய்?? கீழே நம்ம தேடப் போறாங்க..." என பதட்டமாக சரோஜா சுற்றிலும் பார்த்து கொண்டே கூறவும்


"அதெல்லாம் தேட மாட்டாங்க...நம்ம புதிதாக கல்யாணம் பண்ணுண யங் கப்பள்....ஷோ நோ ப்ராப்ளம்......நான் உனக்கு முக்கியமான ஒரு விஷயம் காண்பிக்கணும்....இப்போ பார்த்தால் தான் நைட் உனக்கு நான் எக்ஸ்ப்ளைன் பண்ணுற வேலை குறையும்...பேசாமல் வா...." என்றவாறே அவள் கை பிடித்து அழைத்து சென்றான்.


"அங்கே பார்...." என்று அஜய் கூற திரும்பி பார்த்த சரோஜாவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.


அந்த இடத்தை மொட்டை மாடி என்று சொல்வதை விட சிறு நந்தவனம் என்று சொல்லலாம் எனும் அளவில் இருந்தது.


நடுவில் தாமரை மலர் வடிவில் தடாகம் அமைக்கப்பட்டிருக்க அதைச் சூழ பல வகையான ரோஜா பூ மரங்களும், ஓர்கிட் செடிகளும், பல வகையான பூக்களும் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தது.


மொட்டை மாடியின் முழு பரப்பையும் மல்லிகை மற்றும் முல்லைப் பந்தல் மறைந்திருக்க அதன் கீழே ஊஞ்சல் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.


இதமான வெயிலோடு இயற்கை காற்று தன் முகத்தில் மோத ஆழ்ந்து அந்த நொடியை ரசித்த சரோஜா ரசனையோடு ஒவ்வொரு மரங்களையும் பார்த்து கொண்டு நின்றாள்.


ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டு வந்த சரோஜா அஜயின் புறம் திரும்பி
"அஜய்....இந்த இடம் சூப்பராக இருக்கு....எவ்வளவு அழகாக செய்து இருக்காங்க....இதெல்லாம் எப்படி??? யார் செய்தாங்க??? கொஞ்ச நாள்லயே இவ்வளவு செய்துட்டாங்களா???" என ஆச்சரியமாக கேட்கவும்


அவள் தோளின் இருபுறமும் கை போட்டு அவள் முன்னால் வந்து நின்ற அஜய்
"உனக்கு பிடிச்சுருக்கா???" எனக் கேட்டான்.


"பிடித்து இருக்காவா??? விட்டால் நாள் பூராவும் நான் இங்கேயே இருந்துடுவேன்...." என கண்கள் பளபளக்க சரோஜா கூறவும்


அவளை பார்த்து புன்னகத்து கொண்ட அஜய்
"இது உனக்கே உனக்காக நான் ஏற்பாடு பண்ண சின்ன கல்யாணப் பரிசு...." என்று கூற


"எனக்காகவா????" என சரோஜா ஆச்சரியமாக கேட்டாள்.


"ஆமா நான் உன்னை பொண்ணு பார்க்க வந்த நேரம் உன் வீட்டை சுற்றி பார்த்தேன்....சின்ன இடமாக இருந்தாலும் அவ்வளவு அழகாக மரங்கள் வளர்த்து இருந்தது....கணேஷ் கிட்ட யாரு இதெல்லாம் செய்ததுனு கேட்கவும் சரோஜா தான் இதெல்லாம் பார்ப்பா....அவளுக்கு தான் தோட்டம் செய்யுறது ரொம்ப பிடிக்கும்னு சொன்னான்.....ஷோ கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு வித்தியாசமாக ஒரு கிஃப்ட் பண்ணணும்னு நினைச்சு கிடைக்குற நேரம் எல்லாம் என் தம்பிங்களை சொல்லி இதை பண்ணுணேன்.....உனக்கே உனக்காக....என் ரோஜாவுக்காக இந்த சின்ன ரோஜா தோட்டம்....எப்படி???" என அஜய் கூறவும்


எம்பி அவன் கன்னத்தில் சட்டென்று இதழ் பதித்தவள்
"உங்க கிஃப்ட்டும் உங்களை மாதிரி வித்தியாசமாக தான் இருக்கு..." என்று கூறி சிரிக்க அஜய் சரோஜாவை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.


"இன்னைக்கு நைட் நம்ம இங்க தான் இருக்கப் போறோம்.....நைட் பூராவும்...." என அஜய் கண்ணடித்து சிரித்துக் கொண்டே கூறஅவன் கைகளை தட்டி விட்ட சரோஜா
"போங்க அஜய்...." என வெட்கப்பட்டு கொண்டே படியிறங்கி சென்று விட அஜய் உல்லாசமாக விசிலடித்துக் கொண்டே சரோஜாவைப் பின் தொடர்ந்து சென்றான்.


மாலை நேரம் ரிசப்சனுக்காக சரோஜா தயாராகி கொண்டிருந்த வேளை அவளது போன் அடித்தது.


"இந்த நேரத்தில் யார் போன் பண்ணுறா???" என்று யோசனையோடு போனை எடுத்து பார்த்தவள் அன்னவுன் என்று திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்து அதிர்ந்து போனாள்.


அன்னவுன் என்ற பெயரை பார்த்தாலே சரோஜாவிற்கு அன்றைய கனவு கண்ட தருணமே நினைவு வரும்.


பலமுறை இவ்வாறு அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க சரோஜாவின் பயம் மட்டும் இன்னும் மாறவில்லை.


கைகள் நடுங்க சரோஜா போனை அட்டன்ட் செய்து காதில் வைக்க மறுபுறம் போன் கட் செய்யப்பட்டது.


"யார் இது??? அடிக்கடி போன் பண்ணுறாங்க...ஆனா பேசாமல் வைச்சிடுறாங்க....என்ன நடக்கிறது??" என சரோஜா போனை பார்த்து கொண்டு யோசித்து கொண்டிருக்க


"இன்னும் ரெடி ஆகாமல் போனை பார்த்துட்டு என்ன பண்ணுற சரோஜா???" என்றவாறே வித்யா வரவும்


சட்டென்று போனை கீழே வைத்தவள்
"அம்மா கிட்ட இதை சொன்னா அப்புறம் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க.....ஷோ வேண்டாம்...." என்று நினைத்துக் கொண்டு


"இதோ பத்து நிமிஷத்தில் வரேன் மா...." எனக் கூறி விட்டு தயாராக தொடங்கினாள்.
 

Husna

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
சந்தன நிறத்தில் சிவப்பு ரோஜாக்கள் படர்ந்திருப்பது போன்ற லெஹங்கா அணிந்து மிதமான ஒப்பனையோடு சரோஜா நடந்து வர மறுபுறம் சந்தன நிற சேர்ட், கடும் நீல நிற கோர்ட், பேண்ட் அணிந்து மனதை கொள்ளை கொள்ளும் புன்னகையோடு அஜய் நடந்து வந்தான்.


மேடையில் இருவரும் வந்து ஏறி நிற்க உறவினர்களும், நண்பர்களும் சரோஜா மற்றும் அஜய்க்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.


போட்டோ சூட் என்ற பெயரில் போட்டோகிராபர் அஜய் மற்றும் சரோஜாவை விதம் விதமாக போட்டோ எடுத்து கொண்டிருக்க சரோஜா ஒரு கட்டத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் சோர்ந்து போய் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள்.


"என்ன ரோஜா இதற்கே டயர்டானா எப்படி??? இன்னும் எவ்வளவு பண்ண வேண்டியது இருக்கு??" என நீட்டி முழங்கி அஜய் சரோஜாவின் காதில் கேட்க சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்த சரோஜா அவனது பார்வை சொன்ன செய்தியை பார்த்து வெட்கப்பட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.


"என்ன பதிலையே காணோம்??? ஓஹ்....ஒரு வேளை இப்போவே கனவு காண ஆரம்பிச்சுட்டியா???" என அஜய் சிரித்த வண்ணம் கேட்க அதிர்ச்சியாக அவனை பார்த்த சரோஜா அஜயோடு திருமணம் நடப்பது போன்ற அந்த கனவை நினைத்து பார்த்தாள்.


"இதே வீட்டில் தானே அஜய்க்கும், எனக்கும் கல்யாணம் நடக்குற மாதிரி நான் கனவு கண்டேன்....நான் காணும் கனவு எல்லாம் உண்மையாகவே நடக்க ஆரம்பிக்குதா?? அப்படினா அந்த கனவு படி கணேஷ் உயிருக்கு ஆபத்தா??? இந்த வீட்டுக்கு நான் வரவே கூடாதுனு தானே இருந்தேன்....ஆனா இப்போ அந்த கனவில் நடந்த மாதிரி எல்லாம் நடக்குதே...." என சிந்தித்த சரோஜா சட்டென்று தன் கலங்கிய கண்களை யாரும் அறியாமல் துடைத்து கொண்டாள்.


"அப்படினா...அப்படினா எனக்கு ஏதாவது பெரிய வியாதி ஏதாவது வந்துடுச்சா....அய்யோ....நான் யார் கிட்ட இதை சொல்லுவேன்....அஜய் கிட்ட சொல்லலாமா??? அவர் இதை எல்லாம் நம்புவாரா??? கணேஷ்...கணேஷ்....எஸ் கணேஷ் கிட்ட சொல்லலாம்...அவன் என்னை நம்புவான்....கணேஷ் எங்கே???" என தனக்குள்ளேயே பேசிக் கொண்டு சரோஜா எழுந்து கொள்ள அஜய் அவளை குழப்பமாக பார்த்தான்.


"நான் என்னை கேட்டுட்டேன்னு இப்போ எழுந்து நிற்குற சரோஜா?? என்னாச்சு உனக்கு??" என அஜய் கேட்க அவன் பேசியது எதுவுமோ சரோஜாவின் காதில் விழவில்லை.


சரோஜாவின் கண்களோ கணேஷ் எங்காவது நிற்கின்றானா என வலை வீசி தேடத் தொடங்கியது.


"சரோஜா....சரோஜா..." என அதட்டலாக அஜய் சரோஜாவின் தோளை உலுக்க திடுக்கிட்டு அவனைப் பார்த்த சரோஜா
"என்ன?? என்னாச்சு??" எனக் கேட்டாள்.


"சரி தான்....என்ன ஆச்சு சரோஜா உனக்கு?? திடீரென அமைதியாகிட்ட...திடீர்னு எழுந்து நிற்குற....எதுவுமோ பேசாமல் எதையோ பார்த்துட்டு இருக்க?? என்ன நடக்குது???" என அஜய் கேட்கவும்
தவிப்போடு அவனைப் பார்த்தவள் கையை பிசைந்து கொண்டு நின்றாள்.


"சொல்லு மா என்ன பிரச்சனை??" என அஜய் கேட்கவும்


அவனது கைகளை பற்றி கொண்ட சரோஜா
"எனக்கு பயமாக இருக்கு அஜய்...." என்று கூறினாள்.


"பயமா?? எதுக்கு பயம்?? எதைப் பார்த்து பயம்?? திடீரென பயப்படுற அளவுக்கு என்ன ஆச்சு??"


"அது....வந்து...அது...எனக்கு ஏதோ பெரிய வியாதி வந்துடுச்சு அஜய்....எனக்கு பயமாக இருக்கு...." என கண்கள் கலங்க சரோஜா கூறவும்


அவளது கலங்கிய கண்களை துடைத்து விட்டவன்
"ஹேய்...என்ன இது சின்ன குழந்தை மாதிரி கண்ணை கசக்கிட்டு?? இங்க பாரு டா...இங்க பாரு..." என அவள் முகத்தை நிமிர்த்தி


"இப்படி உட்கார்ந்து என்ன நடந்ததுனு ஒழுங்காக சொல்லு....என் கிட்ட என்ன பயம்?? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லு சரியா??" என்றவாறே சரோஜாவை அமரச் செய்து விட்டு அஜய் அவளருகில் அமர்ந்து கொண்டான்.


சரோஜா தான் காணும் கனவு நிஜத்திலும் நடந்து கொண்டிருப்பதை கூற அஜய் அமைதியாக அவள் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.


"இதுல பயப்பட என்ன இருக்கு??? இப்போ நம்ம டெய்லி லைஃப்ல எதாவது ஒரு சம்பவம் நடக்கும்....அது தான் பர்ஸ்ட் டைம் அந்த சம்பவம் நடக்குறதா இருக்கும்....ஆனா நமக்கு ஏற்கனவே இப்படி ஒரு சம்பவம் நடந்த மாதிரி இருந்துச்சேனு தோணும்....அதே மாதிரி இதுவும்...உனக்கு கனவில் வர்ற ஒரு சில விஷயங்கள் தற்செயலாக நடக்கும் போது நீ அதையும், இதையும் சேர்த்து வைத்து யோசிக்குற....இப்போ நீ இது வரைக்கும் கண்ட எல்லாக் கனவும் நடந்து இருக்கா சொல்லு???"


"அப்படி எல்லாம் இல்லை...இந்த இரண்டு விஷயம் தான்...."


"ம்ம்ம்ம்ம்....பார்த்தியா?? இது கோ இன்ஸிடன்ஸ்....அதை போய் வியாதி அப்படி, இப்படினு சொல்லிட்டு உன்னை நீயே ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதே....ஓகே வா?? இப்போ அழகா ஸ்மைல் பண்ணுடா....எல்லோரும் நம்மளையே பார்க்குறாங்க...." என அஜய் கூறவும்
சிறிது மனதளவில் தெளிவுற்ற சரோஜா புன்னகையுடன் நிமிர்ந்து அமர்ந்தாள்.


கணேஷ் மற்றும் சரோஜா தன்னிடம் கூறிய விவரங்களை எல்லாம் மனதிற்குள் ஒரு முறை மீட்டுப் பார்த்து கொண்ட அஜய்
அடுத்து என்ன செய்வது என்று மனதிற்குள் குறித்துக் கொண்டான்.


சிறிது நேரம் கழித்து மண்டபத்தில் சலசலப்பு கேட்க சரோஜாவும், அஜயும் தங்கள் பார்வையை சத்தம் வந்த திசையை நோக்கி திருப்பினர்.


ராஜஷேகரோடு வாஞ்சிநாதன் பேசி கொண்டு வர அவர்களின் பின்னால் சித்தார்த், சித்ரா மற்றும் ருத்ரா நடந்து வந்து கொண்டிருந்தனர்.


வாஞ்சிநாதனின் முன்னால் ஒரு சில நபர்கள் நடந்து வந்து கொண்டிருந்ததால் அவரது முகம் சரியாக தெரியாமல் போகவே சரோஜா மற்ற நபர்களை பார்த்து கொண்டு நின்றாள்.


சித்தார்த் மேடையேறி வந்து அஜயின் கை பற்றி குலுக்க அவனை அணைத்துக் கொண்ட அஜய்
"டேய் சித்து....எப்போடா வந்த?? ஒரு போன் கூட பண்ணல...அவ்வளவு பிஸியா??" என்று கேட்கவும்


சிரித்துக் கொண்டே அவனது தோளில் தட்டிய சித்தார்த்
"டேய்....டேய் பிஸி எல்லாம் இல்லை டா....உன் கல்யாணத்துக்கு சர்ப்பரைஸா வரலாம்னு தான் சொல்லல....எப்படி என் சர்ப்பரைஸ்??" என கேட்க


"அய்யோ...நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்...." என்று அஜய் கூறி சிரித்தான்.


"ஹலோ...ஹலோ....என்ன நடக்குது இங்க?? நான் ஒரு ஆள் இங்க இருக்குறதையே மறந்துட்டீங்களா??" என சரோஜா இடுப்பில் கை வைத்து முறைத்து கேட்க அஜயும், சித்தார்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகத்து கொண்டனர்.


"ஸாரி மா...ரொம்ப நாள் கழித்து இவனை பார்த்ததும் கொஞ்சம் எக்ஸைட் ஆகிட்டேன்....இது சித்தார்த்...மை க்ளோஸ் பிரண்ட்....அது மட்டுமல்ல எங்க அப்பாவும், இவனோட அப்பாவும் சின்ன வயசு பிரண்ட்ஸ்..."


"சித்து...இது சரோஜா...மை பெட்டர் ஹால்ப்...."


"ஹலோ சிஸ்டர்....ஹேப்பி மேரீட் லைப்.....உங்க நியூ லைஃப்க்கு என்னோட சின்ன கிஃப்ட்...." என்று சரோஜாவிடம் சித்தார்த் ஒரு கிஃப்ட் பாக்ஸை நீட்ட


"தாங்க்ஸ் அண்ணா...." என்றவாறு சரோஜா புன்னகையுடன் அதை வாங்கி கொண்டாள்.


"நீ மட்டும் மேல வந்து இருக்க...அம்மா, அப்பா எல்லாம் எங்க டா???" என அஜய் கேட்கவும்


திரும்பி பார்த்த சித்தார்த்
"அதோ அவரோட பிரண்ட் கூட பேசிட்டு இருக்காரே...." என்று கை காட்ட சரோஜா சித்தார்த் கை காண்பித்த புறமாக திரும்பி பார்த்தாள்.


ராஜஷேகரோடு திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்ததால் வாஞ்சிநாதனின் முகம் தெரியாமல் போகவே சரோஜாவின் மனம் ஏனோ சலித்து கொண்டது.


"இவர் முகம் மட்டும் நமக்கு தெரியவே இல்லையே....எங்கேயோ பார்த்த முகமாக இருக்கும் போல இருக்கே...." என சரோஜா யோசித்து கொண்டு நிற்க


"அவங்க இப்போதைக்கு பேசி முடிக்க மாட்டாங்க....நாம கீழே போய் அவங்களை பார்த்துட்டு வரலாம்...." என்று அஜய் கூறவும் சரியென்று தலை அசைத்த சரோஜா அஜய் மற்றும் சித்தார்த்தைப் பின் தொடர்ந்து சென்றாள்.


"டாட் யாரு வந்து இருக்காங்கனு பாருங்க...." என்ற சித்தார்த்தின் குரலில் திரும்பி பார்த்த வாஞ்சிநாதன் அஜயை பார்த்து புன்னகத்து கொண்டு


"அட புது மாப்பிள்ளை....எப்படி பா இருக்க???" என்றவாறே அவனைத் தழுவி கொள்ள


"நான் ரொம்ப நல்லா இருக்கேன் பா...." என்றவாறு அஜயும் அவரை அணைத்துக் கொண்டான்.


வாஞ்சிநாதன் திரும்பி அஜயை பார்த்ததும் வாஞ்சிநாதனின் முகத்தை பார்த்த சரோஜாவோ அதிர்ச்சியில் பேச நா எழாமல் அஜயின் கைகளை இறுக பற்றி கொண்டாள்.....
 

Sponsored Links

Top